காதல் கணவன் 92

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அம்ருதா கணவனை முறைத்தாள்.

"கவின் ஏன் இப்படி செய்ய போறான்.? உன் பாரதி கூட இப்படி பண்ணி இருக்கலாம்.." என்று சீறினாள்.

"ச்சீ.. இரண்டு பேரும் கொஞ்ச நேரம் சும்மா இருங்க.. லவ்வர்ஸ், புருசன் பொண்டாட்டின்னா சண்டை வந்தா அவங்கவங்களுக்குள்ள தீர்த்துப்பாங்க. ஆனா உங்களுக்கு நான் சமாதானம் செஞ்சி வைக்கிறதா இருந்தா கூட இப்படி சண்டை போட்டுக்கிறிங்க.. பேங்கே‌ உருகுற அளவுக்கு அவ்வளவு உருகி லவ் பண்ணிங்க.. அதுக்குதான் இப்ப இப்படி இருக்கிங்க போல.." காய்ந்தான் பாலாஜி.

இருவரும் முறைத்துக் கொண்டனர்.

"பாட்டி நான் ரூம்க்கு போறேன்.." அம்ருதா கடித்த பற்களின் இடையே சொன்னாள்.

பாட்டி முகம் வாடினாள். "மசக்கை மயக்கமாவே இருக்கா‌. இவளை ஹாஸ்பிட்டல் கூட்டி போயேன்டா.." என்று பேரனை திட்டினாள் பாட்டி.

வெற்றி அம்ருதாவைதான் முறைத்தான். "இல்ல பாட்டி. நானே பார்த்துக்கறேன். இவனை நம்பி போனா கூட்டிப் போய் விஷ ஊசி போட்டு கொன்னுடுவான்.." என்றாள் ஆத்திரத்தோடு.

"கெட்ட வார்த்தையில் திட்டும் முன்னாடி என் கண்ணு முன்னாடியிருந்து ஒழிஞ்சி போயிடு.." வெற்றி அதற்கு மேல் ஆத்திரப்பட்டான்.

"அமைதியா இருங்க அமைதியா இருங்கன்னு நிமிசத்துக்கு ஒரு முறை சொல்லணுமா.?" இடையில் புகுந்து திட்டினான் பாலாஜி.

அம்ருதா தள்ளாட்டமாக திரும்பி நடந்தாள். அவளின் நடை கண்டு பாலாஜிக்கே பாவமாக இருந்தது.

"அவளை மேலே கூட்டிப் போய் விடுடா.." என்றான் சகோதரனிடம்‌.

வெற்றி அதிர்ச்சியோடு அவனை வெறித்தான். "நான்.? நான் தொட்டாவே எகிறுவா அவ.. தேவையா எனக்கு.?"

பாலாஜி நெற்றியை பிடித்தபடி இடம் வலமாக தலையாட்டினான்.

"உன் பொண்டாட்டிதானே.? உன்கிட்ட அத்தனை அடி வாங்கறா.. நீ இரண்டு அறை வாங்கறதால என்ன குறைய போற.?"

பாட்டி பேரனை விசித்திரமாக பார்த்தாள்.

வெற்றி அம்ருதாவின் அருகில் சென்றான். அவளை தூக்கினான்.

"என்னை விடு வெற்றி.."

"நான் ஒன்னும் ஆசைப்பட்டு உன்னை தூக்கல. மரியாதையா வாயை மூடிட்டு இரு.. இல்லன்னா‌ வாயை உடைச்சிடுவேன்.." என்று மிரட்டி விட்டு படிகளில் ஏறினான்.

அவளை அறையில் விட்டுவிட்டு திரும்பி வந்தான்.

"நம்பர் ஸ்விட்ச் ஆப்.." பாலாஜி போனை காதிலிருந்து எடுத்துவிட்டுச் சொன்னான்.

"சார் நான் கிளம்பட்டா.?" இடையில் அகப்பட்டவன் கெஞ்சலாக கேட்டான்.

பாலாஜி பெருமூச்சு விட்டபடி‌ அவனின் போனை அவனிடமே தந்தான். "இந்த நம்பர்ல இருந்து உனக்கு ஏதாவது கால் வந்தா எனக்கு சொல்லு.." என்று தனது எண்ணை தந்தான்.

"ஓகே சார்.. தேங்க்ஸ் சார்.." என்றுவிட்டு எழுந்து ஓடாத குறையாக வெளியேறினான்.

"ஏன்டா இவனை விட்ட.? போலிஸ்ல பிடிச்சி தந்து கும்மியடிக்க வச்சிருக்கலாம்.." பாட்டி பேரனை கடிந்துக் கொண்டாள்.

"பாவம் பாட்டி அவன்.." மருமகனின் வார்த்தை கேட்டு மாமியாருக்கு இதமாக இருந்தது. தன்னை போல யோசிக்கிறானே என்று கர்வப்பட்டாள் அவள்.

"பாவமா.?" என்ற பாட்டியிடம் "ஆமா பாட்டி.. இவனுக்கு பல பெண்களோடு படுக்கணும்ன்னு ஆசை இருந்திருந்தா லவ்ன்னு சொல்லி வருசம் ஐம்பது பேரை மயக்கி ஏமாத்தி, அவங்க பணத்தையும் கற்பையும் களவாடி இருப்பான். பண கஷ்டமோ வேற என்ன கஷ்டமோ இந்த பீல்டுல இருக்கான். ஆணா இருந்தா என்ன பொண்ணா இருந்தா.. வலுக்கட்டாயமா வரும் மோகம் எவ்வளவு கஷ்டம்ன்னு நினைச்சி பாருங்க.. பெண்ணா இருந்தா கூட சகிச்சிட்டு போகலாம். ஆனா ஆணா இருந்தா அவன் தன் மொத்த உணர்வுகளையும் தட்டி எழுப்பணும். அவன் கஷ்டம் அவனுக்கு.. படிக்கலையா அவன்.? எருமை கெடா உடம்பை வச்சிக்கிட்டு உழைக்க தெரியாதா அவனுக்கு.. இந்த கேள்வியெல்லாம் கேட்டா அவனுக்கு ஒரு சரித்திரம் எழுதி ரைட்டர் அவனையும் ஹீரோவுக்கு சமமா மாத்திடுவாங்க. நமக்கு அது தேவையா.? ஏமாத்தாம உழைக்கிறான். அத்தோடு நிறுத்திட்டு நம்ம பிரச்சனையை பார்க்கலாம்.." என்றான்.

வெற்றி தனது கைபேசியில் அந்த எண்ணை பதிந்து அழைத்துப் பார்த்தான். கைபேசி அணைப்பில் இருப்பதாக செய்தி சொன்னது.

"போலிஸ்ல கம்ப்ளைண்ட் தர போறேன்.." என்றவன் வெளியே ஓடினான். பாலாஜி பின்தொடர்ந்து ஓடினான்.

ஏதோ நினைவு வந்தவனாக நின்றவன் "கீர்த்தனா எங்கே.?" என்றுக் கேட்டான்.

"டெய்லரிங் கத்துக்கறேன்னு போயிருக்கா.." வளர்மதி சொன்னாள்.

"டெய்லரிங்கா.? அவளா.?" அவனுக்கு இப்போதே வயிற்றில் புளியை கரைத்தது போலிருந்தது.

'செத்தடா பாலா நீ.. இனி அவ டிரெஸ் அலும்பல் தாங்கவே முடியாது. மச்சினன் பொண்டாட்டி பேங்க்ல வொர்க் பண்றாளே.. நாமும் நமக்கேத்த வேலையை தேடுவோம்ன்னு இல்லாம புருசனை மயக்கறது எப்படின்னே யோசிச்சிட்டு இருப்பா போலிருக்கு‌..' மனதுக்குள் புலம்பியபடி வெற்றியின் பைக்கில் ஏறி அமர்ந்தான்.

இந்த எண்ணிலிருந்து தவறான அழைப்பு வருகிறது, கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள் என்று புகார் எழுதி காவல் நிலையத்தில் தந்தான் வெற்றி.

"ஆதாரம் கொடுங்க சார்.." என்று கையை‌ நீட்டினார் ஹெட் கான்ஸ்டபிள்.

"சாரி சார்.. இவனோட வொய்ப்புக்குதான் அப்படி ராங் கால், ராங் மெஸேஜ் வந்தது. அவ கோபத்துல போனை தூக்கி நெருப்புல போட்டுட்டா.. யார்ன்னு நீங்க கண்டுபிடிச்சி‌ தந்தா நல்லாருக்கும்.." என்று பாலாஜி சொன்னான்.

புகாரை வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

வங்கிக்கு சென்றாலும் கூட இருவருக்கும் வேலை அவ்வளவாக ஓடவில்லை. கவினை குறுகுறுவென்றே பார்த்தான் வெற்றி.

குழப்பத்தோடே உறங்கிப் போன அம்ருதா வெகுநேரம் கழித்துதான் எழுந்தாள். அறை இருளாக இருந்தது. கட்டிலை விட்டு இறங்க நினைத்தாள். விளக்கு ஒளிர்ந்தது.

வெற்றி சோஃபாவில் அமர்ந்தான்.

"ஓகேவா நீ.?"

"ம்.." முகத்தைத் திருப்பிக் கொண்டுச் சொன்னாள்.

"நான் அவனை வர சொல்லல.." என்றான் மென்மையாக.

"நானும் இல்ல.." படக்கென்றுச் சொன்னாள்.

"பயந்துட்டியா என்ன.?" பரிவோடு கேட்டவனை ஏளனமாக பார்த்தவள் "சந்தேகப்பட்டியா என்ன.?" என்றுக் கேட்டாள்.

"அடடா.. நான் சந்தேகப்பட்டேன்னு தெரிஞ்சா சீதா தேவி தீக்குளிக்க போறாங்க.."

அம்ருதாவின் மூக்கு சிவந்தது.

"அதுக்கு முன்னாடி நீ முதல்ல ஏகப்பத்தினி விரதனா இருக்கணும்.."

வெற்றிக்கு எரிச்சலாக வந்தது.

"நான் கேட்டது என்ன.?"

"ஆமா பயந்தேன். அதுக்கு என்னங்கற இப்ப.? பயந்தேன்னு நான் சொன்னதும் நீ என்ன பண்ண போற.? கவினோடு இருக்கும்போது இல்லாத பயம் இவனோடு இருக்கும்போது வந்ததான்னு கேட்க போற.. அதானே.?"

வெற்றியை‌ நெற்றியை பிடித்தபடி சோபாவில் சாய்ந்தான்.

"யோக்கியம் மாதிரி பேசாத அம்மு.."

"அதேதான்.. நீயும் யோக்கியம் மாதிரி என்கிட்ட கேள்வி கேட்காத.." என்றவள் எழுந்து சென்று குளியலறைக்குள் நுழைந்தாள்.

பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்தாள்.

"சாப்பாடு வச்சிருக்கேன் பாரு.." மேஜையை கண் காட்டினான். அமைதியாக எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.

"மசக்கையால ரொம்ப மயக்கமா அம்மு.? மயக்கம் தீர டாக்டர் மருந்து தரலையா.?"

"இல்ல.. அதுவே நல்லாகிடும்ன்னு சொல்லி இருக்காங்க.." தலை நிமிராமல் சொன்னாள்.

மறுநாள் வந்தபோது வெற்றி மாதுளை, ஆப்பிள், கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு என்று கடையில் பார்த்த மொத்த பழங்களையும் வாங்கி வந்தான்.

"மிச்சம் வைக்காம சாப்பிடு.." என்றான் அவளிடம்.

"தேங்க்ஸ்.." என்றாள் சிறு குரலில். அடுத்த நாள் அவளின் அம்மா வந்து பார்த்தாள். மசக்கை மயக்கம் என்று மகளின் நிலை கண்டு வருந்தினாள்.

"அவன் உன்னை அடிக்கறானா.? உண்மையை சொல்லு.." என்று விசாரித்தாள்.

"இல்ல.." என்றவள் அம்மாவிடமும் கூட அதிகம் பேசவில்லை.

***

சக்தியின் திசைக்கு சும்மா கூட திரும்பவில்லை சுப்ரியா. கனிமொழி அவ்வப்போது சுப்ரியாவை நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தாள். அவளின் பார்வை கண்டு சக்திக்குதான் கோபம் வந்தது.

"என்ன மாமா.? ரொம்ப போரடிக்குதா.? நான் வேணா அவளை துணைக்கு வர சொல்லட்டா.?" அவன் காரில் ஏற இருந்த சமயத்தில் அருகில் வந்துக் கேட்டாள் கனிமொழி.

"இம்சை.. அமைதியா போ.."

"நாளைக்கு ஞாயிறு.."

"சோ.?" என்றான் தயங்கியபடி. ஒரு வாரத்திற்கு அவளை பிரிந்து இருப்பது அன்னிய உணர்வை தந்தது அவனுக்கு. அவளை மிஸ் செய்கிறோம் என்று புரிந்தது. அது இயல்பான நேசம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துக் கொண்டிருந்தான்.

"எங்கேயாவது வெளியே போகலாமா.?"

யோசித்தான்.‌ "உன் இஷ்டம்.."

"நாளைக்கு பார்க்கலாம்.." தனது ஸ்கூட்டி இருக்கும் இடம் தேடி ஓடினாள்.

சக்தி அவளின் முதுகை வெறித்தபடி நின்றான். காலில் சக்கரம் கட்டியது போல ஓடினாள்.

அடுத்த நாள் சொன்னது போலவே வந்து விட்டிருந்தாள். அவனும் கூட அதற்கு முன்பே தயாராகி இருந்தான். கண்டும் காணாதது போல இருந்தாள் கனிமொழி.

"எங்கே போகலாம்.?" எனக் கேட்டுக் கொண்டே ஸ்கூட்டியில் ஏறினாள்.

"கார்ல போலாம்.." என்றவனிடம் "நீங்க ஓட்ட கத்து தரிங்களா.?" என்றுக் கேட்டாள்.

சக்தி புரியாமல் நின்றான்.

"இன்னைக்கு நான் டிரைவ் பண்ணணும்ன்னு இருக்கேன். காரா ஸ்கூட்டியா உங்களுக்கு எது இஷ்டம்.?"

சக்தி ஸ்கூட்டியில் ஏறினான்.

"கெட்டியா பிடிச்சிக்கோங்க.." என்றவள் சாலையில் இறக்கினாள்.

நன்றாகத்தான் ஓட்டினாள். அவனுக்கே கொஞ்சம் ஆச்சரியம்தான். வேகதடை வரும் இடத்தில் ஏதாவது செய்வாளோ என்று கலங்கி இருந்தான். ஆனால் மெதுவாகவே தாண்டி சென்றாள்.

"நீ கொஞ்சம் வளர்ந்துட்ட பாப்பா.." என்றான் அவளின் தோளில் தனது தாடையை பதித்து.

"அது எனக்கே தெரியும் மாமா.. நீங்கதான் இன்னும் வளராம இருக்கிங்க.." என்றாள் சின்ன சிரிப்போடு.

அருகே நடந்துக் கொண்டிருந்த மலர் கண்காட்சிக்கு சென்றனர் இருவரும். வரவேற்பில் நின்றிருந்த பெண் கனிமொழிக்கு ரோஜா ஒன்றை நீட்டினாள்.

கூட்டம் ஓரளவு இருந்தது. கனிமொழியின் கையை பற்றினான் சக்தி. இருவரும் அங்கிருந்த பூக்களின் வண்ணங்களையும், வாசனைகளையும், மென்மையையும் சோதித்துக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு பூ அலங்காரத்தின் முன்பும் நின்று புகைப்படம் எடுத்தனர் இருவரும். பூக்களோடு சேர்ந்து நிற்கையில் கொஞ்சம் அழகாகத்தான் தெரிந்தாள் கனிமொழி. சக்தி முகத்தை மறைத்த புன்னகையோடு அவளை புகைப்படங்கள் எடுத்தான்.

மனம் ஏனோ ஜில்லென்று இருந்தது. பூக்கள் தந்ததோ.? இல்லை அவளின் புன்னகை தந்ததோ.? அவனுக்கு தன் மனதை பிடித்திருந்தது.

"மாமா நான் ஒன்னு சொல்லட்டா.?"

"ம்.."

"இதே மாதிரி நம்ம வீடு இருந்தா எப்படி இருக்கும்.? வீட்டோட சுவரெல்லாம் பூக்களா இருக்கணும். பார்க்கற இடமெல்லாம் பூவாவே இருக்கணும். ஆனா நான் மிதிச்சாலும் கூட பூக்கள் வாட கூடாது. அப்படி வேணும்.."

சக்திக்கு சிரிப்புதான் வந்தது. "பேன்டஸி ஸ்டோரிக்கு ஹீரோயினியா போயிடு. கண்டிப்பா அந்த மாதிரி வீடு கிடைக்கும்.." கேலியாக சொல்லியபடி அவளை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை சுற்றினான். முழுதாக சுற்றி முடித்தபோது மணி‌ நடுப்பகலை தாண்டி விட்டது. இருவரும் சேர்ந்து உணவகத்திலேயே உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

பிற்பகல் வேளையில் ஆளுக்கொரு பக்கம் புரண்டு உறங்கினர்.

சக்திதான் முதலில் எழுந்தான். பூக்குவியல் போல உறங்கிக் கொண்டிருந்தாள். ஏனோ இப்போதெல்லாம் அவளின் முகத்தை நேரம் காலம் மறந்து பார்க்க சொல்லி வலியுறுத்தியது உள்ளம்.

"எங்க பாப்பா.." அவளின் முகத்தை திருஷ்டி கழித்தான். அரை தூக்கத்தில் இருந்த கனிமொழிக்கு மனதுக்குள் என்னவோ இடித்தது. அவனுக்கு முதுகு காட்டி படுத்தவளுக்கு புது முடிச்சி ஒன்று தட்டுப்பட்டது. யோசனையோடு மீண்டும் உறங்க ஆரம்பித்தாள்.

***

காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. பாலாஜியை அழைத்துக் கொண்டு போனான் வெற்றி.

"இந்த நம்பர்ல இருந்து ஒரே ஒரு கால்தான் போயிருக்கு. உங்க மனைவிக்கு எந்த மெஸேஜும் காலும் வரல.. நீங்க நம்பர் மாத்தி எழுதி தந்திங்களா.? இல்ல வேற என்னவோ தெரியல. நம்மூரோட மிக முக்கியமான பேங்க்ல வொர்க் பண்றிங்க. அதனால இந்த முறை விடுறோம்.. இதுக்கு மேல எங்க டைமை வேஸ்ட் பண்ணாதிங்க.." என்றார் காவல் ஆய்வாளர்.

"ஒரு நிமிசம் சார்.." அழைத்த பாலாஜி "நாங்க உண்மையை சொல்லிடுறோம் சார்.." என்று வீட்டில் நடந்த பிரச்சனையை சொன்னான்.

"ஓ.. அப்படின்னா இந்த நம்பருக்கு உரியவன்தான் உங்க லைப்ல கேம் விளையாடுறான். ரைட்டா.?" என்றவர் தன் முன் இருந்த கணினியின் பொத்தான்களை தட்டினார்.

"அவன் பெயர் அபிராஜ்.." என்று கணினி திரையை திருப்பிக் காட்டினார்.

"இவனா.?" வெற்றியின் புருவங்கள் முடிச்சிட்டது.

"யாரு இவன்.?"

"தெரிஞ்ச பையன்தான் சார்.. நான் மிரட்டி வைக்கிறேன்.." என்று எழுந்தான் வெற்றி.

"சார் கம்ப்ளைண்ட் கொடுங்க.. நாங்க ஆக்சன் எடுக்கறோம்.."

"இல்ல சார்.. அவ்வளவு பெரிய பார்ட்டி இல்ல இவன்.." என்ற வெற்றி எழுந்து நடந்தான். ஆய்வாளரின் பார்வையிலிருந்து வெளி வந்தான்.

"யார் இவன்.?" பாலாஜி புரியாமல் கேட்டான்.

"இவன்தான் அந்த பிராங் பார்ட்டி நாய்.. இவனை அடிச்சேன்னுதான் அவ பிரேக்அப் பண்ணிட்டு போனா.." கடுப்போடு பற்களை கடித்தான்.

"இதை இங்கேயே சொல்லி இருக்கலாமே.! இவங்க அவனை உதைப்பாங்களே.."

"நான் உதைக்கணும்.." என்ற வெற்றி கையை இறுக்கினான்.

"அப்படி என்னதான்டா ஆச்சி.?" பாலாஜிக்கு தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. யாராவது சில அடிகளுக்காக இவ்வளவு தூரம் பழி வாங்குவார்களா என்று புரியவில்லை அவனுக்கு.

"யூடியூப்ல லைவ் ப்ரோகிராம்டா. அந்த சேனல்காரன் இன்னமும் அதை அழிக்காமதான் வச்சிருக்கான்.." என்றவன் தன் கைபேசியை எடுத்து வீடியோவை வைத்து தந்தான்.

"எங்க இரண்டு பேர் முகத்தையும் ப்ளர்ல போட்டுட்டு லைவ்வை அப்படியே அப்லோட் பண்ணிட்டாங்க.. வியூவ்ஸ் செமையாதான் போச்சி. காசு நிறைய சம்பாதிச்சி இருப்பான்.. வேற எவனும் இந்த மாதிரி பிராங் பண்ண கூடாதேன்னு நானும் இந்த வீடியோவை பெருசா எடுத்துக்கல.." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, பாலாஜி அவன் வைத்து தந்த வீடியோவை பார்த்தான்.

பார்க்கின் நுழைவாயிலில் நின்றிருந்தான் அபிராஜ். அவ்வழியே வந்த அம்ருதாவிடம் ரோஜாவை நீட்டினான். அம்ருதாவின் முகம் இதில் தெரியவில்லைதான். ஆனால் உடையின் மூலம் அடையாளம் காண முடிந்தது. அவள் வாய் திறக்க இருந்த நேரத்தில் அவர்களை நெருங்கிய வெற்றி பூ தந்தவனின் முகத்தில் ஓங்கி குத்தினான்.

"ஐயோ வெற்றி.." பிட்ச் மாற்றப்பட்ட குரலில் வெற்றியை அவனிடமிருந்து விலக்க முயன்றாள் அம்ருதா.

"அவன் ஏன் பூ தரான் உனக்கு.?" அவனது குரலிலும் பிட்ச் குறைக்கப்பட்டு இருந்தது.

"எனக்கு எப்படி தெரியும்.?"

"பூ கொடுத்தா தப்பா சார்.?" அவனின் கேள்வியில் கோபம் அதிகமாகி மீண்டும் அவனை அடிக்க பாய்ந்தான் வெற்றி.

"வெற்றி‌ வேணாம்.." அம்ருதா தடுக்க முயன்றாள்.

அவளின் கன்னத்தில் ஒரு அறையை விட்டான். அவனின் வழக்கமான அறையை விட இரண்டு மடங்கு பலம் கூடியிருந்தது அந்த அறையில்.

பிறகு இவனை போட்டு அடி பின்ன ஆரம்பித்தான் வெற்றி.

"பொண்ணுங்களை பார்த்தா பூ கொடுப்பியா நீ.? கல்யாணமான பொண்ணு, காதலிக்கற பொண்ணு எவளா இருந்தாலும் தருவியா.?"

"சார் இது பிராங்க்.. அங்கே பாருங்க கேமரா‌‌.." அடி வாங்க முடியாமல் சொன்னான்.

கைபேசியை அணைத்துவிட்டு சகோதரனை பார்த்தான் பாலாஜி.

"நீ அவனை அடிச்சதுக்கு அவ‌ உன்னை பிரேக்அப் பண்ணாளா.?"

"ம்.." என்றான் பைக்கை நகர்த்தியபடி.

"போடா‌ லூசு.. நீ அவளை அடிச்சதால பிரேக்அப் பண்ணி இருக்கா.."

புரியாமல் பார்த்தான் வெற்றி. "ஏன் அன்னைக்கேதான் புதுசா அடி வாங்கினாளா.?"

நக்கலாக கேட்டவனிடம் கைபேசியை தந்தான். வீடியோ சற்று முன் வைத்து ஓட விட்டான்.

"நான்தான் இவனை பின்னுறேனே.. இதை நிறைய முறை பார்த்திருக்கேன்.."

"அம்ருதாவை பாருடா.." பாலாஜி திரையை தொட்டுக் காட்டினான்.

வெற்றி அறைந்தான். அறையை வாங்கியவள் நிலை தடுமாறி அருகே இருந்த நீர் அலங்கார சிலையின் மீது சென்று மோதி விழுந்தாள்.

அவள் அவுட் ஆஃப் ஃபோகஸ் என்றே சொல்ல வேண்டும். முக்கியமாக தெரிந்த இடத்தில் இவர்கள் மட்டும் இருந்தார்கள்.

வெற்றியின் முகத்தில் நிழல் படிந்தது. பல முறை பார்த்துள்ளான் இந்த வீடியோவை. ஆனால் அவளை கவனித்ததே இல்லை.

"அந்த குழந்தையை அவ கலைச்சிருக்க வாய்ப்பு இல்ல. நீ பண்ணதாலதான் கலைஞ்சிருக்கணும். வாட்டர் பவுண்டனோட கீழ் அடுக்குல நல்லாவே மோதியிருக்கு அவ வயிறு.." என்றான் பாலாஜி கடுமையான குரலில்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN