காதல் கணவன் 74

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ரத்னாம்பிகை தன் மகனை குறுகுறுப்பாக பார்த்தாள். இவன் என்ன பாட போகிறான் என்று ஆச்சரியத்தோடு காத்திருந்தாள்.

நரேஷ் மைக்கின் மீது விரலால் தட்டினான்.

"மைக்கெல்லாம் வேலை செய்யுது. பாடுங்க.." இசை குழுவில் இருந்த ஒருவன் ஆயத்தப்படுத்தினான்.

ஒரு முறை மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்

"உன்னை கண்டேன்
அன்பே உன்னை கண்டேன்!
என் நெஞ்சுக்குள்ளே
தினமும் உன்னை கண்டேன்!
உந்தன் நிழலை தேடி தேடி
நானும் ஓடியிங்கு வந்தேன்!
விழியின் பார்வை நாடி நாடி
பல தூரம் கடந்து வந்தேன்.!"

பாடல் பாடப்படும் சத்தம் கேட்டு தனது அறையிலிருந்து எழுந்து ஓடி வந்தாள் பாரதி. குரல் அவன்தான் என்று சொன்னது. ஆனால் இது எப்படி சாத்தியம் என்று குழம்பியது மனம். மாடியிலிருந்து கீழேயிருக்கும் ஹாலுக்கு வரும் படிகளில் வந்து நின்றாள். இடப்பக்கமிருந்த மேடையில் நின்றிருந்தான் நரேஷ். அவனின் பாடலுக்கு ஏற்றவாறு இசைத்துக் கொண்டிருந்தார்கள் பின்னால் இருந்தவர்கள். நரேஷ் இவளை பார்க்கவில்லை.

"தேனும் சொட்டும்
கவிதையில் தேனும் சொட்டும்!
உன் கவிதையாலே
எந்தன் சொர்க்கம் கூடும்!
உன் கால் அடியை காண
காலமும் காத்து இருப்பேன்!
உன் கரத்தை பற்ற
காலமும் கடந்து நிற்பேன்.!"

பாடிக் கொண்டிருந்தவன் எதேச்சையாகதான் அவளைப் பார்த்தான். விழிகளை கூட சிமிட்டாமல் அவனையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

புன்னகையோ, சோகமோ, கோபமோ இல்லாத ஒரு முகத்தோடு இருந்தான்.

ஆங்காங்கே நின்று தங்களின் சொந்தங்களோடு பேசிக் கொண்டிருந்தவர்கள் பாடலை கேட்க வந்து விட்டனர். அதிலும் இளம்பெண்கள் கூட்டம் நன்றாகவே தெரிந்தது.

"அழகே.. என் உயிர் உனதே..
கொடுத்தேன் அதை உனக்கெனவே!
என் உயிரை தந்த பிறகும்
உன் நிழலை தேடி வந்தேன்!
என் இதயமொலிக்கும் பெயரில்
ஜீவன் உருகி கரைந்தேன்.!"

பாரதியால் பார்வையை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை. அவனின் விழிகளும் இவளின் கண்களோடு பசை போட்டு ஒட்டி வைத்தது போல இருந்தது. அந்த கண்கள் இரண்டும் பேசிக் கொள்ள முயன்றன. ஆனால் அது பாரதியின் நெஞ்சில்தான் பதிய மறுத்தது.

"பூவே.. என் செல்ல பூவே..
சிவந்தேன் நான் உன் நிறத்தினிலே!
கனியே என் இளங் கனியே..
இனித்தேன் நான் உன் சுவையினிலே!
குயிலே என் வனக் குயிலே
தொலைத்தேன் நான் உன் இசையினிலே.!"

அவளின் கை விரல் நகங்கள் படிக்கட்டு கைப்பிடி சுவரை கீறின. ஏதோ ஒரு உணர்வு நெஞ்சுக்குள்‌. அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே இதே பிரச்சனைதான். இன்றைய ஒரு நாளை கடந்து விட்டால் போதும். பிறகு மனம் தன் பேச்சை கேட்கும் என்று நம்பினாள்.

"என் காதல் இழந்த பிறகும்
கடைசி நாளை காண நினைத்தேன்!
என் கவிதை கரைந்த பிறகும்
நதியை குடித்து விழுங்க
முயன்றேன்!
தேன் திருடி சென்ற பிறகும்
பூவின் வாசம் மட்டும்
கேட்டேன்!"

"வாவ்.. செமையா பாடுறாரு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சிங்கிளா இருந்தா எப்படியாவது பேசி மயக்கிட வேண்டியதுதான்.." பாரதியை தாண்டிச் சென்ற பெண் ஒருத்தி குதூகலமாக சொல்லியபடி சென்றாள்.

பாரதி கீழுத்தட்டை கடித்தாள். முடிந்த அளவு இதயத்தின் துடிப்பை சமன் படுத்த‌ முயன்றாள்.

"உன் ஒற்றை பார்வை
அது என் கோலாகலம்!
உன் மென் புன்னகை
அது என் சொர்க்க பூவனம்!
உந்தன் திருமணம்
அது என் உடைந்த மனதின்
கடைசி துன்பம்.!" பாடும்போதே குரல் கரகரத்தது அவனுக்கு. எச்சிலை விழுங்குதல் கூட விஷம் அருந்துதல் போல வலியை தந்தது.

பாரதிக்கும் விழிகள் கலங்க முயன்றது. அவனை பார்த்துக் கொண்டிருந்த பார்வையை தாழ்த்தினாள். தரை பார்த்தாள். கண்களை சிமிட்டினாள். புடவையை இறுக்கி இருந்த கரம் புடவையை மேலும் இறுக்கியதில் கையிலிருந்த ரத்த நாளங்கள் வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்து இருந்தன.

"வாழிய பெண்ணே!
பல்லாண்டு வாழிய என் கண்ணே!
காதலின் கடைசி வீதியில்
நின்று வாழ்த்துகிறேன்!
உன் மண உலகில்
மங்களம் மட்டும் காண கிடைக்க
வாழிய பெண்ணே!
பல்லாண்டு வாழிய!"

மைக்கை ஸ்டேன்டில் வைத்து விட்டான்.

கூட்டத்தில் அமர்ந்திருந்த அனைவரும் கையை தட்டினர். ரத்னாம்பிகைக்குமே நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியம் கூடி இருந்தது.

"வாவ்.. செம ப்ரோ.. ரொம்ப சூப்பரா இருந்தது சாங்.. உங்க சொந்த சாங்கா.?" எனக் கேட்டான் மேடையிலிருந்த ஒருவன்.

"ம்ம்.." என்றவன் மேடையை விட்டு கீழே இறங்கினான்.

"அண்ணா பாட்டு செம.." காதில் விழுந்த குரலில் அதிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தான். வண்டு பற்களை காட்டியபடி அவனுக்கு பின்னால் நின்றிருந்தான்.

"நீ எப்படிடா இங்கே வந்த.?" எனக் கேட்டான் இவன் ஆச்சரியத்தோடு.

"நீ கூட்டி வரலன்னா எனக்கு வர தெரியாதா.? என்னை விட்டா ஏரோபிளேன்லயே தனியா போய்ட்டு‌ வந்துடுவேன். இரண்டு பஸ் ஏறி வர மாட்டேனா.?" எனக் கேட்டான்.

துணைக்கு இவனாவது வந்தானே என்று நெகிழ்ந்தது மனது.

"சரி சரி.. பீல் பண்ணாத. வா வந்து இப்படி உட்காரு.. இப்ப பாட்டா பாடுனதை அப்ப இரண்டு வரி கவிதையா சொல்லி இருந்தா அப்பவே அண்ணி உனக்கு ஓகே ஆகியிருக்கும் இல்ல.?" என்று நேரம் காலம் பார்க்காமல் குத்திக் காட்டினான்.

"ஏதோ கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன்‌.."

அந்த வழியில் குளிர்பானம் எடுத்துச் சென்றவனை நிறுத்தி பச்சை நிற பானம் ஒன்றையும் சிவப்பு நிற பானம் ஒன்றையும் கையில் எடுத்தான் வண்டு. நரேஷ்க்கு ஒன்றை தந்தான்.

"கஷ்டப்பட்டு பாடிட்டு வந்திருக்க. இதையாவது குடி.." என்றவன் அவன் குடிக்க ஆரம்பித்ததும், "அசால்ட் எதுல வேணாலும் இருக்கலாம். ஆனா காதல்ல இருக்க கூடாது. எப்ப வேணாலும் எவன் வேணாலும் வந்து கொத்திட்டு போவான். நமக்கு எதுக்கு வம்பு.?" எனக் கேட்டான்.

காலம் கடந்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் நரேஷ்.

"உண்மையை சொல்லட்டா அண்ணா.? உன் இடத்துல நான் இருந்திருந்தா அண்ணியை கொல்கத்தா தாண்டவே விட்டிருக்க மாட்டேன். இன்னேரம் மூனு குழந்தைங்க பெத்து அதுல ஒன்னை ஸ்கூல் சேர்த்தியிருப்பேன்.." என்றான்.

நரேஷ் இடம் வலமாக தலையசைத்தான். 'எல்லாம் என் தலையெழுத்து. சின்ன சின்ன வாண்டெல்லாம் கிண்டல் பண்ற அளவுக்கு போயிடுச்சி நம்ம பொழப்பு. பாவி அவ. அவ கண்ணை பார்த்த பிறகு எங்கே வார்த்தை வந்து தொலைஞ்சது.? பார்த்த உடனே பீஸ் போயிடும் வாய்ஸ். அவ கை விட்டு போறாளேங்கற சோகத்துல இப்பவாவது கொஞ்சம் தைரியம் கிடைச்சிருக்கு. ஆனா அப்ப எனக்கு நானே எதிரியா இருந்துட்டேன்..' மனதுக்குள் புலம்பி தீர்த்தான்.

பாரதி அவனின் முதுகை கவனித்தபடி சற்று நேரம் நின்றிருந்தாள். பிறகு அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டாள்.

வெற்றியின் அறையில் நின்றபடி பாட்டை கவனித்துக் கொண்டிருந்த தேன்மொழி "ரொம்ப சூப்பரா பாடியிருக்காரு அந்த அண்ணா.." என்றாள்.

"ம்.." என்ற வெற்றி படுக்கையில் மல்லாந்து படுத்தபடி மின்விசிறியை பார்த்துக் கொண்டிருந்தான். வங்கியை சேர்ந்த அனைவரும் காலையில்தான் வருவார்கள். பள்ளி கல்லூரி தோழர்களை கவனிக்க முத்துராம் சென்று விட்டான். உறவினர்களை கவனிக்க பாட்டியும் அப்பாவும் மற்றவர்களும் இருந்தனர். திருமண நாளில் மிகவும் சுதந்திரமாக இருந்தான்.

சுதந்திரமான மனது மிகவும் குழப்ப சங்கிலியில் கைது செய்யப்பட்டு இருந்தது. இன்றோடு அம்ருதாவை மறந்து விட்டாக வேண்டும். பாரதிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று தனக்கு தானே பல நூறு முறை சொல்லிக் கொண்டான்.

"வெற்றி.." அவனின் சுதந்திரத்தில் குறுக்கிட்டான் சக்தி.

எழுந்து அமர்ந்தான்.

"வாங்க மாப்பிள்ளை.." என்றான் கடமைக்கு.

கனிமொழி சக்தியின் பின்னால் வந்தாள்.

"நீயாவது கூப்பிட்டியே.! இவங்க அம்மா எங்களை வாசல்ல பார்த்ததும் அப்படியே சைடா திரும்பி பாத்ரூம்குள்ள போயிட்டாங்க. எங்க அம்மா ஹால்ல பார்த்ததும் மூஞ்சியை அவங்க தோள்லயே இடிச்சிக்கிட்டு என்னவோ திட்டிட்டு போறாங்க.. நம்ம குடும்பம்தானா இதுன்னு எனக்கே சந்தேகமா இருக்கு.." கொஞ்சம் பெரியதாகவே குற்ற பத்திரிக்கை வாசித்தான்.

"விடுடா.. எல்லாம் கொஞ்ச நாள்ல சரியா போயிடும்.." வெற்றி ஆறுதல் சொன்னான்.

கனிமொழி அக்காவின் அருகே சென்றாள். தேன்மொழி தாவணியில்தான் இருந்தாள்.

"என்னை விட பெரிய‌ பொண்ணு மாதிரி தெரியற இந்த புடவையில்.." என்று ஆச்சரியப்பட்டாள் தேன்மொழி.

கனிமொழிக்கு உள்ளம் நிறைந்தது அவளின் வார்த்தையை கேட்டு. தன்னையும் பெரிய பெண் என்று சொல்கிறாளே என்று மகிழ்ந்துக் கொண்டிருந்தவளை "கனி.‌" என்று அழைத்தான் சக்தி.

"சொல்லுங்க மாமா‌‌." அவனருகில் ஓடினாள்.

"என்னை விட்டுட்டு எங்கேயும் போக கூடாது. சரியா.? நீயா எங்கேயாவது போய் உங்க அம்மாக்கிட்டயோ இல்ல எங்க அம்மாக்கிட்டயோ திட்டு வாங்கிட்டு வந்தா நான் பொறுப்பு கிடையாது.. புரிஞ்சதா?" எனக் கேட்டான்.

"புரிஞ்சது மாமா.." தலையாட்டினாள்.

"என் அண்ணனை பார்த்து நீயும் ஏதாவது கத்துக்க பாலா.." என்றபடியே கணவனின் கை கோர்த்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள் கீர்த்தனா.

பாலாஜி சிரித்தான்.

"நம்ம விசயம் தலை கீழ் கண்ணு. உங்க அப்பா மட்டும்தான் நம்ம கல்யாணத்துக்கு எதிரி. ஆனாலும் அவர் உன்னை எதுவும் சொல்ல மாட்டார். என்னை மட்டும்தான் முறைச்சி வைப்பார். உன் அப்பாக்கிட்டயிருந்து நீ வேணா எனக்கு சேப்டி கொடு.." என்றான்.

கீர்த்தனா அவனை முறைத்தாள்.

பாலாஜி தன் அண்ணனின் முன் வந்து நின்றான்.

"இதுக்கு மேலாவது நீயும் நல்லாருந்து, இருக்கும் மத்த எல்லோரையும் நல்லபடியா வாழ விடுவன்னு நம்புறேன்.." என்று வாழ்த்தியபடி அவனின் கையை தூக்கி பிரேஸ்லெட் ஒன்றை மாட்டி விட்டான்.

"இது எங்க கிப்ட்.." என்றவன் அவனின் கையை விடுவது போல விசிறினான்.

அவன் தன் மீது இன்னமும் கோபத்தில் இருக்கிறான் என்று புரிந்து வைத்திருந்த வெற்றி எதுவும் மறுத்துப் பேசவில்லை.

ஜன்னலருகே நின்றபடி கீழே பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழி "ஒரு நிமிசம்.." என்றுவிட்டு வெளியே ஓடினாள்.

***

"ரொம்ப தலை வலிக்குதுடா வண்டு.." நெற்றியை பிடித்தபடி எழுந்து நின்றான் நரேஷ்.

"என்னாச்சி.?" அம்மா விசாரித்தாள்.

"சும்மா வெளியே காத்து வாங்க.." என்றவன் "வண்டு, அம்மாவை பார்த்துக்க.." என்று சொல்லிவிட்டு நடந்தான்.

ஹாலின் பெரிய கதவை தாண்டி நடந்தான். இளம் பெண் ஒருத்தி இணைந்து நடந்தாள்.

"ஹாய்.." என்றாள்.

"ஹாய்.. நீங்க.?"

"நான் தேன்மொழி. இது என் அண்ணாவோட கல்யாணம்.." என்றாள்.

"ஓ.. கன்கிராட்ஸ்.." வெளிவராத குரலில் சொன்னான்.

"அதை என் அண்ணனுக்கும் அண்ணிக்கும் சொல்லுங்க.. உங்க பாட்டு நல்லா இருந்தது. அதுக்கு பாராட்டிட்டு போக வந்தேன் நான்.. சூப்பரா இருந்தது பாட்டு. கல்யாணத்துக்கு வந்த எல்லோருக்குமே ஹேப்பியா இருந்திருக்கும்.."

மென்மையாக புன்னகைத்தான்.

"எனக்கும் சந்தோசம்.." என்றான் நெஞ்சின் மீது கையை வைத்தபடி.

"சாப்பிட்டிங்களா.? வாங்க சாப்பிட போலாம்.." அழைத்தவளிடம் வேண்டாமென்று தலையசைத்தான். "இங்கே மெடிக்கல் எங்கே இருக்குன்னு சொல்றிங்களா.? தலை ரொம்ப வலிக்குது. ஒரு டேப்லெட் கிடைச்சா நல்லாருக்கும்.." நெற்றியை பிடித்தபடி சொன்னான்.

அவனின் சுருங்கிய நெற்றியை கண்டு அவளுக்கு மனம் வாடியது.

"ஒரு நிமிசம் இருங்க.." என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடியவள் சற்று நேரத்தில் வேறு திசையிலிருந்து ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டு வந்தாள். "வாங்க.. மெடிக்கல் போய்ட்டு வரலாம்.." என்றாள்.

அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான்.

"எதையும் யோசிக்காம வாங்க. ஒத்தை பைசா வாங்காம எங்க அண்ணன் மேரேஜ்க்கு பாட்டு பாடி தந்திருக்கிங்க. உங்களை மெடிக்கல் கூட கூட்டி போக மாட்டேனா.?"

தயக்கத்தோடு ஏறி அமர்ந்தான்.

இருளும், சாலையோர விளக்குகளும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்த பாதையில் ஸ்கூட்டியை விரட்டினாள்.

"இங்கே ஒரு மெடிக்கல் இருந்தது.." என்று ஸ்கூட்டியை நிறுத்தியவள் எதிரில் பார்க்க கடை மூடியிருந்தது.

"நைட் ஆனதால கடை மூடிட்டாங்க. ஏதாவது மளிகை கடையில் நிறுத்துங்க. விக்ஸ் மாத்திரை வாங்கிக்கிறேன்.." என்றான்.

"அவ்வளவுதான்.. பக்கத்துலதான் இன்னொரு மெடிக்கல் இருக்கு.." என்றபடி ஆக்ஸிலேட்டரை திரும்பியவள் இடையில் ஒரு சம்பவத்தை நிகழ்த்தி விட்டு ஒரு மெடிக்கலின் முன்னால் வந்து ஸ்கூட்டியை நிறுத்தினாள்.

"தலை வலி மாத்திரை கொடுங்க.." நரேஷ் கேட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் அங்கே வந்தான் ஆரவ்.

"அண்ணா காண்*ம் ஒரு பாக்கெட் கொடுங்க.." என்றான் சற்று சத்தமாகவே.

அவனின் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் தேன்மொழி.

"நேத்துதானே இரண்டு பாக்கெட் வாங்கிட்டு போன. அதுக்குள்ள காலியா.?" கடைக்காரன் கேட்டதில் மேலும் அதிர்ந்துப் போனாள். கண்ணீர் கடகடவென்று கன்னங்களில் இறங்கி விட்டது. நிஜமா கனவா என்று குழம்பினாள். தனக்கு அவன் துரோகம் செய்வான் என்பதை நம்பவே முடியவில்லை.

"பொண்ணு வொர்த் அண்ணா.." என்று சொல்லி வெட்க சிரிப்பு சிரித்தவன் அங்கே இருந்த தேன்மொழியின் திசைக்கு கூட திரும்பவில்லை. அவளுக்குதான் இதயம் உடைந்து, பூமி உடைந்து, வாழ்க்கையே இருண்டு போனது போலிருந்தது. எவ்வளவு நல்லவனாக தன்னிடம் பழகியவன் ஒரு மாதத்தில் இப்படி மாறி போவானா என்று‌ புரியாமல் குழம்பினாள்.

"போலாமா சிஸ்டர்.?" நரேஷ் மாத்திரையை விழுங்கிவிட்டு கேட்டான்.

"ம்.." யாரும் அறியாதவாறு கண்களை துடை‌த்தவள்‌, தலையசைத்தபடி‌ சென்று ஸ்கூட்டியை எடுத்தாள். விம்மியது நெஞ்சம். எவ்வளவு கதறினாலும் நெஞ்சத்தின் வலி குறையாது என்பது புரிந்தது.

அவர்களின் ஸ்கூட்டி அங்கிருந்து சென்றது.

"எனக்கு நீ செக் வைக்கிறியா.?" நக்கலாக கேட்டு சிரித்த ஆரவ் கடைக்காரன் புறம் திரும்பினான்.

"பிரகனென்ஸி டெஸ்ட் கிட் ஒன்னு கொடுங்க.." என்று பணத்தை எடுத்து வைத்தான்.

"அதுக்குள்ளவா.?" கடைக்காரன் வேண்டுமென்றே வம்பிழுத்தான்.

"நீங்க வேற ஏன் அண்ணா.? நீங்க கிட்டை கொடுங்க.." என்று கையை நீட்டினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN