காதல் கணவன் 41

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தியின் பார்வை முழுக்க கனிமொழியிடம் மட்டும்தான் இருந்தது. அவளின் சிறுபிள்ளை கோபத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.

முகத்தை சுளித்தபடி அவள் ரெஸ்ட் ரூம் நோக்கி நடக்க தனக்குள் சிரித்துக் கொண்டான். எதேச்சையாக திரும்பியவனின் பார்வையில் ரத்னா விழுந்தாள். கனிமொழியை வெறித்துக் கொண்டிருந்தாள் அவள். சக்தி துணுக்குற்றான். பார்வையை வைத்து எடை போடும் அளவுக்கு கடவுள் இல்லைதான். ஆனால் அவளின் பார்வையில் தவறு உள்ளதை புரிந்துக் கொண்டான்.

அவள் கனிமொழியின் மீது குழம்பு கொட்டியதிலிருந்தே அவனுக்கு உறுத்தல்தான். இந்த வெறித்த பார்வை மேலும் சந்தேகத்தைத் தந்தது.

நிமிடங்கள் கடந்துக் கொண்டிருந்தது. ரத்னா எழுந்தாள். கனிமொழி சென்ற திசை நோக்கி நடந்தாள். சக்தி யோசனையோடு தன் கையிலிருந்த பானத்தை பருகினான்.

'இவ ஏன் இப்படி பார்க்கறா? பாப்பா ஏன் இவளை பார்த்து பயப்படுறா.?' என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டிருந்தவனை அருகே இருந்த ஜோடி கவனம் கலைத்தது.

"டேன்ஸ் ஆட வரியா கீர்த்தனா.." கொஞ்சலாக கேட்டான் பாலாஜி.

அவள் பதில் சொல்லாமல் தன் காலை காட்டினாள். குழம்பியவன் "காலுக்கு என்னாச்சி கீர்த்தனா.?" எனக் கேட்டான்.

"என்னை எங்கேயும் கூப்பிடாத.. இல்லன்னா ஹீல்ஸ் மட்டும் தனியா பிய்யும்.." என்றாள்.

முறைத்தான் பாலாஜி.

"ரொம்ப பண்றடி.." என்றவன் எழுந்து நின்றான். "நீ இல்லன்னா எனக்கு வேற ஆளே இல்லையா.?" என்றவன் நடனமாடும் இடம் நோக்கி நடந்தான். கீர்த்தனா முகத்தை திருப்பிக் கொண்டாள்.

'நமக்கு ஹெல்ப் பண்ண வந்து இவங்களுக்குள்ள பிரச்சனை..' என்று வருந்தினான் சக்தி. கனிமொழி வைத்து சென்றிருந்த கோப்பை மேஜை மேல் இருந்தது. கோப்பையை பார்த்தவன் யோசனையோடு சுற்றும் முற்றும் பார்த்தான்.

'பாப்பா இன்னுமா வரல.?' என நினைத்தபடி எழுந்தான். ரெஸ்ட் ரூம் நோக்கி நடந்தான்.

வராண்டாவிற்குள் நுழைந்தவன் சற்று தள்ளி நின்றிருந்த ரத்னாவையும் கீழே விழுந்து கிடந்த கனிமொழியையும் குழப்பத்தோடு பார்த்தான்.

ரத்னா குத்துக்காலிட்டு அமர்ந்தாள். கனிமொழியின் தாடையை பிடித்தாள்.

"என்னடி முறைப்பு.?" எனக் கேட்டவள் அவளை அறைய முயல, அந்த கையை பாதியிலேயே நிறுத்தினான் அருகில் நெருங்கிவிட்ட சக்தி.

ரத்னா நிமிர்ந்துப் பார்த்தாள்.

கனிமொழியை விட்டுவிட்டு எழுந்து நின்றாள். "என்ன ப்ரோ பண்.?" மேலே பேசும் முன் அவளின் கழுத்தை பற்றி விட்டான் சக்தி. சுவற்றோடு சாய்த்து அவளை மேலே உயர்த்தினான். ரத்னாவிற்கு விழிகள் மேலேற ஆரம்பித்தது. கால்கள் தரையை விட்டு விட்டன.

"ஐயோ மாமா.." எழுந்து ஓடி வந்தாள் கனிமொழி.

"என்ன பண்றிங்க.? அவளை விடுங்க.." என்றாள் அவனின் மறு கரத்தை பிடித்தபடி. நரம்புகள் புடைக்க, கண்கள் சிவந்து ஆத்திரத்தோடு நின்றிருந்தவன் "இவ ஏன்டி உன்னை அடிக்க வந்தா?" எனக் கேட்டான்.

"இ.. இல்ல மாமா.. ஏதோ மிஸ்ஸண்டர்ஸ்டேன்டிங்.." என்றவளின் வலது கன்னத்தில் தன் புறங்கையால் ஒரு அறையை விட்டான்.

அடி வாங்கியதும் பொத்தென்று விழுந்தாள் கனிமொழி. 'இதுக்கு அவக்கிட்டயே அடி வாங்கி இருக்கலாம்..' என நினைத்தபடி கையூன்றி எழுந்தாள்.

"அவளை விட்டுடு மாமா.. இல்லன்னா போலிஸ் வந்து உன்னை பிடிச்சிட்டு போயிடும். என் அம்மா என்னை சாகடிச்சிடுவாங்க.." என்றாள்.

"நீ காரணம் சொல்லலடி.." என்றவன் இன்னும் தன் கை பிடியை இளக விடாமல்தான் இருந்தான்.

"அவ மேல மோதிட்டேன்னு கோபத்துல அடிச்சிட்டா மாமா. மத்தபடி எதுவும் இல்ல.." என்றவள் தங்களின் பழைய கணக்கை பற்றி மூச்சு விடவும் பயந்தாள்.

கையை தளர்த்தினான் சக்தி. தரையோடு விழுந்தாள் ரத்னா.

"நீ என்ன பெரிய கண்ணாடி சிலையோ.? என் பாப்பா மோதியதுல நொறுங்கி விழுந்திட்டியோ.?" என்று கர்ஜித்த சக்தி கனிமொழியின் புறம் பார்த்தான். "அவ அடிக்க வரா.. உன் கை **** போயிருந்ததா.?" எனக் கேட்டான் ஆத்திரத்தோடு.

கனிமொழி மௌனமாக தரைப் பார்த்தாள். "கெட்ட வார்த்தை பேசாதிங்க மாமா.. சாமி கண்ணைக் குத்தும்.." என்றாள்.

"*** இவ உன்னை அடிக்க வந்தப்ப அந்த சாமி எங்கே போயிருந்தாரு? *** மாதிரி பேசாத.." என அவன் சொல்ல கனிமொழி முகம் சுளித்து காதை பொத்திக் கொண்டாள்.

"ஒரு சின்ன பொண்ணு முன்னாடி கெட்ட வார்த்தை பேசி கெடுத்து வைக்கிறிங்க.." என்றாள்.

அவளின் வாங்க போங்க பேச்சில் அன்னியம் உணர்ந்து எரிச்சலின் அடுத்த படிக்கு சென்றிருந்தான் அவன்.

"நீ முதல்ல சின்ன பொண்ணு மாதிரி நடந்துக்கடி.. என்கிட்ட மட்டும் என்ன வாய் *** பேசற.. ஆனா இவ அடிக்க வரும்போது வெட்கமே இல்லாம கண்ணை மூடுற." என்றவனுக்கு ரத்னாவின் கை ஓங்கிய காட்சி நினைவை விட்டு போக மறுத்தது.

"காலேஜ் ப்ரொபஸர் பேசுற பேச்சா இதெல்லாம்.? வாயை திறந்தா இவ்வளவு கெட்ட வார்த்தை கொட்டுது.." என்று முனகியவளின் நெற்றியில் சுண்டி விட்டான். வலியோடு தேய்த்துக் கொண்டாள்.

"என்ன வேலை செஞ்சாலும் அவனவன் மனுசன்தான்.." என்றவன் ரத்னாவின் புறம் திரும்பினான்.

"இனி இவ பக்கம் உன்னை பார்த்தேன்னா பார்த்த இடத்துல உனக்கு சாவு கன்பார்ம்.." என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு கனிமொழியை இழுத்துக் கொண்டு நடந்தான்.

கனிமொழி திரும்பிப் பார்த்தாள். ரத்னா முறைத்துக் கொண்டிருந்தாள். பள்ளிக்கு செல்வதை பற்றி நினைக்கும்போது இப்போதே நடுக்கம் வந்தது.

கீர்த்தனாவின் கலங்கும் விழிகளிலிருந்து கண்ணீர் கொட்டியது. நடனமாடும் இடத்தில் இளம்பெண் ஒருத்தியோடு நெருக்கமாக நின்று நடமாடிக் கொண்டிருந்தான் பாலாஜி. அவனது பார்வை மனைவியின் மீதேதான் இருந்தது.

'இப்ப என்னடி செய்வ?' என்ற எகத்தாளம் இருந்தது அந்த பார்வையில். தன்னோடு நடமாடும் பெண்ணை வேண்டுமென்றே அணைத்தான். அவளும் அவனது கழுத்தைச் சுற்றி கைகளை போட்டுக் கொண்டு அவளின் வளைவிற்கு ஏற்ப அவனை இழுத்தாள்.

அவளின் கழுத்தை நோக்கி முகம் கொண்டுச் சென்றான் பாலாஜி. கீர்த்தனா எழுந்து விட்டாள்‌. பாலாஜி தன்னோடு நடனமாடும் பெண்ணிடம் "நீங்க ரொம்ப நல்லா டேன்ஸ் ஆடுறிங்க.." என்றுப் பாராட்டி விட்டு நிமிர்ந்தபோது கீர்த்தனா அங்கே இல்லை. சுற்றும் முற்றும் தேடினான். அவளை எங்கும் காணவில்லை.

நடனத்தை முடித்துக் கொண்டு வெளியே ஓடினான்.

கனிமொழிக்கு பின்னந்தலை வலித்தது. தேய்த்துக் கொண்டாள். சக்தி குழப்பத்தோடு அவளைப் பார்த்தான்.

"என்னாச்சி.?" என கேட்டவனிடம் "அவ தள்ளி விட்டதுல தலை சுவத்துல மோதிடுச்சி.. கொஞ்சமா வலிக்குது.." என்றாள்.

"எங்கே.?" எனக் கேட்டவனிடம் கை காட்டினாள்.

அவளின் பின்னலை கலைத்து பின்னந்தலையை பரிசோதித்தான். ஓரிடத்தில் வீங்கியிருந்தது. இவன் தொட்டதும் "அம்மா"வென்று கத்தினாள்.

ரத்னாவை நோக்கி பாய முயன்றான். சுதாரித்து அவனை பிடித்து இழுத்து நிற்க வைத்தாள் கனிமொழி. கஷ்டமான காரியமாக இருந்தாலும் சிரமப்பட்டு பிடித்து வைத்தாள்.

"வேணாம் மாமா.. எந்த பிரச்சனையும் வேணாம். வீட்டுக்கு போகலாம்.." என்றாள் கெஞ்சலாக.

அவளை கொடூரமாக முறைத்தான்.

"நீயெல்லாம் மனுச பிறப்புதானா.? இப்படி காயம் பண்ணி வச்சிருக்கா. அவளை காப்பாத்தி விட டிரை பண்ணிட்டு இருக்க.."

"வீண் வம்பு எதுக்கு.?"

"அந்த *** எதுக்கு உன்கிட்ட வீண் வம்பு பண்ணினா.?" எனக் கேட்டவனை கண்டு நெற்றியை பிடித்தபடி தலை குனிந்தாள்.

'வாயை திறந்தா கெட்ட வார்த்தை மட்டும்தான் பேசுவார் போல‌.. புது அவதாரமா இருக்கு. ஆண்டவா என் மாமாவை நான் அமைதியா வீடு கூட்டிப் போய் சேர்த்திடணும்..' என்று வேண்டிக் கொண்டாள்.

"வீட்டுக்கு போலாம் மாமா‌.." என்றாள் கெஞ்சலாக.

அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து போனான்.

ஹோட்டலின் முன் வாயிலை கடந்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. பாலாஜி ஓடிப் போய் அவளின் கையை பிடித்தான்.

"கீர்த்தனா.." என்றவன் அதன் பிறகுதான் அவளின் முகம் பார்த்தான். கண்ணீர் முகம் முழுக்க நிறைந்திருந்தது. லேசான விசும்பல் சத்தம் அவனின் செவி வரை கேட்டது.

"என்னை விடு பாலா.." என்றவளின் கன்னங்களை அள்ளினான்.

"கீர்த்தனா நான்.."

அவனை மேலே பேச விடாமல் "உன் காரணங்கள் போதும் பாலா‌‌.. போதும் விட்டுடு. நீயேதான் உன் தங்கச்சிக்காக என்னை பிரிச்சி கூட்டி வந்த. நீயேதான் நெருங்கற..‌நான் முடியாதுன்னு சொன்ன உடனே வேற பொண்ணை தேடுற.." என்றாள் அழுகையோடு.

பாலாஜிக்கு தான் சொதப்பியது தெளிவாக புரிந்தது.

"கீர்த்தனா சாரி.." என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தாள். அவன் கரங்கள் தானாய் கீழிறங்கியது. முழுதாய் விட மனமில்லாமல் அவளின் கையை பற்றினான்.

"இது சரி வராது பாலா.. உன்னை காதலிச்சதை போல ஒரு பெரிய பாவத்தை எந்த ஜென்மத்திலும் பண்ணியிருக்கவே மாட்டேன்.. எனக்கு ரொம்ப வலிக்குது. உன்னோடு இருந்தா பைத்தியம் பிடிச்சி செத்துடுவேன். நீ உனக்கேத்த ஒருத்தியை தேடிக்க.. முடியாத பட்சத்துக்கு உன்னோடு டேன்ஸ் ஆடிய அந்த பொண்ணையே கூட பிடிச்சிக்க.." என்றவள் தன் கையை உருவினாள்.

"சாரிதான் சொல்றேனே கீர்த்தனா.." சிறு குரலில் கெஞ்சியவனை கண்ணீர் நிறைந்து நின்ற விழிகளோடுப் பார்த்தாள்‌. "எல்லாத்துக்கும் சாரி சொன்னா சரியாகிடாது பாலா.. நீ என் மனசை எந்த அளவுக்கு உடைச்சிட்டு இருக்கன்னு உனக்கு புரியவே இல்ல.‌ உனக்கு என் மேல எந்த லவ்வும் இல்ல. இது ஜஸ்ட் லஸ்ட்.. ஆனா பாரு. இந்த உலகத்துல என்னை விட அழகான கவர்ச்சியான பெண்கள் பலர் இருக்காங்க.. காதல்ன்னு சொல்லி இனியும் என்னை ஏமாத்தாத.." என்றவள் தனது நிற்காத கண்ணீரை இடையில் ஒருமுறை துடைத்துக் கொண்டாள்.

"உன் மேல தப்பு இல்ல. நான்தான் உன்னை கம்பல் பண்ணேன் நான்தான் காதல்ன்னும் கல்யாணம்ன்னும் உன்னை கட்டாயப்படுத்தினேன்‌. என் எண்ணங்களும் முடிவுகளும் எப்பவும் தப்பாதான் இருக்கும்ன்னு பலரும் சொல்லி இருக்காங்க. இந்த விசயத்துல நான்தான் ரொம்ப வீராவேசமா பீல் பண்ணிட்டேன். ஆல்வேஸ் இடியட் நான்‌. நான் இனி உன்னை எதுக்கும் கம்பல் பண்ண மாட்டேன். உன்னை விட்டு விலகுறேன். நீயாவது சந்தோசமா இரு.." என்றவள் அவனிடமிருந்து விலகி நடந்தாள்.

தலையை பற்றினான் பாலாஜி. அவள் பின்னால் ஓடினான். அழுதபடியே பேருந்தில் ஏறினாள். அவளை இப்போது சமாதானம் செய்வது சரி வராது என்றுப் புரிந்துக் கொண்டவன் அவளை விட்டு சற்று அமர்ந்தான். அவளின் அழுத முகம் கண்டு மருகினான். தன்னையே திட்டிக் கொண்டான். தன்னையே வெறுத்தான்.

'உன்னால எதுவும் முடியாது பாலா.. நீ உயிரா நேசிச்ச பெண்ணை அழ வச்சிட்டு இருக்க.. அவளை வெற்றியே மேரேஜ் பண்ணிட்டு இருந்திருக்கலாம்.. அவ நிம்மதியாவாவது இருந்திருப்பா..' என்று தனக்குள் வெம்பினான்.

கிளப்பில் சுற்றி சுற்றி தேடியும் கூட தன் அண்ணனையும் அண்ணியையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை கனிமொழியால்.

"அவங்களை காணம் மாமா.." என்றாள்.

போனை எடுத்து அழைத்தான் சக்தி.

"நாங்க பஸ்ல இருக்கோம்.." என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டான் பாலாஜி.

"அவங்க போயிட்டாங்க.. வா நாம போலாம்.." என்று முன்னால் நடந்தவனை ஓடிப்போய் மறித்தவள் "பில்லு.." என்றாள்.

"அம்ருதா தருவா.. நீ வா போலாம்.." என்று அவளின் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான்.

அவன் காரை எடுத்ததும் சாய்ந்து அமர்ந்தவள் கண்களை சுருக்கிக் கொண்டு நேராய் அமர்ந்தாள். தலையை தொட்டாள்.

காரை அதே இடத்தில் நிறுத்தி விட்டான்.

"திரும்பு.." என்றவன் அவளின் கேசத்தை தள்ளி விட்டுவிட்டு மெதுவாக தேய்த்து விட்டான்‌.

"வலிக்குது மாமா.." என்றவளிடம் "தேய்க்கலன்னா அது அப்படியே இருந்துடும்.." என்று எச்சரித்தான்.

"ஆனா நீதான் எருமை மாடு மாதிரி தேய்ச்சி வைக்கிற.." என்றாள் வலியோடு.

அவளை விட்டுவிட்டான். செல்லும் வழியில் கடை ஒன்றின் அருகே நிறுத்தி ஐஸ் கட்டியாய் மாறி இருந்த ஒரு தண்ணீர் பாக்கெட்டை மீண்டும் வாங்கி வந்தான்.

"இதை ஒத்தடம் கொடு. இன்னைக்கு யார் முகத்துல விழிச்சியோ.‌" என்றவனை குறுகுறுவென பார்த்தவள் "உன் மேல ஏதோ வாசம் வருது மாமா.." என்றாள்.

சிறு நகைப்போடு அவள் முகத்தில் ஊதினான். ஏதோ ஒரு வாசம் வந்தது. நல்ல வாசம் போலவும் இருந்தது. சந்தேகத்திற்குரிய வாசம் போலவும் இருந்தது.

"நீ குடிச்சது என்ன டிரிங்க் மாமா.?" எனக் கேட்டாள்.

"அனாவசியமான கேள்வி.‌" என்றவன் அவளின் முறைப்பை கவனிக்காமல் திரும்பிக் கொண்டான்.

கிளப்புக்குள் வந்து அமர்ந்த ரத்னா தன் கழுத்தை தேய்த்து விட்டுக் கொண்டாள்.

"இருக்கும் இரண்டு எக்ஸாமையும் நீ எப்படி எழுதுறன்னு பார்த்துடலாம்டி.." என்று தனக்குள் சூளுரைத்துக் கொண்டாள். தான் பட்ட அவமானம் பற்றி சுப்ரியாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று இருந்தது அவளுக்கு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN