காதல் கணவன் 106

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுப்ரியா ஏளன சிரிப்போடு கனிமொழியை நெருங்கினாள்.

"உன்னை மாதிரி ஒரு ஆண் மரத்துக்கு அவ்வளவு அழகான புருசன் தேவையா.? உன் உடம்பை முழுசா பார்த்தியா.? அவ்வளவு கேவலம்.! நீயெல்லாம் என்ன நம்பிக்கையில் இங்கே வாழுற.?" என்றுக் கேட்டாள்.

கனிமொழி தலையே நிமிரவில்லை. அழுகை கொஞ்சமும் நிற்கவில்லை.

"உனக்காக நாங்க கஷ்டப்பட்டு கேமராவெல்லாம் திருடிட்டு வந்திருக்கோம். இப்படி தலை குனிஞ்சி இருந்தா எப்படி.?" எனக் கேட்ட ரத்னா முன்னால் வந்தாள். கனிமொழியின் சிகையை பற்றினாள்.‌ அவளை தூக்கி நிறுத்த முயன்றாள்.

"என்னை விட்டுடு ரத்னா.!" கெஞ்சினாள்.

"அன்னைக்கு விட சொன்னேனே! உன் புருசன் என்னை விட்டானா.?" இவள் திருப்பிக் கேட்டாள்.

விம்மியவள் "உனக்கு என் மாமன் மேலதானே கோபம்.? நீ அவர்கிட்ட நேரா மோத வேண்டியதுதானே.?" என்றுக் கேட்டாள்.

நகைத்தனர் அனைவரும்.

"அவனுக்கு எதிராதான் இங்கே நடக்குது. நீ செத்தா அவன் உடைவான் இல்ல.? உனக்கு ஒரு அறை தந்தா கூட அவனால தாங்க முடியாது. அப்படின்னா இப்ப நீ செத்தா உடனே அவனும் சேர்ந்து சாவானான்னு பார்ப்போம்.." என்று நகைத்தாள் ரத்னா.

"கேமராவை இந்த ஆங்கிள்ல வை வசந்த்.." சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தபடி சொன்னாள் மேனகா.

அவள் சொன்ன இடத்தில் கேமராவை வைத்தான் வசந்த்குமார். மேனகாவிடமிருந்த சிகரெட்டை பிடுங்கி தன் வாயில் வைத்தாள் சுப்ரியா. மேல் சட்டையை அணிந்துக் கொண்டாள். ஆனால் பட்டன்களை போடவில்லை.

கேமராவிலிருந்து சத்தம் வந்துக் கொண்டே இருந்தது.

"இப்படி என்னை சித்திரவதை செய்றதுக்கு பதிலா ஒரேடியா கொன்னுடுங்க.." அழுகையோடு கெஞ்சினாள்.

"ஹஹஹா.." நால்வரும் கூட்டணி சேர்ந்து சிரித்தனர்.

"கொல்லதான் போறோம்.!" சுப்ரியா புகையை விட்டுக் கொண்டு முன்னால் வந்தாள்.

"அங்கே பாரு.." கனிமொழியின் பின்னங்கழுத்தை பற்றியவள் அவளுக்கு இடது பக்கம் காட்டினாள். பெட்ரோல் கேன் இருந்தது.

"நீ சாக போற கனி.." என்றவள் அவளின் தலையை வலதுபுறம் திருப்பினாள்.

"அங்கே பார்த்தியா.? பேக்ஸ்.. உன்னை கொன்னு இதே இடத்துல புதைச்சிட்டு நாங்க எல்லோரும் இங்கிருந்து போக போறோம். வெளியூர். சீக்கிரமே வெளிநாடும்.! ச்சொய்ங்ங்.. இங்கே ரொம்ப போரடிக்குது. டெய்லி படிக்கணும். வீட்டுலயும் படிக்கணும். பணம் கேட்டா எங்க வீட்டுல ஆயிரம் புலம்பல் புலம்பிட்டு தராங்க. அதே போல நாங்களும் புலம்ப விரும்பல. வீ வான்ட் லக்சரி லைஃப்.. அதை நாங்களே உருவாக்க போறோம்.." என்றாள்.

அதை அவர்கள் தவறான பாதையில்தான் உருவாக்குவார்கள் என்று அறிவாள் கனிமொழி.

"இங்கிருந்து போகும் முன்னாடி உன்னை பழி வாங்கிட்டா எங்களுக்கு திருப்தியா இருக்கும். வாழ்க்கையில நாங்க நிறைய சாதிக்க போறோம். அப்பவெல்லாம் நாங்க நினைச்சிப்போம். எங்களோட முதல் வெற்றி நீதான்னு.!" புகையை விட்டபடி சொன்னாள் மேனகா.

கனிமொழி இவர்கள் சொன்னதை காதில் வாங்கியபடியே பெட்ரோல் கேனை வெறித்துக் கொண்டிருந்தாள்.

"சாக போறேன்.!" என்று முனகினாள். கண்ணீர் புதிதாக உற்பத்தியானது. மொத்த குடும்பத்தையும் நினைத்துப் பார்த்தாள்.

'நாளை இந்த புகைப்படம் அனைவரின் கைபேசிக்கும் செல்லும். அனைவரும் தன்னால் அவமானமடைவார்கள். அவர்களால் வெளியே தலைகாட்ட முடியாது. பெரிய பாட்டி வருவாள். பாட்டியை பார்த்து சிரிப்பாள். அம்மா திட்டுவாள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவில் மீண்டும் சண்டை‌ வரும். வெற்றியும் பாலாஜியும் வங்கிக்கு சென்றால் அங்கே உள்ளவர்கள் நகைப்பார்கள். கீர்த்தனா டெய்லரிங் கிளாஸ் போக முடியாது. தேனு காலேஜ் போக முடியாது. கதிரேசன் மாமா ஸ்கூலுக்கு போக முடியாது. பாவம் சக்தி மாமன். எல்லாரும் அவரை பார்த்துதான் ரொம்ப சிரிப்பாங்க.. இவன் பொண்டாட்டிதான் இதுன்னு சொல்வாங்க.!' மனதுக்குள் ராக்கெட் வேகத்தில் கவலை மட்டும் பெருகியது.

மரணம் உறுதியாகிவிட்டது. அழுகை இப்போது கொஞ்சம் மட்டுப்பட்டது.‌ உயிரை விட மானம் பெரிதென்று நம்ப வைத்த சமூகம் அவளையும் அதே போல மாற்றி வைத்திருந்தது.

பெட்ரோல் கேனிலிருந்த கண்களை எடுக்கவேயில்லை.

எழுந்து நின்றாள்.

"வாவ்.. நம்ம கனிமொழி எழுந்துட்டா.. இனி ஃபேஷன் ஷோ களை கட்டப் போகுது.." கைகளை தட்டினாள் மேனகா.

"கேட் வாக் போ கனி.. வீ வான்ட் யுவர் லாஸ்ட் கியூட் பெர்பாமன்ஸ்.." உற்சாகப்படுத்தினாள் சுப்ரியா.

"எனக்கு ஒரு சிகரெட் கொடு.." வசந்த்குமார் கையை நீட்டினான். மேனகா எடுத்து‌ தந்தாள்.

கனிமொழி கண்களை துடைத்தாள்.

"எக்ஸாக்ட்லி.. சிரிச்ச முகமா போஸ் கொடு!" வசந்த்குமார் கேலியாக சொன்னான்.

தனது மேனியை பார்த்தாள். சுப்ரியாவுடையது போன்று இளமை திரண்டிருக்கவில்லை. தான் இன்னமும் வளர்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவாள் அவளும். நெஞ்சை மறைத்துக் கொண்டிருந்த கரங்களை விலக்கினாள்.

இடுப்புக்கு கீழே மறந்தும் பார்வையை கொண்டு செல்லவில்லை.

பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டாள். 'சாவு உறுதி கனி. செத்துடு. தப்பு கிடையாது. ஆனா சாகும் முன்னாடி இவங்களையும் கொன்னுட்டு செத்துடு. எந்த போலிஸ் கேஸும் இல்ல. அந்த கேமராவை உடைச்சிட்டா உன் நியூட் போட்டோவும் வெளியே போகாது. இவங்களை கொன்னுட்டா இவங்களும் வெளியூர் வெளிநாடுன்னு போய் உன்னை போல ஏமாந்த யாரையாவது சாகடிப்பாங்க இருப்பாங்க..' என்று மனதுக்குள் முடிவெடுத்தாள். மரணத்தின் கடைசி விளிம்பில் வர கூடிய தைரியம் அவளே எதிர்பார்க்காத அளவிற்குதான் இருந்தது.

உயிரும் மானமும் போகும் முன் இவர்களுக்கு சமாதி கட்ட நினைத்தாள்.

***

கனிமொழியின் பள்ளியில் சுற்றி தேடினான் சக்தி. வாசலில் இருந்த வாட்ச்மேன் இவனை உள்ளே விடவில்லை.‌ ஆனால் இவன் பின்பக்கம் சுவரை எகிறி குதித்து உள்ளே வந்து விட்டான். அங்கிருந்த இடங்களை தேடினான். கீழே இருந்த வண்ணம் எந்த அறையாவது திறந்திருக்கிறதா, சிறு வெளிச்சமாவது வந்திருக்கறதா என்று தேடினான்.

சுற்றி சுற்றி தேடியும் அங்கே எதுவும் உருப்படியாக கிடைக்கவில்லை. சோர்வோடு வெளியே நடந்தான்.

அவளின் உடம்பிலிருந்த பைப்பின் காய தழும்புகள் வேறு அடிக்கடி மனதில் வந்து உறுத்திக் கொண்டிருந்தது. அதே போல மீண்டும் அடிப்பார்களோ என்று பயமாக இருந்தது.‌ அந்த கிராபிக் புகைப்படம் போல நிஜத்தில் செய்வார்களோ என்று கலங்கியது மனம். படபடக்கும் இதயத்தோடு எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை. தன்னை நகர்த்துவதற்கு சிரமப்பட்டான்.

***

சுற்றும் முற்றும் பார்த்தாள் கனிமொழி. எதுவுமே கிடைக்கவில்லை. அங்கிருந்த ஒரே ஆயுதம் கேமரா ஸ்டேன்ட் மட்டும்தான். அதை கைப்பற்றி விட்டால் இவர்களுக்கு சுலபமாக சமாதி கட்டி விடலாம் என்று புரிந்தது.

எப்படியும் சாக போறோம் என்ற வார்த்தைகளை நொடிக்கு நூறு முறை சொல்லிக் கொண்டே கேமராவை நெருங்கினாள்.

"போஸ் வேணுமா.? இப்படி சிரிச்சா போஸ் நல்லா வருமா?" திகில் சிரிப்போடு கேமராவின் முன்னால் நின்று பற்களை காட்டினாள்.

"சாகும் முன்னாடி விளையாடி பார்க்க நினைச்சிட்டா போல.." நகைத்தாள் ரத்னா.

கேமராவின் ஸ்டேன்டை பற்றினாள் கனிமொழி. அதே நேரத்தில் அவர்களும் உசாராகி விட்டனர். அவளை தூர தள்ள முயன்றான் வசந்த்குமார். அவள் ஸ்டேன்டை விடவேயில்லை.

மேனகா அருகில் வந்து கனிமொழியின் முதுகில் உதைத்தாள். "அம்மா.." வலியோடு கத்தினாள். ஆனால் ஸ்டேன்டை விடவில்லை.

"என்னடி ப்ளான் பண்றியா.?" சுப்ரியா நெருங்கி வந்து அவளின் முடியை பற்றி‌ ஆட்டினாள். தலையிலிருக்கும் மொத்த முடிகளையும் பிய்த்து விடுபவள் போல இழுத்தாள். வலியில் துடித்தாள் கனிமொழி. கண்ணீர் சரம் சரமாக இறங்கியது. மூச்சு விடுவதில் சிக்கல் உண்டானது போல இருந்தது. ஸ்டேன்டை பிடித்து இழுத்தாள். கேமராவோடு சேர்ந்து அவள் கை சேர்ந்தது ஸ்டேன்ட்.

கேமராவை தரையில் உடைக்க முடியவில்லை அவளால். ஒரு பக்கம் உதை, ஒரு பக்கம் முடியின் இழுவை.. சமாளிக்க முடியவில்லை. கேமராவை உடைக்க ஒரே வழி எதிரே இருந்தவன்தான்.

யோசிக்கவேயில்லை கனிமொழி. வசந்த்குமாரின் இடுப்பில் கேமராவை அடித்தாள். கேமரா உடையவில்லை. ஆனால் வசந்த்குமார் விசயத்தை யூகித்து விட்டான்.

***

சக்தி அந்த பள்ளியை விட்டு நகர்ந்தான். அங்கிருந்த சாலையில் காரை ஓட்டினான். வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தவன் கைபேசி ஒலிக்கவும் காரை மெதுவாக இயக்க ஆரம்பித்தான். அவனின் நண்பன் அழைத்திருந்தான்.

வெகுநேரமாக இந்த அழைப்புக்கு காத்திருந்தான் சக்தி. அவனின் பள்ளிக்கால நண்பன். இப்போது தனியார் நிறுவனம் ஒன்றில் இணையதள ஹேக்கிங்கை மீட்டு‌தரும் வேலை செய்து வருகிறான்.

"ஹலோ.." என்றான் அவசரமாக.

"நீ கடைசியா அனுப்பின பொண்ணோட சிக்னலை டிரேஸ் பண்ணிட்டேன்.." என்றான் அவன்.

"எங்கே இருக்காங்க.?"

"உன் பக்கத்துல.." அவன் சொன்னதும் காரை சடன்பிரேகடித்து நிறுத்தினான்.

"எங்கே.?"

"இருபதடி முன்னால போயிட்ட.."

காரை ரிவர்ஸ் எடுத்தான்.

***

தனது இடுப்பைப் பற்றினான் வசந்த்குமார்.

"ஏன்டி *** எங்களையே ஏமாத்த பார்க்கறியா.?" எனக் கேட்டவன் அவளின் வயிற்றில் உதைக்க முயன்றான். ஆனால் கனிமொழி கேமரா ஸ்டேன்டை நடுவில் கொண்டு வந்ததில் அவனால் உதைக்க முடியவில்லை. அதற்கும் கோபம் வந்தது. அவளின் முகத்தில் குத்தினான். விசை அதிகம். கனிமொழி கண்களை மூடினாள். மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.

பற்களை கடித்தவள் கேமரா ஸ்டேன்டை சற்று தூக்கினாள்.

பின்னால் இருந்தவளையும் ஓரத்தில் இருந்தவளையும் ஒற்றை ஆளாக ஒதுக்கி தள்ள முடியவில்லை. நான்கு பேரோடு மோதி தன்னால் ஜெயிக்க முடியாது என்பதை அறிவாள். ஆனால் ஒற்றை கேமராவை கூட உடைக்க முடியாத அளவுக்கு பலவீனமானவள் அல்ல என்று நம்பினாள்.

ஸ்டேன்டை மேலே தூக்கியவள் வசந்த்குமாரின் தலையில் ஓங்கி அடித்தாள். இதை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. தலையிலிருந்து ரத்தம் கொட்டியது அவனுக்கு. சுப்ரியா இன்னும் பலம் சேர்த்து இழுத்ததில் பத்து இருபது முடிகள் தங்களின் வேர் கொண்ட இடத்தை விட்டுவிட்டன.

"இவளை கொல்லலாம்.." என்ற மேனகா கனிமொழியின் இடுப்பிற்கு தந்துக் கொண்டிருந்த உதைகளை நிறுத்தினாள். அவளின் நெஞ்சுக்கு நேராக உதைத்தாள்.

கனிமொழி கீழே விழுந்தாள். இதுவரை உதைகளை தாங்கி வந்ததே அவளுக்கு பெரிய விசயமாக இருந்திருந்தது.

கீழே விழுந்தவளை நெருங்க முயன்றாள் சுப்ரியா.

"நிறுத்துங்க.." ரத்னாவின் குரலில் நின்றாள்.

ரத்னா பெட்ரோல் கேனோடு வந்தாள்.

"முடிச்சிடலாம்.." என்றாள்.

சுப்ரியாவும் தலையை ஆட்டினாள்.

நெஞ்சை ஒரு கையாலும் வயிற்றை ஒரு கையாலும் பிடித்தபடி சுருண்டு கிடந்தாள் கனிமொழி. வலி சுளீரென்றது. திடீரென்று பளீரென்றது. உயிர் போகும் வலி இதுதானோ என்று பயமாக இருந்தது.

பெட்ரோலை கனிமொழியின் மீது ஊற்றினாள் ரத்னா.

"செத்துப் போ.." என்றாள் கண்ணடித்து.

லைட்டரை தேடினாள் மேனகா.

"கடைசியா யார் சிகரெட் பிடிச்சது.?" எனக் கேட்டவள் வசந்த்குமாரை பார்த்தாள்.

இரத்தம் வழியும் தலையோடு எழுந்து அமர்ந்தான். பாக்கெட்டில் கையை விட்டு தேடினான்.

"எங்கேயோ விழுந்துடுச்சி.."

மேனகா அவனை முறைத்துவிட்டு லைட்டரை தேட ஆரம்பித்தாள்.

இடைப்பட்ட நேரத்தில் சுப்ரியாவும் ரத்னாவும் கனிமொழிக்கு ஓயாத உதைகளை தந்துக் கொண்டிருந்தார்கள். உடம்பெங்கும் காயங்கள் உண்டாகிக் கொண்டிருந்தது.

"லைட்டரையே காணல.." என்ற மேனகாவிடம் "இந்த மணல் பக்கம் பாரு.." என்றாள் சுப்ரியா.

மணலின் அருகே சென்ற மேனகா லைட்டரை தேட குனிந்த நேரத்தில் அவளின் முகத்தில் விழுந்தது உதை ஒன்று. தூர சென்று விழுந்தாள். அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

"வாடா மாப்பிள்ளை.." என்ற சுப்ரியா கனிமொழியை விட்டுவிட்டு ஓரடி தூர தள்ளி நின்றாள்.

பெட்ரோல் சொட்டும் முகத்தோடு கணவனை பார்த்தாள் கனிமொழி. தன்னை இந்த நிலையில் பார்ப்பவனுக்கு எவ்வளவு வலிக்குமோ என்று மனதுக்குள் அழுதாள். இன்னும் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அவன் வந்திருக்கலாம் என்று தோன்றியது. இப்போதேனும் யாராவது லைட்டரை கண்டுபிடித்து தன்னை பற்ற வைத்துவிட வேண்டும் என்று வேண்டினாள்.

"மிருகம்.." சுப்ரியாவை‌ பார்த்து முகம் சுளித்தான் சக்தி.

ஓடி வந்தான். வந்த வேகத்தில் ரத்னாவுக்கு ஒரு உதையை தந்தான். அருகில் இருந்த சுவரில் மோதி கீழே விழுந்தாள். பிறகு அவள் எழவேயில்லை.

சுப்ரியா ஒருத்திதான் நின்றுக் கொண்டிருந்தாள்.

அவன் ரத்னாவை உதைத்த வேகம் கண்டே இவளுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டு விட்டது. இவ்வளவு பலமுள்ள ஒருவனிடம் மோதும் அளவுக்கு முட்டாளாக இருக்கவில்லை அவள்.

அருகில் வந்தவன் வந்த வேகத்தில் அவளின் கழுத்தை பிடித்தான். அப்படியே கீழே தள்ளினான். தரையில் பொத்தென்று விழுந்தாள். அவளின் அருகில் ஒருகாலால் மண்டியிட்டவன் "யூ ஆர் கோயிங் டூ டை.." என்றான்.

அவனின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றாள். முடியவில்லை. கழுத்து எலும்பு நொறுங்க இருந்த நேரம். அரை மயக்கம் பிடித்து விட்டது. கழுத்துக்கு மேலே இருந்த ரத்த நாளங்கள் துண்டாக இருந்த நேரம்.

எதேச்சையாக‌ திரும்பினான் சக்தி. உடனே சுப்ரியாவை விட்டுவிட்டு தனது மனைவியிடம் ஓடினான்.

தனது நடுங்கும் கரத்தில் லைட்டரை பிடித்திருந்த கனிமொழி அதை இயக்க முயன்றுக் கொண்டிருந்தாள்.

அருகில் வந்த நொடியில் அறை ஒன்றை தந்தான். அவனின் கரம் அவளின் கையிலிருந்த லைட்டரை தட்டிவிட்டுவிட்டு அவளின் கன்னத்திலும் முத்திரையை பதிந்திருந்தது.

நிமிர்ந்தவள் மாமனை கண்டதும் உறைந்தாள்.

"உனக்கு என்ன கேடு வந்ததுன்னு இப்படி பண்ற.?" கத்தினான்.

முட்டிக்காலை நெஞ்சோடு சேர்த்து கட்டிக் கொண்டாள்.

"நான் ஏன் வாழணும்.?" என்றாள் அழுகையோடு.

"நீ ஏன் சாகணும்ன்னு நீயே முதல்ல சொல்லு.." எரிந்து விழுந்தான்.

"நியூடா இருக்கேன்.." விக்கியபடி சொன்னாள்.

"நான் பார்க்காத நியூடா.?" பற்களை கடித்தபடி கேட்டான்.

"ஆனா இவங்க எல்லோரும் பார்த்தாங்க.." விம்மியபடியே சொன்னான்.

எழுந்து நின்றான். மணலுக்கு அருகே சென்றான். பேரல் ஒன்றில் இருந்தது பல நாளைய மழை நீர். அருகில் இருந்த பக்கெட்டில் தண்ணீரை மொண்டு வந்தான். தண்ணீரை கனிமொழியின் மீது ஊற்றினான்.

அவளை எழுப்பி நிறுத்தினான். தனது சட்டையை கழட்டினான். அவளுக்கு அணிவித்தான். அவளின் தொடை‌ வரை‌ வந்தது அந்த சட்டை. பட்டன்களை போட்டு விட்டான்.

"நீங்க என்ன செஞ்சாலும் நான் கண்டிப்பா செத்து போயிடுவேன் மாமா.." என்றவளை முறைத்தவன் "உன்னை நியூடா பார்த்த யாரும் உயிரோடு இருக்க மாட்டாங்க. அதுக்கு நான் விடவும் மாட்டேன்.!" என்றான் கர்ஜனையாக. அடுத்த நொடியே பாய்ந்து சென்று வசந்த்குமாரின் கழுத்தில் ஒரு குத்து விட்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN