காதல் கணவன் 53

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ரத்னாம்பிகை மகனை முறைத்து விட்டு பாரதியின் புறம் திரும்பினாள்.

"நீ நல்லாயிருக்கியாம்மா.?" எனக் கேட்டாள்.

"சூப்பரா இருக்கேன் ஆன்டி.? எங்க ஊர் பக்கம் என்ன.? இங்கேயும் உங்க பிசினஸை ஆரம்பிக்க போறிங்களா.?" மகிழ்ச்சியோடு கேட்டாள்.

அன்று இவள் கிட்னி தந்து ஓய்வெடுத்த நாட்களில் அவர்களை பற்றிய சில விசயங்களை மேலோட்டமாக சொல்லியிருந்தாள் ரத்னாம்பிகை.

"ஏற்கனவே இங்கே ஷோரூம்ஸ் இருக்குடா கண்ணு.." என்றவள் மீண்டும் தன் மகன் பக்கம் திரும்பி முறைத்தாள்.

நரேஷ் அம்மாவை நேராய் பார்க்காமல் வண்டிக்கு ஆயிலை மாற்றிக் கொண்டிருந்தான்.

"ஏன் ஆன்டி அவரை அப்படி பார்க்கறிங்க? உங்க வண்டியை ரிப்பேர் பண்ண டைம் எடுத்துக்கிட்டாரா? லேட்டானாலும் வேலை நீட்டா இருக்கும். நீங்க கவலைப்படாதிங்க. எனக்கு தெரிஞ்சவர்தான் இவரு.." என்றவளை நக்கலாக பார்த்தபடி ஓரமாக நின்றுக் கொண்டிருந்தான் வண்டு.

"சீக்கிரம் சரி பண்ணி கொடுத்துடுங்க நரேஷ்.."

"அண்ணி.." வண்டுவின் அழைப்பில் திரும்பியவள் "ஏன்டா.? என்னை அப்படி கூப்பிடாதேன்னு எத்தனை முறை சொல்வது.?" எனக் கேட்டாள் கோபத்தோடு.

"அண்ணியை அண்ணின்னுதானே கூப்பிட முடியும்?" என முனகியவன் "அவங்க இவரு அம்மாதான்.." என்றான்.

பாரதிக்கு சில நொடிகள் ஆனது புரிந்துக் கொள்வதற்கு. ஆனாலும் சட்டென்று பல்ப் எரிந்து விட்டது.

"ஆன்டி..?" ஆச்சரியத்தோடு அவளை பார்த்தவள் "நரேஷ் உங்க மகனா.? ஆனா இங்கே ஏன் வேலை செய்றாரு.? பிசினஸ் லாஸாகிடுச்சா ஆன்டி?" என்று பரிதாபத்தோடு கேட்டாள்.

ரத்னாம்பிகை மகனை முறைத்தாள்.

"அதெல்லாம் இல்லம்மா.. இவன் திமிர் ஏறி இங்கே வந்து மெக்கானிக் கடை வச்சிருக்கான்.."

பாரதி யோசித்தாள். "நா.. நான் இவருக்கா கிட்னி தந்தேன்.? உங்களுக்கு ஒரே பையன்தானே.?"

"இவன்தான்ம்மா.." என்று பெருமூச்சு விட்டவளின் அருகே வந்த நரேஷ் "நீங்க கிளம்புங்க மம்மி.." என்றான்.

"நீ வராம நான் போக மாட்டேன்.." என்று கத்தியவள் "பாரதிம்மா இவனுக்கு உன் மேல காதலாம். அந்த காதலை சொல்ல பயந்து உன் காலடி பிடிச்சி இத்தனை வருசமா நடந்துட்டு இருக்கான்.." பட்டென்று சொல்லி விட்டாள்.

நரேஷ்க்கு முகம் சிவந்து போனது. "மம்மி.."

"நீ சும்மா இருடா.." என்றவள் "உன்னை மூனு வருசமா உயிரா லவ் பண்றான்ம்மா. உனக்கு பிடிச்சிருக்கா இவனை.? இதை நானே முதல்ல‌ சொல்லியிருந்தா ஆகியிருக்கும். இவனை நம்பி விட்டு இத்தனை வருசம் வீணா போனதுதான் மிச்சம்.." என்று வருந்தினாள்.

நரேஷ் பாரதியின் முகம் பார்க்கவில்லை. "நீங்க போங்கம்மா.." என்றவன் அம்மாவின் கார் டிரைவரை பார்த்தான்.

"அம்மாவை வீட்டுக்கு கூட்டி போங்க சோ.." என்றான்.

ரத்னாம்பிகை மகனை முறைத்தபடியே அங்கிருந்து சென்றாள்.

பாரதியின் ஸ்கூட்டியின் அருகே வந்தவன் வண்டியை பார்வையால் சோதித்தான்.

"மறுபடியும் ஒயர் அந்து போயிருக்கு.." என்றவன் குனிய முயல, அவனின் தோள் பகுதியிலிருந்த சட்டையை பிடித்து நிறுத்தினாள் பாரதி.

"அம்மா சொன்னதை காதுல வாங்காதிங்க.." என்றவன் முடிக்கும் முன்பே "நாம கொஞ்சம் பேசலாமா? தனியா?" எனக் கேட்டாள்.

மெக்கானிக் ஷெட்டின் பின்னாலிருந்த மரத்தடிக்கு வந்தனர் இருவரும். வேப்பம் மரத்திலிருந்த சிறு பூக்கள் காற்றில் சலசலத்தபடி விழுந்து இருவரையும் ஆசிர்வாதம் செய்தன.

"பாரதி இதை விட்டுடலாம்.."

"என்னை பத்திய ஒரு விசயம்ன்னா அது நான் அறிஞ்சிக்க உரிமை இருக்குன்னு நினைக்கிறேன். நீங்க என்னை லவ் பண்றிங்களா? மூனு வருசமாவா? ஆனா ஏன் சொல்லல.?" சந்தேகத்தோடு கேட்டாள்.

தரையை பார்த்தான் நரேஷ்.

"ரொம்ப லவ் பண்றேன் பாரதி. கிட்னி தந்த உனக்கு தேங்க்ஸ் சொல்லலாம்ன்னுதான் உன்னை தேடி வந்தேன். ஆனா பார்த்த செகண்ட் லவ்வுல விழுந்துட்டேன். ரொம்ப பிடிக்கும்.. ஆனா ரிஜெக்ட் பண்ணிடுவியோங்கற பயத்துல சொல்லல.."

அவனை பார்க்க பார்க்க பரிதாபம்தான் கூடியது அவளுக்கு.

"ஐயம் சாரி நரேஷ்.." என்றவளிடம் புரிந்துக் கொண்டதாக தலையசைத்தான்.

"எனக்கு வெற்றியை பிடிச்சிருக்கு.." சிறுகுரலில் சொன்னாள். உண்மையிலேயே அவளுக்கு அவனை பிடித்திருந்தது. கற்பனையில் காதல் வளர்த்து, அதற்கு நிஜத்திலும் உயிர் கொடுத்திருந்தாள்.

"பரவால்லைங்க. புரியுது.."

"இல்லைங்க. நீங்க எனக்காக இவ்வளவு தூரம் வந்து இப்படி கஷ்டபடுறது சரி கிடையாது. உங்க ஊருக்கு திரும்பி போயிடுங்க.."

யாராய் இருந்தால் என்ன? தன்னால் ஒருவன் சிரமப்படுவதை விரும்பவில்லை அவள்.

"போ.. போறேன்ங்க.. கொஞ்ச நாள்.. இங்கே எங்க ஷோ ரூம்ஸை அனலைஸ் பண்ண வேண்டி இருக்கு.. அப்புறம் போயிடுறேன்.." பொய்தான் சொன்னான். அதை விட முக்கியமாக இவளை தினம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது‌ அவனுக்கு.

பாரதி தலையசைத்தாள். கிளம்ப முயன்றாள்.

"பாரதி.." அவனின் அழைப்பில் திரும்பினாள்.

"சும்மா ஒரு டவுட். ஒருவேளை நீங்க வெற்றியை பார்க்கும் முன்னாடி நான் உங்ககிட்ட வந்து என் காதலை சொல்லியிருந்தா ஏத்துக்கிட்டு இருந்திருப்பிங்களா.?" தயக்கமாக கேட்டான்.

யோசித்தவள் "சான்ஸ் இருக்கு.." என்றாள்.

அவள் போய் விட்டாள். தலையை கோதியபடி மரத்தில் சாய்ந்தான் அவன். அப்போதே சொல்லியிருக்கலாம் என்று இப்போது தோன்றியது. தனது தயக்கத்தையும் பயத்தையும் அடியோடு வெறுத்தான். பல விசயங்களில் தைரியக்காரன்‌. இந்த காதல் விசயத்தில் பயந்தாங்கொள்ளியாகி போனதற்காக தன்னையே வெறுத்தான்.

மங்கை தன் முன்னிருந்த பாலாஜியிடம் விசயங்களை கேட்டறிந்துக் கொண்டிருந்தாள்.

"அந்த வீடுதான் உங்களுக்கு பிரச்சனை? அப்படின்னா இத்தனை நாளா எப்படி சமாளிச்சிங்க?"

பாலாஜி தயங்கினான்.

"டாக்டர்கிட்ட எதையும் மறைக்க கூடாது மிஸ்டர். அப்பதான் நான் உங்களுக்கு சரியான சிகிச்சை‌ தர முடியும்.."

"என் ஷூவுல கரண்ட் ஷாக் தரும் டிவைஸை கனெக்ட் பண்ணி வச்சிருந்தேன். என் அம்மாவோட ரூம் கதவுல ஒரு டிராக்கிங் டிவைஸ் இருக்கும். நான் என் அம்மாவோட ரூமை டச் பண்ண டிரை பண்ணா என் ஷூவுல இருக்கும் டிவைஸ்க்கு சிக்னல் வந்து எனக்கு கரெண்ட் ஷாக் தரும். நான் புத்தி தெளிஞ்சி திரும்பிடுவேன்.."

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்துப் போனாள் கீர்த்தனா.

"டேய் நாயே.. உனக்கு சாக அவ்வளவு ஆசையாடா?" எனக் கேட்டு அவனை மொத்தினாள்.

அவளின் கையை பிடித்தவன் "எனக்கு வேற வழி தெரியல கீர்த்து.." என்றான்.

கீர்த்தனா அவனை தள்ளி விட்டாள். இரு கைகளாலும் தலையை பிடித்தபடி தரையை பார்த்தாள்.

அந்த வீடு அவனுக்கு உண்மையிலேயே பிரச்சனையாக இருப்பதால்தான் அவன் தனக்காக அந்த வீட்டிற்கு வரவில்லை என்பது தெளிவாக புரிந்தது.‌ தங்கைக்காக உயிர்‌ தருவது பொறாமையை தரவில்லை இப்போது. மாறாக அவன் மீது கொண்ட காதலால் எரிச்சல்தான் வந்தது.

"அந்த வீட்டை விட்டு போயிடலாம்.." என்றாள் முடிவாக.

"ஒன்னரை மாசம்.." என்றவனை முறைத்தவள் "ஏன்டா நாயே என்னையும் சேர்த்து சாகடிக்கற.? உன் தங்கச்சியை வேணும்ன்னா நம்ம வீட்டுக்கு கூட்டி போயிக்கலாம். இதுக்கு மேல ரிஸ்க் எடுக்க வேணாம்.." என்றாள்.

"புருசனை நாயேன்னு கூப்பிடறது எந்த நாட்டு கலாச்சாரம் தாயே?" என்றவனின் தலையில் கொட்டியவள் "பேச்சை மாத்தாதே.." என்றாள்.

"கனியை கூட்டிப் போக முடியாது. தேவையில்லாத கேள்விகள் வரும். அவ லைஃப் எந்த பக்கத்துல இருந்தும் பாதிச்சிட கூடாதுன்னுதான் நான் இவ்வளவு எச்சரிக்கையா இருக்கேன்.."

"ஓகே.. ஓகே.." அவர்கள் சண்டை போட்டுக் கொள்ளும் முன் நிறுத்தினாள் மங்கை.

"இப்ப பிரச்சனைக்கு வரலாம். பிரச்சனையை கண்டு தப்பிச்சி போவது எப்பவுமே தப்புதான்.. அந்த பிரச்சனையை சரி செய்யதான் பார்க்கணும்.." என்ற மங்கை "உங்களை தனியா விசாரிக்கணும்.." என்றாள்.

கீர்த்தனா அவனை முறைத்துக் கொண்டே வெளியே போனாள்.

மங்கை அவனிடம் ஒரு மணி நேரம் விசாரிப்பில் ஈடுப்பட்டாள். பிறகு கீர்த்தனாவையும் உள்ளே அழைத்தாள்.

"ஓகே. நீங்க குறைஞ்சபட்சம் ஆறு மாசமாவது கவுன்சிலிங் எடுத்துக்கிட்டே ஆகணும். மாசம் இரண்டு முறை வரணும்.." என்று டிஸ்கிரிப்ஷனை எழுத ஆரம்பித்தாள்.

"அந்த ஆறு மாசமும் கண்டிப்பா நீங்க அந்த வீட்டுலயேதான் இருந்தாங்கணும்.." என்றவளை பயத்தோடு பார்த்தாள் கீர்த்தனா.

"நார்மலா இருக்கவே டிரை பண்ணுங்க. உங்க அம்மாவோட ரூமை பார்க்கும்போது உங்க மைன்ட் நார்மலா யோசிக்கணும். அதுவரைக்கும் நீங்க டிரை பண்ணிதான் ஆகணும்.." என்ற மங்கை கீர்த்தனாவின் புறம் பார்த்தாள்.

"அவரோட‌ க்யூருக்கு நீங்களும் ஒரு மருந்து. அதை நீங்க மறந்துட வேணாம். அவர் மேல அக்கறை இருந்தா கொஞ்சம் அன்பை காட்டுங்க. உங்க கோபத்தை ஆறு மாசம் கழிச்சி கூட காட்டிக்கங்க.." என்றாள்.

"நானெல்லாம் அன்பாதான் இருந்தேன் டாக்டர். இந்த பேய்தான் என்கிட்ட எதையும் சொல்லாம மறைச்சிடுச்சி. ஒரு பொண்டாட்டிக்கான மரியாதையை தரவேயில்ல இவன்.. பெட்ரூம்க்கு மட்டும்தான் என்னை யூஸ் பண்ணணும்ன்னு நினைச்சிருக்கானோன்னோ எனக்கே தோணுது. எதையும் கலந்து பேசுறது இல்ல. அன்பா ஒரு கண் சைகை காட்டுறது இல்ல.. காதலா ஒரு வார்த்தை பேசுறது இல்ல. கவிதை படிக்கலான்னாலும் பரவாயில்ல. அட்லீஸ்ட் ஒரு கவிதை புக் கூட வாங்கி பிரசெண்ட் பண்ணது இல்ல.." என்று குறையாக சொன்னாள் கீர்த்தனா.

"போதும் போதும்.. நானெல்லாம் இதை செய்யத்தான் நினைச்சேன். நீதான் எப்பவும் மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டே திரிஞ்ச.." என்றான் பாலாஜி.

மங்கை இருவரையும் பார்த்து விட்டு தனது நோட்டை திறந்தாள்.

"கணவன் மனைவி சண்டைகளை சரி செய்யவும் நான் கவுன்சிலிங் தரேன். ஆனா நீங்க அதுக்கு வாரம் இரண்டு முறை வந்துட்டு போக வேண்டி இருக்கும். பீஸ் கூட ரொம்ப கம்மிதான்.." என்றாள் இவர்களின் பெயரை எழுதியபடி.

"வேணாம் டாக்டர். இதை நாங்களே பேசி தீர்த்துக்கறோம். நீங்க ஏற்கனவே தந்த பில்லே வாயை பொளக்க வைக்கிற அளவுக்குதான் இருக்கு. புது பில் வேணாம்.." என்று அவசரமாக சொன்னாள் கீர்த்தனா.

"ஓகே. அப்படின்னா நீங்களே பார்த்துக்கங்க. அவரை நல்லா கவனிச்சிக்கங்க. அவர் க்யூர் ஆகும் வரை நீங்களும் மருந்தா இருங்க.."

கீர்த்தனா சரியென்று தலையசைத்தாள். அவனுக்காக இதை கூட செய்ய முடியாதா என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

குளித்துவிட்டு வெளியே வந்தான் சக்தி. இடுப்பில் துண்டை கட்டியிருந்தவன் தலையை மற்றொரு துண்டால் துடைத்தபடியே கண்ணாடியை பார்த்தான். தலையிலிருந்த முடிகள் கண்களை மறைப்பது போலிருந்தது. ஹேர் கட் செய்ய வேண்டும் என்று புரிந்தது.

கையிலிருந்த துண்டை நாற்காலியின் மீது வீசியவன் கட்டிலை பார்த்தான். அவன் எடுத்து வைத்து சென்றிருந்த உடைகள் கலைந்து கிடந்தது. கால் சட்டையும் மற்ற உடைகளும் இருந்தன. ஆனால் சட்டையை காணவில்லை.

கதவை பார்த்தான். பாதி திறந்திருந்தது. பற்களை கடித்தபடி உடைகளை அணிந்தான். வேறு சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

வேறு வேலை இல்லையென்று கேம் விளையாடிக் கொண்டிருந்தாள் கனிமொழி. கதவு படாரென்று திறக்கப்பட்ட சத்தத்தில் துள்ளி விழுந்தவள் திரும்பி பார்க்கும் முன்பே உள்ளே பாய்ந்து வந்து விட்டான் சக்தி.

"என் சட்டை எங்கேடி?" அடிப்பது போலவே கேட்டான்.

அவனின் கோபத்தில் பயந்தே விட்டாள் அவள்.

"எ.. என்ன சட்டை மா.." அவளை மேலே பேச கூட விடாமல் சப்பென்று ஒரு அறையை விட்டு விட்டான்.

எரியும் கன்னத்தை பிடித்தபடி அவனை பயத்தோடு பார்த்தாள்.

"என் சட்டை எங்கே? என் ரூம்குள்ள நீ வர கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல? அப்புறம் ஏன் வந்த?" அவனின் கத்தலில் அடுத்த அறையிலிருந்த தேன்மொழியும் கூட ஓடி வந்து விட்டாள்.

"என்னாச்சி சக்தி.?" என்று வந்தவளை திரும்பி பார்த்தவன் சட்டென்று முகம் மாறி போனான். தேன்மொழியின் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது அவன் தேடிக் கொண்டிருந்த சட்டை. கழுத்தை சுற்றி டேப்பை அணிந்திருந்தாள். கையில் சாக்பீஸ் கறை இருந்தது.

"இந்த சட்டையை நீதான் எடுத்தியா.?"

"ஆமா சக்தி. சட்டை தைக்க பழகிட்டு இருக்கேன். முதல் சட்டை வெற்றிக்கு. அவனோட அளவு சட்டை இல்லை. உன்னோடது சரியா இருக்கும்ன்னு எடுத்துக்கிட்டேன். தச்சி முடிச்சதும் திருப்பி தந்துடுறேன்.." என்றவள் அதன் பிறகுதான் நினைவு வந்தவளாக "எதுக்கு கத்திட்டு இருந்த?" எனக் கேட்டாள்.

நெற்றியை தேய்த்தபடி திரும்பிப் பார்த்தான். கனிமொழி தரையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அறைந்த தடம் வேறு அப்படியே தெரிந்தது.

"சும்மாதான். படிக்க சொல்லிட்டு இருந்தேன்.." என்றான் சமாளிப்பது போல.

"லீவுல கூட படிக்க சொல்லி டார்ச்சர் பண்ணாத சக்தி. நல்லவேளை நான் வேற காலேஜ் சேர்ந்தேன். என் அப்பா பேச்சை கேட்டு உன் காலேஜ்ல சேர்ந்திருந்தா படிச்சி படிச்சி முழு கிறுக்கா ஆகியிருப்பேன்.." என்றவள் சட்டையோடு அங்கிருந்து போனாள்.

எச்சில் விழுங்கியபடி கனிமொழியை பார்த்தவன் "பாப்பா.." என்று அவளை நெருங்கினான்.

"நா.. நான் அந்த சட்டையை எடுக்கல மாமா.." அழுதபடி சொன்னவளை காண முடியாமல் அணைத்துக் கொண்டான்.

"ஐயோ சாரிடி.. நான் கோபத்துல புத்தியில்லாம அடிச்சிட்டேன்.. சாரி சாரி.." என்று கெஞ்சினான்‌.

அவள் பதில் சொல்லவில்லை. மௌனமாக அழுதாள். அவளின் கன்னத்தை வருடி விட்டவன் "நிஜமா சாரி.." என்றான்.

அந்த அணைப்பை அவள் உணரும் முன்பே விலகிக் கொண்டான். அதை அவள் தவறாக எடுத்துக் கொள்ள கூடாது என நினைத்தபடி வேகமாக அங்கிருந்து வெளியேறி விட்டான்.

அம்ருதாவுக்கும் கவினுக்கும் இடையிலான காதல் நிலவை போலதான் இருந்தது. அடிக்கடி வளர்பிறையானது. அடிக்கடி தேய்பிறையானது. வளர்பிறையாகும்போது மகிழ்ந்தவன் தேய்பிறையாகும்போது கவலை கொள்ளாமல் போனான்.

தம்பியின் பிறந்தநாளுக்கென்று வாட்ச் ஒன்றை வாங்கினாள் அம்ருதா‌. நடு இரவில் அவனின் அறைக்கு வந்தவள் மேஜையில் அந்த பரிசை வைத்தாள். காலையில் எழுபவன் பரிசை பார்த்து மகிழ்வான் என்று நம்பியபடி திரும்ப எத்தனித்தாள்.

உறங்கிக் கொண்டிருந்த ஆரவின் அருகே புத்தகம் ஒன்று இருந்தது. ஆர்வத்தோடு சென்று எடுத்தாள்.

புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே ஆரவ் தேன்மொழி என்று எழுதி அம்புக்குறி வரையப்பட்டு இருந்தது.

'தேன்மொழி.. வெற்றியோட தங்கச்சி.? அவளையா இவன் லவ் பண்றான்.? மை காட். ஊர்ல உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா.?' என்று கடுப்பானவள் மறுநாள் காலையில் அவன் தன் பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கிய மறுநொடியே இந்தப் புத்தகத்தை திறந்து காட்டினாள்.

"என்ன இது?" எனக் கேட்டாள் எரிச்சலோடு.

தனக்கு பிறந்தநாள் என்பது கூட ஆரவுக்கு மறந்து விட்டது. அவளிடமிருந்து புத்தகத்தை பிடுங்கினான்.

"யாரை கேட்டு என் ரூம்க்குள்ள வந்த.? யாரை கேட்டு இந்த புத்தகத்தை திறந்த.?" எனக் கேட்டான்.

"யாரை கேட்டு வரணும்?" என்று பதிலுக்கு சத்தமிட்டவள் "நீ என் பிரதர். ஐ ஹேவ் ஆல் ரைட்ஸ்.." என்றாள்.

"ஒரு ரைட்ஸும் கிடையாது உனக்கு. நாளுக்கு ஒருத்தன் கூட சுத்துற‌ உன்னையெல்லாம் அக்கான்னு சொல்லிக்கிறதே எனக்கு கேவலம்தான்.." என்றவனின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறையை விட்டாள் அம்ருதா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. நீங்க வேணா பாருங்க. ஒருநாள் இல்ல ஒருநாள் வெற்றியும் பாலாஜியும் இந்த சக்தியை தூக்கிப் போட்டு பந்தாட போறாங்க. எப்ப பார்த்தாலும் குழந்தை புள்ளையை அடிச்சிட்டே இருக்கான் குரங்கு பையன்.😡
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN