காதல் கணவன் 56

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கேன்டினில் ஓரமாக அமர்ந்து உணவை உண்டுக் கொண்டிருந்தாள் அம்ருதா. கவின் முன்னால் வந்து நின்றான்.

"நான் இங்கே உட்காரலாமா.?"

தயங்கினாள்.

"பிரெண்ட் இல்லையா நான்.?"

"ப்ளீஸ் சிட்."

புன்னகையோடு அமர்ந்தான்.

"நாளைக்கு வெளியே போலாமா, ஒரு பிரெண்ட்லி அவுட்டிங்.?" அவன் கேட்ட நேரத்தில் வெற்றியும் முத்துராமும்‌ அவர்களுக்கு எதிரே இருந்த டேபிளில் வந்து அமர்ந்தனர்.‌ வேறு எங்கும்‌ டேபிள்கள் காலியாக இல்லை. வெற்றி இவர்களின் புறம் திரும்பவும் இல்லை.

அம்ருதாவுக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.

"நாளைக்கு ஏதாவது ப்ளான் இருக்காடா.?" முத்துராம் உணவு பாக்ஸை திறந்தபடி கேட்டான்.

"ம். இருக்கு. நீயும் ஆதிராவும் வரணும்.."

"நாங்க எதுக்கு வெற்றி.?"

"பாரதி நாளைக்கு இங்கே வரா. அவளுக்கு உங்களை அறிமுகப்படுத்தலாம்ன்னுதான்.. வாங்க இரண்டு பேரும்.. எல்லோருமா சேர்ந்து எங்காவது வெளியே போய்ட்டு வரலாம்.."

முத்துராம் சிரிப்போடு நண்பனின் தொடையை தட்டினான்.

"ரொம்ப இனிமையா பேசுறாடா அவ. எனக்கு ரொம்ப‌ பிடிச்சிருக்கு.." என்றவனிடம் "யாரை.?" எனக் கேட்டபடியே அருகில் வந்து அமர்ந்தான் பாலாஜி.

"பாரதியை.. நல்ல பொண்ணா இருக்கா.. ஸ்வீட்டா பேசுறா.. என்னை உடனே அண்ணான்னு கூப்பிட்டுட்டா.. ஐ லைக் ஹேர்.."

"ம். எனக்குதான் பிடிச்சிருக்கு. சோ ஸ்வீட் அப்படிதான் தோணுச்சி. செம இன்னசென்ட். ஆனா இவனுக்கெல்லாம் இவ்வளவு இன்னசென்டான கேர்ளான்னுதான் கொஞ்சம் யோசனையாக இருக்கு.."

தம்பியை முறைத்தான் வெற்றி. "எனக்கு என்னடா குறை.?"

"நீ ஒரு அடங்காத காத்து. அந்த பொண்ணு அநியாய அடக்கம். அதனாலதான் யோசனை.. மத்தபடி வேற எதுவும் இல்ல.."

வெற்றி தம்பியிடம் தன் திருவாயை மலர இருந்த நேரத்தில் போன் ஒலித்தது. எடுத்தான். பாரதிதான் அழைத்திருந்தாள். கோடி மின்னல் வெட்டியது போல பிரகாசம் உண்டானது அவனுக்கு.

"பாரதி.." கொஞ்சமாக குழைந்தான்.

"நான் எங்கே இருக்கேன்னு சொல்லுங்க.."

குழம்பியவன் "உங்க ஊர்ல..?" எனக் கேட்டான்.

"நோ.. லெப்ட்ல திரும்பிப் பாருங்க.."

போனில் அவள் சொன்னது மற்ற இருவருக்கும் கூட கேட்டிருந்தது. மூவரும் ஒரு சேர திரும்பிப் பார்த்தனர். பாரதி கேன்டின் வாசலில் நின்றிருந்தாள்.

"அண்ணி இங்கே வந்திருக்காங்க. நீ நாளைக்குதானே வருவாங்கன்னு சொன்ன.?" அண்ணனிடம் கோபமாக கேட்டான் பாலாஜி.

"டேய் அவ சர்ப்ரைஸ் தர நினைச்சி ஒரு நாள் முன்னாடியே கிளம்பி வந்திருக்கா போல.."

மேஜையை நோக்கி வந்த பாரதி பின்னால் அமர்ந்திருந்த அம்ருதாவை கண்டதும் முகம் மாறினாள். ஜீவனை தொலைத்தது போல கறுத்து போனது. வெற்றி ஒன்றிரண்டு முறை தன் முன்னாள் காதலியின் புகைப்படத்தை இவளுக்கு காட்டி இருக்கிறான். வங்கியில் இருப்பாள் என்று அவளுக்குமே தெரியும். ஆனால் பக்கத்து மேஜையில் அமர்ந்து உணவு உண்ணுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

"வாங்க சிஸ்டர்.. உட்காருங்க.." தன் அருகில் இருந்த நாற்காலியை காட்டினான் முத்துராம்.

"ஹாய் அண்ணா.. ஹாய் மச்சினரே.." கையசைத்தபடி வந்து அமர்ந்தவளை பார்த்து தலையசைத்த வெற்றி "சொல்லாம வந்திருக்க.. வீட்டுக்கு போனியா இல்லையா.?" எனக் கேட்டான்.

"வளர்மதி அத்தையையும் பாட்டியையும் பார்த்துட்டுதான் வந்தேன்.." என்றவளின் கண்கள் செல்லும் திசையை கண்டுவிட்டு தனது உணவில் பாதியை நகர்த்தி வைத்தான் வெற்றி.

"சாரி.. உங்களை பார்க்க வர அவசரத்துல சாப்பிடல.." வெட்கம் பூசிய கன்னங்களோடு உணவை உண்ண ஆரம்பித்தாள்.

அம்ருதாவின் முகத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தான் கவின். பொறாமை தென்படுகிறதா என்று கவனித்தான். அம்ருதா தலையை கூட நிமிராமல் அமைதியாக உண்டுக் கொண்டிருந்தாள்.

சற்று நேரம் கழித்து வந்து சேர்ந்தாள் ஆதிரா. பாலாஜிக்கும்‌ பாரதிக்கும் இடையில் வந்து அமர்ந்தவள் "சாரி. கொஞ்சம் வொர்க் ஓவர்.." என்றாள். பாரதியை‌ கண்டு புருவம் சுருக்கினாள்.

"இவங்க.?" முத்துராமிடம் கேட்டாள்.

"பாரதி. வெற்றியோட லவ்வர், பியான்சி.." அறிமுகம் செய்து வைத்ததும் கை கூப்பினாள்.

"ஹாய் சிஸ்டர் நான் ஆதிரா. முத்துராம் சாரோட பிரெண்ட்.." என்றாள்.

சுற்றி அமர்ந்திருந்த மற்ற இரு ஆண்களும் அவளை ஏற்ற இறக்கமாக பார்த்தனர். அனைவரும்தான் அவளுக்கு நண்பர்கள். ஆனால் முத்துராமை மட்டும் சொல்லி இருக்கிறாளே என்று காய்ந்தனர் இருவரும். இதற்கு காதலி என்றே கூட சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது அவர்களுக்கு.

பாரதியும் ஆதிராவும் நொடியில் நட்பாகி கைபேசி எண்களை பரிமாறிக் கொண்டனர்.

அனைவருக்கும் முன்னால் அம்ருதா எழுந்து போனாள். செல்பவளை ஓரக்கண்ணால் வெறித்தாள் பாரதி. மனதில் உண்டான பொறாமையை அவளால் தன்னிடமே பொய் சொல்லி மறைத்துக் கொள்ள முடியவில்லை.

மாலையில் தனது வீட்டின் கதவை திறந்தான் சக்தி. கல்லூரி பையை ஹாலின் நாற்காலியில் வைத்தான். சின்ன வீடு. ஒரு ஹாலும் ஒரு படுக்கையறையும்தான் இருந்தது. ஹாலிலேயே ஓரத்தில் ஒரு சமையல் மேடையும் மறு ஓரத்தில் குளியலறையும் கழிவறையும் இருந்தன.

சமையல் மேடையில் இருந்த ஒற்றை குடத்தில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை மொண்டு குடித்தான். இந்த வாழ்க்கை வேண்டுமா என்று தோன்றினாலும் கூட அவளுக்கு புத்தி வரும்வரை தான் இப்படி இருப்பதே சரியென்று தோன்றியது அவனுக்கு.

இரவு சமையலுக்கு என்ன செய்வது என்ற யோசனையோடு இருந்தவன் கதவு திறக்கப்படும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தான். கனிமொழி சிவந்த கண்களோடு உள்ளே வந்தாள்.

"இங்கே எதுக்கு வந்த.?" கத்தலாக கேட்டான்.

"வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க மாமா.." என்றாள் சட்டென்று உதித்த கண்ணீரோடு.

அவளை வெறித்துப் பார்த்தான்.

"நல்லதுதானே.?"

"மாமா ப்ளீஸ்.."

"உன் உடம்போட திமிரு அடங்கவாவது உனக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கிறதுதான் கரெக்ட்.."

விம்மல் ஒன்று புறப்பட்டது.

"அப்படி சொல்லாதிங்க மாமா.. தப்பா பேசாதிங்க.." என்றாள் நிற்காத கண்ணீரை துடைத்தபடி

"தப்பாதான் பேசுவேன்.. ஏனா உனக்கு அந்த திமிர்தானே.?" வார்த்தைகள் முழுக்க வன்மமாக இருந்தது அவனிடம்.

அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதை தாண்டியும் எதையும் செய்ய முடியவில்லை‌.

"நான் அந்த மாதிரி எதுவும் எதிர்பார்க்கல மாமா. உங்க மேல நான் வச்சிருக்கும் காதலை தப்பா நினைக்காதிங்க.." என்றவள் தயக்கத்தோடு அவனருகில் சென்றாள்.

"வீட்டுல பேசுங்க‌ மாமா. நீங்க சொன்னா அந்த கல்யாணம் நின்னுடும். இல்லன்னா நீங்களே கூட கல்யாணம் பண்ணிக்கங்க. உங்களை விட்டுட்டு வேற யாரையும் என்னால புருசனா நினைச்சி பார்க்க முடியாது மாமா.." என்று கெஞ்சியவள் சட்டென்று அவனின் காலில் விழுந்தாள்.

"மரியாதையா என்னை விடு.." நகர முயன்றான். ஆனால் அவள் கால்களை விடவில்லை.

"எப்படியாவது இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்துங்க.. என்னை ஏத்துக்க சொல்லி கூட நான் உங்ககிட்ட கேட்கல. ஆனா வேற யார் கூடயும் என்னை ஜோடி சேரும்படி பண்ணிடாதிங்க. ப்ளீஸ்.." கெஞ்சினாள். அழுதாள். கதறியபடி கேட்டாள்.

தலையை பிடித்தான் சக்தி.

அமர்ந்தான். அவனின் கைகளை விலக்கினான்.

"பாப்பா உனக்கு பேய் பிடிச்சிருக்கு. பைத்தியம் பிடிச்சிருக்கு. இந்த கல்யாணம் அதை எல்லாம் சரி பண்ணும். கண்டிப்பா உனக்கேத்த ஒருத்தனைதான் வீட்டுல பார்ப்பாங்க. அக்கா இருக்கும்போது உனக்கு கல்யாணம் பண்றாங்க. காரணம் என்ன? நீதான். உன் செயல் மட்டும்தான் காரணம்.. படிக்கற வயசுல படிக்கணும். லவ்வுன்னு இருக்க கூடாது.." என்றவன் அவளின் கையை பிடித்து எழுப்பினான்.

"மாமா உங்க மனசு உண்மையாவே கல்லுதானா.? என் பீலிங்ஸ் கொஞ்சம் கூடவா புரியல. என் கண்கள் காட்டும் காதலை உங்களால உணரவே முடியலையா.? நீங்க விரட்டும் ஒவ்வொரு முறையும் நெஞ்சு வெடிக்கற மாதிரியே இருக்கு. ஒரு நிலைக்கு வந்த பிறகு என் காதலை சொல்லி இருந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன்‌. அவசரப்பட்டு, ஆர்வ கோளாறுல நீங்களும் என்னை திருப்பி லவ் பண்ணுவிங்கன்னு நினைச்சி காதலை சொல்லிட்டேன். அதுக்காக இவ்வளவு பழி வாங்காதிங்க.."

அவள் சொன்னதை காதில் ஏற்றிக் கொள்ளாமல் இழுத்து வந்து வெளியே தள்ளினான்.

"வீட்டுக்கு போ. மறுபடி எப்போதும் இங்கே வராதே.."

கதவை அறைந்து சாத்தினான்.

"மாமா.." அவளின் அழுகை குரலை கேட்டுவிட்டு கதவரோத்திலேயே நின்றான்.

'ஏன் பாப்பா உன்னை கஷ்டப்படுத்திக்கிட்டு என்னையும் சேர்த்து கஷ்டப்படுத்துற.?'

"என்னை துரத்தி விடுறதுக்காக நிச்சயம் நீங்க பீல் பண்ணுவிங்க மாமா.." அங்கிருந்து கிளம்பினாள்.

இரவு கீர்த்தனாவின் அறையில் இருந்தாள் பாரதி. அவளுக்காக அந்த அறையை ஒதுக்கி தந்திருந்தார்கள்.

வீட்டில் இருந்த அனைவருக்கும் அவளை பிடித்திருந்தது. அவளுக்கும் அனைவரையும் பிடித்திருந்தது.

வெற்றி தனதறையில் இருந்தான். பாரதியின் இடத்தில் ஒருவேளை அம்ருதா இருந்திருந்தால் அவளை தனியாய் உறங்க விட்டிருக்க அவனால் முடியாது. இப்போது இருக்கும் அறிவு முன்பே இருந்திருக்கலாம் என நினைத்தான்.

"தண்ணீர்ம்மா.." தண்ணீர் பாட்டிலை மேஜையில் வைத்து விட்டு போனாள் அர்ச்சனா.

"தேங்க்ஸ்ம்மா.." பாரதி சொன்னது கேட்டு அர்ச்சனாவுக்கு மனம் குளிர்ந்தது.

அம்ருதாவோடு ஒப்பிட்டு பார்க்காமல் இருக்கவே முடியவில்லை‌ யாராலும்.

பாரதி மன நிறைவோடு படுக்கையில் விழுந்தாள். இந்த வீட்டிற்கு மருமகளாய் வரும் நாளை எண்ணி கனவு காண ஆரம்பித்தாள்.

உறங்க முயன்றவளின் போன் ஒலித்தது. புது எண். எடுத்து காதில் வைத்தாள்.

"ஹலோ.."

"ஹலோ நான் அம்ருதா. உன் பியான்ஸியோட எக்ஸ் லவ்வர்.."

பாரதி குழப்பத்தோடு போனை பார்த்தாள். இவன் ஏன் அழைத்தாள் என்று கடுப்பானாள்.

"அவனை கல்யாணம் செஞ்சிக்காதிங்க.. அவன் ஒரு சைக்கோ.."

"வார்த்தையை பார்த்து பேசுங்க. நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும் பண்ண கூடாதுன்னு நீங்க சொல்லாதிங்க.." என்றாள் எரிச்சலோடு. பொறாமையோடு சேர்த்து இப்போது ஆத்திரமும் வந்தது.

"அவனோடு லவ்வுல இருந்தவ நான். அவனை பத்தி அக்குவேர் ஆணிவேரா தெரியும் எனக்கு. அவன் எந்த பொண்ணுக்குமே தகுதி இல்லாதவன். ஆளை பார்த்து, அவன் முகத்தை பார்த்து ஏமாந்து போயிடாதிங்க.." எச்சரித்தாள்.

பாரதிக்கு உடம்பிலிருந்து மொத்த ரத்தமும் எரிமலை குழம்பாக மாறி கொதித்தது.

"தயவு செஞ்சி போனை வைங்க. இனி எப்பவும் எனக்கு போன் பண்ணாதிங்க. நான் அவரை ரொம்ப லவ் பண்றேன். உங்களுக்கு புரியாது எதுவும். அவரை பிரேக்அப் பண்ணிட்டத்துக்கு தேங்க்ஸ்.." பாரதி இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

ஆத்திரமாக வந்தது. இதை வெற்றியிடம் சொல்வதா வேண்டாமா என்று குழம்பியவள் ரகசியம் காக்க முடியாமல் மறுநாள் சொல்லி விட்டாள்.

வெற்றிக்கு பழைய கோபம் உச்சிக்கு ஏறியது.

திங்கள் கிழமை.. அம்ருதா தனது காரிலிருந்து கீழே இறங்கினாள். இறங்கியவளின் தோளில் பதிந்தது வெற்றியின் கரம்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN