நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...10

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

10.காற்றுக்கென்ன வேலி
தேர்வுகள் எல்லாம் தொடங்க மாணவர்களும் அவர் அவர்களுக்குரிய வினாத்தாளை வாங்கிக் கொண்டு பரிட்சை எழுத தொடங்கி இருந்தனர்.

சரியாக ஒன்றரை நேர தேர்வுகள் நடைபெற்றது. அதன் பின் ஸ்டாஃவ்ஸ் பேப்பரை வாங்கிக் கொண்டு சென்றனர்.

இப்படியே அந்த வாரம் முழுவதும் நடந்தது . மாணவர்கள் அவர்களால் முடிந்தவரை படித்து தேர்வு எழுதினர்.

அடுத்த கட்ட வேலையாக ஆசிரியர்கள் மாணவர்களின் விடைத்தாளை திருத்த தொடங்கி இருந்தனர்.

விஷ்வாவை இதையெல்லாம் மேற் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். இந்த ஒரு வாரத்தில் விஷ்வா நிலாவை எந்த ஒரு தொந்தரவும் செய்யாமல் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தான்.

இந்த வாரத்தில் ஐந்து நாளும் தேர்வுகள் நடந்து இருந்தமையால் சனி மற்றும் ஞாயிறு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் மட்டும் அவர்கள் எழுதி வைத்திருந்த விடைத்தாளை திருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அந்த இரண்டு நாளில் ஆசிரியர்கள் எல்லா பேப்பரையும் திருத்தி கன்ஸாடினேட் செய்து விஷ்வாவிடன் சப்மிட் செய்தனர். இதில் நிலா வகுப்பில் உள்ள மாணவர்கள் நிலா எடுக்கும் பேப்பரில் அதிக மதிப்பெண்கள் பெற்று எல்லாரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனை பார்த்த விஷ்வாக்கு சந்தோஷமாக இருந்தது..

தினமும் இரவு வேளையில் நிலா வீட்டில் இருந்துதான் விஷ்வாவிற்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது . அவனும் இன்முகத்துடன் வாங்கி தன்னவள் கையால் செய்து கொடுப்பதை ரசித்து ருசித்து உண்பான்.

அன்றும் அதே போல் நிலா அவனுக்கு சாப்பாடு செய்து கொண்டு வந்து கொடுக்க அதை வாங்க மறுத்த விஷ்வா அவனை உள்ளே அழைத்து வந்தான்.

"இங்கேயே இருக்கேன் உள்ளவர சொல்றீங்க ஒழுங்கா சாப்பிட வாங்க மாட்டீங்களா" என்று கோபித்து கொள்வது போல் பேசினாலும் அவன் வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து நுழைந்தாள்.

"இப்ப இந்த வீட்டுல வலது காலை எடுத்து வச்சி வந்து இருக்க இன்னும் கொஞ்ச நாள்லயே நீ என்னோட வீட்டுல என்னோட மனைவியா காலெடுத்து வைப்ப . அது கூடிய சீக்கிரமே நடக்கும் பாரு " என்று மனதில் எண்ணியவன் வெறும் புன்னகையை மட்டும் அவளுக்கு பதிலாக அளித்தான்.

"பச்" என்று முறைத்து வைத்தாள்.

" வருங்கால புருஷன் வீட்டுக்கு தான உன்னை வர சொன்னேன் அதுக்கு எதுக்கு இப்படி கோவப்படுற " என்று பாவமாக விஷ்வா சொல்ல

" என்னது " என்று நெற்றி சுருக்கியவள் வேகமாக பக்கத்தில் இருக்கும் டேபிளில் சாப்பாட்டை வைத்து விட்டு கிளம்ப எத்தனிக்க அவளின் வலக்கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

"என்ன பண்ணுறீங்க கைய விடுங்க " என்று கோபமாக கூறியவள் அவன் கரத்தில் இருந்து அவள் கரத்தை உருவ முயன்றாள். ஆனால் அவனின் பிடி இரும்பு பிடியாக இருக்கவே அவளால் கரத்தினை உருவ முடியவில்லை.

" கைய விட போறிங்களா இல்லையா " என்று கோபத்தின் உச்சியில் அவள் கூற

" சரி விடுறேன் " என்றவன் தன் பக்கத்தில் இழுத்து அவளின் இடையை பற்றியவன் அவளது கையை விடுவித்தான்.

இழுத்த வேகத்தில் அவன் மீதே மோதியவளை பிடித்த விஷ்வா பேலன்ஸ் மிஸ்ஸாசி இருவரும் சோஃபாவில் விழுந்தனர்.

விஷ்வா கீழேயும் அவள் உடல் முழுவதும் விஷ்வா மீதும் இருந்த்து. அவள் எழுந்திருக்க முற்பட அவளை எழவிடாமல் அவளின் இடையினை இறுக பற்றிருந்தான்.

" பச் கைய எடுக்கிறீங்களா கொஞ்சம் " என்று சிடு சிடுத்தவளை கண்டு சிரிப்பு தான் வந்தது அவனுக்கு...

அவனின் அந்த அழகிய சிரிப்பில் நிலா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்க அவளின் பார்வை வீச்சு தாங்க முடியாதவனாய் திணறினான் விஷ்வா...

அந்த மோன நிலையை கலைக்கும் விதமாக விஷ்வாவே அவளிடம் பேச்சு கொடுத்தான்.

" ஏன் டி இந்த ஒருவாரமா என்ன அவாய்ட் பண்ற . நானும் உன்கிட்ட பேச எவ்ளோ ட்ரை பண்றேன் அது தெரிஞ்சும் நீ அவாய்ட் பண்ணி தப்பு பண்ணிட்ட இதுக்கான தண்டனைய நீ அனுபவிச்சி தான் ஆகனும் பொண்டாட்டி" என்றதும் நிலா விழி விரித்து அவனை கண்டாள்..

" இது என்ன கால கொடுமையா இருக்கு நான் எதுக்கு உங்க கிட்ட பேசணும் சொல்லுங்க . உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு நீங்க சக்தியோட அண்ணா அது மட்டும் இல்லாமல் என்னோட ஸ்கூல் சீனியர் இவ்வளோ தான் நமக்குள்ள இருக்கிறது .இத தாண்டி நமக்குள்ள ஒன்னும் இல்ல" என்று பொறிந்து கொண்டு இருந்தாள் நிலா. அவனின் மேல் தான் இருக்கிறோம் என்பதையும் மறந்து அவன் தன்னை பொண்டாட்டி என்று சொன்னதையும் மறந்து அவனுடன் மல்லுக்கு மல்லு பண்ணி கொண்டு இருந்தாள்...

" ஆமா சக்தியோட அண்ணா தான் உன்னோட ஸ்கூல் சீனியர் தான் ஆனா அதையும் தாண்டி நான் உனக்கு தரு அதுவும் உன்னோட தரு. நம்மக்குள்ள எதுவும் இல்லன்னு இந்த வாய் தான் சொல்லுது ஆனா இந்த கண்ணு உனக்கு என்மேல இருக்கிற காதல் அவ்ளோ அழகா சொல்லுது " என்றவன் மென்மையாக அவள் விழிகளில் இதழ் பதித்தான்.

அவள் இமை மூடி அதை ஆழ்ந்து அவளுள் வாங்கிக் கொண்டு இருந்தாள். இப்படியே கீழே இறங்கியவன் அவளின் கோபத்தில் சிவந்த மூக்கு பப்பாளி போன்ற இரு கண்ணங்கள் என மாறி மாறி முத்தத்தை தொடர " என்ன அவாய்ட் பண்ணதுக்கான பணிஷ்மெண்ட் "என்றவன் அடுத்த நொடி அவளின் இதழை சிறை செய்தான்.

இவன் சிறை செய்ய அந்த சிறையினுள் கட்டுண்டு கிடந்தாள் நிலா. பயத்தில் அவன் சட்டையை இறுக்கி பிடித்துக் கொண்டாள் பிடிமானத்திற்கு...

அந்த இதழ் சிறையில் காற்று கூட புகாத அளவிற்கு விஷ்வா அவனது இதழால் வேலி இட்டிருந்தான்.

சிறிது நேரத்திலே " நிலா நிலா " என பாட்டியின் அழைப்பு இருவரின் செவிகளுக்கும் எட்டியது.

விஷ்வா தன்னை கட்டுபடுத்தி கொண்டு அவளின் இதழை விட்டு தன் இதழை பிரித்தான். அப்போது தான் அவள் மூலைக்கு உறைத்தது தான் அவன் மீது படுத்துள்ளோம் என்பது...

" பச் கைய எடுங்க மிஸ்டர் விஷ்வேந்தர் நான் எந்திருக்கணும்" என்று நிலா அவனிற்கு கட்டளை இட

" அடியே பொண்டாட்டி நான் எங்க உன்ன புடிச்சிருக்கேன் நீ தான் என்ன இப்படி இறுக்கமா பிடிச்சிருக்க " என்று கண்களால் அவள் பிடித்திருந்த இடத்தை காட்ட அவளும் அவன் காட்டிய இடத்தை பார்த்தவள் சட்டென கையை எடுத்து அவனை பார்த்து முறைத்த படியே எழுந்தாள்...

அவனை பார்த்து ஏகத்துக்கும் முறைத்தவள் " உங்க லிமிட்ஸ்ச நீங்க க்ராஸ் பண்ணாதீங்க மிஸ்டர் விஷ்வேந்தர் " என்று விட்டு " இதோ வரேன் பாட்டி " என்று அவன் வீட்டை விட்டு வெளியேறினாள்..

" ஒரு நிமிஷம் " என்று அவளை தடுத்த விஷ்வாவை திரும்பி புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டாள் நிலா..

" உனக்கு தெரிஞ்ச எந்த நல்ல விஷயமா இருந்தாலும் அத நாலு பேருக்கு சொல்லிக் கொடு இப்போ உனக்கு உதவாம இருக்கிற ஒரு விஷயம் நீ சொல்லி கொடுக்கிறதாள அவுங்களுக்கு உதவலாமுல . உனக்குள்ளே எல்லா விஷயத்தையும் உனக்குள்ளயே புதைச்சிக்காத அது உனக்கும் நல்லது இல்ல உன்ன சுத்தி உள்ளவுங்களுக்கும் நல்லது இல்ல. நாம செய்ற ஒரு விஷயம் நமக்கு உதவிகரமா இருக்கனும் சரியா " என்று அவளுக்கு அறிவுரை சொல்ல சரியென மண்டைய மண்டைய ஆட்டியவள் அவள் வீட்டிற்கு சென்றாள்..

இரவில் விழித்திருந்த நிலாவிற்கு அவன் கூறிய " இப்போ உனக்கு உதவாம இருக்கிற ஒரு விஷயம் நீ சொல்லி கொடுக்கிறதாள அவுங்களுக்கு உதவலாம்ல " என்ற வார்த்தைகளே அவள் செவிகளில் ஒழிக்க அதை பற்றி நினைத்தவாறே நித்திரை தேவியின் பிடியில் சிக்கி கொண்டு உறங்கி போனாள்.....


அடுத்தநாள் காலை திங்கட்கிழமை என்பதால் எப்போதும் போல் கோவிலுக்கு சென்று அர்ச்சனையை முடித்தவள் சிறிது நேரம் சாமி சன்னதியில் இருந்து விட்டு கல்லூரிக்கு சென்றாள்...

கல்லூரிக்கு வந்தவள் எப்போதும் போல் ரெஜிஸ்டரில் சைன் போட்டவள் அவளது டிப்பார்ட்மெண்டிற்குள் நுழைந்தாள்.

அவள் கண்கள் எப்போதும் போல் அவனின் அறையை ஒரு முறை தீண்டி விட்டு அவளது இடத்திற்கு சென்றாள்...

முதல் வகுப்பே அவள் மெண்டாராக இருக்கும் வகுப்பிற்கு வகுப்பு என்பதால் லாக்புக்கை எடுத்துக் கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தாள்.

நிலா நுழைந்ததும் மாணவர்கள் எல்லாம் எழுந்து நின்று ஏனோ ஒரு பயத்துடனே அவனை பார்த்து நின்றனர்..

" சிட் டௌன் க்யாஸ் எல்லாரும் எப்படி எக்ஸாம் பண்ணி இருக்கீங்க " என்று அவர்களை நோக்கி கேள்வி கேட்டாள் நிலா..

" நல்லா பண்ணி இருக்கோம் மேம் " என்று பயத்தில் சிலரது குரல் மட்டுமே வெளிவந்தது.

" என்ன வாய்சே வரல அவ்வளவு தான யாரும் காலைல சாப்பிடலையா என்ன " கேட்டு மாணவர்களுக்கு இடையில் நடக்கத் தொடங்கினாள்.

" நல்லா பண்ணி இருக்கோம் மேம் " என்று கத்தி கூறினர் மாணவ மாணவிகள்...

" குட் " என்றாள் நடந்த படியே..

" சரி எல்லாரும் இப்படியே அமைதியா இருக்கனும் நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்தறேன் " என்றவள் அந்த வகுப்பிலிருந்து வெளியேறியவள் நேராக வந்தது விஷ்வாவின் அறைக்கு தான்..

" எக்ஸ் க்யூஸ் மீ சார் மே ஐ கம் இன் " என்று நாகரிகமாக கதவை தட்டி கேட்டு வெளியே அவன் அனுமதிக்காக காத்திருக்க " எஸ் கம் இன் "என்று உத்தரவிட்டான்...

யாரோ வந்திருக்கிறார்கள் என்றெண்ணி " சொல்லுங்க " என்றவாறே மாணவர்களின் கன்சாலிடுனேட் செக் செய்து கொண்டு இருந்தான்.

" சார் நான் உங்க கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டு வந்துருக்கேன் " என்று தயங்கி நிலா கூற

அது நிலாவின் குரல் என்று அறிந்தவன் மெதுவாக தலையை நிமிர்த்தி " சொல்லு மொழி உனக்கு இப்போ என்ன வேணும் இந்த நேரத்துல உனக்கு க்ளாஸ் இல்லையா " என்றே அவளை பார்க்க

" க்ளாஸ் தான் சார் ஆனா ஸ்டுடன்ஸ் கொஞ்சம் டென்ஷனா இருக்காங்க அவுங்களுக்கு ஒரு மைண்ட் ஃப்ரி வேணும்னு நினைக்கிறேன் சார். அதுனால " என்று இழுத்தாள்..

" அதுனால .." என்று அவனும் நிலாவை போலவே இழுத்தடிக்க

" பச் " என்று கைகளை பிசைந்தவள் " நான் ஸ்டுடன்ஸ கூட்டிட்டு க்ரௌண்டுக்கு போலாம்னு இருக்கேன் சார் . நேத்து தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் நமக்கு தெரிஞ்சத மத்தவுங்களுக்கு சொல்லி தர சொன்னாரு அதுனால தான் அவுங்கள அங்க கூட்டிட்டு போலாம்னு இருக்கேன் அவுங்களுக்கு அது மைண்ட் ஃப்ரீயா இருக்கும்ல சார் " என்று அவனிடம் கேட்க வந்த உதவியை கோரிவிட்டு அவனின் பதிலுக்காக காத்திருந்தாள்...


அவளை பார்த்து புன்னகைத்தவன் " கோ ஹெட் " என்றான் ஒற்றை பதிலில்...

" தேங்க் யூ " என்று மரியாதை நிமித்தமாக வெளியேறினாள்...

போகும் அவளையே புன்னகை முகமாக பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வேந்தர்..

சரியாக நிலா கூறிச் சென்றது போல் ஐந்து நிமிடத்தில் வகுப்பிற்கு வந்து சேர்ந்தாள்..

நிலா கை வீசமா கை வீசமா கை வீசு " என்ற பாடலிற்கு ஏற்றது போல் நிலா கையில் எதுவும் எடுத்து வராமல் வரவே மாணவர்கள் ஒரு பெரு மூச்சை எடுத்து விட்டனர்....

" ஓகே ஸ்டேன்ஸ் உங்களோட ரிலாஸ்ஷேன்க்காக நாம இப்போ க்ரௌண்டுக்கு போறோம் கிளம்புங்க " என்று அனைவரையும் வெளியேற்றி விட்டு அவளும் வெளியே வந்தாள்...

எல்லாரும் க்ரௌண்டுக்கு வர பசங்களை பார்த்து " நீங்க எல்லாரும் உங்களுக்கு புடிச்சத செய்ங்க பட் சும்மா பேசி கதை அடிச்சிட்டு நிக்காதிங்க சரியா " என்றவள் அவர்களை அனுப்பி வைத்தாள்..

பெண்களிடம் திரும்பியவள் " உங்கள மட்டும் இப்ப நான் எதுக்காக இங்க நிக்க வச்சிருக்கேன்னு தெரியுமா.??" என்று அவர்களை பார்த்து கேள்வி கேட்க

" தெரியாது மேம் " என்றாள் கூட்டத்தில் ஒருத்தி..

" சரி இங்க எத்தன பேருக்கு கராத்தே சிலம்பாட்டம் கும்ஃபூ போன்ற தற்காப்பு கலை தெரியும் .அவுங்க மட்டும் முன்னாடி வாங்க பாக்கலாம்" என்று அந்த மாணவிகளிடம் கேட்க

ஓரிருவர் மட்டும் " எனக்கு தெரியும் மேம் " என்று முன் வந்தனர்...

" சரி மத்தவுங்க யாருக்கும் தெரியாது அப்படி தான " என்க

" ஆமாமென " தலையசைத்தனர் மாணவிகள்.

" உங்களுக்கு எல்லாம் எதுக்குடா இவ நம்மள புடிச்சு வச்சி இப்படி கேக்குறாளேன்னு " என்று சொல்லிக் கொண்டு இருக்கவே இடை மறித்த ஒரு மாணவி " அப்படிலாம் இல்லை மேம் " என்றாள்.

" சரி நான் இப்போ எதுக்காக இத கேட்டேன்னா இந்த காலத்துல பொண்ணுங்களுக்கு சேஃப்டின்னு இல்லவே இல்ல. அப்படி இருக்கும் போது நமக்கு எதாவது பிரச்சினை வந்துச்சின்னா நாம யாராவது காப்பாத்த வருவாங்களான்னு எதிர் பாக்காம நாமளே அவுங்கள எதிர்த்து நிற்கணும் இல்ல அதுக்காக தான் இத கேட்டேன். யாருக்காவது க்ராவ் மகா பத்தி தெரியுமா இல்ல கேள்வி பட்டுருக்கிங்களா " என்று முன்னே இருந்த மாணவர்களை பார்த்து கேட்டாள் நிலா..

" நோ மேம் " என்று அனைவரும் சொல்ல கராத்தே தெரியும் என்று கூறிய ஒரு பெண் மட்டும்" தெரியும் " என்றாள்..

" சரி அப்போ அத பத்தி இங்க வந்து சொல்லு பார்ப்போம் " என்று அவளை அழைத்து அவர்கள் முன் நிறுத்தினாள்.

"க்ராவ் மகா ன்னா அது ஒரு வகையாக குத்து சண்டை .இது தாய்லாந்து நாட்டில நடக்கிற ஒரு விஷயம். இதையே தான் ஸ்ரேல் நாட்டோட விசேஷ கலை. அங்க இத street fight னு தான் சொல்லுவாங்க. அது மட்டும் இல்லாம இத ஈசியா கத்துக்கலாம் ரொம்ப கஷ்ட படணும்னு அவசியம் இல்லை " என்று தனக்கு தெரிந்ததை கூறினாள் அந்த மாணவி..

" அந்த பொண்ணு சொன்னது எல்லாம் சரி தான் " என்றாள் நிலா.

" இத எதுக்காக கத்துக்கணும் தெரியுமா செல்ஃப் ப்ரொட்டக்ஷனுக்காகவும் கையாலேயே எப்படி நம்ம ஆப்பண்ட்ட பேஸ் பண்றத பத்தியும் கத்துக்கலாம். இன்கேஸ் நம்மள அவுங்க மிஸ்யூஸ் பண்ண வராங்கன்னா அத சமாளிக்கும் விதமாக இடுப்பு, கண்கள், கழுத்து மற்றும் விரல்கள் என உடல் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள்ள கொடூரமான தாக்குதல்கள் நடத்த சொல்லி கொடுப்பாங்க சோ நம்ம ஈசியா அவுங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிடலாம். அது மட்டும் இல்லாமல் அதுனால அவுங்களுக்கு பலத்த காயங்கள் ஏற்படும் " என்று அதனின் விளக்கத்தை கூறினாள் நிலா..

அதன் பின் அவர்களுக்கு செய்து காட்டி விளக்கவும் செய்தாள்..

இதனை மேலே இருந்து கண்ட விஷ்வா வாயை பிளக்காத குறையாக பார்த்தவன் மனதில் " நாம பண்ற கூத்துக்கு நமக்கு பலத்த அடி விலும் போலையே விஷ்வா "என்று எண்ணி எச்சிலை முழுங்கினான்.


வகுப்பு மணி அடிக்கவே அனைவரையும் திரட்டிக் கொண்டு வகுப்பறைக்கு சென்று விடைத்தாளை கொடுத்தாள்.. அனைவருமே பாஸாகி இருந்தனர்..

அன்று மாலையே விஷ்வா மீட்டிங் வைத்து இன்டஸ்டிரியல் விசிட் பற்றி பேச்சை எடுத்தான்..

" மூணு நாள் இன்டஸ்டிரியல் விசிட் வச்சிக்கலாம் . அத எனக்கென்னு ஸ்டேன்ஸ் கிட்ட கேட்டு சொல்லுங்க இதுக்கு யாழ்மொழி மேமும் மணிமேகலை மேமும் கோ ஆர்டினேட் பண்ணுட்டும் " என்றான்.

அனைவரும் ஒப்புக்கொண்ட பின்னர் மீட்டிங் முடிவு பெற்று கலைந்து சென்றனர்...

இரவு வேளையில் உணவை கொடுக்கும் பொருட்டு நிலா விஷ்வாவை காணச் சென்றாள்...


திருச்சி மாவட்டத்தில் இருந்து சென்னை வருவதற்கான ட்ரெயினில் ஏறி அமர்ந்தனர் இசையினி அவளது அன்னை கற்பகம் மற்றும் தந்தை கண்ணதாசன். மூவரும் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் சென்னை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்திருந்தனர்....


தொடரும்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN