காதல் கணவன் 80

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாரதியின் சொந்தம் பாரதிக்கும் நரேஷூக்கும் மொய் வைத்து சென்றனர். வெற்றியின் சொந்தம் வெற்றிக்கும் அம்ருதாவுக்கும் மொய் வைத்து சென்றனர்.

"ஒரு வாடகை தந்துட்டு இரண்டு கல்யாணம் பண்ணியிருக்காங்க.." என்று மண்டபத்தை வாடகைக்கு விட்டவர் புலம்பிக் கொண்டிருந்தார்.

சொந்தங்களின் கூட்டம் குறைந்தது. பாரதியின் குடும்பம் வெற்றியின் குடும்பத்திடம் சொல்லிக் கொண்டு கிளம்பிப் போனது.

அம்ருதாவிற்கு கால் வலித்தது.

"அம்மா நான் நம்ப வீட்டுக்கு வரேன். அதுதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே.." என்றாள் தாயிடம்.

வெற்றிக்கு சட்டென்று எரிச்சல் வந்தது.

"உன் வீட்டுக்கெல்லாம் உன்னை அனுப்ப முடியாது.." என்றான் கறாராக.

அம்மாவிடமிருந்து பார்வையை திருப்பியவள் தியாகராஜனின் முகம் பார்த்தாள்.

"நான் உங்க ரூம்லயே தூங்கிக்கட்டா மாமா.? ப்ளீஸ்.." என்றாள்.

மொத்த குடும்பமும் அவளை திகைப்போடு பார்த்தது.

"அம்ருதா என்னடி இது.?" கோபத்தோடு கேட்டாள் மேகலா.

"நான் இவன் ரூம்ல தங்கினா இவன் என்னை கொன்னுடுவான் அம்மா. தூங்கிட்டு இருக்கும்போது கொன்னுடுவான். அவனுக்கு எப்ப வேணாலும் கோபம் வரும். திடீர்ன்னு கோபம் வந்து தலையணையை வச்சி என் மூச்சடைக்கி என்னை கொன்னுடுவான்.." என்றாள் பயத்தோடு.

"நடிக்கறா.. சீன் பார்டி.." முனகினாள் தேன்மொழி.

"அப்படி ஆகாது அம்மும்மா.. இவன் அப்படி செய்ய மாட்டான்.." தயக்கமாக சொன்னார் அப்பா. அந்த குரலில் அவருக்கே உறுதி இல்லை என்பது புரிந்து இதயம் நொறுங்கியது வெற்றிக்கு. தன் தந்தையே நம்பாத தருணத்தில் இவள் தன்னை நம்பாதது பெரிய விசயமாக தோன்றவில்லை.

"நா..‌நான் அப்படி ஏதும் செய்ய மாட்டேன்.." என்றான் வெற்றி தலையை குனிந்தபடி.

அம்ருதா மறுப்பாக தலையசைத்தாள்.

"எ.. எனக்கு நம்பிக்கை இல்ல.. அம்மா நீ வேணா என்னோடு இருந்துடுறியா ப்ளீஸ்.?" என்று இப்போது அம்மாவிடம் கெஞ்சினாள்.

"ச்சை.. இவ நடிப்பை பார்க்கிறதுக்கு பதிலா நான் போய் ஏதாவது மொக்கை சீரியல் பார்ப்பேன்.." வெறுப்பாக சொல்லிவிட்டு அங்கிருந்துப் போனாள் தேன்மொழி. அர்ச்சனாவும் அவளோடு சென்றாள்.

"அக்கா.." ஆரவ் அருகில் வந்தான்.

"உனக்கு ஒன்னும் ஆகாது.. அவர் உன்னை எதுவும் செய்ய மாட்டாரு, நீ உன் வாயை திறக்காத வரை.." என்று சேர்த்துச் சொன்னான்.

அம்ருதா நெற்றியை பிடித்தாள்.

"எனக்கு சப்போர்ட் பண்ண ஒருத்தர் கூட இல்ல.." முனகினாள். "அப்படின்னா நான் செத்துடுவேன். கன்பார்ம். இவன் கொன்னுடுவான்.." தரையை பார்த்த வண்ணம் வேதனையோடு சொன்னாள்.

"இப்படி சொல்லாத அம்மு.." என்ற வெற்றியின் வார்த்தைகளில் நிமிர்ந்தாள்.

"இதுக்கு நீயே என்னை கொல்லலாம்.. உன் பேச்சுதான் என்னை கொல்லுது.." என்று தலையை பற்றினான். "எனக்கு செத்துடலாம் போல இருக்கு உன் வெறுப்பை பார்க்கும்போது.." என்றவன் கண்களை இறுக்க மூடினான். 'அவ மேல காட்டப்படும் காதலும் கடல்ல கரைச்ச பெருங்காயமும் ஒன்னுதான். ஒரு யூஸும் இல்ல.. உன்னோட எந்த உணர்வையும் காட்டாம இரு வெற்றி..' தன்னிடமே கட்டளையிட்டவன் "நான் அப்படி செய்ய மாட்டேன்.." என்றான்.

மேகலா முன் வந்து நின்றாள்.

"அம்ருதா நீ என்னை நம்பு. இவன்.. இவர் மறுபடி உன்னை அடிச்சா உடனே நீ என்கிட்ட சொல்லு. நான் உடனே பார்க்கறேன்.." என்றவள் மருமகன் புறம் திரும்பினாள்.

"எங்க பொண்ணுக்கு எந்த சேதாரமும் ஆகாதுன்னு சொல்லி சத்தியம் பண்ணி கொடுத்தா மட்டும்தான் என் பொண்ணை உங்களோடு அனுப்புவேன்.." என்றாள்.

வெற்றி தன் துணைவியானவளை இகழ்ச்சியாக பார்த்தபடி சென்று அணைந்த அக்னியை ஒரு தட்டு தட்டினான். அருகில் மீதியாகி இருந்த யாக பொருட்கள் அள்ளி அதில் கொட்டினான். அடியிலிருந்த நெருப்பு கங்குகள் பற்றிக் கொண்டதில் குப்பென்று பற்றியது தீ. அக்னியின் மீது உள்ளங்கையை காட்டினான்.

"இந்த அக்னி சாட்சி. உங்க பொண்ணை அடிக்கவோ துன்புறுத்தவோ மாட்டேன்.." என்றான்.

அம்ருதாவின் கண்களில் இருந்த தயக்கம் தீரவில்லை இன்னும்.

"பாட்டி நம்ம வீட்டுல இருக்கும்‌ என் ரூமை சுத்தம் செய்ங்க. நாங்க இனி அந்த வீட்டுலயே இருக்கோம். அட்லீஸ்ட் அந்த வீட்டுல நிறைய பேர் இருப்பது இவளுக்கு பாதுகாப்பா இருக்கலாம்.." அது தன் மனதிற்கான பாதுகாப்பு என்பதை அவன் மட்டும்தான் அறிவான்.

***

தாத்தாவின் வீட்டின் முன் வந்து நின்றது கார். வெற்றி முன் சீட்டிலிருந்து இறங்கினான். அம்ருதா பின்சீட்டிலிருந்து இறங்கினாள்.

இருவருக்கும் யாரும் ஆரத்தி எடுக்க‌ விரும்பவில்லை. தியாகராஜனே தனக்கு தெரிந்த அளவில் ஆரத்தியை கரைத்து எடுத்து வந்து மகன் மருமகளுக்கு சுற்றினார்.

"எ.. நம்ம ரூம் மேல் மாடியில் லெப்ட் சைட் ஆறாவது ரூம்.." என்ற வெற்றி அவள் முகம் பாராமல் "கீர்த்து.." என்று அழைத்து அவளோடு வெளியே கிளம்பினான்.

பாட்டியும் வளர்மதியும் ஒருபுறம் நின்று முறைத்தார்கள். அர்ச்சனாவும் தேன்மொழியும் ஒரு பக்கம் நின்று முறைந்தார்கள். மறுவீட்டுக்கு அழைத்து செல்ல விரைவில் வருவதாக அம்மா சொல்லி இருந்தாள். அதுவரை இங்கே எப்படி இருப்பது என்ற குழப்பத்தோடு நின்றிருந்தவளின் வலது கையை பற்றியது ஒரு கரம். திரும்பிப் பார்த்தாள். பாலாஜி நின்றிருந்தான். சினேகமாக புன்னகைத்தான். அவளின் இதழ்கள் கொஞ்சமாக விரிந்தது.

"என் சின்ன வயசு போட்டோவை பார்க்கணும்ன்னு ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தியே.. இப்ப பார்க்கலாம் வரியா.?" என்ற அவனின் கேள்வியில் விழிகளை அகல விரித்தவள் "வாவ்.. வா.." என்று அழைத்தாள்.

அவளை மாடிக்கு அழைத்துச் சென்றான். அவளோடு சேர்ந்து தன் தாயாரின் அறைக்குள் நுழைந்தான்.

"இது எங்க அம்மாவோட ரூம்.." என்று சொன்னவனுக்கு சொல்லும்போதே மகிழ்ச்சியாக இருந்தது.

"அதுதான் எங்க அம்மா.." என்று கையை காட்டினான்.

"நான்தான் பார்த்திருக்கேனே.." என்று திரும்பியவள் "வாவ்.." என்றாள். போட்டோவை நோக்கி நடந்தாள்.

"அந்த வீட்டுல எங்க அப்பா ஒரே ஒரு போட்டோவைதான் டிசைன் டிசைனா பிரேம் போட்டு வச்சிருப்பாரு. ஆனா இங்கே நிறைய இருக்கும். இது எங்க அம்மாவோட மேரேஜ்க்கு முன்னாடி எடுத்த போட்டோ.."

அருகில் சென்றவள் அந்த ஆளுயர புகைப்படத்தை அண்ணாந்துப் பார்த்தாள். வெற்றியின் சாயல்தான் அதிகம் இருப்பது போலிருந்தது.

"ரொம்ப அழகு.." என்றவளின் கழுத்தை திருப்பினான். அவன் திருப்பி காட்டிய திசையில் குட்டி பாலாஜி அம்மாவின் காலை கட்டியபடி நின்றுக் கொண்டிருந்தான். பள்ளிக்கு கிளம்பிய முதல் நாளாக இருக்கலாம்.

"வாவ்.. அம்மாவோட இந்த பாப்பா ரொம்ப அழகு‌‌.." கொஞ்சியவளின் பின்னலை பிடித்து இழுத்தவன் "அது பாப்பா இல்ல. தம்பி.." என்றான்.

"நோ.. பாப்பாதான்.. அழகான குட்டி பாப்பா.."

"அப்படின்னா நான் வேற போட்டோஸ் காட்ட மாட்டேன்.." என்றவன் அவள் பாப்பா சொல்ல மாட்டேன் என்று வழிக்கு வந்து பிறகு ஆல்பத்தை எடுத்து வந்து கட்டிலில் வைத்தான்.

ஆர்வத்தோடு வந்து அமர்ந்தாள்.

"இது முழுக்க நானும் அம்மாவும் வெற்றியும்தான் இருப்போம்‌.." என்றவன் ஆல்பத்தை புரட்டினான்.

அவன் காட்டிய ஒவ்வொரு புகைப்படத்தையும் ரசனையோடு பார்த்தாள். அனைத்துமே அழகான நினைவுகளை சுமந்த புகைப்படங்களாக இருந்தன.

"இது.. ஏய் நீதானே‌‌.. இதென்ன பட்டாம்பூச்சி வேசம்?" என்று அம்ருதா ஆரம்பிக்க அவசரமாக ஆல்பத்தை திருப்பியவன் "அதை நீ பார்க்க கூடாது.." என்றான்.

"ஏன்.. நான் பார்ப்பேன்.. அழகான பட்டாம்பூச்சி.. லேடீஸ் பட்டாம்பூச்சி.." என்று விழுந்து விழுந்து சிரித்தாள் அம்ருதா.

கன்னங்கள் சிவக்க தலை குனிந்தவன் "ஸ்கூல் பங்ஷன்ல எடுத்த போட்டோ. ரொம்ப ஓட்டாத.." என்றான்.

ஆனால் அவளோ சிரிப்பை நிறுத்தவேயில்லை.

"இந்த பாலாக்குள்ள இவ்வளவு திறமைகள் இருக்குன்னு தெரியாம போச்சே.. அதெப்படி இந்த பாலா பையனுக்கு ஆண் பட்டாம்பூச்சியா வேசம் தராம பெண் பட்டாம்பூச்சி வேசம் தந்தாங்களோ.? முடியல பாலா.. ரொம்ப சிரிப்பா வருது‌.." வாயை பொத்தியபடி சிரித்தாள்.

"அன்னைக்கு அந்த பெண் பட்டாம்பூச்சி வேசம் போடுற ஸ்டூடன்ட் வரல. அதனால அவசரத்துக்கு எனக்கு போட்டு விட்டாங்க.." என்றவன் அடுத்த புகைப்படத்தை காட்ட ஆரம்பித்தான்.

அம்ருதாவின் சிரிப்பு சத்தம் அந்த அறையை விட்டு வெளியேவும் கேட்டுக் கொண்டிருந்தது‌. தனது அறைக்கு வந்த அர்ச்சனாவுக்கும் இந்த சிரிப்பு சத்தம் கேட்டது. பற்களை அரைத்தபடி தனது அறைக்கு போனாள்.

***

தனது அம்மாவின் கல்லறை முன் நின்றிருந்தான் வெற்றி.

"இது வொர்க் ஆகும்ன்னு நம்புறியா.? நாம இதே மாதிரி நிறைய முறை கயிறு கட்டியிருக்கோம். ஆனா உன் கோபம் அடங்கியதே கிடையாது.." என்றாள் கீர்த்தனா சோகமாக.

"இது கடைசி ஒரு முறை.." என்று வலது கையை நீட்டினான். கீர்த்தனா கல்லறையை நோக்கி கும்பிட்டுவிட்டு திரும்பினாள். வெற்றியின் கையில் சிகப்பு நிற கயிறு ஒன்றை கட்டினாள்.

"உனக்கு கோபம் வர கூடாது. நீ யாரையும் அடிச்சி உதைக்க கூடாது. இது உங்க அம்மா மேல சத்தியம்.." படபடக்கும் இதயத்தோடு சொன்னாள்.

வெற்றி கண் சிமிட்டாமல் எதிரே வெறித்தான்.

"இந்த முறையாவது ஹெல்ப் பண்ணுங்கம்மா.." முனகிவிட்டு திரும்பினான்.

"அவ ஏன்டா உன் மேல அவ்வளவு கோபப்படுறா.? ரொம்ப அடிச்சிட்டியா.?" கீர்த்தனா அவனோடு இணைந்து நடந்தபடி கேட்டாள்.

"நிறைய முறை அடிச்சிருக்கேன். எவ்வளவு அடி வாங்கினாலும் சுத்தி வருவா. நானேதான் அவளை அடிப்பேன். நானேதான் அவளோடு பேசாம இருப்பேன். ஆனா அவளாவே கெஞ்சுவா. செய்யாத தப்புக்கு கூட சாரி கேட்பா. என் நிழலை கூட விட்டு விலக மாட்டா. ஆனா திடீர்ன்னு தலைகீழா மாறிட்டா. பிரகனென்ட்ன்னு அவ சொன்ன பிறகு நான் அவளை அடிக்கவேயில்ல. ஏன் தொட கூட இல்ல.. ஆனா அவளாவே குழந்தையை கலைச்சிட்டு என் கோபத்தோடு குப்பை கொட்ட முடியாதுன்னு சொல்றா.." என்று தலையை கோதியவன் பைக்கில் ஏறி அமர்ந்தான்.

அவனின் புஜத்தை பற்றினாள் கீர்த்தனா. திரும்பியவனிடம் "எதுக்கு அத்தனை முறை அடிச்ச.? எனக்கு புரியல.." என்றாள்.

வெற்றி தோள்களை குலுக்கினான்.

"சும்மாதான்.." என்றான்.

"நீ என்ன சைக்கோவா சும்மா சும்மா அடிக்க.?" அவளின் கேள்வி கண்டு சிரித்தவன் "அப்படி இல்ல.. யாராவது அவளோடு பேசினா எனக்கு பயங்கரமா கோபம் வரும். அவ அவளோட கசின் கூட காப்பி ஷாப் போனா கோபம் வரும். நான் கூப்பிடுற டைம்க்கு வந்து சேராம இருந்தா கோபம் வரும். அதெல்லாம் சில்லரை கோபம் கீர்த்து. யாருக்குதான் கோபம் வராம இருக்கு.? ஏன் உன்னை பாலாஜி இதுக்கெல்லாம் அடிச்சதே இல்லையா.?" எனக் கேட்டான்.

விழித்தவள் "அவன் ஏன்டா இதுக்கெல்லாம் அடிக்க போறான்.? நான் என் கசின் கூடதான் தனியா வந்திருக்கேன் இப்ப. அதுக்காக அடிப்பானா.? அவன் சொல்ற டைம்க்கு நான் என்னைக்குமே ரெடியானது இல்ல. அதுக்கெல்லாம் அடிக்கிறதா இருந்தா நான் ஒரு நாளைக்கு இரண்டு மூனு வேளை அடி வாங்க வேண்டி இருக்கும். நீ இப்படியெல்லாம் அடிச்சதுக்குதான் கோபம் வந்து அவ இப்படி திட்டுறா.. நானா இருந்திருந்தா கொன்னு போட்டிருப்பேன்.." என்றாள் ஆத்திரத்தோடு.

வெற்றி நகைத்தான்.

"லூசு.. நான் அடிச்ச போதெல்லாம் அவ அமைதியாதான் இருந்தா.. காதல்ல கொடுக்கல் வாங்கல் வேற மாதிரியானது. எனக்கு உரிமை உள்ள ஒருத்தியைதான் நான் அடிக்க முடியும்.. அவளுக்கு அது பிடிக்கலன்னா முதல்லயே சொல்லணும். அது என்ன கடைசியா மாப்பிள்ளை ஒருத்தனை வீட்டு நடுவுல கொண்டு வந்து உட்கார வச்ச பிறகு சொல்றது?" என்றவனுக்கு அந்த நினைவில் சீற்றம் உண்டானது.

"சரி விடு.." தோளில் தட்டினாள். அவனின் கோபம் சற்று அடங்கியது.

"ஹாஸ்பிட்டல் போய் ரெடி பண்ணிக்கோ.. இல்லன்னா இந்த கோபத்துக்கும் அவ வாய்க்கும் சேர்த்து உங்க இரண்டு பேர் கல்லறைதான் இங்கே இருக்கும்.."

"நானும் பார்த்துட்டேன். உணர்ச்சிவசபடாம இருக்கணும்ன்னு சொல்றாங்க. அதுல நிறைய சிக்கல்கள் உண்டு. நீ உட்காரு.." என்றவன் பைக்கை இயக்கினான்.

அவன் வீடு வந்து சேர்ந்த சில நிமிடங்களில் அம்ருதாவின் வீட்டிலிருந்து மறுவீடு அழைக்க வந்தனர். யாரும் துணைக்கு வந்து நிற்கவில்லை. ஒருவரையொருவர் முகத்தை காணாமல் அம்ருதாவும் வெற்றியுமே கிளம்பினர்.

***

கனிமொழி தயக்கத்தோடு சக்தியின் முன் வந்து நின்றாள்.

கட்டிலின் மீதிருந்த தூசியை தட்டி படுக்கையை விரித்தவன் "சீக்கிரம் தூங்கு. நாளைக்கு காலேஜ் போகணும்.." என்றான்.

"மாமா.." தயங்கியவளை ஏறிட்டுப் பார்த்தான்.

"ம். சொல்லு.."

அவனின் முகத்தை காணும் சக்தி இல்லாமல் தலை குனிந்தவள் "நாம நிஜமான கணவன் மனைவி போல வாழலாமா.?" எனக் கேட்டாள்.

"புரியல.." என்றவன் கட்டிலின் மீது அமர்ந்தான்.

"இல்ல.. இந்த தாம்பத்தியம்.." இழுத்தாள்‌. அதற்கு மேல் சொல்ல துணிவு வரவில்லை. எப்போதும் துணையிருக்கும் தைரியம் இப்போது காணாமல் போயிருந்தது.

"அதானே பார்த்தேன். உன்னையெல்லாம் திருத்த முடியுமா.? பிசாசு.. உனக்கு எப்பவும் இந்த உடம்பு மேல மட்டும்தானே ஆசை?" என்று முகம் சுளித்தவனால் சட்டென்று நீர் திரண்டது அவளின் கண்களில்.

"இ.. இல்ல மாமா. ஒரு குழந்தை பிறந்தா அப்புறம் உங்க அம்மா உங்களை ஏத்துப்பாங்க.. அதுக்குதான்.." என்றாள்.

யோசனையோடு நெற்றி சுருக்கியவன் "ஒட்டு கேட்டியா.?" என்றான் எரிச்சலோடு.

"இல்ல.. அத்தைக்கு ஏன் உங்க மேல கோபம்ன்னு தெரியல. கண்டுபிடிச்சி சமாதானம் செஞ்சி வைக்கலாம்ன்னு நினைச்சேன்.!" என்றவளை கிண்டலாக பார்த்தான்.

"அவங்களுக்கு குழந்தைதான் பிரச்சனை. நான் லேட்டா பெரிய மனுசி ஆனதால எனக்கு குழந்தை பிறக்காதுன்னு அன்னைக்கு கூட ஒரு பாட்டி சொன்னாங்களே.. அதைதான் அத்தையும் நம்பிட்டாங்க போல. நான் அப்படியெல்லாம் இல்லதானே.? எனக்கு எந்த குறையும் இல்லன்னு நீங்களே கூட சொன்னிங்களே.. எனக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும் மாமா.. என் அம்மா சொன்ன கருணை, அத்தை சொன்ன தியாகமெல்லாம் என்னால ஏத்துக்க முடியல. எனக்கு உடம்புல எந்த கோளாறும் இல்ல. நீங்க என்னை நம்புறிங்கதானே.?" எனக் கேட்டாள்.

சரி வார்த்தை 1300 தாண்டிடுச்சி. ஒரு பிரேக்கை‌ விடுவோம். எச்சூச்சுமி பிரெண்ட்ஸ் கமெண்ட் ப்ளீஸ்..😍😍😍
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN