வண்ணத்துப்பூச்சி_6

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஒரு நாள் மதிய வேளையில், பள்ளி மரத்தடியில் கயலும், சௌமியும் சாப்பிடுவதற்காக, செண்பாவையும், பிரேமாவையும் எதிர் பார்த்து, உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தனர்…
"என்ன டி கயலு, இவளுகள இன்னமும் காணோம்…
"இரு டி வருவாளுக, இன்னைக்கு ஏதோ அசைமெண்ட் எழுதிட்டு தான் வருவோமுனு சொன்னாளுங்க…
"ஏய் கயல் வேணி மிஸ் நல்லா க்ளாஸ் எடுக்குறாங்கள, புரியாத எனக்கே அவங்க பாடம் நடத்துறப்ப நல்லா புரியுது.சூப்பர் மிஸ். என சௌமி சொல்லவும்,
கயல் " ம்… ஆமா டி அவங்க வந்த பிறகு, எல்லாரும் நல்ல மார்க் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க…
"ஆனா, எனக்கு அவங்க பையன சுத்தமா பிடிக்கவே இல்லடி… என முகத்தை சுழித்து சௌமி சொல்லவும்…
"ஆமா உனக்கு ஏன் டி அவங்க பையன பிடிக்கனும் …? அதுவும் இல்லாம நீ எப்ப அவங்க பையன பார்த்த…?என கயல் கேட்கவும்…
"அதுவா டி… போன வாரம் நீ லீவுல இருந்தில, அப்ப நடந்தது டி இது… என சொல்லி விட்டு அவள் மேல பார்க்கவும்…
"ஏய் ஏன் டி …? இப்ப எதுக்கு நீ மேல பாக்குற..?
"இல்ல….! ப்ளாஸ்பேக் சொல்லும் போது மேல பார்த்துதானே படத்துல எல்லாம் சொல்லுறாங்க அதான் நானும் அப்படி சொல்லலாமுனு…! என இழுக்கவும்… அவளை முறைத்த கயல்,
"ஆமா… இவங்க பெரிய காவிய கதை சொல்ல போறாங்க, அதுக்கு மேல பார்த்து கொசுவர்த்தி சுற்றி, சொல்லபோறா….
"சே …! ஒழுங்கு மரியாதையா சொல்ல வந்தத சுருக்கமா சொல்லிமுடி, இல்ல…! சேமியா என்ன பத்தி உனக்கு தெரியும்…. அப்புறம் சேமியாதான்…! பாயாசம் தான் …! பாத்துக்க … என கயல் மிரட்டவும்…
'ஆஹா…! சும்மா இருக்குறவள சொறிஞ்சுவுட்டுட்டோமோ...! கொஞ்சம் பில்டப் பண்ணி சொல்லலாமுனு பார்த்தா, அது பொறுக்காதே. இதுக்கு மேல வாயதொறக்கலைனா உண்மையிலேயே பாயசம் ஆக்கிருவா… என மனதில் புலம்பி கொண்டே கயலை பார்த்து சொல்ல ஆரம்பித்தாள்…
சௌமியா கயலோடுதான் தினமும் பள்ளி சென்று வருவாள்... கயலுக்கு ஜுரம் வந்ததால், அவள் பள்ளிக்கு ஒருவாரம் போகாமல் விடுமுறையில் இருந்தாள்…அதனால் சௌமி மட்டும் தனியே சென்று வந்தாள்… அப்படி ஒரு நாள் போகும் போது, அந்த வழியே சைக்கிளில் நண்பர்களுடன் வந்த சரவணன் அவர்களிடம் பேசும் சுவாரஸ்யத்தில் சௌமியை கவனிக்காமல் அவள் சைக்கிளோடு மோதி, அதில் அவள் கீழே விழுந்து விட்டாள்…
"ஐயோ…! அம்மா…! எந்த பக்கி பயடா என்ன தள்ளிவிட்டது… என புளம்பி கொண்டே, தன் இடுப்பை பிடித்த படி எழுந்து நின்றாள்… அங்கே சரவணன் இவளை முறைத்து கொண்டு இருந்தான்… அப்போது, சரவணன் பக்கத்தில் இருந்தவன்
" ஏன் டா இப்ப நீ என்னத்துக்கு இப்படி முறைச்சிகிட்டு நிக்குற, நீ தானே அவள இடிச்ச,நியாயமா பார்த்தா அவ தான் உன்ன முறைக்கனும்.. என சொல்லவும்,
" டேய் வாயமூடிகிட்டு இருடா.. இவள இப்படி சமாளிச்சா தான் உண்டு, இல்ல எங்க அம்மா கிட்ட வத்தி வச்சிருவா… என்று முகத்தை கோவம் போலவே வைத்து கொண்டே பேசினான்… சரவணன்
"ஏய் அவள உனக்கு தெரியுமா டா …?
"ம்...ம் தெரியும்… எங்க அம்மா இவ க்ளாஸ் டீச்சர் தான்.. நா அம்மாவ பார்க்க அவங்க க்ளாஸ் போறப்ப எல்லாம் பார்த்து இருக்கேன் , வாய் ஓயாம பேசிகிட்டே இருப்பா…சரியான வாயாடி...அதனால் தான் சொல்லுறேன், நம்ம கெத்த விடாம கொஞ்சம் விரப்பா நின்னா தான் இவள சமாளிக்கலாம்… ( நீ ஏன் ராசா இவள மட்டும் கவனிச்சிருக்க சரியில்லையே….!)
என்ன இந்த பக்கி நம்மள முறைக்குது, நியாயமா பார்த்தா நாமதானே இவன முறைக்கனும்… என மனதுக்குள் புலம்பி கொண்டே அவனை பார்த்து,
"ஏய் எவ்வளவு திமிர் இருந்தா என்னய தள்ளி விட்டதும் இல்லாம, முறைக்க வேற செய்வ… என அவனிடம் எகிறிகொண்டு சென்றாள்…
சரவணன் அவளை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்து, ஒட்டடை குச்சி மாதிரி இருந்து கிட்டு என்ன எகிறிகிட்டு வர… இது என்ன ரோடா , இல்ல சர்க்கஸ் கூடாரமா… இப்படி வழச்சி வழச்சி சைக்கிள் ஓட்டிட்டு வர, நீ இப்படி ஓட்டிட்டு வந்தேனா யாரு வேணாலும் உன்ன இடிச்சி இருப்பாங்க… ஏதோ நா கடைசி நிமிசம் சுதாரிச்ச தாள இந்த சின்ன சிராய்ப்பு ஓட போயிட்டு… என அவள் மேல் தான் தப்பு என சாதித்து பேசினான்…
ஒரு நிமிடம் சௌமியே குழம்பி விட்டாள்…
'நா கரெக்ட்டா தானே வந்தேன், இவன் என்ன இப்படி சொல்லுறான்… என குழம்பி, ஆஹா… ! இவன் நம்மள குழப்பி விட்டு எஸ்கேப் ஆகபாக்குறான் விடாத சௌமி என கரெக்ட் டாக பாயிண்ட்டை பிடித்து விட்டாள்…
" டேய் நூடுல்ஸ் மண்டையா… யார பார்த்து டா ஒட்டடகுச்சி சொல்லுற, ராங்கா வந்து என்ன இடிச்சதும் இல்லாம, என் மேலேயே பழிய போட்டு தப்பிக்க பாக்குற, இதுல துரைக்கு பெருந்தன்மை வேற… என அவனை வாரி, நீ வேணி மிஸ் பையன் தானே, இரு அவங்க கிட்டவே உன்ன பத்தி சொல்லுறேன்.. சைக்கிள் ஓட்ட சொன்ன ஜெட்டா ஓட்டுறிங்க, உன்ன எல்லாம் நடராஜா சர்விஸ்ல விட்டாதான் சரிபடுவ… என சொல்லி, அவனின் பதிலை கூட கேட்காமல் சைக்கிளை எடுத்து கொண்டு சென்று விட்டாள்…
அவள் சொன்னது போலவே வேணி மிஸ்ஸிடம் சொல்லி, அவனுக்கு ஒருவாரம் சைக்கிளை கொடுக்காமல் நடராஜா சர்விஸ்சாய் நடக்க வைத்து விட்டாள்… அதில் இருந்து ஒருவருக்கொருவர் எங்கு பார்த்து கொண்டாலும் முறைத்து கொண்டு திரிவார்கள்…
"இதுதான் நடந்தது டி கயலு… என சௌமி சொல்லவும், அவளை ஒரு பார்வை பார்த்த கயல், " ஏன் டி இது ஒரு விசயமுனு, நீ இந்த இழுவ இழுத்து இருக்க… இதுல அம்மனிக்கு ஃப்ளாஷ் பேக் வேற, என வாரவும்… அவளை முறைத்த சௌமி,
"எனக்கு ஒரு உண்ம தெரியனும் டி…. ?
"என்ன டி உண்ம தெரியனும் உனக்கு இப்ப…?
"இல்ல நா உனக்கு ஃப்ரெண்ட்டா, இல்ல எனிமியானு தான்… என சொல்லி அவளை முறைத்து பார்த்தாள்…
"என்ன டி இப்படி சொல்லிட்ட…! நீ என் உயிர் தோழி டி…
"பார்த்தா அப்படி தெரியலையே….! எனக்கு நடந்த விசயத்த கேள்வி பட்டு நீ இப்ப ஒரு பொங்கல் பொங்கி இருக்க வேணாம், அதவிட்டுட்டு என்னையே வாருற… அதுவும் இல்லாம, நீ பேசுறத பார்த்தா அவனுக்கு சப்போட் பண்ணுறத போல இருக்கு ….
"இல்ல டி சேமியா… செரி, செரி முறைக்காத… சௌமி… நா எதுக்கு அப்படி சொன்னேனா…? அவனே புதுசா நம்ம ஸ்கூலில் வந்து சேர்ந்து இருக்கான்… ஏதோ ஃப்ரெண்ட்ஸ் கூட அரட்டை அடிக்கிற ஆர்வத்தில் கவனிக்காம, உன்ன இடிச்சிருப்பானே தவிர, வேண்டும் என்றே செய்து இருக்கமாட்டான் டி… ரொம்ப நல்ல பிள்ளை டி அவன்…
" ஆமா ரொம்ப நொல்ல பிள்ளை தான்… என நொடித்து கொண்டாள் …
"ஆமா அவன் நொல்லை பிள்ளைனு…. கயல் முறைக்கவும்… " செரி, செரி நல்ல பிள்ளைனு உனக்கு எப்படி தெரியும்…? என கேட்டாள் சௌமி…
"அதுவா நம்ம லாஸ்ட் கிளாஸ் வேணி மிஸ் கிளாஸ் தான,அப்ப ஸ்கூல் முடிஞ்ச பிறகும் நமக்கு தான் ஸ்பெசல் கிளாஸ் எடுப்பாங்கள,
"அப்ப, மிஸ் வரவரைக்கும் சும்மா உட்கார்ந்து இருக்காம, கிரவுண்ட்ல உள்ள பேப்பர எல்லாம் எடுத்து சுத்தம் பண்ணுவான், அங்க உள்ள மரம், செடிக்கு எல்லாம் தண்ணி பிடிப்பான், அதுவும் இல்லேனா, அங்கு இருக்குற ஆயாமா கிட்ட பேசிகிட்டு அவங்களுக்கு அவனால முடிஞ்ச உதவி எதுவும் செய்வான்….
"இப்ப சொல்லு இப்படி பொறுப்பா இருக்குற பையன் வேணுமுனே வம்பு பண்ணுவானா…?
"அது செரி…! இது எல்லாம் அவன் பண்ணுறத நீ எப்படி பார்த்த…? எப்ப பார்த்த…? நானும் உன் கூடதானே இருந்தேன்….என அதி முக்கியமான கேள்வியை கேட்டாள்…
"யாரு நீ தானே…! மிஸ் எல்லாருக்கும் டெஸ்ட் வச்சி, கிளாஸ்ல பாதி பேரையும், கிரவுண்ட்ல பாதி பேரையும் தனிதனியா உட்காரவச்சப்ப, வெளியே உட்கார்ந்தா பிட் அடிக்க முடியாதுனு, கிளாஸ்லேயே உட்கார்ந்த ஆளுதானே நீ…. அப்புறம் எப்படி அவன நீ பார்க்க முடியும்… என பேசியவள்,
மிஸ் கிட்ட சொல்லி அவன பத்தி கம்லேண்ட் பண்ணி, உன்ன இடிச்சதுக்கு, அவ்வளவு தூரம் அவன நடக்க வைச்சதோட, உனக்கும் அவனுக்குமான கணக்கு முடிஞ்சது…. இதுக்கு மேல எந்த பகையையும் வளர்த்துக்க கூடாது… என நல்ல தோழியாய் அறிவுரை கூறினாள்… சௌமியும் அரைமனதாய் தலையாட்டினாள்…
பிறகு தோழிகள் இருவரும் சுவாரசியமாக பேசிகொண்டு இருக்கும் போது, இதுவரை இவர்கள் பேசுவதை மரத்தின் மறுபக்கத்தில் இருந்து கேட்டு கொண்டு இருந்த சரவணன், திடீரென்று அவர்கள் இருவரின் முன்னாள் போய் நின்றான், திடீரென்று ஒருவர் தங்கள் முன் வந்து நிற்கவும் பயந்து கத்திவிட்டனர்… பிறகு, சுதாரித்த கயல்,
"எந்த பிக்காலி பயடா வந்து இப்படி பயமுறுத்துறது… என நிமிர்ந்து பார்த்தாள், அங்கு சரவணன் நிற்பதை பார்த்து,
"ஏன் டா அறிவு கெட்டவனே, இப்படியா டா திடீர்னு குதிப்ப, குரங்கு பயலே, கொஞ்சமாச்சும் அறிவுனு உனக்கு இருக்கா,என கயல் கேட்கவும், அவன் திரு திருனு முழித்து கொண்டு இருந்தான்,
"என்ன டா நா கேட்க கேட்க திருட்டு முழி முழிக்கிற, வாய தொறந்து பேசுடா டால்டா… வாயில் கொழுக்கட்டையா வச்சிருக்க, துரை வாயதொறக்க மாட்டிங்களோ…? என கிழி.. கிழினு கிழித்து தோரணம் தொங்க விட்டாள்…
இவள் பேசுவதை பார்த்து ஒரு ஜீவன் அரண்டு போய், பாவமாய் நின்றது என்றால், ஒரு ஜீவனோ சந்தோச கூத்தாடியது… அது வேற யாரும் இல்ல, நம்ம சௌமிதான்… அந்த பாவபட்ட ஜீவன் சரவணன் தான்…
' என்னடா இது…! நம்மள எதும் இவன பேச கூடாதுனு சொல்லிட்டு, இவ இந்த கிழி கிழிக்கிறா… ஆனா இது கூட நல்லாதான் இருக்கு…
இந்த நாதாரிக்கு நல்லா வேணும், என்ன கீழ தள்ளிவிட்டதும் இல்லாம, எனக்கே பல்பு கொடுத்தான, இப்ப நல்லா வேணும், என் கிட்ட வாயடிக்க முடிஞ்ச மாதிரி இவ கிட்ட வாயடிக்க முடியுமா….? என் செல்லா குட்டி பின்னி பெடலெடுக்குறா…. என மனதுக்குள்ளேயே ஒரு குத்தாட்டம் போட்டு கொண்டு இருந்தாள் சௌமி….
கயல் சரவணனை பேசி பேசியே டயட் ஆகி, சௌமியின் தண்ணிர் பாட்டிலை பிடிங்கி குடிக்க போனாள்… அப்போது அவள் கையில் இருந்த பாட்டிலை பிடிங்கி மடக், மடக் கென்று குடித்து கொண்டு இருந்தான் சரவணன்….
"அட குரங்கு பயலே….என தாவையில் கை வைத்து அவனை பார்த்தாள் கயல்….
"சப்பா… என்னா டயடு, என்னா டயடு… ஆமா டாலுமா நீதான பேசுன, ஆனா எனக்கு ஏன் இப்படி டையடானுச்சி…? என்ன ஒரு மெடிக்கல் மிராக்கல் பாத்தியா…! என அதிசயபட்டவனை பார்த்து தோழிகள் இருவரும் அதிர்ச்சியாய் பார்த்தனர்…
"என்ன டாலு இப்படி பாக்குறிங்க இரண்டு பேரும்… எனக்கு வெக்க வெக்கமா வருது தெரியுமா…? என வெட்க படுவதுபோல வாயில் விரலை வைத்து தரையில் காலால் கோலம் போடவும், தோழிகள் இருவரும் அவன் செய்யும் சேட்டையை பார்த்து சிரித்து விட்டனர்… அவனும் உடனே அவர்களின் முன் தன் கையை நீட்டி,
" ஃப்ரெண்ட்ஸ் என கேட்கவும், கயலும் தன் கையை அவனின் கையோடி சேர்த்து, ஃப்ரெண்ட்ஸ் என்றாள்…. அதே மாதிரி சௌமி கிட்டயும் கையை நீட்டி கேட்கவும், முகத்தை ஒரு வெட்டு வெட்டி, அவனை பார்த்து முறைத்து கொண்டு திரும்பி கொண்டாள்…. அவனும் ஒரு தோள் குழுக்களோடு, கயலின் புறம் திரும்பி கொண்டான்….
"நா உனக்கு நன்றி சொல்லதான் வந்தேன் கயல்… அவள் ஏன் என்று பார்க்கவும், "இல்ல… நா தப்பு பண்ணி இருந்தாலும், ஏன் அப்படி பண்ணுனேனு என் தரப்பு நியாயத்த உன் ஃப்ரெண்ட் கிட்ட சொன்னில்ல அதுக்கு தான்… நா வேணும்முனு அன்னைக்கு இந்த பொண்ண தள்ளிவிடல… அது என்னையும் அறியாம நடந்த ஒரு விஷயம்… அதுக்கு நா சாரி எல்லாம் கேட்க மாட்டேன், ஏனா…?
கயலின் காது கிட்டே போய், இந்த ஒட்டட குச்சி எங்க அம்மா கிட்டபோட்டு குடுத்து, என்ன எவ்வளவு தூரம் நடக்க விட்டுட்டா தெரியுமா…? இரண்டு நாளா என்னால எழுந்து நிற்க கூட முடியல தெரியுமா…? என சின்ன பையன் மாதிரி கயலிடம், சௌமி மீது புகார் வாசித்தான்…
அதற்கு கயல் அவனை செல்லமாக முறைத்து வைத்தாள்… அவனும் அதற்கு அழகாய் சிரித்தான்… இவர்களையே உன்னிப்பாய் கவனித்த சௌமி, சரவணனை முறைத்து கொண்டே,
"ஏய் என்னா டி சொன்னான் இவன் என்ன பத்தி… என கேட்கவும் சரவணன் அவளை பார்த்து முறைத்தான்…

"ஏய் சும்மா இருடி, எப்ப பாரு பாயிலருல இருக்குற தண்ணி மாதிரி கொதிச்சி கிட்டே இருக்க… அவன் என் கிட்ட தானே பேசிகிட்டு இருக்கான்…
உன் கிட்ட வந்து வம்பு பேசுற மாதிரி தையாத்தக்கானு குதிக்கிற… என கயல் சொல்லவும், சௌமி முகத்தை தோள்பட்டையில் வெட்டி கொண்டு நகர்ந்து உட்கார்ந்தாள்…
"அது சரி, நா உன்ன அந்த திட்டு திட்டுனேனே, உனக்கு கோவமே வரலையா…? உன்ன திட்டுன என் கிட்டேயே ஃப்ரெண்ட்ஸ் ஆகலாமானு கேட்டியே ஏன்…? என கேட்டாள் கயல்…
அவனும் சிரித்து கொண்டே… " அதுவா… நீ என்ன திட்ட, திட்ட எனக்கு என் அக்கா என்ன திட்டுறமாதிரியே இருந்தது... என சொல்லவும்,
"என்னது அக்காவா"…!
"ஆமா டாலு, எனக்கு ஒரு அக்கா இருக்கா, கவிதா அவ பேரு… ஹாஸ்டல்ல இருந்து படிக்கிறா… நா அவள எவ்வளவு மிஸ் பண்ணுறேன் தெரியுமா…?
உன்ன மாதிரியே வாய் ஓயாம பேசிகிட்டே இருப்பா… எனக்கும் அவளுக்கும் அடிதடி சண்டை எல்லாம் வரும்… ஆனாலும் யாரு கிட்டையும் என்ன விட்டு கொடுக்க மாட்டா… எனக்கு தான் சப்போர்ட்டா இருப்பா…
நீயும் அவள மாதிரியே எனக்காக பேசும் போதும், என்னை திட்டும் போதும் அவளை பாக்குறமாதிரியே இருக்கு… அதான் எனக்கு கோவம் வரல… என சொல்லவும், கயலும் அவன் சொன்ன பாவனையில் சிரித்து கொண்டே,
" ம்… அப்ப எனக்கு ஒரு அடிமை சிக்கிட்டுனு சொல்லு, என சொல்லி கல, கலவென சிரிக்கவும், அவனும் சிரித்து கொண்டே… அவள் தலையை தன் கையால் ஆட்டி,
" சரியான வாலு டாலு நீ… என சொல்லவும்…
"அது ஏன் என்னை டாலுனு கூப்பிடுற…?
அதுவா நீ பாக்க அழகா டாலு மாதிரியே இருக்க… கண்ண உருட்டி, உருட்டி பேசுறது, சிரிக்கிறது எல்லாம், அதுவும் உன் கண்ணு கோலிகுண்டு மாதிரி பார்க்க அவ்வளவு அழகா இருக்கும்…
(அடேய் இத மட்டும் செந்தில் கேட்டான் உனக்கு சங்கு தான் மச்சி…)
சரி அப்படியே கூப்பிட்டுக்கோ, அதே மாதிரி, நா உன்ன அண்ணானுலாம் கூப்பிட மாட்டேன், பேரு சொல்லிதான் கூப்பிடுவேன், சில சமயம் வாடா, போடானு கூட கூப்பிடுவேன்… அதலாம் நீ கண்டுக்க கூடாது"...
"அதே மாதிரி உன் பேரும் ரொம்ப லென்தா இருக்கு, அதனால நா உன்ன சரண்ணு தான் கூப்பிடுவேன் ஓகே… என கயல் கேட்கவும் அவனும் சம்மதமாய் தலையை உருடினான்…
இவர்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த சௌமிக்கு ஏனோ எரிச்சலை ஏற்படுத்தியது… தன் கை பொம்மையை அவன் பிடிங்கி கொண்டது போல, சரணை முறைத்த படியே இருந்தாள்…
அவள் ஒருவள் அங்கு இருப்பதை கண்டுக்காமல் இருவரும் தங்கள் பேச்சில் மும்முரமாக இருந்தனர்…
அவளின் கோவம் எல்லையை கடக்கும் நிலமை வரும் போது, அவர்கள் இருவரையும் காப்பது போல, செண்பாவும், ப்ரேமாவும் வந்து சேர்ந்தனர்…
பிறகு அவர்களிடமும் சரண் தன் நட்பு பயரை வளர்த்தான்… அவர்களும் அவனுடன் நட்புடன் கைகோர்த்து கொண்டனர்…
இதில் சௌமி மட்டும் ஏனோ அவனுடன் நட்பு கொள்ள முடியாமல் கொஞ்சம் விலகியே இருந்தாள்… அவர்களின் நட்பு நாளுக்கு நாள் பசுமையாக வளர்ந்தது…
ஆனால் சௌமி, சரண் மட்டும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள்…
செந்திலிடம் போனில் பேசும் போது எல்லாம் சரண் புராணம் தான் பாடுவாள் கயல்…
ஆரம்பத்தில் சரவணனை பற்றி பேசும் போதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை செந்திலுக்கு….
ஆனால், நாட்கள் செல்ல செல்ல, கயல் சரண் அதை செய்தான், சரண் இதை செய்தானு அவனை பற்றியே பேசுவது கேட்டு, ஏனோ அவனை அறியாமலே எரிச்சல் பட்டான்…
அதன் பிறகு அவள் சரணை பத்தி பேச ஆரம்பித்தாலே, அவள் அறியாமலேயே பேச்சை மாற்றி விடுவான்…
'ஏன் எனக்கு அந்த சரணை பத்தி பேசுனாலே பிடிக்கல…? சின்ன பையன் தானே, பாப்புக்கு எவ்வளவு உதவியா இருக்கான்'
'ஆனா எனக்கு ஏன் அவன பிடிக்கமாட்டேங்குது…? என்ன யோசித்தாலும் அவனால் அதுக்கு விடை தேட முடியவில்லை…
அதை யோசிக்க, யோசிக்க அவனுக்கு பைத்தியம் பிடிப்பது போல் ஆகவும், யோசிப்பதையே விட்டு விட்டான்… இப்படியே குழப்பத்திலேயே அவனின் நாட்கள் மாத கணக்கில் சென்றது…
அவனுக்கு தெளிவு கிடைக்கும் நாளும் ஒரு நாள் வந்தது…. அதுவும் கயல் 12ம் வகுப்பில் இருக்கும் போது…
காலம் யாருக்கும் நிற்காமல், ஜெட் வேகத்தில் சென்றது… செந்தில் BE civil கடைசி வருடத்தில் இருந்தான்… கயல் 12ம் வகுப்பில் இருந்தாள்…
சரவணன் தன் அன்னையை தனியாய் விட்டு செல்ல மனம் இல்லாமல், பக்கத்து ஊரில் உள்ள எஞ்சினியரிங் கல்லூரியில் தன் முதலாம் வருட படிப்பை ஆரம்பித்து இருந்தான்…
இந்த மூன்று வருடத்தில் செந்திலின் நால்வர் படை அதிகம் ஊருக்கு வரவே இல்லை…
வருடத்திற்கு இரண்டு முறைதான், அதுவும் ஒரு வார விடுமுறையில் தான் வருவார்கள்…
அதனால் தான் என்னவோ கயலிடம் தன் நேசத்தை உணர்ந்து கொள்ள செந்திலுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை...அதை அவன் உணரும் நாளும் வந்தது…
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN