காதல் கணவன் 90

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"ஏன் மாமா.?" என்றாள் கனிமொழி கைகளில் வலியை உணர்ந்து.

"உன்னை.." கத்த நினைத்தவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கனிமொழியை தள்ளிக் கொண்டு அவளின் அறைக்குள் நுழைந்தான்.

கதவை சாத்தியவன் "என்னடி பண்ணி வச்சிருக்க.?" என்று சீறினான் அவளின் காதோடு.

'இந்த முறை என்ன செஞ்சேன்.?' குழம்பியவள் "ஏன் மாமா.? உங்க பாடத்துல ஏதாவது மாத்தி எழுதிட்டேனா.? அதை கேட்கவா இந்த நடு ராத்திரியில் வந்திங்க.? என் மேலயும் என் படிப்பு மேலயும் அவ்வளவு அக்கறையா மாமா.?" என்று ஆவலோடு விசாரித்தாள்.

முறைத்தவன் "மாடு மாடு.. நான் தனியா இருக்கேன்னு சுப்ரியாகிட்ட சொன்னியா நீ.?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி குரைத்தான்.

காதை அசக்கி விட்டுக் கொண்டாள்.

சந்தேகத்தோடு அவனைப் பார்த்தவள் "அம்மணி சாயங்காலத்துல விசிட் அடிச்சாங்களா என்ன.?" என்றாள் நக்கலோடு.

அவளை கொட்டுவதற்கு கையை ஓங்கியவன் தனது நெற்றியில் அடித்துக் கொண்டு கையை கீழே இறக்கினான்.

"மெண்டல்.. அவ நடு ராத்திரியில் வீட்டுக்கு வரா.." என்றான் அடங்காத கோபத்தோடு.

கனிமொழிக்கு கண்கள் விரிந்தது. "அடிப்பாவி.." முனகியவள் ''எனக்கு சக்களத்தியா மாற அவ்வளவு ஆசையா அவளுக்கு.?" என்றுக் காற்றோடுக் கேட்டாள்.

சக்தி அதற்கும் அவளைதான் முறைத்தான். "வேணும்ன்னேதானே நம்பர் தந்த.? இப்ப புதுசா நடிக்கற.."

கனிமொழி மூக்கு சிவக்க அவனை முறைத்தாள். அவனின் கன்னத்தில் ஒரு குத்து விட்டாள். அவனுக்கு கடுப்புதான் ஏறியது. 'பாப்பா பாப்பான்னு நான் பாவம் பார்த்து விடுறேன்.‌ ஆனா இவ கிடைக்கற கேப்ல எல்லாம் அடிக்கறா..'

"அன்னைக்கு நீங்கதானே அவளுக்கு உங்க மொபைல் நம்பர் தந்திங்க.. இன்னைக்கு நான் சொன்னதுல என்ன குறைஞ்சது.? நீங்க ஆரம்பிச்சிங்க.. நீங்க கோடு போட்டிங்க.. அவ இப்ப ரோடு போட டிரை பண்றா.. இதுல என் நடிப்பு எங்கே இருக்கு.?"

"கத்தாம பேசு.."

"நான் அப்படிதான் பேசுவேன்.. இல்ல இல்ல இதை நாம பேசிக்க வேணாம்.. நான் சின்ன பொண்ணுன்னு நீங்க எப்பவும் ஏமாத்திடுவாங்க.. நாம இதை வீட்டு ஆட்கள்கிட்ட சொல்லி நியாயம் கேட்கலாம். அவங்க கரெக்டா சொல்லுவாங்க.." என்றவள் கதவை திறக்க செல்ல, அவளை பிடித்து இழுத்து தன்னோடு நிற்க வைத்தான். அவனின் கரம் தன் இடுப்போடு சுற்றி இருந்ததை கவனித்தவள் அவனிடமிருந்து விலக முயற்சி செய்தாள். ஆனால் அவனின் கவனம் அவளிடத்தில் இல்லை.

"வீட்டுல இருப்பவங்களை இந்த டைம்க்கு எழுப்பி பஞ்சாயத்து வைக்க போறியா நீ.?" சீறினான்.

அவனின் மூச்சு காற்று செவியோரம் மோதியதில் தேகம் சிலிர்த்தாள்.

"என் மேல தப்பு இல்ல.." சிறு குரலில் சொன்னாள்.

"நான் தனியா இருக்கேன்னு நீ ஏன் சொல்ற.? அது அனாவசியம்.."

"உங்களுக்கு அவளாவது உதவியா இருக்கட்டுமேன்னு.." மீதியை சொல்லும் முன் அவளை தன் புறம் திருப்பினான். அதே வேகத்தில் அவளை கதவோடு தள்ளி அறைந்தான். முதுகில் லேசாக வலித்தது அவளுக்கு.

"என்ன உதவி.?" அவன் பற்களை கடித்திருந்த தோரணை கண்டே அதிகம் நடுங்கிப் போனாள்.

'சந்தர்ப்பத்தை நழுவ விடாத..' தனக்குதானே சொல்லிக் கொண்டாள். "நீங்களும் ஆம்பளைதானே.. என்கிட்டதான் எதுவும் தோணல.. வேற ஒரு பொண்ணு இருந்தா உங்களுக்கு.." மேலே சொல்லும் முன் அவளின் வாயின் மீது அடியை விட்டான். சுளீரென்று விழுந்த அடியில் உதடு காயம் பட்டு விட்டது. கையை இறுக்கினாள் கனிமொழி. முன்னால் இருந்தவனின் தொடையில் ஒரு உதையை விட்டாள்.

"அம்மா.." வலியோடு பின்னால் நகர்ந்தான். "கொஞ்சம் மிஸ்ஸிங்.." என்றான் தன்னைதானே பார்த்துக் கொண்டு.

"மிஸ்ஸிங் இல்ல.. நான்தான் பாவம் பார்த்து உதையை மாத்தி தந்தேன்.." என்றவளை முகம் சுளிக்க வெறித்தான்.

உதட்டிலிருந்து வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டவள் "இன்னொரு முறை என்னை அடிச்சிங்க நான் திருப்பி நாலு மடங்கா தந்துடுவேன்.. உங்க மேல எனக்கு எவ்வளவு லவ் தெரியுமா.? என் மேலதான் எந்த பீலும் இல்ல. அட்லீஸ்ட் அவளாவது உங்களுக்கு உதவியா இருக்கட்டுமேன்னு நினைச்சேன். நான் இப்படியெல்லாம் நினைக்கற ஆள் இல்லதான். ஆனா என்ன செய்றது.? உங்களை லவ் பண்ண பாவத்துக்கு எல்லாமே தப்பு தப்பாதான் தோணுது.." என்றாள் நொந்துப் போன குரலில்.

சக்தி தொடையை தேய்த்தபடி சென்று கட்டிலின் மீது அமர்ந்தான். நிற்க முடியவில்லை. அவள் பேசுவது வேறு ஏகப்பட்ட எரிச்சலை தந்தது.

"சனியம் பிடிச்சவ.. ஹேர் மாதிரியேதான் பேசுறா.. சரியான ராகு காலத்துல பெத்திருப்பாங்க போல.." வலியோடு முனகினான். அப்படியே படுத்துக் கொள்ள சொன்னது உடம்பு.

மெள்ள தலையணையில் சாய்ந்தான். அருகில் வந்தவள் தலையணையை உருவி எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். தலை நழுவி விழுந்ததில் மேலும் எரிச்சல் அதிகமாகி சிரமத்தோடு எழுந்து அமர்ந்தான்.

"என்னடி வந்து தொலைஞ்சது உனக்கு.? கால் வலிக்குது. நான் இப்படி படுத்துக்கிறேன். உளறுறவ நீதானே.. அப்படியே நின்னு உளறு.." என்றான்.

தலையணையிலேயே ஒரு அடியை விட்டாள். 'பாவம் பார்த்து விட்டா சாகடிக்கறா..'

"இது என் ரூம். இது என் கட்டில். வெளியே போங்க.."

"போடி.." என்றவன் காலடியில் இருந்த மற்றொரு தலையணையை எடுத்து தலைக்கு கீழ் வைத்துக் கொண்டு படுத்தான். "உதைச்சது நீ. அதுக்கு பரிகாரமும் நீதான் செய்யணும். காலையில் வரைக்கும் என்னால அசைய கூட முடியாது. நீ வேணா போய் என் ரூம்ல படுத்துக்கோ.."

'அதிசயம் ஆனால் உண்மை.. என் புருசனுக்கும் சில்லறைதனமெல்லாம் செய்ய தெரியுது..' ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. வழக்கத்திலிருந்து தப்பித்தவனாக இன்றுதான் அவளுக்கு சமமாக நடந்துக் கொண்டிருந்தான்.

"தள்ளிப் படுங்க.." என்றவள் அவனருகிலேயே தனது தலையையும் சாய்த்தாள்.

"டோன்ட் டச் மீ.. இல்லன்னா நான் சுப்ரியாவுக்கு இன்னும் நிறைய ஐடியாஸ் தருவேன்.."

"ஆமா.. அழகி நீ.. நாங்க அப்படியே மயங்கறோம்.."

திரும்பிப் பார்த்து முறைத்தவள் "போய்யா ரோபோட்.." என்று திட்டினாள்.

கோபம் வந்தாலும் கூட அவன் அதை காட்டவில்லை.

"குட் நைட்.." என்றவள் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.

"கனி.." பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு அழைத்தான். அவள் பதில் தரவில்லை.

"எனக்கு அவ மேல எந்த இன்ட்ரஸ்டும் இல்ல கனி. நீயா எதையாவது இழுத்து விடாத. அவளுக்கும் உனக்கும் இருக்கும் சம்பந்தத்தை கண்டுப்பிடிக்கதான் அவளுக்கு என் நம்பர் தந்தேன்‌. வீட்டுக்கு கூட வர சொன்னேன். மத்தபடி ஏதும் இல்ல பாப்பா.." என்றான் சமாதானம் செய்யும் குரலில்.

கனிமொழி மனதிற்குள்ளேயே கணக்கைப் போட்டாள். அவன் அவளின் மௌனம் கண்டு அவளை தன்புறம் திருப்பினான். உறங்கியது போல பாவனை காட்டிக் கொண்டிருந்தாள்.

உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்து அவளை விட்டுவிட்டு விலகி படுத்தான். பெருமூச்சு விட்டபடி அவளைப் பார்த்தான். இதழில் சிவந்திருந்த இடத்தை விரலால் தடவி தந்தான்.

"சாரி.." முனகினான். அவளின் தலையை வருடி விட்டான். 'என் பொண்டாட்டி உன்னை விட பேரழகு..' சுப்ரியாவிடம் சொன்னது நினைவிற்கு வந்தது. மென் புன்னகையோடு அவளின் முகம் பார்த்தான். அழகாகதான் தென்பட்டாள். அவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு விலகிக் கொண்டான். கண்களை மூடி உறங்க ஆரம்பித்தான். அரை கண்களை திறந்துப் பார்த்த கனிமோழி மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

***

மகன் தன் மருமகள் அறையிலிருந்து வெளி வருவது கண்டு கண்கள் இரண்டும் தெறித்தது அர்ச்சனாவுக்கு. கனவா நிஜமா என்று புரியாமல் கண்களை கசக்கிக் கொண்டாள்.

"குட் மார்னிங்ம்மா.." என்று முனகிவிட்டு அவளை தாண்டி நடந்தான்.

"மாமா.." கனிமொழி அவசரமாக அழைத்தாள். திரும்பியவனிடம் பறக்கும் முத்தம் ஒன்றை பறக்க விட்டாள், தன் மாமியாரை பார்த்துக் கொண்டே.

முகம் சிவக்க தாயின் முகம் பார்த்தான் அவன். அவனின் அம்மாவோ அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டிருந்தாள்.

'இவ ஒருத்தி. காலம் நேரம் பார்க்காம விளையாடிட்டு இருக்கா..' கையை மட்டும் அசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பிப் போனான்.

கனிமொழி மாமியாரை கண்டும் காணாதது போல உதட்டை துடைத்தாள். "ம்ப்ச்.. இவர் எப்பவும் இப்படிதான்.. உதடெல்லாம் காயம்.. காலேஜ்ல பிரெண்ட்ஸெல்லாம் கிண்டல் பண்ண போறாங்க.." சலித்துக் கொண்டே உள்ளே சென்று கதவை பூட்டினாள். உடனே வயிற்றை ஒரு கையால் பிடித்துக் கொண்டு சிரித்தாள். சத்தம் வெளியே வராமல் இருக்க வாயை பொத்திக் கொண்டாள். மாமியாரின் முகம் கண் முன் வந்துப் போனாது. சிரிப்பும் தங்கு தடை காணாமல் பொங்கி வந்தது.

'அம்மாவும் மகனுமா சேர்ந்து என்னையா மட்டம் தட்டுறிங்க. இனி இருக்கு உங்களுக்கு..' மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டு எழுந்து நின்றாள். கல்லூரிக்கு கிளம்ப தயாரானாள்.

***

"ஹாஸ்பிட்டல் போக உன் அம்மாவை வர சொல்லட்டா.?" வெற்றி குளிக்க கிளம்பும் முன் அம்ருதாவிடம் கேட்டான்.

"வேணாம்.. நான் பார்த்துக்கறேன்.."

"உனக்கு என்ன ஆச்சி.? உன் முகம் கூட கலர் மாறிய மாதிரி இருக்கு.. ஆர் யூ ஆல்ரைட்.?"

"முதல்ல இந்த பொய் அக்கறையை நிப்பாட்டு.. எனக்கு எந்த கேடும் வரல.. நீ போய் உன் வேலை என்னவோ அதை பாரு.." என்றவள் அவன் முறைப்பதை கண்டுக் கொள்ளாமல் பெட்சீட்டை போர்த்திக் கொண்டு படுத்தாள்.

***

கனிமொழியின் ஸ்கூட்டி வந்து நின்றதை பார்த்தபடியே தாங்கள் அமர்ந்திருந்த கைப்பிடி சுவரை விட்டு கீழே இறங்கினர் சுப்ரியாவும் வசந்த்குமாரும்.

"அவனை பழி வாங்கணும் வசந்த்.." நகத்தை கடித்து துப்பினாள்.

"இவ அவனோட தங்கச்சிதானே.? இவளை வச்சி அவனை அழ வைக்கலாம் விடு.."

"ம். ப்ளீஸ்.. எனக்காக இதை செய்.."

"கண்டிப்பா.." என்றவன் தனது அடுத்த திட்டம் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

***

மாலையில் வீடு திரும்பிய வெற்றி மனைவியின் கட்டிலைப் பார்த்தான். சேலை ஒன்றை கட்டி படுத்திருந்தாள். எங்கேயும் தப்பி தவறி கூட எதுவும் தெரிந்து விட கூடாது என்று கவனமாக சேலையை இழுத்துப் போர்த்தி இருந்தாள்.

"ஹாஸ்பிட்டல் போனியா.?"

"ம்.."

"என்ன சொன்னாங்க.?"

"எல்லாம் நார்மலா இருப்பதா சொன்னாங்க.." கூரையில் பதிந்திருந்த பார்வையை மாற்றிக் கொள்ளாமல் சொன்னாள். அவளின் அசையா விழிகளை கண்டவன் "ரிப்போர்ட்.." என்றான்.

நெற்றி சுருக்கினாள். "அ.. சினேகாகிட்ட இருக்கு.." என்றாள்.

குழம்பினான். "அவகிட்ட எதுக்கு.?"

"அவளைதான் கூட்டிப் போனேன்.."

கோபமாக வந்தது அவனுக்கு.

"உங்க அம்மாவை கூட்டிப் போறேன்னுதானே நீ சொன்ன.? அதனாலதானே நான் உன்னை கூட்டிப் போகல.. இவ எதுக்கு இப்ப நடுவுல.?"

"அவ என் பிரெண்ட்.. உன்னை விட என் மேல அவளுக்கு அக்கறை அதிகம். அதனாலதான் அவளை கூட்டிப் போனேன். ரிப்போர்ட் அவகிட்டயே இருக்கு.. இத்தோடு இந்த விசயத்தை விட்டுடு.."

வெற்றி பற்களை அரைத்தான். ஆனாலும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

கடுப்போடு வெளியே சென்றான். அவனின் முதுகை வெறித்துக் கொண்டிருந்தவள் கதவு சாத்தப்பட்டதும் எழுந்து அமர்ந்தாள். பற்களை கடித்தபடி அடி வயிற்றைப் பற்றினாள். கண்களிலிருந்து சூடாக இறங்கியது கண்ணீர்.

மருத்துவமனை செல்வதாக சொல்லிவிட்டு மதியத்தில் கிளம்பியவள் கோவில் ஒன்றிற்கு சென்று மூன்று மணி நேரம் நேரத்தை கடத்தி விட்டு வீட்டிற்கு திரும்பி இருந்தாள். மூன்று மணி நேரம் அமர்ந்திருந்ததும், கோவில் வரை நடந்து சென்று வந்ததும் சேர்ந்து வலியை அதிகப்படுத்தி இருந்தன.

இரு மடங்கு வேகத்தில் துடித்த இதயத்தை மறு கையால் பிடித்துக் கொண்டவள் பெரும் பெரும் மூச்சுகளை விட்டபடி ஒருக்களித்துப் படுத்தாள்.

***

"ஏதாவது செய்யணும்‌.. அதிர்ஷ்டம் அவங்க பக்கம் வீசிட்டா என்ன செய்றது.?" புலம்பிக் கொண்டிருந்தான் அவன்.

"அதுக்கு என்ன செய்யலாம்ங்கற.?" என்றுக் கேட்டாள் சினேகா.

"நீ சொன்ன மாதிரியே அவ பேசி இருக்காளா.? அப்பவெல்லாம்.?"

யோசித்தவள் "ஆமா.. அதை என்கிட்ட கூட சொல்லி இருக்கா. ஏன்.?" என்று கேட்டாள்.

"சும்மாதான்.." என்றவன் சிகரெட்டை பற்ற வைத்து இழுத்தான்.

***

மதிய உணவுக்கு என்ன தேவை என்பதை சமையல் செய்வோரிடம் சொல்லிவிட்டு வந்து சோஃபாவில் அமர்ந்தாள் வளர்மதி. கனிமொழி வீட்டிற்கு திரும்பியதில் கிடைத்த ஒரே லாபம். இந்த சமையல்கட்டிலிருந்து கிடைத்த விடுதலைதான்.

அர்ச்சனா ஆங்கில திரைப்படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தாள். சுவாரசியமாக இருந்ததால் வளர்மதியும் அதையே பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

திரைப்படத்தின் சுவாரசியத்தில் மூழ்கி இருந்தவர்கள் காலிங்பெல் சத்தம் திரைப்படம் பார்ப்பதற்கு தடையாக வரவும்தான் சொந்த கவனத்திற்கு வந்தனர்.

வளர்மதி சென்று பார்த்தாள். வாலிபன் ஒருவன் நின்றிருந்தான்.

"யார் நீங்க.?"

"நான்.." பதிலை சொல்லாதவன் "அம்ருதா மேமை பார்க்க வந்தேன். அவங்க கால் பண்ணி இந்த அட்ரஸ்தான் சொன்னாங்க. இதுதானே அம்ருதா மேம் வீடு.?" என்றுக் கேட்டான் மயக்கும் பார்வை பார்த்து.

அவனை பிடிக்கவேயில்லை அவளுக்கு.

"அவ வர சொன்னாளா.?" கசப்பாக எதையோ உண்டது போல முகத்தை மாற்றியவள் "மேலே ரூம்.." என்று அடையாளம் சொல்லி அனுப்பினாள்.

"யார் இவன்.? ஆளும் சரியில்ல. பார்வையும் சரியில்ல.. இவனை எதுக்கு வர சொல்லி இருப்பா.?" புலம்பிக் கொண்டு வந்து அமர்ந்தாள் வளர்மதி.

***

அப்போதுதான் கண்களை மூடி இருந்தாள் அம்ருதா. கதவு தட்டப்படும் சத்தத்தில் கண்களை திறந்தாள். சோர்வாக இருந்தது. வலி இப்போது மட்டுப்பட்டு இருந்தது.

கடிகாரத்தைப் பார்த்தவள் மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.

"சாப்பாடா.? இல்ல வெற்றி வந்துட்டானா.?" குழப்பத்தோடு சென்று கதவை திறந்தாள்.

"ஹாய் மேம்.." என்றபடி உள்ளே வந்தான் அவன்.

"யார் நீங்க.?" என்றவள் அறையை சுற்றிலும் பார்த்தாள். ஏதாவது இன்ஸ்டால் செய்ய வந்திருக்கிறானா என்று புரியாமல் அவனை பார்த்தாள்.

"ஹாய்.. ஐயம் எ கால் பாய்.. உங்களுக்கு பர்சனலா கம்பெனி தேவைப்படுதுன்னு சொன்னதால வந்தேன்.." என்றவன் சட்டையை கழட்டினான்.

அதிர்ச்சியோடு ஓரடி பின்னால் தள்ளி நின்றவள் "மரியாதையா வெளியே போயிடு.. இல்லன்னா சத்தம் போட்டு வீட்டுல இருப்பவங்களை கூப்பிட்டுடுவேன்.." என்றாள் விரலை நீட்டி.

"என்ன மேடம் இவ்வளவு தயங்குறிங்க.? உங்களுக்கு தேவைன்னு சொன்னதாலதானே வந்தேன்.."

"எனக்கு தேவைன்னு உனக்கு யார் சொன்னது.?" எரிந்து விழுந்தாள்.

"மிஸ்டர் வெற்றி.. அவர்தான் இந்த அட்ரஸ் சொன்னாரு.. முன்னாடியே பே பண்ணிட்டாரு.." என்றான்.

அதிர்ச்சியில் அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. அவனோ அவளின் அதிர்ச்சியை கவனிக்காமல் அவளை மெள்ள நெருங்கினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN