காதல் கணவன் 109

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுப்ரியா மற்றும் அவளின் தோழர்களின் பெற்றோர் மருத்துவமனையை விட்டுவிட்டு வெளியே சென்றனர். காவலர்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றனர் சிலர். மீதி பேர் பிள்ளைகளை எங்கே தேடுவது என்று தெரியாமல் அங்கும் இங்குமாக அலைந்துக் கொண்டிருந்தனர்.

யாராவது கைபேசிக்கு அழைக்க மாட்டார்களா என்று காத்திருந்தனர்.

"எதுவும் பண்ணிக்காதிங்க பிள்ளைங்களே! மொத்த சொத்தையும் வித்தாவது உங்களை வெளியே கொண்டு வந்துடுறோம்!" என்று புலம்பினர்.

"பிள்ளைங்க இப்படி பண்ணி இருக்காங்கன்னா இவ எதுவும் செய்யாமலா பண்ணி இருப்பாங்க.? இவ மேல எத்தனை தப்போ.? ஆனா கடைசியில முழுசா பழியும் நம்ம புள்ளைங்க மேல. இதுக்குதான் இந்த ஆள்கிட்ட அடிச்சிக்கிட்டேன். நம்ம ஸ்டேட்டஸ்க்கு இந்த ஸ்கூலுக்கும் காலேஜ்க்கும் சரியா வராது. நம்ம புள்ளையை வெளிநாட்டுல சேர்த்து விடுங்கன்னு! என் தம்பி எத்தனை முறை கேட்டான், இங்கே கொண்டு வந்து அவளை சேர்த்துங்கன்னு.. இப்படி என் புள்ளை வாழ்க்கையே நாசமாகிடுச்சே.." என்று பரபரத்தாள் மேனகாவின் அம்மா.

***

கனிமொழிக்கு சிகிச்சை அளித்து முடித்த மருத்துவர்கள் வெளியே வந்தனர்.

"கனி இப்ப எப்படி இருக்கா.?" பாட்டியும் பெரியப்பாவும் கேட்டார்கள்.

சக்தி அமர்ந்த இடத்திலிருந்து மருத்துவரை பார்த்தான். அவர் என்ன சொல்வாரோ என்று காத்திருந்தான்.

"நாளைக்கு ஒரு ஆபரேஷன் இருக்கு.. பெட்ரோல் குடிச்சிருக்கா. அதுக்கு சிகிச்சை தந்திருக்கோம். வெளிகாயங்களுக்கு சிகிச்சை தந்திருக்கோம்.." என்றார்.

அனைவரின் முகமும் வாடிப் போனது. கனிமொழி குணமாக வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர்.

"நீங்க எல்லோரும் வீட்டுக்கு போங்க‌." என்றான் சக்தி.

"நான் இருக்கேன்.." என்ற வளர்மதியை முறைத்தார் அவரின் கணவர்.

கடைசியில் பேசி தீர்த்ததில் வளர்மதியையும் சக்தியையும் தவிர மற்ற அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்‌.

***

வெற்றி கதவை திறந்ததும் கண் விழித்து விட்டாள் அம்ருதா.

"என்னாச்சி அவளுக்கு.?"

அவளின் நிலையை சொன்னான். பரிதாபம் கூடியது அம்ருதாவுக்கு.

கை கால்களை சுத்தம் செய்துக் கொண்டு வந்தவன் கட்டிலில் அமர்ந்தான். அவளின் வயிற்றின் மீது கையை வைத்தான்.

"இவ பொண்ணா இருந்தா இவளுக்கு நான் எல்லாமும் சொல்லி தருவேன். நூறு பேர் எதிர்ல நின்னாலும் அவங்களையும் இவ துவம்சம் செய்யணும்.." என்றான்.

அம்ருதா எழுந்து அமர்ந்தாள். அவனின் மடியில் தலை சாய்த்தாள். அவளின் இதழில் தன் இதழ் பொருத்தினான் வெற்றி. அவளின் மூச்சுக்காற்றில் குழப்பம் விளைவித்தான். அவளின் உமிழ்நீரில் தன் சுவை கலந்தான். மறுக்கவில்லை அவள். ஏற்றுக் கொண்டாளா என்றால் அதுவும் அவளுக்கே தெரியவில்லை.

வெகு நாட்களுக்கு பிறகு முதன் முதலாக மடி சாய்ந்து உள்ளாள்‌. அவளை அள்ளிக் கொள்ள தோன்றியது. அவளை அரசாள விரும்பியது மனம். அவளை தன் மறுபாதியாக மாற்ற நினைத்து ஆசை கொண்டது.

அவளை அமர வைத்தவன் அவளது சிகையில் கரங்களை நுழைந்தான். அவளின் இதழை மீண்டும் கைது செய்தான். கண்களை மூடிக் கொண்டிருந்தாள். மெள்ள தீண்டியது மோக மயக்கம்.

சிகையில் இறுகிக் கொண்டிருந்த அவனின் விரல்களில் மின்சாரம் பாய்வது போலிருந்தது. அவளின் உடம்பெங்கும் மின்னல் வெட்டியது. கருவுற்று இருப்பதால் இது போன்று ஹார்மோன்ஸ் பிரச்சனைகள் ஏற்படும் என்று அவளுமே அறிவாள். ஆனால் இந்த அளவிற்கு தன்னை தாக்கும் என்று அவள் அறியாமல் போய் விட்டாள்.

வெறும் முத்தமா இல்லை வேறு ஏதாவது போதையா என்று அவளுக்கே தெரியவில்லை. அவளே அறியாமல் அவளின் கரம் அவனின் கழுத்தை வட்டமிட்டது. அவள் கரம் தந்த தைரியத்தில் அவனின் கரங்கள் கீழே இறங்கியது. கரங்கள் அவளின் தோளில் உரசுகையில் மூச்சு பாதையில் மலை ஒன்று பெயர்ந்து விழுந்தது போல உணர்ந்தாள். தனது நகங்களில் கூட ஆயிரம் மடங்கு அதிகமான உணர்வுகளை உணர்ந்தாள்.

அவளின் கழுத்தை வருடினான். பூக்களின் இதழ்கள், மயிலிறகின் மென்மை, தென்றலின் இனிமை எல்லாமே தோற்றுப் போனதை உணர்ந்தாள் அவனின் வருடலில்.

ஏதேனும் ஒரு நேரத்தில்தான் அவனுக்கு ஈடாக அனைத்தையும் இழக்க தோன்றும். இப்போது அவளுக்கு அப்படிதான் தோன்றியது.

"அம்மு.." காந்தமும், விண்வெளியின் கருந்துளையும் தோற்றுப் போனது அவனின் குரலில் இருந்த ஈர்ப்பில். உள்ளத்தால் விழுந்து விட்டாள்.

"அம்மு ஐ வான்ட் யூ.." என்றவனின் கரம் அவளின் முந்தானையில் பதிந்தது. கண்களை திறந்தாள். பெரும் மயக்கத்திலிருந்து விழித்தாள்.

அவன் வேறு ஏதோ நினைவில் உணர்வில் இருந்தான். பயத்தில் உடம்பு சிலிர்த்தது அவளுக்கு.

"உன்னை எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா.? நீ எனக்கு என்ன மாயம் செஞ்சியோ.? ஆனா உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டு சன்யாசி போல இருப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னோட எல்லா கட்டுப்பாடுகளையும் தவிடுபொடியாக்க உன்னால மட்டும்தான் முடியும்.." என்றான் சீற்றமாக வெளிப்பட்ட மூச்சோடு.

"நா.. நான் தூங்கட்டுமா.?" பயந்துக் கொண்டே கேட்டாள்.

அவளின் முகம் பார்த்தான். "ஏ.. ஏன்.?"

அவளின் நடுங்கும் மேனியை கவனித்து விட்டான். நெற்றியை தேய்த்தான்.

அவளின் கையை பற்றி தன் உதடுகளில் வைத்தான்.

"சாரி அம்மு.. ஐயம் சாரி. அன்னைக்கு நான் அப்படி செஞ்சது உனக்கு இன்னமும் கஷ்டமா இருக்குன்னு புரிஞ்சிக்காம போயிட்டேன். ஆனா இப்ப அப்படி இருக்க மாட்டேன். ரொம்ப சாப்டா இருப்பேன். உனக்கு எந்த தொந்தரவும் தர மாட்டேன். உனக்கு என்னை பிடிக்கும். எல்லாமும் பிடிக்கும். என்னை ஒருமுறை நம்பு. ஒரே ஒரு தரம் வாய்ப்பு கொடு.." என்றான் சிறு கெஞ்சலோடு.

எச்சிலை சிரமத்தோடு விழுங்கியவள் "நா.. நான் அப்படி சொல்லல.. எதுவும் நடக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க.." என்றாள் தலை குனிந்தபடி.

திகைத்தவன் கரங்களை விலக்கிக் கொண்டான். ஒரே நொடியில் பெரும் மழையில் நனைந்தது போலாகி விட்டது.

"ஓ.. சாரி. நான் இதை யோசிக்கவே இல்ல. டாக்டர் சுத்தமா கூடாதுன்னு சொல்லிட்டாங்களா? சேப்பா டிரை பண்ணாலும் தப்புன்னு சொல்லிட்டாங்களா.?" அவளாக ஒரு உரையாடலை ஆரம்பித்து இருக்கிறாள். அப்படியே தொடருவோமே என்று நினைத்தான்.

"சுத்தமா கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.." தலையணையில் சாய்ந்தாள். அருகே தலை சாய்ந்தான்.

"வேற என்ன சொன்னாங்க அம்மு.? ஸ்கேன் ரிப்போர்ட் கூட என்கிட்ட காட்டல. பார்க்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு.."

அவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

"அடுத்த முறை ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்து‌ வரேன் வெற்றி.."

"அப்படின்னா அடுத்த மாசமும் என்னை கூட்டிப் போக மாட்டியா.?" வருத்தமாக கேட்டான்.

அவனின் சட்டை பட்டனை கீறினாள். அவனோ அவளின் கூந்தல் மணம் பிடித்துக் கொண்டிருந்தான்.

"நான் என் அம்மாவை கூட்டிப் போறேன்.! தப்பா நினைக்காத. எனக்கு கொஞ்சம் அன்கம்பர்டபிளா இருக்கு உன்னை கூட்டிப் போக.!"

புரியவில்லை. ஆனாலும் சரியென்று தலையசைத்தான்.

அணைத்தபடி உறங்கிப் போனான்.

***

இன்ஸ்பெக்டர் ஷாலினிக்கு அழைத்தான் சக்தி.

"மேடம் என்னாச்சி.?" விசாரித்தான்.

"பினிஸ்ட் சக்தி. நீங்க இனி உங்க வேலையை பார்க்கலாம். இதை மறந்துடுங்க‌!" என்றாள் அவள். அவளின் தோளில் கட்டு இருந்தது.

"பொய் சொல்றிங்களா.?"

"அப்படி சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது சக்தி எனக்கு. நீங்க என்னை நம்பிதான் ஆகணும்.." என்றவள் இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

சக்தி நம்பினான். அவள் சொன்னால் என்பதற்காககதான் அவர்களை உயிரோடு அவளிடமே சேர்ப்பித்து வந்தான். அவர்களின் உயிரை எப்படியேனும் எடுத்து விட வேண்டும் என்பதே அவனின் ஒரே முடிவாக இருந்தது.

***

காவலர்கள் இருவர் முள் அண்டிய அந்த பாழும் கிணற்றில் டார்ச்சை அடித்து பார்த்தனர். எதுவுமே தெரியவில்லை.

ஷாலினியின் ஏற்பாட்டின்படி பின் தொடர்ந்து வந்தனர் இவர்கள் இருவரும். என்கவுண்டர் செய்யத்தான் சொல்லி இருந்தாள் ஷாலினி. இப்போதே இவ்வளவு பெரிய தவறை செய்பவர்கள் பெரியவர்களாக உருமாறினாள் இன்னும் பல பயங்கர காரியங்களை செய்வார்கள் என்று அறிவாள் அவளும்.

ஆனால் சுப்ரியாவும் மற்றவர்களும் வாகனத்தை விட்டு கீழே இறங்கிய நொடியிலேயே போலிசார் தங்களை பின்தொடர்வதை அறிந்து விட்டனர். நால்வரும் குறுக்கே இருந்த வயலில் புகுந்து ஓடினர்.

காவலர்களும் மூச்சு வாங்க துரத்தினர். வயலை கடந்து இருந்த ஒரு புதர் காட்டுக்குள் நுழைந்தனர் நால்வரும். பிசாசுகள் குடியிருக்கும் பகுதி என்று நம்பி ஊரார் யாரும் அந்த இடத்திற்கு செல்ல மாட்டார்கள். கைகளை கோர்த்தபடி புதர் காட்டுக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்த மண்டபம் ஒன்றின் அருகே இருந்த பாழும் கிணற்றில் கால் தவறி விழுந்தனர். நால்வரும் கிணற்றில் விழுவதை கண்டு விட்டனர் காவலர்கள்.

அருகே வந்து டார்ச்சை அடித்துப் பார்த்தனர். அவர்களின் நிழல் கூட தெரியவில்லை.

"என்ன செய்யலாம் இப்ப.? ஃபயர் சர்வீஸை கூப்பிடலாமா.?" காவலர் ஒருவர் கேட்டார்.

"இந்த முள் புதரை பார்த்தா உள்ளே விழுந்தவங்க பிழைக்க கொஞ்சம் கூட வாய்ப்பே கிடையாது. சாகட்டும் போ.. விஷங்கள் அழியட்டும். ஓடி போனவங்க ஓடி போனவங்களாவே இருக்கட்டும்.!" என்ற மற்றொருவர் அங்கிருந்து வெளியே நடந்தார்.

"ஒருவேளை பிழைச்சிட்டாங்கன்னா?" சந்தேகமாக கேட்டான் முதலாமவர்.

"மாட்டாங்க. உறுதியா சொல்றேன் வா.. ஏற்கனவே அடிப்பட்டு இருக்காங்க. சரியான சுவாச காத்து கிடைக்கலன்னாவே ஆள் காலி. கீழே விழுந்து அடிப்படாம இருந்தாலும் கூட ஒரு மணி நேரத்துல இயற்கை மரணம் உறுதி.." என்றவர் உறுதியோடு நகர்ந்தார் அங்கிருந்து.

***

மூன்று நாட்கள் முடிந்து விட்டது. சுப்ரியாவும் மற்ற மூவரும் தொலைந்து போனார்கள், ஓடிப் போனார்கள் என்று செய்திகளில் ஓடிக் கொண்டிருந்தது. அவர்களின் பெற்றோர் பிள்ளைகளை தேட காசை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தனர்.

***

கனிமொழி கண்களை திறந்தாள். சக்தி அவளின் கையை பிடித்தபடி அருகே அமர்ந்திருந்தான்.

"மாமா.." என்றாள் சிரமத்தோடு.

"வெல்கம் டூ திஸ் நியூ வேர்ல்ட்.!" என்றான் புன்னகையோடு.

"த்தோடா.. பெருசா வெல்கம் சொல்றான்.." பாலாஜியின் குரலில் திரும்பினாள். இந்த பக்கமாக அவளின் மொத்த குடும்பமும் நின்றிருந்தது. வெற்றி ரோஜா ஒன்றை நீட்டினான். புருவம் உயர்த்தினாள்.

"வெல்கம்." என்றான் இதழ் விரித்து.

சக்தி வாங்கி வைத்துக் கொண்டான். பாலாஜி தன்னிடமிருந்த பூங்கொத்தை மச்சானின் மடியில் வீசினான்.

"நீ ரொம்ப டிரை பண்ணி இருக்க கனி. பத்திரமா ஆபரேஷன் முடிஞ்சது. உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. உனக்கு எதிரிகளும் இல்ல.." அவளின் தலையை வருடி விட்டுவிட்டு சொன்னான் பாலாஜி.

எதிரிகள் என்ன ஆனார்கள் என்று கேட்க விரும்பினாள்.

"சோறே இறங்கல பாப்பா. நல்ல வேளையா பிழைச்சி வந்துட்ட. வேலை வேலைன்னு சம்பாதிக்க ஓடினேன். உன்னோடு இன்னும் கொஞ்சம் அதிகமா நேரத்தை செலவு பண்ணியிருக்கணும். அப்பாவா நான் தோத்துட்டேன்னு தோணுது‌. மன்னிச்சிடு கண்ணா.." என்றார் அவளின் அப்பா.

"உங்க மேல எந்த தப்பும் இல்லப்பா.." என்றாள் கனிமொழி சிறு குரலில்.

"நிறைய இருக்கு. பெத்தவ உன்னை பார்த்துப்பான்னு நினைச்சதே பெரிய தப்புதான்.!" என்றவர் அவளின் கையின் மீது தட்டி விட்டு அங்கிருந்துப் போனார்.

தன்னால்தான் அப்பா இன்னமும் அம்மாவோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார் என்று புரிந்து வருந்தினாள் கனிமொழி.

அனைவரும் ஆறுதல் சொன்னார்கள். தன்னம்பிக்கை வார்த்தைகளை சொன்னார்கள்.

அனைவரும் சென்ற பிறகு வளர்மதியும் சக்தியும் மட்டும் இருந்தார்கள். சக்தி தன் மாமியாருக்கு தனிமையை தரவில்லை.

"சாரிம்மா.!" என்றாள் வளர்மதி.

ஆச்சரியமாக இருந்தது கனிமொழிக்கு.

"நான்தான் தப்பு பண்ணிட்டேன். என் கணக்குதான் தப்பு. உன் எதிரியோட அம்மாக்கள் செஞ்ச அதே தப்பை நானும் பண்ணிட்டேன்.! சிலரை எதிர்க்கவே கூடாது, அழிக்கணும்ன்னு இப்பதான் புரிஞ்சிக்கிட்டேன். ஆனா அதுக்குள்ள காலம் கடந்துடுச்சி. மன்னிச்சிடு.‌" என்றவள் அங்கிருந்து வெளியே கிளம்பினாள்.

முதுகில் வலித்தது. அங்கேதான் அறுவை சிகிச்சையை செய்திருந்தார்கள். அசைவது சிரமமாக இருந்தது. தலையை திருப்பினாள்.

சக்தி அவள் கழுத்தின் அந்த புறம் கையை பதித்தான். இந்த புற காதோரத்தில் முகத்தை புதைத்தான்.

"பாப்பா இன்னொரு முறை இப்படி என்னை பயமுறுத்தாத.." என்றான் அழுகையோடு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN