வண்ணத்துப்பூச்சி_8

Shivantini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்

" அக்கா…" என கூப்பிட்டபடியே அந்த யுவதியை நோக்கி ஓடினர் .. கயலும், சரணும்... அவளும் ஓடிவந்த இருவர்களின் கையை பிடித்துக் கொண்டு தன் சந்தோசத்தை வெளிபடுத்தினாள்…​

இருவரும் அவளை அழைத்துக் கொண்டு நால்வர் அணி நிற்க்கும் இடத்திற்கு வந்தனர்…​

"அத்தான் நா சொன்னேலா சரணோட அக்கா இவங்கதான் பேரு கவிதா… என கவிதாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்….கவிதாவிற்கும் அவர்களை அறிமுகபடித்தினாள்…​

"கவிதாக்கா இவங்க தான் என் அத்தான் செந்தில்,​

அப்புறம் இவங்க என் மாமா வருண்,​

இது பெரியண்ணா கதிரவன்,​

இது சின்ன அண்ணா அருளரசன்… என அவர்களை அறிமுக படித்திவிட்டு,​

நால்வர் அணியை நோக்கி,​

"உங்க மேல எல்லாம் நா கோவமா இருந்தேன், ஆனா இப்ப போனாபோவுது, ரொம்ப நாளாச்சே பார்த்துனுதான் பேசுறேன், இல்லனா பேசி இருக்கவே மாட்டேன்… என கயல் சொல்லவும், கல்லதனமாய் கவியை நோட்டம் விட்டு கொண்டு இருந்த கதிர்,​

"ஏன் டா குட்டிமா, எங்க கூட பேசாத அளவுக்கு, நாங்க என்ன டா தப்பு பண்ணுனோம்… என கேட்கவும்…​

" ஏனா …? ஏன் கேட்கமாட்டிங்க, எத்தனை தடவ கவிதா அக்காவ பத்தி சொல்லி இருப்பேன், நீங்க ஒரு தடவையாவது அவங்கள போய் பார்த்திங்களா…​

யார போய் பார்க்கல நாம…? என மூவரும் யோசித்தனர்… செந்தில் இதில் கவனம் செழுத்தவே இல்லை, அவன் கவனம் முழுவதும் கயலுடன் சேர்ந்த சரணின் கைகளின் மீதே இருந்தது….​

யாரை போய் பார்க்கலை,என எதுவும் கேட்காமல், அவள் சொல்வதை கேட்டுகொண்டு அமைதியாய் நின்றார்கள்… இல்லைனா யாரு கயலிடம் பாட்டு வாங்குவது, என முன் ஜாக்கிரதையா தான் நின்றிருந்தனர்…​

"இவங்களும் நீங்க படிக்கிற காலேஜ்ல தான் படிக்கிறாங்கனு சரண் சொன்னப்ப, அட நம்ம பயபிள்ளைகளும் அங்க தானே படிக்குது, அதுங்க கிட்ட ஒரு வார்த்த சொன்னா இடையில போய் பார்த்துக்கு வாங்கலேனு சொன்னா, ஒரு பயலுகளும் போய் பார்க்கல…. என முறுக்கி கொண்டாள்….​

" என்னது இவங்க நம்ம காலேஜ்ஜா…! என வாயை பிளந்தனர் வருணும், அருணும்… கதிருக்கும் அதிர்ச்சியாய் தான் இருந்தது, அதை விட எப்போ கயல் இவளை பத்தி சொன்னாள் என்ற கேள்விதான் முதலில் குழப்பியது… அதை கயலிடமும் கேட்டான்…​

"என்னது….! எப்ப சொன்னேனா…? சரண் கவிக்காவும் உங்க காலேஜ் தானு சொல்லவும் அன்னைக்கே அத்தான் என்கிட்ட பேசுறப்பவே சொல்லிட்டேன், உங்க கிட்டேயும் சொல்லனுமுனு சொல்லவும் நானே சொல்லிக்கிறேனு சொல்லிட்டாங்களே, ஏன் உங்களுக்கு தெரியாதா…? என கேட்டு, அக்காவுக்கும் நீங்க எல்லாம் துணையாக இருப்பிங்கனு நினைச்சேன்,​

ஆனா நா சொன்னத யாரும் மதிக்கவே இல்ல, அக்கா கிட்ட பேசுறப்ப எல்லாம் கேட்பேன் நீங்க யாராச்சும் அவங்கள வந்து பார்த்து பேசினிங்களானு, ஆனா நீங்க யாருமே போய் பார்க்கல, நா கூட அக்கா கிட்ட கேட்டேன்,​

நா வேணா இன்னொரு டையம் உங்ககிட்ட எல்லாம் கேட்கட்டுமானு கேட்டேன், அக்காதான் வேணாம், நா பாத்துகுறேன், அப்படினு சொல்லிட்டாங்க… என சொல்லி முகத்தை திருப்பி கொண்டாள்…​

அவள் அப்படி சொல்லவும், மூவரும் சேர்ந்து செந்திலை முறைத்தனர்… அதலாம் அவன் கணக்கிலே எடுத்து கொள்ளவே இல்ல, அவர்களை பார்க்கவும் இல்லை, அவன் கவனம் எல்லாம் கயல், சரணிடமே இருந்தது…​" டேய் மச்சி இந்த பிக்காலி பய பண்ணுன வேலையால இப்ப நாம தான் இந்த குட்டி பிசாசுகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறோம், ஏன் டா இவன் இந்த பொண்ண பத்தி நம்ம கிட்ட சொல்லல, என வருண் அருளின் காதில் முனுமுனுத்தான்… கதிருக்கும் அதே யோசனை தான்.​

"இப்ப சொல்லுங்க நா உங்க மேல கோவபட்டது சரிதானே.. என கயல் கேட்கவும்,​

"குட்டிமா சாரி டா, எங்களுக்கு நீ இப்ப சொன்ன விஷயம் கொஞ்சம் கூட தெரியாது, இவன் எங்க கிட்ட இந்த பொண்ண பத்தி சொல்லவே இல்ல டா, சொல்லி இருந்தா நாங்க அவங்கள போய் பார்த்து இருப்போம், கோச்சிகிடாத டா குட்டிமா…. என அருள் கயலை சமாதான படுத்தவும்,​

"என்னது அத்தான் உங்க கிட்ட சொல்லலையா…? என அருளை கேட்டு, செந்திலை கேள்வியாய் பார்க்கவும்,​

அவன் எந்த பதட்டமும் இல்லாமல், "சொல்ல மறந்துட்டேன், அதுக்கு என்ன இப்போ… என கோவமாய் கேட்டு, தன்னை போட்டு கொடுத்த அருளை முறைத்தான்...​

ரோட்டில் நின்று இந்த பேச்சு வார்த்தையை வளர்க்க விரும்பாத கவிதா, நிலைமை மோசம் ஆகும் முன், தன் சிற்பி வாய் திறந்து,​

"பரவால டாலுமா, இனிமேலும் இத ஏன் பெருசு படுத்துற, விடு டா நாம கிளம்புவோம் மணி ஆகிட்டு… " என சொல்லவும்,​

"சாரிங்க எங்களுக்கு தெரியாது இல்லைனா வந்து பார்த்துருப்போம், ஆமா நீங்க எந்த இயர், என்ன டிப்பாட்மெண்ட் … என கதிர் கேட்கவும்,​

"அச்சோ என்னங்க சாரில்லாம் கேட்குறிங்க… பரவால்லை விடுங்க, நா கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் தேட் இயர் படிக்கிறேன்… நா உங்க எல்லாரையும் பார்த்து இருக்கேன்… என சொல்லி கதிரின் கண்களுடன் தன் கண்களை நொடியில் கலக்கவிட்டு, விளகிகொண்டாள்…​

அவனுக்கு அவள் கண்கள் ஏதோ செய்தி அனுப்பியதோ என்று தோன்றியது…​

" அப்படியா அப்ப நீங்க வந்து எங்ககிட்ட பேசி இருக்கலாம் இல்ல… என அருண் கேட்கவும்,​

"இல்ல அது ஒரு மாதிரி தயக்கமா இருந்துச்சு அதான்…​

"சரி பரவாலில்ல விடுங்க இப்ப தான் நாம அறிமுகம் ஆகிட்டோம் இல்ல, இனிமே நீங்களும் எங்க கேங்குல ஒரு மெம்பர் ஆகிடுங்க… என சொல்லி வருண் தன் நட்பு கரத்தை நீட்டினான்… அதை மற்ற இருவர்களும் கூட ஆமோதித்தனர்…​

அவளும் சிரிப்புடனே, "அப்ப ஓகே ஆனா நீங்க என்ன வாங்க போங்கனு கூப்பிடகூடாது, வா போனே கூப்பிடுங்க என சொல்லி அவளும் அவர்களின் நட்பு கரத்தினை பற்றிக்கொண்டாள்….​

இங்கே இவ்வளவு நடக்கும் போது கூட செந்திலின் கவனம் திரும்பவே இல்லை…​

" டேய் மச்சான் என்ன டா ஒன்னும் சொல்ல மாட்டேங்குற, இனிமே கவியும் நம்ம செட்டுதானு சொல்லு… என அருண் அவனை உளுக்கவும்,​

"ம்… என்ன டா சொல்ல…?​

" ம்ம் சுரைக்காய்க்கு உப்பு இல்லனுதான்… என அவனை முறைத்து விட்டு இதுவரை அவர்கள் பேசியதை சொல்லவும்…​

" ஆமா மா இனிமே நீயும் எங்களுல ஒருத்திதான்… சாரி மா எதோ ஒரு நினைப்புல பாப்பு சொன்னத சரியா கவனிக்கல, இல்லைனா வந்து பார்த்து இருப்போம்… இனி நீ எப்ப வேணாலும் எங்க கூடவந்து பேசலாம், எதுவும் உதவினா கூட தயங்காம கேட்களாம்… என மன்னிப்பு கேட்டு செந்தில் பேசவும்,​

என்ன சீனியர் இதுகெல்லாம் சாரி கேட்குறிங்க, பரவாயில்லை விடுங்க, இப்ப தான் நாம பிரண்ட்ஸ் ஆகிட்டோமே… விடுங்க, அப்புறம் நன்றி சீனியர்… என்னையும் உங்க குரூப்ல சேர்த்து கிட்டதுக்கு, என கவிதா சொல்லவும்,​

நமக்குள்ள என்னமா நன்றி… ஃப்ரண்ட்ஸ் குள்ள, சாரி, நன்றி எல்லாம் இருக்க கூடாது என்ன… என அவன் கூறவும்,​

அவளும் புன்னகையுடன் தலையை அசைத்தாள்….​

அவளின் இந்த செய்கையில் கதிரின் மனதும் அசைந்துதான் போனது….​

இவ்வளவு நேரம் இவர்கள் பேசுவதை பார்த்து கொண்டு இருந்த கயலுக்கு, அவர்கள் கவியுடன் நட்பு வைத்து கொண்ட பிறகு, அவர்களின் மேல் உள்ள கோவம் குறைந்தது, ஆனாலும் தன் கெத்தை விடாமல்,​

"சரி அக்கா வாங்க போலாம்… என சொல்லி நால்வர்படையை ஒரு முறை முறைத்து விட்டு கிளம்பினாள்… அதை பார்த்த செந்தில்,​

"நீ எங்க கூட வா பாப்பு போகலாம் என கூப்பிடவும்.​

"நா யாரு கூடவும் வரவும் மாட்டேன், பேசவும் மாட்டேன் என சொல்லி விட்டு சரணின் கையை பிடித்து கொண்டே நடக்க ஆரம்பித்தாள்… செந்திலால் கயல் பாராமுகம் காட்டுவதை தாங்க முடியவில்லை…​

"டாலு ஏன் இப்படி கோவமா பேசுற, பாவம் அந்த அண்ணாவுக்கு நீ இப்படி சொல்லவும் முகமே வாடிபோயிட்டு, ஏதோ மறந்துட்டாங்க விடேன்…அதான் இப்ப எல்லோரும் ப்ரெண்ட் ஆகிட்டாங்கள, இத பெருசு பண்ணாத, நாங்க கிளம்புறோம், நீ அவங்க கூட வா… என சரண் கயலை சமாதானம் செய்து விட்டு, நால்வர் படையிடம் கிளம்புவதாக தலையசைத்து விட்டு, தன் அக்காவை அழைத்து கொண்டு சென்றுவிட்டான்… முகத்தை தூக்கி கொண்டு இருந்தவளிடம் வந்த செந்தில்,​

"சாரி டா பாப்பு ஏதோ ஒரு நியாபகத்துல மறந்துட்டேன், மன்னிச்சுகோ டா… என காதை பிடித்து கொண்டு நிற்கவும்,​

"அச்சச்சோ என்னத்தான் இது மன்னிப்பு எல்லாம் கேட்குறிங்க, பரவால விடுங்க, வாங்க வீட்டுக்கு போகலாம்" என நடக்க ஆரம்பித்துவிட்டாள்… அவள் பின்னே வந்த வருணும், அருணும்​

"இந்த குட்டிசாத்தானுக்கு இருக்குற கொலுப்ப பாத்தியா, நா எதோ சின்ன தப்பு பண்ணதுக்கு, நடுரோடுனு பார்க்காம தோப்பு கரணம் போடவச்சா, இப்ப பாரு இவன் எவ்வளவு பெரிய விசயத்த மறச்சி இருக்கான், ஆனாலும் சர்வசாதரனமா பரவால விடுங்கனு சொல்லுறா, எவ்வளவு திமிரு இருக்கும் அவளுக்கு" என வருண் புலம்பவும் அருணும்​

"ஆமான் டா மாப்பு, குட்டச்சி ஓவரா போறா" என அருணும் புலம்பிய படியே வந்தனர்… அவர்களுடன் கதிர் என்னவென்றே தெரியாத ஒரு மோன நிலையில் நடந்துவந்தான்… யாரும் பேசி கொள்ளவில்லை, அவர் அவர் சிந்தனையில் நடந்தனர்…​

கயலின் வீடு இருக்கும் தெரு வந்தவுடன், வருணும் கயலும் அவர்களிடம் சொல்லி கொண்டு சென்றனர்… போகும் அவர்களை பார்த்த படியே நின்ற செந்திலும் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, தன் வீட்டை நோக்கி நடையை கட்டினான்…​

இன்றைய விடியல் செந்தில் வாழ்வில் மறக்கமுடியாத விடியலாக அமைய போவதை அறிந்தானோ என்னவோ, புத்துணர்ச்சியோட கிளம்பினான், ஏனேன்றே தெரியாமல் அவன் மனதுக்குள் சந்தோஷம் பொங்கியது… சீட்டி அடித்து கொண்டே கிளம்பினான் கயலின் பள்ளிக்கு….​

"டேய் என்ன டா பண்ணுற, நானே கிளம்பி நேரத்தோட வந்துட்டேன், நீ இன்னும் புது மாப்பிள்ளை மாதிரி கிளம்புற, கிளம்புற கிளம்பிக்கிட்டே இருக்க, ஏன் டா இந்த அக்கபோரு பண்ணுற… என கதிர் சலித்து கொள்ளவும்,​

"என்ன மச்சி இப்படி சொல்லிட்ட, ஏதோ இன்னைக்கு கொஞ்சம் லேட்டாச்சு அதுக்கு இப்படி சலிச்சிகிற, நா பாவம் இல்ல… என அவன் தாவையை பிடித்து கொண்டு கொஞ்சவும்,​

"அட சை கருமம், பொம்பளை பிள்ளையை கொஞ்சுறமாதிரி கொஞ்சுற, இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு, ஒரு மார்க்கமா இருக்க… என அவனை மேலும் கீழும் பார்த்தான் கதிர்.​

"என்னனு தெரியல மச்சி, மனசெல்லாம் இறக்கை கட்டி பறக்குறாப்ல அவ்வளவு சந்தோஷமா இருக்கு, வாய் விட்டு கத்தி பாடனும் போல இருக்கு, சொல்ல தெரியல என்னமோ பண்ணுது டா இங்கே என தன் இதய பகுதியை தடவி காண்பித்தான்… அவன் செய்கையை பார்த்த கதிர்,​

"ஏன் மாப்பு, டாக்டர் கிட்ட போய் பார்போமா, நீ சொல்லுறத பார்த்தா எனக்கு பயமா இருக்கு டா … என அவன் தோளை பிடித்து கொண்ட கேட்டான்…​

" சே போடா அங்குட்டு, உன்கிட்ட சொன்னேன் பாரு, உடம்பு எல்லாம் நல்லாதான் இருக்கேன், இது வேற டா, என்னனு சொல்ல தெரியல, விடுபார்ப்போம், ரொம்ப நாள் அப்புறம் எல்லாரையும் பார்த்தேன்ல அது கூட இருக்கலாம். விடு மணி ஆகிட்டு போகலாம் வா.. என கதிரை அழைத்து கொண்டு தன் ராயல் என்ஃபீல்ட்டில் கிளம்பினான்…​

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN