நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

பயம்..

Kousalya Venkatesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பயம்.

தன் இரண்டரை வயது வாலுப் பயல் ஹரியை சமாளிப்பது தான் உலகத்திலேயே கஷ்டமான வேலை என்பாள் நளினா...

அவன் கடவுள் மாதிரி... எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் காட்சி தருவான்... வானத்திலும் இருப்பான், பூமியிலும் இருப்பான்...

எங்கேடா காணும் இந்தக் குட்டிப் பயலை என்று தேடினால், சில சமயம் கட்டிலுக்குக் கீழே ஒளிந்து கொண்டு இருப்பான் ...

சில சமயம் எப்படித்தான் மேலே இருக்கும் ஷெல்பில் மேல் ஏறுவானோ தெரியாது... அங்கேப் போய் உட்கார்ந்து இருப்பான் ...அவனைக் கீழே இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் அவளுக்கு...

அவன்பயப்படுவது எதற்கு என்றால் ,அவள் கூறும் பேய் கதைகளுக்கு மட்டுமே... ரொம்ப அடம் பண்ணினா உன் பின்னாலேயே நகராம வந்துகிட்டே இருக்கும் டா குட்டிப்பேய் என்று பயமுறுத்தியே சாப்பாடு ஊட்டி விடுவாள்...

ஒருநாள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தவன் அப்போதுதான் கவனிக்கிறான்... திடீரென தன் பின்னே குட்டிப் பேய் ஒன்று ஒளிந்து நிற்பதை...

அவன் நகர்ந்தாலே அதுவும் நகர்கிறது ... அய்யோ அம்மா சொன்ன மாதிரியே என் பின்னாலேயே நகராம ஒட்டிக்கிட்டு என் கூடவே வருதே என பயப்படுகிறான்...

அவன் எங்கு ஓடினாலுமே, அவன் பின்னே விரட்டிக் கொண்டே வருகிறது அதுவும்... அலறிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்து விடுகிறான் ...வீட்டுக்கு கால் வைத்ததுமே குட்டி பேய்க் கோபமாய் மறைந்து விடுகிறது...

அம்மாவிடம் மழலை குரலில் கூறுகிறான்... பேய் தன்னை விரட்டுவதை ...என்னடா சொல்ற, இந்த காலத்துல ஏது பேய், பூதம்லாம்... ஏதாவது உளறு என்கிறாள்...

அம்மா பேய் என் பின்னேயே வருது என அழுகிறான் ஹரி...

இதென்னடா வம்பா போச்சு ...சும்மா பயமுறுத்துவதற்காக சொன்னத, நிஜம்னு நினைத்து விட்டானே... அவன் பயத்தைப் போக்குவோம் என, சரிடா நான் கூட்டிட்டு போறேன் வெளியிலே ... பேய் வருதாப் பார்ப்போம் என சாமிக்கு விளக்கேற்றி வைத்துவிட்டு எல்லா மின்விளக்குகளையும் போட்டு வீட்டை வெளிச்சமாக்கி விட்டு வெளியில் கூட்டிச் செல்கிறாள்...

இப்போது பேயை காணோம்... எங்க அம்மாவுக்கு தெரிஞ்சதும் இப்ப பயமுறுத்த மாட்டேங்குற... தைரியமா வாடா நீ என்று பேயைத் திட்டுகிறான் ஹரி...

நளினாவுக்கு சிரிப்பு தாங்கல...அவன் பேசுறதைக் கேட்டு...

மறுநாளும் விளையாட வெளியே சென்றவன், பேய்,பேய் எனக் கத்திக் கொண்டே உள்ளே வருகிறான் ...இவன் என்ன தினமும் இப்படியே சொல்கிறானே என்று,

உடனே அவன் பின்னாலேயே செல்கிறாள் நளினி...

அவன் அந்தப் பேயைப் பார்த்து பயந்து திரும்பி, திரும்பி பார்த்தபடியே வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறான்...

அவன் பின்னே அவன் நிழலும் ஓடிக்கொண்டே இருக்கிறது ...

அட நாயே இந்த உன்னுடைய நிழலைப் பார்த்து தான் இப்படி அழுகிறாயா என்று சிரிக்கிறாள் நளினா...

குட்டிப் பசங்களை அளவுக்கு மீறி பயமுறுத்த தான் கூடாது..
 

Min mini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
hahaha... kutty pasanga epovume vaalu thaan
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top