காதல் கணவன் 44

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தி பாலாஜியின் மீது தலையணையை தூக்கி வீசினான்.

"போடா பன்னாடை.. என் தொப்புள்ல உனக்கு என்னடா வேலை.? நான் என்ன ரம்பையா ஊர்வசியா.?" என கேட்டவன் அவசரமாக இறங்கி நின்று சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான்.

"என் ரூம்லயே என்னால சட்டை இல்லாம தூங்க முடியலையே.." என்று புலம்பினான்.

பாலாஜி யோசித்தான். "உன் தங்கச்சின்னு நினைச்சி டச் பண்ணிட்டேன். அதுக்கு இவ்வளவு சீனா.?" என்றவனின் மீது மீண்டும் தலையணையை எடுத்து எறிந்தான்.

"கொன்னுடுவேன் உன்னை. என் தங்கச்சின்னு நினைச்சி கட்டி பிடிக்கற.. அது போனா போகுதுன்னு விட்டா இப்ப என் நேவல் வரைக்கும் வந்திருக்க.. கன்றாவி கன்றாவி.." தலையில் அடித்துக் கொண்டான்.

"நாளைக்கெல்லாம் உன் ரூம்ல தூசு படிஞ்சி போய் கிடக்கற உன் பெட்டை தூக்கி வந்து அதோ அந்த கதவோர மூலையில் படுத்து தூங்கு.. மகனே என் பக்கத்துல நீ வந்தா கொலை நடக்கும்.." என்று எச்சரித்தான் சக்தி.

"நாளைக்குதானே.?" என்றபடி கீழே கிடந்த தலையணையை எடுத்த பாலாஜி கட்டிலில் வைத்தான். எகிறி விழுந்தான். கவிழ்ந்தடித்து உறங்கினான்.

"கன்றாவி பிடிச்ச பால் டப்பா மூஞ்சான்.. கட்டில்ல நார்மலா படுக்கறதை கூட வித்தியாசமா குரங்கு பல்டியடிச்சி விழுறான்.." முனகியபடியே கட்டிலின் இந்த பக்க ஓரத்தில் ஒண்டினான் சக்தி.

'இன்னைக்கு யார் முகத்துல விழிச்சேனோ.. எல்லாரும் கண்ட கண்ட இடத்துல தொடுறாங்க..' என்று மனதுக்குள் புலம்பியபடியே கண்களை மூடினான்.

காலை நேரத்தில் கனிமொழி அவசர அவசரமாக தலையை பின்னலிட்டுக் கொண்டிருந்தாள்.

"பாப்பா.." சக்தியின் அழைப்பில் திரும்பியவள் "என்னங்க மாமா.?" எனக் கேட்டாள்.

'அப்பப்ப இந்த வாங்க போங்க வேற.. மாமாவே காண்டாதான் இருக்கு. இவக்கிட்ட சொல்லி இவ கேட்கறதுக்கு பதிலா நான் சும்மாவே இருந்துடலாம்..' என நினைத்தவன் "மார்டியல் ஆர்ட்ஸ் கிளாஸ்ல உன்னை சேர்க்கலாம்ன்னு இருக்கேன் பாப்பா..." என்றான்.

கனிமொழி அதிர்ச்சியோடு முகம் வெளிறினாள்.

"என்னையா.?"

அவளின் விழிகளையும் வாயையும் கண்டு கடுப்பானவன் "உன்னைதான்டி. ஒத்தை நாள் வெளியே போயே கேவலமா அடி வாங்கிட்டு வந்திருக்க. அதுக்குதான்.." என்றான்.

"ஐயையோ.. வேணாம் மாமா.." பதறினாள்.

"ரோட்டுல போறவ கூட அடிக்கறா பாப்பா.. உனக்கு தைரியம் வேணாமா? நீயும் திருப்பி அடிக்கணும்டி.‌" என்றவனிடம் மறுப்பாக தலையசைத்தவள் 'என்னால திருப்பி அடிக்க முடியாது மாமா.. என் பிரெண்ட்ஸ் இதுவரைக்கும் எனக்கு தந்த பேரே போதும்..' என்று நினைத்தாள்.

"என் பிரெண்ட் சிலம்பம் ஸ்கூல் வச்சி.."

"வேணாம் மாமா.."

முகம் கோபத்தில் சிவந்தது அவனுக்கு.

"அப்படின்னா இப்படிதான் கண்டவக்கிட்டயும் அடி வாங்க போறியா.?"

மௌனமாக தலை குனிந்தாள். "ஈசியா முடியற விசயம் அது.. விடுங்க மாமா.." என்றாள்.

"உனக்கு கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கா.?" ஆத்திரத்தோடு கேட்டவன் அவள் மௌன சாமியாராய் நிற்பது கண்டு கடுப்பாகி வெளியே நடந்தான்.

கனிமொழி கையிலிருந்த சீப்பை அலங்கார மேஜையின் மீது வைத்தாள். முகத்தை பொத்தியபடி கட்டிலில் விழுந்தாள். சுயத்தை தொலைத்து வாழ்வது போலவே இருந்தது. ஒருநாளாவது அவர்களை எதிர்த்து பேசி விட்டால் நலம் என்று தோன்றியது.

பெருமூச்சை இழுத்து விட்டபடி எழுந்து நின்றவள் பாலாஜியை தேடிப் போனாள். தனது ஷூவில் என்னவோ பண்ணிக் கொண்டிருந்தவன் இவளை கண்டதும் ஷூவை எடுத்து வைத்து விட்டு நிமிர்ந்தான்.

"கனி.."

"அண்ணா கடைசி இரண்டு எக்ஸாம்.. கொஞ்சம் பயமா இருக்கு. நீ கூட வரியா.?" என்று தயக்கமாக கேட்டாள்.

"ஏன் கனி.? படிக்கலையா.?" எனக் கேட்டவனிடம் "இல்ல.. மனசுக்கு கொஞ்சம் சரியில்ல.. உனக்கு பேங்க்ல லீவ் கிடைக்குமா.?" எனக் கேட்டாள்.

"லீவ் கிடைக்கும் கனி. நான் வரேன். நீ நல்லா எக்ஸாம் எழுதுவ.. பயப்படாம இரு.." என்றவன் அவளின் தலையை வருடி விட்டான். சின்னதாக புன்னகைத்தவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

உணவு மேஜையில் அனைவரும் அமர்ந்திருந்தனர். கீர்த்தனாவின் முகத்தில் துளி கூட சிரிப்பு இல்லை. பாலாஜிக்கு வதையாக இருந்தது. அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்றே தெரியவில்லை.

கனிமொழியின் அருகே வந்து அமர்ந்தான் சக்தி. உணவை உண்டுக் கொண்டிருந்தவளின் தட்டை பார்த்தவன் எதிரே இருந்த உப்பு கிண்ணத்தை கையில் எடுத்தான். அவள் தட்டில் முழுதாய் கொட்டினான்.

"டேய் என்னடா இது.?" அர்ச்சனா தன் மகனை ஆத்திரத்தோடு பார்த்தாள்.

"பாப்பாவுக்கு சூடு சொரணையெல்லாம் ரொம்ப கம்மியா இருக்கும்மா.. அதான் கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிட்டா சரியா போகும்ன்னு நினைச்சேன்.." என்றான்.‌

வீட்டிலிருந்த மொத்த பேரும் அவனை அதிர்ச்சியோடு பார்த்தனர். "என்ன ஏது.?" என்று ஆளாளும் கேட்க ஆரம்பித்தனர்

பாலாஜி கோபத்தோடு எழுந்து நின்றான். கண்ணீரோடு தட்டைப் பார்த்து அமர்ந்திருந்த‌‌ தங்கையின் கைப்பிடித்து எழுப்பினான்.

"என்னம்மா ஆச்சி.? சக்தி ஏன் இப்படி பண்ணான்.?" எனக் கேட்டார் கனிமொழியின் தந்தை.

கனிமொழி மௌனமாக இருந்தாள். அவனோடு கொண்ட காதலுக்குதான் இப்படி செய்கிறானோ என நினைத்த பாலாஜி "உனக்கு கோபம் வர வைக்கிறேன் பாலான்னு காலையில் என்கிட்ட சவால் விட்டுட்டு வந்தான். அதுக்கு பாப்பா தட்டுல உப்பை கொட்டி வச்சிருக்கான்.." என்று விசயத்தை திசை திருப்பியவன் "நீ சாப்பிட்டது போதும். வா ஸ்கூல் போகலாம்.." என்று தங்கையை இழுத்துக் கொண்டு நடந்தான்.

"வர வர உனக்கு எகத்தாளம் அதிகமா போயிட்டு இருக்கு. உனக்கு வெற்றியே பரவாயில்ல.." என்று நெற்றியில் அடித்துக் கொண்டு நகர்ந்தார் கதிரேசன்.

"என்னடா ஆச்சி மாப்பிள்ளை.?" கனிமொழியின் தந்தை கவலையோடு கேட்டார்.

"சு.. சும்மாதான் மாமா.. ஒழுங்கா படிக்க சொல்லி நிறைய முறை சொல்லி தந்தேன். எவ்வளவு திட்டினாலும் தப்பாவே பரிட்சையில் எழுதிட்டு வந்தாளாம். நான் சொல்லி தந்து என்ன ப்ரயோஜனம்.? அதான் கடுப்பாகிடுச்சி. சாரி.." என்றவன் தன் தட்டில் அவனே உணவை பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தான்.

"இரண்டு பேரும் இரண்டு வேறு காரணம் சொல்றாங்க.. கனிக்கிட்ட கேட்டு இருந்தா அவ என்ன சொல்லி இருப்பாளோ.?" என்று முனகியபடி எழுந்து போனாள் தேன்மொழி.

பாலாஜி வழியில் பைக்கை நிறுத்தினான்.

"வா பாப்பா சாப்பிடலாம்.." என்று உணவகம் அழைத்துப் போய் உணவு வாங்கி‌ ‌தந்தான்.

"நீ ஏன் பாலா அப்படி சொன்ன.?" சந்தேகத்தோடு கேட்ட தங்கையிடம் "அவனுக்கு வர வர இப்படிதான் கோபம் வருது கனி. காரணமே இல்லாம கூட உன் தட்டுல உப்பை கொட்டி இருப்பான். நீ எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா அவன் உன் மேல பொய் பழி சுமத்துவதை என்னால ஏத்துக்க முடியாது. அதனாலதான் அப்படி சொன்னேன்.." என்றான்.

பள்ளியில் சுப்ரியாவின் முன்னால் நின்று வெப்பி வெப்பி அழுதுக் கொண்டிருந்தாள் ரத்னா.

"அழாதே பேபி.. அவளுக்கு சரியான பதிலடி தரலாம்.." என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் மேனகா.

சுப்ரியாவுக்கு ஆத்திரமாக வந்தது.

"கேவலம் ஒரு ஆண் மரம். அவளுக்கு அவ்வளவு திமிரா.?" என்று திட்டினாள்.

"அவளை கொண்டுப் போய் காலி கிளாஸ் ரூம்ல வச்சி பூட்டிடலாம். அவ அப்புறம் பரிட்சை எழுத முடியாது. உன்கிட்ட சாரி கேட்க வைக்கலாம்‌.." என்று ஐடியா தந்தான் வசந்தகுமார்.

ரத்னாவின் நீலி கண்ணீர் நிற்கவேயில்லை.

"என்னை அறைஞ்சி கழுத்தை நெரிக்கறான் அவன். இன்னும் அடிங்கன்னு சொல்றா அவ.." என்று அழுதாள்.

தோழிகள் இருவரும் சமாதானம் செய்துக் கொண்டே இருந்தனர். கனிமொழி வரும் பாதையை பார்த்தபடி காத்திருந்தனர்.

பாலாஜி ‌பள்ளியில் அவள் பரிட்சை எழுத போகும் வகுப்பறையின் முன்னே பைக்கை நிறுத்தினான். உள்ளே வர வாட்ச்மேனிடமும் ஆசிரியர் ஒருவரிடமும் அனுமதி வாங்கி இருந்தான்.

"நான் இங்கேயே உட்கார்ந்திருக்கேன்.." என்றான் இறங்கி நின்றவளிடம்.

சுப்ரியாவின் நண்பர் கூட்டம் பாலாஜியையும் அவளையும் குழப்பமும் அதிர்ச்சியுமாக பார்த்தது.

"நம்மகிட்ட சிக்க கூடாதுன்னு பாடிகார்டோட வந்திருக்கா.." என்று பற்களை கடித்தாள் மேனகா.

பள்ளியில் மாணவர்கள் அனைவரும் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்தனர்.

தங்கையின் கையை பிடித்தான் பாலாஜி.‌ "பாப்பா பரிட்சை வெறும் மார்க்கையும், ஞாபக சக்தியையும் அடிப்படையா கொண்டது. நீ ரொம்ப புத்திசாலி. தப்பா எழுதினாலும் தைரியமா ‌எழுது. மார்க் போனா போகட்டும். ஆனா பயந்து எழுதாதே. அப்புறம் சரியான பதிலும் கூட தப்பா போயிடும்.."

கனிமொழி சரியென்று தலையசைத்தாள்.

சுப்ரியா கூட்டம் கோபத்தில் கொப்பளித்தபடி அந்த இடத்தை விட்டு போனது.

பாலாஜி அவள் பரிட்சை எழுதும்வரை காத்திருந்து அவளை அழைத்துப் போனான்.

அம்ருதா தன் முன் வந்து அமர்ந்த வாடிக்கையாளருக்கு வணக்கம் வைத்தாள். அவரது சொத்தினை மதிப்பிட வேண்டிய முறையையும், எப்படி கடன் வாங்குவது என்றும் தெளிவாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

"எனக்கு எழுத படிக்க வராதுங்க.. நீங்களே எழுதி கொடுங்க.." என்று பாரத்தை நீட்டினார் அவர்.

அவர் கொண்டு வந்த பத்திரங்களை பார்த்தவள் பெயர் என்ற இடத்தில் வெற்றிவேல் என்று எழுதினாள். எழுதும்போதே கை ஏனோ நடுங்கியது. சின்னதாக சதி செய்தது.

'அவனை மறக்க ஒரு வழியும் இல்லையா.?' என்று தன்னிடமே கேட்டுக் கொண்டாள்.

அந்த பாரத்தில் அவரின் பெயரை பத்து இடத்தில் எழுத வேண்டி இருந்தது. பத்து முறையும் புது தண்டனையை பார்த்து வந்தாள் இவள்.

'அம்மு..' என்றவனின் குரல் காதோடு ஒலித்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியவில்லை

அவசரமாக போனை எடுத்து கவினுக்கு அழைத்தாள்‌.

"ஹாய் கவின்.. என்ன பண்ற.?" என்று ஆரம்பித்தாள்.

"தினப்படி வேலைதான் அம்ருதா.. நீ என்ன பண்ற.? நாலு கேபின் தள்ளி உட்கார்ந்துட்டு போன் பண்ணியிருக்க.?"

"சும்மா உன் ஞாபகம் வந்துடுச்சி.." அவள் சொன்னது கேட்டு கன்னங்கள் சிவந்தான்.

"சாயங்காலம் படத்துக்கு போகலாமா.?"

"போகலாம் கவின்.." என்றவளை வித்தியாசமாக பார்த்தார் எதிரே அமர்ந்திருந்தவர். அவள் கையிலே இருந்த பாரத்தினை பரிதாபத்தோடு பார்த்தார். நேரம் நகர்ந்துக் கொண்டிருந்தது. இவள் எப்போது பாரத்தை நிரப்பி தருவாள், தான் எப்போது வேலை முடிந்து வெளியே கிளம்புவோம் என்று காத்திருந்தார் அவர்.

கால் மணி நேரத்திற்கு மேலாக பேசி விட்டு போனை வைத்தாள் அம்ருதா. எதிரே இருந்தவரை பார்த்து மன்னிப்பு கோரும் விதமாக புன்னகைத்தாள். அவரின் வேலையை முடித்து அனுப்பினாள்.

வேலை முடிந்து கிளம்பிய பாரதியை மெக்கானிக் கடை வரை அழைத்து வந்தான் வெற்றி.

"வண்டி ரெடியாச்சா.?" எனக் கேட்டவள் எதிரே இருந்த ஸ்கூட்டியை பார்த்தாள். அவளது ஸ்கூட்டி எப்படி இருக்குமோ அதே போல இருந்தது. சின்ன உதிரி பாகங்களுக்கும் கூட பிராண்ட் மாற்றாமல் ஒரிஜினலை மாற்றி வைத்திருந்தான் நரேஷ்.

"ஸ்கூட்டி ரெடி மேடம்.." என்றவன் அவளின் சாவியை எடுத்து நீட்டினான்.

"எவ்வளவு.?" என்றவளிடம் "நூற்றி நுப்பது.." என்றான்.

அவனை சந்தேகத்தோடு பார்த்த வெற்றி தன் பாக்கெட்டிலிருந்த ஆயிரத்தை எடுத்து அவன் கையில் வைத்தான்.

நரேஷ் வருத்தத்தோடு பணத்தைப் பார்த்தான். உடனே வருத்தம் மறைத்து நிமிர்ந்தவன் "தேங்க்ஸ் சார்.." என்றான். தனது வேலையை கவனிக்க போய் விட்டான். பாரதியை பார்க்கவேயில்லை அவன்.

பாரதியும் வெற்றியும் கிளம்பிப் போனார்கள்.

"உன்னை பார்த்தா பாவமா இருக்கு அண்ணா.." என்றான் வண்டு.

"வேலையை பாருடா.." என்றவன் க்ரீஸ் கையால் இதயத்தின் மீது தேய்த்தான். இதயத்திற்கு ஆறுதல் சொல்ல முயன்றான்.

கதை இனி டெய்லி வராது நட்புக்களே.. சாபம் கதையும் என் வாழ்வின் பாதி நீ உன் மரணத்தின் மீதி நான் கதையும் ஒருநாள் அப்டேட் ஆகும். இன்னொரு நாள் காதல் கணவன் கதையும் மௌனமாய் சில முத்தங்களும் அப்டேட் ஆகும்..

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN