காதல் கணவன் 79

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெற்றியின் குடும்பம் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்தது.

அம்ருதா கை விரல்களை இறுக்கினாள். தனக்கான தைரியத்தை‌ வரவழைக்க முயன்றாள்.

"அம்மா நான் வீட்டுக்கு போறேன்.." என்றவள் கதவை நோக்கி நடக்க அவளுக்கு முன்னால் குறுக்கே சென்று நின்றான் வெற்றி.

அவனின் கண்களில் இருந்த கோபத்தை கண்டவளுக்கு அவனை விடவும் அதிக கோபம் வந்தது.

"என்னை விடு. இல்லன்னா நடக்கறதே வேற.." அனலடித்தது வார்த்தைகளில்.

அவளின் கையை பிடித்தான். உருவ முயன்றவளை தன் அருகே இழுத்து நிறுத்தியவன் "நான் இனி கோபப்படாம இருக்கேன்.. இதுநாள் வரைக்கும் நான் உன்னை அடிச்சதுக்கு சாரி. உன்னை ரொம்ப ஹார்ஸா ட்ரீட் பண்ணிட்டேன்னு தெரியும். அதுக்காக மன்னிச்சிடு.. நாம கல்யாணம் பண்ணி இந்த குழந்தையை நல்ல முறையில் வளர்க்கலாம்.." என்றான். அவளுக்கான கடைசி வாய்ப்பு இது என்று நினைத்து சொன்னான். மேகலாவுக்கு உள்ளம் சற்று குளிர்ந்தது. ஆனால் வெற்றியின் குடும்பத்திற்கோ மனம் கசந்தது. இவளிடம் சென்று இந்த அளவிற்கு இறங்கி போகிறானே என்று அவன் மீதே கோபம் கொண்டனர்.

ஆனால் அவனின் வார்த்தைகள் அத்தனையும் அம்ருதாவிற்கு வெறுப்பைதான் தந்தன.

"உன் பிச்சை எனக்கு தேவை கிடையாது. என் குழந்தையை வளர்க்க எனக்கு தெரியும்.." என்றவளை உறுத்துப் பார்த்தவன் "பிச்சையா.? மண்ணாங்கட்டி புண்ணாக்கு.‌ நான்தான்டி உன்கிட்ட பிச்சை எடுத்துட்டு இருக்கேன்.." என்றான் கடுப்போடு.

பாலாஜி இரண்டும் கெட்டான் நிலையில் இருந்தான். அம்ருதாவின் மனதை மாற்றுவதா இல்லை அவளின் முடிவுக்கு துணை நிற்பதா என்று சுத்தமாக புரியவில்லை.

இகழ்ச்சி தவழ்ந்த உதடுகளை சுழித்தாள்‌ அம்ருதா. "எதிரியை கூட காதலிப்பேன். கல்யாணம் செய்வேன். ஆனா உன்னை.." இடம்‌ வலமாக தலையசைத்தாள்.

"எதிரியை விடவும் நான் மோசமாகிட்டேன் இல்ல.?" சிறு குரலில் கேட்டவன் "எதிரியை விட மோசமானவன் எதிரியை விடவும் மோசமாதான் நடப்பான்.." என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி. பயத்தில் மிடறு விழுங்கியவளை கண்டு உணர்ச்சிகளை தீர்த்தான். இனி இந்த மனதுக்குள் இவளின் பொருட்டு எந்த மென் உணர்வுமே தோன்ற கூடாது என்று முடிவெடுத்தான்‌.

மேகலாவின் புறம் திரும்பியவன் "உங்க பொண்ணை கல்யாணம் செய்துக்க எனக்கு சம்மதம் ஆன்டி. நீங்க இவளை ரெடி பண்ணி கூட்டி வாங்க.. நான் போய் தாலியை வாங்கிட்டு வரேன்.." என்றான்.

"வாட்.?" அவன் முன் இருந்தவள் கத்தினாள்.

"பைத்தியக்கார சைக்.." மேலே பேசும் முன் அவளின் வாயை பொத்தினான் வெற்றி.

"இந்த கல்யாணம் என் பொண்ணுக்கு வேணாம்.. ரேப்பிஸ்டுக்கு என் பொண்ணை கட்டி தர மாட்டேன்.." என்ற ராமனை திரும்பி பார்த்து முறைத்த அவரின் மனையாட்டி "உங்களுக்கு ஆப்சன் வேணுமோ.? ஒன்னு அவளை வெற்றிக்கே கட்டி வைங்க. இல்லன்னா குழந்தையை கலைச்சிட்டு வீட்டுக்கு கூட்டி வாங்க.." என்றாள்‌.

"நீ யோசிச்சிதான் பேசுறியா.?" என்று ஆரம்பித்த கணவரிடம் "எல்லாம் யோசிச்சாச்சி. இவளுக்கு திமிரு. இவ வாய்க்கு அந்த பையன் இவ்வளவு பொறுத்து போறதே பெரிய விசயம்..‌ இரண்டு பேர் மேலேயும் தப்பு இருக்கு. கட்டி வச்சிட்டா எப்படியோ போங்கன்னுட்டு அப்புறமாவது நிம்மதியா இருக்கலாம்.." என்றாள் சலிப்போடு.

வெற்றியின் பிடியிலிருந்த அம்ருதா திமிற முயன்றாள்.

"நான் ஏற்கனவே உன் மேல வெறியா இருக்கேன். அதை அதிகப்படுத்தாத.." என்று முனகியவன் "தேனு.. நீ வேணாம்.. கனி அந்த டேபிள் மேல கத்தரிக்கோல் இருக்கும் பாரு. அதை எடுத்துட்டு வா.." என்றான்‌.

"அவ நாக்கை கட் பண்ண போறான் போல.." கனிமொழிக்கு கவலையாக இருந்தது. தயக்கத்தோடு கத்தரிக்கோலை எடுத்து வந்தாள்.

"இது எதுக்கு.?" ஆரவ் அருகில் வந்தான்.

"அந்த வேஸ்ட் துணியில் கொஞ்சமா கட் பண்ணிட்டு வா.." என்றான்.

"எ.. எதுக்கு.?" ஆரவ்வுக்கு புரியவில்லை.

"உன் அக்கா வாயை கட்ட.. இல்லன்னா கல்யாணம் முன்னாடி எனக்கும் இவளுக்கும் கருமாதிதான் நடக்கும்.." என்றான்.

ஆரவ் மட்டுமின்றி மொத்த குடும்பமுமே அவனை அதிர்ச்சியோடுதான் பார்த்தது.

"இவ வாயை மூடிட்டாவே எனக்கு பெரிய பிரச்சனை தீர்ந்துடும்.."

"ச்சை.. என்ன பண்ற நீ.? விடுடா அவளை.." என்றார் ரங்கராஜன்.

அப்பாவிற்காக என்று கையை எடுத்தான்.

"மரியாதையா என் கையை விடுடா சைக்கோ நாயே.."

காது செவிடாகி விட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தோன்றியது இப்போது.

தன் தந்தையை முறைப்போடு பார்த்தான் வெற்றி.

"அம்மும்மா.. நீ கொஞ்சம் யோசிடாம்மா. அவன் பண்ணது தப்புதான். அவனுக்காக நான் வேணா மன்னிப்பு கேட்டுக்கிறேன்.." என்று அவளின் மனம் மாற்ற முயன்றார் தியாகராஜன்.

தாத்தாவிற்கும் மற்றவர்களுக்கும் இந்த மன மாற்ற வேலை சுத்தமாக பிடிக்கவில்லை.

"நீங்க நிறுத்துங்க சித்தப்பா.. இவ காலுல மட்டும்தான் விழல நாங்க. இவளுக்கு திமிர் அதிகம். அண்ணன் பிரம்மச்சாரியா வாழ்ந்துட்டு போகட்டும். இல்லன்னா ஜெயிலுக்கு போய் தொலையட்டும். இவ வேணாம்.." தேன்மொழி தனது மனதில் பட்டதை அப்படியே சொன்னாள்.

"நீயுமா குட்டி.? இவங்க பண்ற தப்புக்கு அந்த குழந்தை என்ன செய்யும்.? இவங்களை நம்பிதானே அந்த குழந்தை கருவா உருவாகி இருக்கும்.." என்றவர் இதழ் தாண்டிய விம்மலை மறைப்பதற்காக தலைகுனிந்த அம்ருதாவை பார்த்தார்.

"எல்லாம் ஒருநாள் சரியாகும்ன்னு நம்பு.. உன் கோபமெல்லாம் ஒரு நாள் பறந்து போகும். இவன் கோபமெல்லாம் ஒருநாள் தீர்ந்துப் போகும். உங்க காதல் செத்து போகல. அது எங்களுக்கே தெரியும்போது உங்களுக்கு தெரியலையா.?" எனக் கேட்டார்.

"ஆனா இவன் என்னை கொன்னுடுவானே மாமா.. எவனோ ஒருத்தன் ரோஜா பூ தந்ததுக்கு கூட என்னைதான் அடிச்சான்.. வாழ்க்கையை பயந்துட்டே வாழ கூடாது.. இவனால எனக்கு காதலை தர முடியாது. மரணத்தை மட்டும்தான் தர முடியும்.."

வெற்றிக்கு கடுப்பாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அந்த பிராங் பார்டிக்கே சப்போர்ட் செய்கிறாளே என்று கடுப்பானவன் "போதும் தாயே. இனி நானே ஆள் கூட்டி வந்து உனக்கு செட்டப் பண்ணி தரேன். நீ எந்த நாயோடு பேசினாலும், எந்த நாயோடு எப்படி இருந்தாலும் நான் கண்டுக்காக இருக்கேன். போதுமா.?" என்றான் ஆத்திரத்தோடு.

"வெற்றி என்ன இது.? நீயாவது தாழ்ந்து போகலாம் இல்லையா.?" என்ற அப்பாவிடம் "இதை விடவும் யாராலும் தாழ்ந்து போக முடியாது.." என்றான்.

"சக்தி ஒரு ஹெல்ப் பண்றியா.? இவளுக்கு தேவையான புடவை, ரெடிமேட் பிளவுஸ், தாலியெல்லாம் வாங்கிட்டு வரியா.?" எனக் கேட்டுவிட்டு தன் போனை கையில் எடுத்தான்.

"காசு மாத்தி விடுறேன்.."

"இவ்வளவுக்கு அப்புறமும் கல்யாணம் பண்ணிக்க போறியா.?" தேன்மொழி சந்தேகமாக கேட்டாள். அவன் பதில் சொல்லவில்லை.

சக்தி தன் மனைவியிடம் கண் சைகை காட்டிவிட்டு வெளியே நடந்தான்.

"என்னை விட்டுடு வெற்றி. செட் ஆகாது நமக்குள்ள.." உணர்ச்சிகளை தொலைத்த குரலில் சொன்னாள்.

"நோ சான்ஸ்.." என்றவன் மேகலாவிடம் திரும்பினான்.

"இவளை குளிக்க வச்சி கூட்டி‌ வரிங்களா.? பாத்ரூம் அங்கே.." என்று கையை காட்டினான்.

"உனக்கு புரியலையாடா சைக்கோ.? எனக்கு இந்த கல்யாணம் வேணாம்.."

"ஆயிரத்தியெட்டாவது முறை சொல்ற.. அழுக்கு டிரெஸ்ஸோடு இருக்கும் உன் கழுத்துல இப்படியே தாலி கட்டவும் நான் தயார்தான்.. ஒன்னு மரியாதையா போய் ரெடியாகி வா.. இல்லன்னா வந்து அபார்ஷன் பண்ணிடு.." என்றவன் நொறுங்கி விழும் அவளின் துணிவு கண்டு மனம் மகிழ்ந்தான். "உன்னை மாதிரி ஒருத்தி வயித்துல என் குழந்தை வளருவது எவ்வளவு ஆபத்துன்னு எனக்குதான் தெரியும். என் குழந்தையையும் உன்னை மாதிரியே நீ மாத்திடுவ. என் குழந்தையை நான் காப்பாத்தவாவது இந்த கல்யாணம் நடந்தாகணும்.." என்று விட்டு வெளியே நடந்தான்.

அம்ருதா அவனின் முதுகை வெறித்தபடி நின்றிருந்தாள். அருகே வந்து அவளின் கையை பற்றினாள் மேகலா.

"அம்மா.." என்றவளின் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு குளியலறைக்கு நடந்தாள்.

"எனக்கு இவனை பிடிக்கவே இல்லம்மா.." என்றவளை ஷவரின் அடியில் நிறுத்தினாள். பின்னலை கழட்டினாள்.

"அந்த பையன் உன்னை லவ் பண்றான். அதை புரிஞ்சிக்க பாரு.."

கசந்த முகத்தை சுளிப்பது கூட சிரமமாக இருந்தது அவளுக்கு. அம்மா விட்டு சென்றதும் ஷவரை பார்த்தாள். பிறகு வயிற்றில் கை பதித்து கண்ணீர் விட்டாள்.

"உனக்காக மட்டும்தான் இது.." என்று முனகியபடி உடையை கழட்ட ஆரம்பித்தாள்.

"எவன் கூட வேணாலும் சுத்துறா.. இவ நம்ம வீட்டு மருமகளா.?" என்று முனகியபடி இருக்கையை விட்டு எழுந்து நின்றாள் அர்ச்சனா.

"உங்க வீட்டு பையன் யோக்கியமா.? ஒருத்தி வயித்துல குழந்தையை வளர வச்சிட்டு இன்னொருத்தி கழுத்துல தாலி கட்ட போன அவரை விட எங்க பொண்ணு எவ்வளவோ மேல். உங்க பையன் ஒழுக்கத்தோடு என் பொண்ணை எப்பவும் கம்பேர் பண்ணாதிங்க. என் பொண்ணுக்கு வழியில்லாம இவருக்கு கட்டி வைக்கிறேன்னு நினைச்சி கண்டபடி பேசாதிங்க. ஏழு வருச ஜெயில் தண்டனையிலிருந்து பாவ மன்னிப்பு தந்தது நாங்கதான்.." என்றாள் மேகலா பட்டாசாக.

அர்ச்சனா முறைத்தாள் அவளை. பிறகு அங்கிருந்து வெளியே நடந்தாள். மற்றவர்களும் ஒவ்வொருவராக வெளியேறினர். தன்னை பார்க்காமல் முறுக்கிக் கொண்டு சென்ற தேன்மொழியை பார்த்தும் பார்க்காமல் இருந்தான் ஆரவ்.

"ஏன்ம்மா இப்படி.? நான் கூட நீங்க அக்காவுக்கு எதிரா நடப்பிங்களோன்னு நினைச்சேன். ஆனா அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுவிங்கன்னு நினைக்கல.." வியப்போடு சொன்னான் ஆரவ்.

"அவளுக்கு எது பெட்டர்ன்னு எனக்கு தெரியும். அதுக்காக யார் வேணாலும் என் புள்ளையை பேசலாமா.?" என்றாள்.

ராமனுக்கு சற்று முன்பு வரை மனைவியின் மீது கோபம்தான். ஆனால் அர்ச்சனாவிடம் அவள் பேசியதை கேட்டபிறகு கோபம் சற்று தணிந்து விட்டது. இந்த திருமணம் சரிதானோ என்றும் குழம்பியது மனது.

மாடியின் கைப்பிடி சுவரை பார்த்தபடி மணமேடையை பார்த்தான் வெற்றி.

வாயெல்லாம் பல்லாக அமர்ந்திருந்தான் நரேஷ். அவன் பேசி சென்ற வார்த்தைகள் சில செவிக்குள் திரும்ப திரும்ப வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஒற்றை ரோஜாவை அம்ருதா வாங்க கூடாது என்பதற்காக அத்தனை ஆர்ப்பாட்டம் செய்த தான் ஏன் நரேஷிற்கு பாரதி கிட்னி தந்தாள் என்று தெரிந்தும் கூட அமைதியாக இருந்தோம் என்று யோசித்தான். மனதிற்கு ஒன்றுமே விளங்கவில்லை.

உண்மையில் அம்ருதாவிற்கு ஆதங்கமா.? பாரதியிடம் தான் கோபப்படாதது கண்டு விரக்தியா.? குழம்பியது அவனுக்கு.

புடவையையும் மற்றவற்றையும் கொண்டு வந்து மேகலாவிடம் தந்தான் சக்தி. அவனின் கையிலிருந்த மற்றொரு கவரை பார்த்து கையை நீட்டினாள் அவள்.

"இல்ல.. இது என் வொய்ப்க்கு.." என்றவன் கனிமொழி எங்கே என்று தேடினான்.

பாட்டியின் பக்கத்தில் நின்றிருந்தாள். எதிரே சற்று தூரத்தில் இருந்த அம்மாவையும் அத்தையையும் மாறி மாறி கடை கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"கனி.." சக்தியின் அழைப்பில் திரும்பியவள் அவனின் கை சைகையை கண்டுவிட்டு ஓடினாள்.

"என்ன மாமா.?" என்றவளின் கைப்பிடித்து தனியறை ஒன்றிற்கு அழைத்து சென்றவன் "இந்த பிளவுஸை போட்டுக்க.. லூசா வாங்கிட்டு வந்திருக்கேன்.." என்றான்.

ஆச்சரியத்தோடு பார்த்தவள் கையை நீட்டி பிளவுஸை வாங்கினாள்.

"தே.. தேங்க்ஸ் மாமா.." என்றவள் கதவை நோக்கி கண் சைகை காட்டினாள்.

வெளியே போனான். சற்று நேரத்தில் கதவை திறந்து அவனை அழைத்தாள் அவளே.

"ஏன்டி.?"

"கழட்ட வர மாட்டேங்குது.‌" அரை அழுகையோடு சொன்னவளை பரிதாபமாக பார்த்தவன் "ஹெல்ப் வேணுமா.?" என்றுக் கேட்டான்.

தயங்கியபடியே ஆமென்று தலையசைத்தாள். கதவை இன்னும் சற்று திறந்தாள்.

மறுபக்கம் திரும்பி நின்று கொக்கிகளை கூட அவளே கழட்டி விட்டாள். ஆனால் கைகளில் இருந்துதான் வர மறுத்தது அந்த ரவிக்கை. சேலையை மாராப்பாக போர்த்தி மறைத்தபடி நின்றிருந்தவளின் கையிலிருந்த ரவிக்கையை சிரமப்பட்டுதான் இவனே கழட்ட ஆரம்பித்தான்.

"இவ்ளோ டைட்டா.?" என்று இடையில் நான்கைந்து முறை சொன்னான்.

"லூசா தைக்க மாட்டியா.?" திட்டினான்.

"அளவுக்கு பழசை கொடுத்திருந்தேன்.. இடையில சேலையே கட்டல இல்ல. ரொம்ப குண்டாகிட்டேன்.." கவலைப்பட்டாள்.

"ஒரு குண்டும் இல்ல.. வளர்ந்திருக்க கொஞ்சமா.." எப்படியோ பெரிய போராட்டத்திற்கு பிறகு அவளை விட்டு விட்டது அந்த ரவிக்கை.

கையில் வட்டமாக தடிப்பு இருந்தது. முதுகிலும் ரவிக்கை படிந்த கீழ் ஓரத்தில் தடிப்பு இருந்தது. கைகளை தேய்த்து விட்டாள். பாவம் பார்த்து முதுகை தேய்த்து விட்டான் அவன்.

"இப்ப ஓகேவா.?"

"ம்ம்.." என்றவளுக்கு இப்போதுதான் முழுதாக மூச்சே விட முடிந்தது.

"சீக்கிரம் வா.." என்றுவிட்டு வெளியே போனான்.

"நீங்க மட்டும் இல்லன்னா மூச்சடைச்சே செத்திருப்பேன்.." புது ரவிக்கையோடு வந்து நின்று சொன்னாள்.

அம்ருதா நிலை கண்ணாடியை பார்க்கவே இல்லை. விதியின் மீது கோபமாக வந்தது. எங்கேயாவது ஓடி போயிருக்க வேண்டும் என்று தோன்றியது.

நடை பிணம் போல இருந்தவளை அழைத்துக் கொண்டு நடந்தாள் மேகலா.

"அம்மா இந்த செகண்ட் நீ ஒத்துழைப்பு தந்தா கூட போதும். நான் பிழைச்சிப்பேன். நீயே என்னை இந்த நரகத்துல தள்ளி விடாத.." கெஞ்சினாள் சிறு குரலில்.

"என்கிட்ட வாங்கி கட்டிக்காத.. அமைதியா இரு.." என்றவள் வெற்றியின் அருகே அவளை அமர்த்தினாள்.

சொந்தங்கள் ஆச்சரியத்தோடு மணமக்களை பார்த்தது.

கவின் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தான். அம்ருதாவின் கலங்கிய விழிகளையும் உணர்ச்சிகள் தொலைத்த முகத்தையும் கவலையோடு பார்த்தான்.

அவள் தன்னிடம் வராமல் இவனிடம் வந்து விட்டாளே என்று ஆதங்கமாக கூட இருந்தது.

"உன்கிட்ட பிச்சையா கேட்கிறேன். என்னை விட்டுடேன்.." என்றாள் அம்ருதா.

அக்னியை பார்த்துக் கொண்டிருந்த வெற்றி அவள் புறம் திரும்பவில்லை.

"சாரி.. பிச்சை கொடுக்கற நிலையில் நான் இல்ல.." என்றவன் ஐயர் தாலியை தந்ததும் அவளின் கழுத்தில் கட்டினான்.

"என்னை ஏன் பிடிக்கலன்னு சொன்ன, ஏன் என்னை விட்டுட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க நினைச்ச, ஏன் என் குழந்தையை கலைச்ச.. எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்ட.. ஆனா என்னை ஏமாத்திட்டு போனதுக்கான நரகத்தை நீ நல்லாவே அனுபவிக்க போற. கேம் ஸ்டார்ட் நவ்." என்றவன் அவளின் கையை பற்றிக் கொண்டு அக்னியை சுற்றினான்.

டிஷ்யூம் டிஷ்யூம் நடக்குமா.? இல்ல காதலின் மேஜிக் நடக்குமா.? இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம் நட்புக்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN