காதல் கணவன் 37

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அழுதவளை கண்டு தனக்குள் காயம் கொண்டான் பாலாஜி.

"என்னை கிஸ் பண்ணாத பாலா.." அழுகையோடு சொன்னாள்.

"எ.. என்னால அது முடியாது கீர்த்தனா.. அது உனக்கே தெரியும்.." என்றவன் அவளின் கண்ணீரை துடைத்தான்.

"எனக்கு கஷ்டமா இருக்கு.. உனக்கு தேவை என் உடம்பு மட்டும்ன்னு நினைச்சி எனக்குள்ள மருகுறேன்.. எல்லாம் தெரிஞ்சும் என்னை சாகடிக்கற நீ.."

விழிகளை மூடியபடியே சொன்னாள்.

அவளின் கன்னங்களை அள்ளியவன் அவள் அழ அழ மீண்டும் முத்தமிட்டான். மேலும் அதிகமாக கண்ணீர் கொட்டியது.

"நான் உன்னை முழுசா நேசிக்கிறேன். இது உனக்கு தெரியும். உனக்குள்ள நீ மருகினாலும் உருகினாலும் இங்கே எதுவும் மாறாது. என் மேல உனக்கு கோபம் இருப்பது நியாயம்தான். என்னை உனக்கு புரிய வைக்க முடியல. சாரி. என் மேல கோபப்பட உனக்கு முழு உரிமையும் இருக்கு.." என்றவன் அவளின் இதழ்களை சுட்டு விரலால் வருடினான். ஏதேதோ தோன்றியது.

"உன் புடவை சூப்பரா இருக்கு. உன் புது தோடும் அழகா இருக்கு.." என்றவன் பெருமூச்சோடு வெளியே நடந்தான்.

வேதனையாக இருந்தது அவளை பிரிய. எதிரே வந்த கனிமொழியிடமும் நாளை ஊர் சுற்ற போகிறோம் என்று சொல்லி விட்டான் பாலாஜி. அவள் குஷியோடு குதித்தாள்.

"ஐ ஜாலி.." என துள்ளியபடி ஓடியவளை கண்டு மனம் நிறைந்தான்.

இரவு வந்தது. சக்தி உணவு முடித்து வந்தான்.

"சக்தி நாளைக்கு நானும் கீர்த்தனாவும் கனியும் வெளியே போறோம். நீயும் வா.." என்றான்.

சக்தி அவனை குழப்பத்தோடு பார்த்தான்.

"நான் எதுக்கு.? கனி எதுக்கு.?"

"என் பிரெண்ட் பார்ட்டி கொடுக்க போறா.. கனியையும் கூட்டிப் போக போறேன். அதனாலதான் உன்னை வர சொன்னேன்.." என்றவனை முறைத்தவன் "என்னையும் உன் தங்கச்சியையும் பிரிச்சி வைடான்னு உன்னை இங்கே கூட்டி வந்தேன். ஆனா நீ இரண்டு பேருக்கும் கனெக்சன் பண்ணி விட நினைப்ப போல.. உன் தங்கச்சிக்கு நீயே மாமா வேலை பார்க்கறியா.?" எனக் கேட்டான்.

பாலாஜி பற்களை அரைத்தான்.

"பார்த்து பேசு.." என்றவன் சக்தியின் முகத்தில் நச்சென்று குத்தினான்.

"பால் ரொட்டி மூஞ்சியை வச்சிக்கிட்டு என்னையே அடிக்கிறியா.?" என எரிச்சலாக கேட்டவன் திருப்பி‌ கையை நீட்டவில்லை. தங்கையின் வாழ்க்கை முக்கியமென்று‌ தோன்றியது.

"அவளை கூட்டி போகும்போது நான் எதுக்கு?" எனக் கேட்டான்.

"கார் ஓட்ட உன்னை கூப்பிட்டேன்டா டுபாக்கூர்.." என்ற பாலாஜி நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"உன் தொங்கச்சி மாதிரியே உனக்கும் மண்டையில மசாலா வேலை செய்றது இல்ல போல.. என்னை போட்டு சாகடிறிங்க இரண்டு பேரும்.." என்றவன் படுக்கையில் சென்று விழுந்தான்.

சக்தி முகத்தை தேய்த்துக் கொண்டே வந்து படுத்தான்.

"பைக்ல போக வேண்டியதுதானே.?" என்றான் சிறு குரலில்.

"அப்புறம் எப்படி கனியை கூட்டிப் போறது.?"

"அவளை விட்டுப் போ.."

"அப்புறம் அவ உன்னை இம்சை செய்வா.. வெளியே போனாலும் நாலு பேரும் ஒன்னாதான் இருக்க போறோம்? அவ ஒன்னும் உன்கிட்ட தப்பா நடந்துக்க போறது இல்ல.. நாங்க இருக்கும்போது உன்னை ரேப் பண்ண போறதும் இல்ல.." என்றான்.

சக்திக்கு கடுப்பாக இருந்தது அவன் சொன்னது கேட்டு.

மறுநாள் காலையில் நால்வரும் கிளம்பினர்.

"தேனையும் கூப்பிட்டு இருக்கலாம்.." என்றான் டிரைவர் சீட்டில் அமர்ந்த சக்தி.

"அப்புறம் போற இடத்துல விருந்து நடக்காது. கொலை கூத்துதான் நடக்கும்.." என்று முனகிய பாலாஜி கீர்த்தனா பின் சீட்டில் அமர்வது கண்டு அவளருகே அமர்ந்தான். கனிமொழிக்கு மறுபக்கத்தில் இடம் தந்தான்.

கனிமொழி ஏறும் முன் "இங்கே வா.." என்று அழைத்து தன்னருகே அமர வைத்தான் சக்தி. தங்கை தன் கணவனிடம் கொண்ட ஊடலை முழுதாய் அறியவில்லை சக்தி. ஆனாலும் ஏதோ சங்கடம் போல தோன்றியது. தனக்கு நிம்மதி தர வந்து அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வது அவனுக்கு வருத்தத்தை தந்து விட்டது.

இந்த கார் பயணத்திலாவது இருவரும் அருகில் அமரட்டும் என நினைத்தான் அவன். அவன் ஏன் தன்னை முன்னால் உட்கார சொன்னான் என்று கனிமொழிக்கும் புரிந்துதான் இருந்தது. அதற்காய் சக்தியை மனதுக்குள் பாராட்ட கூட செய்தாள்.

கார் கிளம்பியதும் கீர்த்தனாவின் கால் மீது தன் காலை வைத்தான் பாலாஜி.‌‌ திரும்பி பார்த்தவள் அனலை கொட்டினாள்.

கழுத்தை தடவியபடி வேறு திசைக்கு முகத்தை திருப்பினான் அவன்.

கனிமொழி பாடலை ஒலிக்க செய்தாள்.

'என் காதல் சொல்ல வார்த்தை இல்லை. உன் காதல் சொல்ல தேவையில்லை..'

மேலே பாடும் முன் கடுப்போடு பாட்டை அணைத்து விட்டான் சக்தி. இப்போதெல்லாம் காதலோடு சம்பந்தப்பட்ட எந்த வார்த்தையை எங்கே கேட்டாலும் எரிச்சலும் ஆத்திரமும்தான் வந்தது அவனுக்கு.

கனிமொழி‌ மீண்டும் பாடலை இசைக்க செய்யவில்லை. அவனின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே வந்தாள்.

ஏன் இவளை அருகில் உட்கார வைத்தோம் என்றிருந்தது அவனுக்கு.

கார் ஒரு வளைவில் திரும்பியது. மனைவியின் மேல் வந்து விழுந்தான் பாலாஜி. அவள் கொடூரமாக முறைப்பதை கண்டும் காணாமல் அவளின் இடையோடு அணைத்தான். இரண்டாம் நொடியில் "அம்மா.." என கத்தியபடி நகர்ந்தான். கீர்த்தனாவின் கையை பார்த்தான். சேப்டி பின் ஒன்றை இரு விரல்களின் இடையே வைத்திருந்தாள். பாலாஜியைப் பார்த்து கண்களை உருட்டினாள்.

தங்கை செய்த வேலையை தன் முன் இருந்த கண்ணாடியில் பார்த்து விட்ட சக்திக்கு சிரிப்பு பொங்கி வந்தது.

சக்தியின் சிரிப்பு அடக்கிய முகத்தைப் பார்த்த கனிமொழிக்கு நெஞ்சிற்குள் நேசம் நிரம்பியது. அவனை பார்த்துக் கொண்டே இருக்க‌ வேண்டும் போல இருந்தது. அவனுக்காக கவிதை புனைய வேண்டும் என்று கூட தோன்றியது.

'நான் குழந்தை என்கிறாய் நீ!
மிட்டாய்காக அடம் பிடிக்கும் குழந்தையாய் என்னை பார்க்கிறாய்!
நீ வேண்டுமென துடிக்கிறது
என் காதல் மனது!
போலிகளில்லா குழந்தைதனமாய்
இருக்கிறது உனக்கான என் காதல்!
என்ன செய்து நிரூபிக்க என் காதலை?
நான் குழந்தை இல்லை
வளரும் குமரியென சொல்லவே
போராடுகிறேன் இந்நிலையில்!
பட்டம் எது வேண்டுமானாலும் கொடு
அத்தோடு உன் காதலையும் சேர்த்து கொடு!' என்று மனதுக்குள் கவி படித்தவள் அவனின் முகத்தை தவிர வேறு எதுவும் பார்க்கவில்லை. எதிரில் வந்த லாரியையும் பார்க்கவில்லை. சக்தி நொடியில் ஸ்டியரிங்கை திருப்பி காரை பிரேக்கடித்து நிறுத்தினான். சீட் பெல்ட் எதுவும் அணியாமல் அமர்ந்திருந்த கனிமொழி நிலை தடுமாறி அவன் மீதே விழுந்தாள்.

தடுமாறி விழுந்தவளின் சிறு கரம் அவள் அறியாமல் சக்தியின் இடுப்பின் கீழ் பதிந்து விட்டது. நிலைத்து நின்ற உடனே சட்டென்று கையை எடுத்து விட்டாள்.

"சா.."

அவளை பேசவே விடாமல் சப்பென்று ஒரு அறையை விட்டான்.

கன்னத்தை பிடித்துக் கொண்டவள் கலங்கும் விழிகளோடு தரை பார்த்தாள்.

இவள் சக்தியின் மீது சென்று விழுந்த அதே நேரத்தில் கீர்த்தனாவின் மடியில் விழுந்திருந்தான் பாலாஜி. அவன் எழுந்து அமர்ந்த அதே நேரத்தில் அவனின் தங்கை அறையை வாங்கி இருந்தாள்.

"டேய் சக்தி.." என்று‌ கர்ஜித்தவன் பின்னால் இருந்தபடி அவனின் சட்டை காலரை பிடித்தான்.

"சண்டை போடாத அண்ணா.." அவசரமாக சொன்னாள் கனிமொழி.

"எதுக்குடா அவளை அறைஞ்ச.?" என்று எகிறினான் பாலாஜி.

'உன் தங்கச்சி என்னை கண்ட இடத்திலும் தொடுறாடா..' என்று மனதுக்குள் மட்டும் சொல்லிய சக்தி "அவளுக்கு கொழுப்பு.." என்றான்.

சக்தி கனிமொழியை அறைந்த கணத்திலேயே அதிர்ந்து விட்டாள் கீர்த்தனா. தன் அண்ணனுக்கு இவ்வளவு கோபம் வரும் என்று கூட இன்றேதான் அறிந்துக் கொண்டாள் அவள்.

"என் பக்கத்துலயே அவளை இப்படி அடிக்கற.." என ஆரம்பித்த பாலாஜியின் கையை தள்ளி விட்ட சக்தி "அவளே அமைதியா இருக்கா.. உனக்கென்ன வந்தது.?" என்றான். காரை இயக்கினான்.

"விட்டுடு அண்ணா.. தப்பு என் மேலதான்.." என்ற கனிமொழியின் சிறு குரலுக்காக தன் கோபத்தை குறைத்துக் கொண்டான் பாலாஜி. ஆனால் அப்போதும் கூட தங்கை என்ன தவறு செய்தால் என்று அவனுக்குப் புரியவில்லை.

கனிமொழி கடைசி வரையிலும் நிமிரவேயில்லை. ரெஸ்டாரன்ட் ஒன்றின் முன் நின்றது கார்.

கீர்த்தனா கீழே இறங்கினாள். கொட்டாவி விட்டபடியே உள்ளே நடந்தாள்.

பாலாஜி நாலடி நடந்தான். தங்கையை காணாமல் திரும்பினான். காரிலேயே அமர்ந்திருந்தாள்.

"இறங்கி தொலை.." என்றான் சக்தி ஸ்டியரிங்கை இறுக்கமாக பற்றியபடி.

"நா.. நான் வேணும்ன்னு டச் பண்ணல மாமா.. சடன் பிரேக் அடிச்சதுல விழுந்துட்டேன். ப்ராமிஸா தெரியாம டச் பண்ணிட்டேன்.. சாரி.." என்றவள் விழிகள் கலங்க கீழே இறங்கினாள்.

அவளின் கரம் தெரியாமல்தான் பட்டது என்று அவனும் அவள் தன் மேல் விழுந்த முதல் நொடியிலேயே அறிந்துக் கொண்டான். ஆனால் கோபம் அல்லவா நியாயத்தை விட அதிகமாக இருந்தது?

முகத்தை தேய்த்துக் கொண்டான்.

சிறு குழந்தையிடம் அடிக்கடி வீரத்தை காட்டி கொண்டிருப்பது போலிருந்தது.

சுடிதாரில் நடந்துச் சென்றவளை பார்த்தபடியே காரை விட்டு இறங்கினான். அண்ணனிடம் சென்றதும் அவன் அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டான். இருவரும் செல்வதை பெருமூச்சோடு பார்த்தபடி பின்தொடர்ந்தான்‌ சக்தி.

ரெஸ்டாரன்டில் அம்ருதாவை கண்டதும் அதிர்ந்துப் போனாள் கனிமொழி.

"இவங்க ஏன் இங்கே இருக்காங்க.?" எனக் கேட்டாள் கோபமாக.

"இது அவ தர ட்ரீட் தான்.." என்றவனிடமிருந்து விலகி நின்றாள்.

"இவங்க என் அண்ணனுக்கு பைத்தியக்கார பட்டம் கட்டினாங்க.. ஆனா நான் இவங்க வாங்கி தரும் உணவை சாப்பிடணும்.. அப்படியா.?" எனக் கேட்டாள் கோபத்தோடு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN