நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...15

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காற்றுக்கென்ன வேலி...15

இரவு எட்டு மணிக்கு கல்லூரியிலிருந்து கிளம்புவதாக இருந்தது. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் அன்று விடுமுறை அளித்திருந்தது.


காலையில் இசை கைகளை முறுக்கிய படி எழுந்து அமர பக்கத்தில் இல்லாத நிலாவை தேட ஈரம் ஈரம் சொட்ட சொட்ட தலை குளித்து ஈர முடியுடன் புடவை அணிந்து கொண்டு வந்தாள். மஞ்சள் கலந்த ஊதா நிறத்திலான வண்ணம் பதிந்த புடவையை அணிந்திருந்தாள். அந்த புடவை அவள் உடலிற்கு பாந்தமாக அமைந்திருந்தது. அவளை கண்ட இசைக்கே பச்சையாக சைட் தோன்றியது..


" நிலா அக்கா நீ இன்னைக்கு என்ன ரொம்ப அழகா இருக்க பாக்குற எனக்கே கண்ணு உன்ன விட்டு நகர மாட்டேங்கிது " என்று அவளை சைட் அடித்த படியே கேட்டாள்.


" அடியே வாய் முடிக்கிட்டு இருக்கியா இன்னைக்கு தான உனக்கு வேலைக்கு ஃப்ரஸ்ட் டே கிளம்பாமா என்ன பண்ணுற " என்று கேட்ட நிலாவை பார்த்து புண் முறுவலித்தவள் " நான் ஒருவாரம் கழிச்சு தான் ஆஃபிஸ்ல ஜாயின் பண்ண போறேன் " என்றாள்.


" என்னடி சொல்ற ஒருவாரம் வீட்ல இருந்து என்ன செய்ய போற " என்று கேள்வி கேட்டு அவளை பார்க்க


"அது நான் டூர் போக போறேன் " என்றாள் சர்வசாதாரணமாக


" ங்ய " என்று முழித்து பார்த்த நிலாவை கண்டு இசை சிரித்த படியே குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.


அதன் பின் நிலா கிளம்பி கல்லூரிக்கு சென்றாள். அங்கே அவள் கேள்வி பட்டது எல்லாம் ஒன்றே ஒன்று தான் அதிரூபன் வேலையை விட்டு நின்றுவிட்டான் என்று..


ஆனால் அவளுள் ஒரு கேள்வி எழுந்தது " வேலையை விட்டு சென்றானா..?? இல்லை வேலையை விடும் படி செய்தார்களா..??" என்ற குழப்பம் அவளுள் எழுந்தது. ஆனாலும் நிலா அதை பெரிது படுத்த வில்லை சனியன் எப்படி ஒழிந்தால் என்ன என்று விட்டு விட்டாள்.


ஆனால் விஷ்வா அவளை காணும் நேரம் எல்லாம் காதலோடு பார்க்கும் அந்த பார்வை இப்போது கோபமாக பார்த்தது. அன்று வீட்டில் நடந்ததற்காக தான் இருக்கும் என்று அவளே எண்ணி மனதை கல்லாக்கி கொண்டாள்.


இரவு கிளம்ப வேண்டும் என்பதற்காக சீக்கிரமே ஆசிரியர்களும் வீட்டிற்கு சென்று கிளம்ப தொடங்கினர்.


நிலாவோ போகவே கூடாது என்ற வைராக்கியத்தில் வீட்டிற்குள் நுழைய ஆனால் அங்கே அவளுக்கு முன்னாடி அவள் துணிகள் எல்லாம் பேக் செய்து ஹாலில் இருந்தது. அதனை கண்டவள் அதிர்ச்சியுற்று உள்ளே வர அவளை இன்முகத்துடன் வரவேற்றது வேறுயாரும் இல்லை சாட்ஷாத் கற்பகமே தான்...


கற்பகத்தின் புன்னகையே தெரிந்தது இது இவர்களது வேலை தான் என்று. ஆனால் எதற்காக செய்ய வேண்டும் ஏன் செய்தார்கள் அடுத்த கேள்விகள் அவள் மூலையை போட்டு குழப்பியது...


" சீக்கிரமா போய் கிளம்பு டி " என்று அவளை அதிகாரத்துடன் விரட்ட


" பெரியம்மா " என்று பம்மிய குரலில் நிலா அழைத்ததும் , " என்ன வேணும் உனக்கு இப்போ " என்று விரைப்பாகவே கேட்டார்.


" எதுக்காக இதெல்லாம் பேக் பண்ணி வச்சிருக்கீங்க " என்று தயக்கத்துடனே திக்கி திணறி கேட்க


" எதுக்கு இதெல்லாம் பேக் பண்ணுவாங்க ஏதோ டூர் போறியாமே அதுக்காக தான் உன்கூட என்னோட பொண்ணும் வரா " என்றார் கேட்ட கேள்வியுடன் கேட்காத கேள்விக்கும் பதிலை அளித்தார்.


" ஆனா நான் தான் போகலையே " என்று சொல்லிய அடுத்த நொடியே அடிக்க கை ஓங்கினார் கற்பகம்.


அதனை கண்டு இமையை இறுக மூடியவள் தனக்கு இன்னும் அடி விலுகவில்லை என்று தெரிந்து இமைகளை மெதுவாக திறந்து பார்க்க அங்கே அவளுக்கு முன்பு ஆத்திரத்துடன் கற்பகம் நின்றிருந்தார்.


" உன்னால என் பொண்ணோட வாழ்க்கைக்கு எதாவது தடங்கள் வந்துச்சி இன்னைக்கு நீட்டுன கை அப்புறம் உன்ன‌ கொல்ல கூட தயங்காது பாத்துக்கோ " என்று எச்சரித்து விட்டு " போய் கிளம்புற வேலைய பாரு " என்று மிரட்டி விட்டு உள்ளே சென்றார்.


" நான் எப்படி அவளோட வாழ்க்கைக்கு தடங்களா இருப்பேன் இந்த பெரியம்மா என்ன சொல்லிட்டு போறாங்க " என்று மனதில் நினைத்தாலும் ஊருக்கு கிளம்பச் சென்றாள்.


இருவரும் கிளம்பி விட இசை மகிழ்ச்சியாக இருந்தால் ஆனால் நிலாவோ அவளுக்கு நேர்மாறாக காணப்பட்டாள்.


" சரிங்க பெரியம்மா நாங்க கிளம்புறோம் " என்று சொல்ல அதற்குள் விஷ்வா உள்ளே வந்தான் .


" ஆண்டி ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்கன்னா நானே கூட்டிட்டு பொயிட்றேன் " என்றான்.


" சரிங்க தம்பி " என்றார் கற்பகம்.


அப்போது சரியாக ராஜேஸ்வரி பாட்டி வர " என்ன பா கிளம்பிட்டியா " என்று பாசத்துடன் கேட்டார்.


" ஆமா பாட்டி கிளம்பிட்டேன் .அதான் இவுங்களயும் கூட்டிட்டு போலாம்னு இருக்கேன் " என்றபடி விஷ்வா சொல்ல


" சரிப்பா பாத்து போங்க என்னோட பேத்திங்க இரண்டு பேரும் உன்னோட பொருப்பு சரியா நல்லா பாத்துக்கோ " என்றார்.


" கண்டிப்பா பாட்டி என்ன தவிர வேற யாராலயும் நல்லா பாத்துக்க முடியாது " என்றான் விஷ்வா நிலாவை பார்த்து ..


கற்பகம் அவன் பார்வை செல்லும் இடத்தை பார்க்க அவருக்கு நிலாவிற்கு பின்னாடி இருந்த இசை தெரியவும் எதையோ நினைத்து புன்னகைத்தார்.


பின் மூவரும் கிளம்பி கல்லூரிக்கு வந்தனர்.


நிலா அமைதியாக வந்தாள். ஆனால் இசை ஏதோ சந்தோஷத்துடனும் துள்ளலுடனே வலம் வந்தாள்.


கல்லூரிக்கு வந்தவர்கள் அமைதியாக வேலைகள் செய்ய தொடங்கினர். மாணவர்கள் எல்லாம் வருகை தர மணிமேகலை ஒவ்வொருவரின் வருகையையும் குறித்து கொண்டிருந்தாள்.


சிறிது நேரத்தில் மணி விஷ்வாவிடம் வந்து " எல்லா ஸ்டுடென்ஸூம் வந்துட்டாங்க சார் நாம இப்போ கிளம்புன்னா சரியா இருக்கும் " என்று சொல்ல


" இரு மணி இன்னும் சக்தி வரல அவன் வந்ததும் போலாம் " என்று சொல்ல அவனுக்காக அனைவரும் காத்திருக்க தொடங்கினர்.


இசையின் மனதில் " யாரு டா அது பெரிய விஐபிக்கு காத்திருக்கிற மாதிரி காத்துக்கிட்டு இருக்கோம் " என்று சளித்துக் கொண்டே ஜனலோரத்தில் வேடிக்கை பார்த்த படி அமர்ந்திருந்தாள்.


"இதோ சக்தி வந்துட்டான் .அப்போ நாம கிளம்பலாம் "என்று மணி சொன்னதும் " யாரு டா அந்த அப்பாட்கர் "என்று பார்வையை ஜன்னலுக்கு வலப்புறத்தில் திருப்ப அங்கே சக்திதரன் ஆண்மை கம்பிரத்துடன் வேகமாக வந்துக் கொண்டிருந்தான்.


அவனை கண்டதும் " இவனா " என்று வாயை பிளந்தாள். எதர்ச்சிசையாக பார்வையை ஜன்னல் புறம் திருப்ப அங்கே இசை வாயை பிளந்தபடி அமர்ந்திருந்தாள். அவளை பார்த்து கண்ணடிக்கவும் அவனை முறைத்து பார்வையை திருப்பிக் கொண்டாள் இசையினி.


" சாரி சாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சி வாங்க கிளம்பலாம் " என்று சொல்லி பஸ்ஸில் ஏறி இசை பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.


மணியும் நிலாவும் ஒரு சீட்டில் அமர்ந்திருக்க விஷ்வா அமைதியாக இன்னொரு சீட்டில் அமர்ந்தான்.


வண்டி நேராக மைசூர் நோக்கி செல்லத் தொடங்கியது...


இசையின் பக்கத்தில் அமர்ந்திருந்த சக்தி " இது தான் நீங்க ஊருக்கு பொயிட்டு ட்ரெஸ் அப்புறம் ஹாஸ்டல் பாக்குற லச்சனமா " என்று அவளை பார்த்து கேட்க


" ஆமா " என்று பதில் வந்தது அடுத்த நொடியே..


" என்னடி உடனே ஆமான்னு சொல்ற நீ என்கிட்ட என்ன ரீசன் சொல்லி லீவ் கேட்கன்னு கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாரு " என்று சக்தி சொல்ல


" சரி " என்று ரீவைண்ட் பண்ண தொடங்கினாள்.


தன் அன்னை நாளை நீ அவர்களுடன் ஊருக்கு செல்ல வேண்டும் என்று சொல்லிய அடுத்த நொடியே அவளுக்குள் ஏனோ இனம் புரியாத உணர்வு.


" எப்படி சார் கிட்ட சொல்லி லீவ் கேக்குறது " என்று யோசித்த படியே நடை பயிற்சி பயலத் தொடங்கினாள்.


அவள் மூலைக்குள் ஒரு ஐடியா தோன்ற உடனே சக்திக்கு அழைப்பு விடுத்தாள்.


" ஹலோ " என்று சொல்ல வரதுக்குள் " ஹலோ மிஸஸ் இசையினி சக்திரன் " என்று புன்னகையுடன் சொல்ல


" சார் நான் இசையினி கண்ணதாசன் தான் " என்றாள் அழுத்தம் திருத்தமாக..


" சரிங்க மேடம் சொல்லுங்க இப்போ எதுக்கு இந்த அய்தான்க்கு போன் பண்ணி இருக்கீங்க " என்று கேட்க


" அது அதுவந்து " என்று திணற


" ஹோ என்னோட இனிக்கு திக்க கூட தெரியுமா " என்று கிண்டலடிக்க


" சார் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா " என்று காட்டமாக சொன்னவள் " நான் ஒன் வீக் கழிச்சு ஆஃபிஸ்ல ஜாயின் பண்ணிக்கிறேன் சார் " என்றாள் .


" என்னது ஒன் வீக் கழிச்சா அது வரைக்கும் எப்படி உன்ன நான் பாக்காம இருக்கிறது " என்று அதிர்ச்சி கலந்த வருத்தத்துடன் சொல்ல


" சார் " என்றாள் கோபத்துடன்...


" சரி எதுக்கு ஒன் வீக் கழிச்சு ஜாயின் பண்ற எனி ரீசன் " என்று கேட்க


" ஆமா சார் அது வெறும் இண்டர்வ்யூ தானேன்னு ஊருல இருந்து ட்ரெஸ் எடுத்துட்டு வரல அப்புறம் இங்க ஸ்டே பண்றதுக்கு நான் ஹாஸ்டல் தேடணும் சார் .அதுக்கு ஒரு ஒருவாரம் தேவ படுது " என்றாள்.


" எதுக்கு இனி இதுக்கு போய் கஷ்ட படணும் எனக்கு மட்டும் ஓகே சொல்லு நாம உடனே மேரேஜ் பண்ணிக்கிட்டு உன்ன இங்க கூட்டிட்டு வந்தறேன் " என்றான் அவன் மனதில் தோன்றியதை..


" சார் தேவையில்லாம பேசிட்டு இருந்தீங்கன்னா அப்புறம் நான் போலிஸ கூப்பிட வேண்டியது வரும் பாத்துக்கோங்க " என்று மிரட்டல் விட அதற்கு பயந்தது போல் " சரி மா ஒருவாரம் கழிச்சே ஜாயின் பண்ணு " என்றான்.


" தேங்க் யூ சார் பாய் " என்று அழைப்பேசியை வைக்க போக


" லவ் யூ இனி " என்று மொபைலிலே அவளுக்கு முத்தத்தை வழங்கினான். இசை கோப பட்டு உடனே மொபைலை அணைத்து விட்டாள்.


" சார் நான் ரீவைண்ட் பண்ணி பாத்துட்டேன் சார் தப்பா எதுவும் சொல்லல . எனக்கு இப்போ தூக்கம் வருது நான் தூங்க போறேன் " என்று விட்டு ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து கொண்டு இமை மூடினாள்.


மாணவர்களோ பாட்டுக்கு ஏற்ற மாதிரி நடனமாடி மகிழ்ச்சியாக இருந்தனர்.


இங்கு விஷ்வாவோ தூங்கும் நிலாவை கண்ட படியே இத்தனை வருடங்களாக நினைவு புத்தகங்களாக சேர்த்து வைத்திருந்த நினைவுகளை மண கணக்கில் சுழல விட்டிருந்தான்.


_தொடரும்...

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN