காதல் கணவன் 129

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெற்றியும் அம்ருதாவும் இணைந்து பல காலம் நல்வாழ்வு வாழ்ந்தனர். கனிமொழி மற்றும் சக்தியை போல உலகில் வேறு காதல் ஜோடி இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் நேசம் வளர்ந்தது. மீதி அனைவரும் கூட அம்சமாக வாழ்ந்தனர்.

முற்றும்.

இந்த கதை இழுத்துட்டே போகுதுன்னு நினைக்கிறவங்களுக்காக முன்னாடியே ஒரு கிளைமேக்ஸ் தந்துட்டேன்.

அஞ்சி ஜோடி இதுல. நான் அஞ்சி ஜோடியையும் தனியா பிரிச்சி தனி தனி கதையா எழுதியிருந்தா குறைஞ்சபட்சம் 50லயிருந்து அதிகப்பட்சம் 71 எபிசோட் வரை எழுதியிருப்பேன். எப்படி கணக்குப்போட்டாலும் 250 டூ 355 எபி வரை வந்திருக்கும். ஆனா நான் ஒரு கோலாபரேஷனா கதை எழுதினா எபிசோட்ஸ் நம்பரை மட்டும் பார்த்துட்டு இழுத்துட்டு போகுதுன்னு சொல்றிங்க. நான் இந்த கதையில் எழுதியதுல ஒரு வசனம் இந்த கதைக்கு தேவையில்லாததுன்னோ அல்லது ஒரு சீன் இந்த கதைக்கு தேவையில்லாததுன்னோ நினைக்கிறிங்களா.? நான் பார்த்த வரை, நான் எழுதும்வரை பாதி விசயத்தை சொல்லாம ஓடிட்டு இருக்கேன். சாபமடா நீ எனக்கு கதையில குந்தவி காந்திமதியை பழி வாங்க மட்டும் 15 எபி யோசிச்சிருந்தேன். ஆனா எழுத முடியல. உங்களுக்கு தேவை கிளைமேக்ஸ். எனக்கு தேவை கதை. கதையை ஜவ்வா இழுக்க எனக்கும் தெரியும். எந்த வசனமும் இல்லாம ஹீரோவும் ஹீரோயினியும் கண்ணால பார்த்துட்டு ஒரு செகண்ட் நிக்கறதையே என்னால பத்து பக்கத்துக்கு எழுத முடியும். ஆனா நான் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் எழுதுறேன். என் கதையில வர்ணனையே கிடையாதுன்னு குறை சொல்றவங்க கூட உண்டு. ஆனா அது ஒரு விதத்துல உண்மைதான். வர்ணிக்க பிடிக்கல. ஆனா இப்பதான் வர்ணிப்பதும் நல்லாருக்குன்னு புரிஞ்சி அதை லைட்டா எழுத ஆரம்பிச்சிருக்கேன். இந்த கதையில் வர்ணனைகள் கூட அவ்வளவா இருக்காது. ஜஸ்ட் சீன்ஸ் மட்டும்தான். உங்களுக்கு அவசரம். என்ன ஆச்சோன்னு இப்பவே முடிவை தெரிஞ்சிக்கணுமேன்னு. ஆனா எனக்கு இது ப்ரோஜெக்ட். 100 பர்சன்ட் நான் நினைச்ச மாதிரி கதை இருக்கணுமேன்னு எழுதுறேன். உங்க யார் மேலும் எனக்கு எந்த வருத்தமும் இல்ல. உங்களின் வார்த்தைகள் என் எண்ண ஓட்டத்தை தடுக்குது. இதை நானும் பல முறை சொல்லிட்டேன்.

இது நான் பினிஸ் பண்ண போற 34வது நாவல். இரண்டு கம்மியா இருக்கேன்னு யோசிக்கிறிங்களா.? வெதின்ஸா சீரிஸ் மூனு பாகமும் ஒன்னா மாறிட்டதால நாவல் எண்ணிக்கையில் இரண்டு குறைஞ்சிடுச்சி. எண்ணிக்கைதான் முக்கியம்ன்னு நினைச்சிருந்தா இதே கதை மாந்தர்களை நாலு கதையில் எழுதி 48வது நாவலை முடிக்கிறேன்னு சொல்லியிருப்பேன். எழுத்தை உணர்ந்து எழுத நினைக்கிறேன்ப்பா. படிக்கும்போது மட்டும்தான் நீங்க அழறிங்க. நான் எழுதும்போது அழுவேன். மறுபடி ப்ரூஃப் பார்க்கும்போது அழுதுட்டே பார்ப்பேன். நாலு நாள் முன்னாடிதான் ஒரு முழு நாவலுக்கு ப்ரூஃப் பார்த்தேன். எவ்வளவு அழுதேன் தெரியுமா.? உங்களை இப்படி அழ வைக்கிற பாவம் முழுக்க எனக்குத்தான் வர போகுதுன்னு பீலிங்கா போச்சி.

கண்டிப்பா உங்களுக்கு சில இடங்கள் இதுல அன் வான்டட் மாதிரி தெரியும். ஆனா அந்த அன் வான்டட் வந்த காரணம் பத்து எபியோ இருபது எபியோ கழிச்சி புரிஞ்சிருக்கும். எல்லா எபியிலும் பரபரப்பு வைக்கணுமா.? அப்படி வச்சா படிக்கற பீல் வருமா.? எனக்கே தெரியல. இது ஒரு நாவல். அனைத்து பீலிங்ஸும் கலந்த நாவல். எபிக்கு அதிகப்பட்சம் என்னால 1300 வார்த்தைகள்தான் தர முடியுது. எல்லா விசயத்தையும் ஒரே எபியில் சொல்லும் அளவுக்கு ஆண்டவன் எனக்கு திறமையை தரல போல. ஒரே நாள்ல பத்தாயிரம் வார்த்தைகள் டைப் பண்ற அளவுக்கு ஆண்டவன் எனக்கு சக்தியையாவது தந்திருக்கலாம். ஆனா பத்தாயிரம் வார்த்தைகள் எழுதினாலும் இங்கே 100 கமெண்டுக்கு மேல வர போறது இல்ல.😔

இழுத்துட்டு போற மாதிரி தோணினா என்னை மன்னித்துவிட்டு படிங்க. முடிஞ்ச அளவு கதையை சீக்கிரம் முடிக்க பார்க்கிறேன். நன்றிகள்.

***

அம்ருதாவின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தது. வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அவளை அருகிலிருந்து கவனித்துக் கொண்டான் வெற்றி.

ஒரு மாதம் ஆகியும் தேன்மொழியும் ஆரவும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அவள் அவளது மாமியாரிடம் வாங்கிய திட்டுக்களை எழுதாம போயிட்டேன். சோ மறுபடியும் டேக் டைவர்ஸன் எடுத்து கதையை ஒரிஜினல் ரூட்டுக்கு கொண்டுப் போறேன். சாரி.

***

மேகலா‌ வீட்டிற்கு வந்து விட்டதால் ஆரவால் ஹாலில் உறங்க முடியவில்லை. அம்மாவிடம் வீண் கேள்வி வர கூடாது என்பதற்காக தனது அறைக்கு சென்றான். தேன்மொழி அவனை வெறித்தாள்.

கட்டிலில் ஓரமாக அமர்ந்தான். அவன் அறையின் கதவை பூட்டவில்லை.

"போய் சோபாவுல படுத்து தூங்கு.." சிறுகுரலில் சீறினாள் தேன்மொழி.

"முதுகு வலி.." என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

"டேய் ஆரவ்.." அம்மா அழைத்தாள்.

'இப்பதான் உட்கார்ந்தேன். அது கூட இவங்க இரண்டு பேருக்கும் பொறுக்கல..'

எழுந்தவன் வெளியே வந்தான்.

"ஏன்ம்மா.?" வாசல்படியருகே நின்றபடி கேட்டான்.

"உன் அக்கா அங்கே சாக பிழைக்க கிடக்கறா. உனக்கு உன் பொண்டாட்டியோடு கூத்தடிக்கணுமா.? அவளை வெளியே வந்து தூங்க சொல்லு.." என்றாள் சீறலாக.

அம்மாவின் முகம் பார்த்தான் ஆரவ். எப்போதும் இருக்கும் அம்மா இல்லை. மன உளைச்சலில் சிக்கி என்ன பேசுவதென்று கூட தெரியாமல் திக்பிரமை பிடித்த அம்மா இவள்.

எச்சில் விழுங்கியவன் உள்ளே சென்று தலையணை ஒன்றை எடுத்து வந்தான்.

"நானே வெளியே தூங்கறேன்.." என்றவன் சோபாவில் படுத்தான்.

"ஏன் அந்த மகாராணி இங்கே தூங்க மாட்டாளா.?" அம்மா வேண்டுமென்றே வம்பிழுப்பதாக தோன்றியது இவனுக்கு.

ஆரவ் பதில் பேசவில்லை. ஆனால் தேன்மொழி வெளியே வந்து விட்டாள்.

"இப்ப என்ன நான் இந்த வீட்டுல நிம்மதியா தூங்க கூடாது உங்களுக்கு. அதுதானே.?" எனக் கேட்டவள் போர்வை ஒன்றையும் தலையணை ஒன்றையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். மொட்டமாடியில தூங்கறேன். உங்களுக்கு இப்பவாவது மனசு நிறையுதான்னு பார்க்கறேன்.." என்றவள் படிகளை நோக்கி நடக்க எழுந்தோடி வந்து அவளின் கையை பிடித்து நிறுத்தினான் ஆரவ்.

"நாளைக்கு எக்ஸாம்.." என்றவனை கொலைவெறியோடு முறைத்தவள் "என் வாழ்க்கையே இங்கே நாசமா போய்ட்டு இருக்கு. உனக்கு எக்ஸாம் பெருசா போச்சா.?" என்றவள் தன் கையை உருவினாள்.

மேகலா நகைப்போடு இருவரையும் பார்த்தாள்.

"குளிர் ஜாஸ்தி ஹனி.." ஆரவ் அவளின் முகம் பார்த்து கவலையோடு சொன்னான்.

"நடிக்காத.." என்றவள் தலையணையை அணைத்தபடி மேலே நடந்தாள்.

ஆரவ் அம்மாவை வெறித்தபடி சோஃபாவில் அமர்ந்தான்.

***

வெற்றி அம்ருதாவின் அருகிலேயே அமர்ந்திருந்தான்.‌ அவன் வெளியே செல்ல இன்னும் கொஞ்சம் நேரமிருந்தது. இரவில் அம்ருதாவின் உதவிக்கு தேவைப்படுமோ என்று கீர்த்தனாவை வரவைத்திருந்தான்.

கீர்த்தனா இங்கே வரும் முன்பே பாலாஜி போன் செய்திருந்தான்.

"இதுக்கு மட்டும் என் பொண்டாட்டி வேணுமா.?" எனக் கேட்டான்.

வெற்றி கடுப்பில் பற்களை அரைத்தான்.

"உன் பொண்டாட்டி ஆகும் முன்னாடியே அவ எனக்கு பிரெண்டுடா.. சுயநலவாதி நீதான். ஒரிஜினல் சைக்கோ.." என்று வாய்க்கு வந்தபடி திட்டுவிட்டு போன் இணைப்பை துண்டித்தான்.

உறங்கும் மனைவியின் முகம் பார்த்து பெருமூச்சி விட்டான் வெற்றி.

"லவ் யூ அம்மு.." என்றுவிட்டு வெளியே போனான். குழந்தை அவளின் அருகிலேயே உறங்கிக் கொண்டிருந்தது. மற்றவர்கள் வைத்திருந்தால் அடிக்கடி தூக்கம் கலைந்து எழும் குழந்தை அவளிடம் மட்டும் நன்றாக ஆழ்ந்து உறங்கியது.

கீர்த்தனாவும் வெற்றியும் ஹால் வராண்டாவில் அமர்ந்திருந்தனர்.

"உன் பொண்டாட்டிக்கு இன்னும் உடம்பு நல்லாகலையா.?" எனக் கேட்டபடி அவனின் அருகில் வந்து அமர்ந்தாள் பாட்டி ஒருத்தி.

"இல்ல பாட்டி. ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு. இன்னும் ஒரு வாரத்துல வீட்டுக்கு கூட்டிப் போயிடுவேன்.."

"எவ்வளவு கஷ்டப்படுற நீ. மாசத்துல மூனு நாளு சும்மா இருப்பேனான்னு சொல்லி இரண்டாவது பொண்டாட்டி கட்டினான் என் புருசன். அவ பிரசவத்துக்கு பிறந்த வீடு போனதும் மூனாவதா ஒருத்தியை கட்டினான். உன்னை போல ஒருத்தன் எனக்கு புருஷனா வந்திருக்கலாம்.." புலம்பியபடி அங்கிருந்துப் போனாள் அந்த பாட்டி.

வெற்றி கசந்த நகைப்போடு நாற்காலியில் தலை சாய்த்தான்.

"உன் புருசனை விட நான் கெட்டவன் பாட்டி. உன் புருசனாவது உனக்கு துரோகம்தான் செஞ்சான். ஆனா நான் என் அம்முவை சாகடிக்க பார்த்துட்டேன்.." என்றான் புலம்பலாக.

வெற்றியின் கைப்பிடித்தாள் கீர்த்தனா.

"எல்லாம் சரியாகிடும்.." என்றாள்.

***

அம்மா உறங்கி பிறகு சோபாவிலிருந்து எழுந்து மாடிக்கு கிளம்பினான் ஆரவ்.

உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்த தேன்மொழியின் அருகில் சென்று அமர்ந்தான்.

"ஆனா உனக்கும் கொழுப்பு அதிகம். எங்க அம்மா ஏதாவது சொன்னா இப்படி மாடிக்கு‌ வரணுமா.? அங்கேயே தூங்க கூடாதா.?" என்றுக் கேட்டான் அவளின் முகத்தை பார்த்தபடி.

விசுக்கென்று‌ எழுந்து அமர்ந்தாள்.

"தூர ஓடிடு ஆரவ். உங்க அம்மாவுக்கு என்னை சித்திரவதை செய்ய ஆசை. அதுக்கு நீயும் உதவி பண்ணிட்டு இருக்க.." என்றாள் சிறு குரல் சீறலோடு.

"அவங்கதான் ஏதோ கோபத்துல பேசுறாங்க. நீயும் சேர்ந்துக்கிட்டு அவங்க சொல்றதை நினைச்சி பீல் பண்ற.." என்றவன் அவளை அணைத்தபடி இங்கேயே தலை சாய்ந்தான்.

"தூர போ. இல்லன்னா நான் உன்னை மயக்கியதா உன் அம்மா சொல்வாங்க.." என்றவளின் நெற்றியில் முத்தமிட்டவன் "அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க. ஏனா அவங்க நம்மை பார்க்க மாட்டாங்க. நீ அமைதியா தூங்கு. நாம மீதியை காலையில் பேசிக்கலாம்.." என்றான் கண்களை மூடியபடி.

காலையில் அவள் எழுந்தபோது அவன் அங்கே இல்லை.

***

காலையில் கீர்த்தனா குழந்தையோடு கிளம்ப முயன்றாள்.

"குழந்தை இங்கேயே இருக்கட்டுமே. என்னால எதையும் நம்பவே முடியல. குழந்தை முகத்தையாவது பார்த்துக்கிட்டு இருக்கேன்.." என்றாள் அம்ருதா கெஞ்சலாக.

கீர்த்தனாவால் மறுக்க முடியவில்லை.

"என் அம்மா இங்கேதானே இருக்காங்க. அவங்க‌ பார்த்துப்பாங்க.." என்றாள் அம்ருதா விடாமல்.

சரியென்று குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பினர் கீர்த்தனாவும் வெற்றியும்.

அடுத்து வந்த ஒரு வாரமும் அப்படியேதான் போனது.

இப்போது தேறியிருந்தாள் அம்ருதா.

கட்டிலில் ஐந்தாறு தலையணைகளை வைத்துவிட்டு அதன் மீது சாய்ந்து அமரும் அளவுக்கு முன்னேறியிருந்தாள்.

மருத்துவர் ரேகா அவளிடம் வந்தார். தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்தபடி இவளின் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.

"இப்ப எப்படி இருக்க அம்ருதா.? உன் உடம்பு வலி எப்படியிருக்கு.?" விசாரித்தாள்.

"இப்ப கொஞ்சம் பரவால்ல டாக்டர். ஆனா ரொம்ப வீக்கா பீல் பண்றேன்.. அசைஞ்சா கூட உடம்பு வலிக்குது.." என்றவளை பார்த்து வருந்திய ரேகா "நீ செஞ்ச காரியத்துக்கு உன் உடம்பு உனக்கு தந்த பரிசு இது அம்ருதா. நீ அளவில்லா பலவீனத்துக்கு போயிட்ட. ரொம்ப கஷ்டப்பட்டு உன்னை பிழைக்க வச்சிருக்கோம் நாங்க.. ஆனா.." என்றாள் தயக்கமாக.

"என்ன டாக்டர்.? நான் இன்னும் இரண்டு மாசம்தான் உயிர் வாழ முடியுமா.?" சிரித்தபடி கேட்டாள் அம்ருதா.

மறுப்பாக தலையசைத்த ரேகா "உன் கர்ப்பப்பையை எடுத்துட்டோம்.." என்றாள்.

தெரியுமென்று தலையசைத்தாள் இவள்.

"உன் உடம்பு இருக்கும் கன்டிஷனுக்கு உன்னால தாம்பத்திய வாழ்க்கையை நினைச்சி கூட பார்க்க முடியாது. வெற்றியோட எதிர்பார்ப்புக்காக கொஞ்ச வருசம் கழிச்சி ஏதாவது டிரை பண்ணலாம்ன்னு சொன்னேன். ஆனா உன்னால உண்மையில் முடியாது. நீ ரொம்ப வீக் அம்ருதா. நீ வாழ்வதே பெரிய விசயம். அதுக்கு மேல எதையும் ஆசைப்பட்டு டிரை பண்ணி மறுபடியும் எதையாவது இழுத்து வச்சிக்காத. புரிஞ்சிக்க பாரு. உன்னையும் உன் உடம்பையும் நீதான் கவனமா பார்த்துக்கணும். எச்சரிக்கையா இருக்க பழகு.." என்றாள்.

அம்ருதா வாய் பேசவில்லை. அவளின் அதிர்ச்சி கொஞ்சமும் தீரவில்லை.

ரேகா போய் விட்டாள்.

அம்ருதா கண்ணீரோடு கூரையை பார்த்தபடி படுத்திருந்தாள்.

வெற்றி அன்று மாலை மருத்துவமனை வந்தான். அவனை அறைக்குள் நுழைய விடாமல் நெஞ்சில் கை வைத்து தள்ளினார் ராமன்.

"என் பொண்ணுக்கு விவாகரத்து வேணுமாம். ஏற்பாடு பண்ணு.." என்றார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. இன்னைக்கு பயணம் போய் வந்தேன். பயங்கர தலைவலி. தலைவலியில் உங்களை கஷ்டப்படுத்தும் விதமா ஏதாவது எழுதியிருந்தா மன்னிச்சிக்கங்க. சாரி.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN