காதல் கணவன் 77

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெற்றி அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தான்.

"அம்முவா.? ஆனா நான்தான் அவங்க வீட்டுக்கு பத்திரிக்கை தரலையே.. ஒருவேளை தாத்தா கொண்டு போய்‌ வச்சிருப்பாரோ!?" சந்தேகமாக‌ கேட்டபடி நாற்காலியை‌ விட்டு எழுந்து நின்றான்.

கீர்த்தனா அவனை கலக்கமாக பார்த்தாள்.

"என்ன.?"

"பிரச்சனைன்னு நினைக்கிறேன் வெற்றி.. அவங்க அப்பாவும் அம்மாவும் முறைச்சிட்டு நிற்கறாங்க.." பயத்தோடு சொன்னவளின் அருகே வந்து தோளை தட்டி சமாதானம் செய்தான்.

"நான் அவளை கேட்டுட்டுதான் இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சேன். அவளுக்கு என்னை கட்டிக்க சுத்தமா விருப்பம் இல்லன்னு சொல்லிட்டா. அப்புறம் ஏன் அவங்க முறைக்கணும்?" எனக் கேட்டவன் கோபத்தோடு‌ வெளியே நடந்தான்.

"கல்யாணம் நடக்கும்போது எதுக்கு இப்படி வந்து நிற்கணும்ன்னு எங்களுக்கு புரியல. விசயத்தை நீங்கதான் சொல்லணும்.." அருகே நெருங்கிய வெற்றியின் காதில் வந்து விழுந்தது பாட்டியின் குரல்.

வீட்டாள்கள் மட்டும் கூட்டம் கூடி இருந்தனர். சொந்த பந்தங்களுக்கு இன்னும் இந்த பிரச்சினை பற்றி உரைக்கவில்லை.

முன்னால் நின்றிருந்த சக்தியின் தோளை பற்றி முன்னால் சென்று நின்றான் வெற்றி. அம்ருதா கசங்கிய சுடிதார் ஒன்றில் இருந்தாள். துப்பட்டா இல்லை. தலை வாரப்படாமல், உறக்கத்தால் உண்டான வாய் எச்சிலின் தடம் மறையாமல் நின்றிருந்தாள். அவளின் இரு பக்கமும் நின்றிருந்த அவளின் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தவன் அவர்களின் கரங்கள் அவளை வலுக்கட்டாயமாக பிடித்து நிறுத்தி வைத்திருந்ததையும் கவனிக்க தவறவில்லை.

இவன் வந்து நின்றதும் ஏறிட்டு பார்த்தவள் உடனே பார்வையை தாழ்த்திக் கொண்டாள். அந்த பார்வைக்கான அர்த்தத்தை படிக்க எதையும் செலவழிக்க தயார் என்ற நிலையில்தான் இப்போதும் இருந்தான் அவன்.

"என்ன வேணும்.?" என்றான் ராமனிடம்.

அவர் வாயை‌ திறக்க இருந்த நேரத்தில் "எதுவா இருந்தாலும் தனியா போய் பேசிக்கலாம். கல்யாண பொண்ணுக்கு உங்க பொண்ணை பத்திய எல்லா விசயமும் தெரியும். ஆனாலும் கூட இந்த டைம்ல அந்த பொண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்து சேர வேணாம். நீங்க தனியா வந்து பேசிட்டு கிளம்பி போங்க.." என்றார் தாத்தா.

"அம்மா என்னை விடும்மா.." சிறு குரலில் கெஞ்சிய அம்ருதாவை முறைத்தபடியே அவளை இழுத்துக் கொண்டு பாட்டியின் பின்னால் நடந்தாள் மேகலா.

அவளின் கெஞ்சல் வெற்றியின் காதிலும் விழுந்தது.

தனியறைக்கு வந்த பிறகும் கூட மறக்காமல் கதவை தாழிட்டாள் தேன்மொழி. அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே அக்காவின் அருகே வந்து நின்றான் ஆரவ்.

"என்ன பிரச்சனைன்னு இப்ப சொல்லுங்க.." என்றார் தாத்தா.

"ஏற்கனவே நடந்த பிரச்சனையை சொல்லி காட்டி இந்த டைம்ல காசு‌ பிடுங்க வந்திருந்தா தயவு செஞ்சி திரும்பி போயிடுங்க.. பொண்ணு வீட்டார் அவ்வளவு முட்டாள் இல்ல.." என்றாள் தேன்மொழி.

"தேனு.." வளர்மதியும், பாலாவும், வெற்றியும் ஒரே நேரத்தில் அதட்டினர். என்றைக்கு இருந்தாலும் அவளின் புகுந்தவீடு அதுதான். அப்படியிருக்கையில் இப்படி பேசினால் அது பிற்காலத்தில் அவளின் வாழ்க்கைக்கு பிரச்சனை ஆகாதா என்று பதறியது அந்த மூவரின் உள்ளமும்.

மேகலா தேன்மொழியை முறைத்துவிட்டு அதே பார்வையோடு மகனையும் எரிக்க முயன்றாள். அவள் தன் மீது உள்ள கோபத்தில் இப்படி பேசுகிறாள் என்பதை சொல்ல முடியாமல் தவித்தான் ஆரவ்.

"எனக்கு தெரிஞ்சி எங்க பொண்ணுக்கும் உங்க பேரனுக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இருக்க கூடாதுன்னு பேசிதான் முடிவு பண்ணிணோம்ன்னு நினைக்கிறோம்.." என்று ராமன் ஆரம்பிக்க "அதைதான் அப்பவே முடிச்சிக்கிட்டோமே.. அதனாலதான் எங்க பேரனுக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம்.?" என்றாள் தாயம்மா. அந்த நல்ல பொண்ணு என்ற வார்த்தைகளில் அளவுக்கு அதிகமாகவே அழுத்தம் இருந்தது.

"எங்க பொண்ணு பிரகனென்ட்.." என்று மேகலா ஆத்திரத்தோடு சொல்ல, வெற்றியின் கண்கள் அவனையும் மீறி பளபளத்தது. மனதுக்குள் ஓடிய குழப்ப சந்தோசத்தையும், நரக இன்பத்தையும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனதின் உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் இருக்க பெரிதும் முயன்றான். தன் வாழ்க்கையில் விதி ஆடும் சதிராட்டம் கண்டு அவனுக்கே சிரிப்பு வந்தது.

"புரியல.." என்றாள் அர்ச்சனா. தன் அண்ணன் மகன் மீது அவள் வைத்திருந்த அத்தனை நம்பிக்கையும் உடைந்துப் போன சோகம் அவளிடம் தெளிவாக தெரிந்தது. அவ்வளவு வெறுப்பாக பேசியவளிடம் மீண்டும் சென்று விழுந்தான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"எங்க பொண்ணு முழுகாம இருக்கான்னு சொன்னேன்.." மேகலாவின் குரலில் இப்போது கோபம் அதிகரித்து இருந்தது.

"ரோசமுள்ள மனுசனா இருந்திருந்தா என் பொண்ணை மறுபடி தேடியிருக்க கூடாது. அப்படி தேடியவன் இன்னொரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்க கூடாது.." மேகலா மேலே பேசும் முன் "என்னை விடும்மா. நான் போறேன்.. இங்கே இருக்க வேணாம் நாம.." என்றாள் அம்ருதா. அவளின் சிறு குரலில் பழைய வெறுப்பு இல்லை. ஆனால் ஏதோ பயம் மட்டும் அளவுக்கு அதிகமா தெரிந்தது.

"இரும்மா தாயே.. வந்தது வந்தாச்சி.. முழுசா பேசிட்டே போவிங்க.. இங்கே இருந்தா உன்னை என்ன கடிச்சா தின்னுட போறாங்க.?" வெற்றியின் கேள்வியில் நிமிர்ந்து முறைத்தாள். அந்த முறைப்பில் வெறுப்பு இருந்தது. வெற்றிக்கு ஆழ கடலில் மூழ்க வேண்டும் போல இருந்தது அவளின் வெறுப்பை காணும் போதெல்லாம்.

"வெற்றி என்ன இது.? எதுக்கு மறுபடியும் இப்படியொரு தப்பை பண்ணி வச்சிருக்க.?" என்று திட்டினாள் வளர்மதி.

"அம்மா‌ நீங்க சும்மா அண்ணனை திட்டாதிங்க. அந்த குழந்தை அண்ணனோடதுன்னு என்ன நிச்சயம்? எத்தனையோ பேரோடு சுத்திட்டு இருக்கா. குழந்தைக்கு யார் அப்பான்னு தெரியல. அதனால இப்ப அண்ணன் மேல பழி போட வந்திருக்காங்க.." தேன்மொழி சொன்னதை ஏற்றுக் கொள்ள விரும்பியது வெற்றியின் குடும்பம்.

"தேனு நீ சும்மா இரு.." குடும்பத்தார் அம்ருதாவின் குடும்பத்திடம் வாயை விடும் முன் வெற்றியே முந்திக் கொண்டான்.

அம்ருதாவின் முன்னால் வந்தான். தலை குனிந்து இருந்தவள் பயந்து பின்னால் நகர்ந்தாள். ஆனால் அவளுக்கு பின்னால் நின்றிருந்த ஆரவ் அவளுக்கு அந்த சந்தர்ப்பை தரவில்லை.

"அபார்ஷன் பண்ண எவ்வளவு செலவு ஆகும்ன்னு சொல்லு. தந்துடுறேன்.." என்றான்‌ கையை கட்டியபடி.

நிமிர்ந்தவளுக்கு குழப்பம்தான் முகத்தில் ஓடியது. அம்ருதாவின் குடும்பமோ நெருப்பாய் அவனை முறைத்தது.

"பண்றதையும் பண்ணிட்டு என்ன பேசுறான் பாரு.." என்று ஆரம்பித்த மேகலாவை முகம் பாராமலேயே கை காட்டி நிறுத்தியவன் "நாங்க பேசி முடிவுக்கு வந்துக்கறோம்.." என்றான். ஆரவ் தந்தையின் கை பிடித்தபடி சற்று தள்ளி பின்னால் நகர்ந்தான்.

குழம்பி நின்றிருந்த அம்ருதாவிடம் "ஏற்கனவே குழந்தையை கலைச்ச மாதிரி இந்த முறையும் கலைச்சிடு.. அதைதான் நீ செய்வன்னு எனக்கும் தெரியும். உன்னோட வயித்துல உருவான அந்த குழந்தை செத்துதானே போகணும்..?" எனக் கேட்டான்.

ஆத்திரம் பொங்க அவனை முறைத்தவள் "என் குழந்தை ஏன்டா சாகணும்.? நீ போய் செத்து தொலைடா சைக்கோ நாயே.!" என்றாள் கத்தலாக.

அவளின் கன்னத்தில் ஒரு அறையை ஓங்கி விட்டான். பலம் தாங்காமல் தரையில் விழ போனவளை ஓடிச் சென்று தாங்கினான் பாலாஜி.

"டேய்.." என்று ஆரம்பித்த பாலாஜியிடம் ஒற்றை விரலை காட்டி நிறுத்தியவன் "பின்ன என்ன *** பேச சொல்றியா.? அவ்வளவு லவ் பண்ணோம். அப்ப‌ உருவான குழந்தையை என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம அழிச்சிட்டு வந்தா. இப்ப.. ரேப்.. ரேப்ல உருவான குழந்தைக்கு இப்படி சொல்றா.? நானும் மனுசன்தானே.? எனக்கு மட்டும் பீலிங்ஸே இருக்காதா.?" என்று கத்தினான் அவனும்.

பயமும் கோபமுமாக அவனை வெறித்தாள் அம்ருதா.

"தயவுசெஞ்சி என்னை நீயாவது வெளியே கூட்டி போ பாலா.. இவன் பக்கத்துல இருக்க பயமா இருக்கு எனக்கு.." நண்பனின் நெஞ்சில் சாய்ந்து கெஞ்சினாள்.

பாலா‌ஜி அவளின் தோளை அணைத்தான்.

விசயம் நன்றாக மூளையில் பதிந்ததும் ராமன் கோபத்தோடு வந்து வெற்றியின் சட்டையை பிடித்தார்.

"என் பொண்ணை வலுக்கட்டாயப்படுத்தி.. உன்னை.." அவர் அவனை தாக்கும் முன் இடையில் புகுந்து விலக்கி நிறுத்தினார் தாத்தா.

"பேசிக்கலாம்.." என்றவர் பேரன் புறம் திரும்பினார். ஒரு அறையை விசிறி விட்டார்.

"என்னடா உனக்கு ஆச்சி.? எதுக்குடா இப்படி குழப்பம் மட்டுமே பண்ணி வச்சி தொலையுற.? ஏற்கனவே அவ உன்னை பிடிக்கலன்னுதானே விலகி போனா. அப்புறம் ஏன் அவகிட்ட இப்படி வலுக்கட்டாயப்படுத்தணும்.? இந்த பொண்ணு சொல்ற மாதிரி நீ நிஜமாவே சைக்கோதானா.?" அவருக்கு குரல் தளுதளுத்தது. கண்கள் கலங்கியது. வெற்றிக்கு குற்ற உணர்வு கொன்றது. ஆனால் முடிந்த காரியத்திற்கு வருந்தி என்ன பலன் என்று நினைத்தான்.

"அப்பா நீங்க மனசை போட்டு வாட்டாதிங்க.. நாம பேசிக்கலாம்.." என்று தாத்தாவின் அருகே வந்தார் வெற்றியின் தந்தை.

மொத்த குடும்பமும் வெற்றியை முறைத்தது.

"போலிஸ்க்கு போன் பண்ணு ஆரவ்.. நான் ஏதோ மறுபடியும் காதல், மறுபடியும் சண்டைன்னு நினைச்சேன். இப்படி ஒரு தப்பு நடந்திருக்கும்ன்னு தெரியாம போயிடுச்சி. உடனே போலிஸ்க்கு கால் பண்ணு.." ராமன் மகனை பார்த்து உத்தரவிட்டார்‌.

"ப்ளீஸ் நாம பேசி தீர்த்துக்கலாம்.." என்றார் வெற்றியின் அப்பா.

"இனி பேச ஒன்னும்‌ இல்லைங்க. தீர்த்துக்கலாம். போலிஸ் தீர்த்து வைப்பாங்க எல்லாத்தையும்.." என்ற ராமனின் கையை பிடித்தாள் மேகலா.

"நம்ம புள்ளை வாழ்க்கை என்னதுக்கு ஆகறது.? போலிஸ் வேணாம்.. இவனோடு கல்யாணத்தை பண்ணி வச்சிடலாம்.." என்றாள். அவளுக்கும் வலிக்கதான் செய்தது சேதி கேட்டு. ஆனால் என்ன செய்வது என்று அவளுக்கே புரியவில்லை. அபார்ஷன் செய்ய சொன்னவனிடம் அவள் சொன்ன பதிலே இவளின் மனதை ஏதோ செய்து விட்டது. குழந்தையை கலைக்க விரும்பாதவள் அவள். இவனை ஜெயிலுக்கு அனுப்புவதை காட்டிலும் திருமணம் நடத்தி வைப்பதே சிறந்தது என்று தோன்றியது.

"க.. கல்யாணமா.?" அம்ருதாவின் முகத்திலிருந்த ரத்தம் மொத்தமுமே மறைந்து போய் விட்டது.

"வே..‌வேணாம்.." பாலாஜியை விட்டுவிட்டு நகர்ந்து நின்றாள்.

அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த வெற்றிக்கு அதீத வலியில் சிரிப்புதான் வந்தது.

"இ.. இது இவன் குழந்தை இல்ல.." என்றாள்.

அவளை எங்கேயாவது மலை உச்சிக்கு கூட்டிச் சென்று அவளையும் தள்ளி விட்டுவிட்டு தானும் குதித்து விட வேண்டும் என்று தோன்றியது வெற்றிக்கு.

ஆரவ் உட்பட அனைவரும் அவளை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

"என்னடி உளறுற.? அப்படின்னா இது யார் குழந்தை.?" மேகலா கோபத்தோடு மகளை முறைத்தாள்.

"ம்.. அ.. அது.. வந்து க..‌கவின்.. ம். நான் அவனைதானே லவ் பண்ணிட்டு இருந்தேன்.. அவன்தான் இந்த குழந்தைக்கு அப்பா.." என்றவள் சொல்லி முடிக்கும் முன்பே போனை எடுத்து கவினுக்கு அழைப்பு விடுத்து விட்டான் வெற்றி. போனை ஸ்பீக்கரில் போட்டான்.

"ஹலோ சார்.. கிளம்பிட்டு இருக்கேன் சார்.. இன்னும் அரை மணி நேரத்துல மண்டபத்துக்கு வந்துடுவேன்.." என்றான் கவின் போனில்.

"கவின் இங்கே ஒரு பிரச்சனை. நீங்க கொஞ்சம் பதில் சொல்லணும். உண்மையை மட்டும் சொல்லுங்க. அம்ருதாவோட வயித்துல வளரும் குழந்தைக்கு அப்பா நீங்களா.?" என்றான் நேரடியாக.

அம்ருதா வெளிறி போனாள்.

கவினிடமிருந்து பதில் வரவில்லை. குழந்தை என்ற வார்த்தையே அவனை அதிகம் யோசிக்க செய்யும் என்று புரிந்துக் கொண்டான் வெற்றி.

"நீங்க பொறுமையா யோசிச்சே சொல்லுங்க.. நான் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்காம நீங்க சொல்வதை நம்ப மாட்டேன்.." என்றான் அம்ருதாவை பார்த்தபடி.

அம்ருதாவின் கண்களில் இருந்த பயத்தையும், அவளின் முகத்தையும் கண்டவனுக்கு என்னவோ செய்தது. தாங்க முடியவில்லை. இதயம் ஏன் இவ்வளவு வலிக்கிறது என்றே புரிந்துக் கொள்ள முடியவில்லை.

தன் இதயத்தின் துடிப்பின் காரணங்களை அவ்வளவு துல்லியமாக அறிந்து வைத்திருப்பவன் அவன். ஆனால் ஏன் இன்று இந்த இதயம் இப்படி துடிக்கிறது என்றுதான் கண்டறிய முடியவில்லை.

"நான் அம்ருதாகிட்ட பேசிட்டு சொல்றேன் சார்.." என்ற அவனின் பதிலில் கலகலவென சிரித்தான்.

"என்ன பாஸ் இது.? இவ்வளவு சிம்பிளான கேள்விக்கு பதில் தர முடியாதா.? சரி நான் டி.என்.ஏ டெஸ்டுக்கே போறேன்.." என்றவனிடம் "இல்ல சார்.." என்றான் அவன்.

அம்ருதா வாயை திறக்க முயன்றாள். சட்டென்று அருகே சென்று அவளை வளைத்தவன் அவளின் வாயை பொத்தினான். சுற்றி இருந்தவர்கள் கவின் சொன்ன பதிலில் அதிர்ந்து நின்றிருந்தார்கள். அம்ருதாவை ஒருவருக்குமே பிடிக்கவில்லை.

"அந்த குழந்தை என் குழந்தை இல்ல. ஆனா அவ விரும்பினா அந்த குழந்தைக்கு நானே தகப்பனா இருப்பேன்.. அது உங்க குழந்தையா இருக்க சான்ஸ் இருக்கு. ஏனா அவ என் பக்கத்துல உட்கார்ந்துட்டு கூட உங்களை மறக்க முடியலன்னுதான் அழுதுட்டு இருப்பா. உங்க வாசத்தை மறைக்க என் டிரெஸ் வாங்கிட்டு போனவ அவ. உங்களை மறக்க அவ செய்யாத செய்முறையே இல்ல. நீங்க கூப்பிட்டதும் அவ வந்திருந்தா கண்டிப்பா அது அவ தப்பு கிடையாது.." என்றவனின் குரல் சற்று மாறியிருந்தது.

அம்ருதா திமிர முயன்றாள். ஆனால் அவனின் கரம்தான் இறுகியது. வாயை பொத்தி இருந்தவன் அவளை தன் மீது சாய்த்து நிறுத்தினான். அவள் எதையும் அறியவில்லை. ஆனால் அவளின் நெருக்கத்தில் தன் மன இன்பத்தை அவனுக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக அனுபவித்துக் கொண்டிருந்தான் அவன்.

"ஒரு பொண்ணை காதலிக்கறதா சொல்லி ஏமாத்துறது, இயலாமையில் இருக்கும் பொண்ணை யூஸ் பண்ணிட்டு தூக்கிப் போடுறது உங்களுக்கு அவ்வளவு ஈசியா இருக்கா சார்.? ஆனா கண்டிப்பா அதுக்கான பலனை நீங்க அனுபவிப்பிங்க.. எனக்கு அவளோட குணம் பிடிச்சிருக்கு. அவளோட மனசையும் பிடிச்சிருக்கு. நீங்க தூக்கி போடுறதால அந்த வைரம் குப்பையா மாறிடாது. கண்டிப்பா நான் இருப்பேன் அவளுக்காக.. தயவு செஞ்சி இனி நீங்க அவளுக்கு எந்த‌ விதத்திலும் தொல்லை தராதிங்க ப்ளீஸ்.." என்றான் கவின்.

வெற்றி நகைத்தான். "தேவைக்கு அதிகமாகவே பதில் வந்துடுச்சி.. தேங்க்ஸ்.." என்றவன் இணைப்பை துண்டித்தான்.

"இது என் குழந்தை.." என்றான் வெற்றி அவளை விலக்கி நிறுத்திவிட்டு.

"இ.. இல்ல.." என்றவளிடம் "என் குழந்தைதான்.. வா போய் அபார்ஷன் பண்ணி விட்டுட்டு வரேன்.." என்று அவளின் கையை பற்றினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. காசு பணம் வேணுமான்னு கடவுள் வந்து கேட்டா கூட என் வாசக நட்புகளின் கமெண்ட்ஸ்தான் வேணும்ன்னு கேட்பேன் நான்..( நாலு கமெண்டை வாங்க எவ்வளவு கம்பி கட்ட வேண்டி இருக்கு.?🤧)
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN