காதல் கணவன் 52

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கீர்த்தனா கடைக்கு சென்றுவிட்டு அப்போதுதான் திரும்பி வந்தாள்.

"அண்ணா எங்கே?" அறைக்குள் நுழைந்தவளிடம் கேட்டாள் கனிமொழி.

"எங்கேயாவது இருப்பானே.." என்றவளிடம் இல்லையென தலையசைத்தவள் "நானும் தேடி பார்த்தேன். அவனோட ரூம்லயும் சக்தியோட ரூம்லயும் அவன் இல்ல.." என்றாள்.

எங்கேயாவது இருப்பான் என்ற எண்ணத்தோடு விசயத்தை விட்டு விட்டாள் கீர்த்தனா.

இரவு உணவுக்கு வரும்போதுதான் கவனித்தாள். அவனை காணவில்லை. அவனின் போனுக்கு அழைத்தாள்.

"பாலா போனை ரூம்லயே வச்சிட்டு போயிட்டான்.." என்றபடி மேலே இருந்து தங்கைக்கு குரல் தந்தான் சக்தி.

'போனை வச்சிட்டு எங்கே போனான் பொறுக்கி?' யோசனையோடு உணவை முடித்துக் கொண்டு எழுந்தவள் மூளைக்குள் உறுத்தலை உணர்ந்தாள்.

தயக்கத்தோடு தன் மாமியாரின் அறைக்கு வந்தாள்.

'ஒன்னரை மாசமா எந்த பிரச்சனையும் இல்லாமதானே இருக்கான்.?' சந்தேகத்தோடு கதவை திறந்தாள்.

அவன் அங்கேதான் இருந்தான். தரையில் சுருண்டு படுத்தபடி அழுதுக் கொண்டிருந்தான்.

பதறியடித்து உள்ளே வந்தாள் கீர்த்தனா. தந்தை பார்த்தால் பாலாஜியின் மனதை வருத்துவாரே என்று பயந்து கதவை உடனே தாழிட்டாள்.

"பாலா.." அருகே சென்று அவனின் தோளை உலுக்கினாள்.

"கீர்த்து.." அழுகை குரலில் அழைத்தவன் "என் அம்மாவை நான் கொன்னுட்டேன் கீர்த்து. அம்மா உடம்பெல்லாம் ரத்தம். தலையெல்லாம் ரத்தம்.." என்றான். எழுந்து அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டான்.

அவனின் கையை கீழிறக்கி விட்டாள் கீர்த்தனா.

"என்னைக்கோ முடிஞ்ச விசயத்துக்கு இப்ப அழுது தொலையாத.. எழுந்து வா இங்கிருந்து போகலாம்.." அவனின் கைப்பிடித்து இழுத்தாள்.

"எனக்கும் சாகணும் கீர்த்து. அம்மா பாவம். தனியா இருப்பாங்க.." என்று குலுங்கி அழுதவனை கோபத்தோடு பார்த்தவள் "கொண்டுப் போய் ஆக்ஸிடென்ட் பண்ணி கொன்னுட்டு இன்னைக்கு சீனை போட்டுட்டு இருக்கியா பக்கி.?" எனக் கேட்டாள்.

அவள் சொன்னது கேட்டு அதிகமாக அழுதான் அவன்.

"உன் மேல தப்பு இல்ல பாலா. அழாதே.." அவனின் கன்னங்களை துடைத்து விட்டாள். ஆனால் அவனின் அழுகை நிற்கவேயில்லை.

"நான்தான் காரணம்.."

அவள் சமாதானம் செய்துப் பார்த்தாள். அவனிடம் ஆறுதல் சொல்லிப் பார்த்தாள். ஆனால் அவனின் அழுகை நிற்கவேயில்லை.

அவனிடம் போராட தெரியாமல் வெற்றிக்கு அழைத்தாள்.

அவன் அப்போதுதான் உறங்க முயன்றிருப்பான் போல.

இவள் அழைத்ததும் "சொல்லு கீர்த்து.." என்றான்.

"உன் பிரதருக்கு பழைய லூசு பிடிச்சிடுச்சி. உங்க அம்மா ரூம்ல உட்கார்ந்து ஒப்பாரி வச்சிட்டு இருக்கான்.." என்றாள் சோகத்தோடு.

வெற்றி எழுந்து அமர்ந்து விட்டான்.

நெற்றியை தேய்த்தபடி யோசித்தவன் "ஏதாவது உருட்டு கட்டை எடுத்து வந்து அவன் தலையில அடி. நல்லாகிடுவான்.." என்றான்.

'அட வீணா போன பக்கி..' மனதுக்குள் கறுவியவள் "அப்புறம் அவன் செத்து போவான்.. நான் விதவையா ஜெயிலுக்கு போவேன். உனக்கு ஏன் இவ்வளவு பேராசை?" எனக் கேட்டாள்.

"ம்ப்ச்.. அப்படி இல்ல கீர்த்து.." என்றவன் "அவனுக்கு இப்ப மனசுல பெயினா இருக்கும். அந்த பெயினை உடம்புக்கு கடத்திட்டா அவனோட அந்த பெயின் போயிடும்.." என்று விவரித்தான்.

கீர்த்தனா யோசனையோடு கணவனைப் பார்த்தாள்.

"அப்படின்னா இத்தனை வருசமா இதுக்காகதான் அவனை அடிச்சி துவைச்சிட்டு இருக்கியா.?" சந்தேகமாக கேட்டாள்.

வெற்றி தயங்கினான்.

"உண்மையை சொல்லு வெற்றி.."

"அவன் அழும்போது எனக்கு செமையா கோபம் வரும் கீர்த்து. அதனாலதான் அடிப்பேன்.." என்றான்.‌

கீர்த்தனாவால் அவனது வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"ஆரம்பத்துல அவன் மேல் நிறைய கோபம். அவனோடு பேசாம ஒதுங்கிதான் இருந்தேன். ஆனா அவன் முதல் முறையா அம்மாவோட சாவுக்கு அழுதபோது எனக்கு கடுப்பாகிப் போச்சி. அவன் அழுகும் போதெல்லாம் என்னையும் மீறி கோபம் வரும் கீர்த்து. நான் மிருகம் போல மாறிடுவேன். என்னை என்னால கன்ட்ரோலே பண்ண முடியாது. அவனோட அழுகை முழுசா நின்ன பிறகுதான் என் கோபம் என்னை விட்டு போகும்.."

கீர்த்தனாவால் கொஞ்சமாக புரிந்துக் கொள்ள முடிந்தது. தம்பியின் வேதனை அவனை ராட்சசனாக மாற்றி உள்ளது என்று புரிந்தது. அந்த கோபமேதான் பிற்காலத்தில் அவனுக்குள் ஊறி ஊறி அவனை நிரந்தர கோபக்காரனாக மாற்றி உள்ளது என்றும் புரிந்துப் போனது.

"நா.. நான் இப்ப என்ன செய்யட்டும்.? அதை சொல்லு.."

"அவனை அடி.. நல்ல உருட்டு கட்டையா எடுத்து வந்து மண்டையை பொளந்து விடு.. தென் ஹீ வில் பீ ஆல்ரைட்.."

கீர்த்தனா தலையை பிடித்தாள். அவளின் காலடியில் தலை குனிந்தவாறு அழுதுக் கொண்டிருந்த பாலாஜியை பார்க்கையில் அடிக்கும் எண்ணம் வரவே இல்லை.

"மாற்று வழி சொல்லு வெற்றி. என்னால அவனை கஷ்டப்படுத்த முடியாது.."

"புல்லரிக்குது.."

"இவன் அழுதுட்டு இருக்கான்டா. தயவுசெஞ்சி கிண்டல் செய்யாம வழியை சொல்லு.. இன்னைக்கு இந்த டைம்க்கு ஹாஸ்பிட்டல் கூட்டி போக முடியாது. எங்க அப்பா இவனை கேவலமா திட்டுவாரு. அவர் என் மேல இருக்கும் அக்கறையில் திட்டினாலும் கூட இங்கே வீட்டுல வீணா சண்டை வரும்.." அவன் விசயத்தை புரிந்துக் கொள்வான் என நினைத்துச் சொன்னாள்.

"எனக்கு தெரிஞ்ச ஒரே வழி அவனை தூக்கிப் போட்டு பந்தாடுறதுதான்.. அவன் பீலிங்கை மாத்தணும். அது உடல்வலியால மட்டும்தான் முடியும். அதுதான் நாங்க இத்தனை வருசமா கண்டுபிடிச்சி வச்சது.. நீயும் அதையே டிரை பண்ணு. இல்லன்னா சக்தியை கூட்டி வா. உனக்கு பதிலா அவன் நாலு அறை தரட்டும். அறைஞ்சாலும் அவன் புத்தி தெளிய மாட்டான். ஒரு கத்தி எடுத்து வந்து அவன் காலுலயோ கையிலயோ நச்சுன்னு குத்த சொல்லு.." அவன் மேலே சொல்லும் முன் அழைப்பை துண்டித்துக் கொண்டு விட்டாள்.

"அவன் பேச்சை கேட்டா அவ்வளவுதான்.."

யோசித்தவள் பாலாஜியின் அழுகையை கண்டு உடைந்தாள்..

"டுபாக்கூர்ஸ் மண்டையனுங்க.. மனசு வலியை எக்ஸைஸ் பண்ணி உடம்பு வலியா மாத்தணும். அதுதானே இத்தனை வருசமா ஆண்களின் வழிமுறையா இருக்கு.? அதுதானே ஊர் வழக்கம், உலக வழக்கமும் கூட? இவனுங்க ஏன் புதுசா டிரை பண்றானுங்க.." கடுப்போடு திட்டினாள்.

"அம்மா.." ஈனஸ்வரத்தில் முனகியவனின் முன்னால் மண்டியிட்டவள் "பாலா என்னை பாரு.." என்றாள். அவன் பார்க்கவேயில்லை.

அவனை அறைய கையை ஓங்கினாள். ஆனால் உடனே இறக்கிக் கொண்டாள். அது அவளால் முடியாத காரியம். கோபத்தில் அறைவது தனி கணக்கு. அழுபவனை எப்படி அறைவாள்.?

அவனின் கன்னங்களில் கைகளை பதித்தாள்.

"பாலா.. பேபி என்னை பாரு. அழாதே ப்ளீஸ்.. ஒரே ஒருமுறை என்னை நேரா பாரு.." கெஞ்சிக் கேட்டாள்.

அழுதவன் நிறுத்தவேயில்லை. அவன் அழுவதை காண காண அவளுக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தது. இதயம் இளகிக் கொண்டே இருந்தது. அவனை அணைத்துக் கொண்டு அழுது விடலாமா என்று யோசித்தாள். ஆனால் அப்படி செய்தால் இருவருமே வெளிவர முடியாத அந்த சோகத்தின் சுழலுக்குள் சிக்கிக் கொள்வோம் என புரிந்தது.

அவனை அந்த சோகத்தின் பிடியிலிருந்து வெளிக் கொண்டு வருவது எப்படி என்று யோசித்தாள்.

உடலின் வலியை மாற்றுவது எப்படி என்று எவ்வளவு யோசித்தும் அவளின் சிறுமூளை சட்டென்று பதில் தர மறுத்தது. அடிப்பதோ உதைப்பதோ சரி வராது.

தயக்கத்தோடு அவனின் முகத்தை அருகில் கொண்டு வந்தாள். அழுதவனின் இதழில் தன் இதழை பதித்தாள்.

ஆரம்பத்தில் அவனின் கவனம் திரும்பவேயில்லை. அவளும் தன் முத்தத்தை திருப்பிக் கொள்ளவில்லை.

இப்படி கவனத்தை திருப்புவது உதவுமா என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனாலும் தனது பரிசோதனையை தொடர்ந்தாள்.

அழுகையினுள் மூழ்கிப் போயிருந்த பாலாஜியின் மூளைக்கு வெகுநேரம் கழித்துதான் தன் இதழ் மேல் விளையாடிக் கொண்டிருந்த அவளின் இதழ்களை பற்றிய சிந்தனைக்கு வந்தது.

உண்மையிலேயே அவள் அவனின் கவன சிதறலாகவும், கவன ஈர்ப்பாகவும் இருந்தாள். அவள் மேனியின் வாசத்தை புத்தியோடு சுவாசிக்க ஆரம்பித்த சில நொடியிலேயே முழுதாய் மாறி விட்டான். இறந்த காலத்தையும், இதற்கு முன் தன்னை பிடித்து வைத்திருந்த‌ சோகத்தையும் மறந்து விட்டான்.

தன் இடுப்பில் அவனின் கரம் பதிய ஆரம்பித்ததும் சிறு நிம்மதி வந்து சேர்ந்தது அவளிடம். இனி பிரச்சனையில்லை என நினைத்து விலக முயன்றாள்.

விலகியவளின் பின்னங் கழுத்தில் பதிந்தது அவனின் மறு கரம். அவனின் நெஞ்சில் கை வைத்து பின்னால் தள்ள முயன்றாள். விழுந்தவன் அவளையும் தன்னோடு சேர்த்து அணைத்தபடி விழுந்தான்.

தன்னிடமிருந்து எழ முயன்றவளை தரையில் சாய்த்தான். அவள் எவ்வளவு முயன்றும் அவனின் இதழ்களும் கரங்களும் அவளை விடவேயில்லை.

கவினின் வீட்டின் முன் காரை நிறுத்தினாள் அம்ருதா. இருவரும் இரவுகாட்சி சினிமாவிற்கு போய் விட்டு வந்திருந்தனர். பார்த்து வந்த ஆங்கில திரைப்படம் கவினின் மூளைக்குள் குறுகுறுப்பை தந்திருந்தது.

"அம்ருதா.." என்றபடியே அவளை நெருங்கி அமர்ந்தான்.

அவளின் கையை பிடித்து மேலேறியவன் அவளின் கழுத்தில் கைகளை பதித்தான். தாடையில் நகர்ந்த கரம் கன்னங்களை பற்றி அவனருகே இழுத்தது. வெட்கம் கொண்ட கன்னங்களோடு அவனுக்கு இசைந்து நெருங்கினாள் அம்ருதா.

இருவரின் கழுத்தும் முத்தமிட ஏதுவாக சாய்ந்தன. இதழ்கள் இரண்டும் மோத இருந்த நொடியில் கண் மூடியிருந்தவளின் கருவிழிகளில் வந்து நின்றான் வெற்றி.

படக்கென்று கண்களை திறந்தவள் தன் முன் இருந்தவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.

"அம்ருதா.." ஏமாற்ற குரலில் விழி பார்த்தவனிடம் "சா.. சாரி கவின்.." என்றாள்.

முகத்தை தேய்த்தபடி இருக்கையில் சாய்ந்தவள் "ரியலி சாரி.. எனக்கு கொஞ்சம் டைம் தரியா.?" எனக் கேட்டாள்.

"ஓ.. ஓகே.. டேக் ரெஸ்ட்.." என்றவன் கீழே இறங்கினான். அவளால் தன்னிடம் நெருங்க முடியவில்லை என்பதை அவனும் புரிந்து வைத்திருந்தான். முந்தைய காதலால் அடிப்பட்டு இருப்பவள் அனைத்தும் மறந்து சட்டென்று இன்னொருவனை நெருங்குவது சிரமமான காரியம் என்று யூகித்துக் கொண்டவன் அவளுக்கு நேரம்‌ தருவது தவறில்லை என்று எண்ணிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

"ச்சை.. எவ்வளவு டிரை பண்ணாலும் விட்டு தொலைய மாட்டேங்குது அவன் நினைப்பு‌. தெரியாம லவ் பண்ணி தொலைச்சிட்டேன்.." வெற்றியை திட்டிக் கொண்டே தனது வீட்டை நோக்கி காரை செலுத்தினாள்.

தான் தன்னோடு அணைத்திருந்தவள் நெளிவது உணர்ந்து கண்களை திறந்தான் பாலாஜி.

"தூங்க விடு.." என்றான்.

"பரதேசி.. என்னை விடுடா.." அவனின் ஒற்றை கை அணைப்பிலிருந்து கூட விடுபட முடியாமல் கோபத்தோடு அவனை‌ திட்டினாள் கீர்த்தனா.

"இப்ப விட முடியாது கீர்த்து. யூஸ் பண்ற வரை யூஸ் பண்ணிட்டு தூக்கி எறிஞ்சிட்டன்னு சொன்னாலும் சொல்வ நீ.." என்றவன் தன் காலடியில் கிடந்த அவளின் உடைகளை தூரமாக உதைத்து தள்ளினான்.

'எவ்வளவு வீரப்பா இருந்தேன்.? இப்படி சாச்சிட்டானே.?' நெருப்பு ஒன்றுதான் எரியவில்லை அவளின் நெஞ்சில்.

"கொஞ்ச நேரம்.. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் கீர்த்தனா.." என்றவன் அவள் புறம் திரும்பினான். அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

மௌனமாக இருந்தவளின் இடையை வருடியவன் "தேங்க்ஸ்.." என்றான்.

"எ.. எதுக்கு?"

"பைத்தியக்கார ஹாஸ்பிட்டல் கூட்டிப் போகாம இப்படி வித்தியாசமா என் பிரச்சனையை தீர்த்து வச்சதுக்கு.." என்றவனை மறுநாள் மனநல மருத்துவர் மங்கையிடம் அழைத்துச் சென்றாள் கீர்த்தனா.

"நேத்து வேறு வழி இல்லாம அப்படி ஒரு முடிவை தேர்ந்தெடுத்தேன். ஆனா அது ஒவ்வொரு முறையும் வொர்க் அவுட் ஆகுமா? நீ முறைப்படி சிகிச்சை எடுத்துக்கறதுதான் நல்லது. அண்ணனுக்கும் தம்பிக்கும் மூளை இல்லைங்கற காரணத்துக்காக முட்டாள் மாதிரிதான் யோசிப்பிங்களா?" எனக் கேட்டாள்.

நல்லவேளையாக அவன் இத்தனை நாளாக பயன்படுத்திக் கொண்டிருந்த இன்னொரு வழிமுறையை பற்றி சொல்லாமல் போய் விட்டான். இல்லையென்றால் அதற்கும் அவனை அடி முட்டாளென்று திட்டியிருப்பாள்.

மங்கை அவனை வரவேற்று அமர வைத்தாள். "உங்களுக்கு என்ன பிரச்சனை சார்.?" எனக் கேட்டாள்.

காலை நேரத்திலேயே பாரதியின் ஸ்கூட்டியில் ஏதோ ஒரு ஒயர் விட்டு போனது. நரேஷின் கடைக்குதான் உருட்டி வந்தாள். கடையின் வாசலில் நின்றிருந்த பெண்மணியை கண்டு ஆனந்த அதிர்ச்சியானவள் ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.

"ஹாய் ஆன்டி.. நீங்க இங்கே எங்கே?" என விசாரித்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. இந்த எபிக்கு கமெண்ட் பண்ண யாராவது உண்டா‌.? 😍
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN