காதல் கணவன் 105

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"கனிமொழி காணாம போயிட்டாளாம்.." தன் அண்ணியிடம் சொன்னாள் அர்ச்சனா.

பரிதவிப்பும் பதட்டமும் அப்பட்டமாக தெரிந்தது வளர்மதியின் கண்களில்.

"எங்கேயாவது பிரெண்ட் வீட்டுக்கு போயிருப்பா.." என்றவளை முறைத்தாள் அவள்.

விசயம் நன்றாக மண்டையில் இறங்கியது வளர்மதிக்கு. கனிமொழியின் உருவம் கண் முன் வந்துப் போனது.

"ஐயோ என் புள்ளை.. இந்த மனுசனை நம்பிதானே விட்டுட்டு வந்தேன்.? என் புள்ளையை ஒழுங்கா பார்த்துக்காம எவ பின்னால போனானோ.?" வசவு பாடியபடி எழுந்து வெளியே ஓடினாள்.

அர்ச்சனா அதிர்ச்சியோடு வாயை பொத்தினாள். "கடைசியில எங்க அண்ணன் மேல பழியை போட்டுட்டா.." புலம்பிக் கொண்டு பின்னால் நடந்தாள்.

அதே வேளையில் அவளுக்கு சக்தி அழைத்தான். எடுத்து பேசினாள்.

"அம்மா கனியை பார்த்திங்களா.?"

"இல்லடா.. எங்கே இருந்தாலும் பத்திரமா இருப்பா.." என்றாள் இவள்.

"இல்லம்மா ரொம்ப பயமா இருக்கு. ஹார்ட்டெல்லாம் ஒரு மாதிரி துடிக்குது. இந்த மாதிரி வேர்த்ததே இல்ல. ரொம்ப ரொம்ப பயம். நிற்க கூட முடியலம்மா.."

அர்ச்சனாவிற்கே அப்படிதான் இருந்தது. இதில் கணவன் அவன். அவனுக்கு இப்படி இருப்பதில் என்ன ஆச்சரியம் என்று நினைத்தாள்.

"கடவுள் துணை இருக்கு. பயப்படாதடா.‌ அவ எங்கே இருக்கான்னு பார்த்துட்டு எனக்கு சொல்லு.."

சக்தி அழைப்பை துண்டித்துக் கொண்டான்.

***

பாரதியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.‌ ஊரிலிருந்து அவளின் அப்பா வந்திருந்தார்.

"என் பொண்ணை உங்களை நம்பி அனுப்பினேன்.." என்று நடு கூடத்தில் நின்றுக் கத்தினார் அவளின் அப்பா.

"நான் எதுவும் செய்யல மாமா. எனக்கு ஆக்ஸிடென்டான சேதி கேட்டு கையை அறுத்துக்கிட்டா.. என் வலி எனக்குதானே.? என்னவோ இவளுக்கே வலிக்கற மாதிரி சீனை போட்டு கையை கட் பண்ணி வச்சிருக்கா.." என்றான் நரேஷ் தோள்களை குலுக்கியபடி.

பாரதி இதை எதிர்பார்க்கவேயில்லை. 'அடப்பாவி. என்னடா தோசையை திருப்பி போடுவன்னு பார்த்தா தோசை கல்லையே திருப்பிப் போட்டிருக்க..'

"என்னம்மா பொண்ணு நீ.? அப்படியே உங்க அம்மாவை மாதிரியே இருக்க. மோட்டர்ல நான் ஒருமுறை கையை தந்துட்டேன்னு அவ கையை சுட்டுக்கிட்டா. கேட்டதுக்கு உங்க வலியை நானும் உணரணும்ன்னு சொன்னா.. நீங்களெல்லாம் என்ன ஜென்மமோ.? அடிப்பட்டவங்க அவங்க வலியையே பார்ப்பாங்களா.? இல்ல உங்களை பார்ப்பாங்களா.?" என்று அதற்கும் பிடித்து கத்தினார்.

நரேஷ்க்கு தன் மாமியாரை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. 'கொஞ்சம் சைக்கோ பேமிலிதான் போல..' என்று நினைத்தான்.

"நீங்க இவளை கொஞ்ச நாளைக்கு ஊருக்கு கூட்டிப் போங்க மாமா. நான் ஆறேழு மாசம் கழிச்சி வந்து கூட்டிக்கிறேன்.." நரேஷ் சொன்னதும் அவனை முறைத்தாள் பாரதி.

"நானெல்லாம் ஊருக்கு போக மாட்டேன்.." என்றாள் அவசரமாக.

"அட கழுதை.. உன் கிறுக்குதனத்துக்கு அளவு இல்லாம போயிட்டு இருக்கு. ஊருக்கு போகலாம் வா. கருப்பன் கோவில்ல மந்திரிச்சி கட்டிக்கிட்டு வரலாம்.." என்று அழைத்தார் அப்பா.

எழுந்து நின்றாள்.

"நான் வர மாட்டேன்.." என்றவள் தனது படுக்கையறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

அப்பாவும் மாமியாரும் பாரதி சாத்திய கதவை பார்த்துவிட்டு விசயத்தை புரிந்துக் கொண்டனர்.

"முடியாதுன்னு சொல்றா.." என்றார் அப்பா.

"கல்யாணமாகி இன்னும் முழுசா ஆறு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள எதுக்கு பிரிச்சிக்கிட்டு.? இவன் கிடக்கறான். நீங்க எதையும் மனசுல வச்சிக்காதிங்க சம்பந்தி. அவளுக்கு தோணும்போது வரட்டும்.." என்று மருமகளுக்கு ஆதரவாக சொன்னாள் ரத்னாம்பிகை.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்து நழுவினான் நரேஷ்.

"பாரதி.." படுக்கையறை கதவை ஓசையில்லாமல் தட்டினான்.

பாரதிக்கு வலித்தது.

"நான் ஊருக்கு போக மாட்டேன்.." என்றாள்.

"நீ முதல்ல கதவை திற.."

"மாட்டேன் போ.."

"இப்ப நீ கதவை திறக்கலன்னா நான் கதவை உடைப்பேன்.." என்றான் சிறு குரலில்.

"நீ என்னை ஊருக்கு அனுப்ப மாட்டேன்னு முதல்ல சொல்லு.." என்றாள் பிடிவாதமாக.

"நீ கதவை திற. நான் ப்ராமிஸ் பண்றேன்.."

"பேச்சு மாற கூடாது.."

"மாட்டேன்.."

கதவு மெள்ள திறந்தாள். உள்ளே வந்தான். கதவை தாழிட்டான்.

அழுத விழிகளோடு இருந்தவளை இடது கையால் இழுத்து அருகில் நிறுத்தினான்.

"ஏன் போக பிடிக்கல.?" அவளின் கண்களை நேராக பார்த்துக் கேட்டான்.

"உனக்கு என்னை பிடிக்கலையா நரேஷ்.? எதுக்கு என்னை வெறுத்து ஒதுக்குற.?" கலங்கும் விழிகளோடு கேட்டாள். ஓடி வந்து குதித்த ஒற்றை துளியை இடது கை சுட்டுவிரலால் துடைத்தான்.

"எனக்கு ரொம்ப பிடிக்கும் பாரதி. உனக்குதான் என்னை பிடிக்காது.."

மிடறு விழுங்கியவள் "பொய் சொல்ற.. நீ எப்பவும் என்னை ரதின்னுதானே கூப்பிடுவ.? ஏன் இப்ப மட்டும் பாரதின்னு கூப்பிடுற.? உனக்கு என்னை பிடிக்கலன்னுதானே அர்த்தம்.?" எனக் கேட்டாள்.

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு குழந்தையா இவள் என்று அவளின் முகத்தை உற்று உற்றுப் பார்த்தான்.

இடது கையை அவளின் கன்னத்தில் பதித்தான்.

"உன்னை ரொம்ப ஈசியா கவுத்து இருக்கலாம். டிரையே பண்ணாம தோல்வியை ஒத்துக்கிட்டதுக்கு நல்லா அனுபவிச்சிட்டேன். என்னை மன்னிச்சி ஏத்துக்கிறியா.? என் லவ்வை இப்பவாவது ஏத்துக்கிறியா.? உன்னை ரொம்ப லவ் பண்றேன் ரதி.." என்றான் காதலோடு அவளின் முகத்தைப் பார்த்து.

அவனின் பார்வையே அவளின் வெட்கத்தை பிடுங்கி கொண்டது.

"லவ் பண்றேன்னு சொன்னா என்னை ஊருக்கு அனுப்பாம இருப்பியா.?" ஏக்கமாக கேட்டாள்.

அவள் அறுத்துக் கொண்ட கையை மேலே தூக்கினான்.

"நீ என்னை லவ் பண்றங்கறதுக்கு இதுவே சாட்சி ரதி. ஆனா எனக்கு வார்த்தைகள் வேணும். உன் வாயிலிருந்து வரணும் அவை."

"பிடிச்சிருக்கு நரேஷ்.." என்றாள் பார்வையை தாழ்த்தியபடி. அவளின் சிவந்த கன்னங்களில் இரண்டு முத்தங்களை மாறி மாறி தந்தான்.

ஒற்றை கையால் அணைத்துக் கொண்டான். 'இந்த வார்த்தையை வாங்க எவ்வளவு போராட்டம்.?'

அண்ணாந்துப் பார்த்தாள். "உனக்கு நிஜமா என்னை பிடிச்சிருக்கா.?" என்றாள்.

"விடிய‌ விடிய மகாபாரதம் கேட்டும் கர்ணனுக்கு மாமனாரு துரியோதனன்னு சொன்ன மாதிரி இருக்கு.."

"அப்ப ஏன் கிஸ் பண்ண மாட்டேங்கிற.?"

"அடிப்பாவி.." என்றவன் 'இது வேற மாதிரி ஸ்பீடா இருக்கே.!' என்று நினைத்தபடி அவளின் இதழில் தன்னிதழ்களை பொருத்தினான். ஏதேதோ ஆசைகள் தோன்றியது. என்னன்னவோ உணர்வுகள் உருவானது. ஆனால் இருவருக்குமே கைகளில் இருந்த வலி மறந்துப் போனது. இது மட்டும் உண்மை.

***

கனிமொழி கண்களை திறந்தபோது அந்த இடத்தை எங்கோ பார்த்தது போலிருந்தது. அதே மணல். அதே வீடு. அந்த வீட்டின் கட்டுமானம் பல மாதங்கள் ஆகியும் தொடராமல் இருந்ததை புரிந்துக் கொள்ள முடிந்தது.

மணலின் மீது படுத்து கிடந்தவள் எழுந்து அமர்ந்தாள். உடம்பு குளிர்ந்தது. தன்னை தானே அணைத்துக் கொள்ள முயன்றவள் தனது மேனியை பார்த்துவிட்டு அதிர்ந்தாள். உடம்பில் ஒட்டு துணி இருக்கவில்லை.

பயத்தோடு பின்னால் நகர்ந்து அமர்ந்தாள். உடம்பெங்கும் மணல் துகள்கள் ஒட்டிக் கொண்டிருந்தது.

இடம் முக்கால் இருளில் மூழ்கியிருந்தது. அது ஒன்றுதான் அங்கே ஒரே உருப்படியான விசயமாக இருந்தது.

***

இருளாக கிடந்தது சாலை. காவல் நிலையத்தில் புகாரை தந்துவிட்டு வெளியே வந்தார் கனிமொழியின் தந்தை.

வெளியே வந்தவரின் சட்டையை பற்றியது ஒரு கரம். எதிரில் பார்த்தார். அவரின் மனையாட்டிதான் நின்றுக் கொண்டிருந்தாள். அருகில் நின்றிருந்தாள் அர்ச்சனா.

"என் புள்ளை எங்கே.?" என்றாள் கோபமும் அழுகையுமாக.

அவளின் கையை தட்டி விட்டார்.

"நான் மட்டும் பாக்கெட்டுல வச்சிக்கிட்டா அவளை தேடுறேன்.? என் புள்ளை எங்கே போச்சின்னு தெரியாம பயந்து கிடக்கிறேன். வந்துட்டா பெரிய இவளாட்டம்.! உன்னை யாரு இங்கே வர சொன்னது.? அதுதான் என் புள்ளைக்கு தாய் இல்ல எனக்கு பொண்டாட்டி இல்லன்னு தாலியை கழட்டி கொடுத்துட்டு போயிட்ட இல்ல.? இப்ப என்ன இங்கே *** ***** வேலை.?" எனக் கேட்டார் கோபத்தோடு.

"ஏற்கனவே பாப்பாவை காணமேன்னு இருக்கோம். இதுக்கு இடையில நீங்களும் சண்டை போடாதிங்க.." இடையில் புகுந்து சொன்னான் வெற்றி.

"என் புள்ளை எனக்கு இப்பவே இங்கே வரணும்.." பேய் பிடித்தது போல கத்தினாள் வளர்மதி.

"அவளை எப்பவும் ஹராஸ் பண்றவங்களும் காணாம போயிட்டாங்களாம். நீ பண்ண புண்ணியத்துலதான் என் புள்ளை இன்னைக்கு காணாம போயிருக்கு. காணா பொணமா போகாம கைக்கு கிடைச்சான்னு கூட்டி வரேன்.." என்ற கனியின் தந்தை மனைவியை ஓரம் தள்ளிவிட்டு கடந்து போனார்.

"என் புள்ளை.." அழுத வளர்மதியின் தோளை பற்றினாள் அர்ச்சனா.

"நாம வீட்டுக்கு போகலாம் அண்ணி. எல்லாரும் தேட போயிருக்காங்க. பாப்பா கிடைச்சிடுவா.." என்று சமாதானம் சொன்னாள். ஆனால் அழுகை நிற்கவேயில்லை வளர்மதிக்கு. தினம் செய்தித்தாள்களில் பார்க்கும் விசயங்கள் கண் முன் வந்துப் போனது.

'புள்ளை பத்திரமா வந்து சேரணும்..' மனதுக்குள் கெஞ்சினாள்.

"நானேதான் தப்பு பண்ணிட்டேன். அவ என்னை மாதிரி இருப்பான்னு நினைச்சிட்டேன்.." தலையில் அடித்துக் கொண்டாள்.

"ஐயோ கடைசி கடைசியா என் புள்ளையை தொட்டாஞ்சிணுங்கின்ற விசயம் கூட தெரிஞ்சிக்காம இருந்திருக்கேனே.." அழுதவளை இழுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினாள் அர்ச்சனா.

***

உடம்பு மொத்தமும் நடுங்கியது கனிமொழிக்கு. இதயம் அடித்துக் கொண்டது. கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது. காதில் இருந்த தோடு காணாமல் போயிருந்தது. சந்தேகத்தோடு கழுத்தை தடவிப் பார்த்தாள். தாலியையும் காணவில்லை.

முட்டிக்காலோடு முகத்தை புதைத்து அமர்ந்து அழுதாள்.

'எவ்வளவு நேரம் இப்படி அழ போற.? எழுந்து தேடினா ஒரு கோணி சாக்காவது கிடைக்கும்..' மனசாட்சி மெள்ள தைரியம் சொன்னது.

கண்ணீரோடு எழுந்து நின்றாள். இருட்டில் எதிரில் ஆட்கள் நிற்பது போலவே உணர்வு இருந்தது. அழுகை மேலும் பொத்துக் கொண்டு வந்தது. எந்த பக்கம் திரும்புவது என்று தெரியாமல் பின்னால் திரும்பினாள். லேசாக வெளிச்சம் தெரிந்தது. எச்சிலை விழுங்கியபடி ஓரடி முன்னால் எடுத்து வைத்தாள்.

திடீரென்று விளக்குகள் பல பளிச்சிட்டது. எதிரில் கேமராவோடு நால்வர் நின்றிருந்தனர்.

***

சக்தி நடுங்கும் கரங்களோடு காரில் அமர்ந்திருந்தான். ஆள் அரவமற்ற சாலை. இப்போதுதான் ரத்னாவின் வீட்டிற்கு சென்று விசாரித்துவிட்டு வந்தான். அவளையும் காணவில்லை. கனிமொழியின் எதிரிகள் நால்வருமே வீட்டில் இல்லை.

"இவ்வளவு தூரம் போவாங்கன்னு யோசிக்காம போயிட்டானே.!" வறண்டிருந்தது தொண்டை. தண்ணீரை எடுத்துக் குடித்தான்.

"ஐயோ பேய்.." மின்சாரம் இல்லாத ஒருநாள் இரவில் வீட்டின் மொட்டை மாடியில் அவள் பயத்தோடு தன்னை தேடி அணைத்தது நினைவிற்கு வந்தது அவனுக்கு. சுற்றியிருந்த இருளே அதிக பயத்தை தந்தது. இது போன்ற இரவில்தான் பெரும்பாலான தவறுகள் நடக்கும் என்ற விசயம் புரிந்ததில் மேலும் பயந்து போனான்.

'கனி.. பாப்பா.. பத்திரமா இருடா.. நான் சீக்கிரம் வரேன். உனக்கு ஒன்னும் ஆகாது..' காரை எடுத்தான். அப்படியே நிறுத்தினான்.

முகத்தை பொத்தியபடி ஸ்டியரிங் வீலில் சாய்ந்தான். 'பயமா இருக்கு கனி. உனக்கு ஒன்னுன்னா என்னால தாங்கவே முடியாது கனி.. என் உயிரே நீதான் கனி..' கண்ணீரால் உள்ளங்கைகள் ஈரமானது.

'தங்கபிள்ளை.. எல்லாம் தெரிஞ்சிருந்தும் இவ்வளவு அசால்டா விட்டுட்டேனே!' நெற்றியில் அறைந்துக் கொண்டான். இத்தோடு எழுபத்தியெட்டாவது முறையாக அறைந்திருப்பான்.

எங்கு இருக்கிறாளோ? எப்படி, எந்த நிலையில் இருக்கிறாளோ? அவன் இதயம் ஒருவித வேதனையில் சுழன்றுக் கொண்டிருந்தது.

கைபேசி ஒலித்தது. கனிமொழியோ என்று நினைத்து எடுத்தான். பாலாஜி அழைத்திருந்தான்.

"பாலா அவ கிடைச்சிட்டாளா.?" அவசரமாக கேட்டான்.

"இல்ல சக்தி. அதை கேட்கத்தான் நான் உனக்கு போன் பண்ணேன். நாங்க இப்பதான் போலிஸ்ல கம்ப்ளைன்ட் தந்துட்டு வெளியே வந்தோம். பாப்பாவை நீ முதல்ல பார்த்துட்டன்னா உடனே எனக்கு போன் பண்ணு. என்னவோ தப்பா நடக்க போற மாதிரியே மனசு பதறுது எனக்கு.."

அவன் சொன்னதில் மேலும் உடைந்தான் இவன்.

"அவளுக்கும் அவங்களுக்கும் சம்பந்தப்பட்ட இடமெல்லாம் என்னன்னென்னு உனக்கு தெரியுமா?" தன்னைதானே தேற்றிக் கொண்டு கேட்டான்.

"அவ்வளவா தெரியாது சக்தி. அவளோட பழைய ஸ்கூலுக்கு ஒருமுறை போய்ட்டு வந்துடுறியா.?"

"ம்ம்." என்றவன் உடனடியாக அழைப்பை துண்டித்து விட்டு காரை எடுத்தான். பரவிக் கொண்டிருந்த இருளிலிருந்து தனது உயிர் மட்டும் தன்னிடம் வந்து சேர்ந்து விட்டால் போதுமென்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே போனான்.

***

அவமானம்தான் முதலில் வந்து தீண்டியது கனிமொழிக்கு. நெஞ்சை மறைத்துக் கொண்டாள். ஆனால் எதுவும் முழுதாக மறையவில்லை. மீண்டும் மண்டியிட்டு விட்டாள். தன்னைதானே குறுக்கிக் கொண்டு அமர்ந்தாள். முகம் முழுக்க கண்ணீர்.

"அவ்வளவு மானம் உள்ளவளா நீ.? ஹவ் க்யூட்.?" என்றாள் மேனகா.

மேனகாவின் இருபுறமும் நின்றிருந்தனர் சுப்ரியாவும் ரத்னாவும். வசந்த்குமார் ஒருபுறம் நின்றிருந்தான். அவனிடம்தான் சட்டகத்தில் பொருத்தப்பட்ட வீடியோ கேமரா இருந்தது. கேமராவில் கண்களை பதித்து இருந்தான். சுப்ரியா தனது போனை எடுத்தாள். எதிரில் இருந்தவளை புகைப்படம் எடுத்தாள்.

"உன்னை நான் எவ்வளவு ஈசியா நினைச்சிட்டேன். என்கிட்டயே விளையாடுற நீ.!? உன்னை இன்னைக்கு உயிரோடு இங்கிருந்து அனுப்ப போறது இல்ல கனிமொழி.. ஓ.. சாரி சாரி.. மிஸஸ் சக்தி.." என்றாள் கிண்டலாக.

"அவனையா கல்யாணம் பண்ணியிருக்கா.?" ரத்னா அதிசயித்தாள்.

"என் கழுத்தை நெரிச்சவன் அவன்தான்.." என்று கழுத்தை தடவினாள்.

"விடு விடு.. எல்லாத்துக்கும் சேர்த்து இவளை இன்னைக்கு வச்சி செஞ்சிடலாம்.." என்றாள் சுப்ரியா.

சிரித்தார்கள் ரத்னாவும் மேனகாவும்.

"நீங்க நிஜமா பொண்ணுங்கதானா.? எப்படி உங்களுக்கு மனசு வருது.?" என்று அழுதாள் கனிமொழி.

"பொண்ணுதான். உன்னை விடவும் நான் பொண்ணுதான்.. பார்க்கறியா.?" என்ற சுப்ரியா மேலாடையை கழட்டினாள்.

"பார்த்துக்கிட்டியா.? உன்னை மாதிரி அரை குறை இல்ல நான்.." என்றாள்.

கனிமொழியை எப்போதும் பீடிக்கும் தாழ்வு மனப்பான்மை அவளையும் தாண்டி வந்து பிடித்தது. நெஞ்சில் வலித்தது.

'முடியல..' அழுதாள்.‌

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN