காதல் கணவன் 64

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுப்ரியா உள்ளே வந்தாள். கனிமொழியை கவனிக்காதவள் முதல் வரிசையில் அமர்ந்தாள்.‌ அவளின் பின்னால் வந்த வசந்த் குமார் உள்ளே நுழைந்த முதல் நொடியிலேயே கனிமொழியை கண்டு விட்டான். விசிலடித்தபடி சென்று தன் இருக்கையில் அமர்ந்தான்.

"ஹாய் கனிமொழி. நீயும் இந்த காலேஜ்தானா.?" வசந்த் குமாரின் கேள்வியில் படக்கென்று திரும்பினாள் சுப்ரியா. கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த கனியை கண்டு கோபத்தில் முகம் சிவந்தவள் 'ஆளை விட்டு மிரட்டுறியா? இருடி உனக்கு கச்சேரி இருக்கு.!' என்று மனதுக்குள் புகைந்தாள்.

வசந்த் குமாருக்கு பதில் சொல்லாமல் புத்தகத்தை பிரித்து பார்வையை செலுத்தினாள் கனிமொழி. ஆனாலும் கூட சுப்ரியாவின் பார்வையை ஓரக்கண்ணால் பார்த்தவளுக்கு பயம் கூடிக் கொண்டே சென்றது.

சக்தியின் அருகாமை எனும் சொர்க்கத்தை அனுபவிக்கலாம் என்றிருந்தவளுக்கு இந்த கல்லூரி சகாக்களின் அருகாமை நரகம் போல தோன்றியது.

எதையும் அனுபவிக்க இயலாமல் போய் விடுமோ என்ற கவலையோடு இருந்தவள் வகுப்புக்குள் நுழைந்த விஜிதா‌வை கண்டதும் நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்.

"ஹாய் ஸ்டூடன்ட்ஸ்.." என்றாள் பேராசிரியை விஜிதா.

"எல்லா நேரத்திலும் சக்தி சாரே வந்தா ஆகும்.." முனகினாள் சுப்ரியா. பேராசிரியையின் செவிகளில் விழும் அளவிற்கு முனகியிருந்தாள்.

விஜிதா அவளை முறைத்தாள். புத்தகத்தை எடுத்து வைத்து நாற்காலியில் அமர்ந்தவள் பாடத்தை நடத்த ஆரம்பித்தாள்.

இளவயது பேராசிரியையாக இருந்த விஜிதாவை யாரும் அறியாத வண்ணம் ரசித்துக் கொண்டிருந்தான் வசந்த்குமார்.

கனிமொழியையும் அவ்வப்போது திரும்பிப் பார்த்தான் வசந்த்குமார். அவளிடமும் ஏதோ ஒரு மாற்றம் இருப்பது போலிருந்தது அவனுக்கு. ஆண் மரம் போலில்லாமல் பெண் வாசம் வீசும் பூச்செடியை காண்பது போல கண்டான்.

***

பாரதியே வெற்றிக்கு கைபேசியில் அழைத்தாள்.

"ஹலோ.." குரல் வெளிவரவே இல்லை அவனுக்கு. முட்டிக்காலை கட்டியபடி தன் அம்மாவின் கல்லறையின் பின்னால் முதுகு சாய்ந்து அமர்ந்திருந்தான்.

"ரொம்ப டென்ஷனா இருக்கிங்களா வெற்றி.? நான் வேணா அப்புறமா கூப்பிடட்டா.?" பொறுமையான குரலில் கேட்டாள்.

அவள் பேசும்போதே தனது கோபம் குறைவதை உணர்ந்தான் வெற்றி.

"பேசலாம் பாரதி.." என்றவனின் குரல் முன்பை விட மாறியிருந்தது.

"என்ன சொன்னா அவ.?"

அவள் அம்ருதாவை 'அவங்க' என்று விளித்திருக்கலாமோ என்று யோசித்தான். இருந்தாலும் அதை மனதோடு புதைத்துக் கொண்டான்.

"என்னை கல்யாணம் செஞ்சிக்க இஷ்டம் இல்லன்னு சொல்லிட்டா.."

பாரதி நிம்மதி பெருமூச்சு விட்டது இவனுக்கே கேட்டது. இருந்த கவலையெல்லாம் மறந்து புது புன்னகை இதழில் அரும்பியது.

"நான் என் அப்பாக்கிட்ட பேச போறேன்.." பாரதி சொன்னது புரியவில்லை அவனுக்கு.

"என்ன பேச போற.?"

"நமக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்க சொல்ல போறேன்.." அவள் சொன்னது கேட்டு கலகலவென சிரித்தான்.

"அவ்வளவு இஷ்டமா பாரதி என் மேல.!?" அவனுக்கே இந்த விசயம் புரியவில்லை. தான் உருகி உருகி காதலித்த, தன்னை உருகி உருகி காதலித்த அம்ருதாவே தன்னை தூக்கி எறிந்து விட்டு சென்ற பிறகு, சமீபத்தில் அறிமுகமான இவள் தன் மீது இவ்வளவு காதல் கொண்ட மாயம் என்னவென்று யோசித்து மாய்ந்தான். ஆனால் எவ்வளவு யோசித்தும் காரணம்தான் அகப்படவில்லை.

"ரொம்ப இஷ்டம்.." என்றவளை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று முதன் முறையாக தோன்றியது அவனுக்கு.

"சொல்லு பாரதி. சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம். நானும் வீட்ல பேசுறேன்.." என்றவன் அம்மாவின் கல்லறை மீது தலையை சாய்த்தான். மனதுக்குள் புது பட்டாம்பூச்சி ஒன்று பறக்க ஆரம்பித்து இருந்தது.

***

சக்தி வகுப்பறைக்குள் நுழைந்த பொழுதிலேயே கனிமொழி அமரும் இடத்தைதான் கவனித்தான். இயல்பாய் அரும்பிய புன்னகையோடு இவனை பார்த்தாள் அவள். இவனுக்கும் கூட அதே புன்னகைதான் பூத்திருந்தது. இருவருக்கும் இடையில் இருந்த அதே பழைய பாசம் வெகுநாட்களுக்கு பிறகு வந்திருந்தது போலிருந்தது.

"சார் நீங்க மூனு செகண்ட் லேட்டா வந்திருக்கிங்க.." என்றாள் சுப்ரியா பல்லை இளித்தபடி. சம்பந்தமே இல்லாவிட்டாலும் கூட அவனிடம் எதையாவது பேச வேண்டும் அவளுக்கு. அவனின் கவனத்தை எப்போதும் தன் புறமே வைத்திருக்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவளுக்கு பதிலை சொல்லாமல் புத்தகத்தை விரித்தான்.

வழக்கம் போல பாடத்தை நடத்த ஆரம்பித்தான். இவனும் முதல் பாடத்தை முடித்திருந்தான். இரண்டாம் பாடத்தைதான் படிக்க முடிந்தது கனிமொழியால். ஆனாலும் வீட்டில் கேட்டால் அனைத்தையும் அவன் சொல்லி தந்து விடுவான் என்ற நம்பிக்கையில் பாடத்தை கவனிக்க ஆரம்பித்தாள்.

அவனின் கண்களையும் தன் புத்தகத்தையும் தவிர வேறு எங்குமே பார்க்க முடியவில்லை கனிமொழியால். கனவோ என்ற அச்சத்தோடு அடிக்கடி சுடிதாரின் கழுத்தோரங்களை தொட்டுப் பார்த்தாள். தாலி அவளின் சந்தேகத்தை போக்கிக் கொண்டிருந்தது.

சுப்ரியா அடிக்கடி கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் கேள்வி கேட்ட ஆர்வம் கண்டு கனிமொழிக்கே ஆச்சரியமாக இருந்தது.

வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் மதிய உணவிற்கு கிளம்பினர். சுப்ரியா தனது பேக்கை எடுத்துக் கொண்டு சக்தியிடம் வந்தாள்.

"சார் எங்க அம்மா சைனீஸ் நூடுல்ஸ் செஞ்சி தந்திருக்காங்க.. இரண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடலாமா.?" எனக் கேட்டாள் கழுத்தை சாய்த்து. இடையை சற்று வளைத்து அப்பாவியை போல முகத்தை வைத்துக் கொள்ள முயன்று அரைகுறையாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

சுப்ரியா சக்தியிடம் பேச ஆரம்பித்தது கண்டு அடிவயிறு கலங்கியது கனிமொழிக்கு. சக்தியின் மீது நம்பிக்கை இருந்தது. ஆனால் சுப்ரியாவின் சூழ்ச்சிகளை பற்றி பலமுறை அறிந்திருந்தவளுக்கு இப்போது பயம் மட்டும்தான் இருந்தது. இவளால் இன்னும் எத்தனை பிரச்சனைகளை சந்திக்க வேண்டுமோ என்ற கவலையோடு கிளம்பினாள்.

கனிமொழி தன்னை தாண்டி நடந்தபோது "பாப்பா.." என்று நிறுத்தினான் சக்தி. மதிய உணவு முடிந்ததும் அவள் மாத்திரைக்களை போட்டுக் கொள்ள வேண்டி இருந்தது. அதை நினைவுப்படுத்தலாம் என்றுதான் அழைத்தான்.

கனிமொழி திரும்பவே இல்லை. மற்ற மாணவிகளோடு சேர்ந்து வெளியேறி விட்டாள்.

சக்தி யாரை பாப்பா என்று அழைத்தான் என்ற குழப்பத்தோடு திரும்பிய சுப்ரியாவுக்கு மொத்த மாணவர் கூட்டத்தோடு கலந்து நடந்த கனிமொழியை தனித்து அடையாளம் காண முடியவில்லை.

வகுப்பறையை தாண்டி நடந்தவளின் முதுகை வெறித்தான் சக்தி. இவளுக்கு இன்று என்ன வந்ததோ என்ற எண்ணத்தோடு எரிச்சலோடு அங்கிருந்து கிளம்பினான்.

"சார்.." பின்தொடர்ந்து வந்தாள் சுப்ரியா.

திரும்பி பார்த்தவன் "எனக்கு சைனீஸ் நூடுல்ஸ் பிடிக்காது. நீ போய் தனியா சாப்பிடு." என்றுவிட்டு நடந்தான். அவனின் குரலில் அவனையும் மீறி எரிச்சல் வந்திருந்தது. இத்தனை நாளாக பொறுத்து பேசுபவன் இன்று எரிச்சலை காட்டிய காரணம் அவளுக்கு புரியவில்லை.

சுப்ரியா தோல்வியை சந்தித்தவளாக முகம் வாடினாள்.

***

ராமன் தன் மகளை சந்தேகத்தோடு பார்த்தார். அறையை விட்டு வெளியே வரவேயில்லை அவள். அவர் சென்று பார்க்கும் போதெல்லாம் அழுத கண்களை துடைத்து விட்டு இவரைப் பார்த்தாள்.

"ஏன் அழற.?" எனக் கேட்கும் நேரத்திலெல்லாம் "தலைவலி.." என்ற ஒன்றை மட்டுமே சொல்லி சமாளித்தாள். முகத்தில் ஒரு களையும் இல்லை. அவளிடம் எந்த உணர்வையும் காண முடியவில்லை. செத்து விட்டவளை போல, மரக்கட்டையை போலவே இருந்தாள்.

"ஹாஸ்பிட்டல் போலாம்‌‌.." என்று ராமன் பலமுறை கேட்டும் கூட மறுத்து விட்டாள்.

ஆரவ் அன்றிரவு அவளின் அருகே வந்து அமர்ந்தான்.

"அக்கா ஏன் இப்படி இருக்க.? வெற்றி மச்சி வரும் முன்னாடி அந்த பசங்க உன்னை ஏதாவது பண்ணிட்டாங்களா.?" எனக் கேட்டான் கவலையாக.

இல்லையென தலையசைத்தவளின் தலையை வருடி விட்டவன் "அப்புறம் ஏன்க்கா இப்படி இருக்க.? எப்பவும் நீ இப்படி இருந்ததே இல்லையே.. நீ ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கற மாதிரி இருக்கு.." என்றான் வருத்தமாக.

"ஒருத்தர் மேல வெறுப்பு வந்துடுச்சின்னா அதை எப்பவும் மாத்தவே முடியாது ஆரவ்.." என்றாள் பொத்தம் பொதுவாக.

"அதைதான் நீ வெற்றி மச்சி மேல காட்டுற வெறுப்பை வச்சி தெரிஞ்சிக்கிட்டேனே‌ அப்புறம் என்ன.?" என்றுக் கேட்டவன் "உனக்கு இப்ப வேற என்ன பிரச்சனை.?" எனக் கேட்டான்.

பதிலே சொல்லாமல் மௌனம் காத்தாள்.

"நான் வேணா கவினுக்கு போன் பண்ணி வர சொல்லட்டா.? எங்கேயாவது வெளியே போய் ரிலாக்ஸாகிட்டு வருவ.."

வேண்டாமென்று தலையசைத்தாள். அவளுக்கு இப்போது எதுவுமே வேண்டாம். வெற்றியின் நினைவிலிருந்து விடுதலை கிடைத்தால் போதுமென்றிருந்தது.

பழைய நினைவுகள் அனைத்தையும் அழித்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு மருந்து கிடைத்தால் நலமென்று தோன்றியது. அவனை மறக்க உயிரையும் விட தயார் அவள். ஆனால் உயிரை விடுதல் கோழைத்தனம் என்று மனம் சொல்லவும் வேறு வழி என்னவாக இருக்கும் என்று தேடினாள்.

"படத்துக்கு போலாமா அக்கா? இரண்டு பேரும் ஹோட்டல் போய் ஏதாவது டேஸ்டா சாப்பிட்டு வரலாமா.? அம்மா செய்றது எப்பவும் டேஸ்டே இல்ல.." அவனுக்கு தெரிந்த காமெடி என்று எதையோ சொன்னான். அவளுக்கு சிரிக்க ஆசைதான். ஆனால் அவளால் இதழை அசைக்கவும் முடியவில்லை.

அவன் எவ்வளவோ பேசினான். அவளை பேச வைக்க முயன்றான். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. தோல்வியோடு வெளியே நடந்தான்.

வெற்றிக்கு போன் செய்தான்.

"என் அக்கா ரூமை விட்டே வெளியே வர மாட்டேங்கிறா மாமா. பேச கூட மாட்டேங்கிறா.. அங்கே நீங்க போகும் முன்னாடி ஏதாவது நடந்ததா.? அவகிட்ட கேட்டா எதுவும் சொல்ல மாட்டேங்கிறா.?" என்றவன் "நீங்க போகும்போது அவ டிரெஸ் கரெக்டா இருந்ததா.?" எனக் கேட்டான் தயக்கமாக.

"ஏன் அப்படி கேட்கற.?"

"நடக்க கூட மாட்டேங்கிறா.? கால்ல மட்டும்தான் காயம். ஆனா கையை கழுத்தை கூட அசைக்க மாட்டேங்கிறா. அசைஞ்சாலே உடம்பு வலி போல. முகம் சுளிக்கறா.. எப்பவும் பல்லை கடிச்சிக்கிட்டே இருக்கா. உடம்பு வலி இருந்தாதான் நான் அப்படி பல்லை கடிப்பேன். என்னவோ நெருடுது மாமா. அவளுக்கு என்னவோ ஆகியிருக்கு. கேட்டா சொல்லவே மாட்டேங்கிறா.." புலம்பினான் அவன்.

வெற்றி உதட்டை கடித்தான்.

"கால் வலி ரொம்ப இருக்கும் போல.. மாத்திரை கொடு.." என்றவன் இணைப்பை துண்டிக்க முயன்றான். அதையும் செய்ய இயலாமல் மீண்டும் போனை காதில் வைத்தான். "அவளை தனியே விடாதே.." என்றான்.

போனை வைத்தவன் முகத்தை தேய்த்தான். ஏன் இந்த சோதனை என்று தோன்றியது.

'தப்பு செஞ்சேன். ஆனா நீதான் என்னை பிராயச்சித்தம் தேட கூட சந்தர்ப்பம் தரல.. உன்னை தெரியாம லவ் பண்ணிட்டேன். நல்லா உடைக்கிறடி மனசை..' நொந்துப் போனான். 'உனக்கான சான்ஸ் அத்தனையும் முடிஞ்சி போச்சி அம்மு. எனக்கான சான்ஸும் முடிஞ்சிடுச்சி. இனி சான்ஸ் முழுக்க பாரதிக்கு மட்டும்தான். நீயும் வாழல. நானும் வாழல. அவளோட ஆசையாவது வாழட்டும்..' என்று‌ பெருமூச்சு விட்டான்.

***

இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்த சக்தியின் அருகே வந்து நின்றாள் கனிமொழி.

"நான் ஏதாவது செய்யட்டா மாமா.?" என்றவளிடம் இரண்டு வெங்காயத்தை எடுத்து நீட்டினான்.

"சீக்கிரம் தோல் உரிச்சி கட் பண்ணி கொடு.." என்றான்.

அவள் கத்தியை கையில் எடுத்தாள். வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தாள். அவளின் கழுத்திலிருந்த சங்கிலியும் தாலியும் அவனுக்கு பெருமூச்சை மட்டுமே தந்தன.

"நான் மதியம் கூப்பிட கூப்பிட ஏன் போன.?"

நிமிர்ந்தவள் "நீங்கதானே மாமா உங்களுக்கும் எனக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி இருக்க சொன்னிங்க.?" எனக் கேட்டாள்.

முறைத்தான் அவன்.

"உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆனது தெரிய வேணாம்ன்னுதான் சொன்னேன். உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி நடந்துக்க சொல்லலையே.."

அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.

"ஏன் கல்யாணம் ஆனது சொல்ல கூடாது.?" குழப்பமாக கேட்டாள்.

"ஏனா நான் இந்த ஜாப்பை ரொம்ப லவ் பண்றேன்.."

"புரியல மாமா.." என்றவளை தன் பக்கம் திருப்பியவன் "இந்த காலேஜ் சட்ட திட்டபடி டீச்சர்ஸ் ஸ்டூடன்ஸை லவ் பண்ண கூடாது. குருவோட இடத்துல இருக்கும் நாங்க படிக்க வருபவங்களை லவ் பண்ணவோ, கல்யாணம் பண்ணவோ கூடாது. நமக்கு மேரேஜ் நடந்ததுன்னு காலேஜ் மேனேஜ்மென்டுக்கு தெரிஞ்சா அப்புறம் எனக்கு வேலை போயிடும்.." என்றான்.

அதிர்ச்சியில் நெஞ்சை தொட்டவள் "இதை என் நீங்க முன்னாடியே சொல்லல.?" எனக் கேட்டாள்.

"ஏனா அது விசயம் இல்லையே.!"

முறைத்தாள் கனிமொழி.

"நான் படிக்க வந்த முதல் நாள்ல அமைதியா இருந்திருந்தா எந்த பிரச்சனையும் வந்திருக்காது. நீங்கதான் என்னை துரத்தி விட்டிங்க. அதனாலதான் வீட்டுல அவ்வளவு சண்டை.." அவள் மேலே பேசும் முன் கையை காட்டி நிறுத்தினான்.

"நடந்ததை பேசி இனி ஒரு பயனும் இல்ல. தயவுசெஞ்சி நமக்கு கல்யாணம் ஆச்சின்னு காலேஜ்ல யார்கிட்டேயும் சொல்லிடாதே.!" என்றான் முடிவாக.

சரியென்று தலையசைத்தவள் வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தாள். அழுதபடியே வெங்காய துண்டுகளை நீட்டினாள்.

இருவரும் சேர்ந்து சமைத்தனர். அவன் தன்னை கொஞ்சுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அப்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று அவளே அறிவாள்.

***

"சூரியனின் விட்டமாக நீ இருந்தால் அவ்வொளியின் வட்டமாக நான் இருப்பேன்.." காதில் விழுந்த வார்த்தைகளை கேட்ட கீர்த்தனா மனதுக்குள் துக்கப்பட்டு துயரப்பட்டாலும் கணவன் புறம் திரும்பி வெட்கப்பட்டாள்.

"கவிதை செம இல்ல.?" எனக் கேட்டபடி கதவை தாழிட்டுவிட்டு எகிறி எகிறி குதித்தபடி அவளை நெருங்கினான் பாலாஜி.

'கவிதையா இது? அதை கொஞ்சம் முன்னாடியே சொல்லுடா.. இல்லன்னா நான் என்னவோ ஏதோன்னு பயந்துடுவேன்..' மனசுக்குள்ளே சொன்னால் அவனுக்கு கேட்காது என்ற விவரம் கூட அறியாதவளாக தனக்குள்ளே புலம்பினாள்.

"அது என்னவோ தெரியல கீர்த்து. உன்னை பத்தி நினைச்சாவே கவிதையெல்லாம் அருவி மாதிரி கொட்டுது.. இப்ப கூட பாரு. கதவை தாழ்ப்பாள் போடும்போது ஒரு கவிதை தோணுச்சி.."

அவன் முந்தும் முன் தானே முந்திக் கொள்ளலாம் என நினைத்த கீர்த்தனா "கதவாக நீ இருந்தால் தாழ்ப்பாளாக நான் இருப்பேன். இந்த கவிதைதானே.?" எனக் கேட்டாள்.

அவளின் தாடையை பிடித்துக் கொஞ்சியவன் "அதுதான் இல்ல.." என்றான்.

"வேறென்ன.?" என்றவளின் கன்னத்தில் உள்ளங்கையை பதித்து மெள்ள காது மடலை நோக்கி நகர்ந்தான்.

மேனி சிலிர்த்தவளை கண்டு தனக்குள் நகைத்தான்.

"இதழாக நீ இருந்தால்.." என்றபடி அவளின் இதழ்களின் மீது சுட்டு விரல் பதித்தான். மிடறு விழுங்கியவளின் இதழில் விரலை அழுத்தமாக தேய்த்தான். தானாக நெருங்கி அவனின் சட்டையில் கரம் பதித்தாள்.

"இ.. இதழாக நான் இருந்தால்.?" அடுத்த வார்த்தையை கேட்டாள். அவளின் கரங்கள் அவனின் சட்டை பட்டனை கழட்டிக் கொண்டிருந்தது.

"என்னவா இருக்கணும் உனக்கு? லிப்ஸா இருக்கணுமா.? டீத்தா இருக்கணுமா.?" எனக் கேட்டவன் நாக்கால் தன் இதழை ஈரம் செய்தான். "டங்கா இருக்கணுமா?" எனக் கேட்டான்.

பட்டன்கள் அனைத்தும் விடுமுறை எடுத்துக் கொண்ட அவனின் சட்டையை பிடித்து இழுத்தவள் அருகே வந்தவனின் முகத்தை நெருங்கினாள்.

"மூனுமாவே இருக்கணும். கொஞ்சம் மென்மையின் மெல்லினமா லிப்ஸ்.. வன்மையின் வல்லினமா டீத்ஸ்.." சொக்கும் பார்வையில் சொன்னவளை கண்டு தன் இதழ்களை கடித்தான்.

ஆசைகளையும் ஆர்வத்தையும் சுமந்திருந்த அவனின் கண்களை பார்த்தவாறே அவனின் இதழ்களை இரு விரல்களால் கிள்ளினாள். "ஈரத்தின் இடையினமா அவ்வப்போது டங்.. நீ மொத்தமா வேணும். இதழாக நான் இருந்தால் பாலாஜியாக நீ இருக்கணும்.." என்றவள் அவனின் இதழை நெருங்கினாள்.

இருவரின் இதழ்களும் புயலாக நெருங்கின. பூமியோடு மோதிய அணுகுண்டாக விளைவை ஏற்படுத்தின. தலை முதல் கால் வரை இருவருக்கும் பூகம்பம் உண்டாக்கியது. பூகம்பத்தின் இடையில் தங்களின் காதலினை மலர செய்ய இதழ் வழி போராட்டத்தை போராடிக் கொண்டிருந்தனர்.

***

"நீ ஏன் இந்த காலேஜ் வந்து சேர்ந்திருக்க கனிமொழி.? என்னை வந்து மிரட்டிட்டு போனான் உன் அண்ணன். அவனுக்கு பதில் சொல்ல முடியல அப்ப‌. ஆனா அந்த பதிலை நீ இப்ப கேட்கிறியா.?" எனக் கேட்டபடி கனிமொழியை நெருங்கினாள் சுப்ரியா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே. எபி எப்படி?🥰
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN