என் உயிரில் கலந்தவனே!

உயிர் -1
பனிச்சாரலோடு காற்று இதமாய் வீசிக் கொண்டிருக்க அதிகாலை காற்றே நில்லு என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே நம் நாயகி கண்மணி தன் உயிர் தோழியுடன் ஓட்டப் பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள்.
அவள் தோழி கிருத்திகா ஓடவும் முடியாமல் நடுங்கியவளாக .."ஏய் கண்மணி நில்லு டி இதுக்கு மேலே என்னால் முடியாது.." என்று நின்றவளை திரும்பிப் பார்த்து அவளிடம் வந்தாள்.
"ஏண்டி இப்படி பண்ற உன்னை‌ ஜாகிங் அழைச்சிட்டு வரதுக்குள்ளே நான் பட்ற அவஸ்தை இருக்கே அப்பப்பா முடியல .."என்று சிரித்தாள்.
கண்மணி கருமை நிறம் கொண்டவள் .அவள் பேசும் போது அவள் கண்களும் அழகாய் பேசும். அவள் சிரிக்கும்போது அவள் கன்னக்குழியும் சேர்ந்தே சிரிக்கும் . ஆம் அவள் கன்னத்தில் குழி விழும் இதுவே இவளின் அழகுக்கு அழகு சேர்க்கும் .இவளின் நிறத்தைக் கொண்டு இவளை ஒதுக்கியவர்களை இவள் சிறிதும்
ஏறெடுத்தும் பார்த்ததில்லை . ஆனால் இவள் முகத்தில் எப்பொழுதும் சிறு சோகம் குடி கொண்டிருக்கும்.
" எப்படி பனி
கொட்டுது பாரு ..உனக்கு மனசாட்சியே கிடையாதா ? இந்த மார்கழி பனியில் என்னை அழைச்சிட்டு வந்து இப்படி படுத்தறியேடி‌.." என்றாள் கிருத்திகா ..
நம்ம கிருத்திகா
கொஞ்சம் பூசின மாதிரி இருப்பாள்.
அதனால் அவள் அம்மா கனகா கேட்டுக் கொண்டதால் கண்மனி‌
இவளை ஜாகிங் ‌அழைத்து வந்தாள்.
"சரி வாடி வீட்டுக்கு போகலாம் .ஆனால் போனா போகுது இன்றைக்கு ஒரு நாள் மட்டும் விடுறேன்.. நாளைக்கு எல்லாம் இன்னும் கொஞ்சம் நேரம் ஓட வேண்டி வரும் புரியுதா.. ?"
இதைக் கேட்ட கிருத்திகா உடனே குஷியானவள் "தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே " என்று தன் தோழியைப் பார்த்து பாட அவளோ " வாலு வாடி.." என்று வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் .
கண்மணி , கிருத்திகா இருவரும் சிறுவயது முதலே தோழிகள் கண்மணியின் அண்ணனும் , கிருத்திகாவின் அண்ணனும் வெளிநாட்டில் MBA படித்துக் கொண்டிருக்கின்றனர்.
கண்மணியின் அம்மாவும் , கிருத்திகாவின் அம்மாவும் சிறுவயது தோழிகள் அதேபோல பிள்ளைகளும் நட்பாக இருந்து வருகின்றனர்.
கனகா - மாணிக்கம் தம்பதியினருக்கு கார்த்திக் , கிருத்திகா என்ற இரு பிள்ளைகள்.
சுந்தரி - ராதாகிருஷ்ணன்
தம்பதியினருக்கு கரண், கண்மணி என்ற இரு பிள்ளைகள்.
ராதாகிருஷ்ணன் தொழில் அதிபராகவும் , மாணிக்கம் அரசு பணியிலும் உள்ளனர். மாணிக்கம் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தொழிலதிபர்களே .ஆனால் மாணிக்கம் தனக்கு அதில் விருப்பம் இல்லாததால் தான் படித்த படிப்பிற்கு ஏற்றவாறு அரசு பணியில் அமர்ந்தார்.
கனகா மற்றும் சுந்தரி இருவரும் சிறுவயதிலிருந்தே உயிர் தோழிகள் .இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இருக்க இவர்களின் பெற்றோர்கள் இவர்களுக்கு ஒரே ஊரை சேர்ந்த மாப்பிள்ளைகளை திருமணம் செய்து வைத்தனர். ( எல்லா கதையிலும் ஆண்கள்தான் நண்பர்களாக அதாவது உயிர் நண்பர்களாக இருப்பது போல் காண்பிக்கிறோம் .இப்பொழுது ஒரு மாற்றத்திற்காக பெண்களை மையமாக வைத்து இந்த கதை நகர போகின்றது .அவர்களின் நட்பும் அவர்களின் பிள்ளைகள் அவர்களைப் போலவே நட்புடனும் இருப்பதையே இந்த கதை குறிக்கும்.)
சரி வாங்க கண்மணி , கிருத்திகா வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்...
வீட்டிற்குச் சென்றவுடன் கண்மணி "அத்தை இங்க வாங்க இவளால் முடியல அத்தை கொஞ்ச நாள் போகட்டும்.. பனி குறைந்தவுடன் இவ எங்கூட ஜாகிங் வரட்டும் ப்ளீஸ் அத்தை அவளை பார்த்தா பாவமா இருக்கு.." என்று கனகாவிடம் கொஞ்சினாள்.
கனகாவிற்கு கண்மணியின் மீது எப்பொழுதும் ஒரு தனி பிரியம் தான்.
அவள் மீது எப்போதும் தனி கவனம் செலுத்துவார் கனகா.
"கண்மணி நீ என்னடா சொல்றே ! அவ எப்படி இருக்கா பாரேன் . இன்னும் இரண்டு மாதத்தில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கனும்னு உன் மாமா சொல்லி இருக்காங்க.. உடம்பை குறைச்சா தானே டா நல்லது .நாளைக்கு கல்யாணம் முடிஞ்சபிறகு மாப்பிள்ளை வீட்டினர் ,இதை காரணமாக வைத்து இவள வெளியே அனுப்பிட்டா என்ன ஆகறது அவள் வாழ்க்கை தான் என்னாகும்.
பெண்ணென்றால் லட்சணமா இருக்கணும் டா .ஏதாவது குறை என்றால் மாப்பிள்ளை வீட்டில் முதலில் திருமணம் முடிந்தாலும் கொஞ்ச நாளில் ஏதாவது காரணம் தேடி அனுப்பிடுவாங்க நாம் இப்படி எத்தனை நிகழ்வுகளை பார்க்கிறோம்.".
"அத்தை நீங்க என்ன சொல்றீங்க ! நான் சொல்றதை தப்பா எடுத்துக்காதீங்க ! நீங்க சொல்றது எனக்கு கோபம் தான் வருது .பெண்கள் நாம என்ன இந்த ஆண்களுக்கு எப்பொழுதுமே அடிமையா இருக்கனுமா என்ன ?கொஞ்சம் யோசிச்சு பாருங்க ..
இவள் என்ன அவ்வளவு குண்டாகவா
இருக்கா ? இல்லையே இவளுக்கு என்று ஒருவன் பிறந்திருப்பான் நீங்க ஏன் கவலைப்படறீங்க !மற்றவங்களுக்காக நாம் நம்மை மாத்திக்கனும் என்ற அவசியம் இல்லை அத்தை . நீங்க இவளை இப்படி சொல்லி சொல்லியே இப்படி பயந்தவளாக வளர்த்து வைத்திருக்கீங்க‌.. கொஞ்சம் அவள் தைரியமா இருந்தா தான் இந்த சமூகத்தை அவளால் எதிர்கொள்ள முடியும் அத்தை ..
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது முக்கியம் தான் அதை நான் இல்லை சொல்லலையே ? ஆனால்
அதுக்காக திருமணத்தின் பிறகு நாம் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே..?" என்றாள் கண்மணி... .
"என்ன சொல்ற கண்மணி நீ . எனக்கு உங்கிட்ட பிடிக்காதது இது ஒன்னுதான் . நீ ஏன்மா எதார்த்தத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கறே ? வேண்டாம்டா நீ உன்னை மாத்திக்கோ . நீ இந்த குணத்தால் பட்ட அவஸ்தை எல்லாம் போதும் .உன் குணங்களை மாத்திக் கொண்டால் மட்டுமே உன் வாழ்க்கை நல்லபடியா அமையும்.." என்றார் கனகா.
கனகா இப்படி பேசியதும் கண்மணியின் முகம் வாடினாலும் அடுத்த நொடியே தன்னை சமாளித்தவள் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் கிருத்திகாவோ .."அம்மா உனக்கு எப்போ எதை பேசணும் தெரியாதா கொஞ்ச நேரம் வாயை மூடு.." என்று கத்தினாள்.
"ஏண்டி நான் உண்மை தானே சொல்றேன். உலகத்தில் என்ன நடக்குதோ அதை தானே சொன்னேன் …" என்றவர் அப்பொழுதுதான் கண்மணியின் நிலையை மறந்து தான் பேசியதே நினைத்தவர் அதுமட்டுமல்லாமல் அவள் மனதை புண்படும்படி அவள் குணத்தையும் சேர்த்து பேசியதை நினைத்து தன்னைத்தானே நொந்து கொண்டார்...
"கண்மணி சாரி சாரி டா நான் வேண்டுமென்றே சொல்லலை டா . உன் நல்லதுக்காக தான் சொன்னேன் என்னை மன்னிச்சுடுடா.."என்றார்.
"அச்சோ அத்தை நீங்க என்ன பண்றீங்க . பரவாயில்லை அத்தை விடுங்க . நீங்க இதைத்தானே ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டு இருக்கீங்க ..ஆனால் என்னால் யாருக்கும் அடிமையாக போக முடியலையே அத்தை . இந்த விஷயத்தில் நம் இரண்டு பேரின் எண்ணமும் வெவ்வேறாக இருக்கு என்ன பண்ண முடியும் சொல்லுங்க ..சரி அத்தை நான் கிளம்பறேன் .." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.
வீட்டிற்கு வந்தவள் "அம்மா காபி கொண்டு வாங்க..." என்று தனது அறைக்குச் சென்றாள்.
அதற்குள் கனகா , சுந்தரிக்கு
ஃபோன் செய்தவர் தான் பேசியதை கூறி " சுந்தரி சாரிடி நான் தெரியாம பேசிட்டேன்.."
"அடடா அதெல்லாம் ஒன்னும் இல்லடி... நீ எப்பவும் சொல்றது தானே ! நீ எத்தனை தடவை சொன்னாலும் அவள் மாறப்போவதில்லை விடு உன்னைப் பத்தி அவளுக்கு தெரியாதா..?"என்றார் சுந்தரி.
"சரி சுந்தரி அவளோட வாழ்க்கையைப் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க ! எத்தனை நாளைக்கு அவள் இப்படியே இருக்க முடியும்.."
"என்ன சொல்றது கனகா .அவள் எதுக்கும் ஒத்து வர மாட்டேங்கறா ! மீறி ஏதாவது சொன்னால் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் சொல்றா !ஏற்கனவே இவள் வீட்டை விட்டு போன போது நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் உனக்கு தெரியாதா ..?"
"சரி நாளைக்கு அவ வரட்டும் அவளோட மாமாவை விட்டு பேச சொல்றேன் .."என்று கனகா கூற‌ இருவரும் அழைப்பை துண்டித்தனர்.
கண்மணி அறைக்குள் வந்தவள் எதை மறக்க வேண்டும் என்று நினைத்தாலோ அதை மீண்டும் மீண்டும் தன்னைச் சுற்றி இருக்கும் மக்கள் ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பதை நினைத்தவள் தன் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்த நாளைக்கு சென்றாள்.
 
உயிர் - 2

கண்மணி ,கனகா பேசியதை நினைத்து இரவெல்லாம் ‌தூக்கம் வராது புரண்டு படுத்தவள் வலுக்கட்டாயமாக நித்ரா தேவியை வரவழைத்து கண்ணயர்ந்தாள்.

மறுநாள் காலை வெய்யோன் தன் பொன்னிற கரங்களால் பூமிக்கு வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருக்க நம் நாயகி கண்மணி எழுந்தவள் குளியலறை சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டு கீழே சென்றாள்.

சுந்தரி," கண்மணி என்ன மா நீ இன்னும் கிளம்பலையா சீக்கிரமா ரெடியாகி
வாடா .."என்றார்.

'"இதோ கிளம்பறேன் மா .சரி எனக்கு காபி கொடுக்கும் ஐடியா இருக்கா இல்லையா மா ..உங்கள் மகன் வரதுக்கு முன்னே என்னை கவனிக்க மாட்டேங்கிறீங்க .அவன் வந்துட்டா என் நிலைமை என்ன ஆகுமோ தெரியலையே ..?" என்று சிரித்துக்கொண்டே கூறினாள் கண்மணி.

ஆமாங்க இன்னைக்கு கரண் மற்றும் கார்த்திக் அயல்நாட்டில் இருந்து தாயகம் திரும்புகின்றனர் . அதற்காக இவர்கள் தன் பிள்ளைகளை அழைக்க விமான நிலையம் கிளம்பிக் கொண்டிருக்கின்றனர்.

சுந்தரிக்கு தன் மகளை பார்த்து ஆச்சரியம் ஏனென்றால் நேற்றுவரை 'அண்ணனை அழைத்து வர நீயும் வா என்றதற்கு நான் வரமாட்டேன் என்று அடம் பிடித்தவள் இன்று உடனே இதோ கிளம்பறேன் என்கிறாளே…' என்று அவளையே பார்த்தார்.

அதை கவனித்த கண்மணி,"அம்மா என்ன மா யோசனை..? "

"அதெல்லாம் எதுவுமில்லடா கண்மணி. என்னடா இப்படி சொல்லிட்ட கரணை பார்த்து எத்தனை வருஷம் ஆகுது . அதுக்காக உன் மீது பாசம் இல்லையா என்ன..? "என்றவர் அவளுக்கு
காபி எடுத்து வந்துக் கொடுத்தார்.

"அச்சோ !அம்மா உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா ..? நான் சும்மா சொன்னேன் மா .."என்று அவரைக் கொஞ்சியவள்
தனது அறைக்குச் சென்றாள்.

தன் மகள் செல்வதைப் பார்த்த சுந்தரிக்கு கண்கள் கலங்க அங்கே வந்த ராதாகிருஷ்ணன் அதைப் பார்த்தவர் "சுந்தரி இப்போ ஏன் மா அழறே .."

"என்னங்க நம்ம கண்மணியை நினைச்சா தான் எனக்கு கஷ்டமா இருக்கு ..' என்றவரின் கண்களை துடைத்த ராதாகிருஷ்ணன்.

.." சுந்தரி
இங்க பாரு நடந்ததை நினைச்சு அழுவதால் ஒரு பிரயோஜனமும் இல்ல மா... சரி கிளம்பு இப்படி நீ அழுமூஞ்சியா
இருந்தால் உன் மகன் என்ன சொல்வான் தெரியுமா ? என்னப்பா எங்க அம்மாவை
அடிச்சிட்டீங்களானு கேட்பான் . இதெல்லாம் எனக்குத் தேவையா ..?
சொல்லு .."என்று சிரித்துக்கொண்டே கூறியவரை ..

"போங்க நீங்க உங்களுக்கு எப்போதும் விளையாட்டு தான் . அதிலும் நீங்க என்னை அடிச்சுட்டாலும் சரி வாங்க கிளம்பலாம்.." என்றார்.

கனகா வீட்டில் அனைவரும் கிளம்பி
இருக்க அனைவரும் பயணமாயினர்.

விமான நிலையம் சென்றவர்கள் தன் மகன்களுக்காக காத்துக்கொண்டிருக்க
கண்மணி தன் அம்மாவிடம் சென்றவள் "அம்மா எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு உடனே வந்துடறேன் ."என்று அவள் அங்கிருந்து நகர சுந்தரி அவளை கைபிடித்து தடுத்தவர் ….

"என்ன கண்மணி இங்கே என்ன உனக்கு வேலை ... நீ எங்கேயும் போக வேண்டாம்.."

' அம்மா ஒரு பத்து நிமிஷம் தான் .."என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

கண்மணி வேகமாக சுற்றி சுற்றி பார்த்து நடந்து கொண்டிருந்தவள் எதிரே வருபவனின் மீது தெரியாமல்
மோதிவிட அதில் பெண்ணவள்
தடுமாறி கீழே விழாமல் இருக்க அவனை பிடித்தாள் ... பயத்தில் கண்மூடியிருந்தவள் கண்ணை திறக்க அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் .தன்னை மறந்து அவளையே இரசித்துக் கொண்டிருந்தவனை" ஹலோ "என்னை விடுங்க சார் உங்களுக்கு என்ன கண்ணு தெரியாதா ..."என்றாள் கண்மணி.

"ஹலோ ! மிஸ் நான் கவனமா தான் வந்தேன் .எனக்கு நல்லாவே கண் தெரியுது இடிச்சது நீங்களா ? நானா ?யோசிச்சு பாருங்க.."என்றவனுக்கு அவளை பார்த்த மாத்திரத்தில் பல்வேறு உணர்வுகள் ஆட்கொள்ள
ஆடவனுக்கு மனம் சிறகில்லாமல்
பறக்க தோன்றியது.

"ஓஹோ !அப்படியா உங்க கூட நின்று பேச எனக்கு நேரமில்லை வழிவிடுங்க சார்.." என்றவள் அங்கிருந்து நகர போக அப்பொழுது "அக்கா "என்று குரல் கேட்க திரும்பிப் பார்த்தவள் மீண்டும் அவனை இடித்து நின்றவள் அவனைப் பார்க்க அவனோ அவளை முறைக்க அவள் இப்பொழுது தன் தவறை உணர்ந்தவள் கண்களைச் சுருக்கி , உதடுகள் குவித்து "சார் சாரி சார்.." என்றவள் அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள்.

அவளின் செயலில் இவன் அவனைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தான்.

என்ன தவம் செய்தேன் கண்ணே
உனைக் கானவே காத்திருந்தேன்
இத்தனை யுகங்களாய் என் தேவதையே..!

கண்மணி வேகமாக அங்கிருந்து நகர்ந்தவள் எதிரே வந்தவளை கட்டிக் கொள்ள இவளும் அவளைக் கட்டிக் கொண்டவள்" ரொம்ப தேங்க்ஸ் அக்கா "என்று அழுதவளை
தன்னிடமிருந்து பிரித்த கண்மணி.

"அழாத வினிதா . இனி நீ அழவேண்டிய அவசியமில்லை.." என்றவள் அவளின் ‌கண்களைத் துடைத்தாள்.

இவர்கள் பேசிக் கொள்வதை பார்த்து கொண்டிருந்தவன்,"' நீ இன்னும் மாறவே இல்லையாடி 'என்று அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது ஒருவன்
இவனின் தோளைத் தட்ட திரும்பிப் பார்த்தவன்.." என்னடா அவசரக்குடுக்கை இப்போ எதுக்கு அவசர அவசரமாக ஓடின ! நான் வரதுக்குள்ள உனக்கு என்ன அவசரம் . அதுவும் லக்கேஜையும் விட்டுட்டு போற , அவகிட்ட திட்டு வாங்க வெச்சிட்டியேடா எருமை.." என்றவன் அங்கே கைகாட்ட மற்றழனும் அங்கே பார்த்தவன் ..

" அச்சோ ! இவளா வாடா போகலாம் . இவள் இப்போ உங்கூட என்னை பார்த்தால் நான் அவ்ளோ தான் .."என்றான்.

"எதுக்குடா எதுக்குங்கிற நான் மட்டும் திட்டு வாங்கனுமா ,நீயும் வாங்கு உன் லக்கேஜ் எடுத்துட்டு வரதுக்குள்ள அவள் என்னை இடிச்சிட்டு என்னையே திட்டிட்டு போறா .."

"சரி விட்றா விட்றா உங்க அம்மா உன்னை தேடிட்டு இருக்காங்க வா போகலாம் .."என்று இருவரும் அங்கிருந்து சென்றனர்.

அதற்குள் கண்மணிக்கு கிருத்திகா ஃபோன் செய்தவள் ‌"கண்மணி நீ எங்க இருக்க உன் அண்ணனும், என் அண்ணனும் வந்துட்டாங்க கார் பார்க்கிங்கிட்ட வெய்ட் பன்றோம்
நீயும் அங்கே வந்துடு.." என்றாள்.

"ஓ !அப்படியா சரி நான் வரேன் . நான் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் .."என்றவள் அந்த விஷயத்தைக் கூற அதில் அதிர்ச்சி
அடைந்த கிருத்திகா..

"எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே ..?இதுக்காகத்தான் நீயும் வந்தியா ..? சரி விடு எல்லாம் நல்லதுக்குத்தான் நீ
அவளையும் அழைச்சுட்டு அங்கே வந்துடு .."என்றவள் அழைப்பை துண்டித்தாள் கிருத்திகா.

கண்மணி , "வினிதா நீ ஒரு நிமிஷம் இங்கே இருடா இதோ வந்துடுறேன் என்றவள் தன் நண்பனும் ,
சகோதரனுமான விக்ரமுக்கு ஃபோன் செய்தாள்."டேய் விக்ரம் என்ன பண்ற நான் சொன்ன வேலைய முடிச்சிட்டியா..? "

"டேய் கண்மணி நீ சொல்லி நான்
என்னைக்கு டா செய்யாமல் இருந்திருக்கேன் .நீ அவங்களை அழைச்சிட்டு வா எல்லாம் ரெடி.."
என்றான்‌ விக்ரம்.

"சரி டா என் எருமையை பற்றி எனக்குத் தெரியாதா ?மை ஸ்வீட் பாய்
டா நீ.." என்று அவனைச் செல்லம்
கொஞ்ச

"சரி சரி டா தங்கம். அவங்களுடைய பெயரை கூட சொல்ல மாட்டியா..?"

"அதெல்லாம் சொல்ல முடியாது
டா எருமை... அவள் நேரில் வந்ததும் நீயே கேட்டு தெரிஞ்சுக்கோ ...
சரிடா நான் போனை வைக்கிறேன் இன்னும் நான் அண்ணாவை கூட பாக்கல .."என்றவள்
அழைப்பைத் துண்டித்தாள்.

விக்ரம் மிகவும் அன்பானவன். விக்ரம் கண்மணி, கிருத்திகா மூன்று பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்
கண்மணியின் அப்பா ராதாகிருஷ்ணனின் நண்பனின் மகன் தான் விக்ரம். விக்ரம் வீட்டிற்கு ஒரே மகன் ஆதலால் அவர்கள்
கண்மணியை தன் சொந்த மகள் போலவே நடத்தி வந்தனர். இவர்கள் 3 பேரும் ஒன்றாக சேர்ந்தால் அந்த இடமே மகிழ்ச்சியைத் தத்தெடுக்கும் .அந்த அளவிற்கு மூன்று பேரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் ,சுதந்திரப் பறவையாக வலம் வந்தனர் .ஆனால் அவர்களின் வாழ்க்கையிலும் பிரிவு என்பது வந்தது .அதில்
கண்மணியின் நிலைதான் மிகவும் மோசமாக மாறியது.

கண்மணி , "வினிதாவை அழைத்துக்கொண்டு கார் பார்க்கிங் ஏரியாவுக்கு சென்றாள். அங்கே தன் அண்ணன் நின்று கொண்டிருப்பதை
பார்த்தவள் "அண்ணா "என்று ஓடிச்சென்று அவனை கட்டிக்கொண்டாள்.

" கரண் தன் தங்கையை கண்டவன் கண்மணி எப்படிடா இருக்க நல்லா இருக்கியா..?"

"நான் நல்லா இருக்கேன் அண்ணா .நீ எப்படி இருக்க..? என்ன அண்ணா இளைச்சு போய்ட்ட சரியா சாப்பிட்றியா இல்லையா..? உங்கூட ஒருவர் இருக்காரே.. அதான் என் அத்தை பெற்ற முத்து ரத்தினம் மிஸ்டர் கார்த்திக் . அவர் உன்னை சரியாக கவனிப்பதில்லையா..?

அது சரி நீ என்ன எப்போ வந்தாலும் தனியா வர ஏன் அவர் இங்கே வர மாட்டாரா .?இங்க அவருக்கு தங்கை ,அம்மா ,அப்பா இருக்காங்க அதை அவர் மறந்துட்டாரா என்ன?"

என்றவள் கிருத்திகாவை பார்க்க
அவளோ அங்கிருந்த ஒருவனை தன் மனதில் இடம் பிடித்தவனை ரசித்துக்கொண்டிருந்தாள்...

கண்மணி அதைப்பார்த்து சிரித்தவள் மற்ற அனைவரையும் பார்க்க அனைவரும் இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க அதில் குழம்பியவளாக தனது தந்தையை பார்த்தாள் கண்மணி.

ராதாகிருஷ்ணன் தன் மகளிடம் வந்தவர் அவளின் காதில் ஏதோ
கூற அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தக் கண்மணி‌
தன் அண்ணனைப் பார்க்க அவனோ சத்தமாக சிரித்தான்.

அவனை முறைத்தவள் சுற்றிப் பார்க்க அங்கு தன்னையே முறைத்துக் கொண்டு நின்றிருந்தவனைப் பார்த்தவள்
அதிர்ச்சியில் சிலையாகி போனாள்.
 
உயிர்- 3

கண்மனி எதிரே இருந்தவனை பார்த்து அதிர்ச்சியாகி நிற்க அவளின் அருகே வந்த ராதாகிருஷ்ணன் " டேய் பாப்பா சுற்றி இருப்பவர்களை பார்த்துட்டு பேசுடா எதிரே யார் நிற்கிறாங்க பாரு.." என்றார்.

இவளோ எதிரில் இருப்பவனைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றாள்.. பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டவள் அவனிடம் சென்று "மிஸ்டர் ஒரு நிமிஷம் எங்கூட வாங்க "எனவும் அவனும் இவளை பார்த்தவன் சுற்றி இருப்பவர்களைப் பார்க்க அவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க அவர்களை முறைத்தவன் கண்மணியுடன் சென்றான்.

"மிஸ்டர் இங்க பாருங்க ஏதோ தெரியாம இடிச்சுட்டேன் . அதுக்கு தான் அங்கே சாரி கேட்டேனே இப்ப எதுக்கு நீங்க இதுவரைக்கும் வந்து இருக்கீங்க .ப்ளீஸ் கிளம்புங்க இவங்க எல்லாம் என் குடும்பத்தினர் தான் . இவங்க எதிரில் திட்டி என் மானத்தை வாங்காதீங்க.." என்றாள்.

இதைக்கேட்ட அவனோ இவளுக்கு நம்மை இன்னும் அடையாளம் தெரியல போலவே என்று நினைத்தவன்.."இங்க பாருங்க.." என்று பேச வந்தவனை தடுத்தவள் "தயவுசெய்து இங்கிருந்து கிளம்புங்க சார் .உங்ககிட்ட பேச எனக்கு நேரமில்லை.." என்றவள் மீண்டும் தன் குடும்பத்தினருடன் வந்து இணைந்தாள்.

வந்தவள் மறுபடியும் கரணிடம் "அண்ணா நான் உங்கிட்ட கேட்டது உனக்கு புரிஞ்சுதா இல்லையா? அந்த கார்த்திக் ஏன் வரலை அதை சொல்லுங்க .."என்றாள்.

கிருத்திகா அதுவரை தன்னவனை இரசித்துக் கொண்டிருந்தவள் இப்போது இவளின் கேள்வியில் உயிர்வரப் பெற்றவளாக.." என்னது கார்த்திக் அண்ணா வரலையா ?ஏய் கண்மணி உனக்கென்ன பைத்தியமா அப்போ இங்கே இருக்கறது யாரு .."

"ஏய் என்னடி சொல்ற எங்க இருக்காரு உங்க அண்ணன். அவர்தான் வரலையே வந்திருந்தா இங்கே இருந்திருப்பாரே.." என்றவளை முறைத்த கிருத்திகா நேரடியாக தன் அண்ணன் பக்கத்தில் போய் நின்றவள்.." அப்போ இவங்க யாரு என் அண்ணா இல்லாம வேற யாரோ வா .."என்றிட..

கண்மணி அதிர்ச்சியுடன் கார்த்தியை பார்த்தவளுக்கு வார்த்தைகள் வராது போக அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க கனகா அவளிடம் வந்தவர் அவளின் காதை பிடித்து திருகியவர் .."ஏய் வாலு உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பிள்ளையை அவன் எதிரிலேயே திட்டுவ . உனக்கு கார்த்தியை ஞாபகம் இல்லையா..?"

"அச்சோ விடுங்க அத்தை வலிக்குது . சாரி அத்தை எனக்கு உண்மையாகவே ஞாபகமில்லை .நான் அவரைப் பார்த்து எத்தனை வருஷம் ஆகுது .அதுவுமில்லாம இவர் இப்போ ரொம்ப மாறிட்டாரு . எனக்கு அதனால அடையாளம் தெரியல சாரி மிஸ்டர் கார்த்திக் .."என்றாள்.

ஏர்போர்ட்டில் கண்மணி இடித்தது கார்த்திக் மீதுதான் . கரண் தன் பெற்றோரை கண்டவுடன் லக்கேஜ் கூட எடுக்காமல் வேகமாக அவர்களை நோக்கி ஓட அதில் கார்த்திக் கடுப்புடன் அவனின் லக்கேஜையும் சேர்த்து எடுத்து வரும் போது தான் கண்மணி அவன் மீது மோதினாள் .

கார்த்திக் தாமதமாக வரவும் கரண் அவனிடம் சென்று .."சீக்கிரம் வாடா உங்கம்மா உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க... " என்று கூற அப்போது கார்த்திக் கைக்காட்டிய பக்கம் பார்த்தவன் தன் தங்கையைப் பார்த்ததும் இவள் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் வாடா .."என்று அவனை அழைத்துச் சென்றான்.

கரணை கண்மணி ரொம்ப நாளாகவே தாயகம் திரும்பும் படி கேட்டுக் கொண்டிருந்தாள் .ஆனால் அவனோ கார்த்திக் இப்போது செல்ல வேண்டாம் நமது படிப்பு முடியும்போது செல்லலாம் என்று சொல்லவும் அவனின் பேச்சை மீற முடியாதவனாக தனது நண்பனுடனேயே தாயகம் திரும்பினான்.

அதில் கோபமாக இருந்த கண்மணி தன் அண்ணனை அழைக்க தான் வரவில்லை என்று கூறியிருந்தாள்...

"என்ன மிஸ் கண்மணி சாரி கேட்டால் எல்லாம் சரியா போச்சா ... உங்க அண்ணன் அப்படி ஒன்னும் இளச்சிப் போகலமா . நல்லாதான் இருக்கான்.நான் சமைச்சு கொடுக்கிறதை நல்லாவே கொட்டிக்கிறான் புரியுதா . சரி சொல்லுங்க உண்மையாவே உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலையா..?"

"ஆமா கார்த்தி உண்மையாவே எனக்கு உங்களை அடையாளம் தெரியல.. நீங்க பன்னிரெண்டாவது படிக்கும் போது நான் உங்களை பார்த்ததோடு சரி ,அதன்பிறகு நானும் படிக்க வெளியூர் போயிட்டேனே ?அதனால நான் உங்களைப் பார்த்ததே இல்ல.. அதன்பிறகு
என்னென்னமோ நடந்து போச்சு அதனால நான் யாரையும் பார்க்கவோ அல்லது யாரைப் பற்றி யோசிக்கும் நிலைமையிலும் இல்லை கார்த்திக்.." என்றாள் கண்மணி.

மாணிக்கம் , "விடுமா கண்மணி நாம நல்ல விஷயத்தை பேசும் போது அதை பற்றி பேச வேண்டாம் என்றவர் கார்த்திக் இங்க பாருடா கண்மணி உன்னை பார்த்து எத்தன வருஷம் ஆயிடுச்சு... அதனால அடையாளம் தெரியலை சரி வாங்க கிளம்பலாம் என்றார் .

கண்மணி நான் வந்த உடனே கேட்கனும் நினைச்சேன் யாரும்மா இந்த பொண்ணு.." என்று வினிதாவை காட்டி கேட்க அப்போது தான் அங்கிருந்த அனைவரும் அப்பெண்ணை பார்க்க ராதாகிருஷ்ணன் "வாமா வினிதா எப்போ வந்த எப்படி இருக்க" என்று நலம் விசாரித்தார்...

அவளோ "நான் நல்லா இருக்கேன் அப்பா .நீங்க நல்லா இருக்கீங்களா ..?"

"ம்ம்ம் நல்லா இருக்கேன் டா "

கண்மணியின் அம்மா சுந்தரி உட்பட அங்கிருந்த அனைவருக்கும் வினிதா யார் என்று தெரியவில்லை.

"அக்கா எனக்கு ரொம்ப அசதியா இருக்கு நான் தங்குவதற்கு இடம் ஏற்பாடு பண்ணிங்களா ..?"என்று கேட்டாள் வினிதா.

கண்மணி பதில் கூறுவதற்கு முன் ராதாகிருஷ்ணன் .." என்ன மா வினிதா இப்படி சொல்ற .நீ யாரு கண்மணியோட ஃப்ரெண்ட் உன்னை நாங்க வேறு இடத்தில் தங்க வைக்க முடியுமா ? நீ எங்க வீட்டில் தான் தங்க போற மா.." என்றார்.

"ஆமா ... அப்பா நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லிட்டீங்க .
வினிதா நீ வேற எங்கேயும் தங்க போறது இல்ல டா எங்கூட தான் தங்க போற... " என்ற கண்மணி அவளை கிளம்ப சொல்ல "அக்கா ப்ளீஸ் என்னைப் புரிஞ்சிக்கோங்க .நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பலை . எனக்கு ஹாஸ்டல் ஏற்பாடு பண்ணி குடுங்க .நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் வாடகை கொடுக்கவும் மற்ற செலவிற்கும் எனக்கு சரியாக இருக்கும் ப்ளீஸ் அக்கா .."என்றாள் வினிதா.

அங்கு நடப்பது அனைவருக்கும் குழப்பமாக இருக்க கிருத்திகா அவளிடம் வந்தவள் "வினிதா நீ எங்க இரண்டு பேரையும் அக்காவா நினைக்கிறியா இல்லையா? நீ எங்ககூட வந்து கொஞ்ச நாள் மட்டும் தங்கு பிறகு நீ தனியா ரூம் எடுத்து தங்கிக்கோ.." என்றாள்..

சுந்தரி , "என்ன நடக்குது இங்கே யாராவது சொல்லுங்க சொன்னாதானே எங்களுக்கு தெரியும்.." என்றிட...

ராதாகிருஷ்ணன், "நான் விவரமா உங்க எல்லாருக்கும் வீட்டுக்கு போய் சொல்றேன் .இப்ப எதுவும் கேட்காதீங்க.." என்றதும் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப கார்த்திக்கின் பார்வை முழுவதும் கண்மணியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது...

அதே நேரம் இங்கே கிருத்திகா கரணையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அவள் பார்ப்பது தெரிந்தும் பார்க்காதவன் போல் அமர்ந்திருந்தான் கரண்.

"எங்கேயாவது திரும்பி பார்க்கறாரா பாரு .சரியான அழுத்தகாரர் கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்கறதை பாரு.." என்று அவனை வறுத்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா.

கண்மணி வீட்டிற்கு சென்றதும் விக்ரமுக்கு அழைத்தவள் " விக்ரம் நான் அந்த பொண்ணை அழைச்சிட்டு வந்துட்டேன். நாளைக்கு காலைல ஆபீஸ் அழைச்சிட்டு வறேன் .. நீ தான் அவளுக்கு எல்லா உதவியும் செய்யணும்.. "என்றாள்.

"கண்டிப்பா உனக்கு தெரிஞ்சவங்களுக்கு நான் எப்டி உதவி செய்யாமல் இருப்பேன் நீ ஒன்றும் கவலைப்படாதே.." என்றான் விக்ரம்.

"எனக்கு மட்டும் தெரிஞ்சவ இல்லை
டா பக்கி உனக்கும் தெரிஞ்சவ தான். நாளை அவளைப் பார்த்து நீ நேரில் தெரிஞ்சுக்கோ புரியுதா..?" என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.

இவனோ 'என்னடா இவ சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் கொடுத்துட்டு இருக்கா.. அந்தப் பெண் யாரா இருக்கும் 'என்று நினைத்தவனுக்கு அதே நினைப்பில் சரிவர இரவுத் தூக்கம் வராததால் தன் தூக்கத்தை தொலைத்தான்.

அதேநேரம் வினிதா அங்கே தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் எண்ணி கண் கலங்கியவள் தலையணையை தன் தோழியாய் நினைத்து தலையணையில் கண்ணீர் சிந்தியப்படியே உறங்கினாள்.

உறங்கி கொண்டிருந்த கண்மணிக்கு ஃபோன் வர அதில் உறக்கம் கலைந்தவள் ஃபோனை எடுத்து
பார்க்க புதிய நம்பராக இருக்க கொஞ்சம் தயங்கினாலும் எடுத்துப் பேச எதிர்முனையில்," என்ன கண்மணி எப்படி இருக்க நல்லா இருக்கியா சாப்டியா ..?"என்ற குரல் அவளுக்கு புதிதாக இருக்க யார் என்று புரியாமல் முழித்தவள் ....

"ஹலோ முதல்ல நீங்க யாருனு சொல்லுங்க" என்றதும் "அதை நீயே கண்டுபிடி கண்மணி குட் ஃநைட் நல்லா தூங்குடா .."என்றவன் அழைப்பை துண்டித்தான்.

இவளோ யார் என்று தெரியாமல் குழம்பியவள்,' யாராக இருந்தாலென்ன நேரில் பேச தைரியம் இல்லாதவன் பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும்..' என்று நினைத்தவள் உறங்கச் சென்றாள்.

அதேநேரம் குறுஞ்செய்தி வர குறுஞ்செய்தியை எடுத்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி ஆம் அதே எண்ணிலிருந்து கண்மணி மை டார்லு , ஸ்வீட் ட்ரீம்ஸ்‌ , குட் ஃநைட் என்று மெசேஜ் வர இவளோ அதை கண்டுகொள்ளாமல் படுத்து உறங்கினாள்.

மறுநாள் காலை கண்மணி வினிதாவை அழைத்துக்கொண்டு தன் பெற்றோரிடம் வந்தவள் .."அம்மா உங்களுக்கு இவள் யாரென்று குழப்பம் இருக்கும் . நான் இவளை ஒரு இடத்துக்கு கூப்டு போறேன் . அங்க போயிட்டு வந்து சாயங்காலம் நான் எல்லாத்தையும் விவரமா சொல்றேன்
உங்க பொண்ணு மேல நீங்க நம்பிக்கை வைங்க அம்மா என்னால இந்த குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராது.."என்றான்.

"என்ன கண்மணி இப்படி சொல்லிட்ட எனக்கு உன்னை பற்றி தெரியாதா ? இந்த பெண்ணும் நல்ல பெண்ணாக தான் இருக்கா .நீ ஒன்றும் கவலைப்படாதே இவ எத்தனை நாள் வேண்டுமானாலும் இங்கே தங்கட்டும் போயிட்டு வாமா.." என்றதும் இருவரும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பினார்.

ராதாகிருஷ்ணனிடம் இரவு சுந்தரி "என்ன விஷயம் நீங்களாவது சொல்லுங்க.." எனறதற்கு இவரும் மேலோட்டமாக அப்பெண்ணின் வாழ்க்கையில் நடந்ததை மட்டும் கூற அதில் சுந்தரிக்கு
ஒரு ஞாபகம் வர அதை நினைத்து கண்கலங்கியவர் அந்தப் பெண் இங்கே இருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தார் ..

கண்மனி வினிதா இருவரும் விக்ரமின் அலுவலகத்திற்கு சென்றனர் . V k
இன்டஸ்ட்ரீஸ் பிரம்மாண்டமாக அந்த கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்க
கண்மணி அலுவலகத்துக்குள் கம்பீரமாக நடந்து வந்தவளை பார்த்து அங்கிருந்த அனைவரும் விஷ் செய்ய அனைத்தையும் தன் தலையசைப்பால் ஏற்றவள் வினிதாவை விக்ரமின் அறைக்கு வெளியே நிற்கச் சொல்லிவிட்டு இவள் மட்டும் அறைக்குள் சென்றாள் ...

"விக்ரம்" என்று அழைத்திட அவளை நிமிர்ந்து பார்த்தவன் " வா கண்மணி ஃநைட் எனக்கு உன்னால தூக்கம் போச்சுடி ...எங்க அந்த பொண்ணு அவளை அழைச்சிட்டு வந்தியா இல்லையா ..?என்றான்.

"அவள் வந்து இருக்கா விக்ரம் .ஆனால் நான் சொல்றதை கொஞ்சம் கேளு . உணர்ச்சி வசப்படக் கூடாது... தேவை இல்லாமல் எதுவும் பேசவும் கூடாது ..அவள் ஏற்கனவே வாழ்க்கையில் தோற்றுப் போனவளவாகவும், நொந்துபோனவளாகவும் இருக்கா அவளுக்கு ஆறுதல்
சொல்லாட்டியும் பரவா இல்லை வேற எதுவும் பேசிடாதடா..?"என்றாள் கண்மணி..

"நீ என்னை குழப்பாதே கண்மணி யாராயிருந்தாலும் அழைச்சிட்டு வா.." என்று இவனும் சத்தம் போட "ஒரு நிமிஷம் இருடா அவசரக்குடுக்கை .."என்றவள் வெளியே வந்து இவளை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல
அவளோ உள்ளே சென்றவள் தலை குனிந்தபடியே இருக்க விக்ரமின் நிலைதான் மிகவும் பரிதாபமாக இருந்தது. ஆம் இரவெல்லாம் அவள் யாரென்று தெரியாமல் தன் தூக்கத்தை தொலைத்தவனுக்கு இப்போது கண்மணி கூறியதை கேட்டதும் அவளாக இருக்குமோ என்று நினைத்தாலும்
'சேச்சே அவளா இருக்க மாட்டா அப்படியே அவளாக இருந்தாலும் நான் இருக்கும் இடத்திற்கு அவள் வர மாட்டாள்' என்று நினைத்துக் கொண்டிருக்க அதே நேரம் உள்ளே நுழைந்தவளைப் பார்த்தவன்
அதிர்ச்சியில் எழுந்து நின்றான்...

தன் உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் வீணையாய் மீட்டுவது போல் உணர்ந்தவன் கண்கள் கலங்க 'வினி குட்டி "என்று அவளை அழைக்க இவளோ அவளின் அந்த அழைப்பில் மனதில் ஏதோதோ எண்ணங்கள் தோன்ற நிமிர்ந்து எதிரே இருந்தவனை பார்த்தவளுக்கு ஏதோ பூர்வ ஜென்மத்தில் பலனை அடைந்தவளாக நினைத்து கண்கள் கலங்கியபடி " விக்கி "என்று அழைக்க இருவரும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே
நின்றிருந்தனர்...
 
என் உயிரில் கலந்தவனே!

உயிர் - 4

விக்ரம் மற்றும் வினிதா ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியாகி கண்களில் கண்ணீர் வர அப்படியே நிற்க கண்மணி அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே சென்றாள்.

விக்ரம் சிறிது நேரத்தில் தன்னிலை அடைந்தவன் "வினிகுட்டி "என்று அழைக்க அதை உணராதவளாக அப்படியே நின்று கொண்டிருக்க இவன் அவளிடம் சென்றவன் தயங்கியவனாக அவளின் தோளில் கையை வைக்க அதில் பெண்ணவள் தன்னிலை அடைய அவனின் கையை தட்டிவிட்டவள் .."சாரி விக்ரம் நான் கிளம்பறேன் உங்களை இங்கே எதிர்பார்க்கல .."என்று வெளியே செல்ல முற்பட்டவளை கையை பிடித்து தடுத்தவன் "ஒரு நிமிஷம் இரு டா வினி .ஏன் இப்படி ஓடுற ப்ளீஸ் கொஞ்ச நேரம் உட்காரு உங்கூட நான் பேசனும் .."என்றான்.

"ப்ளீஸ் விக்கி என்னைப் புரிஞ்சுக்கோங்க .நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கேன் . என்னால முடியல நான் கிளம்பறேன். உங்க கம்பெனியில் தான் எனக்கு வேலை என்று கண்மணி அக்கா சொல்லியிருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேன்.."

"என்ன வினி சொல்ற உனக்கு நான் அவ்வளவு வேண்டாதவனா போயிட்டேனா . நீ எப்போ தான் என்ன புரிஞ்சுப்ப சொல்லுமா.."

"இதில் நான் புரிஞ்சிக்க எதுவும் இல்லை விக்கி. நான் எந்த விதத்திலும் கொடுத்து வைச்சவ இல்லை . நான் ஆசைப்பட்டது எதுவும் எனக்கு கிடைச்சதில்ல . ப்ளீஸ் நீங்க உங்க வாழ்க்கையை பாருங்க . யாருக்காகவும் எதற்காகவும் உங்கள் வாழ்க்கையை வீணடிக்காதீங்க.."

"என்ன பாக்க சொல்ற வினி .நீ சொல்றதை எல்லாம் பார்க்கும் போது நீ என்னை பற்றி விசாரித்துக் கொண்டு இருக்க அப்படித்தானே.."

விக்ரம் சொன்னதில் அதிர்ச்சி அடைந்தவள்.." அப்படி எல்லாம் இல்லை விக்கி நீங்கள் ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க .."என்றவள் மீண்டும் வெளியே செல்ல முற்பட "வினி ஏன் இப்படி ஓடுறே என்று அவளின் கையை பிடித்து இழுத்தவன் நாற்காலியில் அவளை அமர வைத்து அவள் முகத்தை நிமிர்த்தி " இங்க பாரு என்ன ஆச்சு உனக்கு இத்தனை வருஷம் எங்கடி போன நீ இல்லாத வாழ்க்கை எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா .அதெல்லாம் நீ யோசித்து கூட பார்க்க மாட்டியா ..? "என்றவனைப் பார்த்தவள்...

"கையை எடுங்க விக்கி இன்னொருத்தனுக்கு சொந்தமானவள் மீது கை வைக்க உங்களுக்கு அசிங்கமா இல்லையா..?"

"வினி நிறுத்து டி . இதுக்கு மேல் எதுவும் சொல்லி என்னை உயிரோட கொல்லாதடி . நீ இன்னொருத்தனுக்கு சொந்தமானவ இல்லை. என்னோட வினி தவறியும் மற்றொருவரின் நிழல் கூட அவள் மீது பட விட்டிருக்க மாட்டாள் . அது எனக்கு நல்லாவே தெரியும்.."

"என்ன தெரியும் விக்கி உங்களுக்கு சொல்லுங்க என்ன தெரியும். நீங்க ஏன் இப்படி பண்றீங்க . உங்கள் வாழ்க்கையை பாழாக்கிக்ககூடாது தானே நான் உங்களை விட்டு வெளிநாடு சென்று திக்குத் தெரியாத நாட்டில் எவ்வளவோ கஷ்டப்பட்டு நான் என் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தேன் . கௌரவமான வாழ்க்கை வாழ்ந்த எனக்கு அமைந்த எதுவுமே சரியில்லாதபோது கண்மணி அக்கா என்னை தேடி கண்டுபிடித்து கொஞ்சம் கொஞ்சமா என் மனசை மாற்றி இங்கே கொண்டு வந்தாங்க . ஆனா உங்க கம்பெனியில் வேலை வாங்கித் தருவாங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லை . கண்டிப்பா உங்ககிட்ட என்னால வேலை பார்க்கவே முடியாது விக்கி.".

"ஏன் இப்படி சொல்ற வினி உன் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா ?இல்லை என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? நல்லா தெரிஞ்சுக்கோ வினி இந்த ஜென்மத்தில் நீ மட்டும் தான் என்னுடைய மனைவி புரியுதா ...?எவனோ ஒருத்தன் உன் கழுத்தில் தாலி கட்டிட்டா நீ அவனுக்கு மனைவியாகிடுவியா என்ன ? நான் உன் மனசில் இல்லாமல் இருந்திருந்தால் நீ அவன் கூட குடும்பம் நடத்தி இருப்படி . இப்படி அவனை விட்டுப் பிரிந்து வந்து இருக்க மாட்ட .சரி சொல்லு உன் கழுத்தில் அவன் கட்டிய தாலி எங்கே அத முதல்ல நீ காட்டு என்னடி முழிக்கிற உன் கழுத்தில் தாலி ஏறிய ஆறே மாசத்துல அது இறங்கிருச்சுனு எனக்கு தெரியும் டி . அதனாலதான் உன்னை நான் இன்னும் விரும்புறேன் .. மற்றவனுடைய மனைவியை விரும்புவதற்கு நான் என்ன அவ்வளவு கேவலமானவனா சொல்லுடி . ஏண்டி ஏன் இப்படி பண்ண இத்தனை வருடம் என்னை விட்டு பிரிந்ததும் இல்லாம தனியா வாழ்ந்து இருக்க . என்னதான் கண்மணி உனக்கு உதவி பண்ணியிருந்தாலும் நீ எப்படி கஷ்டப்பட்டு இருப்ப அதை நினைக்கும் போது எனக்கு கஷ்டமா இருக்கு.. உன்னை உயிருக்கு உயிராக காதலித்து நான் என்னத்த செய்தேன் .உனக்கு நடந்த திருமணத்தையும் என்னால் தடுத்து நிறுத்த முடியலை . இப்போ சொல்றேன் அந்த கடவுள் உனக்கும் எனக்கும் தான் முடிச்சு போட்டு இருக்கான் . அதனால தான் உன் விருப்பம் இல்லாமல் உன் கழுத்தில் கட்டிய தாலி இப்போ உனக்கு நிலைக்கலை புரியுதா..? இந்த ஜென்மம் மட்டுமல்ல அடுத்து வரும் ஜென்மம் அனைத்திலும் நீதான் என்னோட மனைவி.." என்றவன் அவளின் தலைமுடியை கோதி அவளின் நெற்றியில் இதழ் பதித்தான். பெண்ணவளுக்கோ முதல் முதலான தன் உயிருக்குயிரானவனின் ஸ்பரிசத்தில் கண்மூடி அதை அனுபவித்தவள் கண்கலங்கி அப்படியே அமர்ந்திருக்க இவனோ அவளின் கண்களை துடைத்தவன் "வினி என் மேல உனக்கு நம்பிக்கை இருந்தா இங்க உனக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது உன்னுடைய வேலைய பாரு டா .உன்னோட மனசு என்னைக்கு மாறுதோ அன்னைக்கு நான் உன்னிடம் என் மனதில் உள்ள அனைத்தையும் சொல்வேன் . என் அம்மா , அப்பாவிடம் சொல்லி உன்னை கை பிடிப்பேன் .இதை யாராலும் மாற்ற முடியாது.." என்றவன் அவளின் கையை எடுத்து தன் கை மீது சத்தியம் செய்ய அதில் பெண்ணவளோ உறைந்து நின்றவள் தன்னையும் மீறி" விக்கி " என்று அவனை அணைத்துக் கொள்ள அவனும் அவளை இறுக்கமாக அணைத்தவன் சிறிது நேரத்தில் அவளை விடுவித்தவன் அவள் முகம் முழுவதும் தன் இதழ் பதிக்க அதில் பெண்ணவள் சிலையாய் நிற்க அவளை தாடையில் தட்டியவன்.." இங்க பார் இதுதாண்டி நீ ...இத்தனை வருஷமா உன்னை நீயே ஏமாத்திட்டு இருக்க இனி அந்த மாதிரி செய்யாதே .."

"இல்லை விக்கி இது சரிவராது.. நான் ஏற்கனவே திருமணமானவள். என்னை எப்படி உங்க வீட்ல ஏற்றுக்கொள்வாங்க .."என்றாள்.

"இல்லடி கண்டிப்பா ஏத்துக்குவாங்க எங்க அம்மா எங்கிட்ட எவ்வளவோ போராடிப் பார்த்தாங்க வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யச் சொல்லி நான் அதற்கு சம்மதிக்கவே இல்லை . நீ இல்லாத வாழ்க்கை எனக்கு நரகம் டி .உனக்கு திருமணம் முடிந்தது என்று தெரிந்த உடன் நான் துடித்த துடிப்புக்கு அளவே இல்லை .ஆனால் அதே நேரம் நீ அவனை விட்டுப் பிரிந்து வேறு எங்கோ போய்ட்ட என்று தெரிந்ததும் நான் நிம்மதி அடைந்தாலும் இந்த ஊரை விட்டுப் போய்ட்டனு தெரிஞ்சதுல இருந்து நான் உன்னைத் தேடிக் கொண்டு தான் இருக்கேன் . கண்டிப்பா என்னால உன்னை விட்டு கொடுக்கவே முடியாது டி.." என்றவன் அவளை அணைத்துக் கொள்ள அவளோ அவன் அணைப்பினில்அடங்கியவள் அழுதுக் கரைய பிறகு அவனை விட்டு பிரிந்து தன் கண்ணீரைத் துடைத்தபடி .."இது சரி வருமா தெரியலை விக்கி சரி விடுங்க நான் கிளம்பறேன்.." என்றவளைத் தடுத்தவன் அவளை முறைத்தபடியே கண்மணிக்கு ஃபோன் செய்து அவளை வரச் சொல்ல அவள் உள்ளே வந்தவள்" என்ன இரண்டு பேரும் பேசிட்டீங்களா .." என்றாள்.

"ஏய் கண்மணி நீ என்ன விளையாடறியா..? ஏன் இப்படி பண்ண இவள் எங்க இருக்கா என்று உனக்கு 2 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும் இல்லையா..? அப்படி இருக்கும்போது நீ ஏன் எங்கிட்ட சொல்லலை.."

" அட அறிவு கெட்ட முண்டம், எருமை மாடு அவ பழைய நினைவுகளில் இருந்து வெளிய வருவதற்கே ரொம்ப லேட் ஆயிடுச்சு டா .உனக்கு ஒரு விஷயம் தெரியுமா அவளை மீட்டுக்கொண்டு வரதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆகிடுச்சு . நாம பிசினஸ் விஷயமாக வெளிநாடு போகும் போதெல்லாம் நான் தனியா போய்ட்டு வரும் போதெல்லாம் நீ எங்க போன கேட்பியே இவளைப் பார்க்க தான் போனேன் .

"நாம இரண்டு பேரும் அடிக்கடி போனது சிங்கப்பூர் தானடி அதனால்தான் நீ நான் போகும் போதெல்லாம் நானும் வரேன் என்று அடம்பிடித்து வந்தியா .அப்போஅவ
அங்கே தான் இருந்தாளா ..?அடிக் கிராதகி எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா அவளை அப்பவே இங்கே அழைத்து வந்திருப்பேனே.."

"டேய் இப்போதான் நம்ம நாட்டுக்கு வரவே சம்மதம் சொன்னா. இனி எந்த பிரச்சினையும் இல்லை .நீ கவலைப்படாதே. அவள் இங்கே நம்ம கூடவே இருப்பாள்.."என்றாள்.

"அக்கா நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியலை. பிசினஸ் விஷயமா சிங்கப்பூர் வந்திங்களா .ஆனா நீங்க எங்கிட்ட அப்படி சொல்லலையே இந்த கம்பெனி இவரோடது தானே."

இவள் கூறியதை பார்த்த கண்மணியின் விக்ரமை பார்த்து சிரித்தவள்" ஆமாண்டா இவனுடையதுதான் என்றாள்.."

"ஏய் கண்மணி நீ சும்மா இரு" என்ற விக்ரம் இல்லடா வினி இந்த V.K இண்டஸ்ட்ரீஸ் இது எங்க இரண்டு பேருடையதும் நாங்க இரண்டு பேரும் இதில் பார்ட்னர்.."

ஆமாங்க V ஃபார் விக்ரம் , K ஃபார் கண்மணி ... கண்மணி தன் வாழ்க்கையில் நிம்மதியை தொலைத்தவள் வாழ்க்கையே தடை புரண்ட நேரத்தில் அவளை அதிலிருந்து மீட்டு வர விக்ரமின் ஐடியாவின் படி விக்ரமின் அப்பாவும் , கண்மணியின் அப்பாவும் சேர்ந்து இந்த கம்பெனியை இவர்களுக்காக ஆரம்பித்து கொடுக்க சிறிது முதலீடு போட்டு ஆரம்பித்த இந்த நிறுவனம் இப்பொழுது இவர்களின் உழைப்பால் மிக பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது. தந்தைகள் இருவரும் முதலீடு செய்த பணத்தை இவர்கள் சம்பாதித்து திரும்பக் கொடுத்து விட்டனர்.

"அக்கா எனக்கு உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு நடந்ததை நினைத்து ஒரு ஓரமா உட்காராமல் இவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கீங்க . சரிங்க அக்கா உங்களுக்காக நான் இங்கே பணிபுரிய சம்மதம் சொல்றேன் .ஆனா ஒன்னு என்னால இவர் வாழ்க்கை பாழாகக் கூடாது . இவங்க அம்மா , அப்பாவின் முழு சம்மதம் இருந்தால் அடுத்து நடப்பதை பற்றி யோசிப்போம்க்கா நான் கடைசிவரை இப்படியே இருந்துப்பேன் இவரை இவருடைய வாழ்க்கையை பார்க்கச் சொல்லுங்க..." என்றாள்.

"ஏய் நிறுத்தி டி என்ன விளையாடறியா..? . ஏன் நான் எவ்வளவு தூரம் கிளிப்பிள்ளைக்கு சொல்றது போல சொல்லிட்டு இருக்கேன். நீ என்னமோ சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க .நான் சொல்றது மட்டும்தான் நடக்கும் புரியுதா .?உன் இஷ்டப்படி எல்லாம் ஆடாத நான் சொன்னதை மட்டும் செய்.." என்றான்.

"ஓஹோ ! நீங்க சொல்றதை மட்டும் நான் எதுக்காக செய்யணும் .நீங்க எனக்கு யார் இதே வார்த்தையை சொல்லி சொல்லி தான் அவன் என்னை ஆறு மாசமா சாகடித்தான் . இப்போ நீங்களும் அதையேதான் சொல்றீங்க.. ஏன்டா இந்த ஆம்பளைங்க நீங்க இப்படி இருக்கீங்க போடா எனக்கு நீயும் வேண்டாம் . இதுக்கு மேல என்னால தோல்வியை தாங்க முடியாதுடா .."என்றவள் கதறி அழ வேகமாக எழுந்து சென்றவன் அவளை இழுத்து அணைத்தவன் .."வினி சாரி சாரி சாரி நான் ஏதோ கோபத்தில் பேசிட்டேன் டா .."என்றான்.

"என்னடா கோபத்தில் பேசின
எனக்கு திருமணம் நடக்கும் கடைசி‌ நேரமாவது நீ வந்திடுவ என்று கடைசி உன்னை நான் எவ்வளவு தேடினேன் தெரியுமா ? அப்போ எங்கடா போன உன்னை மனசுல வச்சிக்கிட்டு நான் எப்படிடா மற்றவன் கூட குடும்பம் பண்ண முடியும் . அவன் என்னை எவ்வளவு கொடுமை பண்ணினாலும் எல்லாத்தையும் அதை தாங்கிட்டு நீ ஒரு நாள் வருவ என்னை அங்கிருந்து மீட்டு வருவ என்று நம்பியிருந்தேன். என் அம்மாவை இதனால் நான் இழந்தேன். என் அம்மாவை அவர்கள் திட்டி திட்டி ஏற்கனவே உடம்பு முடியாத எங்க அம்மா என் வாழ்க்கையை நினைத்து நினைத்து செத்து போனாங்க டா . அதன் பிறகு அநாதையா நின்ன என்னை ஏறெடுத்துப் பார்க்கவும் ஆள் இல்லை . அப்போ எங்கடா போன நீ வரவேண்டிய நேரத்துல எல்லாம் வராமல் இப்போ மட்டும் உனக்கு என் மேல என்ன அக்கறை இப்பவும் சொல்றேன். நான் இங்க வேலை செய்வேன் . ஆனால் உனக்கும் ,எனக்கும் முதலாளி தொழிலாளி என்ற உறவு மட்டும்தான் அதை தெரிஞ்சுக்கோ .." என்றவள் வேகமாக வெளியேறினாள்.

இதைக்கேட்டு கண்மணி கலங்க விக்ரமனோ அவள் எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாதவனாய்
நின்றான்.

வினிதாவின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன அவளின் திருமணத்தை விக்ரம் அவனால் ஏன் தடுக்க முடியவில்லை ‌.
 
என் உயிரில் கலந்தவனே!

உயிர் -5

கண்மணி , கிருத்திகா மற்றும் விக்ரம் மூவரும் ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்க அங்கே வந்து சேர்ந்தாள் வினிதா .. இவர்களை விடவும் இரண்டு வயது சிறியவள். வினிதா இயல்பிலேயே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள் அவளைப் பார்த்த முதல் பார்வையிலேயே ஏனோ விக்ரமுக்கு மிகவும் பிடித்துப் போனது.

கண்மணி எதேச்சையாக திரும்பிப் பார்த்தவள் விக்ரமின் பார்வை சென்ற இடத்தில் பயந்த முகத்துடன் ஒரு பெண் நிற்க அவளை தன்னிடம் அழைத்து வந்தவள் என்ன என்று விசாரிக்க அவள் அழுதுகொண்டே சீனியர்கள் ரேகிங் செய்வதை பார்த்து பயப்படுவதாக கூற அவளை சமாதானம் செய்து அன்றிலிருந்து தனது கூட்டணியிலேயே அவளையும் சேர்த்துக் கொண்ட கண்மணிக்கு அவளை மிகவும் பிடித்துப் போக அவளை சொந்த தங்கை போலவே நடத்தி வந்தாள்.

கிருத்திகா மற்றும் கண்மணியிடம் சகஜமாகப் பேசும் வினிதா ஏனோ விக்ரமை கண்டால் மட்டும் ஒதுங்கிச் செல்ல ஆரம்பித்தாள். இதற்கிடையே கல்லூரியில் விளையாட்டு போட்டி ஒன்றிற்காக இவர்கள் வெளியூர் சென்றிருக்க அங்கே இவளுக்கு உதவுவதற்காக விக்ரம் அவளின் பொருட்களை எடுத்துக் கொடுத்தவன் அவளுக்கு உதவ முன்வர இவளோ தன் முடியை தூக்கி கொண்டை இட முடியாதவளாக முழித்துக் கொண்டிருக்க அதை பார்த்து விக்ரமுக்கு சிரிப்பு வர குழந்தையாய் முழிப்பவளை பார்த்து ரசித்தவன் அவளுக்கு உதவும் எண்ணத்தில் அவளின் முடியில் கை வைக்க அதில் அதிர்ச்சியான வினிதா அங்கிருந்து நகர்ந்த போதுதான் விக்ரம் அங்கே நிற்பதை பார்த்தவள் அவன் செய்த செயலில் கண்கலங்கி நிற்க விக்ரம் அவளிடம் ஏதோ பேச வர அதை பார்த்தவள் அங்கிருந்து நகர முற்பட அப்போது அங்கு சரியாக வந்த கண்மணி "என்ன வினிதா நீ கிளம்பலையா.‌" என்று கேட்க" அக்கா அக்கா" என்று தயங்கியவள் விக்ரமை பார்க்க அவனின் வலி நிறைந்த பார்வையை கண்டவளுக்கோ மனதினில் அதீத வலி எழும்ப அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவனிடம் ஓடிச்சென்று சரணடைய வேண்டும் என்ற தன் மனதை கடினப்பட்டு கட்டுப்படுத்தியவள் தலைகுனிய விக்ரம் அவனுக்கு அவள் முகத்தில் மாறி மாறி வந்த உணர்வுகளை பார்த்தவனுக்கு இனம்புரியாத உணர்வு தோன்ற அதில் மனம் இலகுவாக அவன் கண்மணியை பார்க்க அவளோ அவனை அங்கிருந்து செல்லுமாறு சமிக்ஞை செய்ய அவனும் நகர்ந்தான்..

அவன் நகர்ந்ததும் கண்மணி என்ன என்று கேட்க வினிதாவிடம் கேட்க "அக்கா எங்கிட்ட அவர் நடந்து கொள்வது எனக்கு வித்தியாசமா இருக்கு . அவர் திடீரென்று எனக்கு உதவ என் முடி மீது கைவைக்க வந்தார் .எனக்கு இதெல்லாம் பிடிக்கலை அக்கா .எங்க குடும்பத்திற்கு இதெல்லாம் சரிவராது.." என்று அழவும் " வினிதா அவன் உங்கிட்ட ஃப்ரண்ட்லியா தாண்டா பழகுறான். நீ அதை தப்பா எடுத்துக்காத நானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கேன் .நீ ஏன் அவனை அவாய்ட் பண்ற.."

"இல்லை அக்கா அவர் எங்கிட்ட ஃப்ரண்ட்லியா பழகலை. அவர் மனசுல ஏதோ இருக்கு .. " என்றவள் அழுதுகொண்டே நிமிர அங்கே விக்ரம் நேரமானதால் இவர்களை அழைக்க வந்தவன் தன் உயிரானவளின் வார்த்தைகளை கேட்டவன் தன் மனதை அவளின் வார்த்தைகள் கூர் வாளால் குத்தி கிழிப்பதை போல் உணர்ந்தவன் அவளை அடிபட்ட பார்வை பார்க்க அவனின் பார்வையில் அதீத வலியை உணர்ந்தவள் அவனின் வலி இவளை மீண்டும் ஏதோ செய்ய அதில் மனமுடைந்தவளாக மீண்டும் அழ இவளின் அழுகையை கண்டவன் அவனும் கலங்கியவனாக அங்கிருந்து நகர்ந்தான்.

கண்மணிக்குத்தான் இவர்களை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் விழித்தவள் இருவரும் ஒருநாள் கண்டிப்பாக புரிந்து கொள்வர் என்று நினைத்து அமைதியாக இருந்தாள்.

பிறகு நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க விக்ரமின் குணமும் அவனின் நன்னடத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக வினிதாவை மாற்ற அவளும் அவனை மனதார விரும்ப ஆரம்பித்தாள் . ஆனால் அதை வெளியே சொல்ல தான் அவளுக்கு மனம் வரவில்லை. ஆம் அவன் அன்று பார்த்த வலி நிறைந்த பார்வையைக் கண்டவளுக்கு மீண்டும் மீண்டும் அவனின் பார்வை இவளை வதைக்க அவனிடம் தஞ்சம் புக வேண்டும் அவனுடன் கடைசி வரை வாழ வேண்டும் என்ற எண்ணமே இருந்து கொண்டிருக்க மிகவும் அவனை உயிருக்கு உயிராய் விரும்ப ஆரம்பித்தாள் பெண்ணவள் . விக்ரம் தனது கல்லூரிப் படிப்பை முடித்தவன் வெளிநாட்டிற்கு பணிக்குச் சென்றான்.. இங்கே கண்மணி வாழ்க்கையில் நடக்கக்கூடாத ஒரு சில கசப்பான நிகழ்வுகள் நடக்க அதில் அவளும் நொறுங்கி போய் இருக்க கிருத்திகாவும் அவளுக்கு ஆறுதலாக இருந்தாள் .. அவளின் குடும்பமே சோகத்தில் இருந்தது.. இவளை விக்ரம் விரும்புவதை கேள்விப்பட்ட வினிதாவின் சித்தப்பா அவளுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்தார். மாப்பிள்ளை என்று பார்த்தாரே தவிர அவன் நல்லவனா ?கெட்டவனா என்பதை பார்க்க மறுத்தார் .இவளோ தனனவனிடம் தன் காதலை சொல்லவில்லை என்றாலும் நிறைய முறை அவனுக்கு கண்களாலே தன் காதலை உணர வைத்திருக்கிறாள் பெண்ணவள் . விக்ரமுக்கு இது தெரிந்தாலும் அவள் வாய் மொழியாலே அவள் காதலை சொல்லட்டும் என்று இருந்தான் ஆடவனவன் .வினிதா அந்த தைரியத்தில் தன்னவன் தன்னை மீட்டுக் கொண்டு போக வருவான் என்று இருந்தவளுக்கு ஏமாற்றமே மிச்சம்.

கடைசி முயற்சியாக கண்மணிக்கும் , கிருத்திகாவுக்கும்
அழைத்து பார்க்க இருவரின் ஃபோனும் அனைத்து வைக்கப்பட மிகவும் சோர்ந்து போனாள் வினிதா. இவளுக்கும் கண்மணியின் வாழ்க்கையில் நடந்த எதுவும் தெரியாது.அவளின் சித்தப்பா விக்ரமின் காதலை கேள்விபட்டதால் இவளுக்குமாப்பிள்ளை பார்ப்பதாக வீட்டில் அடைத்து வைத்திருந்தார் . கண்மணிக்கு நடந்த எந்த ஒரு விஷயமும் இவளுக்கு தெரியாது . இந்த நிலையில் மணமேடையில் அமர்ந்தவள் கடைசிவரை தன்னவன் வருவான் என்று எதிர்பார்த்து கடைசியில் ஏமாந்து போனாள். அவளின் கழுத்தில் தாலி கட்டிய வெற்றிப் புன்னகையுடன் இருந்தான் சந்திரன் . திருமணத்திற்கு முன் அவன் பெண் பார்க்க வந்திருக்கும் போது" தான் ஒருவரை விரும்புவதாக நீங்கள் தயவு செய்து என்னை பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள் .." என்று எவ்வளவு சொல்லியும் அவனும் "எனக்கு உன்னை தானே பிடிச்சிருக்கு . அதனால் தான் பணம் காசு உன்கிட்ட இல்லைனாலும் நான் உன்னையே திருமணம் செய்ய முடிவு செய்தேன். நீ எவனை வேண்டுமானாலும் விரும்பிக்கோ . ஆனால் என் வீட்டில் எங்கூட வாழும் வழியை பாரு.. " என கூற இவளுக்கு அவனை பார்க்க அருவருப்பாக இருந்தது . தன் அன்னையிடம் எவ்வளவு சொல்லியும் அவரும் தன் குடும்பத்திற்காக இதனை செய்துதான் ஆகவேண்டும் என்று கட்டளையிட வேறு வழியில்லாமல் தன்னவன் வந்து தன்னை காப்பாற்றுவான் என்ற தைரியத்தில் திருமணத்துக்கு சம்மதம் சொன்னாள்.. இப்போது அவனின் கையால் தாலி
வாங்கியவள் உடலும் , உள்ளமும் நெருப்பாய் கொதிக்க தன் கணவன்
தன் மீது கைவைக்க வந்தாலும்
அவனை தடுக்க போராடியவள் சாதுர்யமாக காய் நகர்த்தினாள் ."இங்க பாருங்க உங்களால் முடிந்தால் என் மனதை மாற்றி நான் உங்களை முழு மனதாக என் கணவனாக ஏற்றுக்கொண்ட பிறகு என் மீது கை வைங்க என்று சவால்விட்டாள்.

சந்திரனும் அவனின் அழகின் மீது கொண்ட கர்வத்தால் எத்தனையோ அழகிகள் தன் பணத்திற்காகவும் தன் அழகிற்காகவும் தன்னிடம் வலிய வந்து அவர்களை நினைத்து அதேபோல் இவளும் தன்னிடம் வருவாள் என்று மனப்பால் குடித்தவன்.." சரிடி
நீ எப்போ அவனை மறந்து எங்கிட்ட வரியோ அப்பதாண்டி நான் உங்கூட வாழ்க்கையை ஆரம்பிப்பேன். உன் மீது ஆசை வச்சு தொலைச்சிட்டேன் இல்லனா உன்னுடைய சம்மதம் எனக்கு தேவையில்லை . நமக்குள் தாம்பத்தியம் மட்டும்தான் இப்போதைக்கு கிடையாது மற்றபடி நான் என்ன செய்தாலும் என்னை கேட்க ஆள் இல்லடி என்றவள் தினமும் அவளைஅடித்து துன்புறுத்த ஆரம்பித்தான் . தினமும் தனக்குப் பிடித்த பெண்களோடு வெளியில் சுற்றிவிட்டு தாமதமாக வீட்டிற்கு வருவான். வினிதாவை பார்க்கப்பார்க்க அவள் அமைதியான முகமும் அவளின் அழகும் அவனை படாதபாடு படுத்த இருந்தாலும் வைராக்கியமாக தன் நிலையிலிருந்து மாறக்கூடாது என்று நினைத்தவன் அதை வேறு விதமாக காண்பிக்க ஆரம்பித்தான். அவள் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஒரு நாள்
சேலையை முட்டிக்கால் வரை தூக்கியவன் அவள் திமிர திமிர அவனின் கை கால் முகம் வயிற்றுப்பகுதி என்று கொஞ்சமும் இரக்கமில்லாமல் சிகரெட்டால் சூடு வைக்க அதில் பெண்ணவள் துடித்துப் போனாள்.

அதிலும் பெண்ணவள் இவனுக்கு இணங்காமல் இருக்க அதில் வெறி கொண்டவனாக பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்தவன் அவளின் கண்ணெதிரிலேயே அவர்களுடன் கேவலமாக நடந்து கொள்ள அதைப் பார்த்த மற்ற மனைவியாக இருந்தால் கண்டிப்பாக கோபம் வந்திருக்கும் ஆனால் இவளுக்கு தான் அவன் மீது சிறிதுகூட எந்த உணர்வும் இல்லையே . அவள் அதையும் கண்டும் காணாமல் வேறு அறையில் சென்று படுத்துக் கொள்ள அதில் மீண்டும் மீண்டும் கோபம் அடைந்தவன் தினமும் அவளை அடித்து துன்புறுத்தினான்.


பிறகு அவள் மீது கொண்ட சிறிது பாசமும் பழி உணர்வாக மாற ஒரு நாள் அவள் எதிர்பாராத நேரம் அவளை நாற்காலியில் வைத்து கட்டியவன் அவளின் அழகிய முகத்தை கண்டவன் "உனக்கு ரொம்ப அழகு என்ற திமிர் டி அதனால்தான் இப்படி ஆடிக்கொண்டிருக்க என்றவன் அவளின் தலை முடியை வெட்டினான். ஆம் பெண்ண வளுக்கோ நீண்ட கருங்கூந்தல் அதுவே அவளுக்கு அழகுக்கு அழகு சேர்க்கும் . அந்த கூந்தலை இவன்
வெட்டும் போதுதான் முதன்முதலாக வினிதா மிகவும் துடித்துப் போனாள். ஆம் விக்ரம் ஞாபகம் அவளுக்கு அதிகமாக வர ஆரம்பித்தது. அந்த நாளும் ஞாபகம் வர கண்களில் கண்ணீர் வர பெண்ணவள் எவ்வளவோ கெஞ்சியும் அவனும் இவளின் கெஞ்சுதல் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியை மட்டும் வெட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு இவளின் கதறலில் எதையோ வென்றுவிட்ட உணர்வில் இருந்தவன் முடியை முழுவதுமாக நீக்கி மொட்டையும் அடித்தான்.

அவன் எவ்வளவு துன்புறுத்தியும் இவள் அமைதியாக இருந்தாள் ..ஆனால் இந்த நிகழ்விற்குப் பின் பெண்ணவள் நடைப்பிணம் போல ஆனவள்.. எப்பொழுதும் அழுதுக் கொண்டிருக்க சந்திரனுக்கு இவளின் அழுகையில் மனம் நிம்மதி அடைந்தது. நாளாக நாளாக இவனின் கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்க இவள் அதை யாரிடமும் கூறவில்லை கூறினால் மட்டும் என்ன நடக்கப் போகுது என்று அமைதியாக இருந்தாள்... அவளின் அம்மாவும் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரிடமும் சொல்லாமல் மனதுக்குள்ளே வைத்து புழுங்கியவள் உடல் மெலிந்து எப்போதும் எதையோ பறி கொடுத்தவள் போல் சோகமாகவே வளைய வந்தாள்.

இந்நிலையில் அவளின் அம்மாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட அவர்களுக்கு மருத்துவம் பார்க்க கூட பணம் இல்லாமல் தவித்தவள் தன் தன்மானத்தை விட்டு இவனிடம் பணம் கேட்டு எவ்வளவு கெஞ்சியும் அவனும் அதற்கு விலையாக இவளையே கேட்க அதில் மனம் வெறுத்தவள் தன் நண்பர்களின் உதவியைக் கொண்டு அவளின் அம்மாவை காப்பாற்ற முயற்சி செய்தாள்.. ஆனால் பலன் என்னமோ பூஜ்ஜியம் அவளின் அம்மா இறந்து விட்டார் . மகள் வாழும் வாழ்க்கை அவள் வாய்மொழியால் கூறாவிடினும் மற்றவர்களின் மூலமாக கேள்விப்பட்டவர் தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்து ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டவர் அதையே நினைத்து நினைத்து மருகிக் கொண்டிருந்தவருக்கு நிம்மதி இல்லாமல் போக கடைசியில் மரணம் அவரை தழுவியது.

சந்திரனின் பெற்றோர்கள் தனியாக வாழ்ந்து வந்தனர் இவர்கள் தனிக்குடித்தனம் இருந்தனர் ..சந்திரனின் குணத்தை அறிந்தவர்கள் அவனுக்கு திருமணம் முடிந்தவுடன் அவனை தனியாக வைத்தனர் .அவன் விருப்பத்திற்காகவும்
, தன் கடமையை நிறைவேற்றும்
எண்ணத்தில் மட்டுமே அவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். தவிர முழுமனதோடு அல்ல ஏனென்றால் அவனைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும் .அவன் ஒன்றை ஆசைப்பட்டால் அதை அடையாமல் விட மாட்டான் . அப்படி இருந்தவன் இன்று
வினிதாவை விட்டு வைத்திருக்கிறான் காரணம் முதன்முதலாக அவளை கண்டவன் அவள்மீது ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட அவளை விரும்ப ஆரம்பித்தவன் அவளை வலுக்கட்டாயமாக மணந்தான்.

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க ஒரு துயரமான செய்தி ஒன்று வினிதாவை எட்டியது. ஆம் சந்திரன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு கார் ஓட்டியதில் அவனின் வாகனம் விபத்துக்குள்ளாகி அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

அவன் கூட வாழ்ந்த அந்த ஆறு மாதமும் பெண்ணவள் படாத பாடுபட்டாள் . தினமும் அடியும் ,உதையும்
வாங்கி பழகியவளுக்கு தன் திருமண பரிசாக கிடைத்தது என்னவோ மன தைரியமும் இனி எது நடந்தாலும் கவலையில்லை என்ற எண்ணமும் மட்டுமே. தன் அன்னையையும் இழந்துவிட்டதால் இனி தனக்கு என்று யாருமில்லை என்றவள் நடைப்பிணம் ஆகவே வலம் வந்தார் அப்போது தான் அவனின் மரணச் செய்தி வந்தடைந்தது.

சந்திரனின் பெற்றோர் இவளிடம் இங்கு நடந்த அனைத்தும் எங்களுக்குத் தெரியும் என்றும் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை என்னை மன்னிச்சிடு மா என்று மன்னிப்பு கேட்டவர்கள் அவளை படிக்க வைப்பதாகவும் நீ மேற்கொண்டு படி என்றதற்கு அவளோ வேண்டாம் என்று மறுத்தவள் தன் அம்மாவின் கொஞ்சம் இருந்த சொத்துக்களை விற்றவள் தன் நண்பர்களின் உதவி கொண்டு வெளிநாடு சென்றவள் அங்கே வேலை பார்த்துக்கொண்டே மேற்கொண்டு படித்தாள். ஆனால் சந்திரனின் பெற்றோர்கள் இவளுக்கு பிராயச்சித்தம் செய்யும் விதமாக அவர்களின் நண்பரிடம் பேசியவர்கள் அவளுக்கு அவர்களின் மூலம் பண உதவி செய்து அவள் படிக்க உதவி செய்தனர் ஆனால் அது இவளுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள் கொடுக்க வேண்டாம் என்று மறுத்தவளுக்கு அவர்கள் இது எங்கள் பணம் அல்ல உன் அம்மா வீட்டில் உள்ளவர்கள் அவர்களுக்கு எழுதி வைத்த சொத்தை விற்று உன்னிடம் கொடுக்கும்படி எங்களிடம் கேட்டுக் கொண்டனர் . அந்தப் பணம்தான் என்று கூற அவள் இதை நம்பாததால் அவளின் தாய்மாமனிடம் வினிதாவின் மாமனார் ,மாமியார் இவளுக்கு உதவி செய்வதாகவும் இவள் வேண்டாம் என்று மறுத்ததாகவும் கூறியவர்கள் இதை நீங்கள் கொடுப்பதாக சொல்லுங்கள் என்று கேட்டுக்கொள்ள அவரும் தன் தங்கையின் மகளுக்கு தன்னால் கொடுத்துதான் உதவ முடியவில்லை இதையாவது செய்யலாம் என்று நினைத்தவர் அவளிடம் அதைக் கூற அதை நம்பி அவள் அந்த உதவியை ஏற்றுக்கொண்டாள்.

இப்படியே விக்ரமின் நினைவிலேயே தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு இரவெல்லாம் அவனின் நினைவுகள் வாட்ட தலையணையை அவளுக்கு தோழியாய் மாற தலையணையில் கண்ணீர் சிந்தி அவள் இரவு தூக்கத்தை தொலைத்தவள் அடிக்கடி கண்மணி மற்றும் கிருத்திகாவின் ஞாபகம் வர அவர்களை நினைத்துக் கொண்டவள் அவர்கள் கூட தன்னை பார்க்க வரவில்லையே வரவில்லை என்றாலும் பரவாயில்லை என்னை ஒரு வார்த்தையாவது விசாரித்து இருக்கலாமே என்று நினைத்தவளுக்கு அவர்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது.

விடுமுறை அன்று தாமதமாக எழுந்தவள் தன் வேலையை முடித்துக்கொண்டிருக்க வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க கதவை திறந்து பார்த்தவளுக்கு அங்கே நின்றவரை பார்த்தவள் அதிர்ச்சியில் கண்கள் கலங்க அப்படியே சிலையாகிப் போனாள்.
 
என் உயிரில் கலந்தவனே!

உயிர் -6

வினிதா வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க சென்று கதவை திறந்த வளுக்கு எதிரில் நின்றவளைக் கண்டு அதிர்ச்சியானவள் தன் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தடுக்க முடியாதவளாய் நிற்க எதிரில் நின்றவரும் அவள் கண்களை துடைத்து அவளை அணைத்துக்கொள்ள அவள் "அக்கா ' என்று அவளைக் கட்டிக் கொண்டு அழ அங்கே அழகான ஒரு பாசப்போராட்டம் நடந்தேறியது.

கண்மணி, " அழாத வினிதா உனக்கு என் மேல கோபமா என்னை உள்ளே வர சொல்ல மாட்டியா டா .."

"அச்சோ !சாரி அக்கா உள்ளே வாங்க .."என்றவள் அவளை அமர வைத்து அவளுக்கு சாப்பிட சிற்றுண்டி எடுத்துக்கொண்டு வந்தாள்.

கண்மணி, " வினிதா சாரிடா உன் வாழ்க்கையில் நடந்தது எனக்கு நிஜமாகவே தெரியாது . நான் அப்போ எதையும் உணரும் நிலையில் இல்லடா .இப்பவுமே நான் உனது நண்பர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் நீ எங்கே இருக்கே என்று கேட்க அவங்க சொல்லவே இல்லை . அதன்பிறகு நான் கெஞ்சி கேட்டதும்தான் உண்மையே சொன்னாங்க .."என்றாள்.

கண்மணி ,கிருத்திகா இருவரும் விக்ரம் வினிதாவை தொடர்ந்து தேடிக் கொண்டிருக்க ஆனால் பலன் என்னமோ பூஜ்ஜியம் தான் .ஆனால் விக்ரமிடம் சொல்லாமல் கண்மணி , கிருத்திகா என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் அவளின் நண்பர்களின் நினைவு வர அவர்களை தொடர்பு கொண்டு கேட்க அவர்கள் சொல்லவில்லை .

கண்மணி," அவளின் நல்வாழ்விற்காக மட்டுமே நாங்க இதை கேட்கிறோம் .அவ நல்லா வாழனும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கா ?இல்லையா ? .."என்று தன் மனதில் உள்ளதை கூற அவர்கள் நடந்த அனைத்தையும் கூறியவர்கள் அவள் இருந்த இடத்தையும் சொல்ல அடுத்த ஒரு வாரத்தில் கண்மணி இங்கு வந்து சேர்ந்தாள்.

"சரிங்க அக்கா நடந்தது முடிந்ததை விடுங்க . சரிக்கா உங்களுக்கு என்ன ஆச்சு. நான் எவ்வளவோ உங்களையும் கிருத்திகா அக்காவையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன் ஆனால் என்னால முடியல அக்கா .."

"என் கதை இப்போது வேணாம்டா அதை நான் உனக்கு பொறுமையா சொல்றேன். நான் சொல்றபடி கேளு நீ கிளம்பி எங்கூட வந்துடு.." என்றாள்.

"அக்கா நீங்க என்ன சொல்றீங்க இப்போதான் எனக்கு இந்த வாழ்க்கை பழகி இருக்கு .நான் இப்போ கௌரவமா வாழ்ந்துகிட்டு இருக்கேன் அக்கா .நான் அங்க வந்தா எனக்காக யார் இருக்கா என்னுடைய அம்மாவும் இல்லை .தேவையில்லாத நினைவுகள் மட்டுமே எனக்கு அங்கே வந்து போகும் .அதனால் என்னை இப்படியே விட்டுடுங்க உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்க வாங்க அக்கா.."

"நீ என்னமா பக்கத்து ஊரிலா இருக்க நான் உன்னை அடிக்கடி வந்து பார்க்க ...சொல்றதை கேளுடா எங்கூட கிளம்பி வா.." என்றாள் கண்மணி.

'அக்கா நீங்க என்னை என்ன நினைச்சீங்க ! உங்களுக்கு இந்த நாடு மட்டுமல்ல எந்த நாடு செல்வதும் சுலபமான விஷயம் தான் அக்கா .நீங்கள் பிசினஸ் விஷயமாக அடிக்கடி இங்கே வருவது எனக்கு தெரியும் அக்கா. நான் என் நண்பர்கள் மூலமாக உங்கள் அனைவரின் நலனையும் அறிந்து கொண்டுதான் இருக்கேன்
."என்றாள் வினிதா. ( இவ்வளவும் தெரிந்து வைத்திருந்தவளுக்கு இவளின் பிசினஸ் பார்ட்னர் விக்ரம்தான் என்று தெரியாதது விதியின் விளையாட்டோ யாரறிவார் ?)

"பாரேன் உனக்கு எல்லாம் தெரிந்து இருக்கா ...ஆனால் நாங்க தான் உன்னை தேடாத இடமில்லை. சரி அதை விடு வினிதா உனக்கு எப்படி திடீர் திருமணம் நடந்தது. உன் கணவர் எப்படி இறந்தார். எனக்கு ஓரளவிற்கு உன் நண்பர்கள் மூலமாக தெரியும் இருந்தாலும் என்ன நடந்தது நீ சொல்லுமா.." என்றாள் கண்மணி.

வினித்தா நடந்த அனைத்தையும் கூறி அழ கண்மணி அதில் அதிர்ச்சி யானவள். .." வினிதா உனக்கு விஷயமே தெரியாதா விக்ரம் உன் திருமணத்தை தடுக்க வரவில்லைன்னு உனக்கு யார் சொன்னா ...என் வாழ்க்கையில் நடந்த ஒரு சில கசப்பான நிகழ்வுகளால் நான் யாரையும் தொடர்பு கொள்ளாமல் இருக்கும்பொழுது விக்ரம் வெளிநாட்டில் இருந்து என்னை பார்க்க வந்திருந்தான் ...அப்போதுதான் உன் நிலமை அவனுக்கு தெரிய உன்னை காப்பாற்ற அங்கு வந்தவனை உன் சித்தப்பாவும் உன் கணவனும் சேர்ந்து ஆள் வைத்து அவனை அடித்து இரண்டு நாட்கள் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தனர் ...

அதன் பிறகு விக்ரம் உனக்கு திருமணம்
நடந்ததை எண்ணி மிகவும் உடைந்து போனவன் வெளிநாட்டிற்குச் சென்றான். அவன் மறுபடியும் உன் கணவர் இறந்த பிறகு தான் வந்தான் .பிறகு உன் நிலைமையை தெரிந்து கொண்டவன் அவனும் உன்னை தேடிக்கிட்டு தான் இருக்கான் . உனக்காக அவன் காத்துக்கிட்டு இருக்கான் .அவன் அம்மா எவ்வளவு கெஞ்சியும் திருமணத்திற்கு அவன் சம்மதம் சொல்ல வில்லை .நீ இங்கே இருப்பது தெரிந்தால் அவன் மிகவும் சந்தோஷப்படுவான்..." என்றாள் கண்மணி ‌.

வினிதா இதைக்கேட்டவளுக்கு ஒருபுறம் மகிழ்ந்தாலும் மறுபுறம் அக்கா எனக்காக ஒரு உதவி பண்ணுங்க ..நான் இங்கே இருப்பது விக்ரமுக்கு தெரியக்கூடாது . அப்படி தெரிந்தால் நான் உங்கள் யார் கண்ணுலையும் படாமல் எங்கேயாவது போய்டுவேன் . அவருக்கு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்துவைங்க ... அவர் வாழ்க்கை நன்றாக இருக்கனும் அதற்காகத்தான் நான் அங்கிருந்து இங்கே வந்தேன்.." என்றதும் கண்மணி அப்போதைக்கு அவளை சமாளிக்கும் விதமாக சரி என்று ஒப்புக் கொண்டாள்.

பிறகு விக்ரமும் ,கண்மணியும் வெளிநாடு செல்லும் போதெல்லாம் விக்ரமிடம் எதையாவது கூறிக்கொண்டு கண்மணி வினிதாவை சந்தித்துவிட்டு வந்தாள்.

கண்மணி அவளை கொஞ்சம் கொஞ்சமாக கரைய வைத்தவள் வினிதாவின் நல்வாழ்விற்காக தாயகம் வர வைத்தாள்.

அவ்வளவுதாங்க ஃப்ளாஷ்பேக் முடிந்தது.

வினிதா விக்ரமுக்கு PA வாக பணிபுரிந்து வர அவள் ஆபீசில் இருந்த நேரம் முழுவதும் அவனுடைய பக்கத்திலே இருக்கும்படி ஆனது இதற்கு காரணம் கண்மணியே .
.அவள்தான் வினிதா விக்ரமை புரிந்து கொள்வதற்காக இப்படி செய்தாள்.

வினிதா இதற்கு மறுப்பு தெரிவிக்க நினைத்தாலும் ...'என்னால் என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும் .எனக்கு இங்கே யாரும் சொந்தமும் இல்லை ,தெரிந்தவர்களும் இல்லை நான் நானாகவே இருப்பேன் ' என்று முடிவெடுத்தவள் அதை ஏற்றுக்கொண்டாள்.

விக்ரம் தான் இதில் அதீத மகிழ்ச்சியில் இருந்தான் . தான் உயிருக்கு உயிராக விரும்பியவள் மற்றொருவனுக்கு மனைவியாகி விட்டதை எண்ணி வருத்தம் கொண்டவன். பிறகு அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் இத்தனை வருடம் அவளை தேடி அலைந்தவனுக்கு இப்பொழுது தன் உயிரானவள் தன் பக்கத்திலேயே இருப்பதை நினைத்து கடவுளுக்கு நன்றி கூறியவன் அவளை வம்பு இழுக்கும் பொருட்டு அவளை சீண்டிக் கொண்டும், அவள் வீட்டிற்கு சீக்கிரமாக போகமுடியாத படி தன் பக்கத்திலேயே வைத்து அவளுக்கு வேலை கொடுப்பதுமாக இருந்தான் ஆடவடவன்.

இவனின் இந்த செயலும் , இவனின் பாசமான நடத்தையும் பெண்ணவளை அவனின் மீது மேலும் மேலும் அன்பு கொள்ள செய்தாலும் ...'அவனின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும்...நாம் அவருக்கு தகுதியானவர் இல்லை...' என்று நினைத்தவள் தன் மனதை கட்டுப்படுத்த நினைத்தவள்
தன் மனதை மீண்டும் மீண்டும் அவனிடம் பறி கொடுத்துக் கொண்டே வந்தாள் .அவன் பக்கத்தில் இல்லாத போதே அவனின் நினைவுகளில் தவித்தவள் இப்பொழுது அவனில்லாமல் எதுவும் இல்லை.. அவன் இல்லாமல் என் வாழ்வில் ஓர் அணுவும் அசையாது , அவள் இல்லாத வாழ்க்கை எனக்கு அந்த நரகத்திற்கு சமம் .என்றானாள் பேதையவள் ...ஆனால் அதை அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை. முப்பொழுதும் அவனின் நினைவில்லையே வாழ பழகிக் கொண்டாள் அவனின் உயிரானவள்.
இந்த நிலை நிலைக்குமா ...?பார்க்கலாம்.

வினிதா கண்மணியின் வீட்டில் சிறிது நாள் மட்டும் தங்கியவள் அவர்களிடம் சொல்லிக்கொண்டு ஹாஸ்டலில் வந்து தங்கியயவள் ஞாயிறு விடுமுறை அதனால் தாமதமாக எழுந்தவள் குளித்துவிட்டு வர ஒரு பெண் அங்கே வந்தவள்," உங்களை தேடி ஒருத்தவங்க வந்து இருக்காங்க..." எனவும் 'யார் என்று தெரியலையே 'என்று நினைத்தவள் கீழே இறங்கி வந்தாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN