நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...12

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
12.காற்றுக்கென்ன வேலி

கல்லூரிக்கு வந்ததில் இருந்தே பயத்துடனே சுத்திக் கொண்டு இருக்கிற விஷ்வாவை கண்டு மணிமேகலையின் முகம் யோசனையில் மூழ்கியது...


" என்னாச்சி நம்ம விச்சு சாச்சாவுக்கு காலையில இருந்தே சரியிலயே ஒரு விஷயத்துலயும் கவனம் இல்லாம இருக்காரு. அது மட்டும் இல்லாமல் இன்னைக்கு நிலா ஏன் காலேஜ்க்கு வரல ஒரு ஃபோன் பண்ணி கூட சொல்லல நாம போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்கிறா. இவங்களுக்குள்ள எதாவது பிரச்சனையா இருக்குமோ..?? அப்படி இருந்தா கூட என்ன பிரச்சினையா இருக்கும் இவுங்க ரெண்டு பேரும் இப்போ கொஞ்ச நாளாவே வித்தியாசமா தான் நடந்துக்கிறாங்க " என்று இல்லாத மூலையை வைத்துக் கொண்டு சிந்தனையில் மூழ்கி விட அதனை கலைக்கும் விதமாக அவள் முன் அதிரூபன் நின்றிருந்தான்.


அவனை கண்டு முதலில் திடுக்கிட்டவள் அடுத்த நொடியே தன்னை மீட்டெடுத்து " என்ன வேணும் சார் உங்களுக்கு இப்போ " என்று எரிச்சலுடன் கேட்டாள் மணிமேகலை...


" உங்களுக்கு தெரியாதா எனக்கு என்ன வேணும்னு " என்று புருவம் உயர்த்தி நிலாவின் இடத்தை காட்டினான்.


" பச் " என்றவள் வேலையை செய்ய தொடங்க


"சொல்லுங்க மேடம் " என்றான் அதிகாரமான குரலில்..


" உங்ககிட்ட எதுக்கு நான் சொல்லனும் சொல்லுங்க சார் " என்று கோபத்தை கட்டுப்படுத்தியவள் பல்லை கடித்த படி கேட்டாள்.


" கண்டிப்பா சொல்லி தான் ஆகனும் மேடம் இல்லன்னா அதுக்கும் சேத்தும் யாழ் செல்லம் அனுபவிப்பாங்க " என்றான் சிரிப்புடன்..


அவன் சிரிப்பதை கண்ட மணிக்கு எரிச்சலாக இருந்தாலும் அவனின் கூற்றில் இப்போது சிரிப்பு இவளுக்கு சொந்தமாக இருந்தது.


" லூசா சார் நீங்க அவ கிட்ட பேச போய் தான உங்களுக்கு இந்த நிலைமையே இன்னும் நீங்க அவள செல்லம் பவளம்ன்னு சொல்லிட்டு இருக்கிறத மட்டும் அவனுக்கு தெரிஞ்சது உயிர் உங்ககிட்ட இருக்கிறது சந்தேகம் தான் சார் " என்றாள் ஏளனமான புன்னகையில்..


அதை கேட்டவனுக்கு கோபம் கொப்பளிக்க " ஏய் " என்று இடம் பொருள் ஏவல் அறியாமல் ஒரு நொடி கத்தி விட


" எனி ப்ராப்ளம்" என்று அவர்களிடம் கேட்டனர் மத்த ஆசிரியர்கள்..


" அதெல்லாம் ஒன்னும் இல்ல மேம் .உங்க வேலைய நீங்க கேரி ஆன் பண்ணுங்க " என்றவள் அதிரூபன் பக்கம் திரும்பி " வெளிய போன்னு நான் சொல்லனும்னு எக்ஸ்பெக்ட் பண்றீங்களா சார் " என்று சிரித்த முகமாகவே கூறினாலும் அதில் அத்தனை கோபம் நிறைந்திருந்தது .


அவளை முறைத்தவன் வேகமாக வெளியேறினான்.


ஸ்டூடென்ஸ் எல்லாம் சேர்ந்து ப்ளேஸ் சூஸ் பண்ணி இருந்தனர். அதனால் அன்று மாலையே சிறிய மீட்டிங் வைத்தான் விஷ்வா.


அதில் பெங்களூர் மைசூர் கூர்க் என மூன்று இடங்களை சூஸ் பண்ணி இருந்தனர் .மூன்று நாட்கள் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர் அந்த மீட்டிங்கில்..


அப்போது எதார்த்தமாக காலையில் அதிரூபன் வந்து பேசியதை பற்றி சொல்ல உடனே விஷ்வா மணிமேகலையை கண்டான்.


" ஓகே இது தான் நம்மளோட ப்ளான் மூணு நாள் எந்த நாளாவானா இருக்கட்டும் இத ஸ்டுடென்ஸே மேனேஜ் பண்ணட்டும் அப்போ தான் அவுங்களுக்கும் ஆர்கனைஸ் பண்ற கெப்பாசிட்டி வரும். எதுவா இருந்தாலும் எனக்கு இமீடியெட்டா சொல்லுங்க நான் பாத்துக்கிறேன் இப்போ எல்லாரும் போகலாம். மிஸ் மணிமேகலை மட்டும் இங்கேயே இருங்க " என்றவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.


அனைவரும் மீட்டிங் ஹாலை விட்டு வெளியே சென்றதும் " சொல்லுங்க விஷ்வா சார் " என்று பவ்யமாக கேட்க


" விஷ்வா சேர் இல்ல விச்சு சாச்சா " என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்..


அவனின் கோபத்தில் மிரண்டவள் அமைதியாக இருக்க " உன்கிட்ட அவன் சத்தம் போட்டு பேசி இருக்கான் .ஆனா நீ அங்க அமைதியா இருந்திருக்க சரி அப்போ தான் அமைதியா இருந்த நான் இருக்கேன்ல என்கிட்ட வந்து அவன் உன்கிட்ட கத்திட்டு போனத பத்தி சொல்லி இருக்கலாம்ல ஏன் சொல்லல" என்றான் பொறுமையாக ஆனால் அதிலும் கோபம் மட்டுமே நிறைந்திருந்தது..


" சாச்சா அ அது வ வந்து " என்று மணி திக்கி திணற


" எதுக்கு இப்போ இப்படி திணறுற மணி அப்போ ஏதோ பெருசா இருக்கு அப்படி தான " என்று கோபக் கனலை அவள் மேல் வீச


அவள் அமைதியாக நிற்பதை கண்டு" சொல்ல போறீயா இல்லையா " என்றான்.


" ஆமா சாச்சா " என்று தலை குனிந்தாள்..


" சரி என்னென்னு சொல்லு " என்று அவளை பார்க்க


மணியும் ஒன்று விடாமல் கூறத் தொடங்கினாள். அதில் கோபமுற்ற விஷ்வா அவன் இருக்கையை விட்டு வேகமாக எந்திரிக்க அதை பார்த்த மணி மிரண்டு போய் விட்டாள்.


அவனின் புஜங்கள் எல்லாம் வெடித்து விடுவது போல் புடைக்க கண்கள் இரண்டும் சிவப்பேறியது...


" அடி பட்டும் அவன் இன்னும் திருந்தலையா அவனுக்கு என் கையால தான் சாவுன்னு இருந்தா யாருன்னால என்ன பண்ண முடியும் சொல்லு "என்று கோபத்தில் சொல்ல


" அவனுக்கு அடி படல சாச்சா அடி விழுந்துச்சி அதுவும் நிலாகிட்ட அப்படி நடந்துக்கிட்டதுக்காக " என்று அவன் பேச்சை குறிக்கிட்டு சொன்னால் மணிமேகலை.


" என்ன சொல்ற மணி " என்று விஷ்வா கேட்டிட மணிமேகலையும் அன்று நடந்ததை கூறத் தொடங்கினாள்..


" நானும் நிலாவும் ஷாப்பிங் பொய்ருந்தோம் சாச்சா எனக்கு அவளோட நடவடிக்கை தவறா பட்டுச்சி அதுனால தான் நான் அவள வெளிய கூட்டிட்டு போனதே .சாப்பிடும் போது தான் என்ன ஏதுன்னு கேட்ட போது தான் சாச்சா அவ இந்த விஷியத்த சொன்னதே. ஆனா அந்த இடத்துலே சக்தி இருந்தான்னு எனக்கு தெரியாம போச்சி . நாங்களும் பேசிட்டு கிளம்பிட்டோம். அன்னைக்கு நைட்டே சக்தி கால் பண்ணி இருந்தான் " என்று அன்று நடந்தவைகளை கூறத் தொடங்கினாள்.


" சொல்லு சக்தி என்ன இந்த நேரத்தில கால் பண்ணி இருக்க எனி ந்யூஸ் " என்று கேட்க


" ஆமா ந்யூஸ் தான் " என்று கடுகடுத்தான்.


" உனக்கு இப்போ என்ன ஆச்சி ஏன் இப்படி பேசுற உன்னோட வாய்சே சரியில்லையே " என்க


" நான் இன்னைக்கு மதியம் பனனான்னா லீஃப்க்கு (Banana leaf ) வந்தேன். உங்களுக்கு பின்னாடி தான் உக்காந்துட்டு இருந்தேன் " என்றான் பொறுமையை இழுத்து பிடித்த படி..


" அப்போ உனக்கு நாங்க பேசின்ன எல்லா விஷயமும் கேட்டுட்ட அப்படி தான "என்று சந்தேகத்துடன் அவன் ஆமாம் என்று சொல்ல வேண்டும் என்று எண்ணிய படியே கேட்டாள்..


அவள் எண்ணியது போலவே அவனும் " ஆமா நான் எல்லாத்தையும் கேட்டுட்டேன் " என்றான் .அவளுக்கு இந்த புறம் அவன் பற்களை கடிப்பது நன்றாகவே கேட்டது..


" அப்போ எனக்கு ஒரு உதவி பண்ணு " என்றாள் மணிமேகலை உறுதியான குரலில்..


" பச் இந்த நேரத்துல உனக்கு தேவையா " என்றவன் " சரி என்ன செய்யனும் சொல்லி தொல " என்று அலுத்துக் கொண்டான்.


" நீ அவன அடிக்கணும் அத என் கண்ணால நான் பாக்கனும் டா சக்தி . எவ்ளோ தைரியம் இருந்தா அந்த பொறுக்கி அப்படி பிஹேவ் பண்ணுவான் அதுவும் என்னோட நிலா கிட்ட . நான் எப்படி அவன சும்மா விடுறது சொல்லு " என்றவளின் ஆத்திரம் மட்டுபடாமல் இருந்தது..


சக்தி வேறேதும் சொல்ல வில்லை சரி என்றுவிட்டான். அவனுக்கும் இதே யோசனை தான் .ஆனால் அது யார் என்று தெரியாதே என்ற ஒரே காரணத்தினால் தான் இப்போது மணியிடம் பேசிக் கொண்டு இருப்பது. ஆனால் அவன் ஏதிர்பார்த்தது ஒன்று இங்கே நடந்தது வேற ஒன்றாக இருந்தது. மணிமேகலை இப்படி கூறுவாள் என்று அவன் சிறிதும் எண்ண வில்லை அதிர்ச்சியே உருவானது. இதுவே சரியென தோன்றிடவே உடனடியாக அவளிடம் சரி என்று ஒப்புக் கொண்டான்..


"நான் இன்னும் அரைமணி நேரத்துல அங்க இருப்பேன் நீ கிளம்பி இரு " என்று விட்டு மொபைலை வைத்தான்.


சக்தி சொன்னது போலயே அரை மணி நேரத்தில் வந்து நின்றான்.அவன் வீட்டு விலாசத்தை தெரிந்து கொண்ட சக்தி நேராக அங்கே பைக்கை விடுத்தான்.


அவனோ அப்போது தான் எங்கோ சென்று விட்டு வருகிறான் போல‌ அவனது நடையில் சிறிது தடுமாற்றம் வேறு. பைக்கை ஓரமாக நிறுத்திய சக்தி இறங்கி அவனின் பின் புற மண்டையில் கட்டை வைத்து ஓங்கி குத்த மட்டை ஆகினான் அவன்..


அவனை இழுத்துக் கொண்டு வேகமாக ஆழ் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்தவன் தன்னால் எவ்வளவு முடியுமோ அவனை அடித்து நொறுக்கினான்.


கடுங்கோபத்தில் இருந்த மணிமேகலை அவனின் முன் காரி துப்பிவிட்டு " என்னோட நிலாவ பாக்குற ஏன் அவ பேர உச்சரிக்கிற தகுதி கூட உனக்கு இல்ல டா .ஒரு பொண்ணு தனியா இருந்தா என்ன வேண்டுமானாலும் பண்ணாலாம்னு நினைக்கிற ஈன புத்தி உள்ளவுங்க இந்த உலகத்துல இருக்கவே கூடாது. அது மட்டும் இல்லாமல் ஒரு பொண்ண தப்பான பார்வை பார்த்த நீயெல்லாம் உயிரோட இருக்கிற தகுதிய எப்பவோ இழந்துட்ட டா " என்று பொறிந்தவள் ஓங்கி ஒரு குத்து குத்தினாள். அதில் வாயிலிருந்து உதிரம் வெளியே வந்தது.


"உன்ன மாதிரி ஆளுங்களுக்கு தான் கற்புன்னா என்னென்னே தெரியாத ச்சீ அதிங்கா இருக்கா எத நீ பலம் நினைச்சிட்டு இருக்கியோ அது தான் டா உன்னோட பலவீனமா அமஞ்சி அதுனாலயே நீ கஷ்ட பட தான் போற பாரு " என்றவள் சக்தியை இழுத்துக் கொண்டு பைக் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.


பின் ,அவளை அவளது வீட்டில் விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தான் சக்தி...


இதனை அனைத்தையும் கூறி அவனின் முகத்தை பார்க்க அது கன்றி போய் இருந்தது...


" அவன நான் பாத்துக்கிறேன் . இன்னைக்கு ஏன் காலேஜ்க்கு வரல " என்று கேட்டு அவள் முகத்தை பார்க்க


" எனக்கு தெரியல சாச்சா நான் அவளுக்கு நிறைய டைம் கால் பண்ணி பார்த்துட்டேன் அவ எடுக்கல " என்றாள் கவலையாக ..


" சரி நீ பாத்து பத்திரமா வீட்டுக்கு போ " என்று விட்டு தொப்பென்று இருக்கையில் அமர்ந்து விட்டான்...


இங்கே நித்திலா விஷ்வா வீட்டிற்கு வந்தாள்.


" மாமா அத்தை " என்று கத்திய படியே வீட்டிற்குள் வந்தவளை கண்டு புன்னகையுடன் வரவேற்றார் சாவித்திரி..


" வா மா நித்தி எப்படி இருக்க அண்ணி எப்படி இருக்காங்க " என்று பாசத்துடன் கேட்க


" ஐம் ஃபைன் அத்த அப்புறம் மாம் ஆல்சோ டூ குட் .நீங்க எப்படி இருக்கீங்க அத்த " என்றாள்.


" நானும் நல்லா இருக்கேன் டா "என்றவர் " சரி இரு நான் போய் குடிக்க எதாவது கொண்டு வரேன் மாமா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு " என்று விட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.


வேகமாக எந்திரித்த நித்திலா எட்டி சமையலறையை ஒரு முறை பார்த்தாள் அங்கே சமையலறையில் எதையோ செய்து கொண்டு இருந்தார். அதனை பார்த்தவள் புன்னகைத்து விட்டு அந்த இடத்தை காலி செய்தவள் விஷ்வாவின் அறை முன்பு நின்றாள்...


இந்த வீட்டிற்க்கு ஆயிரம் முறை வந்திருந்தாலும் விஷ்வாவின் அறைக்குள் நுழைந்தது இல்லை என்பதை விட அவன் சாவித்திரி சக்தி தவிர யாரையும் அனுமதித்தது இல்லை. இதில் ராஜதுரையும் அடங்குவார். விஷ்வா வெளிநாடு சென்றிருக்கிறதை மஞ்சரி மூலம் அறிந்த நித்திலா தான் வேகமாக வந்தது இங்கே தான். அவளுக்கு நம்பிக்கை எப்படியேனும் தன் மாமா அவரது மகனான விஷ்வாவிற்கு தன்னை திருமணம் செய்து வைப்பார் என்று. அதை விட அவரது வாக்கு மீது முழு நம்பிக்கை இருந்தது.‌ ஏனெனில் அவர் கொடுத்த வாக்கை காற்றியாகவே வேண்டும் ஏதோ உயிரை காப்பாற்றுவது போல் முக்கியமனது என்ற நினைப்பு அவருக்கு.


நித்திலா ஆயிரமாயிரம் ஆசைகளோடு அவன் அறை முன்பு நின்றிருந்தாள். அவளுக்குள் ஏதோ கொரானாவிற்கே மருந்து கண்டு பிடித்தது போல் வெற்றி புன்னகையை வீசினாள். கதவை திறக்க ஹோல்டரில் கையை வைத்தவள் " ஃபைனலி ஐம் கோயின் டு சீ மை விஷ்வாஸ் ரூம் இட்ஸ் சோ எக்ஸைட்டது " என்று மனதினுள் உறையாடியவள் கதவை திறக்க முயல அதுவோ திறக்க முடியாமல் போனது...


மீண்டும் மீண்டும் அதை திறக்க முயற்சி செய்தவள் அது பூட்டி இருப்பது தெரிந்து " டேமிட் " என்று கால்களை வைத்து கதவை ஓங்கி உதைத்தாள். அது அவளுக்கு வலியை தர "ஆஆ " என்று கத்திவிட்டு அந்த அறை வாயிலை வெறித்து நோக்கினாள்..


" நீ இந்த டோர வேன்னா லாக் பண்ணிட்டு இப்போ போயிருக்கலாம் ஆனா கூடிய சீக்கிரத்துல உனக்கு உரிமையானவளா உன்னோட ஒய்ஃபா இந்த ரூம்க்குள்ள காலெடுத்து வைப்பேன். அப்போ உன்னால ஒன்னும் பண்ண முடியாது. அந்த யாழ்மொழிய நான் சும்மாவே விட மாட்டேன் எனக்கு கிடைக்க வேண்டிய விஸ்வாவ தட்டி பறிக்க நினைச்சா அப்புறம் அது தான் விஷ்வா அவள கடைசியா பாக்குறதா இருக்கும். அவள உருத்தெரியாமல் அழிச்சிடுவேன் " என்று ஆத்திரத்துடன் எண்ணியவள் நொன்டிய காலை வைத்து நொன்டி நொன்டி கீழே வந்தாள்..


நொன்டிய படியே வந்தவள் சோஃபாவில் அமர்ந்து கொண்டு மொபைலை நோண்டினாள். அதற்குள் உள்ளிருந்து சாவித்திரி வந்து அவளுக்கு பிடித்த ஆப்பிள் ஜுஸ் கொடுக்க பொய்யான புன்னகையுடன் வாங்கி குடித்தாள்.


" சரிங்க அத்த எனக்கு லேட்டாச்சி ஐ ஹேவ் டூ கோ நான் இன்னொரு நாள் வரேன் அத்த மாமா சக்தி கிட்ட நான் வந்து போனதை சொல்லிடுங்க " என்று விட்டு நொன்டிய படியே அந்த இடத்தை காலிப் பண்ணினாள்.


அவள் நொன்டு வதை கண்ட சாவித்திரி அக்கறையுடன் " என்ன ஆச்சி நித்தி காலுக்கு இங்க வா கால்ல என்னென்னு பாக்குறேன் " என்று பதறி போய் கேட்டார்.


" இடிச்சுக்கிட்டேன் அத்த பெரிய அடியெல்லாம் ஒன்னும் இல்லை ஐ கேன் மேனேஜ் மை செல்ஃப் அத்தை கொஞ்சம் அவசரமான வேலை இருக்கு கிளம்புறேன் அத்தை " என்று அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்....


கோபத்துடன் வீட்டுக்கு வந்தவள் வேகமாக அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டாள்..


இங்கே நிலாவின் வீட்டில் அனைவரும் இருந்தனர். தூக்கம் கெடுத்து இரவு பயணித்ததால் கலைத்து போய் வந்தவுடனே உறங்கி விட்டனர்.


நிலா அவர்களுக்காக சமைத்து முடித்து மதிய வேலை உணவிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு பரிமாறினாள். சாப்பிட்டு முடித்தவர்கள் நீட்டி நெளித்து நேரத்தை கடத்தினர். இசை தான் நிலா கூடவே இருந்து ஊரில் நடந்த அனைத்து விதமான கதைகளையும் கூறத் தொடங்கினாள். ஆனால் நிலா எதுவும் பேசவில்லை வெறும் ம்ம் மட்டுமே கொட்டினாள்.


மாலை நேரத்தில் மெதுவாக பாட்டியே ஆரம்பித்தார் " என்ன திடிர்ன்னு இந்த பக்கம் அதுவும் குடும்பத்தோடு " என்று பாட்டி நக்கல் தோரணையில் கற்பகத்தை கண்டு கேட்க


அதற்கு இசையினியோ " இங்க நாங்க ரெண்டு விஷியத்துக்காக வந்திருக்கோம் " என்றாள்..


" அப்படி என்னடி ரெண்டு விஷியம் " என்று பாட்டி அதை அறிந்து கொள்ளும் நோக்கில் கேட்க


" அது ஒன்னு நாளைக்கு எனக்கு இங்க ஒரு கம்பெனியில இண்டர்வ்யூ இருக்கு பாட்டி அந்த இன்னொரு விஷியம் " என்றவள் தாய் தந்தையை பார்க்க


விஷ்வா வேகமாக வீட்டிற்கு வந்தவன் நேராக நிலாவின் வீட்டிற்குள் நுழைய காலெடுத்து வைக்க வரவும் " நிலாவுக்கு மாப்பிள்ளை பாக்க போறேன் " என்று படி ஒரே நேரத்தில் கற்பகமும் கண்ணசாதனும் கூறினார்கள்...


வீட்டினுள் இருந்த நிலாவும் வீட்டிற்கு வெளியே இருந்த விஷ்வாவும் இவர்களின் கூற்றில் அதிர்ந்து நின்றனர்..


_தொடரும்.....

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN