காதல் கணவன் 99

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதவை தாண்டும் முன் கனிமொழியின் கையை பற்றி உள்ளே இழுத்தான் சக்தி.

"என்னடா.?" என்று சீறியவளை முறைத்தவன் "நீ முறைக்கற அளவுக்கு ஒன்னும் ஆகல. நான் உன்னை கேட்டுட்டுதான் உன்னை டச் பண்ணேன்.." என்று அவள் மீதே குற்றம் சாட்டினான்.

"என்கிட்ட வாங்கி கட்டாம போக மாட்டிங்க போல.. உனக்கு நான் வேணுமான்னு கேட்டிங்க இல்லையா.? அது கூட லவ் இல்லையா.?" கோபமாக கேட்டாள்.

மறுப்பாக தலையசைத்தான்.

"இனியாவது நீ புத்தியோடு இரு. எவனாவது வந்து கிஸ் பண்ணா செருப்பை கழட்டி அடிக்க இடம் பொருள் இடம் தரலன்னாலும் என்கிட்டயாவது வந்து சொல்லு.. எல்லாம் உன் நல்லதுக்குதான் சொல்றேன்.." என்றான்.

நெஞ்சில் குத்தினாள். "இது தண்டனையா மாமா.?"

உதடு பிதுக்கினான்.

"ரொம்ப ரொம்ப மோசமா நடந்துக்கிறிங்க நீங்க.." கலங்கியது விழிகள் அவளுக்கு.

"எல்லாம் உன் நன்மைக்கே.. எனக்கு தலைவலிக்குது. நான் போய் மாத்திரை சாப்பிட்டுட்டு தூங்கறேன். நீ படி.." என்றுவிட்டு போனான். அவளின் மனதில் அதன் பிறகே கேள்வி ஒன்று உதித்தது‌.

***

சுப்ரியா அந்த காப்பி ஷாப்பின் வாசலுக்கு வந்து நின்றாள்.

"வசந்த் உள்ளேதான் இருக்கானா.?" என்று முனகியபடி அவனுக்கு அழைக்க போனை எடுத்தாள்.

"சுப்ரியா.." யாரோ அழைக்கும் குரல் அவளுக்கு பின்னாலிருந்து கேட்டது. வெற்றி நின்றிருந்தான். யாரிவன் என்பது போல பார்த்தாள்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அப்படி வரியா.?" என்று அழைத்தான்.

"மைன்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர். வாங்க போங்கன்னு கூப்பிடுங்க. நான் ஒன்னும் உங்க அடிமை கிடையாது.." என்றாள் சுள்ளென்று.

சுற்றும் முற்றும் பார்த்தான் வெற்றி. மக்கள் நடமாட்டம் ஓரளவுக்கு இருந்தது. இல்லையென்றால் கன்னத்திலேயே ஒன்று விட்டிருப்பான்.

"மிஸ்டர் வசந்த் உங்களுக்கு உயிரோடு வேணும்ன்னா அமைதியா வந்து கார்ல ஏறுங்க.." என்றான்.

அதிர்ந்தாள்.

"நீங்க கத்தி சத்தம் போட நினைச்சா தூரத்துல இருந்து உங்களை குறி பார்த்துட்டு இருக்கும் ஸ்னைப்பர்ல இருந்து குண்டு ஒன்னு நேரா பறந்து வந்து உங்க நெத்தியில இறங்கும். எப்படி வசதி.?" என்றுக் கேட்டான்.

எச்சில் விழுங்குவது கூட சிரமமாக இருந்தது அவளுக்கு.

பயத்தோடு காரில் ஏறினாள். வசந்த் அவளருகில் அமர்ந்திருந்தான். இவளை தள்ளி அமர சொல்லிவிட்டு வெற்றி மறுபுறம் அமர்ந்தான். பாலாஜி முன் சீட்டில் இருந்தான். வாடகை ஓட்டுனர் காரை செலுத்திக் கொண்டிருந்தார்.

பாலாஜியை கண்டதும் முகம் வெளுத்தது அவளுக்கு. இது கனிமொழியை பற்றிய விசயம் என்று நொடியில் யூகித்து விட்டாள்.

"எங்கே போறோம்.?" பயத்தோடு கேட்டாள்.

முகத்தில் காயங்களோடு இருந்த வசந்த்குமார் "எனக்கும் தெரியல சுப்ரியா.." என்றான்.

இவன்தான் தன்னையும் போட்டு தந்திருந்த வேண்டும் என்று யூகித்தவளுக்கு அவன் மீது கொலைவெறியே வந்தது.

சிவப்பு நிற கட்டிடத்தின் முன் நின்றது வாகனம்.

"போலிஸ் ஸ்டேஷனா.?" பயத்தில் மொத்த உடம்பும் வெடவெடத்தது அவளுக்கு.

"உன்னை கொல்லணும்ன்னு ஆசைதான் எனக்கும். ஆனா என்ன செய்ய.? எனக்கும் குடும்பம் இருக்கு. நான் செய்ற செயல் இன்னொருத்தனுக்கு முன்னுதாரணமாக ஆகிட கூடாதே‌‌.." என்றான் வெற்றி.

பாலாஜி திரும்பி பார்த்து காற்றை துப்பினான். "யோக்கியவான் மாதிரியே பேசுறான்.." முனகியபடி கீழே இறங்கினான்.

"சார் சார் வேணாம் சார். நான் அந்த எல்லா பிக்சர்ஸையும் அழிச்சிடுறேன். சக்தி சார் என்னை அடிச்ச கோபத்துலதான் இப்படி பண்ணிட்டேன் சார்.." என்று கெஞ்சினாள். வெற்றியின் காலை தேடி பிடித்து கும்பிட்டாள்.

"வேணாம் சார். பேரண்ட்ஸ்க்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும் சார். வேணாம் சார்.." என்றாள் மீண்டும் மீண்டும் கெஞ்சியபடி.

வெற்றியும் பாலாஜியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பாலாஜி தலையை அசைத்தான்.

வாகனம் அங்கிருந்து நகர்ந்தது.

பெருமூச்சி விட்டாள் சுப்ரியா.

ஆனால் வாகனம் அங்கே இருந்த காவலர் குடியிருப்புக்குள் புகுந்தது. இன்ஸ்பெக்டர் ஷாலினி என்று பெயர் பொறிக்கப்பட்டு இருந்த வீட்டின் முன் வாகனம் நின்றது.

"இறங்கு.." என்றான் வெற்றி.

"வேணாம் சார்.." என்று கெஞ்சினாள். ஆனால் இருவரையும் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்தனர்.

இன்ஸ்பெக்டர் காக்கி உடையில் கம்பீரமாக நின்றிருந்தாள். கால்சட்டை பாக்கெட்டில் கையை விட்டபடி நின்றிருந்தாள்.

"இவங்கதானா.?" எனக் கேட்டாள் அவர்கள் அமர இருக்கைகளை கை காட்டினாள்.

"மேடம் எங்களை ஒன்னும் பண்ணிடாதிங்க மேடம்.." கெஞ்சியபடியே இருக்கையில் ஒண்டி அமர்ந்தாள் சுப்ரியா. அவளருகே வசந்த்குமார் அமர்ந்தான்.

"எதுக்காக இப்படி செஞ்சிங்க.?" எனக் கேட்டபடி எதிரே அமர்ந்தாள்.

"நீங்க மட்டும் உண்மையை சொல்லன்னா எப்.ஐ.ஆர் போட்டு உங்களை உள்ளே தள்ளிடுவேன்.. அதனால எதையும் மறைக்காம சொல்லணும்.." என்றாள் கால் மீது காலை போட்டபடி.

சுப்ரியா பயத்தோடு பாதி நிமிர்ந்து பார்த்தாள்.

"கனி எப்பவும் எங்களை இன்சல் பண்ணிட்டே இருப்பா மேடம். அதனால அவளை.."

"பொய் சொல்றா.." குறுக்கே புகுந்து சொன்னான் பாலாஜி.

நிமிர்ந்தாள் ஷாலினி. "அந்த பொண்ணையும் வர சொல்லுங்க.." என்றாள்‌.

"பத்தே நிமிசம் மேடம்.." கைபேசியை எடுத்து காதில் வைத்தபடி வெளியே போனான் வெற்றி.

கனிமொழிதான் இவர்களை மிரட்டியதாகவும் அதனால் கோபம் கொண்டு இவர்கள் இப்படி செய்ததாகவும் ஏகப்பட்ட பொய்களை அதற்குள் சொல்லி விட்டிருந்தனர்.

இருபது நிமிடங்களுக்கு பிறகு கனிமொழியை அங்கே அழைத்து வந்தான் சக்தி.

சுப்ரியாவை கண்டவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

"நீயெல்லாம் பொண்ணா.?" என்று கத்த ஆரம்பித்தவன் முன்னால் கையை நீட்டி நிறுத்தினாள் ஷாலினி.

"நான் விசாரிக்கிறேன்.. காலேஜ் புள்ளைங்க. பேர் கெட்டுப் போக வேணாம்ன்னு வெற்றி கேட்டுக்கிட்டதாலதான் நான் இதை பிரைவேட்டா விசாரிச்சிட்டு இருக்கேன். வெற்றி எப்படி சமூக பொறுப்போடு இருக்காரோ அதை போல நீங்களும் பொறுப்போடு இருங்க.." என்றாள் அவள்.

'யாரு.? இவன்.? பொறுப்பு.? ஐயோ ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு பீலிங்கை தருதே.. காதலியை கரு கலையும் அளவுக்கு அடிச்ச இவன் பொறுப்பானவனா.? எல்லாத்தையும் காதுல வாங்கணும்ன்னு விதி!' நொந்துக் கொண்டான் பாலாஜி.

"விசயத்தை நீ சொல்லும்மா.." என்றாள் ஷாலினி கனிமொழியிடம்.

"அவக்கிட்ட கேட்க ஒன்னும் இல்லைங்க. இந்த பொண்ணுக்கு என் மேல கிரஷ். அதுக்கு லூசு மாதிரி செய்வா.." என்று ஆரம்பித்த சக்தியிடம் "உங்ககிட்ட கேட்கும்போது நீங்க சொல்லுங்க.." என்றாள்.

சக்தி வாயை மூடிக் கொண்டு ஒதுங்கி நின்றான்.

இன்ஸ்பெக்டர் கனிமொழியை பார்த்தாள்.

கனிமொழி நிறைய தயங்கினாள்.

"பாப்பா இதுதான் சான்ஸ். எல்லா உண்மையையும் சொல்லிடு. அதுவும் இல்லாம இப்ப உன் புருசன் வாழ்க்கையே உன் கையில்தான் இருக்கு. நீ ஏதாவது கொஞ்சம் பொய் சொன்னாலும் அவ சொன்னதை கேட்டு உன் புருசனை கொண்டு போய் ஜெயில்ல தள்ளிடுவாங்க. அதனால நீயே யோசி‌‌.." என்றான் பாலாஜி.

கைகள் நடுங்கியது கனிமொழிக்கு. ஷாலினி எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து தந்தாள். கணவனை சிறை கதவின் பின்னால் பார்ப்பதா என்று கலங்கியது உள்ளம்.

கனிமொழியின் கணவனோ அவளை விசித்திரமாக பார்த்தபடி நின்றிருந்தான்.

"கடந்த இரண்டு வருசமா என்னை ஈவ்டீசிங் செய்வாங்க மேடம்‌‌.." என்றாள் உடைந்த குரலில்.

திகைத்தாள் ஷாலினி. திகைத்தான் சக்தியும்.

"நான் கொஞ்சம் லேட்டாதான் ஏஜ் அட்டென்ட் பண்ணேன். பதினொன்னாவது லீவ்க்குள்ளவே என் கிளாஸ்ல இருந்த எல்லா பெண்களும் பெரிய மனுசின்னு பேர் வாங்கிட்டாங்க. அங்கே தனியொரு பிறவி போல நான் இருந்தேன். அதனால நிறைய பேர் கிண்டல் செய்வாங்க.." கன்னத்தில் வழிந்த கண்ணீரோடு சொன்னாள்.

கனிமொழியின் முகம் பார்த்துக் கொண்டிருந்த சக்திக்கு பேச்சே வரவில்லை. தன்னிடம் அவ்வளவு வாயாடும் இவளுக்கா இப்படியொரு பிரச்சனை என்று குழம்பினான்.

"அதுல இவங்க இரண்டும் பேரும் இவங்க பிரெண்ட்ஸ் இரண்டு பேரும் ரொம்ப ஓவரா டீஸ் பண்ணுவாங்க. காய்க்காத மரம், பூக்காத செடின்னு கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க.." என்றாள் சிறு விம்மலோடு.

"இதை ஏன் நீ வீட்டுல சொல்லல.." உறுமினான் வெற்றி.

"அ.. அம்மாதான் யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னாங்க.." என்றாள் தலை குனிந்து.

"அவ பொய் சொல்றா மேடம்.." என்றாள் சுப்ரியா.

"இல்ல மேடம். நான் எந்த பொய்யும் சொல்லல. ஒருநாள் நானும் எங்க அண்ணா அண்ணி மாமா எல்லோரும் சேர்ந்து வெளியே போயிருந்தோம். அங்கே ரத்னா என்னை அடிக்க பார்த்தா. எங்க மாமா அவளை திருப்பி அடிச்சிட்டாரு. அதுக்காக ஸ்கூலோட கடைசி நாள்ல புதுசா கட்டிட்டு இருந்த ஒரு வீட்டுக்கு கூட்டிப் போய் என்னை பிவிசி பைப்பாலயே அடிச்சிட்டாங்க மேடம். பதிமூனு அடி.." என்றவள் அவமானம் தாங்க முடியாமல் முகத்தை பொத்திக் கொண்டாள்.

யாராலும் சத்தமாக மூச்சு விட முடியவில்லை. அன்று பார்த்த காயங்களுக்கான காரணம் இன்று புரிந்தது சக்திக்கு.

"நீங்க இதையெல்லாம் எதிர்த்து நின்னிருக்கணும்.." என்றாள் இன்ஸ்பெக்டர்.

"முடியல மேடம். நானும் டிரை பண்ணேன். என்னை ரொம்ப இன்செக்யூரா பீல் பண்ண வச்சிட்டாங்க. என் இன்னர் சைஸை சொல்லி கிண்டல் பண்ணுவாங்க. அவமானமா இருக்கும். எதையும் வெளியே சொல்ல முடியாது‌. எப்பவும் கார்னர் பண்ணுவாங்க. அந்த நேரத்துல படிச்சி மார்க் எடுத்ததே பெரிய விசயமா இருக்கும்.." நெற்றியின் இரு புறமும் பற்றினாள்.

"டார்ச்சர் பண்ணுவாங்க. எங்கே பார்த்தாலும் கனின்னு பேரு.‌ ஆனா காய்க்காத மரம்ன்னு சொல்லி திட்டிட்டே இருப்பாங்க. ஆண் மரம். அதுதான் என் பட்ட பெயர். சின்ன விசயம்தானே. இதெல்லாம் மேட்டரான்னு நானே விட்டாலும் அவங்க விட மாட்டாங்க.‌." சந்தர்ப்பம் கிடைத்தது என்று புலம்பி தள்ளினாள்.

"நாங்கதான் சாரி கேட்கறோமே விட்டுடேன்.." என்றான் வசந்த்குமார் சிறு குரலில்.

"இவன்தான் மேடம் நான் ஸ்கூல் படிக்கும்போது நான் பெரிய பொண்ணா மாறிட்டேனான்னு செக் பண்ண என் டிரெஸ்ஸை கழட்ட டிரை பண்ணவன்.."

வெற்றி பாய்ந்தான். அவனை கட்டிப்பிடித்து நிறுத்தினான் பாலாஜி.

"எல்லாம் முடிஞ்சதுன்னு நம்பி காலேஜ் போனேன். ஆனா அங்கேயும் இவங்க இரண்டு பேரும் வந்துட்டாங்க. பெருசா எந்த தொந்தரவும் இல்லதான். ஆனா இவளுக்கு என் ஹஸ்பண்ட் மேல ஆசை.." நெற்றியில் அடித்துக் கொண்டாள் சலிப்போடு.

"எங்கே போனாலும் விடாத சனி இதுங்க.."

கனிமொழியின் ஹஸ்பண்ட் என்ற வார்த்தையில் அதிர்ந்தாள் சுப்ரியா.

"அவர் பின்னாடியே சுத்திட்டு இருப்பா. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல. அவர் என்கிட்டயே நல்லா நாலு வார்த்தை பேச மாட்டாரு. இவ பக்கம் சுத்தமாவே திரும்பல. அவங்களுக்குள்ள என்ன சண்டையோ.? அவரை பழி வாங்க என் போட்டோவை மார்பிங் பண்ணியிருக்கா.." என்று முடித்தாள்.

இன்ஸ்பெக்டர் சக்தியை பார்த்தாள்.

"என்ன நடந்ததுன்னு நீங்க சொல்றிங்களா.?"

அனைத்தையும் விளக்கிச் சொன்னான்.

இன்ஸ்பெக்டர் குற்றவாளியாக அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தாள்.

"மேடம் என் மேல எந்த தப்பும் இல்ல. கனிக்கு கிஸ் பண்ணணும்ன்னு இவதான் சொன்னா. நான் செஞ்சது எல்லாமே இவ பேச்சை கேட்டுதான்.." என்று அப்ரூவராக மாற முயன்றான் வசந்த்குமார்.

இன்ஸ்பெக்டர் அவனை இளக்காரமாக பார்த்தாள்‌. "நீ என்ன குழந்தையா.? உனக்கு நெஞ்சுல வன்மம் இல்லாம நீ இந்த அளவுக்கு செஞ்சிருக்க மாட்ட‌. முதல்ல இந்த பொண்ணை பார்த்ததுட்டு‌ வரேன்.." என்றவள் சுப்ரியாவின் முகத்தை ஆராய்ந்தாள்.

"நீ செஞ்ச தப்புக்கெல்லாம் உனக்கு ஆயுள் தண்டனையே தரலாம் பாப்பா. நீ என்ன சொல்ற.?"

சுப்ரியா பயத்தோடு இடம் வலமாக தலையசைத்தாள்.

"சக்தி சார்கிட்ட விளையாட்டாதான் பழகினேன் மேடம். ஆனா அவர்தான் ஓவரா பண்ணிட்டாரு.."

சக்தி விழிகளை உருட்டினான்.

"எதை வேணாலும் விளையாட்டுக்கு செய்ய முடியாது பாப்பா. உன்னோட ஈவ்டீசிங்னால இந்த பொண்ணு ஏதாவது செஞ்சிட்டு இருந்திருந்தா கொலை பழி உன் மேல விழுந்திருக்கும். ஆனா இப்பவும் இந்த பொண்ணோட போட்டோவை மார்பிங் பண்ணதுக்காக உனக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.." என்றாள்.

சுப்ரியா நடுங்கும் கரங்களோடு முகத்தை துடைத்துக் கொண்டாள். பின்விளைவை யோசிக்காதவள்தான். ஆனால் இந்த அளவுக்கு பின்விளைவு இருக்குமென்று கனவிலும் நினைக்காமல் போய் விட்டாள்.

"நான் சக்தி சார் போனுக்கு மட்டும்தான் மார்பிங் பண்ண போட்டோவை அனுப்பி வச்சேன் மேடம். மத்த எல்லோருக்கும் இவன் அவளோட கன்னத்துல கிஸ் பண்ண போட்டோவைதான் அனுப்பி வச்சேன்.." தன் புறத்து நியாயத்தை சொன்னாள்.

கனிமொழிக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

"சரி இவங்ககிட்ட நான் பேசிடுறேன்.‌ நீங்க கிளம்புங்க.." இன்ஸ்பெக்டர் சொன்னதும் கனிமொழி எழுந்தாள்.

"ஒரு நிமிசம் பாப்பா.." நிறுத்தினாள் அவள்.

திரும்பியவளிடம் "உன் மேல எவ்வளவு தப்பு இருக்குன்னு இதுக்கு மேலாவது யோசிச்சி பாரு. எந்த பிரச்சனையா இருந்தாலும் நீ முதல்லயே எதிர்த்துட்டா அந்த பிரச்சனை வளராம இருக்க தொண்ணூறு சதவீத வாய்ப்பு உண்டு. இவங்க உன்னை கேலி செஞ்ச முதல் நாளே நீ உன் எதிர்ப்பை காட்டி இருந்தா இந்த அளவுக்கு இது வளர்ந்து நிற்காது.." என்று பாடம் எடுத்தாள்.

'ஒவ்வொரு முறையும் எதிர்த்துட்டு அதுக்கு ஒன்பது மடங்குல வாங்கி கட்டியவ நான்தானே.? உங்களுக்கு எப்படி தெரியும்.?' சோகமாக நினைத்தாள். ஆனாலும் அவளிடம் சரியென்று தலையசைத்தாள்.

நால்வரும் வெளியே வந்தனர். கனிமொழியின் கையை பிடித்தான் சக்தி.

என்னவென்று நிமிர்ந்தவளுக்கு பதிலை சொல்லாமல் தனது காருக்கு இழுத்துப் போனான்.

"இருடா நாங்களும் வரோம்.." பாலாஜி காரை நெருங்கினான்.

"எப்படி வந்திங்களோ அப்படியே போங்க. நான் இவக்கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.." என்றவன் காரை வளைத்து ஓட்டினான்.

அவர்களின் தனி வீட்டிற்கு வரும்வரை இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

வீட்டின் கதவை திறந்தவன் அவள் உள்ளே வந்ததும் கதவை அறைந்து சாத்தினான்.

துள்ளி விழுந்தாள் அவள்.

"இத்தனை நடந்திருக்கு. ஆனா நீ ஒரு விசயம் கூட என்கிட்ட சொல்லல.." என்றான் கோபத்தோடு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN