காதல் கணவன் 82

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதல் கணவன் 82

கனிமொழியின் மௌனமும் சக்தியின் மௌனமும் அந்த அறை முழுக்க ஒருவித அழுத்தத்தை தந்துக் கொண்டிருந்தது.

கனிமொழி மூச்சு விடும் சத்தம் கூட அவனின் செவிகளில் தெளிவாக கேட்டது.

"டைவர்ஸ் தரட்டுமா மாமா.?" வெகுநேர மௌனத்திற்கு பிறகு, அவன் உறங்கவில்லை என்பது புரிந்துக் கேட்டாள்.

"அமைதியா இருடி. நானே இங்கே குழப்பத்துல இருக்கேன். யார் என்ன சொன்னாலும் கேட்பியா.? உனக்கே இது அறிவு கெட்டத்தனமா தெரியல.. இந்த விஷ பரிட்சைக்கு யாரை கேட்டு நீ என்னை தேர்ந்தெடுத்த.? உன் ஸ்கூல்ல ஒருத்தன் கூடவா இல்ல?" என்றான் எரிச்சலோடு.

உதடு கடித்தவள் "என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சது நீங்க மட்டும்தான் மாமா.." என்றாள்.

மீண்டும் மௌனத்தின் பிடியில் ஆழ்ந்தான்.

"ஆனா அப்புறம்தான் புரிஞ்சது. நான் உங்களை லவ் பண்ணது எனக்கு அவ்வளவு பொருத்தமாதான் தெரிஞ்சது. உங்களை தவிர வேற யாரை நினைக்கறதுன்னு யோசிக்கற அளவுக்கு போயிடுச்சி மனசு. உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களை நினைச்சி கனவு காணுறது பிடிச்சிருக்கு.." என்றாள்.

"ம்ம்.."

"நான் வேற ஏதாவது நல்ல பொண்ணா பார்க்கட்டா.?" தயக்கமாக கேட்டாள். அவளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவளின் விழிகள் அவனை பார்க்கவில்லை.

"அவசர புத்தியில் ஏதோ பண்ணிட்டேன்னு நினைக்கிறேன் மாமா. சாரி. உங்களுக்கு என்னை பிடிக்கும்ன்னு நினைச்சேன்.."

"ஆம்பள முன்னாடி அவுத்து போட்டு நின்னா மயங்கிடுவான்னு நினைச்சியா.?" அதிர்ச்சியோடு நிமிர்ந்தவள் மறுப்பாக தலையசைத்தாள்.

"நான் அந்த அர்த்தத்துல அப்படி செய்யல மாமா. நான் சின்ன பொண்ணுன்னு நினைச்சி வேண்டாம்ன்னு சொல்றிங்களோன்னு நினைச்சேன்.‌ நான் சின்ன பொண்ணு இல்லன்னு சொல்ல நினைச்சேன்.." என்றாள் மேலும் தயக்கமாக.

"நீ உடம்பால பெரிய பொண்ணு ஆகியிருக்கலாம். ஆனா என் மனசுல வளரல கனி. நான் அப்படி பார்த்த மாதிரியேதான் இப்பவும் பார்க்கறேன். நீ ஒரு குட்டிப் பாப்பா.."

முகத்தை மூடியபடி மறு பக்கம் திரும்பிக் கொண்டாள். 'இந்த ஆளு திருந்த மாட்டான் கனி..' என்று தனக்குள் திட்டினாள்.

"நீ பார்த்த மொத்த ஆண்களிலும் நான் மட்டும்தான் அழகா தெரிஞ்சேனா.?" அவள் கொட்டாவியை விட்டு கண்களை மூட இருந்த நேரத்தில் கேட்டான்.

"ம். ஆமா. இதை மட்டும் நம்பவா போறிங்க.?" சலித்துக் கொண்டாள்.

அவன் அதன் பிறகு எதுவும் கேட்கவில்லை. பேசவில்லை.

***

அடுத்த நாள் அம்ருதாவையும் வெற்றியையும் அவர்களது வீட்டுக்கு அழைத்துச் செல்ல இருந்தாள் மேகலா.

"நான் இங்கேயே இருக்கட்டா.?" அம்ருதா அம்மாவிடம் கேட்டாள்.

"லூசு மாதிரி பண்ணாத.. நீ அந்த வீட்டுல இருப்பதுதான் முறை. அப்பதான் ஒழுங்கா சோறாவது சாப்பிடுவ.." என்று திட்டினாள்.

வெற்றியின் வீட்டில் இன்றுமே கூட யாரும் அவர்களை வரவேற்கவில்லை. தியாகராஜன்தான் வரவேற்று காப்பி கலந்து கொண்டு வந்து தந்தார்.

பாலாஜி அம்ருதாவின் அருகே வந்து கையை பற்றினான். எல்.கே.ஜியில் முதல் நாள் பள்ளி சென்று அமருகையில் பயந்து நடுங்கிய நேரத்தில் வந்து கைப்பிடிக்கும் அந்த முதல் தோழனின் நினைவு வந்தது இவளுக்கு. கையை இறுக்கிக் கொண்டாள்.

"பயப்படாத.." சிறு குரலில் முனகினான். சரியென்று தலையசைத்தாள்.

"சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதிங்க சம்பந்தி. நான் அடிக்கடி வந்து பார்ப்பேன். என் பொண்ணு சேதாரம் இல்லாம இருக்கணும் எப்பவும்.." என்றாள் மேகலா.

வெற்றி அங்கிருந்து நகர்ந்துப் போய் விட்டான். தியாகராஜன் உறுதிமொழி தந்தார்.

மேகலா மனமேயில்லாமல் அங்கிருந்து போனாள்.

அவளுக்கான உணவை தியாகராஜனே அழைத்து பரிமாறினார். "நம்பிக்கையா இரும்மா.." என்றார்.

வெற்றி வெகுநேரம் கழித்து தனது அறையை விட்டு வெளியே வந்தான். மாடி வராண்டாவின் ஓரத்தில் இருந்த சோபா ஒன்றில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் அம்ருதா. அருகே நெருங்கினான். அதற்குள் எங்கிருந்தோ வந்தான் பாலாஜி. தோழியின் அருகே நின்றான். அண்ணனை கலவரமாக பார்த்தான்.

வெற்றி நகைத்தான். "என்னடா பிரெண்டுக்கு அவ்வளவு பாதுகாப்பா.? நீ இருந்தா இவளை ஏதும் செய்ய முடியாதா.? இவ தனியா கிடைக்கவே மாட்டாளா.?" என்றான் நக்கல் பார்வையோடு விழியுயர்த்தி.

பாலாஜி எச்சில் விழுங்கினான். "நீ கரெக்டா இரு. இல்லன்னா கையை காலை உடைச்சி மூலையில் உட்கார வச்சிடுவேன்.. அப்புறம் இவ பாவம் பார்த்து சோறும் குழம்பும் பிச்சை போட்டாதான் உண்டு.‌" என்றான்.

வெற்றிக்கு சிரிப்புதான் வந்தது இம்முறையும்.

சோபாவில் இருந்தவளை பார்த்தான். விழித்துக் கொண்டிருந்தாள். அவனை பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெற்றி பற்களை அரைத்தான்.

"நான் வெளியே போறேன். உனக்கு ஏதாவது வேணுமா.?" என்றான் நேரடியாக அவளிடம்.

பற்களை கடித்தபடி முறைத்தவள் வேண்டாமென்று தலையசைத்தாள்.

"அப்புறம் புருசன்காரன் எனக்கு எதுவும் வாங்கி தரலன்னு உங்க அம்மாகிட்ட சொல்லிடாத.." என்று சொல்லிவிட்டு வெளியே நடந்தான்.

பாலாஜி தோழியின் அருகே அமர்ந்தான். அவளும் எழுந்து அமர்ந்தாள்.

"ஏன் அம்ருதா இந்த குழந்தையை நீ கலைக்கல.?" எனக் கேட்டான்.

நிமிர்ந்தவள் "என் குழந்தை ஆச்சே. நான் எப்படி கலைப்பேன்.? என்னை நம்பிதானே இந்த குழந்தை உருவாகி இருக்கும்.. பாவம்.. எத்தனை லட்சம் உயிரணுக்களோ.? எவ்வளவு முயற்சி பண்ணியிருப்பாங்க.." என்றாள் ஆச்சரியத்தோடு.

"அப்புறம் என்ன டேஷ்க்கு முதல் குழந்தையை கலைச்ச.? மொத்த பிரச்சனைக்கும் காரணம் அதுதானே.?" என்றான் எரிச்சலாக. இப்போது இவ்வளவு வக்கனையாக பேசுபவள் அப்போது ஏன் அதை யோசிக்கவில்லை என்று கடுப்பாக இருந்தது.

விழிகள் உடனே கலங்கியது. தலையை குனிந்துக் கொண்டவள் "அன்னைக்கு சூழல் அப்படி.." என்றாள்.

"அப்படி என்ன சூழல்.?" அவனின் எரிச்சல் தீரவில்லை.

"அவன் அந்த பிராங் பார்டிக்காக என்னை அடிச்சிட்டான்.." என்றாள் விரக்தியாக.

"அந்த ரீசனையே ஓட்ட டேப்ரிக்கார்டர் போல திருப்பி திருப்பி சொல்லாத.."

"அது ஒன்னு மட்டும்தான் ரீசன்.." கத்தாத குறையாக சொன்னவள் முகம் கடுகடுக்க எழுந்து நின்றாள்.

"எனக்கு தூக்கம் வருது. தூங்க போறேன். இங்கே கொசு கடிக்குது. நான் எங்கே தூங்கட்டும்.?" எனக் கேட்டாள்.

வெற்றியின் அறையை கை காட்டினான் இவன்.

***

கனிமொழி கலங்கும் விழிகளோடு அமர்ந்திருந்தாள்.

"மறுபடியும் எதுக்கு என்னை தேடி வந்திருக்க.? நான் சொன்ன விசயம் வொர்க் அவுட் ஆகியிருக்கணுமே.." என்றாள் எதிரில் இருந்தவள்.

"அது மேட்டர் இல்ல.. என் மாமாவுக்கு என்னை பார்த்து பீலிங்க்ஸே வரலையாம். நான் சின்ன பொண்ணு மாதிரி அவரோட மனசுக்கு படுறேனாம். அவர் டிரை பண்ணாலும் கூட என் மேல லவ்வோ லஸ்டோ வரலையாம். நான் என்ன செய்றது.?" எனக் கேட்டாள் கவலையாக.

எதிரில் இருந்தவள் தீவிரமாக யோசித்தாள்.

பிறகு தனது ஆலோசனையை சொல்ல ஆரம்பித்தாள். கனிமொழி அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டாள்.

"சரிங்க. தேங்க் யூ. நான் வரேன்.." என்று கிளம்பிப் போனாள்.

கனிமொழி வீட்டிற்கு வந்தபோது சக்தி‌ ஹாலில் நின்றபடி அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

"எங்கேடி போன காலேஜ் கூட வராம.?" எனக் கேட்டான் கோபமாக.

"பிரெண்ட் ஒருத்தரை பார்க்க போயிருந்தேன்.." என்றவள் அறைக்குள் புகுந்தாள். தனது உடைகளை டிராவல் பேக்கில் அடுக்க ஆரம்பித்தாள்.

"என்ன செய்ற.?" சக்தியின் கேள்விக்கு "நான் நம்ம வீட்டுக்கு போறேன்.." என்று திரும்பாமலேயே பதிலை சொன்னாள்.

"என்ன திடீர்ன்னு.? அவங்க உன்னை திட்டி அனுப்பி இருக்காங்க. மறந்துட்டியா.?"

மேஜையின் மீதிருந்த தனது அலங்கார பொருட்களை பார்த்தவள் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துவிட்டு மறந்தது போல பெட்டியை பூட்டினாள்.

"எனக்கு உங்களை பிடிக்கல. அதனாலதான் எங்க வீட்டுக்கே போறேன். அவங்க என்னை திட்டினா நானே சமாளிச்சிக்கிறேன்.." என்றவளை தன் புறம் பற்றி திருப்பினான்.

"என்னடி கொழுப்பா.? நேத்து வரை மாமா மாமான்னு உருகிட்டு இருந்த. இன்னைக்கு ஏன் பிடிக்காம போச்சி.?" என்றவனுக்கு அவளின் இந்த பேச்சை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அவனின் முக மாற்றத்தை மனதுக்குள் குறித்துக் கொண்டவள் "நீங்கதான் சொன்னிங்களே, உங்களுக்கு என்னை பிடிக்கலன்னு. பிறகு ஏன் நான் உங்களுக்கு பாரமா இருக்கணும்.? எனக்கு ஏத்த ஏதோ ஒரு கழுதையையோ குதிரையையோ பார்த்து காதலிச்சிட்டு போறேன் விடுங்க.. நீங்க இனியாவது என் தொல்லை இல்லாம நிம்மதியா இருங்க.." என்றாள்.

சக்திக்கு அதிர்ச்சிதான் கூடியது. என்ன பதில் தருவது என்றே புரியவில்லை.

"உங்க அம்மா உன்னை திட்டுவாங்க.." என்றான் கடைசியில்.

"பரவால்ல.. என் அம்மாதானே.? நானே திட்டு வாங்கிக்கிறேன்.." என்றவள் பெட்டியை இழுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அவளுக்கு முன்னால் பாய்ந்து போய் கதவை மறித்து நின்றான் சக்தி.

அவனை ஏற இறங்க பார்த்தாள் இவள்.

"நான் என் அம்மாகிட்ட சண்டை போட்டு உன்னை கல்யாணம் பண்ணி இருக்கேன். இப்ப நீ அந்த வீட்டுக்கு போனா நான் தோத்தது போல ஆகும். நான் உன்னை விட மாட்டேன்.."

கனிமொழிக்கு மூக்கு சிவந்தது.

"அம்மாகிட்ட யாரும் தோற்க மாட்டாங்க. உங்க அம்மா உங்களை இளக்காரமா பார்க்க மாட்டாங்க. எதுவா இருந்தாலும் கொஞ்ச நாள்ல மறந்துடும். என்னை விடுங்க.." என்றவள் தனது குட்டி பர்ஸிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து இவனிடம் நீட்டினாள். பர்ஸில் இன்னும் நிறைய ஐநூறுகள் இருந்தது. பர்ஸை எட்டி பார்த்தவனை கண்டு விட்டு "இது என் பெரியப்பா, அப்பா, அண்ணன்கள், தாத்தா, பாட்டி, அக்காவெல்லாம் கல்யாண மண்டபத்துல இருந்தபோது தந்த காசு. கல்யாணமான பொண்ணு. நிறைய செலவு இருக்கும்ன்னு தந்தாங்க. அப்பா கூட பத்தாயிரம் அக்கவுண்ட்ல மாத்தி விடுறேன்னு சொன்னாரு. நான்தான் வேணாம்ன்னு வந்துட்டேன்.." என்றாள்.

சக்திக்கு சற்று பொறாமையாக இருந்தது. பெண்ணாக, அதுவும் கடைசி வாரிசாக இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

"நான் கிளம்பறேன் மாமா.." என்றவள் எட்டி அவனின் கன்னத்தில் முத்தம் தந்தாள்.

"மிஸ் யூ.." என்றவள் அவனை தள்ளி நிறுத்திவிட்டு வெளியே நடந்தாள்.

கனிமொழியின் முதுகை வெறித்தபடி நின்றவன் அவளை பின்தொடர நினைத்த நேரத்தில் திரும்பிப் பார்த்தவள் "பாலோவ் பண்ணாதிங்க. நான் உங்ககிட்ட வர மாட்டேன்.." என்று சொல்லிவிட்டு கேட்டை தாண்டி போனாள்.

சக்தி திகைப்பு தீராமலேயே நின்றிருந்தான்.

***

தனது அறை கதவை திறந்த வெற்றி கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அம்ருதாவை கண்டுவிட்டு தயங்கியபடி உள்ளே வந்தான். எழுந்தால் கத்துவாளோ என்று பயமாக இருந்தது. அதே சமயம் வெளியே விடவும் மனம் வரவில்லை.

தான் வந்த பொருட்களை மேஜையின் மீது வைத்துவிட்டு வெளியே போனான். பாலாஜி ஓடி வந்து இவனின் கையை பிடித்தான்.

"நீங்க பிரேக்அப் பண்ணிக்கும் முன்னாடி என்ன நடந்தது.?" என்றுக் கேட்டான்.

"எதுக்கு இது.?" என்றவனிடம் "இல்ல.. தேவைப்படுது சொல்லு.. நீ அந்த பிராங் பார்டியை அடிச்சதுக்காக இவ குழந்தையை கலைப்பாளா.? எனக்கு புரியல.. நீ ஏதாவது மிரட்டி அபார்ஷன் பண்ண வச்சியா.? இல்ல குழந்தை யாரோடதுன்னு ஏதாவது கேள்வியை கேட்டு தொலைஞ்சியா.?" எனக் கேட்டான்.

வெற்றி அதிர்ந்தான். சகோதரனை முறைத்தான்.

"லூசா நீ.? நான் ஏன் அப்படியெல்லாம் கேட்க போறேன்.?" எனக் கேட்டவன் "ஒரு விசயத்தை புரிஞ்சிக்க.. அவ பிரகனென்டுன்னு சொன்னதே அந்த பிராங் பார்டி விசயமெல்லாம் முடிஞ்ச பிறகுதான். நானும் அவளும் பார்க்ல பேசிட்டு வரும்போது ஒருத்தன் வந்து பூ தந்தான். நான் அவனை பிடிச்சி அடிச்சேன். வேணாம் வெற்றின்னு வந்த இவளுக்கும் ஒரு அறை விட்டேன். இல்லைன்னு சொல்லல. ஆனா அன்னைக்கு கோச்சிக்கிட்டு போனது அவ இல்ல. நான்தான். கோச்சிக்கிட்டு வந்துட்டவனுக்கு போனை பண்ணி கெஞ்சி சாரி கேட்டது அவதான். அவன் யார்ன்னு கூட தெரியாதுன்னு அழுது மன்னிப்பு கேட்டு என்னை சமாதானம் செய்ய முயற்சி பண்ணது அவதான். ஆனா நான் அப்பவும் கூட அவளை மன்னிக்கல. இரண்டு நாளா அவளோடு முறுக்கிக்கிட்டுதான் இருந்தேன். இரண்டு நாளா போன் பண்ணிட்டேதான் இருந்தா. நான் எடுக்கல. அப்புறம் மூனாவது நாள் அவ பிரகனென்டா இருப்பதா மெஸேஜ் அனுப்பி இருந்தா. அப்புறம்தான் எனக்கு சமாதானம் ஆச்சி. அவளை பார்த்து கொஞ்சிட்டு ஒரு வார டிரெயினிங் கிளம்பினேன். டிரெயினிங் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்த அடுத்த நாள் காலையில் அவளை பொண்ணு பார்க்க வந்ததா தகவல். எனக்கு எவ்வளவு கோபம் வரும்.?" என்றான் ஆத்திரத்தோடு.

பாலாஜி இடம் வலமாக தலையசைத்தான்.

"எங்கேயோ இடறுது. ஒருவேளை அவ பிரகனென்ட் இல்லையோ.? உன்னை சமாதானம் செய்ய அப்படியொரு பொய்யை சொல்லி இருப்பாளோ.?" எனக் கேட்டான்.

வெற்றியும் திடுக்கிட்டுப் போனான்.

"ஆனா அவ.." குழம்பியது.

"அந்த ஒரு வாரத்துல அவ உன்னை பத்தி ரியலைஸ் பண்ணி இருப்பா. இப்படி பொய்யை சொன்னது உனக்கு தெரிஞ்சா மறுபடியும் பயங்கர சண்டை வருமோன்னு பயந்து கூட, உன்கிட்டயிருந்தும், உன்னோட கேள்விகள்கிட்டயிருந்தும் மொத்தமா தப்பிக்க கூட உன்னை பிரேக்அப் பண்ணி இருக்கலாம்.." என்றான்.

வெற்றிக்கு தலையை பிய்த்துக் கொள்ள தோன்றியது. வேறு எந்த யோசனையும்‌ வரவில்லை.

இருவரும் தங்களின் கணிப்பு எந்த அளவுக்கு சரியானது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் வளர்மதி சண்டையிடும் சத்தம் கேட்டது. இருவரும் எட்டி பார்த்தனர்.

கீழே கனிமொழி இருந்தாள். வளர்மதி எதிரில் நின்று அவளை திட்டிக் கொண்டிருந்தாள்.

சகோதரர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு கீழே ஓடினர்.

"இந்த‌ வீட்டுக்குள்ள அவ வர கூடாது.‌." என்று கத்தினாள் வளர்மதி.

அர்ச்சனா ஓரமாக நின்றபடி கனிமொழியையும், அவளின் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்த மஞ்சள் தாலியையும் மாறி மாறி வெறித்தாள்.

தாத்தா வரும்வரை அங்கேயே நின்றிருந்த கனிமொழி அவர் வந்ததும் தனது தந்தையின் புறம் திரும்பினாள்.

"இது எங்க தாத்தா கட்டிய வீடு. இங்கே வாழ எனக்கு முழு உரிமையும் இருக்கு. என்னை உள்ளே வர கூடாதுன்னு சொல்ல யாருக்கும் ரைட்ஸ் கிடையாது.." என்று சொல்லிவிட்டு தனது அறையை நோக்கி நடந்தாள்.

ஆக்சுவலி இந்த கனிமொழியோட நேத்து சீன் இருந்தது இல்லையா, அது ஒரு ஒரிஜினல் கேரக்டர்கிட்டயிருந்து ஆட்டைய போட்டதுதான். நான் அதை நம்பல. ஆனா அவ நம்புறா. சயின்ஸை தவிர வேறு எதையும் நம்புறது இல்ல நான். ஆனா அந்த விசயம் சுவாரசியமா இருந்ததேன்னு சுட்டுட்டேன்.😂

கைப்பிடித்த கண்ணாளா, கை சேராயோ கனவே, காதலெனும் நெடும்வனத்தில் - இந்த மூன்று கதைகளும் புத்தகமாக வெளிவர இருக்கிறது நட்புக்களே..

அலைபேசி எண்கள் =
+91 93602 24172 , 04342-268769

(திருவள்ளுவர் பொத்தக இல்லம், 51/25A, Dr.LSN வணிக வளாகம், ஆறுமுக ஆசாரித் தெரு, தருமபுரி - 636701)

மேற்கண்ட எண்ணுக்கு அழைத்து நீங்க புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். கை சேராயோ கனவே விலை - 260₹ கைப்பிடித்த கண்ணாளா - 280₹ காதலெனும் நெடும்வனத்தில் - 180₹. கொரியர் சார்ஜ் எக்ஸ்ட்ராவா வரும்ன்னு நினைக்கிறேன்‌. ஆனா நீங்க ஒரு புக் வாங்கினாலும் மூனு புக் வாங்கினாலும் ஒரே கொரியர் சார்ஜ்தான் வரும். தருமபுரிக்குள் இருக்கும் நட்புக்கள் புத்தகத்தை நேரிலேயே வாங்கிக் கொள்ளலாம். திருவள்ளுவர் பொத்தக இல்லத்திலோ, அல்லது தர்மபுரியில் நடைப்பெற இருக்கும் புத்தக திருவிழாவின் பொழுதோ நீங்க புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்..

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN