நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...16

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காற்றுக்கென்ன வேலி...16


கோவை மாநகரம் மக்களுக்கும் தொழில்நுட்பத்துக்கும் சென்னைக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் வளம் வந்து கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் அதிக இடம் பெற்றிருக்க சாலை எங்கும் வாகன நெரிசல் ஏதோ போட்டி போட்டுக் கொண்டு செல்வது பேருந்துகள் பறப்பது என
பரபரப்பாக இருக்கும் அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியே அன்னூர். திருப்பூர் மேட்டுப்பாளையம் போகும் வழியில் அந்த ஊர் அமைந்துள்ளது.


திருச்சியில் இருந்து புதிதாக வாழ்க்கையை தொடங்குவதற்காக வந்தனர் சண்முகம் ரஞ்சனி தம்பதியினர் தனது பத்து வயதே கொண்ட யாழ்மொழியுடன்..


வந்த புதிதில் சிறிது கஷ்ட பட்டனர். திருச்சியில் இருந்து கிளம்பி வர ஒரு வாரத்திற்கு முன்பே வீடு பார்த்துவிட்டனர் . அது மே மாதம் என்பதால் நிலாவையும் பள்ளி மாற்றுவதில் எந்த சிரமமும் இல்லாமல் போனது.


அவர்கள் குடி புகுந்த வீட்டிற்கு சிறிது தூரத்தில் இருந்த பள்ளியிலே சேர்த்து விட்டனர் சண்முகம் மற்றும் ரஞ்சனி.


புது வீட்டிற்கு குடி புகுந்து ஒரு வாரம் இருந்த நிலையில் யாழ்மொழி வீட்டிலே அமைதியாக இருந்தாள்.


அப்போது பஞ்சு மிட்டாய் சத்தம் வரவே வேகமாக எழுந்து வெளியே வந்தவள் எட்டி பார்க்க அங்கே பஞ்சு மிட்டாய்காரன் பஞ்சு மிட்டாய் விற்ற படி செல்வதை கண்ட நிலா " அம்மா பஞ்சு மிட்டாய் வாங்கி தாங்க " என்று வெளியே இருந்த படியே கத்த


" அங்க பர்ஸ்ல தான் காசு இருக்கு எடுத்துட்டு போய் வாங்கிக்கோ " என்று உள்ளே இருந்து பதில் வர வேகமாக உள்ளே ஓடியவள் பர்ஸிலிருந்து ஐம்பது ரூபாய் எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினாள்.


அதற்குள் விற்பணை செய்து வந்தவர் அந்த தெரு முற்றத்திற்கு சென்று விட நிலா பஞ்சு மிட்டாய் வேண்டுமென ஓட்டம் பிடித்தாள்.


அவள் பிடித்த ஓட்டத்திற்கு இரண்டு நிமிடத்துலே பஞ்சு மிட்டாய் காரரை பிடித்து விட ஒரு பாக்கெட் பத்து ரூபாய் என ஐந்து வாங்கி கொண்டு அந்த குட்டிகளில் அடக்க முடியாமல் அடக்கி கொண்டு வந்தவள் ஏதோ ஒரு சைக்கிள் மோதி கீழே விழுந்தாள் .


விழுந்தவள் தனக்கு ஏதும் நேர்ந்து விட்டதா என்று பார்க்காமல் பஞ்சு மிட்டாய்க்கு எதுவும் ஆகவில்லையா என்று நோட்டம் விட்டாள். ஐந்து பாக்கேட்டுக்கும் எதுவும் ஆகவில்லை என்று ஊர்ஜிதம் படுத்திய பின்பு முறைத்த படி தன் முன்னே இருப்பவரை திரும்பி பார்த்தாள்.


அவளுக்கு முன்பு அவளை கண்டு சிரித்த முகமாக சக்தி நின்றிருக்க ,அவன் சிரிப்பதை கண்டு மேலும் அவளது கண்ணங்கள் கோபத்தின் காரணமாக சிவப்பேற " என்டா‌ எதுக்கு இப்படி வந்து என்ன இடிச்ச " என்றாள் நிலா குட்டி..


" நான் எங்க வந்து இடிச்சேன் நீ தான் என் சைக்கிள வந்து விழுந்த " என்றான் .


" உன்ன சும்மா விட மாட்டேன் டா ஒழுங்கா என் கிட்ட சாரி கேளு " என்று வீராப்பாய் பஞ்சு மிட்டாய்யை பத்திர படுத்தியவாறே சொன்னாள்.


அதற்குள் இன்னொரு சைக்கிள் அவர்களுக்கு பக்கத்தில் வந்து நிற்க " இங்க என்னடா பண்ணுற யாரு டா இது "என்று கேட்ட படி பதிமூன்று வயதுடைய விஷ்வேந்தர் சைக்கிள் பெடலில் ஒரு காலை வைத்திருந்தவாறே கேட்டான்.


" என் சைக்கிள் முன்னாடி வந்து விழுந்துட்டா அண்ணா " என்றான் சக்தி.


" ம்ம்ம் ஒரு சாரி சொல்லிட்டு வா டா " என்றவனின் பார்வை ஒருமுறையேனும் நிலாவை தீண்டி விட்டு மீண்டது.


" ஒகே சாரி " என்று சொல்லிவிட்டு வேகமாக சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றான். அவன் பின்னாடியே விஷ்வேந்தரும் சென்றுவிட்டான்.


அதன் பின் வந்த நாட்களில் சகஜமாக சக்தியும் நிலாவும் சந்தித்துக் கொள்ள இருவருக்குள்ளும் ஒரு நட்பு மலர்ந்தது. இதை அனைத்தையும் விஷ்வா வேடிக்கை பார்த்தான்.


மே மாத லீவ் முடிந்து விட நிலா அவளது முதல் நாள் பள்ளிக்கு அன்னையுடனும் தந்தையுடனும் சென்றாள்.


திருச்சியில் அவள் படித்தது தமிழ் என்றாலூம் அவள் சொந்த ஊரிலே இருந்த பள்ளியில் படித்ததால் அவளுக்கு அங்கே எந்த விதமான வித்தியாசங்களும் தெரியவில்லை.


ஆனால் இப்போது புதிய ஊர் புதிய இடம் புதிய பள்ளி அதிலும் இங்கிலீஷ் மீடியம் புதிய மாணவர்கள் என அனைத்தும் அவளுக்கு புதியதாக இருக்கவே பயத்துடனே பள்ளி வாசலில் காலடி எடுத்து வைத்தாள்.


சண்முகம் அவளது வகுப்பு எது என்று தெரிந்துக் கொண்டு அவளை ஐந்தாம் வகுப்புக்குள் விட்டு விட்டு வந்தார்.


பயத்துடனே வகுப்பறையில் படுத்திருந்தவள் தீடிரென யாரோ சுரண்டுவது அறிந்து எழுந்து பார்க்க சிரித்த முகத்துடன் மணிமேலை நின்றிருந்தாள்.


" என்ன வேணும் உனக்கு " என்று சலிப்பாகவும் அதே நேரத்தில் பயத்துடனும் நிலா கேட்டிட


" இல்ல கொஞ்சம் தள்ளி உக்காருறீயா நானும் இங்க உட்காந்துக்கிறேன் " என்று சிரித்த முகமாக கூறியவளை கண்டு நிலாவுக்கு பிடித்து போக அவளுக்கு அங்கே அமர இடம் தந்தாள்.


" என்னோட நேம் யாழ்மொழி நீ நிலான்னு கூப்பிடு " என்று கை நீட்ட அவள் கைக்குள் தன் கையை சேர்த்தவள் " என்னோட நேம் மணிமேகலை " என்று இருவரும் நட்பு கரம் கோர்த்துக் கொள்ள அதே நேரம் அவர்கள் கைக்குள் ஒரு கை நுழைய அதனை கண்டவாறு அந்த கைகளுக்கு உறியவரை பார்க்க அங்கே சக்தி தோளில் ஸ்கூல் பேக் மாட்டிக்கொண்டு கழுத்தில் வாட்டர் பாட்டில் மாட்டி இருந்தான்.


அவனை கண்டதும் " சக்தி " என்று புன்னகை முகமாக சொல்ல மணி அவனை கண்டு பேந்த பேந்த என முழித்தாள்.


" நீ இங்க என்ன பண்ணுற " என்று நிலா கேட்க


" அத நான் தான் மூன் உன்கிட்ட கேக்கணும் நீ என் க்ளாஸ்ல என்ன பண்ணுற " என்று திரும்பி அவளிடமே கேட்டான்.


" அது நான் இங்க புதுசா ஜாயின் பண்ணியிருக்கேன் " என்க


அவள் வலக்கரத்தை கிள்ளிய மணி " சேம் பிஞ்ச் நானும் புதுசா சேந்துருக்கேன் " என்றாள்.


" ஓஒஒஒஒ " என்று இருவரும் கோரசாக கூறிவிட்டு ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் படுத்தி கொண்டு அமைதியாக வகுப்பில் அமர்ந்துக் கொண்டனர்.


அன்றிலிருந்து அவர்களது நட்பு கரம் தொடங்கியது.


நிலாவிற்கு ஆங்கிலம் வராமல் போக மணி அவளுக்கு சொல்லி கொடுத்தாள். அவர்களுடன் சக்தியும் இருந்து கொள்வான்.


இவர்களது நட்பு வளரத் தொடங்க அதே போல் இவர்களது சேட்டையும் வளரத் தொடங்கியது. ஆம் இம்மூவரும் ஐந்து ஆறு என கடந்து இப்போது ஏழாம் வகுப்பில் நின்றனர்.


சக்தியும் நிலாவும் சேர்ந்து எதாவது ஒரு கலட்டா பண்ணிய பின்பே அவர்களுக்கு நிம்மதி அளிக்கும். அதன்பின் எதுவுமே தெரியாத மணியும் சேர்ந்து இவர்களுடன் ஆசிரியரிடம் திட்டு வாங்குவாள்.


வகுப்பு மாணவர்களின் டிஃபன் பாக்ஸை எடுத்து சாப்பிடுவது அது தெரிந்த பின்பு அவர்கள் ஒருவருக்கொருவர் மாற்றி விட்டனர். உடனே அந்த குழந்தை அவளது அம்மாவிடம் புகார் வாசித்து விட அடுத்தநாளே அவளது அன்னை பிர்ன்ஸிப்பாளை காண வந்துவிட்டார். அதற்கடுத்தனாள் மூவரின் பெற்றோரும் வருகை தந்து திட்டு வாங்கி விட்டு சென்றனர்.


அதன்பின் வந்த நாட்களில் சக்தி அல்லது நிலா ஏதும் வீட்டு பாடம் முடிக்கவில்லை எனின் அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்கள் நோட்களிலும் கிறுக்கி வைத்தனர்.


இதனை அறிந்த மாணவர்கள் ஆசிரியரிடம் கூறி விட அவர்களை அழைத்து விசாரிக்க இருவரும் ஒரே போல் செய்ய வில்லை என்று சாதித்து விட்டனர். அதனாலே சக்தியின் அண்ணன் விஷ்வாவை அழைத்து அவர்கள் இருவரையும் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டு சென்றனர்.


அன்று சாய்ங்காலமே அவர்களை க்ருவூண்டுக்கு அழைத்து " ரெண்டு பேரும் இத பண்ணங்களா மணி " என்று கோபத்துடன் விஷ்வா கேட்க


" இல்லைன்னு சொல்லு " என்று சக்தி சைகை செய்தான்.


" இல்ல விச்சு சாச்சா அவுங்க செய்யல " என்று தலை கவிழ்ந்து சொல்ல


" உண்மைய தான் சொல்றீயா மணி " என்று கேட்க


மௌனமாக இருந்தவள் இறுதியில் ம்ம்ம் கொட்டினாள்.


" அப்போ நீங்க ரெண்டு பேரும் பண்ணல அப்படி தான " என்று இருவரையும் பார்த்து கேட்க ஆமாம் என்பது போல் ஒரே மாதிரி தலையாட்டினர்.


அதனை பார்த்து கோபம் கொண்ட விஷ்வா தலை முடியை தன்னை சமன்படுத்திக் கொண்டவன் நிலாவை அழைத்து , " நீங்க ரெண்டு பேரும் உண்மையாவுமே இத பண்ணலையா " என்று அவளின் கண்ணை பார்த்து கூர்ந்து கேட்க


" இல்லை " என்று சொல்ல வாய் வந்தாலும் ஏனோ வாரத்தை வெளி வரவில்லை மௌனமாகவே நின்றாள்.


" உன்னோட அமைதிய நான் என்னென்னு எடுத்துக்கிறது மேடம் " என்று கைகளை மடக்கியவாறு புருவங்களை உயர்த்திட அவ்வளவு தான் நிலாவுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் காணாமல் போக அழுகையுடனே " ஆமா நானும் பால் டப்பாவும் தான் இத பண்ணோம் நேத்து நான் ஹோம் ஒர்க் பண்ணல அதான் ப்லான் போட்டு எல்லாத்தோட நோட்லையும் கிறுக்கி வச்சிட்டோம் " என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு..


" ஆஹ மொத்தம் நீங்க ரெண்டு பேரும் தான் இத பண்ணி இருக்கீங்க உங்களுக்கு எதாவது பனிஷ்மெண்ட் கொடுக்கனுமே " என்று யோசித்தவன் ஒரு முடிவு எடுத்தவனாய் மூவரையும் அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.


ஆம் இந்த இரண்டு வருடங்களில் சக்தி மணி நிலா என மூவரின் குடும்பத்தாரும் ஓர் அளவிற்கு நன்கு பழகி இருந்தனர்.


விஷ்வா மூவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தவன் அவன் படிக்கும் அறைக்கு அழைத்து சென்று இருவரையும் முட்டிகால் போட சொன்னான்.


இருவரும் பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள " இதுக்கு லாம் நான் அசர மாட்டேன் " என்று முகத்தை சீரியசாக வைத்துக் இருவரையும் நோக்கினான்.


" ஏன் டா உங்க அண்ணா இப்படி பண்றாங்க " என்று சக்தி காதினை கடிக்க


" எல்லாத்துக்கும் நீ தான் மூன் காரணம் அண்ணா கேக்கும் போது எதுக்கு உண்மைய சொன்னா " என்று அவளை முறைத்தான் சக்தி.


" டேய் " என்று அவள் வாயை பிதுக்க


" போ டி " என்று முகத்தை திருப்பிக் கொண்டான்.


நிலா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு தலை கவிழ்ந்து நின்றாள். அவளின் செய்கையை கண்டு விஷ்வாவிற்கு சிரிப்பு வந்தாலும் உள்ளேயே பெரும்பாடு பட்டு அடக்கியவன் " நீல்டௌன் பண்ணுங்க " என்று கராராக சொல்ல இருவரும் வேகமாக முட்டிக்கால் போட்டனர்.


மணியிடம் பார்வையை திருப்பியவன்" இப்போ மணி நீ என்ன பண்றன்னா இதுநாள் வரைக்கும் ஹோம் ஒர்க் குடுத்திருப்பாங்களா அதெல்லாம் பண்ண வைக்கனும் . ஆனா நீ அவுங்களுக்காக எந்த ஒரு ஹெல்பும் பண்ணவே கூடாது . நீ இத பண்ணுங்கன்னு மட்டும் சொன்னா போதும் அவுங்களே பண்ணுவாங்க " என்றான் பக்கத்தில் இருந்த சோஃபாவில் அமர்ந்த படி..


" டபுல் ஓகே சாச்சா " என்று தம்ஸ்ஸப் செய்தவள் அவர்களுக்கான ஓர்கை கொடுக்க தொடங்கினாள்.


இருவருக்கும் கொடுத்து முடிக்க , " நீ இங்க வந்து உட்கார்ந்து படி மணி " என்று அவளை தன் பக்கத்தில் அமர வைத்து படிக்க சொன்னான். மணியும் அதே போல் படிக்க தொடங்கினாள்.


முதல் கேள்விக்கே இருவருக்கும் பதில் தெரியாமல் முழிக்க இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இதில் கால் வேறு வழி எடுக்க தொடங்க கைகளை முட்டிக்கு கீழே வைத்த படி இருந்தால் நிலா.


அதற்குள் சாவித்திரி நால்வருக்கும் ஜுஸ் எடுத்துட்டு வர இருவரும் முட்டி போட்டு இருப்பதை கண்டு பதறியவர் " டேய் என்ன டா பண்ணி வச்சிருக்க என்னோட பசங்களா முதல எந்திரிங்க ரெண்டு பேரும் " என்று எழுப்ப முயல ,


" அம்மா நீ சும்மா இரு மா இதுங்க ரெண்டும் பண்ண வேலைக்கு இதுதான் சரியான பனிஷ்மெண்ட் " என்றான்.


" போடா அமைதியா எல்லாரும் உன்ன மாதிரி அமைதியாவே இருப்பாங்களா என்ன இந்த மாதிரி சேட்டைகள் செஞ்சா தான் டா வாழ்க்கை இன்ரெஸ்டிங்கா இருக்கும் . நீ போய் படிக்கிற வேலைய பாரு " என்று சொல்லி அவனை திட்டிவிட்டு இருவரையும் எழுப்பி விட்டு ஜுஸ் தந்தார் சாவித்திரி.


" நீங்க இருக்கிற வரைக்கும் இதுங்க திருந்தாதுங்க " என்று தலையில் அடித்துக் கொண்டான்.


" சரி போய் விளையாடுங்க " என்று சொல்லி மூவரையும் அனுப்பி வைத்தார் சாவித்திரி.


வெளியே செல்லும் போது நிலா அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு சென்றாள். அவன் அதனை கண்டு சிரித்து விட்டு படிக்க தொடங்கினான்.


திடிரென சாவித்திரிக்கு அழைப்பு வர அதனை ஏற்றவர் எதிர்புறத்தில் கூறிய செய்தியை கேட்டு அதிர்ந்து விட்டார்.

 
OP
Ashwathi

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

விஷ்வாவிடம் வந்த சாவித்திரி " விஷ்வா நம்ம நிலாவோட அப்பா ஏதோ ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாறாம் டா நான் நிலாவ கூட்டிட்டு போறேன் நீ மணிய அவுங்க வீட்ல விட்டுட்டு சக்திய பத்திரமா பாத்துக்கோ சரியா " என்று துக்கத்துடன் சொல்ல விஷ்வாவிற்கு நிலாவின் புன்னகை முகமே நினைவு வர " நானும் உங்க கூட வருவேன் மா " என்று அடம்பிடிக்க தொடங்கினான்.


" நீ வேணாம் டா நான் மட்டும் பொயிட்டு வந்தறேன் " என்று எடுத்துரைக்க விஷ்வாவோ மேலும் அடம் பிடிக்க தொடங்கினான்.


அவனின் அடம் சாவித்திரியை சம்மதிக்க வைக்க ஐவருமாய் நிலாவின் வீட்டிற்கு சென்றனர்.


நிலாவை சாவித்திரி கையை பிடித்தவாறு அழைத்து உள்ளே சென்றார். விஷ்வா இருவரையும் இருக்கைகளை பிடித்த படி அவர்களுக்கு பின்னே வந்தான்.


நிலாவை பார்த்த ரஞ்சினி கதறி அழுக தன் அன்னை அழுவதை கண்ட அந்த குட்டி சாவித்திரியிடமிருந்து பிரிந்து அன்னையிடம் வந்தவள் " அம்மா அம்மா அழாதமா நான் இனி எந்த தப்பும் பண்ண மாட்டேன் " என்று அவளே ஒரு காரணத்தை எண்ணி அழுகத் தொடங்கினாள்.


அவள் அழுகையை காணத் துடிக்காத ரஞ்சினி அவளை அணைத்து கொண்டு அழுக விஷ்வாவோ ஊமையாக அழுதான்.


சிறிது நேரத்திலே சண்முகத்தின் பாடி வீட்டிற்கு கொண்டு வர பட தன் தந்தையை தூக்கிக் கொண்டு வருவதை கண்ட நிலா " அப்பாவ ஏன் தூக்கிட்டு வரீங்க " என்று விவரம் அறியாமல் குட்டி நிலா கேட்க இதனை கேட்ட ரஞ்சினி மேலும் கண்ணீர் விட்டு கதற தொடங்கினாள்.


" அப்பா அப்பா எந்திரி பா அம்மா அழுகுறாங்க பா நீ சொல்லு அவுங்கள அழுக வேணாம்னு " என்று நிலா அழுத படியே தன் தந்தையிடம் கூறினாள்.


" மொழி " என்று விஷ்வா அவனையும் அறியாமல் அழைக்க அவன் அழைத்ததும் அவனிடம் ஓடிச் சென்று அணைத்தவள் " தரு தரு அப்பாவ எந்திரிக்க சொல்லு தரு நான் இனி எந்த தப்பும் பண்ண மாட்டேன் " என்று அழுகையுடன் குரல் வெளி வர தந்தை இறந்தது கூட தெரியாமல் அதுவும் புரியாத வயதில் என்ன சொல்வது .? எப்படி சமாளிப்பது.? என்று தெரியாமல் தவித்து போனான் விஷ்வா.


விஷ்வா அவளை விலக்கி அவள் உயரத்திற்கு குனிந்தவன் " அப்பா இனி எந்திரிக்க மாட்டாரு டா . இனி அப்பா எப்பவும் தூங்கிட்டு தான் இருப்பாரு . அவரால இனி நம்ம கூட இருக்க முடியாது . உன்னால மட்டும் தான் அப்பாவ பாக்க முடியாது ஆனா அப்பாவால உன்ன பாக்க முடியும் டா . அவரு எப்போதும் உன் கூடவும் அம்மா கூடவும் தான் இருப்பாரு சரியா " என்று அவளுக்கு புரியும் படி சொல்ல நினைக்க " அப்பா அப்பா " என்று அழுத படியே விஷ்வாவின் மடியிலே உறங்கி போனாள்.


சிறிது நேரத்திலே கண்ணதாசனின் குடும்பம் வந்துவிட ஆக்சிடன்ட் ஆன உடம்பு என்பதால் சீக்கிரமே எடுத்தனர். நிலாவே தன் தந்தைக்கு கொள்ளி வைத்து விட்டு வந்தாள்.


அதன் பின் வந்த நாட்களில் நிலா அமைதியாகிட ரஞ்சினி வேலைக்கு செல்ல தொடங்கினார். குழந்தையையும் ஸ்கூலுக்கு அனுப்பி வைத்தார்.


விஷ்வா நிலாவுடன் அதன் பிறகு பேச வில்லை என்றாலும் அவளை கவனிக்க தொடங்கியிருந்தான்.


மணியும் சக்தியும் அவளுடன் கூடவே பக்கபலமாக இருந்து வந்தவர். இதற்கிடையில் விஷ்வா பத்தாம் வகுப்பு என்பதால் இறுதி தேர்வு நெருங்கி விட படிப்பில் கவனத்தை செலுத்தினான்.


இறுதி தேர்வுகளும் முடிவடைய விஷ்வா அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க தொடங்கினான். இதற்கிடையில் நிலாவின் நிலையை மாற்றும் பொருட்டு ஒரு வாரம் வெளியூர் சென்று வந்தனர். நிலாவும் சிறிது சிறிதாக பழைய நிலைக்கு திரும்பி இருந்தாள்.


நிலா மணி சக்தி மூவரும் எட்டாம் வகுப்பிற்குள் அடி எடுத்து வைக்க , விஷ்வா அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்தான் கணிணி துறையை எடுத்து .


மணி படிப்பில் கொடி கட்டி பறக்க நிலாவும் சக்தியும் சேட்டையில் கொடி கட்டி பறந்து படிப்பில் பெரிய பெரிய பூஜ்ஜியம் எல்லாம் எடுத்தனர்.


ஒரு நாள் விஷ்வா அவனது நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருக்க , அப்போது அவன் பக்கத்தில் வந்த நிலா " தரு " என்று அழைத்து தயங்கி நிற்க அவளது குரல் சரியாக அவனது செவிக்குள் எட்ட உடனடியாக திரும்பி பார்த்தான்.


" சொல்லு மொழி எதுக்கு என்ன கூப்பிட்ட ' என்று கேட்டான் விஷ்வா.


" அது... அது வந்து " என்று தயங்கி நிற்க வெயிலின் தாக்கமோ என்னவோ நிலாவின் முகத்தில் வேர்வை துளிகள் வெளி வரத் தொடங்கியது.


" என்ன ஆச்சி மொழி " என்று எதோவது பிரச்சினையாக இருக்குமோ என்று பயந்தபடி கேட்க


" அது வந்து தரு நான் ரெஸ்ட் ரூம் போகும் போது பாத்தேன் என்னோட ட்ரெஸ் ஃபுல்லா ரெடா இருக்கு " என்று கழங்கியவாறே நிலா கூற அவளோட நிலையை ஒருநிமிடம் புரியாமல் விழித்தாலும் அடுத்த நொடியே புரிந்து விட அவளை தனியாக நிற்க வைத்தவன் ஸ்டாஃப் ரூம் சென்று ஆசிரியரை அழைத்து வந்தான் .


அவரும் வந்து என்னவென்று கேட்க விஷ்வாவிடம் கூறியதை அந்த பெண் ஆசிரியரிடமும் கூற உடனே அவளை அழைத்து கொண்டு சென்று விட்டார்.


ரஞ்சினிக்கு அழைத்து விஷயம் சொல்லி விட அவர் பார்வதியையும் சாவித்திரையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தார்.


சக்தியும் மணியும் பயந்த படி வெளியே இருந்து நிலாவை காண அவளோ அழுகையுடன் அன்னை பக்கத்தில் நின்றிருந்தாள்.


அப்போது அங்கே வந்த விஷ்வா " ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க " என்று கேட்க


" அது சாச்சா நிலா அங்க தனியா நின்னுட்டு அழுதுகிட்டு இருக்கா எங்கள உள்ள விட மாட்டேங்கிறாங்க " என்று நிலாவை பார்த்தவாறே மணிமேகலை கூற


" அவளுக்கு ஒன்னும் இல்ல நீங்க க்லாஸ்க்கு போங்க " என்று அனுப்பி வைத்தவன் நிலாவை ஒரு முறை பார்த்து விட்டு அவனது வகுப்பறைக்கு சென்றுவிட்டான்.


அதன் பின் எளிதாக அவளுக்கு சீர் செய்து அவளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.


அப்படியே நாட்கள் நகரத் தொடங்க நிலா ஒன்பதாம் வகுப்பில் காலெடுத்து வைத்தாள்.


விஷ்வா பண்ணி ரெண்டாம் வகுப்புகள் நுழைய படிப்பில் முழுவதுமாக கவனத்தை திருப்பினான்.


நாட்கள் நகர நகர மூவரின் நட்பும் கடலை போன்று ஆழமாக இருந்தது . விஷ்வா எவ்வளவு தான் படிப்பில் கவனத்தை செலுத்தி இருந்தாலும் நிலாவின் மீது ஒரு பார்வை பதித்தே இருந்தான்.


அவனுக்கு தெரியவில்லை அவன் கவனம் வைத்திருக்கேன் என்று நினைத்திருந்த விஷ்வாவினாலே தான் அவள் வாழ்க்கையில் பெரிய இடியே விழப்போகிறது என்று..


அதற்கான ஆரம்ப புள்ளியான அந்த நாலும் மென்மையாக அதன் உதயத்தை வழங்க தயாராகி இருந்தது...


_தொடரும்....

 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top