காதல் கணவன் 62

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Sorry for this epi..

அம்ருதா என்ன சொல்வாள் என்று காத்திருந்தான் வெற்றி. அவள் மௌனம் மட்டுமே காத்தாள்.

"ஏன் என்னை உனக்கு பிடிக்கல அம்மு.. நிறைய பசங்களை சைட் அடிக்க ஆசை, என்னை பிடிக்கலன்னு நிறைய காரணம் சொன்ன. ஆனா என்னால எதையும் நம்ப முடியல அம்மு. என்னை அப்படி காதலிச்சியே. நீ ரொம்ப நல்ல பொண்ணு அம்மு. எனக்கு தலைவலி வந்தா கூட துடிச்சி போவ. நீயாதான்டி பல நாள் என்னை தேடி வந்த.. நான் கோபப்பட்டு விலகி போனா கூட என் கையை பிடிச்சி சாரி சொல்லி நீயாவே லவ் பண்ணுவியே. ஏன் திடீர்ன்னு இப்படி.."

வெற்றி பேசியது கேட்டு எரிச்சலானவள் "தயவு செஞ்சி நம்பு. எனக்கு உன்னை பிடிக்கல.." என்றாள் கத்தாத குறையாக.

"அதுதான் ஏன் பிடிக்கல. எனக்கு புரியல.."

தலையை பிடித்தவள் "சைக்கோ மிருகத்தை யாருக்குமே பிடிக்காது.." என்றாள். அவள் அவனின் குணத்தை பற்றி யோசிக்க விரும்பவில்லை. இவ்வளவு நேரம் இருந்த சூழல் மாறி போனது போலிருந்தது அவளுக்கு. மனம் முழுக்க எரிச்சலும் ஆத்திரமும் மட்டும் கூடியது.

"சைக்கோ மிருகம் நானா.?" நகைத்தபடி கேட்டவனுக்கும் சூழல் மாறி விட்டது. ஆத்திரமும் கோபமும் நொடியில் உருவாகி விட்டிருந்தது. அதை விட முக்கியமாக கோபம் வந்திருந்தது. கண்ணை மறைக்கும் கோபம் மட்டுமல்ல மூளையையும் மழுங்கடிக்கும் கோபம் பீடித்து இருந்தது.

தெரிந்தோ தெரியாமலோ கூட அவள் இந்த வார்த்தையை சொல்லி இருக்க கூடாது.

"சைக்கோ மிருகம் என்ன செய்வான்னு உனக்கு தெரியுமா.?" விளக்க முடியாத ஒரு குரலில் கேட்டான்.

அவனின் முகத்தை பார்க்காமல் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தவள் கொஞ்சமேனும் தலை உயர்த்தி கவனித்திருக்கலாம். பிறகாவது எச்சரிக்கையாகி இருப்பாளோ என்னவோ?

"சைக்கோவை சைக்கோன்னுதானே சொல்வாங்க.. கொலைக்கார சைக்கோ மிருகம்.." கோபத்தில் பற்களை அரைத்தவளின் தாடையை இறுக்கி பிடித்தது அருகிலிருந்தவனின் கரம்.

நிமிர்ந்தவள் நொடியில் நடுங்கி போனாள். பயம் உடம்பு முழுக்க பரவியது.

"என்னை தொடாதே.." அவனின் கையை அடித்து தள்ளி விட்டாள்.

"சைக்கோ மிருகம் உன் பேச்சை கேட்காது அம்மு.." அரைத்த பற்களின் இடையே கடித்து துப்பப்பட்ட வார்த்தைகள் அவை. அவன் இப்போது மனித நிலையிலேயே இல்லை என்பதை தாமதமாகதான் புரிந்துக் கொண்டாள்.

"சைக்கோ இப்படிதான் கழுத்தை நெரிப்பான்.." என்று கையை கொண்டு வந்தான்.

சப்பென்று ஒரு அறையை விட்டாள்.

"என் பக்கத்துல வராதே.."

கன்னத்தை பிடித்தவன் நகைத்தான். அந்த நகைப்பின் பின்னால் எக்கச்சக்கமா வில்லத்தனம் இருந்தது. கண்கள் கோபத்தால் சிவந்துக் கொண்டே போனது.

"பக்கத்துல வர கூடாதுன்னு நீ சொல்ல கூடாது.." உதட்டை ஒரு பக்கமாக கடித்துக் கொண்டு சொன்னவன் அவளின் கன்னத்தில் கையை பதித்தான்.

அவனின் கையை தள்ளி விட்டவள் "என்னை தொடாதே. லாஸ்ட் வார்னிங்.. இல்லன்னா நடக்கிறதே வேற.." என்று சீறினாள்.‌‌ இதயம் படபடவென அடித்துக் கொண்டது அவளுக்கு.

"என்ன நடக்குதுன்னு நானும் பார்க்கறேன்.." அவளை நெருங்கியவன் பின்னலோடு சேர்த்து அவளின் பின்னந்தலையை பற்றினான்.

பளீரென்று இன்னொரு அறையை விட்டாள்.

"என்னை தொடாதன்னு சொல்றேன் இல்ல சைக்கோ.." பற்களை கடித்தபடி மீண்டும் மீண்டும் அறைந்தாள். ஏழெட்டு அறைகளுக்கும் மேல் விழுந்திருக்கும்.

அதன் பிறகும் தந்திருப்பாள். ஆனால் அவனின் மிருக குணம்தான் இரண்டு மடங்காகி விட்டது. சூழல் மறந்து போனவனுக்கு அவள் சொன்ன சைக்கோ என்ற வார்த்தை மட்டுமே மூளை முழுக்க ஒலித்துக் கொண்டிருந்தது. சில மாதங்களாக அவனை தீண்டிடாத அந்த கோபம் இன்று வந்திருந்தது. பாலாஜியை அடிச்சி துவைக்கும்போது உண்டாகும் அதே கோபம் இப்போது வந்திருந்தது.

அடித்துக் கொண்டிருந்தவளின் இரு கைகளையும் பிடித்தான். பற்களை அரைத்தான். சிவந்த கண்களோடு அவளை சுவரோடு சாய்த்தவன் தனது அதே சட்டையால் அவளின் கைகளை கட்டினான்.

பயத்தில் உறைந்தவள் திமிற முயன்றாள். ஆனால் அதற்கு முன்பே கைகள் கட்டப்பட்டு விட்டது. வெளுத்து போன முகமும், நடுங்கும் இதயமுமாக அவனைப்‌ பார்த்தாள்.

"சைக்கோ கொலைக்காரா என் கை கட்டை கழட்டி விடுடா.." கத்தியவளின் குரல் அவனின் மூளையில் ஏறவேயில்லை.

"சைக்கே நான். கொலைக்காரன் நான்.‌ மிருகம்‌ நான்.." கத்தி சொன்னவன் அவளின் மேலாடையை பிடித்து இழுத்தான்.

என்ன நடக்க இருக்கிறது என்பது அதன் பிறகே அவளின் புத்தியில் உறைத்தது.‌

"வெற்றி வேணாம்.. ப்ளீஸ்.." என்றவளின் கெஞ்சலை கண்டு நகைத்தான்.

"எந்த சைக்கோவும் ப்ளீஸ்க்கு விட்டுப் போக மாட்டான்.." அவன் அவளை விட்டு விலகவேயில்லை.

"என்னை சாகடிக்கணும்ன்னு உனக்கு ஆசையா இருந்தா என் கழுத்தை கூட அறுத்துப் போடு. ஆனா இப்படி செய்யாதே.. ப்ளீஸ்.." கோபத்தை விட்டுவிட்டு கெஞ்சினாள்.

அவளின் இதழில் தன் இதழை பதித்தான்.

தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டினாள். அவனின் காலுக்கு கீழே சிக்குண்டு போன தனது கால்களை விடுவித்து கொள்ள முயன்றாள்.

கோபம் மட்டுமே இருந்த முகத்தில் இப்போது கண்ணீரும் இடம் பிடித்தது.

கண்ணீரையும் கண்டுக் கொள்ளாமல் அவளின் கழுத்தில் இதழை பதித்தான்.

"எனக்கு உன்னை பிடிக்கல வெற்றி. என்னை விட்டுடு. பிடிக்கலன்னு சொல்ற ஒருத்தியை தொடுறது தப்பு. சத்தியமா உன்னை பிடிக்கல.."

கழுத்திலிருந்து நகர்ந்து தோளுக்கு சென்றது அவனின் இதழ்கள்.

"உனக்குன்னு பியான்ஸி இருக்கா. அவளுக்காவது துரோகம் செய்யாம இரு. என்னை விடு.." கதறலாக கேட்டாள்.

"என்னை காதலிக்கிறேன்னு சொல்லி நம்ப வச்சி ஏமாத்திய நீ துரோகத்தை பத்தி பேசாதே.." இடையோடு இறுகிய அவனின் கைகளும், கழுத்தோடு பதிந்து விட்ட அவனின் இதழ்களும் அவளுக்கு நரகத்தை நினைவுப்படுத்தின.

"ப்ளீஸ் விடுடா.." கட்டி வைக்கப்பட்டிருந்த கரங்களால் அவனை விலக்கி தள்ள முயன்றாள்.

"என்னோட இத்தனை மாச வலியை நான் என்னோடு புதைச்சிக்கதான் இருந்தேன். ஆனா நீதான்டி என்னை சைக்கோவா மாத்திட்டு இருக்க.." கோபத்தோடு சொன்னான்.

"சைக்கோவை சைக்கோன்னுதான் சொல்வாங்க.. என்னை விடுடா.."

திமிறியவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டான். அவளின் பற்கள் இதழில் மோதி காயம் உண்டாகி ரத்தம் கசிந்தது.

"சைக்கோதான்டி நான்.."

சக்தி பரிமாறிய உணவை குறை சொல்லாமல் உண்டாள் கனிமொழி. அவளுக்கான மாத்திரைகளையும்‌ தந்தான்.

"நாளைக்கு காலேஜ் வரலாமா மாமா.?"

அவளின் கால் காயத்தை பரிசோதித்தவன் "சரி வா பாப்பா.. ஆனா ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத.." என்றான்.

சரியென்று தலையசைத்தாள். அவளின் தலையை வருடி விட்டான்.

"என் மேல கோபமா மாமா.?" தயங்கி கேட்டாள்.

"இல்ல கனி.."

"பொய் சொல்றிங்களா.? நீங்க சொல்ல சொல்ல கேட்காம உங்களை கட்டாயப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன். ஆனா உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா.. நிச்சயம் உங்களுக்கும் ஒருநாள் என்னை பிடிக்கும்.." நம்பிக்கையாக சொன்னவளை மறுத்து எதுவும் சொல்லவில்லை அவன்.

"காலேஜ்ல நமக்கு மேரேஜ் ஆச்சின்னு தெரிய வேணாம் கனி.." தயங்கி சொன்னான்.

"சரி மாமா.." உடனே ஒத்துக் கொண்டாள்.

"குட் நைட்.." ஹாலில் அதே வழக்கமான இடத்தில் போர்வையை விரித்தான்.

அவனை பரிதாபமாக பார்த்தாள்‌ கனிமொழி. தரையில் தூங்கி பழகிடாதவன் அவன். நேற்று இரவும் உறங்காமல் புரண்டுக் கொண்டே இருந்தான். அவன் தனக்காக சிரமப்படுவது கண்டு வருந்தினாள்.

"நான் வேணா கீழே தூங்கிக்கிறேன் மாமா.." பொறுக்க முடியாமல் சொன்னாள்.

"இல்ல கனி. நீ தூங்கு. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.." என்றவன் அவள் உறங்கிய பிறகு எழுந்து சுவரோடு சாய்ந்து அமர்ந்தான்.

இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் எப்படியும் யாருடனாவது காதலில் விழுந்து விடுவாள். அப்போது அவளாகவே விவாகரத்து கேட்பாள். அதுவரை கொஞ்சமாக பொறுத்து போகலாம் என்று நினைத்தான்.

கண்ணீர் இன்னமும் வழிந்துக் கொண்டே இருந்தது அம்ருதாவுக்கு. சாவே பரவாயில்லை எனும் அளவிற்கு இருந்தது உடலின் ரணம். அசையவும் முடியவில்லை. இப்படி ஒரு சூழலில் தான் மாட்டியிருக்க வேண்டாம் என்று விரும்பினாள்.

வெற்றி இன்னமும் அவளை விட்டிருக்கவில்லை. அவளுக்கே உடம்பு மரத்து போய் விட்டது.

அவனின் மிருக வேட்டை முடியாமலேயே போய் விடுமோ என்று தோன்றியது அவளுக்கு.

"கையாளாக நிலையில் இருக்கும் ஒருத்தியை ரேப் பண்றதுதான் நீ கத்துக்கிட்டதா.? அது சரி. ஒரு சைக்கோக்கிட்டயிருந்து வேறு என்னத்தை எதிர் பார்க்க முடியும்.?" அழுது வறண்ட குரலில் முனகினாள்.

அவனுக்குதான் சைக்கோ என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் காதில் ஏறவில்லை.

"உன்னை லவ் பண்ணது தவிர வேற எந்த பாவமும் செய்யல நான். அந்த பாவத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையா.?" அவனின் முகம் பார்க்க பிடிக்கவில்லை அவளுக்கு. இமைகளை அரையாய் மூடி கூரையை பார்த்துக் கொண்டிருந்தவள் அவனின் கை விரல் நகங்கள் தன் இடுப்பில் இறங்கிய வலியை உணர்ந்து பற்களை கடித்தாள்.

நொடிகள் எல்லாமே யுகமாகதான் நகர்ந்தது. இன்றைய நாளோடு வாழ்வே முடிந்து விடுமோ என்று கூட பயந்தாள். இதயத்தின் துடிப்பு மிகவும் குறைந்துப் போய் விட்டிருந்தது.

கொடூரமாகதான் இருந்தது அவனோடு இருந்த ஒவ்வொரு நொடியுமே.

நடு இரவு தாண்டிய நேரத்தில் அவள் அருகில் விழுந்தான் வெற்றி. மயங்கி‌ கிடந்தவளை கண்டவனுக்கு எதுவுமே தோன்றவில்லை. சிறு திருப்தி மட்டும் தோன்றியது போலிருந்தது. அந்த திருப்தி என்னவென்றுதான் அவனுக்கே தெரியவில்லை. பழி வாங்கிய திருப்தியா இல்லை பல மாதங்களுக்கு பிறகு அவளை நெருங்கியதா என்று புரியவில்லை. அவன் புரிந்துக் கொள்ள நினைக்கவில்லை.

அவளின் ஆடைகளை சரி செய்தான்.

"இதுக்கு மேலாவது உன்னை மறந்துட்டு நான் நிம்மதியா இருக்கணும்.." என்றபடியே கண்களை மூடினான்.

காலையில் அம்ருதா கண் விழித்தபோது அவனின் கைகளில் இருந்தாள். சிரமத்தோடு கவனித்தாள். அவன் எங்கோ தூக்கிச் சென்றுக் கொண்டிருந்தான்.

"என்னை விடு.." அழுது வறண்ட தொண்டையிலிருந்து வார்த்தைகள் வெளி வர மறுத்தது.

"உன்னை வெளியே கூட்டிப் போறேன்.."

"என்னை விடு.." கெஞ்சினாள்.

ஆனால் போராட முடியவில்லை. கைகள் சுதந்திரமாக இருந்தும்‌ கூட அசைய மறுத்தன. உடம்பின் எந்தவொரு செல்லையுமே உணர முடியவில்லை அவளால். அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறும் முன்பே மீண்டும் மயங்கி விட்டாள்.

மாலை நேரத்தில் மறுபடியும் கண் விழித்தாள். அவள் அறையில் இருந்தார்.

"நீ என்ன பெரிய சி‌.ஐ‌.டி போலிசா.? ரவுடி பசங்களை பிடிக்க போய் கால்ல ஆணியை ஏத்தி வச்சிட்டு வந்திருக்க.. நல்லவேளை வெற்றி மச்சி வந்து சேர்ந்திருக்காரு. இல்லன்னா அந்த பொறுக்கிங்க கையில் கிடைச்சி நாசமாகி இருப்ப.." என்று திட்டினான் ஆரவ்.

"அந்த ரவுடிங்ககிட்டயே நாசமாகி இருக்கலாம்.." முனகியவள் தன் காலை பார்த்தாள். காலில் கட்டு இருந்தது. உடை அதுவேதான் இருந்தது. இரவின் நினைவு வந்ததும் உடம்பை குறுக்கியவள் முகத்தை பொத்தியபடி கண்களை மூடினாள். உள்ளங்கை கண்ணீரால் நனைந்தது.

வெற்றியை அளவுக்கு அதிகமாக வெறுத்தாள் இப்போது.

"இப்ப எதுக்கு அழற.? வெற்றி மச்சியோட போன் சிக்னல் மூலமா போலிஸ் அந்த ரவுடியை பிடிச்சிட்டாங்களாம். இப்பதான் மச்சி போன் பண்ணி சொன்னாரு. உன் மேல எந்த புகாரும் தர போறது இல்லன்னு சொன்னாரு. அவர்தான் அந்த குடோனை விட்டு வெளியே வந்ததும் போன் ஓசி வாங்கி ஆம்புலன்ஸ்க்கு கூப்பிட்டு உனக்கு கால் கட்டு போட்டு உன்னை இங்கேயும் கொண்டு வந்து விட்டிருக்காரு.." என்று பேசி கொண்டே போனான்.

கழுத்தோடு இருந்த பெட்சீட்டை கைகளால் இறுக்கினாள் அம்ருதா. கண்ணீர் நிற்க மறுத்தது. கோபம் உள்ளுக்குள் உண்டாக வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் பயமும் தன் மீதான வெறுப்பும், வாழ்வின் மீதான வெறுப்பும்தான் அதிகம் இருந்தது.

***
ஒலித்த கைபேசியை எடுத்தாள் பாரதி.

"உன்கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும் பாரதி.." என்றான் வெற்றி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN