வண்ணத்துப்பூச்சி_10

Shivantini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்

அங்கு கதிரின் வீட்டில், கதிரின் நிலமையோ என்னவென்றே சொல்லமுடியாத ஒரு மயக்கத்தில் இருந்தான். 'அவ என்ன பார்த்தாளா…? இல்ல எனக்கு தான் அப்படி தோணுதா…!​

ஆனா எனக்கு அவள பார்த்து கிட்டே இருக்கனும் போல இருக்கே ஏன்…? எந்த ஒரு பொண்ணும் கிட்டயும் மயங்காத, மயங்க தோணாத என்னை இப்படி பார்த்த ஒரு நாளையிலேயே அவ நினைப்புல புலம்ப விட்டுட்டாளே மாயக்காரி…​

பார்ப்போம் எப்படியும் ஒரே காலேஜ்ல தான் படிக்கனும், அப்ப தெரிஞ்சிரும் இந்த மாயகாரி மேல உள்ள மயக்கம் உடனே தெளிந்து விடுதலை ஆவேனா, இல்ல ஆயுள் கைதியாய் மாறிருவேணானு…. என புலம்பிய படியே கவிதாவின் நினைவில் சுற்றி கொண்டு இருந்தான்…​

தன் தாயிடம் கயலை பற்றி பேசிய பிறகு செந்திலின் மனதுக்குள் இருந்த மகிழ்ச்சி இரட்டிப்பானது…​

அந்த சந்தோசத்துடனே கிளம்பி தன் காலை கடன்களை முடித்து கொண்டு, தன் அன்னை குடுத்த உணவை சுவைகூட அறியாமல் எங்கேயோ பார்வையை வைத்து கொண்டு சிரித்த படியே சாப்பிட்டு விட்டு கிளம்பி வெளியே சென்றான்...​

அவன் நிலமையை பார்த்து துளசிக்கு சிரிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது… தன் மகன் இதே போலவே என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவசரமாக ஒரு வேண்டுதலை கடவுளிடம் வேண்டினார், ஆனால் கேட்க வேண்டிய கடவுளோ, காதில் ஹெட்செட் மாட்டி, பாட்டு கேட்டு கொண்டு இவர் வேண்டுதலை கேட்காமல் விட்டு விட்டார்…​

வீட்டில் இருந்து கிளம்பிய செந்தில் நேராக தன் தாய் மாமாவின் வீட்டுக்கு தான் சென்றான் தன் தேவதையை பார்க்க,​

"அம்மாச்சி" வீட்டில் நுழையும் போதே தன் பாட்டியை ஏலம் விட்டு கொண்ட சென்றான்.. வீட்டின் முத்தத்தில் உட்கார்ந்து இருந்த அன்பரசி,​

" ராசா என் தங்கம் எப்படி ராசா இருக்க…? நீ வந்து இரண்டு நாள் ஆச்சி, இந்த கிழவியை இப்ப தான் வந்து பார்க்க தோணுச்சா"… என செந்திலை கட்டி கொண்டு கண்ணீர் விட்டார்…​

"என்ன டார்லிங் இது நா உண்ண பார்க்க எவ்வளவு ஆசையா வந்தேன் நீ என்னடான இப்படி ஒப்பாரி வைக்கிற, போ நா கோவமா போறேன்… என அவன் முகத்தை திருப்பி கொள்ளவும்.​

"என் ராசா கோச்சிக்காத டா செல்லம், உன்ன பார்த்த சந்தோசத்துல கொஞ்சம் உணர்ச்சி வசபட்டுட்டேன், என அவன் உச்சி முகர்ந்து முத்தமிட்டு அணைத்து கொண்டார், அவனும் அவரை அணைத்து கொண்டு,​

"எப்படி டார்லிங் இருக்குற…? என் மாமா உன்ன நல்லா பார்த்துக்குறாங்களா இல்லயா…? இல்ல இன்னமும் உங்கள தனியா விட்டு விட்டு, அத்த கூட டூயட் பாட போய்ட்டாங்களா…? என கண் சிமிட்டி கேட்கவும்,​

"டேய் படவா நீ மாறவே இல்ல டா, அதே குறும்பு தனம், அப்படியே இருக்கு. என அவன் காதை திருகிய படி வந்தார் சத்தியமூர்த்தியும் தனலெட்மியும்…​

"மாமா, அத்த எப்படி இருக்கிங்க..? என விசாரித்து விட்டு அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்..​

" என்ன மாப்ள இது, காலுலல்லாம் விழுந்து கிட்டு, நல்லா இருப்பா, என தூக்கி அணைத்து கொண்டார்…​

"என்ன தம்பி பொசுக்குனு காலுல விழுந்துட்டிங்க, என தனம் சங்கடமாய் கேட்கவும்,​

"என்ன அத்த நா யார் காலுல விழுந்தேன் என் மாமா அத்த காலுல தானே விழுந்தேன்.. அதவிடுங்க,​

நா வந்து எவ்வளவு நேரம் ஆச்சி, உங்க கையால சமைச்சத சாப்பிடனுமுனு, காலையில எழுந்ததுலேயிருந்து, இன்னமும் பச்ச தண்ணி கூட பல்லுல படாமா ஓடி வந்து இருக்கேன், நீங்க என்னடானா என்ன வெறும் வயத்தோட திருப்பி அனுப்பிருவிங்க போலிருக்கு…​

என சோகமாய் முகத்தை வைத்து கொண்டு, தனத்தின் தலையில் ஐஸ் மலையை தூக்கி வைத்தான்…​

( அட பாவி உங்க அம்மா செஞ்சி வச்ச சாப்பாடு என்னனு கூட பார்க்காம காத்துல கனவு கண்டுகிட்டு நல்லா மொக்கிட்டு வந்துட்டு என்னமா ரீலு சுத்துற இதுலாம் அடுக்குமா)...​

என அவன் மனசாட்சி கேவலமாய் காறி துப்பியதை துடைத்து எறிந்துவிட்டு, பால்வடியும் முகமாய் அமர்ந்து கொண்டான்…​

அதை கேட்ட தனம் "என்ன தம்பி இப்படி சொல்லிட்டிங்க இன்னைக்கு முழுதும் இங்கதான் சாப்பாடு உங்களுக்கு… என அவர் விருந்து சமைக்க போய்விட்டார்… அதன் பிறகு அங்கு சிரிப்பும், சத்தமுமாய் சென்றது, அவர்களுடன் அப்போது தான் தூங்கி எழுந்து வந்த வருணும் சேர்ந்து கொண்டான்…​

"என்ன அம்மாச்சி இன்னமும் கயல காணோம். அவளுக்கு இன்னைக்கு ஸ்கூல் இல்லனு சொன்னா, அப்புறம் ஏன் இப்ப ஸ்கூல் போயிற்கா..?​

"அது ஒன்னும் இல்ல ராசா, இவ பண்ணண்டாப்பு படிக்கிறாளா அதனால என்னமோ ஸ்பேஸ்கிளாஸ் வச்சிருக்காங்கனு நம்ம சௌமி புள்ள வந்து கூட்டிக்கிட்டு போச்சி,​

"என்னது ஸ்பேஸ்கிளாஸா… என வருண் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தான்… சிரித்து கிட்டெ, ஹா… ஹா…ஹா…. ஐயோ பாட்டிமா அது ஸ்பெசல் கிளாஸ்… ஸ்பேஸ்கிளாஸ் இல்ல என வருண் திருத்தவும்,​

" டேய் படவா என்னையே கிண்டல் பண்ணுறியா, எனக்கு இப்படி தான் வரும்… என அவன் காதை பிடித்து திருகினார்…​

"ஐயோ பாட்டி வலிக்குது விடுங்க. நீங்க எப்படி வேணா சொல்லிக்குங்க, என்ன விடுங்க என தன் காதை தேய்த்து கொண்டான்…​

இது எதையும் கண்டு கொள்ளாமல் கயலை பார்க்கமுடியாத வருத்தத்தில் இருந்தான் செந்தில்.​

"என்ன ராசா யோசன,​

" இல்ல பாட்டி சும்மாதான்…​

"இன்னும் எவ்வளவு நாளு ராசா லீவு இருக்கு,​

"இன்னமும் பத்து நாள் இருக்கு பாட்டி, அதுக்கு அப்புறம் நாங்க போனா திருப்பி வர எப்படியும் ஒரு மூனு மாசமாச்சும் ஆகும்…​

"ஆமா பாட்டி நானும் இன்னைக்கு எங்க ஊருக்கு போயிட்டு அப்பா அம்மா கூட ஒரு வாரம் இருந்துட்டு வரேன் … என வருண் சொல்லவும்​

"ஏன் டா படவா இன்னமும் இரண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல,​

"இல்ல பாட்டி நா கிளம்புறேன், எப்படியும் கிளம்புறத்துக்கு இரண்டு நாள் இங்க வந்து தங்கிட்டு தான் போவேன் …​

அதற்குள் சமையலை முடித்து இருந்த தனம், " வாங்க எல்லாரும் சாப்பிடலாம் என அழைத்து, தரையில் வாழை இலை விரித்து, அதில் கேசரி,வடை பொங்கல், இட்லி, வைத்து அதற்கு தொட்டு கொள்ள குடல் குழம்பு, சிக்கன் கிரேவி, கறி பிரட்டல் வைத்து, கூடவே கறி தோசையும் வைத்து இருந்தார்… அதை பார்த்த வருண்,​

"அத்த இப்படி சமைச்சி வச்சா நா எப்படி ஊருக்கு போறது, இந்த ஐட்டத்த எல்லாம் சாப்பிட்டு விட்டு நல்லா தூங்க தான் தோணும், இங்கிருந்து கிளம்பவே தோணாது, என வருத்த படுவது போல் பேசி முதல் ஆளாக இலையில் போய் அமர்ந்தான். அதை பார்த்து மற்றவர்களும் சிரித்த படியே போய் அமர்ந்து சாப்பிட்டனர்…​

செந்திலின் மனம் மட்டும் சாப்பாட்டில் பதியாமல், தன்னவளையே சுற்றி வந்தது…​

"ராசா என்னயா சாப்பிடாம கோதிக்கிட்டு இருக்கிய, வளருற புள்ள நல்லா வளைச்சி கட்டி சாப்பிட வேண்டாமா, இப்படி சாப்பிட்டா எப்படி உடம்புல ஒட்டும்.. என பாட்டி சொல்லவும் வருண் செந்திலை மேலிருந்து கீழாக பார்த்து,​

"ஏன் பாட்டி உனக்கு எதும் கண்ணு கிண்ணு கெட்டு போச்சா, வா எதுக்கும் ஒரு எட்டு டாக்டர பாத்துட்டு வந்துடுவோம்…​

" எலேய் கோட்டி பயலே யாருக்கு டா கண்ணு கெட்டு போச்சு, இந்த வயசுலையும் உண்டிகோல் வச்சி குறிபார்த்து அடிப்பேன் டா கிறுக்கா…​

"ஆமா ரொம்ப பெரும தான், உன் பேரன் ஏற்கனவே பனமரத்துக்கு போட்டியா வளர்ந்து கிட்டு இருக்கான் இதுல இன்னும் வளர்ந்தானா அவ்வளவு தான் சொல்லிட்டேன்…​

"அடேய் கண்ணு வய்க்காதடா புள்ளய,​

"ஆமா நாங்க கண்ணு வச்சிட்டாலும் க்கும்… ரொம்பதான் என நொடித்து கொண்டு தன் பணியை தொடர்ந்தான்… அதான் சாப்பிடுறது.​

"அம்மாச்சி கயலுக்கு சாப்பாடு, காலையிலேயே போயிருக்கே, சாப்பிடாம இருந்தா படிப்பு எப்படி ஏறும், நா வேணா கொண்ட கொடுத்துட்டு வரவா…? என செந்தில் கேட்கவும், பாட்டிக்கு எதுவோ புரிவது போல் இருந்தது, புரிந்த விசயம் மகிழ்ச்சியை கொடுத்தது, அதே சமயம் கலக்கமும் தோன்றியது தன் மாப்பிள்ளையை நினைத்து…​

" அம்மாச்சி உன்னதான் கேட்குறேன்.. என கத்தவும்,​

"தம்பி அதலாம் தேவையில்லை, அந்த கழுத நல்லா மொக்கிட்டு தான் போயிருக்கு, போதா குறைக்கு, ப்ரேக் டையத்துல சாப்பிடனும்முனு பார்சல் வேற கொண்டு போயிருக்கு,​

இதுல என்ன கூத்துனா, அவளுக்கு பதினோரு மணி வரைக்கும் தான் க்ளாஸ்சே … என தன் மகளை பத்தி தனம் குறைகூறினார்…​

தனம் பேச ஆரம்பிக்கவும் வடபோச்சே நிலமையில் இருந்தவன், அவர் பேசி முடிக்கும் போது கண்ணா லட்டு திங்க ஆசையா நிலமைக்கு மாறி இருந்தான்… அவனின் முகத்தை பார்த்தே புரிந்து கொண்ட பாட்டி,​

" ஏன் ராசா நீ உன் வண்டியில தானே வந்து இருக்க, கயலு புள்ளய போய் அழைச்சிகிட்டு வரியா…? என கேட்கவும், அவன் முகம் தவுசன் வாட்ஸ் பல்பாய் ஒளிர்ந்தது…​

"ம் சரி அம்மாச்சி, என சாப்பாட்டில் கவனமாய் இருப்பது போல் தலையை குனிந்து கொண்டு தன் மலர்ந்த முகத்தை மறைத்தான்….​

பதினோரு மணிக்கு முடியும் வகுப்பிற்கு பத்தரை மணிக்கே போய் பள்ளியின் கேட் வாசலில் நின்று விட்டான்… தன் மனம் கவர்ந்தவளை முதன் முதலாக தன் வண்டியில் ஏற்றி வரும் தருணத்திற்காக...​

அவனிற்க்கு ஏனோ மனத்திற்க்கு படப்படப்பாய் இருந்தது, ஏனோ அவளிடம் முதன் முதலாய் பேச போவது போல் தடுமாறி நின்றான்,​

அந்த நிமிடம் காச்,மூச் என்று பள்ளியை விட்டு, மாணவ, மாணவிகள் சத்தமிட்டவாறு, பேசி கொண்டே வெளியேறினர், அந்த சத்தத்தில் தன் கவனத்தை திருப்பிய செந்தில், அவர்களை நோக்கி தன் பார்வையை திருப்பினான்…​

அங்கு அவனின் கயல்விழியாள் சௌமியிடம் ஏதோ ஸ்வாரசியமாய் தன் கண்களை உருட்டி,சிமிட்டி பேசி கொண்டே வந்தாள்…​

அவனின் பார்வை அந்த மீன்விழியாளின் பார்வையை விட்டு நொடி கூட நகராமல் சண்டிதனம் செய்தது. செந்திலின் அருகில் வரும் போதுதான் கயலும்,சௌமியும் அவனை பார்த்தார்கள்,​

"அத்தான் என்ன இங்க நிக்கிறிங்க, எதும் வேலையா, இல்ல எங்க க்ளாஸ் மிஸ்ஸ சைட் அடிக்க வந்திங்களா என சௌமி கேட்டாள், ஆனால் அத்தகைய பேச்சு ஏனோ கயலுக்கு இனிக்கவில்லை,​

"சே சும்மா இரு டி, இவ ஒருத்தி வாய்க்கு வந்தத எதயாச்சும் பேசிகிட்டு, என நொடித்து கொண்டு,​

"நீங்க சொல்லுங்க அத்தான் எதும் விஷயமா, இங்க வந்து இருக்கிங்க என்று கேட்கவும்,​

" உன்ன அழைச்சிட்டு போகதான் வந்தேன் பாப்பு… என சொல்லவும்,​

" ஐ… அப்ப வாங்க போகலாம் பசி வேற உயிர் போகுது,​

"ஏன் பாப்பு நீ சாப்பிடலையா…?​

"இல்ல அத்தான், நா படிக்கிற ஆர்வத்துல யானை பசிக்கு சோளபொறி போல கொஞ்சமா சாப்பிட்டேன்,அது பத்தல...​

என் வயிறு வேற என் கிட்ட, அப்போலேருந்து குர்ரு, குர்ருனு சத்தம் போட்டு சண்ட வளர்த்து கிட்டுடே இருக்கு, அதனால வாங்க சீக்கிரம் போகலாம்… என கூப்பிட்டு கிட்டே நகரவும்,​

செந்திலின் மனசாட்சி,​

'என்னது கொஞ்சமா சாப்பிட்டியா, அட கொக்காமக்கா, டேய் செந்திலு நீ இவளுக்கு, வடிச்சிபோறத்துக்கு மட்டுமே தனியா சம்பாதிக்கனும் பாத்துக்க...​

' எதுக்கும் இன்னோரு வாட்டி யோசிச்சிக்க இந்த பம்லிமாஸ் பெட்டர் மாஸ் லைட் தான் வேணுமானு… என சொல்லவும்,​

'சீ பே அங்குட்டு உன்ன யார் கூப்பிட்டா இப்ப, என் மீனுகுட்டிக்கு இல்லாம வேற யாருக்கு நா சம்பாதிக்க போறேன், என்னோடது எல்லாம் அவளுக்குதான், அவ ஃபப்ளியா இருந்தாலும் என்னோட தாக்கும், அவ எப்படி இருந்தாலும் நா ரசிப்பேன்…​

என அவன் தன் மனசாட்சியிடம் தர்க்கம் பண்ணி கொண்டே இருக்கவும்,​

"அத்தான் வாங்க போகலாம் டையம் ஆகுது" என கயல் கூப்பிடும் குரலுக்குதான் நடப்புக்கு வந்தான்..​

"இதோ போலாம் பாப்பு, சரி சௌமி கிளம்புறேன், என்ன செய்யிறான் உன் அண்ணன்காரான்"​

"அது நல்லா சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்குது அத்தான், வீட்டவிட்டு நகரல…​

ஹா… ஹா… சரியான வாழைபழ சோம்பேரி, ம்.. சரி மா நா அப்புறம் வந்து அவன பாக்குறேனு சொல்லு, இப்ப நா கிளம்புறேன்… என சௌமியிடம் விடை பெற்று கொண்டு சென்றான்…​

தன்னவளுடன் தன் வண்டியில் முதன் முறையாக போகும் அந்த ஒவ்வொரு நொடியையும் அணு, அணுவாக ரசித்தான்…​

கயலுக்கும் அது புது அனுபவமாக இருந்தது, 'தந்தையை தவிர, யார் வண்டியிலும் ஏறுனது இல்லை, ஆனால் அத்தான் கூப்பிடவும் டக்குனு ஏறி அமர்ந்துட்டேனே…!'​

ஏறும் போது தெரியாத ஒரு குறுகுறுப்பு, அவனின் அருகாமையில் அமரும் போது தெரிந்தது, ஆனாலும் ஏதோ மனதுக்குள் ஒரு பரவசம் பரவியது…. இருவரும் அவரவர் அருகாமையை ரசித்துக்கொண்டு தம் பயணத்தை தொடர்ந்தனர்….​

இந்த பயணம் இப்படியே நீளாதா என ஏங்கினான் செந்தில்.​

'சே...எவ்வளவு மெதுவாக வந்தும் வீடு வந்து விட்டதே, இந்த மாமா இப்படியா ஸ்கூல் பக்கத்திலேயா வீடகட்டும்' என தன் மாமனை மனதில் திட்டிக் கொண்டே வண்டியை விட்டு இறங்கினான்…​

'சேரி நம்ம மீனுகுட்டி கிட்டயாச்சும் கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு வீட்டுக்குள்ள போவோம், என திரும்பி,​

" பாப்பு நீ…." என அவன் பேச ஆரம்பித்ததை, கயல் அங்கு இல்லாததை பார்த்து பாதியிலேயே நிறுத்திவிட்டான் …​

'எங்க போனா இவ, இப்ப தானே வண்டிய நிப்பாட்டுனேன், அதுக்குள்ள எங்க மாயமானா மாயகாரி… என புலம்பியபடி வீட்டின் உள்ளே சென்றான்..​

உள்ளே சென்று, அவன் கண்கள் அவளை தேடி வட்டமடித்து சுத்தியது,​

ஆனால் அவனின் மாயகாரி வண்டியை விட்டு இறக்கிய உடனே காற்றாய் பறந்து சென்றது, அவள் வீட்டு அடுப்பாங்கரைக்கே…​

(ஹி...ஹி… நமக்கு சோறுதான் முக்கியம்…)​

அவனின் விழிகளின் தேடலை புரிந்து கொண்ட பாட்டி, தன் பேரனுக்கு புரியும் படியாக,​

"ஏன் தனம் பள்ளிகூடம் போயிட்டு வந்த பிள்ளைக்கு சாப்பாட சூடு பண்ணி குடுக்காம ஆறுனதையா கொடுத்த, பிள்ள வந்த உடனே பசினு அடுப்பாங்கரைக்கு போனிச்சு, அங்கேயே உட்கார்ந்து சாப்பிடுதா என்ன… ? என பாட்டி கேட்கவும்,​

"அதலாம் உங்க பேத்திக்கு சாப்பாடு சூடு இல்லாம கொடுத்திட முடியுமா…? நா ஏற்கனவே எல்லாத்தையும் சூடு பண்ணி வச்சிட்டேன் , அதையும் உங்க பேத்தி வக்கனையா , அடுப்பு மேடையில் ஏறி உட்கார்ந்து, என் சமையலையே குறை கூறி கிட்டே சாப்பிட்டுகிட்டு இருக்கா… என நொடிக்கவும்,​


தன் அத்தையின் புலம்பலை கேட்ட செந்தில், தன் மாயவலின் சேட்டைகளை கேட்டு மனதுக்குள் சிரித்து கொண்டு, வெளியே எதையும் காட்டி கொள்ளாமல் இருந்தான்… ஆனாலும் தன்னவளை பார்க்கும் ஆவல் மட்டும் குறையவே இல்லை…​

'அவள எப்படி பாக்குறது…? என்ன செய்யலாம்…? என யோசித்து கொண்டு இருந்தான்… திடீரென, தம்பி தண்ணி எதும் குடிக்கிறிங்களா…? என தனம் கேட்கவும்​

அவன் முகம் பிரகாசமாய் ஜொலித்தது…​

"ம் வேணும் அத்த என கேட்கவும், தனம் கிளம்பினார் . அதை பார்த்த செந்தில்​

"அய்யோ அத்த…! என்ன இது நீங்க போய் தண்ணி எடுத்துட்டு வர போறிங்களா, காலையிலே இருந்து எவ்வளவு வேலை பார்த்து இருப்பிங்க டையடா இருக்காது,​

இருங்க நானே போய் குடிச்சிட்டு உங்களுக்கும் எடுத்துட்டு வரேன், இங்கையே அம்மாச்சிகிட்ட பேசிகிட்டு இருங்க, என அவர் பேசுவதற்கு கூட சந்தர்ப்பம் கொடுக்காமல், ஓடிவிட்டான்…​

இங்கு தனத்திற்க்கு எதுவும் புரியாமல், முழித்து கொண்டு இருந்தார்... அவரை பார்த்து அன்பரசி பாட்டிக்கு வந்த சிரிப்பை, வாயிற்குள்ளவே அடைக்கி, தனத்தின் கவனத்தை வேறு விசயத்திற்க்கு மாற்றி விட்டார்….​

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN