நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றாலை சுழற்சியில் உன் சுவாசமே...03

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுவாசம் 03


இதழியனியின் மனதை மாற்றுவதற்காக அனலன் எவ்வளவு செய்தும் அவனுக்கு பலன் இல்லாமல் போகவே இல்லத்தின் முற்றத்தில் அமர்ந்து நிலவின் அழகினை இரசிக்க முடியாமல் தத்தளித்து கொண்டு இருந்தான்..


இதற்கிடையில் அவனுக்கு அவனது கடந்த கால வாழ்க்கை ஞாபகம் வர தனக்கு எப்படி இந்த வாழ்க்கையை பழக உதவியதோ அதையே அவளுக்கும் செய்யலாம் என்று யோசனை வரவே அவன் முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது...


சிறிது நேரத்தில் மாதவியுடன் இரு குழந்தைகள் வந்தனர். ஒன்று சிறு வயது பேதை மற்றொன்று வயது முதிர்ந்த குழந்தை..


அவர்களை கண்ட அனலன் "அடடே வாங்க குட்டிமா என்ன மேடம் என்ன தேடி வந்துருக்கீங்க பொதுவா இந்த குட்டி மேடம் ரொம்ப பிசியாச்சே " என்று அந்த குழந்தையாய் இருந்த சுட்டி தேவதையிடம் கேட்க..


"நீ என்கிட்ட பேசாத அண்ணா " என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.


"அச்சோ குட்டிமாக்கு என்ன ஆச்சி..??இப்போ எதுக்கு இந்த அண்ணா மேல கோபமா இருக்காங்க " என்று அவள் தாடையை பிடித்து கெஞ்ச..


அதை தட்டி விட்டவள் " இந்த ஒரு வாரமா புதுசா வந்த அந்த அக்கா கூட தான் பேசுற அண்ணா நீ மட்டும் இல்ல இந்த அம்மாவும் தாத்தாவும் தான் " என்று பக்கத்தில் இருந்த மாதவியையும் அந்தோனியரையும் கைக் காட்டி கூற..


"அச்சோ என்னோட செல்லம் அக்னிகாவுக்கு கோபம் வந்துடுச்சி போல " என கூறி அவளை தூக்கி கொண்டவன்


" இங்க பாருங்க அக்னி மா அவுங்க நம்ம இல்லத்துக்கு புதுசா வந்துருக்காங்க அதுவும் அவுங்க உயிருக்கு போராடி பெரிய பிரச்சனை எல்லாம் பாத்துட்டு வந்துருக்காங்க டா .அவுங்களுக்கு நாம தான துணையா இருக்கனும் சொல்லு " என்று அந்த பன்னிரண்டு வயது குட்டி தேவதையிடம் பேசி புரிய வைக்க முயற்சி செய்ய..


அது கரக்டாக வேலை செய்தது . அக்னிகா யோசிப்பது போல் முகத்தை வைத்தவள் " நீ சொல்றதும் கரக்ட்டு தான் அண்ணா பாவம் அந்த அக்கா " என்றாள்..


"இத தான டி நாங்களும் உன்கிட்ட சொன்னோம். ஆனா அப்போலாம் ஒத்துக்காதவ உங்க அண்ணா சொல்லவும் உடனே ஒத்துக் கிட்ட " என்று மாதவி பொறிய...


" நீ எனக்கு இந்த மாதிரி சொல்லலையே மா . பாரு என்னோட அண்ணா எவ்வளோ பாசாமா என்ன தூக்கி வச்சிக்கிட்டு சொல்றான் . நீயும் தாத்தாவும் தான் இருக்கீங்களே " என்று விட்டு தன் அண்ணனான அனலன் கண்ணத்தில் இதழ் பதித்து விட்டு அம்மா தாத்தாவிடம் பழிப்பு காட்ட இதையெல்லாம் அந்த இல்லத்தின் கதவிற்கு பின் மறைந்த படி இதழி காண ,அவளுக்கு தன்னிச்சையாக அழுகை வந்தது. அந்த இடத்தை விட்டு யாரும் அறியாமல் சென்று விட்டாள்..


இதனை கண்ட அனலன் அக்னிகாவின் காதில் எதையோ சொல்ல அவளும் சரி என்றுவிட்டு அவனிடம் இருந்து தாவி குதித்து குதித்து ஓடி வீட்டிற்குள் சென்றாள்..


"இவள சமாளிக்கிறதே பெரிய சவாலா இருக்கு " என்று அந்தோனியர் சொல்ல அதை அமோதித்தார் மாதவி.


"அவள புரிஞ்சிக்கிட்டா போதும் தாத்தா அவள ஈசியா ஹேண்டில் பண்ணலாம் " என்றுவிட்டு " இப்போ என்ன பாக்க எதுக்கு வந்தீங்க..??"என்று கேட்க


"வந்தததையே மறந்துட்டேன் பாரேன் "என்றவர் " உன்ன சாப்பிட கூப்பிட தான் வந்தேன் வா போய் சாப்பிடலாம் " என்று அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்...


அனலன் உள்ளே சாப்பிட அமர அவன் கண்களோ இதழியனி இருக்கும் அறையையே நோக்கியது...


" அம்மா இதழி சாப்பிட்டாலாமா..??" என்று அவன் சாப்பாட்டை பிசைந்தவாறே கேட்க "அவள சாப்பிட கூப்பிட்டேன் ஆனா அவ ரும்லயே சாப்ட்டுக்கிறேன்னு சொல்லவும் அவளோட ரூம்க்கு போய் வச்சிட்டு வந்து தான் உன்ன கூப்பிட வந்ததே " என்று கூறவும்


ஐந்து நிமிடத்தில் வேகமாக உண்டவன் அவளது அறையை நோக்கி சென்றான்..


அங்கே இதழியனிக்கு அக்னிகா சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருக்க கண்ணில் நீருடன் சிரித்த முகமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் இதழியனி ..


இதனை கண்டவன் அவளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான். அதன் பின் வந்த சுவடே தெரியாமல் பக்கத்தில் இருக்கும் அவனது அறைக்குள் புகுந்துக் கொண்டான்.


அக்னிகாவை பற்றியும் இதழியனியை பற்றியும் சிந்தித்த படியே உறங்கி போனான். அக்னிகா அவளுடனே இருந்து கொண்டாள்.


அடுத்தநாள் விடியல் அவர்களுக்கு அற்புதமாக பிறக்க அனலன் வேக வேகமாக எங்கையோ செல்வதற்கு கிளம்பிக் கொண்டு இருந்தான்...


கிளம்பி வெளியே வந்த அனலன் இதழியனியின் அறைக்கு செல்ல அங்கே அவள் சுவரையே வெறித்து பார்த்த படி கட்டிலில் அமர்ந்திருந்தாள். அக்னிகா கிளம்பிக் கொண்டு இருந்தாள் பள்ளிக்கு செல்வதற்கு...


இப்போதெல்லாம் இதழியனி பெண்களின் ஆடைகளையே அணிவிக்க தொடங்கி இருந்தாள். அவளை சிறிது சிறிதாக மாற்றிக் கொள்ள முயற்சித்து கொண்டு இருந்தாள்..


இதழியனியின் அறையுள் நுழைந்தவன் "குட்டிமா சீக்கிரம் கிளம்புங்க டா அண்ணா உங்கள கொண்டு போய் ஸ்கூல்ல விடுறேன் " என்க " அய் சூப்பர் அண்ணா இதோ ஒரு ஃபைவ் மினிட்ஸ் கிளம்பிடுறேன் " என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்து அனலன் அறைக்கு சென்று புத்தகத்தை எடுத்து பையினுள் போட்டுக் கொண்டாள்..


அதன்பின் "அண்ணா நான் ரெடி கிளம்பலாம்"என்று குரல் கொடுக்க " நீ போய் கார்ல உக்காரு டா குட்டி நான் இதோ வந்தறேன் " என்றான்


அவளும் சென்று காரில் முன் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள இங்கே இவனோ எதையும் கண்டுகொள்ளாமல் இருந்த இதழியனியே பார்த்துக் கொண்டு இருந்தான்...


"இதழியனி " என்று கூப்பிட அவளிடம் எந்த ஒரு அசைவும் இல்லாமல் போகவே மீண்டும் " இனு " என்று கூற அடுத்த நொடி ஏதோ ஒரு ஊந்துதலில் திரும்பி பார்க்க அங்கே அனலன் நின்றிருந்தததை பார்த்து " எதுக்கு இங்க வந்த " என்று எரிச்சலாக கேட்டாள்.


" அதுக்கு பதில் நான் அப்புறமா சொல்றேன் இப்போ கிளம்பி என்கூட வா " என்று கூப்பிட...


"நான் எங்கேயும் வரல " என்று கூறிவிட்டு தான் உடுத்தி இருந்த உடமைகளை பார்வையிட்டாள்...


அதை புரிந்து கொண்டவன் " இப்போ வரப் போறியா இல்லையா " என்று சிறு கோபத்துடன் கேட்க...


"இல்லை" என்பது போல் அவள் தலையாட்ட அவள் கரத்தை தன் கரத்துடன் சேர்த்தவன் அவளை அழைத்துக் கொண்டு இல்ல இல்ல இழுத்துக் கொண்டு சென்றான்..


"என்ன விடு என்ன எங்க கூட்டிட்டு போற " என்ற கேள்வி கூட அவன் காதில் விழாமல் போக அவளை காருக்குள் ஏற்றிவிட்டு அவனும் ஏறிக் கொண்டு அக்னிகாவை பள்ளியில் விட சென்றான்...


அக்னிகாவை பள்ளியில் விட்டவன் வேகமாக காரை எடுத்தவன் அந்த இடம் வந்த பிறகே நிறுத்தினான்...


அவனை கண்டு முறைத்தவளை பார்த்து " கீழ இறங்கு முதல " என்று கர்ஜிக்க அவள் சிறு பயத்துடனே காரவை விட்டு கீழே இறங்கியவள் தன் கண் முன் இருப்பவர்களை கண்டு வியந்து நின்றாள்...


" வா என் கூட " என்று அவளின் கை பிடித்து உள்ளே அழைத்துச் செல்ல அவளது உடலில் சிறு நடுக்கம் ஏற்பட்டது...


அவர்கள் வருவதை கண்டவர்கள் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர்...


அவளால் எதுவும் பேச முடியவில்லை வாயடைத்து போய் நின்றிருந்தாள். ஏனெனில் அங்கிருந்த எல்லோரும் திருநங்கைகளே...


" அக்கா இவ பேரு இதழியனி என்னோட ஃபிரண்ட் " என்று அறிமுக படுத்தி வைக்க அங்கிருந்தவர்களில் பெரியவர் ஒருவர் வந்து அவளை ஆசிர்வாதம் செய்ய அவள் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டாள்..


அனலன் இங்கு வருவதற்கு முன்பே இதழியனியை பற்றி கூறி இருந்ததால் அவர்கள் அதை பற்றி பேசாமல் மத்தததை பற்றி பேசத் தொடங்கி இருந்தனர்...


"எப்படி மா இருக்க..??" என்று வாஞ்சையுடன் அங்கிருந்தவர்கள் கேட்க "நான் நல்லா இருக்கேன் நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க " என்றிட


"எங்களுக்கு என்ன நாங்க ரொம்ப நல்லா இருக்கோம் மா.. எங்களுக்கு இந்த சமுதாயத்துல ஒரு சரியான அங்கீகாரம் இல்லைனாலும் யாரோட பொலப்பையும் கெடுத்துட்டு வாழல மாட்டோம் மா " என்று அவளது கண்ணத்தை வாஞ்சையாக தடவி விட்டவர் அவர்களை அழைத்துக் கொண்டு காலை உணவை சாப்பிட வைத்தனர்...


முதலில் சாப்பிட தயங்கிய இதழியனி , அனலன் ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.


"சாப்பிட்டு மா " என்று பாசமாக அவர் சொல்ல...


" ஆண்டி " என்று அழைக்க


" என்ன அம்மானே கூப்பிடு மா. இங்க உள்ள எல்லாரும் வேற வேற இடத்துல இருந்து கஷ்ட பட்டு தான் இந்த இடத்துக்கு வந்து சேந்துருக்காங்க. யாருக்கும் யாரும் இப்போ இல்லன்ற கவலை வர கூடாதுன்னு தான் எங்களுக்குள்ளயே நாங்க சொந்தங்கள்ள வகுத்துக்கிட்டோம் மா. இனி உனக்குன்னு யாரும் இல்லன்னு நினைக்காத உனக்காக உனக்கே உனக்காக இங்க உன்னோட சொந்தம் நாங்க இருக்கோம் " என்றார் அந்த வீட்டின் பெரியவர் காமாட்சி.


இதழோரத்தில் புன்னகை மலர " அம்மா " என்று அழைத்தாள் இதழியனி.


அதன்பின் காமாட்சியே அவளுக்கு ஊட்டி விட ,அதனை கண்ட அனலன் அவன் இடத்தை விட்டு எழுந்து காமாட்சி அருகில் தட்டுடன் நின்றுக் கொண்டான். அதனை கண்டவர் அவனுக்கு சேர்த்து ஊட்டி விட தொடங்கினார்.


அங்கிருந்த வரை இதழியனி மிகவும் சந்தோஷமாக காணப்பட்டால்.


" என்னால முடிஞ்சதை அவளுக்கு செய்யனும்னு ஏன் தோணுதுனே தெரியல எனக்கு. ஆனா நான் அவளுக்காக எப்போதும் அவ கூட இருப்பேன்.என்ன நடந்தாலும் அவளுக்கு துணையா இருக்கனும்" என்று நினைத்து கொண்டு இருக்க அவன் விழிகளோ இதழியினியை பார்த்துக் கொண்டு இருந்தது...


மதிய‌ நேரம் வரவும் இதழியனியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து விடைப் பெற்றான் அனலன்...


இதழியனி மௌனமாக வரவே, அவள் அவளை பற்றி சிந்திக்க தொடங்கி விட்டாள் என்று அவனுக்கு தெள்ள தெளிவாக புரிந்தது. அதனால் அவனும் அமைதியாகவே வந்தான்.


அடுத்ததாக அவன் வண்டி ஒரு பள்ளியில் முன் வந்து நின்றது..


காரினுள் இருந்த படியே அவளது கண்ணை கட்டிவிட்டவன் அவளை அழைத்துக் கொண்டு செல்ல " இப்போ என்ன எங்க கூட்டிட்டு போர அனல் " என்று கேட்க


இதுவரை அவனது பெயரை கூட அழைத்தது இல்லை. ஆனால் இன்றோ அவனது பெயரை அழைத்ததும் இல்லாமல் செல்லமாக அழைக்கிறாள் என்றதும் அவனுக்கு சந்தோஷம் தாளவில்லை...


"இதோ வந்துட்டோம் " என்றவன் அவளை ஒரிடத்தில் நிறுத்தி கட்டை அவிழ்த்து விட கண்களை கசக்கியவாறே திறக்க , அவளுக்கு முன் சிரித்த முகத்துடன் இருந்த விதுஷாவை கண்டவள் ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள்..


"விது மா எப்படி இருக்க டா ??" என்று பாசமாக கேட்க


"நான் நல்லா இருக்கேன் அண்.." என்று நிறுத்த " இனி நான் உனக்கு அண்ணா இல்ல டா அக்கா " என்று திருத்தி கூறிட


"ஓகே அக்கா " என்றாள் விது...


"அக்கா இப்போ நீ எங்க இருக்க. அப்பா உன்கிட்ட பேசவே கூடாதுன்னு சொல்லிட்டாரு அக்கா என்கிட்டயும் அம்மா கிட்டயும் அதுனால தான் வந்து உன்ன பாக்க முடியல " என்றாள் சிறிது வருத்தத்துடன்..


"அச்சோ என் தங்கச்சி இப்படி எல்லாம் பேசலாமா சொல்லு " என்றவள் அவளை கிச்சு கிச்சு மூட்ட விது சிரிக்க முடியாமல் சிரிக்க தொடங்கினாள்..


அதன் பின் இருவரும் சிறிது நேரம் பேச அனலன் தூரத்தில் இருந்து அதை இரசித்து கொண்டு இருந்தான்.


விதுஷா தான் கொண்டு வந்த உணவை எடுத்து அவளுக்கு ஊட்ட அவளும் சிரித்த முகத்துடன் வாங்கி கொண்டு அவளும் விதுக்கு ஊட்டி விட இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டு சாப்பிட்டு முடித்தனர்...


விதுஷாவிற்கு வகுப்பிற்கு நேரமாகவும் அவள் கிளம்புவதாக சொல்ல இதழியை வழியனுப்ப அதற்குள் விதுவிற்கு ஏதோ ஞாபகம் வந்ததாக " ஒரு நிமிஷம் இரு அக்கா நான் வந்தறேன் " என்று விட்டு வேகமாக சென்றவள் வரும்போது ஒரு பெரிய கவருடன் வந்தாள்...


அதனை அவளிடம் கொடுத்தவள் " இதுல தான் உன்னோட வாழ்க்கையே இருக்கு அக்கா.. இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு உனக்கு பரிச்சைக்கு ஒழுங்கா படிச்சு நீ நல்ல மார்க் வாங்கனும் கா " என்றுவிட்டு அவளை அனுப்பி வைத்தாள்...


இதழியனியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தவன் எதுவும் பேசாமல் அவனது அறைக்குள் புகுந்து கொண்டான்..


கட்டிலில் அப்படியே அமரந்தவன் கண்களை மூடிய படி இருந்தான்.


அவனின் முன் நிழல் ஆடுவதை தெரிந்துக் கொண்ட அனலன் மெதுவாக இமையை பிரித்து பார்க்க அங்கே இதழியனி புன்னகையுடன் நின்றிருந்தாள்..


" ரொம்ப தேங்க்ஸ் அனல் " என்று புன்னகை மாறாமல் கூற


"எதுக்கு இந்த தேங்க்ஸ் எல்லாம் " என்று புருவத்தை உயர்த்தி கேட்டிட...


"எல்லாத்துக்காகவும் தான் . என்ன எனக்கே நீ புரிய வைக்க பண்ணதுக்கு . அப்புறம் நேத்து அழுதுட்டு போனத பாத்து இன்னைக்கு என் தங்கச்சி கிட்ட கூட்டிட்டு போய் எனக்கு படிப்பு முக்கியம்னு அவள சொல்ல வச்சதுக்கு . இனி நான் நல்லா படிச்சு நீங்க என் அப்பா கிட்ட போட்ட சவால்ல நான் ஜெய்ச்சி காட்டறேன் அதுக்கு நீங்க ஹெல்ப் பண்ணணும் ப்ளிஸ் " என்று அவனுக்கு நன்றி கூறியதற்கான காரணத்தை கூறியவள் அவனிடம் சிறு வேண்டுதலையும் வைத்தாள்...


"சரி ஹெல்ப் பண்றேன் ஆனா இதெல்லாம் நான் உனக்காக பண்ணல எல்லாம் என் மாதவி அம்மாக்காக தான் பண்ணேன் " என்று இறுக்கத்துடன் கூறியவனை பார்த்து புன்னகைத்தவள் அவனின் கண்ணத்தில் அவளது முதல் முத்தத்தை பதித்து விட்டு "தெரியும் தெரியும்" என்று சொல்லி மறைந்து விட்டாள்...


அவள் எச்சில் பண்ண இடத்தை தொட்டு பார்த்தவனின் முகத்தில் புன்னகை அரும்பி இருந்தது...


~சுவாசிக்கும்

 

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Wow semma Ammu😍😍😍
இதழ் தன் நிலையை ஏற்றுக்கொள்ள தொடங்கிட்டா. . இனி எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் திடம் அவளுக்கு வந்திடும்... அதுக்கு நம்ம அனலனும் உதவியாக இருப்பான்😍😍😍

Waiting for next epi Ashu😍😍
 
OP
Ashwathi

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Wow semma Ammu😍😍😍
இதழ் தன் நிலையை ஏற்றுக்கொள்ள தொடங்கிட்டா. . இனி எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் திடம் அவளுக்கு வந்திடும்... அதுக்கு நம்ம அனலனும் உதவியாக இருப்பான்😍😍😍

Waiting for next epi Ashu😍😍
Thank you so much akka 🤩... kandipa vandhurum akka..avaluku thunaiya ipo Ava parents illanalum anal and family koodavae iruku....

Seikiramave podren akka...😍😍
 
OP
Ashwathi

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Wow semma Ammu😍😍😍
இதழ் தன் நிலையை ஏற்றுக்கொள்ள தொடங்கிட்டா. . இனி எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் திடம் அவளுக்கு வந்திடும்... அதுக்கு நம்ம அனலனும் உதவியாக இருப்பான்😍😍😍

Waiting for next epi Ashu😍😍
Thank you so much akka 🤩... kandipa vandhurum akka..avaluku thunaiya ipo Ava parents illanalum anal an
 

Sri Ram

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Super da amlu....:love::love::love:idhazhloda happiness ine anal kaila than irruku....kandipa idhazh appa ku munnadi nalla vazhndhu kaatanum da ...stry ya super ra kondu pora da amlu:D
 
OP
Ashwathi

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Super da amlu....:love::love::love:idhazhloda happiness ine anal kaila than irruku....kandipa idhazh appa ku munnadi nalla vazhndhu kaatanum da ...stry ya super ra kondu pora da amlu:D
Thank you Da diamyyyy...😍😍
Paapom Ena nadakudhunu ..anal kadasi varaikum kooda irundha happiee dhan..paapom
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top