காதல் கணவன் 83

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கனிமொழியின் முதுகை வெறித்த வளர்மதி தன் கணவனின் புறம் திரும்பினாள்.

"அவ இங்கே இருக்க கூடாது.. வெளியே அனுப்புங்க.." என்றாள்.

தன் மகன் வாய் திறக்கும் முன்பே "என் பேத்தி சொன்னது காதுல விழுகலையா.? இந்த வீட்டுல எல்லோருக்கும் உரிமை உண்டு. அவ இருப்பதால இங்கே யாருக்கும் நட்டம் கிடையாது.." என்றார் தாத்தா.

வளர்மதி தன் மாமனாரை முறைத்தாள். ஆனால் பேச முடியவில்லை எதுவும்.

"ஆனா நான் சமைக்க மாட்டேன்.." அர்ச்சனாவும் வளர்மதியும் ஒரே குரலில் சொன்னார்கள். சொல்லிவிட்டு ஒருவரையொருவர் பார்த்தனர். உடனே முகத்தை திருப்பிக் கொண்டனர்.

தாத்தா பேரன்கள் புறம் திரும்பினார்.

"நல்ல சமையல்காரரா பார்த்து சமைக்க வர சொல்லுங்க.." என்றுவிட்டு தனது அறைக்கு கிளம்பினார்.

"என்னை விட அந்த ஓடுகாலிதான் முக்கியமா போயிட்டாளா உங்களுக்கு.?" வளர்மதியின் கேள்வியில் நின்ற தாத்தா திரும்பிப் பார்த்தார். மருமகளை அனல் கக்க வெறித்தார். "என் பேத்தி ஓடுகாலி கிடையாது. ஆசைப்பட்டவனைதான் கட்டிப்பேன்னு அடம் பிடிச்சவ. இன்னொரு முறை அவளை பத்தி இந்த வீட்டுல யாரும் வாய் திறக்க கூடாது.." என்று எச்சரித்து விட்டு போனார்.

அர்ச்சனா தன் அப்பாவை முறைத்தாள்.

"அப்பா.." கனிமொழியின் குரலில் வளர்மதியும் சேர்ந்து திரும்பினாள்.

"எனக்கு ஒரு ஸ்கூட்டி வேணும். நாளைக்கு ஈவ்னிங்குள்ள வாங்கிட்டு வந்துடுங்க.." என்றவள் தன் மாமியாரின் புறம் திரும்பினாள். "எனக்கு பதினைஞ்சாயிரம் காசு தேவைப்படுது.. நாளைக்கு காலையில் கொடுத்தா போதும்.." என்றுவிட்டு திரும்பினாள்.

"ஏய் நில்லுடி.." வளர்மதியின் அதட்டலில் என்னவெனும் விதமாக திரும்பிப் பார்த்தாள்.

"நாங்க ஏன் உனக்கு ஸ்கூட்டி வாங்கி தரணும்.?"

"நான் ஏன் உனக்கு காசு‌ தரணும்.?" வளர்மதி கேட்டு முடித்ததும் அர்ச்சனாவும் தொடர்ந்துக் கேட்டாள்.

கனிமொழி கைகளை கட்டியபடி அம்மாவை பார்த்தாள்.

"உங்க புள்ளைதானே நான்.? அப்ப நீங்கதான் வாங்கி தரணும். உங்க மூத்த பொண்ணு கூட நாளைக்கு வேற வீட்டுக்கு மருமகளா போயிடுவா. நான்தான் கடைசி வரைக்கும் உங்களை கவனிச்சிக்கணும். எனக்கு எப்படி பெத்தவங்களை பாத்துக்கற பொறுப்பு இருக்கோ அதே போல பெத்த பிள்ளையோட தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கும் இருக்கு.." என்றவள் அர்ச்சனாவின் புறம் பார்த்தாள்.

"மருமகளுக்கு நீங்க பணம் தராம ஊர்ல இருப்பவங்களா தருவாங்க.? உங்க பையன் கூட காலத்துக்கும் குப்பை கொட்ட போறது நான்தானே.?" எனக் கேட்டாள்.

பாலாஜிக்கு தன் தங்கை வானமளவு வளர்ந்து விட்டது போலவே இருந்தது. இந்த குட்டி குரங்கு இவ்வளவு பேச எங்கே கற்றுக் கொண்டது என்ற ஆச்சரியத்தில் இருந்தான் வெற்றி.

அர்ச்சனா நக்கலாக உதடு சுளித்தாள்‌. "மருமகளா.? சும்மா கடமைக்கு மருமகள்ன்னு சொல்லிட்டு இருப்பவளுக்கு காசு செலவு பண்ண என்னால முடியாது.." என்றாள் வெறுப்போடு.

கனிமொழிக்கு முகம் கறுத்து விட்டது. கணவன் மீதுதான் கோபம் வந்தது. மாமியாரின் வெறுப்பின் காரணம் இப்போது தெளிவாக புரிந்தது. திருமண மண்டபத்தில் இவள் ஏன் அப்படி கேட்டாள், என்பதும் அம்மா சொன்ன பிச்சை வாழ்க்கையும் புரிந்தது.

பற்களை அரைத்தவள் தனது கோபத்தை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டாள். "புருசன் பொண்டாட்டின்னா ஆயிரம் இருக்கும். அதுக்குள்ள நீங்க வராம இருந்தா போதும்ன்னு நினைக்கிறேன். என் புருசன் இத்தனை வருசமா சம்பாதிச்சி உங்ககிட்டதானே தந்திருப்பாரு, அதுல பதினைஞ்சாயிரம் தர அவ்வளவு கஷ்டமா இருக்கா?" எனக் கேட்டாள்.

பாட்டி கன்னத்தில் கையை வைத்தபடி தனது பேத்தியை கவனித்தாள். 'இந்த சில்லுவண்டு எப்ப இவ்வளவு பெருசா வளர்ந்துச்சி.?'

அர்ச்சனா தன்னை சுற்றி இருந்தவர்களை பார்த்தாள். அனைவரும் கனிமொழியைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அவனை பெத்து வளர்த்தியதுக்கும் அவன் சம்பாதிச்சி தந்ததுக்கும் சரியா போச்சி. உனக்கு இதுக்கு மேல காசு வேணும்ன்னா உன் புருசன்கிட்டயே கேளு.. குப்பை கொட்ட போறவளுக்கு காசு வாங்க கூடவா தெரியாது.?" எனக் கேட்டுவிட்டு அவ்விடம் விட்டு நகர முயன்றாள்.

'அத்தையை விட்டுட்டா அம்மாவும் ஸ்கூட்டி வாங்கி வர மாட்டாங்க.. கனி டிரை சம்திங்.. உன்னால உன் புருசன்கிட்ட காசு கேட்க முடியாது. ஐநூறுக்கே ஆயிரத்தியெட்டு கணக்கு கேட்கறவர்.. பதினைஞ்சாயிரம் கேட்டா பல்லெல்லாம் உடைச்சி விட்டுடுவாரு..'

அம்மாவின் இதழில் ஓடும் கேலி நகைப்பை பார்த்தபடியே "அத்தை ஒரு நிமிசம்.." என்றாள்.

அர்ச்சனா இன்னும் என்ன என்பது போல நின்றாள். "இப்ப நீங்க எனக்கு காசு தரலன்னா அப்புறம் எங்களுக்கு குழந்தை பிறந்தா உங்களை நான் தொட கூட விட மாட்டேன்.." என்றாள்‌.

அர்ச்சனாவுக்கு முன்னெப்போதையும் விட இப்போதுதான் அதிக நக்கல் உண்டானது.

"ஆசைப்பட்டவனைதான் கட்டுவேன்னு அடம் பிடிச்சி நினைப்பதை நடத்தி முடிச்சேன்.. என் திறமையை சாதாரணமா நினைக்கிறிங்களா நீங்க.?" என்றாள் ஒற்றை புருவத்தை உயர்த்தி.

அர்ச்சனாவுக்கு சட்டென்று பதில் வரவில்லை. "நா.. நாளைக்கு வாங்கிக்க.." என்றுவிட்டு அங்கிருந்துப் போனாள்.

தாயை பார்த்து கழுத்தை நொடித்து காட்டிவிட்டு தனது அறைக்கு கிளம்பினாள் கனிமொழி.

"யார் எப்படின்னு ஒன்னுமே புரிய மாட்டேங்குது.." கீர்த்தனா தனது அறைக்குள் நின்று புலம்பினாள். பின்னால் வந்து நின்று அவளின் பின்னங்கழுத்தில் விரலால் நெருடிய பாலாஜி "புரியாதவங்களை நினைக்கறதை விட உனக்கு புரிஞ்சவங்களை பத்தி யோசிக்கலாம்.." என்றான்.

'உன்னையும் உன் கவிதையையும் புரிஞ்சிக்கிறதுதான் எனக்கு இப்போதைக்கு பெரிய அக்கப்போரா இருக்குடா..' மனதுக்குள் புலம்பியவளின் காதோரத்தில் இதழ் பதித்து "நியூ லைன் ஒன்னு பிடிச்சேன்.. நித்திரையாக நீ இருந்தால் அதில் சொப்பனமாக நானிருப்பேன்.!" என்றான்.

'ஏதோ ஒரு மாதிரியா இருக்கு..' நிம்மதியடைந்தவளின் கன்னத்தை கடித்து வைத்தான்.

"அம்மா‌‌.." கத்தியபடி அவனை தள்ளி விட்டவள் கன்னத்தை தேய்த்துக் கொண்டாள்.

"உனக்கு என்னடா வந்தது.?" என்றாள் பரிதாபமாக பார்த்தபடி.

"உன் கன்னம் டேஸ்டா இருக்குமான்னு பார்த்தேன்.." கண்சிமிட்டியவனை மூக்கு சிவக்க பார்த்தவள் அவனை கட்டிலில் தள்ளினாள்.

பத்து நிமிடங்களுக்கு பிறகு அவனை விட்டு விலகினாள். அவனின் வலது காதில் இரு இடங்களிலும் இடது காதில் மூன்று இடங்களிலும் கன்னங்களில் ஐந்தாறு இடங்களிலும் அவளின் முத்து பற்கள் தடம் பதித்து இருந்தன. அவன் தள்ளி விட முயலுகையில் போராடியதில் இவளின் கரங்களிலும் கழுத்திலும் அவனின் நகங்கள் தங்களது வேலையை காட்டி இருந்தன.

"நான் எப்படி நாளைக்கு வேலைக்கு போவேன்.?" சோகமாக கேட்டவனின் போன் ஒலித்தது.

கால்சட்டை பாக்கெட்டிலிருந்த கைபேசியை எடுத்து காதில் வைத்தான்.

"கனி அங்கே வந்திருக்காளா.?" சக்திதான் கேட்டான்.

"ம்ம்.." என்றான் இவன் லேசான முனகலோடு‌.

"ராங் டைம்ல போன் பண்ணிட்டேன் போல. பரவால்ல நான் அப்புறம் பண்றேன்.."

பாலாஜி பற்களை கடித்தபடி எழுந்து அமர்ந்தான். "ராங் டைம் ஏதும் இல்ல. நீ அஞ்சி நிமிசம் முன்னாடியே கால் பண்ணி இருக்கலாம்.. ஒரு சுண்டெலிக்கிட்டயிருந்து தப்பிச்சி இருப்பேன்.." என்றவன் "எதுக்கு போன் பண்ண.?" எனக் கேட்டான்.

"கனியை எங்கம்மாவும் அவங்கம்மாவும் திட்டினாங்களா.?" தயக்கமாக கேட்டான் அவன்.

நடந்ததை விவரித்து விட்டு போனை வைத்தான் இவன்.

***

அம்ருதா கண்களை திறந்தபோது அறை இருளாக இருந்தது. தடுமாறி எழுந்து அமர்ந்தாள்.

"அம்மா.." உறக்க குரலில் அழைத்தாள்.

அதே நேரத்தில் விளக்கின் வெளிச்சம் கண்களை சுட்டது. கண்களை கசக்கியவள் நிமிர்ந்தாள். வெற்றி அவளுக்கெதிரே இருக்கையில் அமர்ந்திருந்தான். சட்டென்று வியர்த்து விட்டது அவளுக்கு.

நெற்றியை சுருக்கியவன் "சாப்பாடு.." என்று கண்களை காட்டினான். அவன் பார்வை போன திசை பார்த்தாள். உணவு தட்டு மற்றொரு தட்டால் மூடப்பட்டு இருந்தது.

"எ.. எனக்கு வேணாம்.."

"சாரி.. எனக்கு ஊட்டி விட பிடிக்கல.." என்றவனை குழப்பத்தோடு பார்த்தவள் அவன் சொல்ல வருவது புரிந்ததும் முகம் சுளித்தாள். அவளின் முக சுளிப்பு கண்டு அவனுக்கு ஆத்திரம்தான் வந்தது. பல நாட்கள் ஊட்டி விட்டால்தான் உண்ணுவேன் என்று பொது உணவங்களில் அமர்ந்து கூட அடம் பிடித்துள்ளாள். அவளே இன்று இப்படி மாறி போனது எரிச்சலைதான் தந்தது‌.

"நீ பட்டினியால் செத்தா கூட எனக்கு கவலை கிடையாது.. ஆனா என் குழந்தை ஆரோக்கியம் எனக்கு முக்கியம்.. மரியாதையா சாப்பிட்டு எழு.." என்றவன் எழுந்து நின்றான்.

தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவளை பார்த்தவாறே சென்று ஜன்னல் கதவுகளை சாத்தினான். "பாத்ரூம் அங்கே இருக்கு.." என்று கையை காட்டினான்.

நெற்றியை பிடித்தபடியே எழுந்து நின்றவள் வாஷ்ரூமுக்குள் நுழைந்தாள். முகத்தை குளிர் நீரால் சுத்தம் செய்தாள்‌. மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்து கதவை திறந்தவள் முன்னால் நின்றிருந்தவனை கண்டு அதிர்ச்சியோடு ஓரடி பின்னால் நகர்ந்தாள். பயத்தில் அடியெடுத்து வைத்தவள் ஈர தரையின் வழுவழுப்பில் நிலையாக நிற்க மறந்து விட்டாள். கால் வழுக்கியது. பின்னால் சரிந்தவளுக்கு பயத்தில் உயிரே போய் விட்டது.

"ஐயோ அம்மு.." நொடியில் பாய்ந்து வந்து அவளின் கைப்பிடித்து இழுத்தான். தன் மீது வந்து விழுந்தவளை அணைத்துக் கொண்டது அவனின் கரங்கள்.

படபடவென்று அடித்துக் கொண்ட இதயத்தோடு அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டிருந்தவளுக்கு பயத்தில் மொத்த உடம்பும் நடுங்கியது.

அவள் நேராக நிற்கிறாள் என்று யூகித்து தனது கரங்களை கீழ் இறக்கினான். ஆனால் அவள்தான் நகராமல் அவனை ஒட்டிக் கொண்டிருந்தாள். நடுங்கும் அவளின் கரங்களை கண்டவன் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டான். ஆனால் இம்முறை பழைய பதட்டம் இல்லை.

"உன்னை தொட கூடாதுன்னு நீதான் சொன்ன.. ஆனா பாரு.. இப்ப நீ என்னை எவ்வளவு தொட்டுட்டு இருக்கன்னு.." அவனின் நக்கல் குரல் கேட்டு தன்மானம் சுட்டது அவளை.

பின்னால் நகர்ந்தாள். அவன் தன் கையை விலக்கிக் கொண்டான்.

"நடக்கும்போது பார்த்து நட.." என்றவன் அவளின் கையை பிடித்தான். வெடுக்கென்று கையை இழுத்துக் கொண்டாள். ஆனால் மீண்டும் கையை பற்றினான்.

"உன்னை வெளியே கூட்டிப் போறேன்.." என்றவன் அவளை இழுத்துக் கொண்டு நடந்தான். கட்டிலில் அவளை அமர வைத்துவிட்டு உணவு தட்டை எடுத்து வந்தான்.

"சாப்பிடு.." என்று உணவை பிசைந்து ஊட்டினான்.

வாயை திறக்காமல் அவனை வெறித்தாள். "நான் உனக்கு ஊட்டல. என் குழந்தைக்கு ஊட்டுறேன்.." என்றவன் அவள் அதே போல அமர்ந்திருப்பது கண்டு அவளின் தாடையை பற்றினான். அவனின் இரு விரல்களின் அழுத்தம் தாளாமல் வாய் தானாக திறந்தது. உணவை திணித்தான். அவளுக்கு வலியில் கண்கள் கலங்கியது. அழ கூடாது என்று வீராப்பாக இருந்தாள்.

உணவு தொண்டைக்கு கீழ் இறங்கவேயில்லை. வாய் மொத்தமும் வலித்தது. அவளின் சிரமத்தை உணர்ந்தானோ என்னவோ தண்ணீரை நீட்டினான்‌. அவசரமாக வாங்கி பருகினாள்.

வாயை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் அவன் அடுத்த வாய் ஊட்ட முயல்வது கண்டு உணவு தட்டை பிடுங்க முயன்றாள். ஆனால் அவன் தர மறுத்தான்.

"நானே சாப்பிட்டுக்கிறேன்.." என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தான்.

பற்களை கடித்தவள் உணவு தட்டை தள்ளி விட்டாள்‌. கீழே சிதறிய உணவை கண்டவன் ஆத்திரத்தின் மிகுதியில் உணவு பிசைந்திருந்த கரத்தினாலேயே ஒரு அறையை விட்டான்.

"சைக்.." மேலே பேசவே விடாமல் மேலும் ஒரு அறையை விட்டான்.

அறையை வாங்கியபடி கட்டிலில் விழுந்தவள் மீண்டும் எழவேயில்லை. இடது கையால் நெற்றியை பிடித்தபடி அமர்ந்திருந்தவன் கண்களை மூடியபடி பெரும் பெரும் மூச்சுகளாக இழுத்து விட்டான்.

அவளிடமிருந்து எந்த அசைவும் தெரியவில்லை. அவசரமாக அவளை தன் புறம் திருப்பினான். மயங்கி விட்டிருந்தாள்‌. பயத்தோடு நெஞ்சின் மீது காது வைத்து கேட்டான். இதயம் துடிக்கும் சத்தம் கேட்ட பிறகே சிறு நிம்மதி அடைந்தான்.

அவளை அப்படியே விட்டுவிட்டு கீழே சிதறிக் கிடந்த உணவை சுத்தம் செய்தான்.

கால் மணி நேரம் கழித்து உள்ளே வந்தவனின் கரத்தில் புது உணவு இருந்தது. மேஜையின் மீது உணவை வைத்தவன் அவளின் மீது போர்வையை போர்த்தினான்.

தலையணை ஒன்றை எடுத்து வந்து சோஃபாவில் படுத்துக் கொண்டான். அவளை அணைத்துக் கொண்டு உறங்க சொல்லி கெஞ்சியது மனது. ஆனால் அது கேவலமான செயல் என்று சொல்லியது அவனிடம் மிச்சம் மீதியாக இருந்த தன்மானம்.

***
வண்ண விளக்கு அலங்காரத்தை வெறித்துக் கொண்டிருந்த மனைவியின் தோளை தொட்டான் நரேஷ். திரும்பியவளின் முன்னால் வந்து நின்ற ஒரு நடுத்தர வயது பெண்மணி தன்னிடமிருந்த கிப்டை நீட்டினாள். போலி புன்னகையை தந்துவிட்டு பரிசை வாங்கிக் கொண்டாள் பாரதி. அப்பெண்மணி புகைப்படத்திற்காக சில நொடிகள் நின்றுவிட்டு மேடையை விட்டு கீழிறங்கிப் போய் விட்டாள்.

"இன்னும் எத்தனை பேர்தான் வருவாங்க.? எனக்கு கால் வலிக்குது.." சலித்துக் கொண்டாள் பாரதி. அவர்களின் திருமண வரவேற்பு நடந்துக் கொண்டிருந்தது. இருவரும் மேடையில் நின்றிருந்தார்கள். கூடியிருந்த உறவினர்கள் அவர்களின் ஜோடி பொருத்தம் பற்றி ஆச்சரியத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

"இன்னும் அரை மணி நேரம்தான். ரொம்ப வலிக்குதுன்னா கொஞ்ச நேரம் மட்டும் சேர்ல உட்கார்ந்துக்கோ.." என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தவள் "கொஞ்ச நேரம் மட்டுமா.? எனக்கு இருக்கும் கால் வலிக்கு படுத்து தூங்கினா நாளைக்கு வரை எழ முடியாது. கிண்டலா.?" எனக் கேட்டாள் கடுப்போடு.

"எனக்கு உன் மேல இருக்கும் ஆசையை கொஞ்சம் நினைச்சி பாரு. உனக்கே தூக்கமே வராது.." என்று அவளின் காதோரம் கிசுகிசுத்தான்.

முகத்தை அஷ்டகோணலாக்கியவள் மேடைக்கு வந்த அடுத்த ஆளை கண்டு விட்டு செயற்கை புன்னகையை முகத்தில் தவழ விட்டாள்.

பரிசு பொருளை வாங்கி அருகே வைத்து விட்டு திரும்பியவளின் முன்னால் தண்ணீர் பாட்டிலை நீட்டினான் நரேஷ்‌.

"ஏதோ என்னால முடிஞ்ச உதவி.." என்றான். பாரதி அலட்சியமாக உதடு சுளித்தாள்.

"நீ இந்த டிரெஸ்ல செம செக்ஸியா இருக்க.." அவன் சொன்னது கேட்டு எச்சில் விழுங்கியவள் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN