காதல் கணவன் 85

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் முன் கை நீட்டி மறித்தவனை கோபத்தோடு பார்த்த தேன்மொழி "மரியாதையா என் வழியை விடு.." என்றாள்.

"உனக்கும் எனக்கும் ஒத்து வரலன்னா அமைதியா தூர இரு ஹனி. எதுக்கு சம்பந்தம் இல்லாம என் அக்காவை அவ்வளவு திட்டுற? என்னை ஏன் இன்சல் பண்ற? என்னை இவ்வளவு இன்சல் பண்ணதால உனக்கு என்ன கிடைச்சது.?" என்றான் ஆத்திரத்தோடு.

விழியை ஓரமாக நகர்த்தி அவனை வெட்டும் பார்வை பார்த்தவள் "உண்மையைதானே நான் சொன்னேன்.? லவ் பண்றேன்னு என் பின்னாடி சுத்தின. ஆனா பிரேக்அப் கூட பண்ணிக்காம கண்டவளோடும் மேஞ்சிட்டு இருக்க.." என்றாள்.

தனது கேள்விக்கான பதில் இதுவல்ல என்று அறிந்திருந்தாலும் "நான் எவ கூடவும் சுத்தல. காதலிச்ச உன்னையே இதுவரை கை தொட்டது கிடையாது. நான் எவ கூட வேணாலும் தப்பு செய்வேன்னு நீயே முடிவு பண்ணிட்ட.. நல்லாருக்கு உன் நம்பிக்கை.." என்றான் இளக்காரம் பொங்கி வழிய.

தேன்மொழியின் பார்வையில் குழப்பம் கூடியது.

"இதை நான் நம்பணுமா.? உன் லட்சணத்தைதான் மெடிக்கல் ஷாப்லயே பார்த்தேனே.!" என்றவளை பார்வையால் எரித்தபடியே தனது போனை எடுத்தான். தான் மெடிக்கல் கடைக்கார அண்ணனுக்கு அனுப்பிய மெஸேஜை இவளிடம் காட்டினான்.

அவளுக்கு புரிந்திருக்காது என்பதை புரிந்துக் கொண்டவன் "உன் அண்ணன் கல்யாணத்தன்னைக்கு என் வீட்டு முன்னாடி வந்து நின்னு ஹாரன் அடிச்சிட்டு இருந்தியே அதுக்கு என்னோட பதில்தான் இது. நான் வெறுத்து போகணும்ன்னு நீ ப்ளான் போட்டதை கேட்டுட்டுதான் இந்த மாதிரி நான் பண்ணேன்.." என்றான்.

அவளின் முகத்தில் சிறிது சிறிதாக பரவிக் கொண்டிருந்த நிம்மதியை கண நேரம் பார்த்தவன் "நாம பிரேக்அப் பண்ணிக்கலாம். நமக்குள்ள செட் ஆகாது.." என்றான்.

தேன்மொழி அதிர்ந்தாள்.

"என் அக்கா தப்பு செஞ்சிருக்கா.. இல்லன்னு நான் சொல்லல. அதுக்காக உன் அண்ணன் செஞ்சது அத்தனையும் சரின்னு ஆகிடாது. உன் அண்ணனை கூட என்னால மன்னிச்சி ஏத்துக்க முடியும். ஆனா உன்னை மன்னிக்க முடியும்ன்னு தோணல.. நாம பிரியறதுதான் நம்மோட எதிர்காலத்துக்கு நல்லது.."

"அவளுக்காக என்னை பிரேக்கப் பண்றியா.?" என்றவளை கண்டு நகைத்தவன் "இல்ல.. உனக்காகதான் உன்னை பிரேக்அப் பண்றேன். உன் எண்ண போக்கும் என் எண்ண போக்கும் ஒத்து வரல.." என்றான். தனது பேக்கை சரியாக மாட்டிக் கொண்டவன் "எனக்காக என் அக்காவை திட்டாத.. நான் உங்க அண்ணனை போல சைக்கோ கிடையாது, காதலியை கூட பழி வாங்கிட்டு இருக்கறதுக்கு.. ஆனா நீ என் அக்காவை டிஸ்டர்ப் பண்ணா கண்டிப்பா அதுக்கு வேறு விதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். நாத்தனார் கொடுமைக்காக ஜெயிலுக்கு போக விரும்ப மாட்டன்னு நினைக்கிறேன்.." என்று சொல்லி விட்டு அங்கிருந்துப் போனான்.

தேன்மொழி அவனின் முதுகை வெறித்தாள். அவமானமாக இருந்தது. அழுகையாக வந்தது.

***

மாலையில் வீடு திரும்பிய வெற்றி தனது அறையில் சுருண்டு படுத்திருந்த மனைவியையும் மேஜையின் மீதிருந்த பூங்கொத்தையும் மாறி மாறி பார்த்தான்.

கீர்த்தனா பாடல் ஒன்றை ஹெட்போனில் கேட்டபடி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். 'நீ காற்று.. நான் மரம்.. என்ன சொன்னாலும் தலை ஆட்டுவேன்..' பாடலின் வரிகள் அவளுக்கு தன் மணாளனைதான் நினைவுப்படுத்தின.

இதழில் சிறு நகை வழிய பாடலை ரசித்துக் கொண்டிருந்தவள் தன் கண்களை மூடிய ஒற்றைக் கரத்தை மெல்ல வருடினாள்.

மறுகையால் அவளின் ஹெட்போனை கழட்டினான் பாலாஜி. அவளின் காது மடலில் முத்தமிட்டவன் "என்னை நினைச்சிட்டு இருந்தியா.?" எனக் கேட்டான் கிசுகிசுப்பாக.

தலையை மட்டும் ஆமெனும் விதமாக அசைத்தாள் அவள்.

"நானும் உன்னையேதான் நினைச்சிட்டு இருந்தேன்.." அவளின் கழுத்தில் விரல் பதித்து தோளுக்கு கோலம் வரைந்தவன் "கீர்த்து.." என்ற வெற்றியின் குரலில் அவசரமாக விலகி நின்றான்.

"கதவை சாத்தி வைக்க மாட்டிங்களா.?" வெற்றியின் எரிச்சலை புறம் தள்ளி விட்டு எழுந்து நின்ற கீர்த்தனா "சொல்லு வெற்றி.." என்றாள்.

"அவ இன்னைக்கு எங்கேயாவது போனாளா.?"

'இதை அவக்கிட்டயே கேட்க வேண்டியதுதானே.?' என நினைத்தவள் "இல்ல.." என்றாள்.

"ஓகே.. பூங்கொத்து இருந்தது. அதனால கேட்டேன்.." என்றவன் திரும்பி‌ நடக்க, "அவளை பார்க்க அவளோட பிரெண்ட் வந்திருந்தாங்க.." என்று சொன்னாள் கீர்த்தனா.

வெற்றி பாலாஜியின் முகம் பார்த்தான். "நான் இல்ல.." என்று பாலாஜி பதில் சொல்லவும், "யாரோ ஒரு பொண்ணு வந்திருந்தா.." என்றாள் கீர்த்தனா.

பாலாஜி நெற்றியை சுருக்கினான். "ஆதிரா இன்னைக்கு பேங்க் வந்திருந்தாளே.!" என்றான் குழப்பத்தோடு.

"அவளுக்கு வேற பிரெண்டே இருக்க மாட்டாங்களா.?" கீர்த்தனா எரிச்சலாக கேட்டாள்.

"நிஜமாவே இல்ல கீர்த்து.." பாலாஜி உறுதியாக சொன்னான்.

வெற்றி குழப்பத்தோடு தனது அறைக்கு திரும்பினான். அம்ருதா அதே போல படுத்திருந்தாள்.

"உடம்பு சரியில்லையா.?" என கேட்டவனிடம் எந்த பதிலையும் தரவில்லை அவள்.

அருகில் வந்து நெற்றியை தொட்டான். பதட்டத்தோடு தள்ளி படுத்தாள். முறைத்தபடியே கையை விலக்கிக் கொண்டவன் உடையை மாற்ற ஆரம்பித்தான்.

அவளை பார்த்தபடியேதான் உடையை மாற்றினான். அவளின் பார்வையும் அவனுக்கு நேராகதான் நின்றிருந்தது. ஆனால் அவளிடம் ஒரு மாற்றமும் இல்லை. வெட்கமோ வெறுப்போ இல்லாமல் சிலையாய் இருந்தவளை குழப்பத்தோடு பார்த்தபடியே அழுக்கு உடையை கொண்டு சென்று கூடையில் எறிந்தான்.

காலையில் எப்படி விட்டுச் சென்றானோ அதே போல இருந்தாள். குளித்திருக்கவில்லை. உடை மாற்றி இருக்கவில்லை. கலைந்த தலையை வாரி இருக்கவில்லை.

"மதியம் சாப்பிட்டியா.?"

அவள் பதில் சொல்லாமல் போகவும் வெளியே போனான். தனது பாட்டியிடம் விசாரித்தான்.

"அவ ரூமை விட்டே வெளியே வரல வெற்றி.." என்று பதில் சொன்னாள் பாட்டி.

"நீங்களாவது கூப்பிட்டு கொடுத்திருக்கலாமே.!" வருத்தமாக சொன்னபடி திரும்பினான்.

இரவு வரை படுத்தே கிடந்தவளை சோஃபாவில் அமர்ந்தபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் இவன்.

"சாப்பிடாம இருந்து சாக போறியா.?"

"பசிக்கல.."

நெற்றியை தேய்த்தவன் "உனக்கு குழந்தை பெத்துக்க விருப்பம் இல்லன்னா கலைச்சிடு. நான் தலையிடல. ஆனா என் குழந்தையை சாக்கா வச்சி பட்டினி கிடக்காத.." என்றான் எரிச்சலாக.

"இனிமே சாப்பிடுறேன்.." சிறு குரலில் முணுமுணுத்தாள்.

ஆனால் அவனுக்குதான் எரிச்சல் தீரவில்லை.

இரவு வரை அப்படியே இருந்தாள். கண்டுக்காமல் இருக்க வேண்டும் என்று எவ்வளவு முயற்சித்தும் கோபம் போக மறுத்தது அவனுக்கு.

"இழவு வீடா இது.? எதுக்கு இப்படி படுத்தே கிடக்கற.?"

கையை ஊன்றி சோர்வோடு எழுந்து அமர்ந்தாள். அவளின் முக சோர்வு கண்ட பிறகு ஏன் அப்படி கேட்டோம் என்றிருந்தது.

"ஹாஸ்பிட்டல் போகலாமா?" அவனின் கேள்வியில் பயந்து முகம் கூட வெளிறி போய் விட்டது அவளுக்கு.

"எ.. எதுக்கு.?"

'இந்த குழந்தை மேல அவ்வளவு ஆசையா.? அப்புறம் ஏன் அந்த குழந்தையை கலைச்சா.? ஒருவேளை பாலா சொன்னது போல பொய்தானோ.?' குழம்பியவன் "ரொம்ப டயார்டா இருக்கியே.. அதுக்காகதான் செக்கப்புக்கு கூப்பிட்டேன்.." என்றான்.

அப்போதும் அவளின் பயம் குறையவில்லை. "நா.. நான் வரல.." என்றவள் அவசரமாக போர்வையை உதறி தலையோடு போர்த்திக் கொண்டு படுத்தாள்.

கடுப்போடு கையை இறுக்கியவன் "என் மேல அவ்வளவு அவநம்பிக்கையா.? கூட்டிப் போய் குழந்தையை கலைச்சிடுவேன்னு அவ்வளவு பயமா.?" என்றான் எரிச்சலோடு.

பதில் சொல்லாமல் பெட்சீட்டை இறுக்கியபடி கண்களை மூடினாள்.

அவளின் கைப்பிடியிலிருந்த பெட்சீட் எங்கேயோ தூரமாக பறந்தது.

"எழுந்து போய் குளி.. நைட் சாப்பாடாவது சுத்தமாக சாப்பிடுவ.."

வேண்டா வெறுப்பாக எழுந்தவள் மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றாள்.

இரவு உணவை உண்டு விட்டு இவளுக்கு எடுத்து வந்தான். எதுவும் பேசாமல் உண்டு விட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.

"யார் உன்னை பார்க்க வந்தது.?" சோஃபாவில் படுத்தபடி கேட்டான்.

"சினேகா.."

"யார் அவங்கன்னு கேட்டேன்.."

புருவம் முடிச்சிட்டது அவளுக்கு. என்ன உறவென்று சொல்வது.? அவளுக்கே தெரியவில்லை.

"தெரிஞ்சவங்க.." என்றாள் பொத்தாம் பொதுவாக.

அதற்கு மேல் அவனும் கேட்கவில்லை.

"தூங்க போறேன்.. என்னை கொன்னுடாத ப்ளீஸ்.." என்றாள் முனகலாக.

இந்த வார்த்தைகளுக்காகவே அவளை கொல்ல வேண்டும் போல இருந்தது.

"மாட்டேன்.." பற்களை அரைத்தபடி சொன்னான். மெள்ள விழிகளை மூடினாள் அவள்.

***

"இன்னைக்காவது காலேஜ் வருவாளா இவ.? பீஸ் கட்டி பாழா போச்சி.." தன் மனைவியை திட்டிக் கொண்டே காரை நிறுத்தினான் சக்தி.

புதிதாக ஒரு ஹாரன் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். மாணவர்களுக்கான வாகனங்கள் நிற்குமிடத்தில் இருந்த ஒரு புது ஸ்கூட்டியில் அமர்ந்திருந்தாள் கனிமொழி.

கனிமொழிதான் அவள் என்பதே உற்று பார்த்த பிறகுதான் அவனுக்கு தெரிந்தது. தலையை புது மாடலில் பின்னியிருந்தாள். என்றைக்கும் இல்லாத திருநாளாக இன்று கண்ணிற்கு அடர்த்தியாக மை வைத்து, லேசாக உதட்டில் சாயம் தீட்டி, பொட்டு இல்லாமல், சிறிய காதணியோடு இருந்தாள்.

இவனாகவே அவளருகே சென்றான்.

"ஹாய் மாமா.. என் ஸ்கூட்டி எப்படி இருக்கு.?" என்றபடி இறங்கி நின்றாள். காலிலிருந்த ஹீல்ஸ் அவளை உயரம் கூட்டி தந்திருந்தது.

"நீ ஏன் இப்படி இருக்க.?" முகத்தை அஷ்டகோணலாக மாற்றி வைத்தபடி கேட்டான்.

"எப்படி.?" காதோரத்து முடியை நீவி விட்டுக் கொண்டு கேட்டாள்.

"வித்தியாசமா.."

"எனக்கு எதுவும் வித்தியாசமா தெரியல. சரி அதை விடுங்க.. ஸ்கூட்டி எப்படி இருக்கு.? எனக்கு மாமியார் சீதனம் இது.!" என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தவன் "ஆனா இது எப்படி நடந்தது.?" என்றான்.

"உங்க பையன் எனக்கு செட் ஆகல.. புதுசா ஒரு பையனை தேடி பிடிக்கணும்.. அதுக்கு ஒரு ஸ்கூட்டி வேணும்ன்னு கேட்டேன். வாங்கி தந்தாங்க.."

முகத்தில் கருப்பு படிந்தது அவனுக்கு. "இ.. இப்படியே கேட்டியா.?" கோபத்தோடு கேட்டவனிடம் பற்களை காட்டியவள் "உங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் மாமா.? நீங்கதானே நல்ல பையனா பார்த்து என்னை லவ் பண்ண சொன்னிங்க.. நான் உங்க பேச்சை என்னைக்காவது கேட்காம இருந்திருக்கேனா.?" என்று அப்பாவி போல கேட்டாள்.

அவளின் தலையில் கொட்ட வேண்டும் போலிருந்தது.

"கிளாஸ்க்கு டைம் ஆச்சி மாமா.. நாம அப்புறம் மீட் பண்ணலாம்.." அவனை தாண்டி நடந்தாள்.

சக்தி அவளை வெறித்தபடி நின்றான்.

அவன் வகுப்பிற்கு வந்து பாடம் எடுக்கும்போதும் அவள் இவனை ஏறிட்டு கூட பார்க்கவில்லை.

'அவ இப்ப எடுத்திருக்கும் இந்த முடிவுதான் அவளுக்கு நல்லது..' என்று தனக்குதானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.

ஆனால் ஞாயிற்றுக் கிழமை காலையில் உறங்கிக் கொண்டிருந்த சக்தியை கதவு தட்டி எழுப்பினாள் கனிமொழி.

கொட்டாவி விட்டபடி லுங்கியை அரை குறையாக உடுத்தியபடி வந்து திறந்தவன் இவளை கண்டதும்‌ மொத்த தூக்கமும் கலைந்து "என்ன பாப்பா இந்த நேரத்துக்கு வந்திருக்க.? அதுவும் இந்த கோலத்துல.?" எனக் கேட்டான் அதிர்ச்சியாக.

அவனின் தங்கையே பரவாயில்லை எனும் அளவுக்கு இருந்தது இவள் சேலை அணிந்திருந்த விதம். இவளுக்கு இடுப்பு இருக்கிறது என்ற விசயமே இன்றுதான் அவனின் புத்தியில் உறைத்தது.

"என்ன கோலம் மாமா.?" எனக் கேட்டவள் அவனை தள்ளி நிறுத்தி விட்டு உள்ளே வந்தாள். நாற்காலியில் சோர்வாக அமர்ந்தாள்.

"அந்த வீட்டுல போர் அடிக்குது மாமா. அதனாலதான் உங்களை கூட்டிட்டு ஊர் சுத்தலாம்ன்னு வந்தேன்.." என்றவளின் மாராப்பை பார்த்தவன் "இப்படியே வீட்ல இருந்து வந்தியா.?" எனக் கேட்டான்.

"ஆமா ஏன்.?"

"முன்னாடி முழுசா தெரியுதுடி.." சீறினான்.

தன்னைப்‌ பார்த்துக் கொண்டவள் "எனக்கு எதுவும் தெரியல. இன்னர்வேர், அதுக்கு மேல பிளவுஸ், அதுக்கு மேல சேலைன்னு த்ரீ கோட்டட் டிரெஸ் பண்ணியிருக்கேன்.. நீங்க பாட்டுக்கு உளறிட்டு இருக்காதிங்க.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN