நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...17

Ashwathi

Active member
Staff member17. காற்றுக்கென்ன வேலி


காலை கதிரவன் அதன் விடியலை நோக்கி சூரியன் வருகை தர தன் மன்னனின் வருகை மதிக்கு நாணத்தை கொடுக்க அதை மறைக்கும் விதமாக மேக கூட்டங்களுக்கு நடுவே தன்னை மறைத்துக் கொண்டது..


சனி கிழமை என்பதால் மஞ்சரி தனது பொண்ணு நித்திலாவுடன் ராஜசேகர் வீட்டிற்கு வருகை தந்திருந்தார்.


சனி கிழமை பள்ளி விடுமுறை என்பதால் சக்தி மற்றும் விஷ்வா வீட்டிலே இருந்து வந்தனர்.


" அண்ணா எனக்கு போர் அடிக்கிது நான் போய் மூன்னையும் பெல்லையும் இங்க வர சொல்ல போறேன் "என்று படித்துக் கொண்டிருந்த விஷ்வாவிடம் கூறி விட்டு சென்றான்.


தலையில் அடித்து கொண்ட விஷ்வா அவனது படிப்பை தொடர்ந்தான். அவனுக்கு வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை அதற்காக தான் அவன் ட்ரை பண்ணிக் கொண்டு இருக்கிறான்.


விஷ்வாவிடம் கூறியது போலவே நிலாவையும் மணியையும் வீட்டிற்கு அழைத்து வந்தான்.


மூவரும் சேர்ந்து ஐஸ் பாய் விளையாட தொடங்க அப்போது அங்கே வந்த நித்தியை கண்ட நிலா " நீயும் வா நாம விளையாடலாம் "என்று கூப்பிட நித்திலாவும் " சரி " என்று கூறிவிட்டு அவர்களுடன் விளையாட தொடங்கினாள்.


ஷாத் பூத் த்ரீச் போட்டு நித்தியை ஔட் ஆகி விட அவள் கண்ணை மூடி ஐம்பது வரை எண்ணி விட்டு அவர்களை தேட தொடங்கினாள்.


மூவரையும் அந்த வீடு முழுவதும் தேடின நித்தி கிடைக்காமல் போக மொட்டை மாட்டிக்கு சென்று பார்க்க அங்கே மணி இருப்பதை அறிந்து one என்றாள்.


பின் நித்தியும் மணியும் சேர்ந்து சக்தி மற்றும் நிலாவை தேட அந்த நேரம் பார்த்து சாவித்திரி சமையலறைக்கு வந்து கேசரி செய்ய தொடங்கினார்.


இறுதியில் ப்ரிட்ஜை திறந்து நெய் மற்றும் முந்திரையை தேட அது இருக்க வேண்டிய இடம் அன்னிசையாக காலியாக இருந்தது.


அது காலியானதுமே சாவித்திரி " நிலா சக்தி ரெண்டு பேரும் இப்போ என் முன்னாடி வரீங்களா இல்லையா "என்று ஒரு அதட்டு அதட்ட ,


இருவரும் வெளியே வந்து ஒருவரை பார்த்து ஒருவர் முழித்துக் கொண்டு நிற்க " எங்க இங்க இருந்த நெய் டப்பாவும் முந்திரி பருப்பும் எங்க " என்று சாவித்திரி அவர்களை முறைத்த படி கேட்க


இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் முழிக்க , " இப்போ எதுக்கு ரெண்டு பேரும் இப்படி ஒருத்தர ஒருத்தர் பாத்து முழிச்சிக்கிட்டு இருக்கீங்க இது சரியில்லையே சொல்லுங்க யாரு இத எடுத்தீங்க " என்று கேட்ட படி நிற்க


இருவரும் அப்போதும் அமைதியாகவே இருக்க , " இப்போ இது யாரு சாப்டீங்கன்னு சொன்னா நான் உங்களுக்கு கேசரி தருவேன் இல்லன்னா நோ கேசரி " என்றே அவர்களை அறிந்து இதை சொன்ன அடுத்த நொடியே இருவரும் " இவன் தான்" " இவ தான் " என்று ஒருவரையொருவர் கை காட்டி கொண்டு நின்றனர்.


அவர்களை கண்டு வெற்றி புன்னகையை வீசி , " சரி இப்போ சொல்லுங்க யாரு எத சாப்பிட்டிங்க " என்று கேட்க


இருவரும் ஒருவரையொருவர் முறைத்த படி " முந்திரி பருப்பு சாப்பிட்டேன் " என்று நிலாவும் " நெய் சாப்பிட்டேன்" என்று சக்தியும் கூறி பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள


" சரி ரெண்டு பேரும் நெய்யையும் முந்திரியையும் காளி பண்ணிங்களா சோ உங்களுக்கு நோ கேசரி ஓடுங்க அந்த சைட் " என்று விட்டு புதிதாக வாங்கிய டப்பாவை எடுக்க சென்றுவிட்டார்.


அவர் சென்றதும் " எதுக்கு டா என்ன மாட்டி விட்ட " என்று விரைப்புடன் நிலா கேட்க


" நீயும் தான் என்ன மாட்டி விட்ட அதுனால தான் நான் உன்ன மாட்டி விட்டேன் " என்று இருவரும் சண்டை யிட்ட படியே வெளியே வர நித்தி இவர்களை கண்டு "2 3 " என்றாள்.


சக்தியும் நிலாவும் சண்டை போடுவதை நிறுத்தி விட்டு நித்தியை பார்க்க அப்போதே இருவருக்கும் விளையாடிக் கொண்டிருந்த ஐஸ் பாய் ஞாபகம் வந்து இருவரும் சிரித்தனர்.


இம்முறை மணி தோற்று போய் இருக்க அவளே கண்களை மூடி ஐம்பது வரை எண்ணி இவர்களை தேட தொடங்கினாள்.


சக்தி கார் செட் அருகில் போய் ஒளிந்து கொள்ள நிலாவும் நித்தியும் விஷ்வாவின் அறையில் ஒளிந்து கொண்டனர்.


மணி இவர்களை தேடி ஒவ்வொரு இடங்களாக வந்து தேட , அப்போது விஷ்வாவின் அறையிலும் தேட அங்கே அவர்கள் இல்லாமல் போகவே மணி வெளியே சென்று தேட தொடங்கி இருந்தாள்.


அதற்குள் நித்தி வெளியே சென்று விட அவள் பின்னே சென்றவளை அப்போது குளித்து விட்டு ஈர உடையுடன் தண்ணி சொட்ட சொட்ட வெளியே வந்த விஷ்வா நிலா செல்வதை கண்டு " நிலா இங்க என்ன பண்ற " என்று கேட்க


" அது வந்து தரு நாங்க எல்லாம் ஐஸ் பாய் விளையாடிட்டு இருக்கிறோம். அதான் நானும் நித்தியும் இங்க ஒழிஞ்சிருந்தோம் மணி இங்க வந்து தேடிட்டு போனத பாத்து நித்தி பயந்து ஓடிட்டா அதான் அவ பின்னாடியே போனேன் அதுக்குள்ள நீங்க கூப்பிட்டிங்க " என்று கண்களை அலைய்பாய விட்ட படியே சொன்னாள்.


அவளை கண்ட அவனுக்கு சிரிப்பு பீறிட்டது. ஆனாலும் அதை அவன் அடக்கிக் கொண்டு " சரி போ " என்று சொல்லி விட்டு கதவு வரை வந்து சாத்த போக அதற்குள் நிலா திரும்பவும் உள்ளே வர , நிலா விஷ்வாவின் மீதே மோதிட விஷ்வாவின் ஈரம் தரையில் பட்டு கால் நழுவிட இருவருமே சேர்ந்து கீழே விழுந்தனர். விஷ்வாவின் மீது நிலா படுத்திருக்க அவனின் ஈர உடலில் வெண்மை பரவும் விதமாக நிலா அவனை முழுவதுமாக ஆக்ரமித்து இருந்தாள். எழும் எண்ணம் நிலாவுக்கு சுத்தமாக தோணவும் இல்லை. எழுப்பும் விதமும் அவனுக்கு தென் பட வில்லை.


பதினேழு வயது ஆண் மகனாக இருக்க அவனின் ஆண்மையை தூண்டும் விதமாக பதினான்கு வயதே உடைய நிலா இருக்க அவள் எழும்ப முற்படும் நேரம் விஷ்வா அவளின் இடையை பிடித்து தன்னுடன் இறுக்கி அணைத்து உடலோடு உடல் ஒன்ற வைத்து அவள் கண்ணத்தோடு இவன் கண்ணம் பதித்து அதை ஆழ்ந்து இரசித்து கொண்டு இருக்க நிலாவோ இவனின் செய்கையை அறியாமல் திமிறினாள். அதனையும் பொருட்படுத்தாது நிலாவின் இதழை தன் சுயத்தை இழந்து சுவைக்க முற்படும் போது தீடிரென கண்ணாடி குவளை உடையும் சத்தம் கேட்டு விஷ்வா தன்னிலை பெற்றான்.


உடனே நிலாவை கீழே விட்டு வேகமாக எழுந்து சத்தம் வந்த திசையை காண அங்கே நித்திலா அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள். அவளை கண்டவன் செய்வதறியாது உள்ளே சென்று மறைந்து கொண்டான்.


அதற்குள் நித்திலாவுடன் ஒரு நபர் உள்ளே புகுந்து " என்ன நிலா இப்படி இருக்க ச்சீ அசிங்கமா இருக்கு உன்ன மாதிரியான பொண்ண போய் வீட்டுக்கு வர விட்டிருக்கோமே என்று. போயும் போயும் இதுக்கு ஆசப் பட்டு தான் நீ இங்க சுத்திட்டு இருக்கியா என்ன .இதுக்காக எவ்வளவு பசங்க இருக்கும் போது உனக்கு எங்க வீட்டு பசங்க மேல தான் கண்ணு பட்டுச்சா அசிங்கமா இல்ல உனக்கு . இப்படி உடம்புக்கு அலையிறியே இதுக்கு உங்க ஆத்தா அந்த பொழப்புக்கு அனுப்பியே சம்பாதிக்கலாம் இப்படி நடந்துக்கிறதுக்கு " என்று கேவலமாக திட்டு விட்டு அந்த நபர் நித்தியை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேற அதற்குள் உடை மாற்றி விட்டு வந்த விஷ்வா அவள் அழுத படி நிற்பதை கண்டு தன்னால் தானோ என்றே எண்ணி அவள் பக்கத்தில் வந்து " மொழி " என பரிதவிப்புடன் அழைக்க , அவன் அழைத்ததில் திடுக்கிட்டவள் அழுகையுடனே வேகமாக அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டாள்.


அவள் சென்ற திசையையே வெறித்தவனுக்கு அவள் பார்வை தன்னை எச்சமாக காட்டியதை எண்ணி தன்னையே வெறுத்தான்.


வீட்டிற்கு வந்த நிலா நேராக அவளது அறைக்கு சென்றவள் படுக்கையில் படுத்து அந்த நபர் கூறியதை யோசித்து பார்க்க , எப்படி யோசித்து பார்த்தாலும் அவர்கள் என்ன கூற வருகின்றனர் என மட்டும் நிலாவுக்கு புலப் பட வில்லை. ஆனாலும் கண்ணீர் கரை புரண்டு ஓடியது.


அதன் பின் வந்த நாட்களில் நிலா விஷ்வா வீட்டிற்கு செல்வதை முற்றிலும் தவிர்த்திருந்தாள். அவளுக்கு அவர் பேசியது சுத்தமாக புரியவில்லை என்றாலும் ஏதோ தன்னை பற்றி இழிவாக ஏதோ தான் பேசியுள்ளனர் என்று அறிந்த அந்த வெகுளி பேதை அவர்களை முற்றிலும் தவிர்க்க தொடங்கினாள். ஆரம்பத்தில் விஷ்வாவை பார்க்கும்போதெல்லாம் அழுகை பீறிட்டு வர அடுத்து வந்த நாட்களில் அவளின் பிஞ்சு மனம் பாரை போல் இறுகத் தொடங்கியது‌ . ஆனால் ஏனோ அவளால் அந்த வீட்டில் உள்ளவர்களை வெறுக்க முடிந்தாலும் விஷ்வாவையும் சக்தியையும் வெறுக்க முடியவில்லை. அதிலையும் விஷ்வாவின் மீது சுத்தமாக முடியவில்லை அவளால் . அதற்கு காரணமான அவளையே வெறுக்க தொடங்கி இருந்தால் என்றால் எதிலும் ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. அமைதியை அவள் சூத்திரமாக பயன படுத்தி கொண்டாள் அவர்களிடம் இருந்து தப்பிக்க..

மணியும் சக்தியும் அவளின் மாற்றத்தை அறிந்து என்னவென்று எத்தனை முறை கேட்டாலும் அவளின் பதில் வெறும் புன்னகையாக மட்டுமே இருந்தது. முதலில் இருந்த குறும்பு தனம் எல்லாம் மறைந்து தன்னையே ஒடுக்கி கொண்டாள்.


இதற்கெல்லாம் காரணம் தான் தான் என்று எண்ணி எண்ணியே நொந்து போனான் விஷ்வா. அவளின் இந்த நிலையை பார்க்கும் போது எல்லாம் செத்து விடலாமா என்பது போல் இருந்தது. அவளிடம் பேச அவன் முற்படவே இல்லை அன்று தான் அவன் இறுதியாக அவளை மொழி என்று அழைத்ததும் அவளுக்கும் அது தான் இறுதியாக இருந்தது தரு என்று அழைத்தது.


இருவருமே வெவ்வேறு பாதைகளில் பயணத்தை தொடங்கினர்.


விஷ்வா ஒரு முடிவை எடுத்தவன் அதுக்காக உழைக்க தொடங்கி இருந்தான்.


அவன் எடுத்த முடிவு என்னவென்றால் " இனி அவளை காணவே கூடாது என்றும் தன்னால் தான் அவளுக்கு இந்த நிலைமை எனினும் போது இனி நிலாவின் கண் முன்னே இருக்க கூடாது என்று முடிவெடுத்து ஃபாரின் போய் மேற் படிப்பை தொடரனும் என்று எண்ணி அவளின் நினைவுகளை சேகரிக்க தொடங்கினான் விஷ்வா அவள் கண்ணில் படாமலே.


அதேபோல் படிப்பிலும் கவனத்தை செலுத்திய விஷ்வா அந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் பள்ளி முதல் மாணவனாக வந்து அந்த பள்ளிக்கு பெருமை சேர்ந்திருந்தான் என்றால் நிலாவோ படிப்பில் மேலும் பல பூஜ்ஜியங்களை பெற தொடங்கி இருந்தாள். அவளை பொறுத்த வரை வாழ்வே பூஜ்ஜியமாக மாறிய பின்பு வகுப்பில் பூஜ்ஜியம் பெற்றது அவளை பொருத்த வரை அது பெரிதாக தெரியவில்லை.


அடுத்து வந்த ஒரு மாதத்தில் விஷ்வா படிப்பதற்காக ஜெர்மனி சென்றுவிட்டு கிட்டதட்ட ஒன்பது வருடங்கள் கழித்தே இந்தியாவிற்கு திரும்பினான். தன் பெயருக்கு பின் பல டிகிரியுடன்...


விஷ்வா ஜெர்மன் சென்று சில மாதங்களிலே மஞ்சரியின் கணவர் இறந்து விட்டார் என அவருக்கு துணையாக இருக்க வேண்டி ராஜசேகர் மஞ்சரியின் ஊருக்கு குடும்பத்தையே மாற்றிவிட்டார்.

 
OP
Ashwathi

Ashwathi

Active member
Staff member

அதன் பின் சக்தி நிலா மணி கூட்டனி முற்றிலும் உடைந்து போனது....


ஒன்பது வருடங்கள் கழித்து அவளை சந்தித்த பேருந்து நிலையம் ஞாபகத்திற்கு வரவே அவனது நினைவுகளிலே உறங்கிக் கொண்டிருந்த விஷ்வா புன்முறுவலிட அதனை சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் இசை மணி மற்றும் சக்தி. இதில் எதிலும் கலந்துக் கொள்ளாமல் அமைதியாக வெளியே நின்றிருந்தாள் நிலா.


மூவரும் சேர்ந்து ஒரே போல் " 1 2 3 start " என சொல்லி " ஆஆஆஆஆஆ " என அவன் காதில் கத்தினர். அதனை கண்டு மாணவ மாணவிகளும் ஊஊஊ என கத்த விஷ்வா திடுக்கிட்டு எழுந்து பார்க்க முவரின் முகமும் பக்கத்தில் தெரியவே பயந்து போன விஷ்வா ஆஆஆ என கத்திவிட்டு அவர்களை தள்ளி விட்டான்.


கீழே விழுந்த மூவரும் அவனை கண்டு முறைக்க அவன் பார்வையோ லேசாக சிரிப்பை வெளியிட்ட நிலாவின் மேல் இருந்தது.


கோபமாக எந்திரித்த சக்தி தன் தோழியையும் தன்னவளையும் தூக்கி விட்டவன் விஷ்வாவை பார்த்து " ஏன் டா அண்ணா இப்படி நாங்க விழுந்து கடக்கிறமே உனக்கு எங்கள தூக்கி விடனும்னு சுத்தமா தோணலையா " என்றே ஏகத்துக்கும் முறைக்க அதனை கண்டு கொள்ளாத விஷ்வா தன்னவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


அப்போது அங்கே வந்த சில மாணவர்கள் " கலக்குங்க சார் " என்று சொல்ல அசடு வழிந்த விஷ்வா சக்தியை மீண்டும் தள்ளிவிட்டு பஸ்ஸை விட்டு இறங்கி கொண்டான்.


சக்தியே கீழே விழாமல் பிடித்துக் கொண்டாள் இசை.


அவளை கண்டு சக்தி " இன்னைக்கு என்ன விழுகாம பிடிச்ச கை வாழ்க்கை முழுசும் நான் எப்ப விழ பாத்தாலும் தாங்கி பிடிப்பியா " என்று காதலுடன் அவள் கண்ணை பார்த்து பேச அவனை விட்ட இசை " இது தான் சந்துல சிந்து பாடுறதா சேர் " என்று விட்டு அவளும் நிலாவுடன் அயிக்கியமானாள்.


அவனை கண்டு சிரித்த மணி " உனக்கு இது தேவை தான் டா " என்று நக்கலடித்து விட்டு சென்றாள்.


சிறிது ஓய்விற்காக நின்ற பேருந்து நேராக த்ரி ஸ்டார் ஹோட்டல் முன்பு நின்றது.


மாணவ மாணவிகள் எல்லாரும் உற்சாகத்துடன் பேருந்திலிருந்து இறங்கி ஹோட்டல்க்குள் சென்றனர்.


நிலா மணியின் பொறுப்பில் மாணவிகள் இருக்க விஷ்வா மற்றும் இன்னொரு ஆசிரியரின் கீழ் மாணவர்கள் இருந்தனர்.


அவர்களை ஒருங்கே நிறுத்திய விஷ்வா " ஒன் ஹார் தான் உங்களுக்கு சீக்கிரமா கிளம்பி வாங்க இப்போ மணி நால்றை சரியா ஐந்தரைக்கு நாம கிளம்புனும் கெட் ரெடி ஃபாஸ்ட் கேர்ல்ஸ் அண்ட் பாயிஸ் " என்று விட்டு அவர்களை அனுப்பி வைத்தான்.


விஷ்வா கூறியது போலவே சரியாக ஒரு மணி நேரத்தில் அனைத்து மாணவ மாணவிகளும் கிளம்பி வந்து நிற்க விஷ்வாவின் தன்னவளை தேட அவனை காக்க விடாமல் அவளே அவனுக்காக தரிசனம் அளித்தாள்.


கிளி பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் இருந்த அந்த புடவை பாந்தமாக அவள் உடலில் பொருந்தி இருக்க அவள் அங்கங்களில் கச்சிதமாக பொருந்தி இருந்தது. கார்குழல் கூந்தலை காற்றில் அசைந்தாட விடாமல் ஒரு சின்ன க்ளிப்பால் அதனை அடக்கியிருந்தாள் . பாக்கவே விஷ்வாவிற்கு தேவலோக தேவதை போல் காட்சியளித்து கொண்டு இருந்தாள் அவளையே மெய்மறந்து பார்வையால் இரசித்து கொண்டு இருந்தான் விஷ்வா .


இங்கே சக்தியோ தன்னவளின் மஞ்சள் மற்றும் ரோஜா நிறத்தில் வேலைபாடுகள் கொண்ட அம்பெர்லா சுடிதாரை அணிந்திருந்தாள்‌ . அதற்கு தகுந்தாற் போல் காதனியில் ஆடும் அந்த பெரிய சில்வர் நிறத்தை கொண்ட தோடு அவளின் அசைவிற்கு ஏற்ற வகையில் கழுத்து மடலில் உரசிக் கொண்டிருக்க அதனையே ஏக்கமாக பார்வை பார்த்தான் சக்தி.


இசையும் நிலாவும் விஷ்வாவையும் சக்தியையும் கண்டு கொள்ளாது அவர்களை கடந்து சென்றனர் .மணி நமட்டு சரிப்புடனே கடந்து சென்றாள் ‌.


அதன்பின் அனைவரும் சேர்ந்து சாமுன்டேஷ்வரி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.


முன்னொரு காலத்தில் மைசூர் நகரமானது மகிஷாசூரன் என்ற அரக்க மன்னனால் ஆளப்பட்டது. இவனது பெயரிலுள்ள மகிஷா என்ற வார்த்தை காலப்போக்கில் மருவி மைசூர் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசுரனை வதம் செய்து அந்த ஊர் மக்களை அரக்கனிடம் இருந்து காப்பாற்றியதால், காவல் தெய்வமாக மைசூர் நகரத்திலேயே தங்கிவிட்டாள் என்கிறது வரலாறு.


ஆக்ரோஷத்துடன் மகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டீஸ்வரியை தேவர்கள் சாந்தப்படுத்தினார் சாமுண்டீஸ்வரியின் உருவத்தை மார்க்கண்டேய மகரிஷி எட்டு கரங்களுடன் வடிவமைத்து அன்னையின் திருவுருவத்தை மலைப்பகுதியில் அமைத்தார். இந்த கோலத்தில் தான் இன்றும்கூட சாமுண்டீஸ்வரி அனைவருக்கும் காட்சி தருகிறாள்.


கோவிலில் தரிசனம் முடித்து விட்டு வந்தவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர் மாணவ மாணவிகள்.


அதன்பின் அனைவரும் கிளம்பி சென்றது மைசூர் மிருகக்காட்சிசாலைக்கே .


அங்கிருந்த ஒவ்வொரு விலங்குளாக பார்வையிட்டே வந்தனர் நிலாவின் கூட்டாளிகள். அவர்களை இரிசித்த படியே வந்தனர் விஷ்வாவும் சக்தியும்..


திடிரென நிலாவிற்கு புடவை காலில் தடுக்கி விழ போக அதனை கண்ட விஷ்வா ஓடிச் சென்று அவளை கீழே விழாமல் தாங்கி பிடித்தான். அதனை சக்தி புகைப்படமாக எடுத்து கொள்ள விஷ்வா அந்த கேப்பில் ஆயிரம் கதைகள் சொன்னான் கண்களிலே. நிலா அதனை புரிந்தும் புரியாதது போலவே அவனிடம் சாயும் இதயத்திற்கு பலமான வேலியாக போட தொடங்கினாள்.


அதற்குள் மாணவர்கள் " செம்ம ரொமன்ஸ் சார் " என கத்த இருவருமே நினைவு வந்து ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து நின்றனர்.


" ப்பா என்ன ரொமன்ஸ் ரோமியோ ஜூலியட்ட பாக்குற மாதிரியே இருந்து சார் " என்று மாணவர்களுள் ஒருவன் சொல்ல நிலா மற்றும் விஷ்வாவிற்கு சன்கோஜமாக இருந்தது.


மணி தான் அவர்களை அடக்கி அவர்களை அனுப்பி வைத்தாள்.


மாலை வரை அங்கு இருந்து அனைத்து விலங்குகளையும் பார்வையிட்டு அடுத்ததாக மைசூர் பேலஸ்க்கு சென்றனர்.


நூறாண்டுகண்ட மைசூர் அரண்மனை 245 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் 150 அடி உயரத்தில் சாம்பல் நிற சலவைக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிட உள்பகுதி முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் காணப்படுகின்றன. அரண்மனையை ஒட்டி 44.2 மீட்டர் உயரத்துக்கு ஐந்து அடுக்குகளை கொன்ட தூண் கோபுரம் ஒன்றும் காணப்படுகிறது. இதன் மேற்பகுதியில் உள்ள அலங்கார கலசங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனையில் கோம்பே தொட்டி அல்லது பொம்மை விதானம் என்ற வாசல் வழியாக நுழையலாம்


அரண்மனையில் இரண்டாவது தளத்தில் மன்னர் குடும்பத்தினர் திருமணம் வைபபவம் நடக்கும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நாட்களில் மக்களின் குறை கேட்க தர்பார் மண்டபம் அமைக்கபட்டுள்ளது. இங்கிருந்து சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி தேவியை மன்னர் தரிசனம் செய்யும் வகையில் நேர்கோட்டில் தர்பார் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை வளாகத்தில் அமைத்துள்ள தூண்கள், கம்பங்கள் அனைத்தும் சிற்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் பலவிதமான படைப்புகள் கொண்டுள்ளது.


மாணவர்களுக்கு அதன் அம்சங்களை சொல்லியவாறே நிலா அவர்களை அழைத்து கொண்டு சென்றாள்.


விஷ்வாவிற்கு அதிசயமாக இருந்தது தான் காதலித்த பதிமூன்று வயதுடைய நிலாவிற்கும் இப்போது இருக்கும் நிலாவிற்கும் . அவளுக்குள் ஆயிரம் மாற்றங்கள் தென்பட்டன ஆனால் இதற்கான காரணம் தான் அவனுக்கு புலப்பட வில்லை...

ஐந்து மணி போல் வெளியே வந்த அனைவரும் சிறிது நேரம் அங்கேயே இருந்து அந்த அரண்மனையின் வெளிச்சத்தை கண்ட பின்பு இறுதியாக பிரிந்தாவன் பூங்காவிற்கு சென்றனர்.

மைசூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிருந்தாவன் கார்டன் என்ற பிரம்மாண்டமான பூங்கா தோட்டம் மைசூர் வருகை தரும் பயணிகள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய அற்புதமாகும்.

காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாகர் என்ற அணைக்கு கீழே இந்த பூங்கா தோட்டம் அமைக்கப் பட்டுள்ளது. மஹாராஜா நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் பெயரில் 1924 லிருந்து 1932க்குள் கட்டப்பட்டுள்ள இந்த அணை புகழ் பெற்ற பொறியியல் வல்லுநர் சர். எம். விஸ்வேஸ்வரய்யா’வால் வடிவமைக்கப்பட்டது என்பது ஒரு சிறப்பம்சம்.


காஷ்மீரில் உள்ள பிரசித்தி பெற்ற பூங்கா தோட்டமான ஷாலிமார் கார்டனை பின்பற்றி இந்த பிருந்தாவன் கார்டன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறுபது ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த பூங்காவில் அழகான மலர் படுக்கைகள், பசுமையான புல் வெளிகள், பலவகையான மரங்கள், பலவடிவங்களில் அமைக்கப்பட்ட நீர் தடாகங்கள், விதம் விதமான நீர் ஊற்றுகள் என்று பல்வேறு எழில் அம்சங்கள் நிறைந்து வழிகின்றன.


இந்த பூங்காவின் மையத்தின் அமைந்துள்ள சிறு குளத்தில் காவேரி தெய்வத்தின் சிலை அமைந்துள்ளது. இந்த குளத்தில் பயணிகள் படகு பயணம் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.


பூங்காவின் வடக்கு பகுதியில் இசை நீருற்று ஒன்றும் அமைக்கபட்டுள்ளது. இங்கு இசைக்கேற்ப நீரூற்று நடனமாடும் காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழலாம்.


இந்த தோட்ட்த்தில் விசேஷமான ஒளி விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருப்பதால் இரவில் இவை இந்த பூங்கா முழுவதையும் வண்ண மயமாக மாற்றுகின்றன.


இவை அனைத்தையும் கண்ட மாணவ மாணவிகள் பிரமித்து போய் இருந்தனர். விதவிதமான போட்டோஸ்கள் எடுத்து தள்ளினர்.


இறுதியாக நினைவுகளை பறைசாற்றும் விதமாக அனைவரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்க நிலா பக்கத்தில் விஷ்வாவும் இசை பக்கத்தில் சக்தியும் நின்றுக் கொண்டனர்.


விஷ்வாவுடன் இருந்த ஆசிரியர் ஒருவர் கல்லூரிக்கான ஓப்பன் செய்த பேஜ்ஜில் இந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்தார்.


அதன் பின் அனைவரும் ஹோட்டல் சென்று குளிருக்கு இதமாக நடு கூடத்தில் நெருப்பை பற்ற வைத்து பாட்டு போட்டு ஆடினர் மாணவ மாணவிகள் . சிறிது நேரத்தில் இரவு உணவு தரப்பட அனைவரும் சாப்பிட்டு விட்டு உறங்க சென்றனர்...


இருட்டு அறையில் கட்டிலில் அமர்ந்திருந்த அதிரூபன் காலேஜ் வெப் சைட்டில் அந்த கல்லூரியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த போது நோட்டிஃபிகேஷன் வர அதனை திறந்து பார்த்தவன் அவர்களின் சந்தோஷத்தை கண்டு ஆத்திரம் அடைந்தவன் அடுத்த நொடியே அந்த அறையே இடிந்து விழும் அளவிற்கு சிரித்தவன் அந்த புகைப்படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவனது மொபைலுக்கு மாற்றம் செய்தவன் நித்திலா என்றிருந்த எண்ணிற்கு அனுப்பி வைத்தான்.


" நான் சொன்ன போது நீ நம்பலல இப்ப எனக்கு கண்டிப்பா கால் பண்ணுவல .இனி இருக்கு அந்த விஷ்வாக்கு கண்டிப்பா நிலாவ உன்னோட வாழ்க்கையில வர விட மாட்டேன் டா " என்று வெறி பிடித்தவன் போல் அந்த புகைப்படத்தில் இருந்த விஷ்வாவை பார்த்து குரோரமாக சொன்னவன் மொபைலை பார்க்க ,, அவனின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல் நித்திலா காலிங் என்று ஒழித்த மொபைலை பார்த்திருந்தான்.....


_தொடரும்...

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN