அத்தியாயம் 99

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யஷ்வந்தின் குலுங்கிய உடல் கண்டு திகைத்தாள் செல்லா.

"அண்ணா எழுங்க.." அவனின் தோள் பற்றினாள்.

சூர்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

"யஷூ.. எழு.." என்றவன் அறைக்குள் வந்த தாரணியை கண்டு அதிர்ந்தான். தோளில் பெரிய கட்டாக இருந்தது. இரு உள்ளங்கைகளிலும் கட்டு இருந்தது. முகத்தில் கொஞ்சமும் களை என்பதே இல்லை.

"அச்சோ என்ன ஆச்சி.?" என்று அவளருகே ஓடினான். வயிற்று பிள்ளைக்காரிக்கு ஏன் இத்தனை கட்டுகள் என்று பதறினான். அவளின் ஒடுங்கிய உடம்பும், மேடு ஏறிய வயிறும் பரிதாபத்தை மட்டும்தான் தந்தது.

"எங்க அப்பா இவளை கொல்ல போயிட்டாரு. ஜஸ்ட் மிஸ்.. ஏஞ்சல் அனுப்பிய ஆள்தான் சரியான நேரத்துல வந்து காப்பாத்தி இருக்காங்க. இல்லன்னா என் பொண்டாட்டியும் புள்ளையும் அவ்வளவு ஏன் என் வாழ்க்கையும் கூட முடிஞ்சிருக்கும்.." என்றான் யஷ்வந்த் கரகரத்த குரலில்.

செல்லாவுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. அதற்கு மேல் இருந்தான் சூர்யா. தாரணியை இன்னும் ஒரு முறை திரும்பிப் பார்த்தான். வயிற்றுப்பிள்ளைக்காரியை கொல்ல நினைக்கும் அளவுக்கு இவ்வளவு கொடூரரா அவர் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

"ஒரு செகண்ட் லேட் ஆகியிருந்தா கூட மொத்தமா போயிருக்கும். நெஞ்சுல கத்தியால குத்த வந்திருக்காரு. இவளோட போராட்டத்துல கத்திக்குத்து தோளுல விழுந்திருக்கு. கையில் பதினாழு வெட்டுக்கும் மேல.." என்றவனுக்கு நிதர்சனம் உறைத்ததில் இதயம் நடுங்கிக் கொண்டே இருந்தது.

சூர்யாவுக்கு நாக்கு எழவே இல்லை.

தாரணி தயக்கத்தோடு‌ செல்லாவின் முன்னால் வந்து நின்றாள். கையை கூப்பினாள்.

"நான் உங்களுக்கு எவ்வளவோ பெரிய துரோகம் பண்ணி இருக்கேன். ஆனாலும் நீங்க என் உயிரை காப்பாத்தி இருக்கிங்க.. என்னோட முட்டாள்தனம் என்னையே கொல்ல வந்துடுச்சி. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அந்த நேரத்தை நினைக்க நினைக்க அவ்வளவு பயமா இருக்கு.. நீங்க செஞ்ச உதவிக்கு தேங்க்ஸ்.." என்றாள்.

"உ..உட்காருங்க.." இருக்கையை கை காட்டினான் சூர்யா. வெகுநேரம் முயன்றதில் இதைதான் சொல்ல முடிந்தது அவனால்.

தாரணி தனக்கு என்ன துரோகம் செய்தாள் என்று செல்லாவுக்கு புரியவில்லை.

அவள் குழப்பத்தில் இருந்த நேரத்தில் அறைக்குள் வந்தாள் பூங்கொடி. அண்ணனின் இறுதி சடங்கில் பங்கு கொண்டு விட்டு திரும்பியவள் குளித்து விட்டு மருமகளை காண வந்தாள்.

"செல்லாம்மா நல்லா இருக்கியா.? இரண்டு நாளா உன் ஞாபகமாகவேதான் இருந்தது. நேரா நேரத்துக்கு சாப்பிட்டியா.?" என்றாள் மருமகளின் தலையை வருடி.

யஷ்வந்த் அத்தையை கண்டதும் அவசரமாக முகத்தை துடைத்துக் கொண்டான்.

"சாப்பிட்டேன்ம்மா.." சிறு குரலில் சொன்ன செல்லாவை ஓரக்கண்ணால் பார்த்தான் சூர்யா. இந்த இரண்டு நாட்களும் அவள் சரியாக உண்ணவேயில்லை. அவள் தவறு செய்தாள் என்பதற்காக பிறக்காத ஒரு ஜீவனையும் அரை பட்டினியாக இருக்க விட்டு விட்டோமே என்று தன் மீதே கோபம் வந்தது சூர்யாவுக்கு.

"ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு. வாமிட் வந்ததா.? மாத்திரை சாப்பிடலையா நீ.?" கோபித்துக் கொண்ட பூங்கொடி மருமகள் பயன்படுத்தும் மேஜையை சென்று திறந்தாள். மாத்திரை அட்டையை எடுத்து பார்த்துவிட்டு திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

"ஒரு மாத்திரை கூட சாப்பிடல.. என்ன நினைச்சிட்டு இருக்க நீ.? இதுக்குதான் நீ ஆபிஸ்க்கு போக கூடாதுன்னு நான் சொன்னேன்.." என்று திட்டியவள் மகனின் முகத்தை கண்டு குழம்பினாள்.

"உனக்கு என்ன ஆச்சி.? நீ ஏன் இப்படி கப்பல் கவுந்த மாதிரி இருக்க? உன் பொண்டாட்டிதானே.? மாத்திரை மருந்து ஒழுங்கா சாப்பிட்டாளான்னு பார்க்க மாட்டியா.?" என்று கடுகடுத்தாள்.

பூங்கொடியின் திட்டை கண்டு தாரணிக்கு முகம் வாடியது. ரூபிகா அவள் மீது பாசமாகதான் இருந்தாள். ஆனால் விதி சேர்ந்திருக்க விடவில்லையே என்று மனம் வருந்தியது. தனக்கும் தன் மாமியாரின் கவனிப்பு வேண்டுமென்று ஏங்கியது. சோஃபாவில் அவளருகே அமர்ந்திருந்த யஷ்வந்த் மனைவியின் வாடிய முகத்தை கண்டுவிட்டு அவளின் தோளோடு அணைத்துக் கொண்டான். அவனின் தோளில் சாய்ந்தாள் தாரணி. இந்த இரண்டு நாட்களும் அவன் துடித்த துடிப்பை கண்ட பிறகு அவளால் நொடி நேரம் கூட விலகி இருக்க முடியவில்லை.

"சும்மா கொஞ்சிக்கிட்டே இருந்தா மட்டும் போதாது. அக்கறையாவும் இருக்கணும்.." என்று மகனுக்கு பாடம் எடுத்தாள் பூங்கொடி. ஆனால் அவளுக்குதான் ஏதோ உறுத்தியது. தான் என்ன சொன்னாலும் உடனுக்குடன் மறுத்து பேசும் மகனும் மருமகளும் இன்று அமைதியாக இருப்பது கண்டு சந்தேகம் வந்தது. இருவருக்குள்ளும் ஊடல் என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தாலும் கூட அதை நம்ப முடியவில்லை.

"மறந்துட்டேன்ம்மா.. இனி மறக்காம இருப்பா அவ. இன்னும் அவ சாப்பிடல.. கூட்டிப் போய் சாப்பாடு கொடுங்க.‌"

செல்லா அவனைப் பார்த்தாள். அவளின் கண்களில் இருந்த சோகம் கண்டு தலை குனிந்தவன் "போய் சாப்பிடு.." என்றான் மென்மையான குரலில். இரண்டு நாட்களின் வெறுப்புக்கு பிறகு வெளிவந்த மென்மை. அமைதியாக அத்தையுடன் சென்றாள் செல்லா.

"என்னாச்சி உனக்கும் அவளுக்கும்.?" என்றான் யஷ்வந்த்

சூர்யா அவனுக்கு எதிரே வந்து அமர்ந்தாள். தனக்கும் அவளுக்கும் இடையில் நடந்த ஊடலை பற்றி மறைக்காமல் சொல்லி விட்டான்.

"உனக்கு மனைவியை விட அந்த ஆள் முக்கியமா போயிட்டானா.?" என்ற யஷ்வந்தை விசித்திர பார்வை பார்த்தவன் "லூசா நீ.? அவளுக்கு புத்தி பிசகி போச்சி. எதிரின்னு தெரிஞ்ச எல்லோரையும் கொல்லுறா.. உன் மனைவி வேற அவளுக்கு துரோகம் பண்ணிட்டதா உளறி வச்சிட்டாங்க. எனக்கு இப்பவே நடுங்குது. அவளோட அடுத்த குறி உன் மனைவியாதான் இருக்கும்.." என்றான்.

தாரணிக்கு உடம்பு சிலிர்த்தது.

"சும்மாவே கொல்றா.. சைக்கோ மாதிரி மாறிட்டா. எனக்கு என் பொண்டாட்டியை விட யாரும் முக்கியம் கிடையாதுதான். ஆனா அவளை போலவே எல்லோரும் முக்கியம். என் அம்மாவுக்காக உன் அப்பாவை மன்னிச்சி விட்டேன் நான். ஆனா அவ உனக்காக உன் மனைவியை மன்னிப்பாளா..?" என்றுக் கேட்டான்.

யஷ்வந்தின் தொண்டை குழி ஏறி இறங்கியது. இப்படி ஒரு முரணை அவன் எதிர்பார்க்கவில்லை. மனைவியை அணைத்திருந்த கரம் மேலும் இறுகியது.

"உன் அப்பா இறந்ததுல உனக்கே கவலை கிடையாதுன்னா எனக்குமே கவலை கிடையாதுதான். ஆனா ஒன்னை புரிஞ்சிக்க. அவ உன் மனைவியை காப்பாத்தல. இட்ஸ் எ கோஇன்சிடென்ட். அவ உன் அப்பாவை கொல்ல நினைச்ச நேரமும் உன் அப்பா உன் மனைவியை கொல்ல நினைச்ச நேரமும் ஒன்னா இருந்துடுச்சி. அவ்வளவே. நாளைக்கு உன் மனைவியை அவ கொல்ல முயற்சிக்கும்போது நீ என்ன காரணம் சொல்லி அவளோட எண்ணத்துக்கு சப்போர்ட் பண்ணுவ?" எனக் கேட்டான்.

யஷ்வ்ந்தின் திகைப்பு கூடிக் கொண்டே சென்றது. ஆனாலும் நெஞ்சில் இருந்த சிறு நம்பிக்கையோடு நிமிர்ந்தான். "என் ஏஞ்சல் அப்படி கிடையாது. அவகிட்ட நானே சொல்லி புரிய வச்சிக்கிறேன்.."

சூர்யா கேலியோடு அவனைப் பார்த்தான்.

***

வீடே மௌனத்தின் பிடியில் இருந்தது. யாருக்கும் சரியாக உணவு இறங்கவில்லை. கர்ப்பவதியை கொல்ல இவருக்கு எப்படி மனசு வந்தது என்றெண்ணி ரூபிகாவும் சுவிக்ஷாவும் பயத்தில் உறைந்திருந்தனர். தாரணியின் காயங்கள் உண்மையென அறியப்பட்டு விட்டதால் அந்த வீட்டின் மற்ற புதல்வர்களும் கூட எதுவும் வாய் திறக்கவில்லை.

யவனாவின் அருகிலேயே இருந்தான் வருண். அவள் அவனை கொஞ்சவில்லை. அதற்காக அவனும் அவளிடம் எதுவும் கெஞ்சவில்லை. காலத்தின் பிடியில் சிக்கிய அகதிகள் போல இருவரும் இருந்தனர். விலக்கவும் முடியவில்லை. விலகவும் முடியவில்லை.

யவனா ஹாலின் ஒரு மூலையிலேயே அரை தூக்கத்தில் தலை சாயும் வேளையிலெல்லாம் அவளை தூக்கிச் சென்று அவளின் அறையில் உறங்க வைத்தான். அவள் சாப்பிட தயங்கும் வேளைகளில் கண்களிலாலேயே மிரட்டி உண்ண வைத்தான். சுவிக்ஷா அவ்வப்போது வருணை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். தன் மகளை அவன் கவனித்துக் கொள்ளும் விதம் கண்டு பெற்ற மனம் சற்று நெகிழதான் செய்தது. அவளை அவன் காதலிக்கிறான் என்பதில் அவளுக்கு துளியும் சந்தேகம் இல்லை. விரைவில் அவர்களுக்கு திருமணத்தை நடத்தி முடித்து விட வேண்டும் என்று விரும்பினாள் அவள்.

***

வாசலிலேயே அமர்ந்திருந்தாள் சங்கவி. ஆதீரன் காரை விட்டு இறங்கியதும் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.

"ஐ மிஸ் யூ.." என்றவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவன் "நானும்.." என்றான். மூன்று நாள் பிரிவு இவ்வளவு நீண்டிருக்கும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை.

தனது தங்கை தாரணிக்கு வெட்டு காயம் விழுந்தது என்று பெங்களூர் சென்றவன் இரண்டு நாட்கள் அவளோடுதான் இருந்தான். தாரணியின் மாமனார் உயிரோடு இருந்திருந்தால் இவன் துண்டாக்கி விட்டு வந்திருப்பான். அவ்வளவு வெறியில் இருந்தான்.

தங்கையும் தங்கை கணவனும் வெளிநாட்டு பயணம் செல்வதாக சொல்லி கிளம்பிய பிறகு உடனே விட்டு வர முடியாமல் தனது பெரியம்மாவோடு ஒருநாள் இருந்தான் ஆதீரன். அம்மாவின் முகம். ஆனால் அவளின் குணமோ முற்றிலும் மாறுப்பட்டு இருந்தது. அவனுக்கு குணவதியை ரொம்ப பிடித்திருந்தது.

"உங்க தங்கச்சி நல்லாகிட்டாங்களா.?"

"ம்ம்.." என்றவன் அவளின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

காந்திமதியும் காத்தவராயனும் விசாரித்து முடித்த பிறகு தனது அறைக்கு சென்றான். அவன் அறை கதவை திறக்க இருந்த நேரத்தில், "நீங்க என்னை கூட்டி போகல. உங்க தங்கச்சி என்னை பத்தி என்ன நினைப்பாங்க.?" என்று புலம்ப ஆரம்பித்தாள் சங்கவி. அவளை வியப்பாக பார்த்தவன் "அவ அப்படி ஏதும் நினைக்க மாட்டா.. நீ இந்த மூனு நாளும் அமைதியா இருந்தியா.? இல்ல ஓசி போன் வாங்கி எவனுக்காவது கால் பண்ணிட்டு இருந்தியா.?" எனக் கேட்டான்.

மூன்று நாட்களாக சேர்த்து வைத்திருந்த காதலும் தாபமும் நொடியில் சிதைந்து போய் விட்டது அவளுக்கு.

அவனின் கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்டவள் அங்கிருந்து திரும்பி நடக்க, அவளின் முந்தானையை பற்றி இழுத்தான் ஆதீரன்.

"என்ன.?" என்றாள் திரும்பிப் பார்த்து முறைத்து.

"கணக்கு தீர்க்கல இன்னும்.‌ உள்ளே வா.." என்றான் கண்ணை காட்டியபடி.

மேலும் கோபம் வந்தது அவளுக்கு. அவனை தள்ளி நிறுத்திவிட்டு அறைக்குள் நுழைந்தாள். உள்ளே வந்தவன் பேக்கை ஓரத்தில் வைத்து விட்டு திரும்பினான்.

இடுப்பில் கையை ஊன்றியபடி நின்றிருந்தவள் "என்ன கணக்கு.? உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லன்னா இந்த ரூம்ல ஒரு கேமரா பிக்ஸ் பண்ணிடுங்க. எனக்கு பிரச்சனை இல்ல.." என்றாள்.

"குளிக்க போறேன். வரியா.?" எனக் கேட்டவனை பைத்தியமோ என நினைத்துப் பார்த்தவள் "நான் எதுக்கு.?" என்றாள்.

"என் கேள்விகளுக்கு நீ பதில் சொல்லணும்.." என்றான்.

சங்கவியின் முகம் மாறி விட்டது. மூன்று நாட்களாக தங்கையிடம் இருந்துவிட்டு வந்திருக்கிறான் இவன். அவள் குந்தவியை பற்றி ஏதாவது சொல்லி விட்டாளோ என்று நடுங்கியது உள்ளம் இவளுக்கு.

வியர்த்து நின்றிருந்தவளை சந்தேகமாக பார்த்தவன் உடைகளை கழட்டி எறிந்தான். சங்கவிக்கு நடுக்கத்திலும் வெட்கியது. துண்டை இடுப்போடு கட்டிக் கொண்டு குளியலறையின் கதவை திறந்தான்.

"கம் மேடம்.."

நகத்தை கடித்தபடி உள்ளே போனாள். அவன் குளிக்க ஆரம்பித்தான். இவளோ குளியலறையின் சுவரை ஆராய்ந்தபடி அங்கும் இங்குமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இந்த மூனு நாளா என்ன பண்ணிட்டு இருந்த.?" எனக் கேட்டான் தலைக்கு ஷேம்பு தேய்த்துக் கொண்டே.

"மூனு வேளையும் சாப்பிட்டேன். அத்தை போன்ல இருந்து உங்க கூட மணிக்கு ஒரு முறை போன் பேசினேன். சேலையை நீட்டா மடிக்க கத்துக்கிட்டேன். பீட்ரூட் பொரியல் செய்ய கத்துக்கிட்டேன்.." என்றாள் ஆர்வமில்லாமல்.

"ஓ‌.." என்றவனின் தலையிலிருந்து ஓடும் தண்ணீரை கண்டு ஆர்வமானாள். தலைமுடியை கோதி விட்டுக் கொண்டு நிமிர்ந்தான். கண்களை கொஞ்சமும் அசைக்காமல் வைத்திருந்தவளை கண்டதும் பெருமைப்பட்டான். குளித்து முடித்தான். ஆனால் ஷவரை விட்டு வெளியேற மனம் வரவில்லை.

"என்னை பார்த்து ஏதாவது தோணுதா.?" எனக் கேட்டான் தன் மனைவியிடம்.

"ம்.."

"என்ன.?"

"உங்களுக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ் இருக்குன்னு.."

முறைத்தான் அவன்.

"பின்ன என்ன.? முன்ன தேவையில்லாம கேள்விக் கேட்டு என்னை கடுப்பாக்கி விட்டிங்க. ஆனா இப்ப இப்படி கேட்கிறிங்க.. நான் என்ன மனுசியா.? இல்ல ரோபோட்டா.?" என்றாள் எரிச்சலாக.

அருகில் வரும்படி விரல் சைகை காட்டினான். "எதுக்கு.?" என்றபடி வந்தவளை பிடித்து அருகே நிறுத்தியவன் ஷவரை திறந்து விட்டான். இதைதான் அவளும் எதிர்பார்த்திருந்தாள். 'கிறுக்கனை கல்யாணம் பண்ணினா வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.?' என நினைத்தவளின் முகத்தை நிமிர்த்தினான்.

காளியாக நின்றிருந்தவளிடம் பல் இளித்தான்.

"நீ கோபப்படும்போது ரொம்ப க்யூட்டா இருக்க சங்கவி.. அதனாலதான் உன்னை கோபப்படுத்திட்டே இருக்கேன்..‌" என்றவன் அவளின் இதழில் விரல் பதித்தான்.

"நீ கோபப்பட்டுக்கிட்டே இரு.. நான் உன்னை சமாதானம் செஞ்சிட்டே இருக்கேன்.. ரொம்ப பிடிச்சிருக்கு.." அவன் சொன்னது காதில் விழாதது போல அவனின் கழுத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இப்ப இந்த பேபி கேர்ளை எப்படி சமாதானம் செய்றது.? சாரி கேட்கணுமா.? கொஞ்சணுமா.? கெஞ்சணுமா.? இல்ல கொஞ்சமா மிஞ்சணுமா.?" என கேட்டவன் அவளை சுவரில் சாய்த்தான்.

"உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லதானே.? ஒருத்தங்க தன்னை போலதான் மத்தவங்களும் இருப்பாங்கன்னு நினைப்பாங்களாம். நீங்க எப்படி என் அக்காவை நினைச்சி எனக்கு சீட் பண்றிங்களோ அதே போல நானும் உங்களை விட்டுட்டு வேற யாரோட சீட் பண்றதா.." உதட்டை வருடிக் கொண்டிருந்த கட்டை விரல் கீழிறங்கி வந்து கழுத்தின் நடுவில் நின்று அழுத்தியதில் மேற்கொண்டு பேச முடியாமல் நின்றாள் அவள்.

அவளுடைய கன்னங்களை மறைத்த ஈர முடிகளை தூர நகர்த்தி அவளின் கன்னத்தில் உதடு பதித்தவன் "இவ்வளவு கோபம் வேணாம்.. கொஞ்சமா.. ரொம்ப கொஞ்சமா‌‌.." என்றான்.

"நீங்க பைத்திய.." தளர்ந்திருந்த விரல் மீண்டும் ஆழ பதிந்தது.

"உன்கிட்ட பைத்தியமா நடந்துக்கறது கூட அவ்வளவு பிடிச்சிருக்கு.." என்றவன் அவளின் பழிச்சொல்லுக்கு பதில் சொல்லாமல் அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தான்.

***

"இவங்க எனக்கு என்ன துரோகம் செஞ்சாங்க.?" இரவு உணவு முடித்து தோட்டத்தின் புல்வெளியில் அமர்ந்திருக்கும்போது தாரணியின் புறம் கை நீட்டி யஷ்வந்திடம் கேட்டாள் செல்லா.

உண்ட உணவு முழுக்க ஜீரணமாகி விட்டது தாரணிக்கும் சூர்யாவுக்கும்.

"உனக்கு கொல்ல அடுத்த ஆள் வேணும். அப்படிதானே.?" என்ற சூர்யாவின் திசை பார்க்கவில்லை அவள்.

அவளின் கலங்கிய விழிகளை கண்ட யஷ்வந்த் அவளின் கையை பற்றினான்.

"ஏஞ்சல்.. அவ என்ன தப்பு செஞ்சிருந்தாலும் சரி. அவ இப்ப திருந்திட்டா.. தனது தப்பை உணர்ந்துட்டா. அவளுக்கு உன்னால மன்னிப்பு தர முடியுமா, எனக்காக ஒரு மன்னிப்பு.? அவ வயித்துல வளரும் உன் மருமகனுக்காக ஒரு மன்னிப்பு.?"

செல்லா தாரணியின் முகம் பார்த்தாள். தலை குனிந்து அமர்ந்திருந்தவள் "எனக்கு உங்க மேல கோபம் கிடையாது செல்லா. காரணம் இவர் மட்டும்தான். என் மேல இவருக்கு அக்கறையே கிடையாது. என்னோட தாழ்வு மனப்பான்மை, என்னோட இன்செக்யூர் பீல் எதையும் இவர் புரிஞ்சிக்கல. உங்களையே வட்டம் சுத்திட்டு இருப்பாரு. என் கூட இவர் டைம் ஸ்பென்ட் பண்ணவே இல்ல.." என்றவளுக்கு கண்ணீர்தான் புறப்பட்டது.

யஷ்வந்த் அவளை அணைத்துக் கொண்டான். "சாரி தாரு‌‌.." என்றான்‌.

பேன்டேஜ் சுற்றப்பட்டு இருந்த கரங்களால் அவனை விலக்கியவள் "அதனாலதான் எனக்கு கோபம். சூர்யாவோட காதலி நீங்கன்னு தெரிஞ்சதும் யஷூவோட அப்பாகிட்ட அதை சொல்லிட்டேன். உங்களை கொன்னுட்டா சூர்யா தர்ஷினியை கல்யாணம் பண்ணிப்பாருன்னு சொன்னேன். ஏனா அந்த டைம்ல எனக்கு அவ்வளவு கோபம் உங்க மேல.." என்றாள்.

செல்லா ஆவலோடு அவளின் முகம் பார்த்து அமர்ந்திருந்தாள்.

"அப்படின்னா அன்னைக்கு யஷ்வந்த் அண்ணா கேட்டது உங்களை பத்திதான்.. அவர் உங்களை ஒதுக்கி வச்சிருந்தாரா, எனக்காகவா.?"

தாரணி ஆமென்று தலையசைத்தாள். "எவ்வளவு கெஞ்சியும் என்னோடு பேசல. என் போன் கால் கூட எடுக்கல. செல்லா குணமாகி எழுந்து உன்னை மன்னிக்கும் வரை நானும் உன்னை மன்னிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. இன்னைக்கு வரை நான் என் அம்மா வீட்டுலதான் இருக்கேன்.. இந்த மாதிரி டைம்ல.." வயிற்றின் மீது புறங்கையை வைத்தவள் "அப்நார்மலான பீலிங்ல இருக்கும் இந்த டைம்ல ஹஸ்பண்ட் அருகாமை எவ்வளவு முக்கியம்ன்னு இவருக்கு புரியல. நான் இவருக்கு ரொம்ப பாரமா இருக்கேன்னு நினைக்கிறாரு.." என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தான் யஷ்வந்த். அன்று பிரிந்திருக்க தன்னிடம் சரியென்று தோன்றியவள் இன்று ஏன் இப்படி சொல்கிறாள் என்று புரியவில்லை.

செல்லா யஷ்வந்தை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

"மூனாவது மனுசிக்காக சொந்த வொய்ப்பை ஒதுக்கி வச்சிங்களா.?" என்றவளிடம் "அன்னைக்கு அவன் செஞ்சதை இன்னைக்கு நான் செய்ய வேண்டி இருக்கும் போல.." என்றான் சூர்யா.

புரியாமல் திரும்பியவளிடம் "நீ உன் ரத்த வேட்டையை நிறுத்தலன்னா அதுதான் நடக்கும்.." என்றான்.

செல்லாவின் விழிகளிலிருந்து குண்டு குண்டாக கண்ணீர் முத்துக்கள் உதிர்ந்தது.

கைப்பிடித்த கண்ணாளா, கை சேராயோ கனவே, காதலெனும் நெடும்வனத்தில் - இந்த மூன்று கதைகளும் புத்தகமாக வெளிவர இருக்கிறது நட்புக்களே..

அலைபேசி எண்கள் =
+91 93602 24172 , 04342-268769

மேற்கண்ட எண்ணுக்கு அழைத்து நீங்க புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். கை சேராயோ கனவே விலை - 260₹ கைப்பிடித்த கண்ணாளா - 280₹ காதலெனும் நெடும்வனத்தில் - 180₹. கொரியர் சார்ஜ் எக்ஸ்ட்ராவா வரும்ன்னு நினைக்கிறேன்‌. ஆனா நீங்க ஒரு புக் வாங்கினாலும் மூனு புக் வாங்கினாலும் ஒரே கொரியர் சார்ஜ்தான் வரும். தருமபுரிக்குள் இருக்கும் நட்புக்கள் புத்தகத்தை நேரிலேயே வாங்கிக் கொள்ளலாம். திருவள்ளுவர் பொத்தக இல்லத்திலோ, அல்லது தர்மபுரியில் நடைப்பெற இருக்கும் புத்தக திருவிழாவின் பொழுதோ நீங்க புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்..

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN