வண்ணத்துப்பூச்சி_9

Shivantini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்

செந்திலும், கதிரும் பள்ளியில் போய் இறங்கும் போது, அருணும், வருணும் இவர்களுக்காக காத்துகொண்டு நின்றனர்…அதை பார்த்த கதிர்,​

"என்ன டா எங்களுக்கு முன்னாடி வந்துருக்கிங்க, எங்கேயும் கிளம்பனும்னா, உங்கள தார் குச்சி வச்சிதான குத்தி கிளப்பனும், இப்ப என்னாடானா எங்களுக்கு முன்னே வந்து நிக்கிறிங்க என்னா டா விஷயம்…​

"ஹி...ஹி அது இல்ல மச்சி பாப்பா தான் இன்னைக்கு எங்க கிளாஸ் பொண்ணுங்க எல்லாம் சாரி கட்டிட்டிவருவாங்க நானும் கட்டிட்டு போனும் அப்படினு சொன்னா,​

அதான் கொஞ்சம் முன்னாடியே வந்து கண்ணுக்கு கொஞ்சம் சார்ஜ் ஏத்தலாம்முனு…. என வருண் இழுக்கவும், அவர்களை பார்த்து, கதிரும்,செந்திலும் காரி துப்பினார்கள்…​

" விடு டா… விடு டா… இதுலாம் வாழ்க்கையில சாதாரணம், இதுக்கு எல்லாம் நாங்க அசருவோமா என்ன…! வாங்க போகலாம் நீங்க வந்த உடனே பாப்பா உங்கள உள்ளே அழைச்சிகிட்டு வரசொன்னா வாங்க… என ஸ்கூலின் உள்ளே அழைத்து சென்றான்…​

உள்ளே சென்ற உடன் செந்திலின் கண்கள் கயலை தேடி சுழன்றது...​

சிறிது நேரத்தில் ஃபங்ஷன் ஆரம்பிக்க போவதால் மாணவ, மாணவிகள் இங்கையும் அங்கையும் நடந்த படி ஒரே பர,பரப்பாக இருந்தனர்…​

தமிழர் பாரம்பரிய படி வேட்டி, சட்டையில் மாணவர்கள் ஒரு இடத்தில் பொங்கல் வைக்க, செங்கலை வைத்து அடுப்பு ரெடி பண்ணி, அதன் இரு புறமும் கரும்பு வைத்து கட்டி, அடுப்பு எரிக்க விறகு ஒரு புறம் அடிக்கி வைத்தனர்…​

மாணவிகள் தாங்கள் கட்டி கொண்டு வந்த பட்டு புடவையை தூக்கி இடுப்பில் சொருகி, பொங்கல் வைக்க, அரிசி கலைந்து கொண்டும், மற்ற பொருட்களை எடுத்து வைத்தும், தண்ணீர் தூக்கி கொண்டு வருவதுமாக இருந்தார்கள்… டீச்சர்ஸ் அவர்களை மேற்பார்வை பார்த்த படி இருந்தனர்…​

"டேய் அங்க பாரு டா மச்சி, பொண்ணுங்கனா இவங்க தான் டா, என்னா அழகா குடத்தை தூக்கிகிட்டு அன்னம் போல் நடந்து வராங்க பாரு, அட அட இது அல்லவோ அன்ன நடை… என வருண் அருணிடம் வருணிக்கவும், அவர்களை பார்த்து கடிந்து கொண்டு, முறைத்த செந்திலும், கதிரும் அவர்கள் பார்வை போன இடத்தில் பார்க்கவும் இமைக்கவும் மறந்து விட்டார்கள்.​

அங்கு தங்கநிற ஜரிகையில் அரக்கு வண்ண பட்டுபுடவையில், இடுப்பு வரை இருந்த கூந்தலை பின்னி அதன் முனையில் குஞ்சம் வைத்து கட்டி, தலையில் அழகாய் கட்டிய முல்லை சரம் வைத்து, காதில் கொஞ்சி,கொஞ்சி முத்தமிட்ட படியே ஆடும் குடை ஜிமிக்கியும், நெற்றியில் சின்னஞ்சிறு கல் பொட்டு வைத்து, அவளின் அழகிய மீன்விழியில் அஞ்சனம் தீட்டி, இயற்கையான செவ்விதழ்களும், அதில் முத்து பல் சிரிப்பும், சங்கு போன்ற கழுத்தும் அதில் நீண்ட லெட்மிடாலர் செயினும், பார்பவர்கள் மயங்கி வழுக்கி விழும் பொய்யோ இடையில் குடம் ஏந்தி கயல் நடந்து வரும் அழகில் செந்திலின் இதயம் சத்தமில்லாமல் நழுவி விழுந்தது…​

பக்கத்தில் கதிரின் நிலமையோ அதற்கு மேல் இருந்து, கயலுடன் முத்து பல் சிதற சிரித்து, கயலை போன்று உடை அலங்காரத்தில் நடந்து வந்த கவிதாவை பார்த்து தான் கதிர் ப்ரம்மை பிடித்தது போல் அமர்ந்து இருந்தான்…​

கவியை நேற்று தான் பார்த்தான் என்பதையே அவனால் நம்ப முடியவில்லை, அவளின் அழகிய வதனமும், நளினமும்,சிரிப்பும் அவனை பித்தாக்கி வைத்தது… இவர்கள் இரண்டு பேரும் தங்களது மோனனிலையில் இருக்க, அருணும் வருணும்,​

" டேய் மச்சி, இந்த குட்டி பிசாசு இன்னைக்கு தேவதை போல இவ்வளவு அழகா இருக்கா…! என கயலை பார்த்து வருண் வாயை பிழக்கவும்…​

அருணும் ஆமா மச்சான், பக்கத்துல பாரேன் அந்த கவிதா பொண்ண அதுவும் தேவதை கணக்கா இருக்கு என இருவரும், கயலையும் கவிதாவையும் சைட் அடிப்பதை பார்த்து இங்கு செந்திலுக்கும், கதிருக்கும் கொலவெறி ஆகியது…​

இவர்களை கவனிக்காத அவர்கள் தங்கள் பணியை தொடர்ந்து கொண்டு இருந்தார்கள்… (அதாங்க சைட் அடிக்கிறது)​

அதற்க்கும் மேலும் பொறுக்க முடியாமல் செந்தில் வருணையும், கதிர் அருணையும் மொத்த தொடங்கினர்…. திடீர் என்று முதுகில் விழுந்த அடியில் துள்ளி குதித்தவர்கள்,​

"ஏன் டா எங்களை அடிச்சிங்க? என இருவரும் கேட்கவும், செந்தில் கதிர் இருவரும் முழித்தனர்… என்ன சொல்வதென்று,​

அவர்களிடம் என் ஆளை நீ சைட் அடிக்கிறது எனக்கு பிடிக்கல அதனால் தான் அடிச்சேனு சொல்லமுடியுமா… என இருவரும் மனதுக்குள் நினைத்தனர்… அப்போது தான் நியாபகம் வந்தது போல இருவரும் ஒரே நேரத்தில்,​

"ஆமா நீ ஏன் அடிச்ச அவனை ஒன்று போல் கேட்கவும், அதை பார்த்து கொண்டு இருந்த வருண்,​

"டேய் நா கேட்குறத்துக்கு பதில் சொல்லு எதுக்கு என்ன அடிச்ச?​

" அது இப்படி சின்ன பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல்ல வந்து சைட் அடிக்கிறியே யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க என கேட்கவும், அவன் மனசாட்சி ' ஏன் ராசா அத நீ சொல்லுறியா, இவ்வளவு நேரம் கயலை பார்த்து ஜொல்லு விட்டியே அப்ப தெரியலையா சின்ன பிள்ளனு' என பாய்ண்ட்டை பிடிக்கவும்,​

'ஏய் நீ சும்மா இரு, அவ என் மீனுகுட்டி நா எப்ப வேணாலும் சைட் அடிப்பேன், ஆனா வேற யாரும் அவள சைட் அடிக்க கூடாது' என இவன் நியாயம் பேசவும் அவன் மனசாட்சி கப் சிப் என்று அடங்கியது…. இங்கு செந்தில் பேசவும் கதிரும்,​

"ஆமா ஆமா நானும் அதுக்குதான் உன்னை அடிச்சேன் என அருணை பார்த்து சொல்லவும், செந்தில் நம்பாத பார்வை ஒன்றை வீசினான்… அதை கண்டுக்காத கதிர்,​

"இங்க பாருங்க டா, இப்படி ஸ்கூல் ஃபங்ஷன்ல வெளி ஆளுங்க யாரையும் விட மாட்டாங்க, நாம ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்ங்றதாலையும், ஏதோ நம்ம அப்பாங்க மேல உள்ள மரியாதையாலையும் தான் நம்மள உள்ளே விட்டுருக்காங்க, அப்படி இருக்குறப்ப நீங்க இப்படி பொண்ணுங்கள சைட் அடிக்கிறத யாராச்சும் பார்த்தா என்ன ஆகுறது சொல்லுங்க, அதனால நாம இங்கிருந்து கிளம்புற வரை உங்க சேட்டை எல்லாத்தையும் மூட்டகட்டி வைங்க சரியா… என கதிர் கேட்கவும்,​

வருணும், அருணும் பொண்ணுங்களை ஒரு முறை திரும்பி பார்த்து ஏக்கமாய் பெருமூச்சை விட்டு, மனதே இல்லாமல் சரி என்றனர்…​

அப்போது அருண், ஆ... வென்று அலரவும், மற்றவர்கள் என்னவென்று திரும்பி பார்த்தார்கள்…​அங்கு அருணை சௌமியும், பிரேமாவும் சேர்ந்து மொத்தி எடுத்தனர்….​

"ஏய் விடுங்க டி, ஏன் டி..? இப்படி அடிக்கிறிங்க, கொஞ்சமாச்சும் அண்ணனு மரியாதை தறிங்களா, ஐயோயோ எல்லாரும் பாக்குறாங்க டி, என் மானத்த வாங்காதிங்க விடுங்க டி… என அலறினான்…​

"டேய் அண்ணா யாரு மானத்த யாரு வாங்குறது, நீங்க இரண்டு பேரும் வந்ததுலேயிருந்து பண்ணுன கோமாளி தனத்த பாத்துட்டு எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எங்கள பார்த்து நக்கலா சிரிக்கிறாளுங்க, எங்க மானமே போச்சு, என வருணையும் சேர்த்து முறைத்து விட்டு, இன்னும் மொத்தி எடுத்தனர்…​

அதில் பிரேமாவின் முறைப்பு வருணுக்கு கொஞ்சம் சுவாரசியமாய் இருந்தது, அவள் சின்ன கண்ணை, மிரட்டுவதாய் நினைத்து உருட்டி, உருட்டி பார்ப்பது அவனுக்கு சிரிப்பை வர வைத்தது… அருணோ தன் தங்கைகளை பாவமாய் பார்த்து,​

" மீ பாவம் வேணாம் விட்டுடுங்க வலிக்குது, நா அப்புறம் அழுதுருவேன் என வடிவேலு மாடுலேஷனில் சொல்லவும், கிளுக் கென்று சிரித்தால் செண்பா , அதை பார்த்த அருண்​

"ஏய் சொம்பு ஏன் டி இப்ப சிரிச்ச என வம்பிழுக்கவும்,​

"டேய் வேணா சொம்பு கிம்புனே, மண்டைய பொலந்துருவேன் பாத்துக்க,​

"என்னது டேய்யா, என்னடி கொழுப்பு கூடிபோச்சா, வாய் நீழுது கொஞ்சமும் மரியாதை இல்லாம வாடா போடா சொல்லுற, ஒழுங்கா அத்தானு கூப்பிடு, இல்ல செவுள பேத்துருவேன் பாத்துக்க,​

"பேப்ப…பேப்ப… நீ செவுள பேக்குற வரைக்கும் என் கை பூ பறிக்கும் பாரு, வந்துட்டான் அத்தானு கூப்பிடு, ஆட்டுகுட்டினு கூப்பிடுனு என அவளும் எகிறவும்,​

"ஏய் வேணாம் டி சொம்பு என் கிட்ட வச்சுக்காத, ஆமா சொல்லிட்டேன் என இரண்டு பேரும் தங்கள் தாக்குதலை தொடரவும்,​

"அட சே நிப்பாட்டுங்க, இது ஸ்கூலா, இல்ல சந்தகடையா...​

அப்பா…... வந்ததிலிருந்து ஒரே வாய் தகராறாவே இருக்கு, நீங்க எல்லாம் எப்பவும் இப்படிதான இல்ல இப்ப மட்டும் தான் இப்படியா … ?​

என இவ்வளவு நேரமும் இவர்களின் சண்டையை சுவாரசியாமாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த கவிதா கேட்கவும், எல்லாரும் ஒரு அசடு சிரிப்பு சிரித்து, ஒருவர் தோள்மேல் ஒருவர் கை போட்டு அணைத்து கொண்டு கயல்,​

"நாங்க எப்போதுமே இப்படி தான் அக்கா, எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டா அந்த இடமே கல, கலனு ஜெகஜோதியா இருக்கும்… என சிரித்தாள்… அதை சில நிமிடம் ஆசையாவும், ஏக்கமாகவும் கவிதாவும், சரணும் பார்த்து ,பிறகு அது பொய்யோ என்பது போல சகஜமாய் அவர்களை பார்த்து சிரித்தனர்…​

"சோ ஸ்வீட், எனக்கு உங்கள பார்த்தா பொறாமையா இருக்கு பா, எங்களையும் உங்க குரூப்ல சேர்த்துக்குறிங்களா என கவிதா கேட்கவும், கயல்​

"ஐயோ அக்கா, நீங்க இத சொல்லவும் வேணுமா, அதான் ஏற்கனவே சேர்ந்திட்டிங்களே…. என கயல் கவிதாவை கட்டிகொண்டாள்…​

செந்தில், கதிருமே தன் தேவதைகளின் பின் போகும் தம் பார்வையை அடக்க ரொம்பவே சிரமபட்டனர்… பின் பொங்கல் வைத்து சூரியபகவானை வழிபட்டு பிரசாதம் அனைவருக்கும் வழங்க படவும், அதை எடுத்து கொண்டு, இவர்கள் பள்ளி படித்த காலத்தில் அமர்ந்து சாப்பிட்ட மரத்தடியில் போய் அமர்ந்தனர், அவர்களுடன் சரணும் கவிதாவும் சேர்ந்து கொண்டார்கள்…​

"எவ்வளவு வருசம் ஆச்சி இங்க உட்கார்ந்து சாப்பிட்டு, என மலரும் நினைவுகளுடன் அமர்ந்து சாப்பிட்டனர், அப்போது திடீரென்று செந்தில் கயலிடம் பொங்கலை எடுத்து ஊட்டவும்,​

"அத்தான் … நீங்க எனக்கு இப்படி ஊட்டி எவ்வளவு வருசம் ஆகிட்டு தெரியுமா, இங்க வந்து உட்காரவும் எனக்கு நீங்க ஊட்டி விடுறதுதான் நியாபகம் வந்தது, ஆனா உங்களுக்கு இத எல்லாம் மறந்து இருக்குமோனு நினைச்சேன்… என கண்கள் கலங்கி அவன் ஊட்டிய பொங்கலை சாப்பிட்டாள்….​

அவள் கண்களை துடைத்து விட்டு, "ஏய் பாப்பு நீ என்ன சின்னபிள்ளையா, இப்படி அழுகுற, உன் நினைவு சம்பந்தமான எதையும் நான் மறப்பேனா சொல்லு, எங்கே சிரி என அவளுக்கு ஊட்டிவிட்டு, சிரிக்க வைத்தான்… பிறகு அங்கு பேச்சும் சிரிப்புமாய் கல கல வென்று அந்த நாள் சென்றது…​

இரவெல்லாம் தூங்காமல் கயலின் நியாபகமாகவே இருந்த செந்தில் விடியலின் போதுதான் கண்யர்ந்தான், விடிந்து இவ்வளவு நேரம் ஆகியும் எழும்பாமல் இருந்த மகனை காண மேல வந்த துளசி, அயர்ந்து உறங்கிய மகனை பார்த்து,​

"பிள்ளை பாவம் எவ்வளவு அசதி இருந்தா இப்படி தூங்கும், படிக்க போறேன், படிக்கபோறேனுட்டு உடம்ப இப்படி துரும்பா இளைக்க வச்சிருக்கான்.. என வாய்விட்டு புழம்பிய படியே தன் மகனின் தலைமுடியை கோதிவிட்டார்.. அதில் தூக்கம் கலைந்தவன் தன் அன்னை மடியில் தலையை தூக்கி வைத்து அவர் இடுப்பை கட்டிகொண்டான்..​

"என்னா டா தம்பி எழுப்பி விட்டுட்டனா..?​

"இல்ல மா , எழும்ப வேண்டியதுதான், உன் மடியில இப்படி படுத்து எவ்வளவு வருசம் ஆச்சி, உன்ன ரொம்ப மிஸ் பண்ணுனேன் மா, உன் சாப்பாடு மாதிரி எங்கேயும் கிடைக்கல மா, கிடைக்கிறத சாப்பிட்டுட்டு இருக்கேன்,​

"அதான் உன்ன பார்த்தாலே தெரியுதே, உடம்ப வீணாக்காத தம்பி, நீ இப்படி இருந்தா அம்மாவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா,​

"சரி மா நீ பீல் பண்ணாத நா பார்த்துக்குறேன், அப்புறம் அம்மா... உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும், நா எதும் இதுவரைக்கும் உன் கிட்ட மறச்சது கிடையாது, அதே மாதிரி தான் இதுவும், அது என்னான்னா…. அத எப்படி சொல்ல… என்ன தப்பா நினைக்காத,​

"ஏன் டா இப்படி இழுக்குற, விஷயத்த சொல்லு, என் பிள்ளை தப்பு பண்ணாதுனு எனக்கு தெரியும், அதனால தயங்காம டக்குனு சொல்லு…​

"அம்மா அது வந்து…. நா நம்ம கயல விரும்புறேன் மா…. கல்யாணம் பண்ணுனா அவளதான் பண்ணுவேன்… எப்படி அவ என் மனசுகுள்ள வந்தானு தெரியல , இப்ப எல்லாம் அவளபார்த்தா புதுசா தெரியுறா, அவ என்ன தவிர வேற யார்கிட்ட க்ளோஸ்சா பேசுனாலும் எனக்கு பிடிக்கல, அவ எனக்கே எனக்குனு வேணும்மா, கயல எனக்கு கட்டி வைப்பிங்களா சொல்லு மா …​

"தம்பி என்ன டா சொல்லுற, இப்படி திடீருனு தலையில கல்ல தூக்கி போடுற,​

"ஏ மா உனக்கு கயல பிடிக்கலையா…?​

"சே சே என் தங்கத்த எனக்கு பிடிக்காம போகுமா ஆனா, உங்க அப்பாவ நினைச்சி பார்த்தியா டா, அவருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா அவ்வளவுதான் சாமி ஆடிருவாரு,​

"யம்மா அதலாம் அவருக்கு தெரிய இன்னும் நாலு, ஐந்து வருசம் ஆகும், அதனால அவரபத்தி கவலபடாத, நீ சொல்லு உனக்கு பிடிச்சி இருக்கா கயலு நம்ம வீட்டு மறுமகளா வரது…​

"எனக்கு சந்தோசம் தான் டா, கயலு உனக்கு பொண்டாட்டியா வந்தா சந்தோச படுற மொதோ ஆளு நானாதான் இருப்பேன், எனக்கு என்ன உங்க அப்பா என்னா சொல்லு வாருங்குற கவலதான், வேற என்ன… ஆமா ஏன் நாலு, ஐந்து வருசம் ஆகும் …?​

"அதுவா கயல் படிப்பு முடியனும்ல, அதுவும் இல்லாம நா ME பண்ண போறேன் அதே காலேஜ்ல, அதுக்கு அப்புறம் ஒரு இரண்டு வருசம் வெளியே வேலை செய்துட்டு நம்ம ஊருக்கு வந்து சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கபோறேன், அதுக்கு அப்புறம் தான் கல்யாணம் எல்லாம்… அதுவரையும் லவ் பண்ணுவோம்…​

"ஆமா நீ கயல லவ் பண்ணுறது அவளுக்கு தெரியுமா..? சொல்லிட்டியா…?​

"இன்னமும் இல்லமா, எனக்கே நேத்திதான் நா கயல விரும்புறேனு உணர்ந்தேன், அதுவும் இல்லாம இந்த வருட படிப்பு கயலுக்கு ரொம்ப முக்கியம், அதுல எதும் கவன சிதறல் இருக்ககூடாது, இன்னமும் டைம் எங்களுக்கு இருக்குமா பொறுமையா பார்த்துக்கலாம்…​

"உன்ன நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு தம்பி, உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்… என அவர் சொல்லவும்,​

"என் செல்ல அம்மா…. என தன் தாயை கட்டி கொண்டான்…​

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN