நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...13

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
13.காற்றுக்கென்ன வேலி


கற்பகம் கண்ணதாசன் கூறிய செய்தியில் செய்வதறியாது அதிர்ச்சியில் திகைத்து போய் நிலா நின்றாள் என்றால்., விஷ்வாவோ உலகம் சுத்துவதை நிறுத்தியது போல் பேயடித்தார் போல் நின்றான்.


கற்பகமோ கண்ணதாசனை கண்டு முறைக்க அதனை பொருட்படுத்தாது " உனக்கு கல்யாணம் பண்ணி பாக்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா சொல்லு நீ நம்ம வீட்டோட மகாலட்சுமி அதுவும் இல்லாமல் மொத வாரிசு உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணுன்னா தான அடுத்ததா இருக்கிற உன் தங்கச்சிக்கும் கல்யாணத்த பண்ணி பாக்க முடியும் சொல்லு " என்று நிதர்சனத்தை கலந்த உண்மையை கூற நிலா பதில் கூறாது தலை கவிழ்ந்து நின்றாள்.


" எனக்கு உன்னோட விருப்பம் ரொம்ப முக்கியம் மா என்னோட தம்பி சண்முகமும் உனக்கு ஒரு நல்ல இடமா பாத்து சீரும் சிரத்தியுமா கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எவ்ளோவோ ஆச பட்டுருப்பான். ஆனா அவனோட நேரம் அப்படி அல்பாய்சன்ல போகனும்னு இருக்கு. அவன் இப்போ இல்லன்னா என்ன அவனுக்கு பதிலா இதையெல்லாம் செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கு. மேல இருக்கிற உன்னோட அப்பா அம்மாவோட ஆன்மா நிம்மதியா இருக்கணும்னா அதுக்கு நீ கல்யாணம் பண்ணிக்கனும் இல்லன்னா அவங்கா ஆத்மா நிம்மதி அடையாது. அது மட்டும் இல்லாமல் நீ தான் நம்ம வீட்லயே பிறந்த மொத குழந்தை .எங்க வீட்டு பொண்ணுக்கு நாங்க ஒரு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆச படுறோம் . தீடிருன்னு சொன்னா உன்னால கண்டிப்பா பதில் சொல்ல முடியாது தான் அதுனால கொஞ்சம் டைம் எடுத்து கூட நீ சொல்லலாம் " என்றார் கண்ணதாசன் தன் தம்பி மகளின் வாழ்வை கருதி...


" என்ன பேசுறீங்க நீங்க இப்பவே இவளுக்கு இருபத்தி நாலு வயசாகுது. இதுக்கு மேல இவ யோசிச்சு எப்ப சொல்றது தான்க்கும், நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு அவளுக்கும் வயசு இருபத்தி ஒன்னு ஆகுது .இதுக்கு முடிச்சிட்டு அவளுக்கு பாக்க வேணாமா .இவளுக்கே நாள் கடத்திட்டு இருந்தா நல்லாவா இருக்கும் . பாக்குறவுங்க நாலு பேர் நாலு விதமா கண்ணு படுற மாதிரி பேசுமாடாங்க பாருங்க " என்று ஏனோ தனக்கு அவள் மீது அக்கறை உள்ளது போல் காட்டி கொள்ள நினைத்து பேசினாலும் அந்த சொத்துக்காக அவரது மனசு இப்படி பேச செய்தது.


இருவரின் பேச்சை கேட்டும் நிலா தலையை கவிழ்ந்தே நிற்க தன் அக்கா தலை குனிந்து நிற்பதை கண்ட இசை " போதும் கொஞ்சம் நிறுத்துறீங்களா இரண்டு பேரும் ஏதோ தப்பு செஞ்சது மாதிரி நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கம்பல் பண்ணாம பண்ணுறீங்க இந்த அக்காவும் தலைய குனிஞ்சு நிக்குது ., வாழப் போறது என்னோட அக்காவும் அவளுக்கு வர போற புருஷனும் தான். அவளுக்கு இப்போதைக்கு எனக்குன்னு ஒரு மாமாவ கொண்டு வர விருப்பம் இல்ல போல அவளுக்கே எப்போ கல்யாணம் பண்ணிக்க தோணுதோ அப்ப நிலாவே உங்க கிட்ட வந்து சொல்லுவா சரியா நீங்க ரெண்டு பேரும் இப்படி அடிச்சிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை " என்று படபடக்க தன் தந்தை மற்றும் அன்னையிடம் அக்காவுக்காக வாதாடியவள் வேகமாக சென்று தன் அக்காவின் தலையை நிமிர்த்தி " உனக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுதோ அப்போ உன்னோட சம்மத்தை சொல்லு அக்கா இப்போ நீ வா " என்று கையை பற்றியவள் இழுத்திட அவளோ அசைய மறுத்து நின்றிருந்தாள்.


அவளை நிமிர்த்தி பார்த்த இசை அவள் வேறெங்கோ பார்ப்பதை கண்டு அவள் அந்த இடத்தை நோக்க அங்கே விஷ்வா உயிரற்ற உறமாய் நின்றிருந்தான்.


" யார் நீங்க..??" என்று கேட்டு இசை விஷ்வாவை நோக்கி அடி எடுத்து வைக்க ,


" வா டா விஷ்வா இப்போ தான் இந்த வீட்டுக்கு வர தோணுச்சா உனக்கு " என்று வரவேற்ற படி கோபம் கொண்டார் ராஜேஸ்வரி பாட்டி..


" அப்படிலாம் ஒன்னும் இல்ல பாட்டி கொஞ்சம் வேலை அதிகம் " என்று வாய் பாட்டிக்கு பதில் கூறினாலும் பார்வை என்னவோ நிலா மீதே இருந்திருந்தது..


" சரி என்ன விஷியம் பா " என்று ராஜேஸ்வரி பாட்டி கேட்க கற்பகமோ அவனை அளவெடுத்து கொண்டு இருந்தாள். தன் மகளையும் அவனுடன் ஒப்பிட்டு பார்க்க தொடங்கினார்..


" பாட்டி நிலா இன்னைக்கு காலேஜ்க்கு வரல அது மட்டும் இல்லாமல் எந்த ஒரு இன்ஃபார்மும் பண்ணல அதான் என்னென்னு கேக்க வந்தேன் பாட்டி " என்றான் அமைதியான குரலில்...


" சரி தம்பி அது அவளோட பெரியப்பா பெரியம்மா ஊருல இருந்து வந்துருக்காங்க அதுனால தான் அவளால சொல்ல முடியாம பொயிருக்கும் " என்றார் ராஜேஸ்வரி பாட்டி தன் பேத்தி இன்று கல்லூரிக்கு வராத காரணத்தை..


" சரிங்க பாட்டி அப்போ நான் கிளம்புறேன் " என்று வெளியே செல்ல எத்தனிக்க தீர்க்கமாய் ஒரு பார்வையை நிலாவின் மீது செலுத்தி விட்டு சென்றான் விஷ்வா.


இதனை கண்ணதாசனும் இசையினியும் நோட் செய்து கொண்டனர்.


" யாரு அத்தை அது வீட்டுக்குளாம் வந்துட்டு போறான் " என்று கேள்வியாய் கற்பகம் ராஜேஸ்வரியை கண்டு கேட்க


" எதிர் வீட்டு பையன் தான் டி மா இவளோட காலேஜ்ல தான் அந்த தம்பியும் வேலை பாக்குது ரொம்ப நல்ல பையன் " என்றார் பெருமையாக ...


" சரிங்க மா " என்றார்‌ கற்பகம் எதையோ கணக்கு போட்ட படி...


" பெரியம்மா பெரியப்பா ‌எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க எங்க காலேஜ்ல நாங்க டூர் போக போறோம் அத முடிச்சிட்டு வந்து இத பத்தி பேசிக்கலாம்" என்று சொல்லியவள் இசையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.


நேரம் போக போக நிலாவிற்கு இதயம் படபடத்தது .விஷ்வா செல்லும் போது பார்த்த பார்வையில் அவள் செத்தே போய்விட்டாள். தன்னால் தான் அவனுக்கு இந்த நிலைமை தான் இல்லாமல் போனால் அவனுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வான் என்றே மூலை யோசனை தர ஆனால் மனமோ அவன் கண்டிப்பாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டான். உன்னை நினைத்தே காலத்தை ஓட்டுவானே தவிர அவனது வாழ்க்கையை பற்றி ஒரு போதும் சிந்திக்க மாட்டான் என்று நிதர்சனத்தை மனது உரைத்து விட்டு " நீ கல்யாணம் செய்து கொண்டாள் அவன் திருமணமான ஒரு பெண்ணை காதலிப்பது தவறு என்று புரிந்து அவனுக்கான வாழ்க்கையை பற்றி பார்ப்பான் " என்றே சொல்ல அவளுக்கு அதுவே சரியாக பட்டதினால் தான் தன் பெரியப்பா பெரியம்மாவிடம் டைம் கேட்டு வந்ததே....


ஆனாலும் அவளால் அறைக்குள் இருக்க முடியவில்லை அவளுக்கு இப்போது அவனின் நிலையை அறிந்தே ஆக வேண்டும் என்பது போல் அவள் வேலியிட்டு வைத்திருந்த உள்ளம் துடிக்க அதை எவ்வாறு அடக்குவது என்று தெரியாமல் கண்ணீர் விட்டாள்.


அப்போது மணியை பார்க்க அது " ஏழு " என்ன காட்டவே வேகமாக சமையல் வேலையை தொடங்கினாள்.


எட்டு மணிப் போல் இட்லியையும் அதற்கு தகுந்தாற்போல் சட்னியை செய்து பேக் செய்தவள் வேகமாக எடுத்துக் கொண்டு வெளியே வர அவளை வழி மறைத்து நின்றார் கற்பகம்...


" இந்த நேரத்துல எங்க போற கைல என்ன டிஃபன் பாக்ஸ் " என்று கேள்வி தொடுக்க


" அது வந்து பெரியம்மா எதிர் வீட்ல இருக்கிற விஷ்வா சாருக்கு .அவருக்கு சமைக்க தெரியாதாம் அதுனால பாட்டி கிட்ட வந்து ஹெல்ப் கேட்டாரு பாட்டியும் ஓகே சொல்லவும் நைட் மட்டும் இங்க இருந்து டின்னர் கொடுத்துட்டு வருவேன் " என்றாள் நிலா பயத்துடனே கேக்காத கேள்விக்கும் பதில் அளித்த படி..


" சரி அத இங்க கொடு " என்று கேட்க


" பரவால்ல அத்த நானே போய் கொடுக்கிறேன் " என்று தர மறுத்திட


" கொடுக்க போறியா இல்லையா " என்று வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து அதை வாங்கியவர் " உள்ள போ " என்று அதட்ட அசையாது அங்கேயே நின்றாள்.


" இப்போ உள்ள போக போறியா இல்லையா அப்படி நீ போகலன்னா உங்க அம்மா செத்ததுக்கான காரணத்த எல்லாரு முன்னாடியும் சொல்ல வேண்டியதா இருக்கும் பாத்துக்கோ " என்று மிரட்டும் தோனியில் அவர் காதை கடிக்க அதில் மிரண்டவள் ,


" வேணாம் அத்தை நான் பொயிடுறேன் நீங்க எதையும் சொல்லாதீங்க " என்று கைக் கூப்பி அழுகையுடன் கெஞ்சியவள் வேகமாக அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


பின்புறத்தில் நின்றிருந்த இசையை கற்பகம் அழைக்க ,, அவளும் தன் அன்னையிடம் வந்து " என்ன மா எதுக்கு இப்போ என்ன கூப்பிட்டுங்க " என்று அசால்ட்டாக கேட்க


" இன்னைக்கு சாய்ங்காலம் நம்ம வீட்டுக்கு வந்த எதிர் வீட்டு பையன் கிட்ட கொண்டு போய் இத கொடுத்துட்டு வா டி " என்று சொல்லி அவளிடம் அதை தர ,


அதை வாங்க மறுத்தவள் " நான் எதுக்கு போய் கொடுக்கனும் அக்காவ அனுப்பி விடுங்க என்னால லாம் போய் கொடுக்க முடியாது " என்றாள் தீர்க்கமான குரலில்..


" சொல்றத மட்டும் செய்றியா இந்த அதிக பிரசங்கி தன வேலைய என்கிட்டயே காட்டாத , நான் உன்னோட அம்மா டி தேவையில்லாம பேசுன பேசுற நாக்க அறுத்துடுவேன் பாத்துக்கோ " என்று திட்டிவிட்டு அவள் கையில் வழுக்கட்டாயமாக அதை திணித்தவள் " போய் கொடுத்துட்டு வா " என்று அனுப்பி வைத்தாள்...


தன் அன்னையை திட்டிய படியே எதிர் வீட்டுக்கு வந்தாள் இசை...


வீடு வரைக்கும் வந்தவள் உள்ளே செல்லாமல் கதவை தட்ட விஷ்வா நிலாவாக தான் இருக்கும் என்றெண்ணி வேகமாக வெளியே வந்து பார்க்க அங்கே அவளின் தங்கை நிற்கவும் கண்ணீர் முட்டியது அவனுக்கு..


" அவளுக்கு என்ன தான் ஆச்சி எதுக்காக அவ இந்த மாதிரி பிஹேவ் பண்றா என்ன பாக்க கூட உனக்கு விருப்பம் இல்லையா மொழி அதுனால தான் உன் தங்கச்சி கிட்ட கொடுத்து விட்டியா சாப்பாட்ட " என்று மனதில் குமரியவன் " உள்ள வா மா " என்று அவளை வரவேற்றான்.


அவனை கண்ட அவளுக்கு அதிர்ச்சி இரண்டு மணி நேரத்திற்கு முன் பார்த்தவரா இவரு என்றது போல் அவரின் நிலை இருந்தது...


தலை கலைந்து கண்கள் இரண்டும் சிவப்பு நிறத்திலும் சட்டை ஒரு பக்கம் டக்கின் செய்தும் மறுப்பக்கம் வெளியே வந்திருந்தது.அவரை பாக்கவே ஏனோ பரிதாபமாக இருந்தது.


" ஏதோ பிரச்சினை போல " என்று நினைத்துக் கொண்டவள் " இந்தாங்க சார் உங்களுக்கான சாப்பாட்டு " என்று நீட்டினாள்.


" ரொம்ப தேங்க்ஸ் மா . அப்படியே உங்க அக்கா கிட்டயும் ரொம்ப பெரிய நன்றி சொன்னேன்னு சொல்லிடு மா " என்றவன் புன்னகையுடன் அவள் நீட்டிய டிஃபன் பாக்ஸை பெற்றுக் கொண்டான்.


" ஓகே சார் " என்று புன்னகைத்து வெளியே வந்தாள்.


" சாரோட புன்னகையில உண்மை இல்லயே .நாம உள்ள வந்தப்போ அவரு யாரையோ எதிர்ப்பார்த்து வந்த மாதிரி தான இருந்துச்சி அதுவும் என்ன பாத்தோன்ன காணாமா பொய்டுச்சே . அதுவும் இவரு போகும் போது நிலா அக்காவ பாத்துட்டு போனாரே " என்று யோசனையுடனே அவன் வீட்டிலிருந்து வெளியே வர பக்கத்தில் கல்லு இருந்ததை கவனிக்க தவறியவள் அதில் கால் வைத்துவிட அது சரியாக நழுவி விட " அக்கா " என்ற சத்தத்துடன் கண்களை இறுக்க கீழே விழப் போனாள்.


தான் கீழே விழ வில்லையே என்று யோசித்த படியே மெல்ல கண்ணை திறக்க அவள் முகத்திற்கு மிகவும் பக்கத்தில் ஒரு ஆடவன் முகம் தெரியவே பயந்து போனவள் திமிற தொடங்கினாள்.


சக்தி தான் சரியாக அவள் விழப் போனதை பார்த்து வேகமாக அவளை நெருங்கி அவள் இடையில் கைவைத்து விழாமல் பிடித்தான். அவளை பற்றி இருந்தவனுக்கு மயிலிறகை பிடித்து இருந்தது போல் இருந்தது அவனுக்கு.


அவளை கண் கொட்டாமல் ஒரு நொடிக்கும் இரசனையுடன் மிகாமல் பார்த்துக் கொண்டிருக்க அவள் விழி திறப்பதை அறிந்து முகத்தை கோபமாக மாற்றி கொண்டான்.


அவள் திடிரென கத்தவும் சக்தியே ஒரு நொடி பயந்து அது தன்னை பார்த்து தான் அவள் கத்துகிறாள் என்று புலப்படவே கோபம் வந்தது.


" ஏய்! இப்போ எதுக்கு கத்துற ஏதோ சோஃபாவல படுத்து இருக்கிறதா நினைப்பா உனக்கு எந்திரி " என்று கோபத்தில் சொல்ல இசையும் படார் என்று அவனை விட்டு விலகி நின்றாள்.


" ச சா சாரி " என்று வார்த்தைகள் தடுமாற அதனை கண்டு உள்ளூர புன்னகைத்தவன் " உன்னோட சாரி யாருக்கு வேணும் உன்ன பிடிக்க போய் என்னோட கை இப்ப உடஞ்சது தான் மிச்சம் யம்மா என்னா கனகனக்குற " என்று கையை உதற செய்தான்.


" ஹலோ மிஸ்டர் அதான் சாரி கேட்டுட்டேன்ல அதோட என்னோட ஒர்க் முடிஞ்சது .நீங்க கைய தேய்ப்பீங்களோ இல்ல டாக்டர் கிட்ட போவீங்களோ அது உங்களோட இஷ்டம் " என்றவள் சிட்டாக பறந்து எதிர் வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்.


அவளை பார்த்தவாறே நின்றவன் சிரிப்புடன் தன் தமையனை காண உள்ளே சென்றான்.


" டேய் அண்ணா எங்க டா இருக்க ' என்றபடியே அவனது அறைக்குள் நுழைய அது இருட்டாக இருந்தது. லைட்டை ஆன் செய்து பார்த்தவன் அங்கே ஜன்னலை வெறித்த படி நின்றிருந்த விஷ்வாவை கண்டவன் ,


" டேய் அண்ணா எதுக்கு டா இப்போ இந்த மாதிரி லைட் கூட போடாம நிக்கிற " என்றபடி சக்தி விஷ்வாவை தன் புறம் திருப்பியன் அதிர்ந்து போனான்.


" டேய் அண்ணா.!! இப்போ எதுக்கு டா அழுகுற " என்று பதறிப்போய் தன் அண்ணனின் கண்ணீரை துடைத்தவாறே கேட்க


" சக்தி " என்றவன் அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் விடுத்தான்.


" விஷ்வா இப்போ எதுக்கு இப்படி குழந்தை மாதிரி அழுகுற என்ன பிரச்சினை உனக்கு, என்கிட்ட சொன்னா தான எனக்கு என்ன பிரச்சனைன்னு தெரியும் அப்போ தான அதுக்கான சொல்யூஸன் கண்டு பிடிக்க முடியும் சொல்லு " என்று அவனை ஆறுதல் படுத்தியவாறே சக்தி கேட்டான்.


தன்னை நிலைப்படுத்திய விஷ்வா " எனக்கு பயமா இருக்கு டா எங்க என்னோட மொழி என்ன விட்டுட்டு பொயிருவாளோன்னு .அவளோட நடவடிக்கை எல்லாம் எனக்கு சரியாவே படல டா. அவ வாழ்க்கையில ஏதோ ஒரு பெரிய இன்சிடன்ட் நடந்துருக்கு அது அவள என்கிட்ட வர விடாம பண்ணுது டா .இன்னைக்கு அவ வீட்ல அவளோட கல்யாணத்த பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க .எனக்கு மனசே சரியில்ல டா சக்தி " என்று மீண்டும் அழுதவனை கண்டு சமாதான படுத்தி உறங்க வைத்தான் சக்தி. அன்று இரவு அவன் கூடவே மற்றொரு அறையில் தங்கிக் கொண்டான் சக்தி.


அடுத்தநாள் காலை அதன் விடியலை கதிரவன் தொடுக்க மெதுவாக இமை திறந்தான் விஷ்வா...


நேற்று இருந்த பயமின்றி தெள்ள தெளிவாக இருந்தான். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்திருந்தான்.


சக்தி பக்கத்து அறையில் உறங்கி கொண்டிருப்பதை அறிந்து மெதுவாக சமையலறை சென்று காலை டிஃபன் செய்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.


கல்லூரிக்கு கிளம்பி தயாராக வந்து சக்தியை எழுப்ப கண்ணை கசக்கி கொண்டே எழுந்தவன் விஷ்வா கிளம்பி நிற்பதை கவனித்து " மணி என்னடா " என்று தூக்க கலக்கத்தில் கேட்க


" எட்டு தான் ஆகுது டா " என்றான் விஷ்வா.


" என்னது மணி எட்டா " என்று வாயை பிளந்த சக்தி வேகமாக பெட்டை விட்டு எந்திரித்து குளியலறைக்குள் புகுந்தான்.


குளித்து முடித்து வந்தவன் தன் தமையனை திட்டிய படியே ஆஃபிஸ்க்கு கிளம்பினான்.


" பாய் டா அண்ணா எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன் இன்னைக்கு இண்டர்வ்யூ இருக்கு டா நான் லேட்டா போனா நம்ம ரெண்டு பேரும் மாட்டிக்குவோம் " என்றவன் சிட்டாக பறந்து விட்டான்...


இசையினி பயத்தினிலே ஆஃபிஸ் ரிசப்பஷனில் அமர்ந்திருந்தாள்.


அவளது பெயரை அழைத்து வரச் சொல்லவும் எழுந்து உள்ளே சென்றவள் அதிர்ச்சியுற்றாள்.


_தொடரும்....

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN