வண்ணத்துப்பூச்சி_5

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அவன் சென்னை செல்லும் நாளும் வந்தது… ஆனாலும் கயலைதான் யாராலும் சமாதான படுத்த முடியவில்லை… அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள்… செந்தில் தான் அவளிடம் சென்று…
" பாப்பு குட்டி அத்தான் சொன்னா கேட்பிங்களா..? கேட்கமாட்டிங்களா..?
"நீ இங்கேயே இருக்கனு சொல்லுத்தான், நா நீ சொல்லுறத கேட்கிறேன்" என அவள் பேரம் பேசவும்,
அவனுக்கு சிரிப்பு வந்தது…
"பாப்பு மா, அத்தான் படிச்சி பெரிய ஆளா வரனுமா வேணாமா? சொல்லு… எனக்கும் கொஞ்சம் வெளியுலகம் எல்லாம் தெரியனும்ல, அப்பதான் நாளைக்கு நான் தனியா ஒரு தொழில் ஆரம்பிக்கறப்ப, எந்த ஒரு தயக்கமும்,பயமும் இல்லாம என்னால அத சரியா செய்ய முடியும்…
அவ யோசிக்கிறத பார்த்து விட்டு,
"நீ என்ன யோசிக்கிறனு தெரியுது பாப்பு, என்னடா இவன் மாமாவோட தொழில பார்க்காம, வேற தொழில் செய்யனுமுனு சொல்லுறானேனு தான யோசிச்ச,என கேட்கவும்…
அவள் ஆச்சிரியமாக அவனை பார்த்து கண்களை விரிக்கவும், அந்த கயல்விழியின் விழியசைவில் அவன் சில நிமிடம் ப்ரீஸ் ஆகி நின்று விட்டான்…
"அத்தான் அத்தான் என கயல் அவனை பிடித்து உளுக்கவும் சுயநினைவு வந்தவன்…
" ஹேய் என்ன பாப்பு…என கேட்கவும்…
" ஒன்னும் இல்லத்தான்… நீங்க தான் எதோ மாதிரி நின்னிங்க…
தன் தலையை உதறி…தன் கையால் கோதிகொண்டு, 'எனக்கு என்ன ஆச்சி நா ஏன் அவள இப்படி பார்த்தேன்…? என குழம்பி நின்றான்… அவள் தன்னையே பார்ப்பதை கண்டு, தன் குழப்பத்தை ஒதிக்கி வைத்து விட்டு…
"ஹேய் ஒன்னும் இல்ல பாப்பு குட்டி எதோ ஒரு யோசனை… சரி நீ சொல்லு, நா சொன்னத தான நீ யோசிச்ச என சொல்லவும், அவள் ஆமா என தலை அசைத்தாள்…
"பாப்பு மா அது எல்லாம் எங்க அப்பாவால உழைப்பால உருவானது டா, ஆனா எனக்கு என் சொந்த முயற்சியில் தொழில் ஆரம்பிச்சி அதுல ஜெயிக்கனும்முனு ஆச டா…
"அத்தான் சென்னை போய் படிக்கட்டா, சொல்லு டா… நீ சொன்னா தான் நா போவேன், இல்லனா போகமாட்டேன்… என சொல்லி அவள் என்ன பதில் சொல்ல போற என, அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்… அவளும் தன் அத்தானை பாவமாக பார்த்து,
" நீ அங்க போய் படிச்சிதான் ஆகனுமா அத்தான்…! அங்க போனினா, என்ன மறக்கமாட்டில, என்ன அடிக்கடி வந்து பாக்கனும், நீ வரப்ப எல்லாம் எனக்கு ஏதாவது வாங்கிட்டு வரனும் ஓகே வா… என அவனிடம் டீல் பேசினாள்… அவனும் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டு, சிரித்துக் கொண்டே…
" சரி டா பாப்பு நீ சொல்லுற மாதிரியே செய்யிறேன் ஓகே… என சொல்லி, அவள் தலையை கோதி,
" நா இங்க இல்லாதப பத்திரமா இருந்துக்கனும், அத்த சொல்லுறத கேட்டு நடக்கனும், பள்ளி கூடத்துல யாரு கூடவும் வம்பு வளர்க்க கூடாது, தனியா போய் ஆத்தங்கரையில உட்கார்ந்து இருக்க கூடாது, என அவன் வரிசையாக சொல்ல சொல்ல, இவள் கொட்டாவி விட்டு கொண்டு தூக்கம் வருவது போல பாவனை காட்டவும்,...
"ஏய்… ! என்னடி நா இங்க எவ்வளவு முக்கியமா பேசிகிட்டு இருக்கேன் ,நீ என்னடானா, கொட்டாவியா விடுற, நா பேசுறது உனக்கு அவ்வளவு அறுவையாவா இருக்கு, என அவள் காதை திருகினான்…
"ஆ… ! வலிக்குது அத்தான், விடு என் காத… என சொல்லி அவனிடமிருந்து விலகி,
"இல்லையா பின்ன, நீ பாட்டுக்கும் வரிசையா லிஸ்ட் போட்டுகிட்டே போற, அத செய்யாத, இத செய்யாதனு…எங்க அம்மாவுக்கு மேல நீ அறுக்குற… ப்பா..! என் காதுல இருந்து ரத்தமே வந்துட்டு தெரியுமா…?
"வரும் டி, வரும் நா எவ்வளவு கவலையா, நம்ம பாப்புகுட்டிய விட்டுட்டு, போறமேனு ஃபீல் பண்ணி பேசிகிட்டு இருக்கேன்… என அவன் வருத்தமாய் கூறவும்,அவளுக்கே ஒருமாதிரி ஆகிட்டு.
"அத்தான் எனக்கு தெரியாதா, நீ என் பாதுகாப்புக்கு தான் இதலாம் சொல்லுறேனு… எனக்கு அவ்வளவு தைரியம் சொல்லிட்டு, இப்ப நீ தான் மூஞ்ச உர்னு வச்சிகிட்டு பேசுற, அதான் அப்படி கடுபேத்துனேன்… என்ன பத்தி கவல படாத, நா இங்க பத்திரமா இருந்துக்குவேன்…
" நீ அங்க போய் உன் படிப்புல மட்டும் கவனம் செலுத்து, நீ சொன்னது போல, நல்லா படிச்சி, சொந்தமா தொழில் பண்ணி அதில ஜெயிச்சு காமி… என பெரிய மனுசியாய் அவனுக்கு தைரியம் சொன்னாள்.
அவன் சிரித்து கொண்டே, " நா உனக்கு தைரியம் சொல்ல வந்தா, நீ எனக்கு தைரியம் சொல்லுற, ம்ம்… என் பாப்பு குட்டி பெரிய பொண்ணா ஆகிட்டாங்க போல, இவ்வளவு பக்குவமா பேசுறாங்க…
"இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு, நா நிம்மதியா போய் படிப்பேன், என சொல்லி அவள் தலையை தடவி கொடுத்து, "வா போலாம் மணி ஆகிட்டு. என அழைத்து சென்றான்…
யாருக்கும் நிற்காமல் கால மகள் நாட்களாய், மாதங்களாய் வளர்ந்தாள்…
"செந்தில், செந்தில் என்ன டா கனவு கண்டுகிட்டு இருக்க, இன்னைக்கு அந்த ஹிட்லர் கிளாஸ் தான் டா ஃபஸ்ட்டு, அவர் சொன்ன அசைமென்ட்ட முடிச்சிட்டியா…? என அருண் வந்து கத்தவும்,
"ஏன் டா இப்படி காதுல வந்து கத்துற, நா நேத்தியே அசைமென்ட் முடிச்சி வச்சிட்டேன்… என இவன் கூலா சொல்லவும், தன் நெஞ்சில் கை வைத்து
"அட பாவி மனுசா, இப்படி என்ன மோசம் பண்ணிட்டியே, என சினிமா டைலாக் விட்டு வராத கண்ணீரை துடைத்து, "இந்த மேட்டர் எப்ப டா நடந்துச்சி …? என கேட்கவும்…
" அட… சீ… கருமம் புடிச்சவனே, நீ பேசுர மாடுலேசன்ன பாத்து, யாராவது என்ன தப்பா நினைக்க போறாங்க… என தலையில் அடித்து கொண்டான்… அதை பார்த்து, அசட்டு சிரிப்பை சிரித்து,
"அது இல்ல மச்சி நேத்தி எங்க கூடதானே இருந்த, அப்புறம் எப்படி அசைமென்ட் முடிச்ச…?
"ம்ம்… அது நீயும் அந்த வீணா போனவனும் சேர்ந்து பக்கத்து கிளாஸ் பொண்ணு ரீட்டா கிட்ட ரீல் விட்டு கிட்டு இருந்திங்கல, அப்ப நானும் கதிரும் எழுதி முடிச்சிட்டோம் … என சொல்லவும்,
"அட மித்துரு துரோகிகளா,இப்படி கால வாரிட்டிங்களே டா, நீங்களும் எழுதி இருக்க மாட்டிங்கனு நம்பிக்கைல வந்தா, இப்படி பண்ணிட்டிங்களேமா … என சொல்லி புலம்பவும்… அங்கு வந்த வருண்,
"டேய் மச்சான் என்ன டா ஆச்சி, இப்படி புலம்புற…
(இவன் தான் இவங்களோட இன்னொரு ஃபிரெண்ட் வருண். இவன் வேற யாரும் இல்லை, கயலின் தாய்மாமா பையன் தான்... ஏற்கனவே இந்த மூனு பேருக்கும் வருண் பழக்கம் தான், ஆனாலும் இங்கு கல்லூரியில் வந்து சேர்ந்த இந்த ஆறு மாதத்தில் தான், நல்ல புரிதல் ஏற்பட்டு, மூவர் அணியுடன் இவனும் சேர்ந்து, நால்வர் கூட்டணி ஆகினர்… நான்கு பேரும் ஒரே வகுப்பில் தான் படிக்கிறார்கள். அதில் அருணும், வருணும் செய்யிற லூட்டி தாங்காது… நான்கு பேரும் ஒன்றாக தான் ஹாஸ்டலில் தங்கி இருக்காங்க… )
" என்ன மச்சான் நா கேட்டுகிட்டே இருக்கேன் நீ ஒன்னும் சொல்ல மாட்டேங்குற…
"மாப்பு நாம மோசம் போயிட்டம் டா… மோசம் போயிட்டோம்… என ஒப்பாரி வைக்கவும்,
"என்ன சொல்லுற மச்சி,என்ன மோசம் போயிட்டோம் என வருண் கேட்கவும்,
அங்கு வந்த கதிர்,
"என்ன டா இன்னும் கிளாஸ்சுக்கு கிளம்பாம கதை அடிச்சிகிட்டு நிக்கிறிங்க.. இன்னைக்கு யாரோட கிளாஸ் ஃபஸ்ட்டுனு தெரியுமுல, வாங்க டா போவோம்… அதை கேட்ட அருண், வருணிடம் சென்று அவன் கையை பிடித்து கொண்டு,
"மாப்பு, இவனுங்க இரண்டு பேரும் சேர்ந்து நம்ம இரண்டு பேரையும் ஏமாத்திட்டாங்க டா ஏமாத்திட்டாங்க… நெஞ்சை தடவிக்கொண்டே சொல்லவும்,
அவன் தலையில் தட்டிய கதிர்,
" டேய் கிரகம் புடிச்சவனே, ஒரு விசயத்தையும் ஒழுங்க சொல்ல மாட்டியா, எப்ப பாரு எதாச்சும் ட்ராமா பண்ணிகிட்டு என சொல்லி இன்னொரு தட்டு தட்டினான்… அருண் பாவமாய் தன் தலையை தடவிகிட்டே,
"ஏன் டா என் தலையை தட்டி கிட்டே இருக்கே, எப்ப பாரு என் தலையை தட்டி கலச்சி விடுறதே உன் பொலப்பா போச்சி… என சொல்லி, வருணிடம் திரும்பி,
"டேய் இவனுங்க இரண்டு பேரும் அசைமென்ட் முடிச்சிட்டானுங்க டா… என சொல்லவும்,
"என்னது முடிச்சிட்டானுங்களா… அட பாவிங்களா, இப்படி எங்கள ஏமாத்த உங்களுக்கு எப்படி மனசு வந்தது, என இவன் அடுத்த ட்ராமாவை ஆரம்பிக்கவும், காண்டாகிய செந்திலும், கதிரும் அவங்க இரண்டு பேரையும் சேர்த்து மொத்தி எடுத்து விட்டனர்…
"டேய் டேய் விடுங்க டா, கொலகார பாவிகளா, என வருணும், ஏய் ஏய் தலைய கலைக்காத, என அருணும் சத்தம் போட்டனர்…
இப்படி இவர்கள் அடிக்கும் கொட்டம் தாங்காது… இவர்களின் கல்லூரி நாட்கள் அரட்டை படிப்பு என்று, சுவாரசியமாய் சென்றது…
தினமும் போனில், கயலிடம் அங்கு நடக்கும் கூத்தை எல்லாம் சொல்லி சிரிப்பான் செந்தில்…
செந்தில் கிளம்பிய பிறகு, கயலின் குறும்பு தனம் குறைந்து அமைதியாய் வலம் வர ஆரம்பித்தாள்…
அவளின் கலகலப்பு வெகுவாய் குறைந்து போய், அவளின் நாட்கள் வெறுமையாய், உயிரோட்டம் இல்லாமல் சென்றது…
"ஏன் டி இப்படி மூஞ்ச மூஞ்சூரு மாதிரி உர்ருனு வெச்சிட்டு திரியிர…சித்தி எதுவும் உன்ன திட்டுனுச்சா…? இல்லையே அதுக்கலாம் நீ கவல படமாட்டியே… அப்புறம் ஏன் இப்படி இருக்குற..? என கேட்டாள் சௌமியா…
"சே… ஏன் டி இப்படி நொய் நொய்னு கத்துற, நானே அத்தான பாத்து ரொம்ப நாளாச்சேனு கவலையா இருக்கேன், இதுல நீ வேற வந்து எரிச்சல கிளப்புற…!
"ஓ இதுதான் விசயமா…! இதுக்கு ஏன் டி இப்படி இருக்க, அத்தான் படிக்கதானே போயிருக்கு…
"அண்ணா என்கிட்ட போன் பேசுறப்ப எல்லாம், அத்தானும் பேசுவாங்க… என்ன கூட விசாரிக்காம, நீ எப்படி இருக்கனு தான் கேப்பாங்க… நீ இப்படி சோகமா இருக்குறது தெரிஞ்சா, அத்தான் படிப்பு வேணானு தூக்கி போட்டுட்டு வந்துரும்…
"அதுதான் உனக்கு வேணுமா…? அவங்க படிக்கனுமுனு உனக்கு ஆச இல்லையா… ! நீ பழைய மாதிரி கல கலனு இரு, அப்பதான் நல்லா இருக்கும்… என சொல்லி, கயல் கையில் இருந்த வாட்டர் பாட்டிலை பிடுங்கி, கட கட என குடித்தாள்…
"எரும மாடே, ஏன் டி என் பாட்டிலை பிடுங்குன…? உன்னோட பாட்டில் எங்க டி…? என கயல் அவள் தலையில் கொட்டினாள்…
தலையை தேய்த்து கொண்டே, " அடி பாவி ஏன் டி என் தலையில் இப்படி கொட்டுன…? உனக்கு அட்வைஸ் பண்ணி என் தொண்ட தண்ணியே வத்தி போச்சி… அப்ப உன் தண்ணிய தானே நா குடிக்கனும்…! என லாஜிக் பேசினாள் சௌமியா… அவள் சொல்வதை பார்த்து தலையில் அடித்து கொண்டு,
"உன் மூளைய கொண்டு மியூசியத்தில் தான் வைக்கனும், புதுசு புதுசா யோசிக்குது… என சொல்லி கயல் சிரித்தாள்…
அவள் சிரிப்பதை பார்த்து, மனதுக்குள் நிம்மதியும், சந்தோசமும் கொண்டாள் சௌமியா… ஆனால் வெளியே,
"ஏன் டி சிரிக்க மாட்ட, என் அறிவ பார்த்து உனக்கு பொறாம டி, இவளவ்வு நேரமா, மூஞ்ச மூஞ்சூறு மாதிரி வச்சிகிட்டு திரிஞ்சியே, பாவம் புள்ள கவலையா இருக்கேனு, ஆறுதலா பேசுனேன் பாரு, எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்… என சௌமி சொல்லவும்,
"அடியே சேமியா யார பார்த்து டி மூஞ்சூறுன இன்னைக்கு உன் மண்டைய இரண்டா பொலக்கல என் பேரு கயல்விழியாள் இல்ல டி… என அவளை துரத்தி கொண்டு ஓடினாள்…
தன் தோழியின் முயற்சியால், கயலின் பழைய கல கலப்பு, கலாட்டா எல்லாம் திரும்ப வந்தது…
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN