காதல் கணவன் 68

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
எழுந்து அமர்ந்தாள் கனிமொழி.

"எதுக்கு இத்தனை காதல் கவிதைகளை அவங்களுக்கு அனுப்பி இருக்கிங்க.?" விக்கியழுதபடியே கேட்டாள். அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை இந்த துரோகத்தை.

"உனக்கு சொல்லணும்ன்னு அவசியம் கிடையாது. ஒருத்தரோட பர்சனல் பேஸ்ல தலையிடறது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா.?" எரிச்சலாக கேட்டான்.

முறைத்தாள் கனிமொழி.

"என்ன பர்சனல்.? நீங்க என் ஹஸ்பண்ட்.. வேற ஒருத்தருக்கு காதல் கவிதைகளை அனுப்ப உங்களுக்கு எந்த ரூல்ஸும் கிடையாது.." அழுகையும் கோபமுமாக சொன்னாள்.

இருளில் அவனின் முறைப்பு தெரியவில்லை அவளுக்கு. ஆனால் வெந்துக் கொண்டிருந்தான் அவன்.

"மனைவின்னா.." இந்த வார்த்தையை சொல்லவே விசித்திரமாக இருந்தது அவனுக்கு. நேற்று வரை பாப்பா என்ற வார்த்தையை மாற்றிக் கொள்ளாமல் இருந்து விட்டு இன்று மனைவியாக பேச்சுக்கு நினைப்பது கூட முரண்பாடாக இருந்தது.

"மனைவின்னா உன் வேலை என்னவோ அதை பாரு. உனக்காக நான் எதையும் மாத்திக்க முடியாது. நான் காதல் கவிதைகளை அவளுக்கு அனுப்பினா உனக்கு என்ன போகுது?" எனக் கேட்டவன் போனை தனது தலையணை அடியில் வைத்து விட்டு கவிழ்ந்து படுத்தான்.

கனிமொழிக்கு கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை.

"நீங்க அவளை லவ் பண்றிங்களா.?"

"அவங்கன்னு கூப்பிடு.." கண்டித்தான்.

"ம** அவளுக்கு மரியாதை ஒன்னுதான் குறைச்சலா.? அடுத்தவ புருசனை.." மேலே பேசும் முன் கன்னத்தில் விழுந்தது ஒரு அறை. பேயாக எழுந்து அமர்ந்திருந்தான்.

"பிச்சிடுவேன் பாப்பா. கெட்ட வார்த்தை ரொம்ப தப்பு.." எச்சரித்தான்.

"அன்னைக்கு நீங்க மட்டும் பேசினிங்க.." எதிர்த்துக் கேட்டாள்.

'அடி வாங்கினா கூட வாய் அடங்க மாட்டேங்குது..' தனக்குள் நொந்துக் கொண்டவன் "நான் பேசினா நீயும் பேசுவியா.? அடுத்தவ புருசனை மயக்கி அவ என்ன அவளோடு கூட்டிட்டா போயிட்டா.? என்னவோ பத்து கவிதைக்கு இவ்வளவு ஓவரா பண்ற.?" என்று திட்டினான்.

அவன் திட்டி முடித்த அதே நேரத்தில் மின்சாரம் வந்து சேர்ந்தது. சுற்றி இருந்த விளக்குகளால் வீட்டின் மாடியிலும் வெளிச்சம் பரவியது. கனிமொழியின் அழுத விழிகளையும் கோபத்தில் விரைத்திருந்த மூக்கையும் அலட்சியமாக பார்த்தான்.

நச்சென்று அவனின் வாயில் ஒரு குத்து விட்டாள் கனிமொழி.

"பத்து கவிதையா.? ஏன்டா என்னை பார்த்தா உனக்கு அவ்வளவு இளிச்சவாய் மாதிரி தெரியுதா.?" எனக் கேட்டு அவனின் தலையை பற்றி இழுத்தாள்.

"ஏய் விடுடி என்னை.." அவளின் கையை விலக்க முயன்றான்.

விலக்க வந்த கைகளிலும் அடிகளை தந்தாள். "என்கிட்ட இரண்டு வார்த்தை சிரிச்சி பேச வராது உனக்கு. ஆனா அவளுக்கு காதல் கவிதைதான் குறைச்சலா?" என கேட்டு அவனை பின்னால் சாய்த்தவள் அவனின் வயிற்றின் மீது ஏறி அமர்ந்தாள்.

"இதுக்கு மேல அவளுக்கு காதல் கவிதை அனுப்புவியா? சொல்லுடா.." என்றபடி அவனின் இரு கன்னங்களிலும் ஐந்தாறு அறைகளை தந்தாள்.

அவளின் அறைகளில் வேகமோ வீச்சோ இல்லைதான். ஆனால் ஒவ்வொரு அறையும் சுளீரென்று விழுந்தது.

"விடுடி என்னை.." தன் முகத்தை மூடினான் சக்தி.

"மாட்டேன். நீ முதல்ல சொல்லுடா.."

அதற்கு மேலும் அவளோடு போராட பிடிக்காமல் அவளின் பின்னந்தலையை பற்றி அவளை தன் அருகிலிருந்த தலையணையில் சாய்த்தான்.

"இனி எந்த கவிதையும் அனுப்பல. போதுமா.?" எனக் கேட்டவனை கண்டு மெய் மறந்துப் போனாள். இவ்வளவு நெருக்கத்தில் அவனோடு இருந்ததாக நினைவே இல்லை. மூச்சு காற்றின் சப்தமும் இதய துடிப்பின் சப்தமும் கேட்கும் அளவிற்கு இரு முகங்களும் நெருங்கி இருந்தன.

அரை இருளில் இமைகள் படபடக்க அவனின் இதழ்களை கண்டவள் விலகியிருந்த அந்த அரை இன்ச் தூரத்தையும் குறைத்து விட்டாள். மெள்ளமாக, மேகத்தை தீண்டும் காற்றை போல, கடலை அரவணைக்கும் சூரிய கதிர்களை போல ஒரு முத்தத்தை தந்தாள்.

கண்ணீர் கலங்க தன்னோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தவளின் விழிகளை பார்த்திருந்தவன் அவள் திடீரென்று முத்தமிடவும் அதிர்ந்து போனான். அவளை அறைய கையை ஓங்கியவன் விழிகளை மூடி கோபத்தை அடக்கினான். அவளை தன்னிடமிருந்து தள்ளினான்.

முகத்தை சுளித்தபடி மறு பக்கம் திரும்பிப் படுத்தான். அவனின் முக சுளிப்பு அவளின் பார்வைக்கு தெளிவாக பட்டு விட்டது.

நொடியில் முகம் கறுத்துப் போனாள். தன் இதழ்களை தீண்டியவளுக்கு சொல்ல முடியாத துக்கம் நெஞ்சில்‌ வந்து சேர்ந்தது.

முன்பு போல இப்போது சண்டை போட தோன்றவில்லை. அவனின் விலகலும் கோபமும் அவளுக்கு தன் மீதே வெறுப்பை உண்டாக்கி தந்தது.

கசியும் கண்ணீரோடு திரும்பிப் படுத்துக் கொண்டாள். வெகு நேரத்திற்கு உறக்கமே வரவில்லை. நடு இரவில் அவன் தனக்கும் போர்வையை போர்த்தி‌ விடுவதை கண்டாள். போர்வையை அணைத்தபடி உறங்கிப் போனாள்.

அதிகாலை பறவைகளின் சத்தத்தில் கண்களை திறந்தான் சக்தி. தன்னை.. தான் அணைத்திருந்த பெண்ணை கண்டான். மறுபக்கம் திரும்பி படுத்திருந்தவளின் இடுப்பில் இருந்தது இவனின் கரம். அவளின் தலையிலிருந்த வெள்ளை கல் கிளிப் அவனின் உதட்டை உரசிக் கொண்டிருந்தது. நாசியோடு உறவாடிக் கொண்டிருந்த அவளின் வாசமும், உடம்போடு பிணைய முயன்றுக் கொண்டிருந்த அவளின் மேனியும் அவனுக்கு புதிதாக இருந்தது.

தலை தூக்கிப் பார்த்தான். கண்ணீர் கரைகள் தெளிவாக தெரிந்தன. பெருமூச்சோடு மீண்டும் படுத்துக் கொண்டான்.

விடிந்து வெகு நேரம் கழித்து எழுந்தாள் கனிமொழி. போர்வையில் தனியாக இருந்தாள். கடுப்போடு போர்வையையும் தலையணையையும் எடுத்துக் கொண்டு கீழே போனாள்.

"டைம் ஆகிட்டு இருக்கே. எழுப்பி விட்டா என்ன குறைஞ்சி போறிங்க.?" என்று எரிந்து விழுந்தபடி வீட்டுக்குள் நுழைந்தாள்.

பெர்ப்யூமை உடம்பில் அடித்து முடித்தவன் கை கடிகாரத்தை பார்த்தான். இன்னும் அரை மணி நேரம் இருந்தது. அவளின் கேள்விக்கு பதிலை சொல்லாமல் தனது பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

"மாமா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா.? டைம் ஆச்சே. நான் எப்படி காலேஜ் வருவேன்.?" அவளை திரும்பி கூட பார்க்கவில்லை. கதவோரத்தில் இருந்த ஷூவை அணிந்துக் கொண்டு வீட்டின் கதவை வெறுமனே சாத்தி விட்டு போனான்.

'என்ன நேரத்துல இவரை போய் காதலிச்சேனோ.?' நெற்றியில் அறைந்துக் கொண்டு குளிக்க ஓடினாள்‌.

***

'பாரதி எப்போதும் சந்தோசமா இருக்கணும்..' மெக்கானிக் ஷெட்டில் இருந்த சாமி புகைப்படம் முன் நின்று வேண்டிக் கொண்டிருந்தான் நரேஷ்.‌

"எக்ஸ்க்யூஸ் மீ.." இளம்பெண் ஒருத்தியின் குரலில் திரும்பினான்.

லாங் ஸ்கர்டும், ஸ்லீவ்லெஸ் சர்டுமாக அழகாக நின்றிருந்தாள் அவள்.

"யெஸ்.." முன்னால் வந்தான்.

"நான் நதியா.."

"ஓகே.."

"பாரதி அனுப்பி வச்சாங்க.."

சட்டென்று முகம் மலர்ந்தவன் அங்கிருந்த நாற்காலி ஒன்றை எடுத்து வந்து போட்டான். சுத்தமாக அதை துடைத்து விட்டு உட்கார சொல்லி சைகை காட்டினான்.

"வண்டி ரிப்பேர் செய்யணுமா.?" எனக் கேட்டவன் சாலையை பார்த்தான். நின்றிருந்த ஸ்கூட்டியை நோக்கி நடந்தான்.

"என் வண்டியில் எந்த பிரச்சனையும் இல்ல.." அவளின் பதிலில் நின்றவன் திரும்பி வந்தான்.

"வேற என்ன.?"

"உங்களை பத்தி பாரதி நிறைய சொல்லி இருக்கா. சும்மா பேசி பார்க்கலாம்ன்னு வந்தேன். இந்த சாட்டர்டே ப்ரீயா இருந்தா வாங்களேன், வெளியே போய்ட்டு வரலாம்.."

"பாரதி உங்களுக்கும் எனக்கும் கனெக்சன் தர பார்க்கறாளா.?" இடுப்பில் ஒரு கையை ஊன்றியபடி மறு கையால் தாடையை தடவியபடி கேட்டான்.

"ம்ம். அவளுக்கு லேசா மனசுக்கு கஷ்டம். அவளால யாரோட லைப்பும் பாதிக்கப்பட கூடாதுன்னு நினைக்கிறவ. எனக்கும் உங்களை பிடிச்சிரு.."

"எனக்கு உங்களை பிடிக்கலைங்க.." சட்டென்று சொல்லி விட்டான்.

அமர்ந்திருந்தவள் அவமானம் தாங்கிய முகமாக எழுந்து நின்றாள்.

"நான் சொல்லியது உங்களுக்கு கஷ்டமா இருந்தா சாரி. ஆனா எனக்கு உங்களை பிடிக்கல. இதான் என் முடிவு. உங்க பிரெண்ட்டுக்கு ரொம்ப தாராள மனசுன்னு தெரியும். ஆனா இந்த அளவுக்கு இருக்கும்ன்னு நினைக்கவே இல்ல.." என்றவன் அவளை வெளியே போக சொல்லி கையை காட்டினான்.

தலை குனிந்தபடி வெளியேறியவளுக்கு முகம் அளவுக்கு அதிகமாகவே கறுத்து போய் விட்டிருந்தது.

***

கனிமொழி அவசர அவசரமாக கல்லூரிக்குள் நுழைந்தாள்.

வகுப்பில் சக்திதான் இருந்தான்.

"மே ஐ கம் இன் சார்.?" ஓடி வந்ததன் காரணமாக லேசாக மூச்சிரைத்தது அவளுக்கு.

மெள்ள கண்களை சாய்த்து கை கடிகாரத்தை பார்த்தான்.

'அதை வேற ஏன்டா பார்க்கற.? உன் புண்ணியத்தால நான் இன்னைக்கு இருபது நிமிசம் லேட்..' பற்களை கடித்தாள்.

"காலேஜ் வரிங்களா.? இல்ல சந்தை கடைக்கு வரிங்களா? உங்க இஷ்டத்துக்கு வருவதா இருந்தா காலேஜ் டைமிங்கையும் மாத்தி வச்சிக்கலாமே. எங்களை மாதிரி ப்ரொபசர்ஸ் ஏன் முன்னாடியே வந்து வேலை வெட்டி இல்லாதவங்களை போல உட்கார்ந்திருக்கணும்.? உங்களை போலதான் எங்களுக்கும் ஆயிரம் வேலை இருக்கு. நாங்க எங்க வேலையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு வந்து சேரலையா.?" பாடம் நடத்துகையில் பேசுவதை விடவும் இப்போது அதிகம் பேசினான்.

"சாரி சார்.." தலை குனிந்தபடி சொன்னாள்.

"உள்ளே போங்க.. நாங்க கத்துறதெல்லாம் என்னைக்கு உங்க மைன்ட்ல முழுசா ஏற போகுது.?" என்றுத் திட்டினான்.

கனிமொழி அவனை மனதுக்குள் திட்டியபடியே உள்ளே நடந்தாள். சக்தி அவளை முறைத்தான். தன் இருக்கையை நோக்கி நடந்த கனிமொழியின் காலின் குறுக்கே தன் காலை வைத்தாள் சுப்ரியா.

சக்தியை நினைத்தபடி நடந்தவள் இடை புகுந்து நின்ற காலினை கவனிக்காமல் தடுமாறி கீழே விழுந்தாள்.

"பா.. கனி.." சக்தி ஓடினான். அதற்குள் எழுந்தோடி வந்து கனிமொழியை தாங்கிப் பிடித்தான் வசந்த்குமார். நொடி நேரம் தவறி இருந்தாலும் கீழே விழுந்திருப்பாள் அவள்.

"ஆர் யூ ஓகே.?" எனக் கேட்டபடியே அவளை நேராக நிறுத்தினான் வசந்த்குமார்.

விலகியவள் "தேங்க்ஸ்.." என்று சிறுகுரலில் சொல்லிவிட்டு நகர்ந்துப் போனாள்.

சக்தி தன் இருக்கைக்கே திரும்பினான். வசந்த்குமார் கனிமொழியை அணைத்திருந்த காட்சி பார்வையின் குறுக்கே அடிக்கடி வந்து நின்றது. அவர்கள் இருவருக்கும் இடையில் பொருத்தம் இருப்பது போலதான் தோன்றியது.

பாடத்தை நடத்தினான். அனைவரும் ஆர்வமாக கேட்டனர். சுப்ரியா அதிகமாகவே ஆர்வம் எடுத்துக் கொண்டாள்.

கனிமொழி அவனின் உதடுகளை தவிர வேறு எங்குமே பார்க்கவில்லை.

'நான் கிஸ் பண்ணா அவ்வளவு அருவெறுப்போ? என்னைக்கு இருந்தாலும் நீங்க என் பின்னாடி சுத்ததான் போறிங்க.? அன்னைக்கு நீங்க என் கால்ல விழுந்தா கூட நான் கிஸ் தர போறதில்ல..' மனதுக்குள் சபதம் எடுத்தாள்.

மதிய உணவு நேரத்தில் தனது பாக்ஸோடு கிளம்பினாள் கனிமொழி. மருதாணியோடு இணைந்து அமர்ந்து சாப்பிட்டு முடித்தாள். கல்லூரி மாணவர்கள் பட்டாம் பூச்சிகளாக கல்லூரி வளாகத்தில் சுற்றி திரிந்துக் கொண்டிருந்தார்கள். சிறகு மட்டும்தான் இல்லாமல் இருந்தது. ஆங்காங்கே சில காதல் ஜோடிகள், பல நட்புக் கூட்டங்கள் என்று ரசிக்க கூடிய இரைச்சலாக இருந்தது அவ்விடம் முழுக்க.

வசந்த்குமார் மாணவி ஒருத்தியோடு சேர்ந்து மரத்தடி ஒன்றின் கீழ் நின்று பேசிக் கொண்டிருந்தான். அவனை வெறித்தபடியே வகுப்பறைக்கு கிளம்பினாள் கனிமொழி. அதே நேரத்தில் வசந்த்குமார் நின்றிருந்த மரத்தின் நேர் மேலே தெரிந்த கட்டிடத்தை பார்த்தாள். விஜிதாவும் சக்தியும்‌ எதையோ பேசியபடி நின்றிருந்தனர்.

ஒற்றை கையை கட்டியபடி நின்றிருந்த விஜிதா அவ்வப்போது சக்தியை அடித்தாள். வாய் முழுக்க பற்கள் இருப்பது போல இளித்துக் கொண்டிருந்தான் அவன். எதையோ தீவிரமாக விசாரிப்பது போலவும் இருந்தது. ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஓவராக சிரிப்பது போலவும் இருந்தது. ஆக மொத்தத்தில் கனிமொழியின் உடம்போடிய மொத்த ரத்தமும் பெட்ரோல் ஆனது. அவளது மூச்சுக் காற்றே நெருப்பாக சுட்டது.

'என்கிட்ட ஒத்தை வார்த்தை சிரிச்சி பேச துப்பில்ல. ஆனா கண்டவளோடும் பல்லை இளிச்சிட்டு இருக்கு பிசாசு..' திட்டி தீர்த்தாள்.

சக்தி இருமினான். விஜிதா தன் பூங்கரத்தால் அவனின் தலையில் தட்டினாள். (என்னாது பூங்கரமா.?🙄🙄 ரைட்டரே இங்கே ஹீரோயின் நான்.😤 அவ இல்ல.😡😡 வர்ணிப்பை அளவோடு வச்சிக்கங்க😒- கனிமொழி. )

(ரைட்டர் - 🤐🤐)

"யாரோ உங்களை நினைக்கிறாங்க. இல்லன்னா திட்டுறாங்க.." என்றாள் விஜிதா.

"அம்மா நினைச்சிட்டே திட்டி இருப்பாங்க.." என்றவன் அவளின் கையை பிடித்தான். அவளுடைய மணிக்கட்டு பகுதியில் வாசம் பிடித்தான்.

"இந்த வாசனை நல்லாருக்கே. என்ன சென்ட்.?"

"ஜவ்வாது.." என்று பற்களை காட்டியவளை ஆச்சரியமாக பார்த்தான்.

"என் அப்பா வச்சிருந்தாரு. எடுத்து நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்.." என்று கண்ணடித்தாள்.

"மேடம் இயற்கையில் இணைந்து வாழ்றிங்க போல.." நக்கலோடு சொன்னவன் சட்டென்று முகம் சுளித்தான். அங்கிருந்து கிளம்பினான்.

"சக்தி எங்கே.?"

"இயற்கை அழைக்கிறது.." சுண்டு விரலை காட்டிவிட்டு ஓடினான்‌.

ரெஸ்ட் ரூமை விட்டு வெளியே வந்தவன் "தைய்ய தைய்ய தைய்யா தைய்யா.." என்று மெல்லிய குரலில் முனகியபடி நடந்தான். ஆட்கள் நடமாட்டம் இல்லை. வகுப்பு ஆரம்பித்து விட்டது என்று புரிந்து வேகமாக நடந்தவனின் முதுகில் வந்து பலமாக மோதியது என்னவோ.

திரும்பிப் பார்த்தான். அவனின் காலடியில் காலணி ஒன்று கிடந்தது. நிமிர்ந்தவனின் நெஞ்சில் வந்து விழுந்தது மற்றொரு காலணி.

அனல் மூச்சோடு எதிரே வந்து நின்றவளை முறைத்தான். நெருங்கி நின்ற வேகத்தில் ஒரு அறையை விட்டாள் கனிமொழி.

"யார் அவ.? எதுக்கு அவளோடு அவ்வளவு சிரிச்சி பேசுறிங்க.? தொட்டு தொட்டு ஏன் பேசணும்.?" என்று ஆத்திரத்தோடு கேட்டாள்.

"மரியாதையா போயிடு பாப்பா. காலேஜ்ல சீனை போட்டுட்டு இருக்காத.." எச்சரித்தான்.

"சீனா.? உங்களுக்கு என்னை பார்த்தா சீன் போடுற மாதிரியா இருக்கு.? என் வலி உங்களுக்கு புரியலையா.? என்னை இதே போல ஒருத்தனோடு பார்த்தா உங்களுக்கு எவ்வளவு வலிக்குமோ அதை விட ஆயிரம் மடங்கு அதிகமாக வலிக்குது எனக்கு.."

விழிகளை சுழற்றியவன் "நீ எவன் கூட சுத்தினாலும் எனக்கு வலிக்காது. நீ முதல்ல உன் கனவுல இருந்து வெளியே வா. அமைதியாக போய் படிக்கற வேலையை பாரு.." அவளை தள்ளி‌ விட்டுவிட்டு போனான்.

கனிமொழிக்கு கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது. முகத்தை துடைத்தபடி காலணியை அணிந்துக் கொண்டு நடந்தாள்.

"நான் யாரோடவாவது சுத்தினா எப்படி வலிக்காம போகும்.?" மூக்கை உறிஞ்சியபடி காற்றோடு கேட்டவள் தரையை பார்த்த வண்ணம் நடந்ததில் எதிரே வந்தவனின் மேல் மோதி பின்னால் சாய்ந்தாள். ஆனால் அவள் சாயும் முன்பே அவளை இடையோடு தாங்கியது வசந்த்குமாரின் இரண்டு கரங்களும்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN