காதல் கணவன் 100

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
@@@

கனிமொழி பேச நினைத்தாள். ஆனால் அவன் பேச விடவில்லை.

"உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும். வீட்டுல நாங்க அத்தனை பேர் குத்துக்கல்லு மாதிரி இருக்கோம். ஆனா நீ ஒரு வார்த்தை எங்ககிட்ட சொன்னியா?" சக்தி கத்தியதில் கனிமொழிக்கு காது செவிடாகாத குறை.

"லவ் பண்றேன், லஸ்டா பீல் பண்றேன்னு எல்லா வெங்காயத்தையும் சொன்னவளுக்கு இதை சொல்ல வாய் வரல. ஏன்? ஏனா நாங்க கூமுட்டைங்க. நீ நினைச்ச எல்லாமே நடக்கணும். ஆனா நீயா ஒரு வேலையையும் உருப்படியா செய்ய மாட்ட.." என்று தொடர்ந்து திட்டிக் கொண்டே இருந்தான்.

"உன்னை புத்திசாலின்னு நினைச்சேன் நான். ஆனா நீ.." அவனருகே வந்தாள். அவன் இதழ்களை தன் இதழ்களால் பற்றினாள்.

பேச்சற்று நின்றிருந்தவனின் கழுத்தை சுற்றி மெள்ள தன் கைகளை மாலையாக்கினாள். எட்டியும் எட்டாமல் முத்தமிட்டுக் கொண்டிருந்தவள் அவனின் கழுத்தை சற்று கீழே வளைத்தாள்.

சக்தி கண்களை மூடி மூடி திறந்தான். அவளின் இடையை பற்றியது ஒரு கரம். சிகையில் நுழைந்தது மறு கரம். அரைகுறையாக, சற்று பயத்தோடு முத்தமிட்டுக் கொண்டிருந்தவளின் இதழ்களை ஆட்கொண்டான்.

பயந்திருந்தவள் இதை எதிர்பார்க்கவில்லை. தன்னை பிடித்து தள்ளி விடுவானோ என்பதுதான் அவளின் அதிகப்பட்ச பயமாக இருந்தது. ஆனால் இந்த திருப்பத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.

அவனின் முகத்தைப் பார்த்தாள். அவளின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். கண்களால் கேள்வி எழுப்பினான். கண்களால் சிரித்தான். கனிமொழிக்கு கனவு போலவே இருந்தது.

அவளின் இதழ்களின் சிறு தாண்டவத்தை நடத்திவிட்டு விலகினான். வெட்கப்பட்டவளின் முன்னால் சொடக்கிட்டான்.

"தேவையானது கிடைச்சிடுச்சி இல்ல. இப்ப சொல்லு. அந்த திருவாயை இப்பவாவது திற.." என்றான்.

கனிமொழிக்கு கோபமும் அவமானமும் ஒன்றுச் சேர்ந்து தாக்கியது. விழிகளும் சட்டென்று கலங்கி விட்டது.

"ஏன் ஒவ்வொரு முறையும் என் மனசை உடைக்கிறிங்க.? இந்த கிஸ் உங்களுக்கு ஒரு அர்த்தத்தையும் தரலையா.?" ஏக்கமாக கேட்டாள்.

எங்கேயோ பார்த்தான்.

"ஒருமுறை சொல்லுங்க மாமா. என் மேல லவ்வே இல்லன்னு சொல்லுங்க பார்க்கலாம்.. என்னை தப்பா பார்க்க முடியலன்னுதானே சொன்னிங்க.? ஆனா நேத்து நைட் உங்களுக்கு என் மேல பீலிங் வந்தது உண்மைதானே.? உங்களுக்கும் லவ் இருக்குதானே.?" கண்களில் நீர் துளிர்க்க கேட்டாள்.

"இது அவசியமா.? நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு.. அந்த புள்ளைங்க எத்தனை நாளா உன்னை டீஸ் பண்ணிட்டு இருக்காங்க.?"

"பன்னென்டாவதுல இருந்து. முழுசா ஒன்றரை வருசம் ஆச்சி.." உணர்வுகளை விழுங்கி மனதோடு புதைத்து விட்டு ரோபோட் குரலில் சொன்னாள்.

"நீ அவங்களை திருப்பி பேசி இருக்கணுமா இல்லையா.?" கர்ஜனையாக கேட்டான்.

ஆமென்று தலையசைத்தவள் "கேட்டு இருக்கணும்தான். ஆனா என்ன செய்ய.? எனக்கு அவங்களோட டீசிங்கை எதிர்க்க தெரியல‌. எதிர்த்தாலும் ஏதாவது செஞ்சாங்க.‌ என்னோட குறைதான் எனக்கு பெருசா தெரிஞ்சது.." என்றாள்.

"உனக்கு ஒரு குறையும் இல்ல.." அழுத்தமாக சொன்னான். அந்த முகத்தில் உண்மைதான் இருந்தது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அவளால் முடியவில்லை.

தான் கடந்து வந்த பாதைகளை நினைத்துப் பார்த்தாள்.

"எனக்கு இருக்கு மாமா. அதனாலதான் உங்களுக்கு என்னை பிடிக்கல.. நான் நியூடா நிற்க காரணம் என் திமிருன்னு நீங்க சொன்னிங்க. சத்தியமா அது கிடையாது. என்னோட இன்செக்யூர்தான் அப்படி செய்ய வச்சது. நான் ஆண் மரம்ன்னு அவங்க சொல்வாங்க. நீங்களும் சின்ன பொண்ணுன்னு சொன்னிங்க. அந்த டைம்ல நான் பெரிய பொண்ணுன்னு உங்களுக்கு தெரிவிக்க அதை தவிர வேறு வழி தெரியல. மனசு முழுக்க பயம் மாமா. ரொம்ப துக்கம். என்ன மருந்து சாப்பிட்டா பித்தம் தெளியும்ன்னு விஷத்தை எடுத்து சாப்பிட்ட ஆளை போலதான் நானும். என்ன செஞ்சா உங்க மனசுல நான் இருப்பேன்னு அது மட்டும்தான் யோசனை.."

நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"படிக்கிற வயசுல இந்த கன்றாவி ஆசையெல்லாம் தேவைதானா.?" எரிச்சலாக கேட்டான்.

"மனசை மடை மாத்த வேற வழி எனக்கு தெரியல.." தலை குனிந்துச் சொன்னாள்.

நகைத்தான் அவன்.

"எவ்வளவு நல்ல குடும்பம் நம்மோடது.!? கூட்டுக் குடும்பம்ன்னு வெறும் வாய் வார்த்தை.. டீன்ஏஜ் பொண்ணை சரியா வழி நடத்த கூட தெரியாம இருந்திருக்கோம், நான் உட்பட.!" நெற்றியை தேய்த்தபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

தான் அவளை கையாண்ட முறை தவறு என்று இப்போது அவனுக்கு புரிந்தது. ஆனால் அவனுக்கும் இதன் பின்னால் இருந்த இந்த காரணம் தெரியவில்லையே. தெரிந்திருந்தால் அப்போதே இதை வேறு மாதிரி கையாண்டு இருப்பான். இப்போது எல்லாமே கை மீறி போனது போல இருந்தது.

சுப்ரியாவையும் அவளின் குழுவையும் கட்டி வைத்து உதைக்க தோன்றியது. வெறும் டீசிங் என்று எதையோ அவர்கள் சொல்லியதால்தான் இவளுக்கு இன்று இந்த நிலை என்று கடுப்பானது.

"என் புருசன்தானே நீங்க.? அந்த உரிமையில் சொல்றேன். தயவு செஞ்சி நீங்களும் என்னை சொல்லி காட்டிட்டாதிங்க. எனக்கு பிரெஸ்டே இல்லன்னு எவ்வளவு மோசமா கிண்டல் பண்ணுவாங்க தெரியுமா.? எனக்கு கோட்டோ துப்பட்டாவோ தேவையே இல்லன்னு சொல்வாங்க. நீயே ஒரு ஆம்பள. உனக்கு எதுக்கு கோட்ன்னு கேட்டு வலுக்கட்டாயமா கழட்ட பார்ப்பாங்க. ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ண போனா பாய்ஸ் யூஸ் பண்ற ரூம்க்கு போக சொல்வாங்க.. டார்ச்சரா இருக்கும் எனக்கு.." கதறாத குறையாக சொன்னாள்.

நின்றிருந்தவளின் கைப்பிடித்து தன்னருகே இழுத்தான். விடாப்பிடியாக நின்றாள். வலுவாக இழுத்தான். மேலே வந்து விழுந்தாள். அணைத்துக் கொண்டான்.

"நீ ஒரு லூசு. எங்ககிட்ட அப்பவே சொல்லி இருந்தா எல்லாமே சரியாகி இருக்கும்.." என்றவன் தன் மடி இருந்தவளின் கன்னங்களை அள்ளினான்.

"நீ பெரிய பொண்ணுதான். நீ நார்மல் கேர்ள்தான். நீ செஞ்ச எல்லா காரியத்துக்கும் நான்தான் பொறுப்பு. அதை உணர்ந்துட்டேன்.." என்றவன் அவளின் பின்னந்தலையை பற்றி தன் தோளோடு அழுத்தினான். தோளில் முகம் புதைத்துக் கொண்டவளின் முதுகை வருடி விட்டான்.

'முட்டாள் முட்டாள். அவ மனசுக்குள்ள என்ன இருக்குன்னு கூட தெரிஞ்சிக்காம சின்ன பொண்ணு சின்ன பொண்ணுன்னு சொல்லி அவளை வெறுப்பேத்திட்ட..' மானசீகமாக நெற்றியில் அறைந்துக் கொண்டான். தன்னை தன்னால் முடிந்த அளவுக்கு திட்டிக் கொண்டான்.

இப்படியொரு பிரச்சனை வராமல் இருந்திருந்தால் தனது காதலை நெஞ்சோடு வைத்துக் கொண்டு தனது வேலையை அவள் பார்த்திருப்பாள் என்றே இப்போதுதான் அவனுக்கு புரிந்தது.

இறுக்கமாக அணைத்துக் கொண்டான். லேசாக வலித்தது அவளுக்கு. அறிந்தோ அறியாமலோ அவளின் மனம் கெட்டுப் போகவும், அவள் தன் நேர்வழியிருந்து விலகி போகவும் தானும் ஒரு காரணமாகி விட்டோம் என்பதை குற்ற உணர்ச்சியோடே ஒத்துக் கொண்டான்.

"நான் அவனை கிஸ் பண்ண விட்டது தப்புதான். சாரி.." அவனின் தோளில் முனகினாள்.

"எல்லாமே என் அட்டேன்சனுக்காகதானே.?" என்றுக் கேட்டவனுக்கு அந்த கேள்வியே தாங்க முடியாத வலியை தந்தது.

"ஒருநாள் சொல்லி இருக்கலாமேடி.. நான் உன்னை விட்டிருக்க மாட்டேனே!" குரல் உடைந்துக் கேட்டான்.

"அதை பத்தி சொன்னா இதெல்லாம் மேட்டரான்னு நீங்க நினைச்சிடுவிங்களோன்னுதான் சொல்லல மாமா.." என்றவளை அவசரமாக விலக்கினான்.

"நான் ஏன்டி அப்படி நினைக்க போறேன்.? நீ மனசுக்குள்ள ஹர்ட் ஆகியிருக்க. தினம் தினம் ஸ்கூல்ல‌ பிரச்சனைகளை சந்திச்சிருக்க. அவங்க உன்னை எமோஷனலா டார்கெட் பண்ண இருக்காங்க.. நான் ஏன்டி உன்னை புரிஞ்சிக்காம போக போறேன்.?" அவளின் முகத்தை பார்க்கவே முடியவில்லை அவனால். அவளின் விழிகளில் தெரிந்த வலி அவனுக்கு ஆயிரம் மடங்காக மாறி வலியை தந்தது. அந்த முகத்தை பார்க்க முடியாமலேயே மீண்டும் அணைத்தான்.

"எங்க அம்மா அப்படிதான் சொன்னாங்க மாமா. முத நாளே‌ இந்த பிள்ளைங்க என்னை இப்படி டீஸ் பண்றாங்கம்மான்னு சொன்னேன். இதெல்லாம் ஒரு விசயம்ன்னு இங்கே எடுத்து வந்திருக்கியா, இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு போன்னு சொன்னாங்க. நானும் அவங்க சொன்ன மாதிரி இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுப் போக நினைச்சேன். ஆனா முடியல மாமா. தனியா இருக்கும்போது சுப்ரியா கேங் சொன்ன வார்த்தைகளேதான் என்னை சுத்தி சுத்தி கேட்கும்.."

இரு துளி கண்ணீர் அவனின் விழிகளில் இருந்து வழிந்தது. தன்னுடையவளுக்கு ஏன் இப்படியொரு கஷ்டம் என்று கலங்கினான். தன்னவள் என்று நினைத்ததை பற்றி யோசித்து வியந்தான்.

"எழு. வீட்டுக்கு போகலாம்.." அவளை நேரே நிறுத்தினான்.

மீண்டும் அந்த வீட்டிற்கு வர எத்தனை வருடமோ என்று சோகமாக நினைத்தபடி வெளியே நடந்தாள்.

சக்தி அமைதியாக காரை ஓட்டினான். அவ்வப்போது விழிகளின் ஓரங்களை துடைத்துக் கொண்டான்.

"என்னால பல விசயங்களை சமாளிக்க முடியல மாமா. ரொம்ப வீக்கா பீல் பண்றேன். நான் என்னை ரொம்ப வெறுக்கறேன். நீங்க என்னை வெறுப்பதை விட அதிகமா என்னை நானே வெறுத்துட்டு இருக்கேன்.." ஜன்னல் வழியே சாலையை பார்த்தபடி சொன்னாள்.

மிடறு விழுங்கினான். "நான் உன்னை வெறுக்கல கனி. என்னைக்குமே வெறுக்கல.."

சின்னதாக சிரித்தாள். அந்த கேலி சிரிப்பு அவனுக்கும் புரிந்தே இருந்தது.

வீட்டின் முன் காரை நிறுத்தியவன் "ஒருநாளாவது நான் உன்கிட்ட வெறுப்பை காட்டி இருக்கேனா.? கோபமா இருந்திருக்கேன்‌. இல்லன்னு சொல்லல. ஆனா அதை தாண்டி வெறுப்பு. எப்பவும் கிடையாது. கீர்த்தனாவை விடவும், தேன்மொழியை விடவும் உன் மேல எப்பவுமே எனக்கு பாசம் அதிகம். நீ கடைக்குட்டி. நான் உன்னை வெறுக்க காரணமே இல்ல.." என்றான்.

'நம்பிட்டேன்..' என்று நினைத்தவள் அவன் புறம் திரும்பினாள்.

"எனக்கும் வசந்துக்கும் நடுவுல இருந்த பிரச்சனை உங்களுக்கு புரிஞ்சிடுச்சா.? உங்களை வெறுப்பேத்த நான் அவன்கிட்ட செக்ஸ் வச்சிக்க மாட்டேன்னு இப்ப புரிஞ்சிக்கிட்டிங்களா.?" எனக் கேட்டவள் "இனியாவது உண்மையா வாழுங்க மாமா. நான் செய்றது எல்லாமே தப்புதான்‌. ஆனா நான் என்னைக்குமே பொய்யா பீலிங்கஸ்ல விழ மாட்டேன். நானே என் தன்மானத்துக்கு விரோதியா இருந்தாலும் கூட என் மனசுக்காவது இன்னைக்கு வரை நான் நேர்மையாதான் இருக்கேன்.." என்றாள்.

காரின் கதவை திறந்தாள். இறங்க முயன்றவளின் கையை பற்றினான். அவளின் புறங்கையில் முத்தமிட்டான்.

"இது நிஜமான பீலிங்ல தர முத்தம்.." என்றான் நிமிர்ந்துப் பார்த்து.

லேசான அதிர்ச்சியோடு கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

இருவரும் இணைந்து வீட்டுக்குள் நுழைந்தனர். அம்ருதாவையும் வளர்மதியையும் தவிர மீதி அனைவரும் ஹாலில் இருந்தனர்.

அனைவர் முகத்திலும் கோபத்தின் படிமமும், துக்கத்தின் நிழலும் தென்பட்டது.

கனிமொழி உள்ளே வந்ததும் ஓடிப் போய் அவளை அணைத்துக் கொண்டாள் தேன்மொழி.

"கனி.. நீ என்ன லூசா.? நான் என்ன ஐரோப்பாவா போயிட்டேன். என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமேடி.!" என்றாள் அழுகையோடு.

கனிமொழி பாலாஜியையும் வெற்றியையும்‌ பார்த்தாள்‌. இருவரும்‌ இப்போதுதான் பாதி நிம்மதியடைந்தது போல தென்பட்டனர்.

மொத்த குடும்பமும் அவளை விசாரித்தது. அவள் பதில் சொல்லும் முன்பு வெற்றியும பாலாஜியுமே பதில்களை சொன்னார்கள்.

கனிமொழியை நடுவில் அமர வைத்துவிட்டு அவர்களே பேசிக் கொண்டார்கள். திட்டிக் கொண்டார்கள். வருத்தப்பட்டார்கள்.

பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு காய்கறி நிரம்பிய கட்டைப் பையோடு வீட்டுக்குள் வந்தாள் வளர்மதி.

அனைவரும் அவளை குறுகுறுவென்று பார்த்தனர்.

"ஏன்.?" என்றாள் மகளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு.

"கனிமொழிக்கு ஸ்கூல்ல ஈவ்டீசிங் நடந்தபோது உன்கிட்ட வந்து சொன்னாளா.?" கனிமொழியின் தந்தை புருவம் உயர்த்திக் கேட்டார்.

"ஆமா அதுக்கென்ன.?"

"அதை ஏன் எங்ககிட்ட சொல்ல. அவளையும் சொல்ல கூடாதுன்னு சொன்ன.?" இம்முறை குரலில் சற்று கோபம் கூடியிருந்தது அவருக்கு.

"சின்ன சின்ன ஈவ்டீசிங்கை கூட தனியா சமாளிக்க முடியலன்னா அவ எப்படி ஒரு பொண்ணா இந்த சமூகத்துல வாழ்வா.? இந்த மாதிரி விசயத்தை கூட கையாள முடியலன்னா அவ செத்து போகலாமே.! ஏன் தண்டமா வாழணும்.?" என்றுக் கேட்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN