காதல் கணவன் 94

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக்தி தன் மனைவியின் முகம் பார்த்தான். முழு கவனத்தையும் புத்தகத்தில் வைத்திருந்தவள் வெகு நேரம் கழித்தே நெருடல் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள். 'இவர் ஏன் இப்படி பார்க்கறாரு.?' குழம்பிவள் என்னவென்பது போல் புருவம் உயர்த்தினாள்.

ஒன்றுமில்லை என்று தலையசைத்தவன் மேஜை மேலிருந்த புத்தகத்தை கவனிக்க ஆரம்பித்தான்.

நேரம் முடிந்ததும் எழுந்து போனான். அவனையே வெறித்துக் கொண்டிருந்த சுப்ரியா பின்னால் திரும்பினாள். கடைசி இருக்கையில் இருந்தவளை வெறித்தாள்.

'என்னை தப்பானவளா ட்ரீட் பண்ண.. அதுக்கான தண்டனையை நீ அனுபவிப்ப.!' மனதுக்குள் சபதமெடுத்தாள்.

***
கனிமொழி வீட்டிற்கு வந்தபோது வளர்மதியும் அர்ச்சனாவும் சேர்ந்து அமர்ந்து எதையோ தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

"என்ன பேசுறாங்க?" பாட்டியிடம் ரகசியமாக விசாரித்தாள் கனிமொழி.

இத்தனை நாளாக இவளிடம் சொல்லாமல் வைத்திருந்த பிரச்சனையை இன்று சொன்னாள் பாட்டி. கனிமொழி வரும்போதுதான் தேன்மொழியும் வந்திருந்தாள். பாட்டி சொன்னது கேட்டு முள்ளை மிதித்தது போல முகத்தை மாற்றினாள்.

"ச்சை.. இது என்ன குடும்பம் நடக்கற வீடா.? இல்ல லாட்ச்சா.?" என்றாள்.

"தேனு வாயை விடாத.. வந்தவன் குழப்பம் பண்ணனும்ன்னு வந்திருக்கான்.. இன்னைக்கு போலிஸ் விசயத்தை கண்டுபிடிச்சிட்டாங்க. அனுப்பி வச்சது வேற யாரோதான்.." அர்ச்சனா புத்தி சொன்னாள்.

"இதை நான் நம்பணுமா அத்தை.? அவளுக்கு உடம்பு முழுக்க அரிப்பு. அண்ணன் அவளுக்கு பத்தலன்னு புதுசா ஒருத்தனை வீட்டுக்கே வர வச்சிருக்கா.. வீட்டுல மாட்டிக்கற சூழ்நிலை வந்திருக்கும். அதனால சீனை மாத்திட்டா.." என்றவளின் கன்னத்தில் பளாரென்று விழுந்தது அறை ஒன்று.

கன்னத்தை பிடித்தபடி திரும்பினாள். வளர்மதி ஆக்ரோஷமாக நின்றிருந்தாள். வளர்மதியை தாண்டி தெரிந்த வாசலில் பாலாஜியும் வெற்றியும் நின்றிருந்தனர்.

"ஒரு பொண்ணு ஏதோ ஒரு சூழ்நிலையில் தப்பானவளா கூட இருக்கலாம். அதுக்காக நீ அவளுக்கு தப்பான பட்டம் கட்ட கூடாது. அதுக்கான உரிமை உனக்கு கிடையாது. ஆரவ் சொன்னான், அவனை கடுப்பேத்த ஒருத்தன் கூட பைக்ல போய் சீன் போட்டியாமே நீ.! உன் யோக்கியத்துக்கு நீ உன்னை மட்டும்தான் விமர்சனம் செய்யணும். அடுத்தவங்களை இல்ல.." என்று விரலை நீட்டி எச்சரித்துவிட்டு தனது வேலையை கவனிக்க சென்றாள்.

கனிமொழிக்கு அக்காவை கண்டு வருத்தமாக இருந்தது. வெற்றி உள்ளே வந்தான்.

"என்னால நீங்க சண்டை போட்டுக்க வேணாம் பாப்பா.." என்றுவிட்டு படிகளில் ஏறினான்.

பின்னால் வந்த பாலாஜி "எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. நீ அபார்ஷனுக்கு காரணமாக போய்தான் அவ உன்னை பழி வாங்க மொத்த குடும்பத்தையும் இன்சல் பண்ணா. அதுக்காக இப்ப வாங்கி கட்டுறா.. எது எப்படி இருந்தாலும் இன்னைக்கு அவ வாங்கற திட்டுக்கும், அனுபவிக்கிற கஷ்டத்துக்கும் நீதான் காரணம்.." என்று கடிந்து சொல்லிவிட்டு தாண்டிப் போனான்.

வெற்றி அறைக்கு வந்தபோது அங்கே பாலாஜி அம்ருதாவின் அருகில் அமர்ந்திருந்தான். கட்டிலின் கீழே மாதுளை தோல்களும், ஆப்பிள் கொட்டைகளும் குப்பை போல கிடந்தன.

"அவன் இனி இங்கே வர மாட்டான். பயப்படாத அம்ருதா.."

"ம்ம்.." தலையை அசைத்தாள்.

முடங்கி அமர்ந்திருந்தவளின் முகத்தில் இருந்த சோர்வை பார்த்தபடியே வந்து சோஃபாவில் அமர்ந்தான் வெற்றி.

"அந்த குழந்தையை ஏன் கலைச்ச அம்மு.?" என்றான் அவளின் முகம் பார்த்தபடி.

குழப்பத்தோடு நிமிர்ந்தவள் அவனின் கண்களில் இருந்த சந்தேகம் கண்டாள் "என்னவா இருந்தா உனக்கு என்னடா சைக்கோ.." மீதியை அவள் சொல்லும் முன் அவளின் வாயை பொத்தினான் பாலாஜி.

"ஆத்தா மகமாயி உன் வாயை தயவுசெஞ்சி திறக்காத.." என்றான் கையை எடுத்துவிட்டு.

"அப்படின்னா அவனை அமைதியா இருக்க சொல்லு.." கடுப்போடுச் சொன்னாள்.

அம்ருதாவின் முகத்தில் இருந்த கோபம் கண்ட வெற்றி "சாரி.." என்றான்.

அம்ருதா கேள்வியாக பார்த்தாள்.

"என் கோபத்தை பிடிக்காமதான் நீ அந்த குழந்தையை கலைச்சன்னா சாரி. என்‌ கோபம் தப்புதான். உணர்ந்துட்டேன்.. சாரி.."

விழிகளை சுழற்றினாள். பதில் வரவில்லை.

பாலாஜி மேஜையின் மேலிருந்த மாதுளை ஒன்றை கையில் எடுத்தான். தோல் உரித்தான். அருகில் இருந்த தட்டில் மாதுளை முத்துக்களை கொட்டினான்.

"உனக்கு மாதுளை பிடிக்காது.." என்றபடி கை நிறைய அள்ளி வாயை நோக்கி சென்றான். அவனின் கையை நிறுத்தியவள் "எனக்கு இது வேணும் பாலா.." என்றாள்.

"கொஞ்சம் கூட நான் சாப்பிட கூடாதா.?" பாவமாக முகம் வைத்துக் கேட்டான்.

"நோ.." தலையை அசைத்தாள்.

"தின்னுக்கோ.." என்று தட்டில் கொட்டிவிட்டு நாக்கை நீட்டி பழித்தான்.

சிரித்தாள்.

வெற்றி எழுந்து வெளியே போனான்.

"உனக்கு ஓவர் வாய் அம்ருதா. இந்த வாயை ஆரம்பத்துல இருந்தே அவன்கிட்ட காட்டியிருந்தா அவனும் உன்னை சமாளிக்க கத்துட்டு இருந்திருப்பான். நீயும் அவனை சமாளிக்க கத்துட்டு இருந்திருந்தா உனக்கும் பிரச்சனை இல்லாம இருந்திருக்கும். திடீர்ன்னு பிரச்சனை வருவதாலதான் கஷ்டமே!"

அம்ருதா யோசனையோடு ஆமென்று தலையசைத்தாள். "ஆனா சில விசயங்கள் திடீர்ன்னுதானே நடக்குது.? விதி அப்படியே முழுசா புரட்டி போடும்போதுதான் வாழ்க்கையோட நிஜமான பிரச்சனை என்னன்னே பலருக்கும் தெரியுது.." என்றாள் வருத்தமாக.

அவளின் வலது கை விரல்களுக்கு சொடக்கு எடுத்து விட்டவன் "பேசினா பல பிரச்சனைகள் தீர்ந்துடும்.." என்றான்.

நகைத்தாள். "இந்த சைக்கோ என்கிட்ட பேசாம இருந்தாலே என் பிரச்சனையை தீர்ந்துடும்.. இவன் பேசினாவே அவ்வளவு கடுப்பு. ஏதோ பெரிய பாவம் பண்ணியிருக்கேன் நான். அதனாலதான் இவன் பக்கத்துல வாழணும்ன்னு ஆண்டவன் தண்டனை கொடுத்துட்டான்.." என்றாள் எரிச்சலோடு.

அவளின் வெறுப்பு கண்டு அவனுக்கே பயமாக இருந்தது. இத்தனை நாளாக தெரியாத காரணம் இன்று தெரிந்ததே பயத்தை அதிகப்படுத்தி இருந்தது.

"சரி நீ டென்ஷன் ஆகாத. பழத்தை சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு.." என்றவன் எழுந்து போனான்.

அறையின் வாசலில் வெளியே ஓரமாக நின்றிருந்தான் வெற்றி.

"இப்ப இவ வெறுத்து பேசியதுக்கும் பழி வாங்கணுமா.? அதுக்கும் போட்டு அடிக்க போறியா.?"

வெற்றி அவனை முறைத்தான்.

"நான் அப்படி இல்ல.."

"ஆமா.. நான் இன்னைக்குதானே உன்னை புதுசா பார்க்கறேன்.." என்றவன் தனது அறையை நோக்கி நடக்க, அவனின் கையை பற்றி நிறுத்தினான் வெற்றி.

"என்ன.?"

"அவகிட்ட பேசு.. என் சாரியை ஏத்துக்கிட்டு என்னை மன்னிக்க சொல்லு.."

பாலாஜி நக்கலாக பார்த்தான்.

"இதை ஏன் நீயே பண்ண கூடாது.? இல்லன்னா எப்பவும் போல அவளை அடிச்சி உதைச்சி உன் வழிக்கு கொண்டு வர கூடாது.?" எனக் கேட்டான்.

"உண்மையை சொல்லாம இருந்தது அவ தப்பு. தப்பு நான் செஞ்சிருந்தா என்கிட்டதானே சொல்லி இருக்கணும்.? இவ ஏன் மேரேஜ், வேற லவ்ன்னு போறா.?"

வெற்றியின் முன்னால் கையை கூப்பினான் பாலாஜி. "உன் பிரச்சனை நீயே பாரு. உனக்கான கேள்விகளை அவகிட்ட போய் கேளு. என்னை‌ விடு.." என்றவன் திறந்திருந்த தனது அறையின் கதவை பார்த்தபடி நடந்தான்.

அவன் உள்ளே வந்தபோது தரையில் புடவை ஒன்றை விரித்துப் போட்டு ஓரத்தில் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

"பாலா.. வா வா.." என்றாள் கையில் நீண்டிருந்த அளவுக் கோல் ஒன்றை கையில் வைத்தபடி.

"ஸ்கேல்ல அடிக்க போறாளோ.? நாமென்ன அஞ்சாவது ஸ்டூடன்டா.?" குழம்பியபடி அருகே போனான்.

"இந்த சாக்பீஸால அந்த அஞ்சாம் நம்பருக்கு நேரா கோடு போடு.‌" என்று சாக்பீஸை தூக்கிப் போட்டாள்.

மண்டியிட்டவன் சாக்பீஸால் கோடு போட்டான். "தப்பு தப்பு.. கரெக்டா அஞ்சிக்கு நேரா போடு. கோடு கோணையா போக கூடாது.."

அவள் சொன்னது போலவே செய்தான். கத்தரிக்கோலால் வெட்டினாள். இவன் கோடு போட்டது ஒரு இடம். அவள் கத்தரியை வைத்தது ஒரு இடம். வெட்டு போனது மற்றொரு இடம்.

பிடுங்கிக் கொண்டு வந்த சிரிப்பை உதட்டை கடித்து அடக்கினான் பாலாஜி.

"நேரா வந்திருக்குதானே.?" எனக் கேட்டுக் கொண்டே துணியை மடித்தாள்.

"தலையணை உறை தைக்க போறேன் பாலா.." என்றாள் அந்த துணிகளை எடுத்து பையில் வைத்து நிரப்பியபடி.

"ஓ.." என்றவன் அறையின் ஓரத்தில் கிடந்த சோபாவை பார்த்தான். கர்ச்சீப்களாக நிரம்பி கிடந்தது. அவையெல்லாம் கடந்த மூன்று நாட்களாக அவள் தைத்தது. ஸ்கேல் இல்லாமல் நேராக கோடு கிழிக்கவே தெரியாதவள் இவள். எப்படிதான் மற்ற உடைகளை தைத்து பழகுவாளோ என்று கவலையாக இருந்தது.

"பாலா உனக்கு நான் ஒரு சர்ப்ரைஸ் சொல்லட்டா.?"

'சர்ப்ரைஸா.?' யோசித்தவனிடம் "ஆமா.. இன்னும் ஆறு மாசம். அப்புறமா நீ கடையில் சட்டையே வாங்க வேணாம். நானே உனக்கு டிசைன் டிசைனா தச்சி தந்துடுறேன்.." என்றாள் புன்னகையோடு.

'ஐயோ.. கடைசியில மோர் மிளகா நான்தானா.?' கவலைப்பட்டவன் "நீ பிளவுஸ், சுடிதார் தச்சி கனிக்கும் தேனுக்கும் கொடு.." என்றான்.

"அது மூனாவது மாசத்துல இருந்து ஆறாவது மாசம் வரை பாலா. ஆறாவது மாசத்துல இருந்து சட்டை.. நான் தைக்கிற முதல் சட்டை உனக்கு மட்டும்தான். என் அப்பாவுக்கு கூட தர மாட்டேன்.." என்றாள் அவனின் கழுத்தை கட்டிக் கொண்டு.

அவளின் அன்பின் பிரியத்தை ஏற்றுக் கொண்டவனாக அவளின் முதுகை அணைத்துக் கொண்டான். 'எப்படியும் இவ பரிசோதிக்க என்னை எலியா மாத்த போறா.. கல்யாணம் செஞ்சா என்னவெல்லாம் சகிக்க வேண்டியதா இருக்கு..' கவலையோடு எண்ணினான்.

***

அம்ருதா வெற்றியை பார்த்து முறைத்தாள். "எதுக்கு என்னையே பார்த்துட்டு இருக்க.? என் மூஞ்சில என்ன படமா ஓடுது.?" எரிந்து விழுந்தாள்.

அடித்து வாயை உடைக்க சொன்னது மனது. அமைதியானவன் "இந்த வீட்டுல நடந்த பிரச்சனைக்கு காரணம் அந்த பிராங் பார்டிதான். அவன்தான் வீட்டுக்கு அந்த மாதிரி தொழில் செய்றவனை அனுப்பி வச்சிருக்கான்‌‌.." என்றான்.

பிராங் பார்டியா என்று எண்ணியவள் "கொன்னுட்டியா அவனை.? போலிஸ் ஏன் உன்னை அரெஸ்ட் பண்ணல.?" என சந்தேகமாக கேட்டாள்.

"கொல்லல அவனை.."

"ஆச்சரியம்.." வெறுப்பாக சொன்னாள்.

பெருமூச்சோடு சோஃபாவில் சாய்ந்தான். தன் கோபத்தையும் அவள் வெறுப்பையும் ஒப்பிட்டு பார்த்தான். அவளின் வெறுப்புதான் தவறு என்று சொன்னது மனசாட்சி.

***

கனிமொழி ஸ்கூட்டியை மிதமான வேகத்தில் ஓட்டினாள். கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தாள்.

டிராபிக் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பொறுமையாக வளைத்து ஓட்டினாள். நடு வழியில் குளிர்பான கடையிலிருந்து வெளியே வந்த வசந்த்குமார் இவளை கண்டுவிட்டு ஓடி வந்தான்.

"கனி ஸ்டாப்.."

"இந்த கழிசடையா.?" கடுப்போடு நினைத்தவள் ஸ்கூட்டியை விரட்டதான் நினைத்தாள். ஆனால் அவளுக்கு முன்னால் நின்றிருந்த கல்லூரி வாகனம் ஒன்று நகராமல் நின்றிருந்தது.

வசந்த்குமார் ஓடி வந்து ஸ்கூட்டியில் ஏறினான்.

"அன்னைக்கு பட்டும் புத்தி வரலையா இவனுக்கு?" குழம்பியவளின் தோளில் கரம் பதித்தவன் "என்னை எங்க வீட்டுல டிராப் பண்ணிடு.." என்றான்.

அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தாள். அவனின் வீடு ஏதோ ஒரு திசையில் இருந்தது. இவனின் வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாக இருந்தால் இவள் வீடு திரும்ப இரண்டு மணி நேரம் தாமதமாகி விடும்.

"நான் வீட்டுக்கு போகணும் வசந்த். மரியாதையா கீழே இறங்கு.." என்றவளின் இடுப்பை அணைத்தான். கூச்சத்திலும் பயத்திலும் நடுங்கியவள் அவனிடமிருந்து விடுபட முயலும் முன் அவளின் முன்னால் வந்து நின்றாள் சுப்ரியா. தனது போனில் புகைப்படங்களை எடுத்தாள்.

அதிர்ந்து அமர்ந்திருந்த கனிமொழியை பார்த்து மனதுக்குள் சிரித்தபடியே கீழிறங்கினான் வசந்த்குமார்.

"நீ எதுக்கு போட்டோ எடுத்த.?" கனிமொழி கேட்டதற்கு பதிலை சொல்லாமல் கண் சைகை காட்டினாள் அவள். எதற்கு இந்த சைகை என்று புரியாமல் இருந்தவளின் கழுத்தை சுற்றியது அருகில் இருந்தவனின் கரம். கனிமொழியின் கன்னத்தில் முத்தம் தந்தான்.

அவசரமாக பிடித்து தள்ளி விட்டாள் கனிமொழி. சுற்றி இருந்தவர்களில் ஒரு பெண் இவளை நோக்கி வந்தாள்.

"என்னம்மா ஆச்சி.?" என்றாள் கனிமொழியின் முகம் பார்த்துவிட்டு. கனிமொழி தன் கண்களை விட்டு மறைந்துக் கொண்டிருந்த சுப்ரியாவை சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

"நானும் அவளும் லவ்வர்ஸ் மேடம். சண்டை. கோச்சிக்கிட்டா.. அதனாலதான் சமாதானம் செஞ்சிட்டு இருக்கேன்.." என்றான் வசந்த்குமார்.

கனிமொழி குழப்பத்தோடு அவன் புறம் திரும்பினாள். இவன் ஏன் இப்படி புது பொய் சொல்கிறான் என்று புரியவில்லை அவளுக்கு. ஆனால் அவர்கள் இருவரும் ஏதோ திட்டம் போடுகிறார்கள் என்பதை மட்டும் யூகிக்க முடிந்தது.

"லவ்வர்ஸ்குள்ள சண்டைன்னா அதே தீர்த்துக்க வேற இடமே இல்லையா.? நடு ரோட்டுல இன்டீசன்டா நடந்துக்காம இருக்க பழகுங்க.." திட்டி விட்டு நகர்ந்தாள் அந்த பெண்.

"பாய் பேபி.." என்று கிளம்பினான் வசந்த்குமார்.

"டேய் நில்லு.."

"டேவா.?" அதிர்ச்சியோடு திரும்பியவனிடம் "எதுக்கு இப்படி பண்ண.?" என்றுக் கேட்டாள்.

"சும்மா பன்.." என்றவன் கண்ணடித்தான். அவனை செருப்பால் அடிக்க தோன்றியது அவளுக்கு. ஆனால் யோசித்து விட்டு அமைதியாக ஸ்கூட்டியை கிளப்பினாள்.

***

சக்தி இரவு உணவை சமைத்துக் கொண்டிருந்தான். சுலபமா இருக்கிறதே என்று உப்மா கிளறிக் கொண்டிருந்தான். தன் வாழ்க்கையை நினைத்து அவனுக்கே சிரிப்பு வந்தது.

"அவளுக்கு பிரச்சனை வேணாம்ன்னு இந்த வீட்டுக்கு வந்தேன். அப்புறம் அவளையே பொண்டாட்டியா மாத்தி இந்த வீட்டுக்கு கூட்டி வந்தேன். இப்ப அவ போயிட்டா. நான் மட்டும் இருக்கேன்‌, இந்த வீட்டுக்கு வந்த காரணத்தையே எக்ஸ்பையரி பண்ணிட்டு!"

தட்டில் உப்மாவை பரிமாறினான். ஹாலை நோக்கி நடந்தவன் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு உப்மாவை நாற்காலியில் வைத்து விட்டுச் சென்று கதவை திறந்தான். சுப்ரியா இதழ்களை விரித்தாள்.

"ஹாய் சார்.."

"உனக்கு இங்கே என்ன வேலை.?"

"கத்தாதிங்க.. உங்ககிட்ட நான் ஒன்னு காட்டணும்.." என்றவள் தனது போனை எடுத்து புகைப்படம் ஒன்றை காட்டினாள்.

"உங்க சிஸ்டர்தான் இது.. இந்த போட்டோஸை நெட்ல அப்லோட் பண்ண போ.." அவள் முழுதாக சொல்லி முடிக்கும் முன்பே போனை பிடுங்கி தரையில் அடித்து விட்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN