காதல் கணவன் 84

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வீட்டிற்கு வந்ததும் அறையை தேடி ஓடி கட்டிலில் விழுந்தாள் பாரதி.

அவள் பின்னால் வந்த நரேஷ் தனது கோட்டை கழட்டி சோபாவில் வீசி விட்டு சட்டை பட்டனை கழட்ட ஆரம்பித்தான். பாரதி கண்களை மூடினாள். முகத்தில் சோர்வு தெரிந்தது.

"ரதி.." நரேஷின் அதட்டலில் துள்ளி எழுந்து அமர்ந்தாள்.

"என்ன.?" என்றாள் விழிகளை கசக்கியபடி.

"இந்த டிரெஸ்ஸை கழட்டி வை.. போய் குளிச்சிட்டு வா.. பால் சாப்பிட்டுட்டு தூங்கு.."

பாரதி ஒற்றை கையால் முகத்தை மூடியபடி பின்னால் சாய்ந்தாள்.

"எனக்கு தூக்கம் வருது.. இந்த டைம்க்கு குளிக்க என்னால முடியாது. எழவே முடியல. டிரெஸ் மாத்துறது நடக்காத காரியம்." அலுப்போடு சொன்னாள்.

அருகில் வந்தவன் அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி அமர வைத்தான்.

"குளிச்சிட்டுதான் தூங்கணும். என் பிரெண்ட்ஸ் உன் தலையில் நிறைய ஸ்பிரே பண்ணி இருந்தாங்க.. ஒருத்தி கேக் பூசியது இன்னும் உன் காதோரத்துல இருக்கு. நீ ஒழுங்காவே பேஸ் வாஷ் பண்ணல. இப்ப போய் குளிச்சே ஆகணும் நீ.." மிரட்டியபடியே இழுத்துச் சென்று குளியலறைக்குள் தள்ளி விட்டான்.

"இம்சை பண்றான்.." கடுப்போடு ஆபரணங்களை கழட்டினாள்.

குளித்து முடித்தவள் அதன் பிறகே தான் உடை‌ ஏதும் எடுத்து வராததை கவனித்தாள்.

'இவன்கிட்ட ஹெல்ப் கேட்டா இவன் வேற ஓவரா பண்ணுவானே.!' கதவை கொஞ்சமாக திறந்தாள். வெளியிலிருந்து டவலை நீட்டினான் நரேஷ்‌.

'இவன் ஏன் கேட்கும் முன்னாடியே தரான்.?' டவலை வாங்கிக் கொண்டவள் "நைட் டிரெஸ் ஒரு செட் எடுத்து வந்து தர முடியுமா.?" எனக் கேட்டாள்.

"பரவால்ல.. டவலை சுத்திட்டு வா.." என்றவன் அவள் பதிலை சொல்லும் முன்பே அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

பாரதிக்கு கோபத்தில் மூக்கு சிவந்தது. "இவன் வேணும்ன்னே பண்றான்.." பழைய உடையை பார்த்தாள். டிரை க்ளீன் செய்யாமல் மீண்டும் அணிய முடியாது என்று நினைக்கும் அளவிற்கு அழுக்காகி இருந்தது அது‌.

"இந்த டவல் ஓரளவுக்கு கவர் ஆகும்.." தனக்குதானே சமாதானம் செய்துக் கொண்டவள் டவலை சுற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.

அறைக்குள் அவன் இல்லை. சிறு நிம்மதியோடு உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தாள். தொளதொளப்பான சட்டை ஒன்றையும் ஸ்கர்ட் ஒன்றையும் அணிந்துக் கொண்டு வெளியே வந்தாள். தலைமுடி மட்டும்தான் ஈரமாக இருந்தது. அப்படியே உறங்கலாம் என நினைத்து படுக்கையை நோக்கி நடந்தாள்.

"பால்.." என்றபடி உள்ளே வந்தான் நரேஷ்.

"நீயே குடி.." என்றவள் கவிழ்ந்து படுத்தாள்.

அவளின் கையை பற்றி எழுப்பினான். சிணுங்கலோடு எழுந்து அமர்ந்தவளின் கையில் பால் டம்ளரை திணித்தான்.

குளித்திருந்தான்‌. பக்கத்து அறைக்கு சென்று குளித்து விட்டு வந்திருக்கிறான் என்று யூகித்துக் கொண்டவள் சூடு இல்லாமல் இருந்த பாலை ஒரே விழுங்கில் குடித்துவிட்டு டம்ளரை வைத்தாள்.

"நான் தூங்கறேன்.." என்றவளை எழுப்பி நிற்க வைத்தான்.

"இன்னும் என்ன.?"

"ஹேர் ஈரமா இருக்கு.."

"என்னால முடியாது. ப்ளீஸ் என்னை விட்டுடு.. எனக்கு மயக்கமே வருது.." கெஞ்சியவளை இழுத்து வந்து அலங்கார மேஜையின் முன் அமர வைத்தான். ஹேர் டிரையரை எடுத்து அவனே அவளின் தலையை உலர வைத்தான்.

அரை தூக்கத்தோடு நாற்காலியில் சாய்ந்து கொண்டாள் அவள். அவன் தனது வேலையை முடிக்கும் முன் உறங்கி விட்டிருந்தாள்.

அவளின் முகத்தைப் பார்த்தவன் அவளின் நெற்றி வகிட்டில் முழுதாக அழியாமல் இருந்த செந்தூரத்தை கண்டு தனக்குள் நகைத்தான். அவளை தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைத்தான். குளியலறையில் அவள் கழட்டி வைத்திருந்த நகைகளை கொண்டு வந்து பத்திரப்படுத்தினான். கட்டிலின் மறு ஓரத்தில் அவனும் தலை சாய்ந்தான்.

***

அம்ருதாவிற்கான காலை உணவை அறைக்கே எடுத்து வந்து தந்தான் வெற்றி. வீட்டில் உள்ளோர் இவளின் மீது கடுகடுவென்று இருந்தனர். அவர்களின் முன்னிலையில் நடமாட பிடிக்காமல் அடைந்து கிடக்கிறாள் போல என்றெண்ணி அவனே பாவம் பார்த்து இந்த உதவியை செய்தான்.

அம்ருதா எதுவும் பேசாமல் உணவை எடுத்து உண்டாள். அவளை பார்த்தபடியே சட்டையின் காலர் பட்டனை போட்டான் வெற்றி.

"நான் பேங்குக்கு கிளம்பறேன்.. எதாவது தேவைன்னா போன் பண்ணு. இல்லன்னா வீட்டுல கேளு.." என்றவன் டையை எடுத்து கட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

உணவை முடித்துக் கொண்டு மீண்டும் கட்டிலில் சாய்ந்தாள் அம்ருதா.

வெற்றியும் பாலாஜியும் வீட்டை விட்டு கிளம்பினர். தேன்மொழி கல்லூரிக்கு கிளம்பிப் போனாள்.

"நான் ஷாப்பிங் போகணும்.. நான் கேட்ட காசை கொடுங்க.." அர்ச்சனாவின் முன்னால் கையை நீட்டினாள் கனிமொழி. அர்ச்சனா முறைத்தபடியே பணத்தை நீட்டினாள்.

கனிமொழி வீட்டை விட்டு நகர்ந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் வீட்டுக்குள் பூங்கொத்தோடு வந்தாள் அவள்.

"யார் நீங்க.?" வளர்மதிதான் முதலில் பார்த்தாள்.

"ஹாய்.. நான் சினேகா. அம்ருதாவோட பிரெண்ட்‌. அவளுக்கு மேரேஜ் ஆச்சின்னு கேள்விப்பட்டேன். அவளை பார்க்க வந்தேன்.." என்றாள்.

சோஃபாவில் அமர்ந்திருந்த பாட்டி இவளை திரும்பிப் பார்த்தாள். பிறகு கீர்த்தனாவை அழைத்தாள்.

"என்ன பாட்டி.?" என்றவளிடம் "இவளை அம்ருதாவோட ரூமுக்கு கூட்டிப் போ.." என்றாள்.

கீர்த்தனா அழைத்துக் கொண்டு நகர்ந்தாள்.

"ஏன் அந்த மகாராணி கீழே வந்து பார்க்க கூடாதா.?" வளர்மதி எரிச்சலோடு கேட்டாள். அர்ச்சனாவுக்கும் கூட அதே எரிச்சல்தான்.

"அவதான் ரூமை விட்டே வெளியே வர மாட்டேங்கிறாளே, என்ன செய்றது.? அவ மறுபடியும் மறுபடியும் வெற்றியை திட்டுறதை இங்கே யாராலும் கேட்க முடியாது. அந்த வார்த்தைகளை நம்மால சகிச்சிக்கவும் முடியாது. என்ன கருமமோ.. வெற்றியும் அவளும் அவங்களுக்குள்ளவே பேசி தீர்த்துக்கட்டும். அவ நம்ம கண் முன்னாடி வராம இருந்தா அதுவே போதும். ரொம்ப வருசம் கழிச்சி வெற்றி இந்த வீட்டுக்கு வந்திருக்கான். அந்த சந்தோசமாவது நிலைக்கட்டும்.." என்று விட்டாள்.

***

கீர்த்தனா அறை கதவை திறந்தாள்.

"சரிங்க நாங்க பேசிக்கிறோம்.." என்ற சினேகா கதவை சாத்திவிட்டு உள்ளே போனாள்.

சுருண்டு கிடந்த அம்ருதா நிமிர்ந்துப் பார்த்தாள். இவளா என்று நினைத்தபடி எழுந்து அமர்ந்தாள்.

"அம்ருதா.." என்றபடி வந்தவள் நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அவளின் முன்னால் அமர்ந்தாள். பூங்கொத்தை நீட்டினாள்.

"ஹேப்பி மேரிட் லைஃப்.." என்றவளை விசித்திரமாக பார்த்தவள் பூங்கொத்தை வாங்கி மேஜையின் மீது வைத்தாள்.

அம்ருதா மௌனத்தோடு எதிரில் இருந்தவளை வெறித்தாள்.

"நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்ல.." சினேகா கேட்டது கண்டு முகம் வாடி போனது அம்ருதாவுக்கு.

முட்டியை கட்டியபடி பின்னால் இருந்த தலையணை அடுக்கின் மீது சாய்ந்தாள்‌.

"நான் எதுவுமே பண்ணல.." மெல்லிய குரலில் சொன்னாள்.

"உனக்கு அவ்வளவு பெரிய துரோகம் செஞ்சவனை நீ கல்யாணம் பண்ணியிருக்க.."

மறுப்பாக தலையசைத்தாள் அம்ருதா. "நான் பண்ணல‌‌.. அவன்தான் கட்டாயப்படுத்தி இப்படி பண்ணிட்டான்.." என்றாள் உயிரற்ற குரலில்.

சினேகா அதிர்ந்தாள்.

"கட்டாயப்படுத்தியா.? ஆனா நீ உன் முடிவுல உறுதியா இருந்திருந்தா இப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்ல.. உனக்கு சொரணை இல்ல இல்லையா.? அதனாலதான் அவனை கல்யாணம் பண்ணியிருக்க.." சினேகாவின் சொற்களில் இருந்த கொடூரம் அம்ருதாவின் மூளையில் ஏறவேயில்லை.

மெல்லிய புன்னகையோடு தன் வயிற்றின் மீது கையை வைத்தாள்.

"நான் பிரகனென்ட்.." என்றாள்.

எதிரில் இருந்தவளுக்கு கால் நழுவுவது போலிருந்தது. இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.

அவளின் முகத்திலிருந்த புன்னகையை கண்டு முகம் கறுத்து விட்டது இவளுக்கு.

"எ.. எப்படி.? நீ.. நீங்க இரண்டு பேரும் பிரேக்அப் பண்ணிட்டிக்கிங்களே.." என்றாள் அதிர்ச்சியை கூட மறைக்க இயலாமல்.

"வலுக்கட்டாயமா என்னோடு செக்ஸ் வச்சிக்கிட்டான் அவன்.. இரண்டு மாசம் ஆகியிருக்கும். ஒரு ரவுடி குரூப்பை பிடிக்க போன இடத்துல தனியா மாட்டிக்கிட்டோம். அங்கேதான்.." என்றாள் சுழன்றுக் கொண்டிருந்த மின் விசிறியை பார்த்தபடி.

சினேகாவுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. "ரேப்.. ரேப்தானே இது.?" என்றவளிடம் ஆமென்று தலையசைத்தாள் அவள்.

"அப்புறம் ஏன் வலுக்கட்டாயப்படுத்தப்பட்ட செக்ஸ்ன்னு உளறுற.?" குரைத்தாள்.

தலையணை ஒன்றை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்ட அம்ருதா "முதல்ல அப்படிதான் தோணுச்சி. இப்ப அப்படி சொல்ல தோணல.. எனக்கு ஒரு குழந்தை பிறக்க போகுது. இது போதாதா.?" என்றாள் கண்கள் மின்ன.

சினேகா எழுந்து விட்டாள்.

"இதுக்கு அசிங்கமாதான் சொல்ல வேண்டி இருக்கும் அம்ருதா. உனக்கு அவன் செஞ்ச அத்தனை தப்பையும் மறந்துட்டு, அவன் ரேப் பண்ணதையும் மறந்துட்டு அவனுக்கு குடை பிடிக்கற.. நீ ஏன் அவனை பிரேக்அப் பண்ணன்னு ஒரு செகண்ட் நினைச்சி பாரு‌‌.. அப்புறம் உனக்கே எல்லாம் புரியும்.. அவன் கண்டிப்பா உன்னை கொன்னுடுவான்.. உனக்கு சந்தேகம் இருந்தா நீ அவனை திட்டிப் பாரு‌‌.." என்றவள் அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டாள்.

அம்ருதா அப்படியே சரிந்து படுத்தாள். தலையணை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.

"என்னை கொன்னுடுவான்தான்.. அவன் கோபத்துக்கு அதுதான் நடக்கும்.. சைக்கோதானே அவன்.?" என்று தனக்குதானே கேட்டுக் கொண்டவள் அப்படியே கண்களை மூடி உறங்க ஆரம்பித்தாள்.

***

கல்லூரிக்கு வந்ததும் சக்தியின் கண்கள் கனிமொழியைதான் முதலில் தேடியது. ஆனால் அவள் அன்றும் வகுப்பிற்கு வரவில்லை.

'இம்சை. இருந்தாலும் இம்சை. இல்லன்னாலும் இம்சை..' எரிச்சலை மறைத்துக் கொண்டு பாடத்தை நடத்தினான்.

***

தாங்கள் நடத்தி வரும் கார் விற்பனையகங்களை மேற்பார்வையிட்டுவிட்டு வீடு வந்தான் பாரதி.

பாரதியும் அவனின் தாயாரும் சேர்ந்து தொலைக்காட்சியில் சின்சேன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். "சரியான வாலு பையன் இந்த சின்சேன்.." திட்டிக் கொண்டே தன் முன் இருந்த சிப்ஸை எடுத்துக் கொறித்தாள் பாரதி.

"சீரியல் போடுடாம்மா.. டைம் ஆச்சி.." மாமியார் தன்னிடம் கெஞ்சாத குறையாக கேட்டும் கூட தொலைக்காட்சியில் எதையும் மாற்றாதவள் "இதை பாருங்க அத்தை.. நல்லாருக்கு.." என்றாள்.

"ம்க்கும்.." தொண்டையை செருமினான் நரேஷ்.

ஒய்யாரமாக திரும்பிப் பார்த்த பாரதி இவனை கண்டதும் இதழை சுளித்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

'அம்மா பாவம்.. இப்படியே போனா சீக்கிரம் அம்மாவை அதட்டி மிரட்டி வச்சிடுவா இவ..'

பாரதியின் அருகே வந்தவன் அவளை உராய்ந்தபடி அமர்ந்தான். பாரதி அவசரமாக நகர்ந்து அமர்ந்தாள்.

"அம்மா ஒரு டீ கொண்டு வாங்களேன்.." மகன் சொன்னதும் எழுந்து போனாள் அம்மா.

நரேஷ் மனைவியின் புறம் திரும்பினான். இவளை விசித்திரமாக பார்த்தபடி ஒன்றரையடி தள்ளி அமர்ந்திருந்தாள் அவள்.

பட்டென்று அவள் மீது சரிந்தான். பயத்தில் ரிமோட்டை கீழே விட்டு விட்டு அவளும் பின்னால் சாய்ந்தாள்.

"நீ இன்னைக்கு மேக்கப் போட்டிருக்கியா.?" எனக் கேட்டவன் அவளின் இடையில் கையை பதித்தான்.

பதறியபடி அவனின் கையை தட்டி விட்டாள்.

"கொஞ்சமா போட்டிருக்கேன். ஏன்.?" என்றாள் புரியாமல்.

"ரொம்ப அழகா இருக்க. அதனாலதான் கேட்டேன்.." என்றவன் அவளின் இதழை நோக்கி குனிய, அவனை பிடித்து தள்ளி விட்டவள் எழுந்து நின்றாள். அவனின் முகம் பார்க்காமல் அங்கிருந்து ஓடிப் போனாள்‌.

"ஹஹஹா.." தனியாக சிரித்துக் கொண்டிருந்த மகனின் முன்னால் டீயை வைத்தாள் அம்மா‌.

"சீரியல் பாருங்கம்மா.." என்றுவிட்டு எழுந்து நின்றான். நின்றபடியே டீயை அருந்திவிட்டு அவளை தேடிப் போனான்.

கதவருகே இருந்த சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள் பாரதி. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

அவனின் தீண்டல்கள் ஏன் தனக்கு அருவெறுப்பை தரவில்லை என்ற குழப்பத்தில் இருந்தாள்‌. மனதில் ஒருவனை வைத்துக் கொண்டிருக்கையில் இவனின் தொடுகை ஏன் பிடித்தமானதாக இருக்கிறது என்று புரியவில்லை அவளுக்கு.

"அவ்வளவு அவசரமா.?" அவனின் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.

"அங்கேயா இருந்திருந்தா கிஸ் மட்டும்தான்.. தனியா இருந்தா இன்னும் ஏதேதோ செய்யலாம்ன்னு நினைச்சிதானே ஓடி வந்த.?" ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டபடி அவளை நெருங்கினான்.

திகைப்போடு சுவரை ஒட்டியபடியே பின்னால் நகர்ந்தவள் "நீ. நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்க.. உன்கிட்ட இருந்து தப்பிக்கதான் நான் ஓடி வந்தேன்.." என்றாள் கோபத்தோடு.

உதடு சுழித்து அலட்சியம் காட்டியவன் அவளின் கையை பிடித்து இழுத்தான். தன்னருகே இருந்த சுவரோடு சாய்த்து நிறுத்தினான்.

நடுங்கும் அவளின் மேனியை கண்டு திருப்திப்பட்டுக் கொண்டவன் "உன் உதடு சொல்ற ஒன்னை கூட நம்ப மாட்டேன் நான்.. உன் கண்ணு சொல்றதை மட்டும்தான் கேட்பேன். உன் கண்ணு அவசரமாக முத்தம் வேணும்ன்னு கேட்குது‌." என்றான்.

"ஐயோ.. இ.." அத்தோடு அவளின் குரலை திருடி விட்டான்.

பாரதியின் தலைக்குள் டம் டம்மென்று கடிகார மணியோசை கேட்டது. இது தவறு என்றது மனது. ஆனால் அவனுக்கு இசைய சொல்லி கேட்டது உடம்பு.

அவனின் நெஞ்சில் ஏறியது அவளது கரம். அக்கரத்தை அத்தோடு நிறுத்தியவன் விலகினான். அவளுக்கு விருப்பம் இல்லை என்று நினைத்தே விலகினான். ஆனால் அவளோ அவனின் விலகலில் திகைத்து நின்றாள்.

இப்போது என்ன செய்வது என்று அவனுக்கே தெரியவில்லை. முத்தம் தந்ததற்கு மன்னிப்பை கேட்பதா, இல்லை முத்தத்தை மறுபடி தொடர்வதா என்றே தெரியவில்லை.

பாரதியின் முகத்திலிருந்த உணர்வுகள் மாற்றம் பெற ஆரம்பித்தன.

நரேஷ் பெருமூச்சோடு அங்கிருந்து நகர்ந்தான்.

***

"எயிட்ஸ் ஏன் உயிர்க்கொல்லி நோய்ன்னா, அது தன்னை தீண்டிய அடுத்தடுத்த உயிர்களையும் கொல்லும் அளவுக்கு மோசமா இருப்பதாலதான்.." என்று பாடத்தை விவரித்துக் கொண்டிருந்த பேராசிரியர் "எயிட்ஸை பற்றிய உங்களோட எண்ணம் என்னன்னு சொல்றிங்களா.?" எனக் கேட்டுவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.

தேன்மொழி எழுந்து நின்றாள். வகுப்பில் என்றும் பேசாதவள் இன்று எழுந்து நிற்பது கண்டு பலருக்கும் ஆச்சரியம்.

"எயிட்ஸை பத்தி இந்த வகுப்பு நண்பர் ஆரவ்கிட்ட கேளுங்க சார்‌‌.. பாக்கெட் பாக்கெட்டா காண்டம் வாங்கற அவனுக்குதான் எயிட்ஸை பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு.. அவனுக்கு அந்த வியாதி இருக்க கூட செய்யலாம்.." என்றாள்.

வகுப்பிலிருந்து மொத்த பேரும் ஆரவின் புறம் பார்த்தனர். 'இவனா.?' என்று ஆளாளும் கிசுகிசுத்தனர்.

ஆரவ் உள் உதட்டை கடித்தபடி எழுந்து நின்றான். முகத்தில் புன்னகையை தவழ விட்டவன் "எயிட்ஸை பத்தி எனக்கு பெருசா ஏதும் தெரியாது சார்.. ஆனா காண்டம் யூஸ் பண்ணா எயிட்ஸ் வராதுன்னு மட்டும் தெரியும்.. பாவம் இது என் தோழி தேன்மொழிக்கு தெரியலங்கறதுதான் வருத்தமா இருக்கு.." என்றான்.

சுற்றியிருந்த அவனின் நண்பர் கூட்டம் "ஹோஹோ.." என்று கூச்சலிட்டது.

ஆரவ் அமர்ந்தான். "மச்சான் செம பதில்.." என்றது நண்பர் கூட்டம்.

தேன்மொழிக்கு காதில் புகை வராத குறை. ஆரவுக்கும் அவளின் மீது அதை விட அதிக கோபம்தான். அதை தீர்த்து விட எண்ணியவன் மாலையில் கல்லூரியை விட்டு கிளம்பிக் கொண்டிருந்த தேன்மொழியை வகுப்பறையோடு பிடித்து நிறுத்தினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN