காதல் கணவன் 102

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கனிமொழி அதிர்ந்தாள். தனது மாமனை கவலையோடு பார்த்தாள். இந்த வேலையை அவன் எவ்வளவு நேசிக்கிறான் என்பதை அவளும் நன்றாகவே அறிவாள்.

"சார் நான் இந்த காலேஜ் ரூலை மீறல.." என்றான் சக்தி விரைப்பாகவே நின்று.

கல்லூரியின் முதல்வரும் மற்ற இரு பேராசிரியர்களும் இவனை கேலியாக பார்த்தனர்.

"உங்க ஸ்டூடன்டை நீங்களே மேரேஜ் பண்ணியிருக்கிங்க. ஸ்டூடன்ட்ஸை தப்பா பார்க்க கூடாது, காதலா பார்க்க கூடாதுங்கறதுதான் இங்கே ரூலே. ஆனா நீங்க செஞ்சது மன்னிக்கவே முடியாத குற்றம்.."

இல்லையென்று தலையசைத்தான் சக்தி. "இல்ல சார். இவ எனக்கு ஸ்டூடன்டாகும் முன்னாடியே எனக்கு பொண்டாட்டியா ஆகிட்டா. நான் என் ஸ்டூடன்டை லவ் பண்ணல. என் பொண்டாடியைதான் ஸ்டூடன்டா பார்த்தேன்.." என்றான்.

கனிமொழிக்கு அவனின் வாதம் சரியென தோன்றியது. 'அடடா.. என் மாமன் முத முறையா எனக்காக சப்போர்ட் பண்றாரு..' மகிழ்ந்தாள்.

"பொய் மேல பொய் சொல்லாதிங்க சக்தி.." என்ற ஒரு பேராசிரியர் இரண்டு காகிதங்களை எடுத்து அவனிடம் தந்தார்.

"அந்த பொண்ணுக்கு இந்த காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சிருக்கு. அந்த பொண்ணு இங்கே கிளாஸும் அட்டென்ட் பண்ணியிருக்கு அப்புறம்தான் உங்களுக்கு மேரேஜ் ஆகியிருக்கு. மேரேஜ் சர்டிபிகேட்டை தப்புன்னு சொல்றிங்களா.?" எனக் கேட்டார்.

சக்தி இரண்டையும் மாறி மாறிப் பார்த்தான். சர்டிபிகேட் சொல்வது உண்மைதானே.? இவள் மறுபடியும் கல்லூரிக்கு வந்ததா அவர்களுக்கு முக்கியம்.? அவள் கல்லூரிக்கு வர வேண்டும் என்பதற்காககதானே இவன் திருமணமே செய்துக் கொண்டான். அதை சொன்னால் யார் நம்புவார்கள்.

"சார்‌‌.." என்றாள் கனிமொழி.

இவள் புறம் திரும்பியது அனைவரது பார்வையும்.

"இவர் என் சொந்த அத்தை மகன்.."

"அதெல்லாம் இங்கே தேவை கிடையாது பாப்பா. ரூல்ஸ்தான் முக்கியம். மத்த காலேஜை விடவும் இந்த காலேஜ் நல்ல பேர் வாங்க காரணமே இந்த ரூல்ஸ்தான். இப்ப உங்களால அந்த ரூல்ஸ் உடையறதுல எங்களுக்கு விருப்பம் இல்ல.." என்றார் ஒருவர்.

"இல்ல சார் நான் சொல்ல வருவதை ஒரு நிமிசம் கேளுங்க.." என்றவள் தனது போனை எடுத்து புகைப்படம் ஒன்றை காட்டினாள். புகைப்படம் எடுத்த நாளும் அதில் பதிந்து இருந்தது.

"இங்கே நான் அட்மிஷன் வாங்கும் முன்னாடியே எனக்கும் என் மாமாவுக்கும் நிச்சயம் ஆகிடுச்சி சார்‌." என்று தனது பூப்புனித நன்னீராட்டு விழாவில் எடுத்த புகைப்படத்தைக் காட்டினாள். அது சக்தி அவளுக்கு மாலை அணிவித்தபோது எடுத்த புகைப்படம்.

"எங்க வீடு ரொம்ப பழங்காலம் சார். பொண்ணுங்க படிக்க போக கூடாதுன்னு சொல்றவங்க. எனக்கு காலேஜ் வர ஆசை. ஆனா எங்க வீட்டுல விடல. மேரேஜ் நடந்துட்டா நான் இவருக்கு பொண்டாட்டி ஆகிடுவேன். அப்புறம் யாரும் என் படிப்பை நிறுத்த முடியாது. அதனாலதான் அந்த கல்யாணம் ஆச்சி சார். எங்க மாமா மேல எந்த தப்பும் இல்ல. என்னை மாதிரி ஒரு ஓரவஞ்சனை குடும்பத்துல வளரும் பொண்ணுக்கு இவர் ஹெல்ப் பண்ணியிருக்காரு.." என்றாள்.

'நல்லா கதை விடுறா..' வாயை திறந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி.

பேராசிரியர்களும் முதல்வரும் யோசித்தார்கள். தங்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டார்கள்.

"சரிம்மா. நீ சொல்றதை நாங்க ஏத்துக்கறோம்.."

இருவருக்கும் நிம்மதியாக இருந்தது.

"ஆனா இங்கே ஒருத்தர்தான் இருக்க முடியும். நீங்க சரியான ரீசன் தந்த ஒரே ஒரு காரணத்துக்காக இதை பிரச்சனையா முடிக்காம உதவியாக முடிக்கிறோம். உங்க இரண்டு பேர்ல ஒருத்தர் இந்த காலேஜை விட்டு போயாகணும்.. அது யார்ன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.." என்றார் முதல்வர்.

கனிமொழியின் தன் மாமனின் முகம் பார்த்தாள்.

"நானே வேற காலேஜ் போயிடுறேன் சார்.." என்றாள்.

சக்தி அவளின் கையை பிடித்தான்.

"வேணாம் கனி.." என்றான். அவளை பற்றி இப்போதுதான் புரிந்துக் கொண்டிருந்தான். அவளுக்கு பக்குவமாக பல விசயங்களை சொல்லி தர வேண்டிய நேரம் இது. அவள் தன் அருகில் வேண்டுமென்று நினைத்தான்.

"உங்களுக்கு இன்னொரு வழியும் இருக்கு. நீங்க டைவர்ஸ் பண்ணிக்கங்க. நீங்க இரண்டு பேரும் இதே காலேஜ்ல இருக்கலாம்.." என்றார் ஒரு பேராசிரியர்.

சக்திக்கு முகம் வெளுத்துப் போனது.

கனிமொழி வேண்டாமென்று தலையசைத்தாள்.

"சரியான ரூல்ஸை வச்சிக்கிட்டு தப்பா யோசிக்கிறிங்க சார்‌. ஒரு டைவர்ஸ் பேப்பர் எங்களுக்குள்ள சன்னியாச உணர்வை தராது. ஒரு மேரேஜ் சர்டிபிகேட் எங்களுக்குள்ள காதலுக்கு மேலே உள்ள உணர்வுகளையும் தராது. அதெல்லாம் மனசு சம்பந்தப்பட்டது. கல்லூரிக்காக வெறும் பேப்பர் போதும்ன்னு நினைச்சி தப்பு பண்ணிடாதிங்க. அப்புறம் அதுவே பலருக்கும் வழி வகுத்து தந்த மாதிரி ஆகிடும். நான் இங்கிருந்து போறேன் சார்.." என்றாள்.

"நானும் ரிசைன் பண்ணிடுறேன் சார்.." என்ற சக்தியை அதிர்ச்சியோடு பார்த்தார்கள் எதிரில் இருந்தவர்கள்.

"வேணாம் மாமா‌.." என்ற கனிமொழி அங்கிருந்து வெளியே நடந்தாள்.

சக்தி முதல்வரிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தான்‌.

"நானும் ரிசைன் பண்றேன்‌.." என்றவனை இடுப்பில் கையை வைத்தபடி பார்த்தாள்.

"எதுக்கு.? இரண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கவா.? ஒழுங்கா வர இன்கம்மை ஏன் தடுக்க நினைக்கிறிங்க.? வேற எந்த காலேஜ்லயும் உங்களுக்கு இவ்வளவு சேலரி கிடைக்காது. இதுதான் உங்க கேரியருக்கு கரெக்டான காலேஜ். நீங்களும் நானும் ஒரே காலேஜ்ல இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது.." என்றவளின் தலையில் கொட்டினான்.

"அப்புறம் என்ன ***க்கு அன்னைக்கு அந்த ஆட்டம் ஆடி இதே காலேஜ்ல சேர்ந்த.?" எனக் கேட்டான் ஆத்திரத்தோடு.

"நீங்க என்னை லவ் பண்றேன்னு சொல்லி இருந்தா நான் வேற காலேஜ் போயிருப்பேனே.!" என்றாள் கையை விரித்து.

நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"யோக்கியம் மாதிரியே பேசு.." என்றான் கடுப்போடு.

"நான் யோக்கியம் மாதிரி பேசுறேன் மாமா. நீங்கதான் சரியா புரிஞ்சிக்கல. எனக்கு உங்ககிட்ட தேவையானது காதல். டீச்சிங் இல்ல. நான் இத்தனை மாசம் இங்கே படிச்சும் வேஸ்ட். நீங்க என்னை ஒரு ரொமான்ஸ் பார்வை கூட பார்க்கல. இனியும் பார்க்க மாட்டிங்க. இந்த ஸ்டிரிட் ஆபிசர் முகத்தை நான் பார்க்க வேணாம். நான் வேற காலேஜ் போறேன்.." என்றாள் முடிவாக.

அது அவளின் தியாகம் என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

"தேங்க்ஸ்.." என்றான் வீட்டிற்கு திரும்புகையில்.

"நானே வந்திருப்பேன். இன்னைக்கு ஏன் லீவ் போட்டிங்க.?" என்றாள் வருத்தமாக.

"இருக்கட்டும்.." என்றவன் வீட்டிற்கு வந்தபோது வீடு வழக்கம்போல இருந்தது. ஆனால் வளர்மதி அங்கே இருக்கவில்லை.

கனிமொழியின் அறையினில் நுழைந்தான் சக்தி.

"நீங்க உங்க ரூமுக்கு போங்க மாமா.." என்றவளை கேலியாக பார்த்தான்.

"எதுக்கு.?"

"நான் வசந்த்குமாரோடு எந்த தப்பும் செய்ய மாட்டேன்னு தெரிஞ்சது இல்லையா.? அப்புறம் என்ன.? இதுக்கு மேலயும் சும்மா தேவைக்காக எதையும் நீங்க செய்ய வேண்டியது இல்லையே.." என்றவளின் கையை பற்றி அருகே இழுத்தவன் அவள் இதழ்களில் முத்தத்தை பதித்தான்‌.

விலக்கி தள்ள முயன்றவளின் கைகளை தனது ஒற்றை கையால் பற்றினான். விலகி செல்ல முயன்றவளின் கழுத்தில் மறுகரம் பதித்தான்.

குடிபோதையில் இல்லைதான். ஆனால் அதற்கு அந்த இரவில் தந்த முத்தமே பரவாயில்லை என்றிருந்தது. பலத்தை முத்தத்தில் காட்டுவது என்ன வகை வியாதி என்று அவளுக்கு புரியவில்லை. ஆனாலும் அந்த முத்தத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ஏற்றுக் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை. அவன் என்ன நினைப்போடு தந்தால் என்ன.? தனக்கு பிடித்திருக்கிறதே என்று வெட்கமேயில்லாமல் யோசித்தது மனம்.

இதழில் ஈரத்தை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு நகர்ந்தான் சக்தி.

"இது எதுக்கு.?" என்றாள். கேட்காமல் இருக்க முடியவில்லை.

"ஏனா எனக்கு பிடிச்சிருந்தது.." என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

"முத முறையா உண்மையை ஒத்துக்கிட்டு இருக்கிங்க.." என்றவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தான்.

"அவங்களால் உனக்கு வேறு ஏதாவது உடல் ரீதியா காயம் ஏற்பட்டு இருக்கா.?" சந்தேகத்தோடு கேட்டான்.

"முத்தம் வரும்போதே யோசிச்சி இருக்கணும். போட்டு வாங்கதான் முத்தம்‌‌ லஞ்சமா.?" என்று முனகியவள் "பெருசா எதுவும் இல்ல மாமா. அப்பப்ப அறைவாங்க. கொட்டுவாங்க. எதாவது ஒரு கிளாஸ் ரூம்ல கார்னர் பண்ணி டிரெஸ்ஸை கழட்ட டிரை பண்ணுவாங்க.." என்றாள்.

பற்களை அரைத்தான்.

"ஆனா என் புண்ணியத்துக்கு ஏதாவது ஒரு டீச்சர் வந்துடுவாங்க. நான் தப்பிச்சிடுவேன்.." என்றாள் வெள்ளந்தியாக.

அணைத்துக் கொண்டான்.

"என்கிட்ட சொல்லியிருக்கலாமே.!" இந்த இரண்டு நாளில் இது பத்தாவது முறையாக சொல்லும் வார்த்தை.

"என் அம்மாவை காணல.." சோகமாக சொன்னாள் அவனின் நெஞ்சில் முகம் புதைத்தபடியே.

"வரும்போது வரட்டும் போ.. சோறுன்னு சொல்லிட்டா சோறு வந்து தட்டுல உட்காருமா.? அது போலதான் இதுவும். நீயே சமாளின்னு சொல்லிட்டா போதுமா.?" என்று கேட்டான் எரிச்சலாக.

"உங்களைதான் தப்பா பேசிட்டாங்க.. சாரி.." என்றாள்.

"பரவால்ல விடு.." என்றான். அவனிடம் கேட்க வேண்டிய கேள்வி நிறைய இருந்தது. ஆனாலும் கேட்கவில்லை அவள்.

***
மாலையில் வீடு திரும்பினான் வெற்றி. அம்ருதா வழக்கம் போல இல்லை. தலைவாரி அமர்ந்திருந்தாள். அவனுக்கு பிடித்தமான புடவையை கட்டியிருந்தாள். அவளின் முகத்தில் புன்னகை இருந்தது.

"அம்மு.." அருகே வந்தான்.

பேக்கை வைத்துவிட்டு அவளருகே அமர்ந்தான்.

"வெளியே எங்காவது போகலாமா அம்மு?" என்று கேட்டான் கனிவோடு.

வேண்டாமென தலையசைத்தாள்.

"வேணாம் வெற்றி. எனக்கு மசக்கை மயக்கமா இருக்கு. எழவே முடியல.." என்றாள் நடுங்கும் விரல்களோடு அவனின் கன்னத்தை வருடியபடி.

'ஏன் எனக்கு இப்படியொரு விதி.?' என்றவளின் விழித்திருந்த கண்களில் அவன் வர்புணர்வு செய்த காட்சி வந்து நின்றது.

அனைத்தையும் ஒதுக்கி தள்ளுவது சிரமமாக இருந்தது. ஆனாலும் அதைதான் செய்தாள். இறந்த காலத்தை மனதோடு புதைத்தாள்.

அவனின் கரங்கள் அவளின் கன்னத்தை அள்ளியது. இதழை பெருவிரலால் தீண்டினான்.

இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது அவளுக்கு. பயத்தை முகத்தில் காட்டாமல் இருக்க பெரும்பாடு பட்டாள்.

'இதுதான் உன் விதி. இவன்தான் உன் விதி. விதிக்கிட்டயிருந்து தப்பிச்சி போக ஆசைப்பட்டு எவ்வளவு தூரம் ஓடினாலும் அது வீண். விதியை ஆரம்பிச்சி வச்ச இவனே அதை முடிச்சும் வைக்கட்டும். அவனுக்கு இந்த விதியை நான் தர நினைக்கல. தண்டனையை இப்படி தர விரும்பல எல்லாமே விதி..' தன்னிடமே சொல்லிக் கொண்டாள்.

"சாரி அம்மு.." என்றான்.

புன்னகைத்தாள்.

"நான் இங்கே தொட்டு பார்க்கட்டுமா.?" அவளின் வயிற்றை சுட்டிக் காட்டி கேட்டான்.

சரியென்று தலையசைத்தாள். புடவையை நகர்த்திவிட்டு உள்ளங்கையை அவளின் வயிற்றில் வைத்தான். அவ்வளவாக எதுவும் தெரியவில்லை. ஆனால் சிலிர்ப்பு உடம்பெங்கும் ஓடியது.

குனிந்து அவளின் வயிற்றில் முத்தமிட்டான். அந்த நேரத்தில் அருகிலிருந்த பெட்சீட்டை இறுக்கி பிடித்துக் கொண்டிருந்தாள் அவள்.

"இது பாப்பாவா தம்பியா அம்மு.?"

"எனக்கு தெரியாது வெற்றி.." என்றவள் மெள்ள பின்னால் நகர்ந்து அமர்ந்தாள்.

"எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே.." என்றான் மகிழ்ச்சியோடு.

"நாளைக்கு நாம ஹாஸ்பிட்டல் போகலாமா.? இந்த மசக்கை மயக்கத்துக்கு மருந்து வாங்கி வரலாம்." அக்கறையாக சொன்னான்.

"வேணாம். எனக்கு இந்த மசக்கை மயக்கத்தை என்ஜாய் பண்ண ஆசையா இருக்கு. வாழ்க்கை முழுக்க இப்படி இல்லையே! வெறும் பத்து மாசம்தானே? அதிலேயும் நாலு மாசம் போயிடுச்சி. இன்னும் ஆறு மாசம். இருக்கட்டுமே இப்படியே!" என்றாள்.

"இருந்தாலும் எனக்கு கஷ்டமா இருக்கு நீ இப்படி இருக்கறதை பார்க்க.." என்றான் அவளின் காதோர முடிகளை ஒதுக்கி விட்டுவிட்டு.

"எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.." என்றாள்.

***

மணி இரவு ஏழை கடந்து விட்டிருந்தது. ஆரவ் தன் நண்பர்களோடு சேர்ந்து துரித உணவகம் ஒன்றில் சிக்கன் ரைஸை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தான். இந்த வார ஞாயிறில் எங்கே சுற்றுவதற்கு போகலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

ஆரவின் நண்பன் ஒருவன் ஆரவின் கையை சுரண்டினான்.

"என்னடா.?" என்றவனிடம் "தேனு வாசல்ல நிக்கறா.." என்றான்.

ஆரவ் திரும்பிப் பார்த்தான். கல்லூரிக்கு வந்தபொழுது இருந்தே இவனைதான் பார்த்துக் கொண்டிருந்தாள். இவன்தான் அவளின் புறம் திரும்பவேயில்லை.

இவ்வளவு தூரம் தொடர்ந்து வந்த காரணம் என்னவென்று புரியாமல், அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான்.

"சீக்கிரம் வாடா.." என்று கேலி செய்தார்கள் நண்பர்கள்.

பிடிக்காத காதலியாக இருந்தாலும் கூட இந்த நேரத்தில் இப்படி நொடிக்கு நான்கு வாகனங்கள் கடந்துச் செல்லும் பாதையின் ஓரத்தில் இவள் நிற்பது பாதுகாப்பாக தோன்றவில்லை அவனுக்கு. அதற்காகவே வந்தான்.

"என்னை பார்க்க வந்தியா.?" அவளருகில் வந்துக் கேட்டான்.

ஆமென்று தலையசைத்தாள்.

ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. இல்லையென்று சும்மாகவேனும் பொய் சண்டை போடுவாள் என்று எதிர்பார்த்திருந்தான்.

"என்ன.?" என்றான். அவனின் குரல் தாழ்ந்து இருந்தது.

"சாரி சொல்ல வந்தேன்.."

கனவு போல இருந்தது.

"என்கிட்டயா.?" தன் நெஞ்சில் சுட்டுவிரலை பதித்துக் கேட்டான்.

"ஆமா. நான் தப்பு செஞ்சிட்டேன். உன் அக்காவை பத்தி அப்படி பேசியிக்க கூடாது. உன்னையும் அப்படி பேசியிருக்க கூடாது. சாரி. என் தங்கச்சி சில விசயங்களை செஞ்சா. அவளோட செயல் எங்க யாருக்குமே பிடிக்கல. ஆனா அவ அப்படி செய்ய காரணம் என்னன்னு இப்பதான் தெரிஞ்சது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் இல்லையா.? அப்படி எந்த காரணமும் இல்லாம பிடிச்சவங்க மனசை யாரும் காயப்படுத்த மாட்டாங்களே! அம்ருதாவை தப்பா நினைக்க தோணல. உன் அக்கா உன்னை மாதிரிதான் நல்லவளா இருப்பான்னு இன்னைக்கு தோணுது. இவ்வளவு நாளும் நான் பேசிய எல்லாத்துக்கும் மன்னிச்சிடு. என்னை மாதிரி ஒரு ஆளுக்கு காதலெல்லாம் ஓவர்தான். எதையும் எதிர்பார்க்க.." அவள் பேசிக் கொண்டிருந்த வேளையில் அவளின் கையை பற்றி புறங்கையில் தனது உதடு பதித்தான் ஆரவ்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN