காதல் கணவன் 95

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உடைந்துப் போன போனை வெறித்தாள் சுப்ரியா. அவளின் கழுத்தை பற்றியது ஒரு கரம். அவள் புரிந்துக் கொள்ள முயலும் முன்பே அவளை அருகே இருந்த சுவரோடு சாய்த்தான் சக்தி.

கழுத்து இறுகியது அவளுக்கு.

"நீ எப்படி நல்லவ கிடையாதோ அதே போலதான் நானும் நல்லவன் கிடையாது. உன் விளையாட்டு, திமிர் எதுவா இருந்தாலும் என்கிட்ட மட்டும் காட்டு. என் பாப்பாவை டச் பண்ண அப்படியே சாகடிச்சிடுவேன்.." அவளின் காதோரம் கர்ஜித்துவிட்டு அவளை விட்டான்.

பிடிமானம் இல்லாமல் தரையில் விழுந்தாள். கழுத்தை தேய்த்துக் கொண்டாள் அவசரமாக.

"உன் போட்டோவுக்கெல்லாம் நான் பயப்படுவேன்னு நினைக்கிறியா.? உன்னை இதே இடத்துல கொன்னு புதைச்சிடுவேன். நானும் எத்தனையோ பேட்சை பார்த்திருக்கேன். எத்தனையோ பொண்ணுங்களை சந்திச்சிருக்கேன். ஆனா உன்னை மாதிரி ஒரு கேரக்டரை பார்த்ததே இல்ல.." எச்சிலை உமிழ முடியாத சோகத்திற்கு வெறுப்பை மட்டும் உமிழ்ந்தான்.

கழுத்தைத் தேய்த்துக் கொண்டிருந்தவளின் மனமெங்கும் விஷமாக பரவிக் கொண்டிருந்தது வெறுப்பு.

"இன்னும் இரண்டு நிமிசத்துல இங்கிருந்து போயிடு. இல்லன்னா போலிஸ்க்கு போன் பண்ணிடுவேன்.." என்றான் அதட்டலோடு.

சிரமத்தோடு எழுந்தாள். தடுமாற்றத்தோடு அங்கிருந்து நடந்தாள்.

கதவை சாத்தினான். கீழேயிருந்த போனை எட்டி உதைத்தான். "ச்சை.. இதே காலேஜ்ல எத்தனை ஆயிரம் பொண்ணுங்களை கடந்திருக்கேன்.. ஆனா இவளை போல ஒருத்தி.. இப்படி நாலு பேர் இருந்தா கூட மொத்த சமுதாயமும் கெட்டுப் போயிடும். பிடிக்கலன்னு சொல்றவன் பின்னாடி சுத்துறது தப்பு. இதுல என்னை பழி வாங்க எங்க பாப்பாவை மிஸ் யூஸ் பண்ணிட்டு இருக்கா.." கடுப்போடு திட்டியபடியே உப்மாவை தின்றான்.

புகைப்படம் மார்பிங்காக இருக்கும் என்றே நினைத்திருந்தான்.

உணவை முடித்துக் கொண்டு திரைப்படம் ஒன்றை லேப்டாப்பில் ஓடவிட்டுவிட்டு அமர்ந்தான். போன் ஒலித்தது. கனிமொழி அழைத்திருந்தாள்.

"ஹலோ.."

"தூங்கிட்டிங்களா மாமா?"

"இன்னும் இல்ல பாப்பா. ஏன்?" என்றவனுக்கு இதயம் நின்று நின்று துடித்தது. புகைப்படம் கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்டது என்று சொல்லி மன்னிப்புக் கேட்பாளோ என்று எதிர்பார்த்தான்.

"நாளைக்கு சீக்கிரமா எழுந்து வீட்டுக்கு வரிங்களா.?" தயக்கத்தோடு கேட்டாள்.

"ஏன் பாப்பா.?"

"சும்மாதான்‌.. வாங்க.. மறக்காம குளிச்சிட்டு வாங்க.."

"ம். சரி.." என்றான் முழு மனதோடு.

"குட் நைட்.." என்றவளிடம்‌ "பாப்பா.." என்றான்.

"சொல்லுங்க மாமா.."

"உனக்கு ஏதாவது பிரச்சனை இருந்தா அதை என்கிட்ட எப்பவும் நீ சொல்லலாம். எப்பவும் நான் உனக்காக இருப்பேன்.."

சில நொடிகள் மௌனம் காத்தவள் "தேங்க்ஸ் மாமா.. குட்நைட்.." என்றுவிட்டு தொடர்பை துண்டித்தாள்.

எதற்காக வர சொன்னாள் என்ற யோசனையோடு உறங்கியவன் காலையில் வெகுநேரம் முன்பே எழுந்துக் கொண்டான். குளித்து முடித்து காலை ஆறு மணிக்கே வீட்டிற்கு சென்று விட்டான்.

அவளும் தயாராகி நின்றிருந்தாள்.

"இவ்வளவு காலையில் எங்கே பாப்பா.?" ஈர கூந்தலும், தரையோடு தவழும் புடவையுமாக இருந்தாள் அவள்.

"கோவிலுக்கு மாமா.." அவனை தாண்டி நடந்து காருக்குள் ஏறினாள்.

"என்ன திடீர்ன்னு.." அவனும் ஏறி அமர்ந்து விட்டு கேட்டான்.

"சும்மாதான்.. மனசு சரியில்ல.. கோவிலுக்கு போகணும்ன்னு தோணுச்சி‌.."

"ஓ.." என்றவன் காரை கிளப்பினான்.

"எந்த கோவில் பாப்பா.?"

"குலதெய்வ கோவில் மாமா‌.." என்றவள் அவன் வடக்கில் திரும்புவதை கண்டுவிட்டு "எங்க குலதெய்வ கோவிலுக்கு மாமா.." என்றாள்.

காரை நிறுத்தியவன் "உங்க கோவிலா.?" என்றான் பீஸ் போனது போல.

அவனுக்கு பக்தி முத்திப் போயுள்ளது என்று சொல்ல முடியாது. ஆனாலும் மாதத்தின் முதல் திங்களில் மாலை நேரத்தில் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று கற்பூரம் ஏற்றி கடவுளை வணங்கிவிட்டு வருவான். அவனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து இதுதான் வழக்கம். அவனின் குல தெய்வம் அதுதான். இவளையும் கூட அங்கே அழைத்துப் போயுள்ளான். இவனை போலவே அவளும் வணங்குவாள்.

ஆனால் இன்று எனது குலதெய்வம் என்று அவள் வேறு ஒரு தெய்வத்தை சொல்லவும் ஒரு மாதிரியாகி விட்டது. தாய்வழி பாட்டி வீட்டில் வளர்ந்ததால் அந்த கடவுளும் அன்னியம் கிடையாதுதான். அவ்வப்போது மூன்று மாதத்திற்கு ஒருமுறை குடும்பத்தோடு சென்று எட்டிப் பார்த்துவிட்டு வருவான். அந்த கடவுளோடு அவ்வளவாக பிடிப்பில்லை. சொந்தக்கார சாமி. அவ்வளவுதான் அவனை பொறுத்தவரை.

"சீக்கிரம் கிளம்புங்க மாமா.‌. திரும்பி வந்து காலேஜ்க்கு கிளம்பணும்.."

காரை நகர்த்தவில்லை அவன். "உனக்கு கல்யாணம் ஆகிடுச்சிதானே.? இனி எங்க சாமிதான் உனக்கும் சாமி. எங்க குலதெய்வ கோவிலுக்கே போகலாம்.." என்றான் அழுத்தமாக.

'பொண்டாட்டியை கூட விட்டு தருவார் போல. ஆனா குலதெய்வத்தை‌ விட்டு தர மாட்டேங்கிறாரு..' நினைத்துக் கொண்டவள் "உங்க சாமிதான் எனக்கும் சாமி. ஆனா என்னை நீங்க இதுவரை கூட்டிப் போனது இல்லையே.. இன்னைக்கு நான் எங்க கோவிலுக்கு வருவதா வேண்டிட்டு இருக்கேன்‌. எங்க கோவிலுக்கே போங்க‌." என்றாள்.

விருப்பம் இல்லாமல் கிளம்பினான்.

"இனி ஒவ்வொரு மாசமும் முதல் திங்கள் ரெடியாகி இரு.. கோவிலுக்கு போகலாம்.." என்றான்.

"சரி.." என்றவள் சாலையை பார்க்க ஆரம்பித்தாள். விடிந்தும் விடியாத காலை பொழுதை கவனித்தாள். ரோட்டு கடை பாய்லர்களில் சுட சுட தேநீர் வெந்துக் கொண்டிருந்தது. காலை நேரத்தில் பூ விற்க கிளம்பிக் கொண்டிருந்தாள் பாட்டி ஒருத்தி. கடைகள் சிலவற்றை திறந்துக் கொண்டிருந்தார்கள் கடைக்காரர்கள்.

பூக்கடை கடை ஒன்றின் அருகே காரை நிறுத்தினான்.

"அந்த பூ மூனு முழம்.. இரண்டு தேங்கா, ஏழு வாழைப்பழம், கற்பூரம், ஊதுவர்த்தி, எலுமிச்சை இரண்டு.‌" என்று வாங்கியவன் அவற்றை மனைவியிடம் தந்தான்.

"பூ வேணுமா பாப்பா.?" அவளின் தலையை பார்த்துவிட்டுக் கேட்டான். கீர்த்தனாவோடு வரும்போது கேட்கும் அதே கேள்விதான். ஆனால் கனிமொழிக்கு இது புதிது.

"தேங்க்ஸ் மாமா.." என்றாள் ஜாதிமல்லியை பார்த்தபடி.

"அந்த பூ இரண்டு முழம்.." கேட்டு வாங்கினான். இவளிடம் நீட்டினான். தலையில் சூடிக் கொண்டாள்.

கார் மீண்டும் வேகமெடுத்தது.

திறந்திருந்த கேட்டினுள் நுழைந்தனர் இருவரும்.

"கனிமொழியா இது.?" கோவிலின் நடையை தண்ணீரால் கழுவிக் கொண்டிருந்த பூசாரி திரும்பிப் பார்த்துக் கேட்டார்.

"நான்தான் தாத்தா.."

"கோவில் பக்கம் வந்து கூட ரொம்ப நாள் ஆச்சி. கல்யாணம் ஆச்சின்னு சொன்னாங்க.." என்றவர் சக்தியை பார்த்துவிட்டு "மாமனையே கட்டிக்கிட்ட.." என்றார்.

"அஞ்சி நிமிசம் இரும்மா.." என்றவர் யோசித்துவிட்டு பூக்கூடையை எடுத்து அவளிடம் நீட்டினார்.

"அரளி பறிச்சிட்டு வாம்மா.. நான் அதுக்குள்ள இதை சுத்தம் பண்ணிடுறேன்.." என்றார்.

சக்தி அவளோடு இணைந்து நடந்தான். இருவரும் சேர்ந்து கோவிலின் பின்னால் இருந்த அரளி செடியிலிருந்து பூக்களை பறித்தனர்.

"பூசாரியோடு ரொம்ப குளோஸா.?"

"ஆமா மாமா.. எங்க சாமிக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணுங்கன்னு கொஞ்ச பேரை அவர் கனவுல வந்து சொன்னுச்சாம். அந்த பொண்ணுங்கள்ல நானும் ஒருத்தி.."

சிரித்தான் அவன். "நல்லா கதை சொல்ற.."

முறைத்தவள் அவனுக்கு பதில் மொழி சொல்லவில்லை.

இருவரும் திரும்பினர். கடவுளை வணங்கினர். பூசாரி கற்பூர ஆரத்தியை இவள் புறம் காட்டினார். "மனசுல நினைச்சது அப்படியே நடக்கும் பாப்பா.."

"கனிக்கு குங்குமம் வச்சி விடுங்க தம்பி.." என்று தட்டை நீட்டியவர் அவனின் நெற்றியில் பெரிய பட்டையாக இழுத்து விட்டார்.

இருவரும் பேசி வைத்துக் கொண்டு ஏதாவது செய்கிறார்களா என்ற குழப்பத்தோடு குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றியிலும், உச்சி வகிட்டிலும் வைத்தான்.

திகைத்தாள் கனிமொழி. கோவில் என்பதால் எதுவும் சொல்ல முடியாமல் போய் விட்டது.

பூஜை கூடையோடு திரும்பினர் இருவரும்.‌

"உச்சியில் எதுக்கு குங்குமம் வச்சிங்க.? நான் எப்படி இதை அழிக்கறது.?" காருக்குள் அமர்ந்து கண்ணாடியை பார்த்தபடி கேட்டாள்.

"அவர்தானே வைக்க சொன்னாரு.?" என்றவனை சீறலாக பார்த்தவள் "அவர் நெத்திக்கு வைக்க சொன்னாரு.. வகிடுக்கு இல்ல.." என்றாள்.

"ஓ.." என்றவன் திரும்பிக் கொண்டான். தாலிக்கு குங்குமம் வைக்கவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தான் இவ்வளவு நேரமும்.

"காலங்காத்தால குங்குமத்தை அழிக்க எப்படி எனக்கு மனசு வரும்.? காலேஜ் வேற போகணும்.." வீடு திரும்பும் வழியில் புலம்பிக் கொண்டே இருந்தாள்.

வீட்டின் முன் காரை நிறுத்தியவன் இறங்கியவளின் கையை பிடித்தான்.

"என்ன.?" என்றவளிடம் "குங்குமத்தை நான்தானே வச்சேன். நானே அழிச்சிடுறேன்.." என்றான்.

தோளில் ஒரு அறையை விட்டாள். "காலங்காத்தால அபசகுணமா பேசாதிங்க மாமா.‌. இந்த குங்குமத்துல உங்க உயிர் இருக்கு.." என்றாள் உச்சியை சுட்டிக் காட்டி.

உள்ளுக்குள் நகைத்தவன் கர்ச்சீப்பை கையில் எடுத்தான்.

"மாமா.‌ வேணாம். எனக்கு அழுகை வரும்.." என்றவள் விலக முயல, இடது கரத்தால் அவளின் தாடையை பற்றியவன் மெதுவாக குங்குமத்தை அழித்தான். கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு. கண்ணீர் வழியும் அவளின் கன்னங்களை பார்த்தவன் "சென்டிமெண்ட் வேணாம்.." என்றான்.

"போடா லூசு டுபாக்கூரு.." அவனை பின்னால் தள்ளினாள்.

காலையிலேயே அழுகிறாளே என்று பரிதாபமாக இருந்தது. அவளின் கன்னங்களை பற்றினான்.

"விடுங்க.." என்றவளின் உச்சி வகிட்டில் இதழ் பதித்தான். அழுகை நின்று போனது அவளுக்கு.

கனவோ என்று பார்த்தவளின் உச்சியில் மீண்டும் அழுத்தமாக முத்தமிட்டான். "அந்த குங்குமத்துக்கு பதிலா இந்த முத்தத்தை வச்சிக்க.. எனக்கு ஒன்னும் ஆகாது.."

ஊமையாகிவிட்டவளை விட்டு விலகியவன் "நீ கிளம்புறியா.? நானும் போறேன்.." என்றான்.

"இ.. இல்ல உள்ளே வாங்க.." என்றவள் இறங்கினாள். "வேலை இருக்கு. வாங்க மாமா.." என்றாள்.

பின்தொடர்ந்து போனான்.

அழகாய் நின்றிருந்த பாலாஜிக்கும் வெற்றிக்கும் ஆரத்தியை சுற்றிக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

"ஹேய் சக்தி. நீ நிஜமா வந்துட்டியா.? உன்னை மிஸ் பண்ணிட்டே இருந்தேன் நான்.." மாடியிலிருந்து ஓடி வந்தாள் கீர்த்தனா. பாதி படிகள் இறக்கிவிட்டு "அச்சச்சோ மறந்துட்டேன்.." என்று மீண்டும் ஓடினாள்.

தேன்மொழி அண்ணன்கள் இருவர் கையிலும் ராக்கிகளை கட்டினாள். இருவருக்கும் லட்டு ஊட்டினாள். "செல்லக்குட்டி.." கொஞ்சியபடியே மூவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

"அண்ணா வாடா இங்கே.." கீர்த்தனா சக்தியை இழுத்துச் சென்றாள். பூஜை அறையின் வாசலில் நிறுத்தி அவனுக்கு ஆரத்தியை சுற்றினாள். கையில் கயிற்றை கட்டினாள்‌. "நாம எப்பவும் இதே போல எலியும் பூனையுமா இருக்கணும்.." என்றாள் அவனுக்கு பிடிக்காத ரசகுல்லாவை ஊட்டி விட்டுவிட்டு.

முகத்தை சுளித்துவிட்டு ரசகுல்லாவை மெல்லாமல் விழுங்கினான். அவனின் சட்டை பையிலிருந்து ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை அவளே எடுத்துக் கொண்டாள்.

சக்தி தன் மனைவியை பார்த்தான். அண்ணன்களுக்கு ஆரத்தி சுற்றிக் கொண்டிருந்தாள். வெற்றியை விட கொஞ்சம்தான் குள்ளம். நிறையவே வளர்ந்து விட்டாள் என்று சக்திக்கு புரிந்தது.

கீர்த்தனா கையிலிருந்த பணத்தை பார்த்தபடியே தனது அறைக்கு கிளம்பினாள்.

அண்ணன்கள் இருவருக்கும் ராக்கியை கட்டி இனிப்பை ஊட்டியவள் அவர்களின் கன்னத்தில் முத்தங்களை தந்துவிட்டு கணவனிடம் வந்தாள்.

பிள்ளை பூச்சியோ போல அமைதியாக நின்றிருந்தவனுக்கு ஆரத்தி சுற்ற முயன்றாள்.

"ஏய் என்ன பண்ற.?" அவசரமாக விலகினான். வெற்றியும் பாலாஜியும் தங்கையை பார்த்துவிட்டு தங்களின் வேலைகளை கவனிக்க சென்றனர்.

"ராக்கி கட்ட போறேன் உங்களுக்கு.." என்றவள் ஆரத்தியை தரையில் வைத்துவிட்டு இடுப்பிலிருந்த ராக்கி கயிறை கையில் எடுத்தாள்.

"மெண்டல்.." என்றவன் அங்கிருந்து கிளம்ப முயன்றான். அவனின் கையை பிடித்து நிறுத்தினாள்.

"அதுதான் காதல் இல்லையே.. நமக்குள்ள எந்த உறவும் இல்ல.‌. ஒன்னுமே இல்லாம இருக்கறதுக்கு இந்த ராக்கியாவது இருக்கட்டும்.. பாப்பான்னு பலரும் பொண்டாட்டியை கூப்பிடுறாங்க. ஆனா உங்களுக்குதான் நான் பாப்பா மட்டுமே. அது என் மனசுலயும் பதியட்டும்.." என்றவள் கயிறை எடுத்து அவனின் மணிகட்டின் மீது வைத்தாள். கையை பின்னுக்கு இழுத்தான்.

ஆத்திரத்தோடு அவளை வெறித்தவன் "உன்னை கொன்னுடுவேன் பார்த்துக்க இப்படி லூசுதனமா பண்ணிட்டு இருந்தா.!" என்று திட்டினான்.

"இப்படி உப்பு சப்பு இல்லாத லைப்புக்கு.." அவளின் பேச்சை பாதியில் நிறுத்தி விட்டான். அவளின் இதழில் இதழ் பதித்தான். முத்தம் என்று சொல்ல முடியாது. சிறு இதழ் தீண்டல்.

கனிமொழி விழித்தாள்.

"எனக்கு டைம் வேணும்ன்னு சொன்னேன். உன்னை காதலிக்க டிரை பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னேன்.. என்னை ஏன் அதுக்கு முன்னாடியே பழி வாங்கற.?"

"நா.. நான் உங்ககிட்ட முத்தம் கேட்டேனா.?" திணறலாக கேட்டவளை முறைத்தவன் "நீதானே உப்பு சப்பு இல்லன்னு சொன்ன.?" என்று பதிலுக்கு கேட்டான்.

இன்று ஏன் இப்படி அனைத்தும் அதிசயமாகவே நடக்கிறது என்று புரியாமல் குழம்பியவள் "ஆனா அதுக்காக காதல் இல்லாம முத்தம் தருவிங்களா.?" என்றாள் கோபத்தோடு.

"நீ காதலிச்சிக்கிட்டே ராக்கி கட்ட வரும்போது நான் காதல் இல்லாம முத்தம் தந்தா தப்பா.? போடி.. போய் டிரெஸ்ஸை மாத்திட்டு காலேஜ்க்கு வாடி.." என்றவன் தரையில் இருந்த தட்டிலிருந்து லட்டை கையில் எடுத்தான். அவளுக்கு ஊட்டினான்.

மூக்கு சிவக்க பார்த்தாள்.

"சீக்கிரம் வா டார்லிங்.. நீ இல்லன்னா கிளாஸ் ரூமே போரடிக்கும் எனக்கு.." கண்ணடித்து சொல்லிவிட்டு போனான்.

இது எதுக்கு என்று புரியாமல் திரும்பியவள் சற்று தூரத்தில் நின்றிருந்த தன் அம்மாவை கண்டுவிட்டு திகைத்துப் போனாள்.

'அன்னைக்கு அவங்க அம்மா முன்னாடி நான் சீன் போட்டேன்னு இன்னைக்கு பழிக்கு பழி வாங்கிட்டு போகுது பேய்.. இந்த மாமன் வளர்ந்து என் லவ்வை புரிஞ்சிக்கும் முன்னாடி கிழவி ஆகிடுவேன் போல..' புலம்பிக் கொண்டே தயாராக சென்றாள்.

கனிமொழி கல்லூரியின் கேட்டிற்குள் நுழைந்தாள். எதிரில் இருந்து வந்தது சக்தியின் கார். இவளை கண்டதும் கீழிறங்கினான்.

"பாப்பா நீ வீட்டுக்கு போ.." என்றான்.

"வீட்டுக்கா.? ஏன் காலேஜ் லீவா.?" ஆச்சரியத்தோடு கேட்டவளிடம் "அந்த சுப்ரியா என்னை பழி வாங்க உன் போட்டோஸை மார்பிங் பண்ணி நெட்ல அப்லோட் பண்ணியிருக்கா.. பசங்க உன்னை கேலியா பார்ப்பாங்க.. நீ கிளம்பு.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN