நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 2

kaviramesh

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கேசவனின் குடும்பம் ஏர்ப்போர்ட் சென்று இறங்கியது தான். தன் மனைவியின் முகத்தில் தான் ஏற்படுத்திய விரல் தடத்தை பார்த்தவன். வருத்தத்தோடு அதை தன் விரல்களால் வருடவும், பிரபா வலியால் தன் முகத்தை சுழிப்பதை பார்த்தவன். அவளின் கைவிரல்களை பிடித்து "ஸாரிமா" அவசரமும், பதட்டத்துலையும் என்ன செய்யிறேன் யோசிக்காம இப்படி நடந்துக்கிட்டேன். "ஸாரி" என்று கெஞ்சலுடன் கேட்டார்.

காரின் முன்சீட்டில் டிரைவர் இருக்கையைப் பார்த்தவள். அங்கு யாருமில்லாததால் கணவனின் முகத்தை கேள்வியோடு பார்த்தவளின் பார்வையின் அர்த்தம் புரிந்து டிரைவர்.., ஏதோ வண்டிக்கு பாஸ் வாங்க போயிருக்கார். உனக்கு என்ன வேனும் என்று கேட்டு, சத்யனை தூக்கவும், அதை தடுத்து, சத்யனை தன் மடியிலிருந்து சிறிது நகர்த்தி வைத்தவள். கேசவனின் கையை எடுத்து தன்னுடைய வயிற்றில் வைத்து, அவனின் முகத்தை மட்டுமே பார்த்தாள். அவள் செய்யும் செயலை யோசிக்கும் மனநிலையில் இல்லாத கேசவன். "என்னம்மா பசிக்கிறதா என்று அக்கறையோடு கேட்டான்.

பிரபா தன் கணவனின் தற்போது அறியாமையை எண்ணி தன் தலையிலே அடித்துக் கொண்டவள். நீங்க ரொம்ப மாறிட்டீங்க, இப்ப இருக்கிற சூழ்நிலையில் வயிறு பசிதான் ரொம்ப முக்கியமா. அப்புறம் என்னதான்மா உன் பிரச்சனை.., இன்னையோட இந்த குழந்தையின் வளர்ச்சி ஐம்பது நாளாாகி விட்டது என்றவள், அவரின் கையையும் விடவில்லை. அதன் பிறகு தான் கேசவனுக்கு மண்டையில் பல்பு எரிந்தது.

பிரபா.., "என்ன சொல்லுற", இதை என்னால நம்பவே முடியலையே, "ரொம்ப சந்தோஷமா இருக்கு டா" ஆனாலும் நாம இப்ப இருக்கிற சூழல்நிலையில், உன்னால இந்த குழந்தை என்றவனின் உதட்டில் விரல் வைத்து தடுத்தவள். எனக்கு கூட சாப்பாடு வேண்டாம். என் பிள்ளைங்களுக்கு மட்டும் சிறிது கொடுத்தாலும் போதும். இந்த குழந்தை மட்டும் வேண்டாம் சொல்லாதீங்க, இது நம்ம நீண்ட நாள் ஆசை என்றவளின் பேச்சுக்கு, கேசவனும் மறுப்பேச்சு பேசாமல் எல்லாம் கடவுள் விட்ட வழி என்றார்.

டிரைவர்..., பாஸ் வாங்கிட்டு வந்தவர், "ஸார் லக்கேஜை உள்ளே எடுத்துட்டு போறதுக்கு முன்னாடி இங்க இருக்கிற ஹோட்டல் சாப்பிட்டுக்கோங்க" ஏர்போர்ட் உள்ள எல்லாமே ரொம்ப காஸ்ட்லியா இருக்கும், அதனால வெளிய சாப்பிட சொன்னவர். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த ஹோட்டலை அடையாளம் காட்டினார். நீங்க சாப்பிட்டு வரவரைக்கும் நான் இங்கயே வெயிட் பண்ணுறேன் என்று சொல்லவும். கேசவன் நீங்களும் வாங்க அண்ணா எல்லாரும் சேர்ந்தே சாப்பிட்டலாம் என்று அழைத்தார். அவர் தனக்கு வேண்டாம் என்று மறுத்து அவர்களை மட்டும் சாப்பிட அனுப்பி வைத்தார்.

இவர்களும் சாப்பிட்டு முடித்து வரவும். டிரைவர் டிராலி இருக்குமிடத்தை காட்டி அதன் அருகில் காரை நிறுத்தியவர். லக்கேஜை அதில் அடுக்க உதவி செய்தவர், காருக்கான வாடகை தொகையை வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

இப்படியே ஒவ்வொருவரின் உதவியோடு தன் புது பிஸினஸ் பற்றி யோசித்தவர், குடும்பத்தோடு வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் எல்லாருக்கும் பாஸ்போர்ட் எடுக்கனும். ஆனால் அந்த பாஸ்போர்ட் கையிலெடுக்கவும் அதை எடுக்க தான் கூறிய பொய்கள் அவருக்கு நினைவு வந்து சென்றது. தன் நண்பன் ஒருவன் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிப்பதாகவும். அவனே தனக்கு செலவு செய்து, இங்கு வந்து சுற்றி பார்த்துவிட்டு செல்ல அழைத்ததாக வீட்டில் பொய் கூறி எடுத்த பாஸ்போர்ட்டின் உபயோகம் இப்போது தான் பிரபாவுக்கும் புரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் விளக்கம் சொல்லிக் கொண்டனர். எல்லாம் முடிந்து அவர்களின் ப்ளைட்டு போர்டிங் இன்னும் மூன்று மணி நேரமிருப்பதால் ஓய்வறைக்கு சென்று குழந்தையை அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்தார் கேசவன்.

அதன்பிறகு இவர்கள் பல விஷயங்களை தங்களுக்குள் பேசி கொண்டனர். இப்படியே மூன்று மணி நேரம் கடந்து ப்ளைட்டுக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தது. சத்யாவும் தூங்கி எழுந்ததில் இருந்தே சோகமாகவே இருந்தான். யாரிடமும் பேசாமலே அமைதியாக, அவர்களின் விமானப் பயணம் சிங்கப்பூரில் சென்று இறங்கியதும் முடிவடைந்தது. அங்கு அவர்களை வரவேற்க ஒரு தமிழ் குடும்பம் உறுப்பினர்கள் நின்றனர். அதில் ஒரு கணவன், மனைவி, மற்றும் குட்டி பெண்..., பார்ப்பதற்கு மெழுகு பொம்மை போலவே இருந்தாள். அவளை பார்த்தும் சத்யனின் இதழில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அவர்கள் கேசவன் என்ற பெயர் தாங்கிய பலகையை கையில் வைத்திருக்கவும். அவர்களை நோக்கி கேசவனின் குடும்பம் வந்தது. அதிலும் அந்த குட்டிப் பொண்னு கையில் ஒரு குட்டி கார் வைத்திருந்ததை சத்யன் ஆர்வமாக பார்த்தான்.

குழந்தையின் கண்களின் வழியே அதன் ஆசையைப் பற்றி தெரிந்துக் கொண்ட பெரியவர்கள். பெண் குழந்தையிடமிருந்து கார் பொம்மையை வாங்கி சத்யனின் கையில் கொடுத்து. அவனிடம் சில கேள்வி கேட்பது போல பேசினார்கள். அவனும் அவர்களின் கேள்விக்கு அழகாக பதிலளித்தான். அதன் பிறகு காரில் அவர்களின் அப்பார்மென்ட்டுக்கு, கேசவனின் குடும்பத்தை அழைத்துச் சென்றார்கள்.

கேசவனுக்கு இவர்களின் வீட்டுக்கு பக்கதிலே ஒரு வீடு பார்க்க நினைக்கும் போது. அருகில் ஒரு இப்தியரின் வீடு காலியாக இருந்தது. அவருக்கு கேசவனின் தற்போதைய நிலைமை விளக்கமாக சொல்லி புரிய வைத்ததால், கேசவனுக்கு குறைந்த வாடகைக்கே கொடுத்தார்.

கேசவனின் நண்பர் முதல்ல எல்லாரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. அப்புறம் இன்னைக்கு நம்ம வீட்டிலே சாப்பிடுங்க, நாளைக்கு நல்ல நாள், அதனால நாளைக்கு பால்காய்ச்சி சமையலை அங்க ஆரம்பிக்கலாம். இப்ப போய் ப்ரெஷாகிட்டு கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க, நம்ம நைட் மீட் பண்ணலாம். அப்ப வீட்டையும் போய் பார்க்கலாம் என்று வெளியே சென்று விட்டார். அப்பவே மணி மதியம் மூன்றரை தாண்டி விட்டது. சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று முதலில் பிரபாவை ரெஃப்ராஷாக சொல்லி அனுப்பி வைத்தவர். சத்யனுக்கு தானே குளிக்க வைத்தார். பத்து நிமிடத்தில் பிரபா வெளியே வந்தாலும் மிகவும் சோர்வாக தெரிந்தால். அதைப் பார்த்த கேசவன் என்னம்மா ரொம்ப டயர்டா இருக்க, "உடம்புக்கு எதுவும் பண்ணுதா."

பிரபா "ஆமாங்க தலை சுத்துற மாதிரி இருக்கு.." நான் கொஞ்ச நேரம் படுத்துகிறேன் என்று கட்டிலில் சரிந்து விட்டாள். கேசவன் அவளை நேராக படுக்க வைத்து விட்டு, பாத்ரூம்க்குள் நுழையும் முன்பு சத்யா அம்மாவை தொந்தரவு செய்யாதே, அப்பா இப்ப வந்துருவேன் என்று சொல்லி சென்றார்.

சத்யனுக்கு ஐந்து வயது என்றாலும், தாயின் மடி நாடும் குழந்தை தான். ப்ளைட் டிரவல், மற்றும் குளித்து ப்ரெஷ்ஷாக இருந்ததால். சத்யனுக்கு கண்களை தூக்கம் வந்து சொக்க செய்தது. அப்பா சொல்லி சென்ற வார்த்தைக்காக, தன் தாயை தொந்தரவு செய்யாமல். அவளின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு அருகிலே உறங்கியும் விட்டான்.

கேசவன் குளியல் முடித்து வெளியே வரவும், தன் மகனின் தூங்கும் அழகை பார்த்து ரசித்தவர். அவனை மெதுவாக தள்ளிப்படுக்க வைக்க தூக்கவும். அவன் பிரபாவின் சேலையை தன் கையில் இறுக்கி பிடித்து இருந்தான். அதன் பிறகு இருவரையும் பிரிக்க வேண்டாம் என் அப்படியே படுக்க வைத்தவர். அவர்களின் அருகில் தானும் படுத்து உறங்கி விட்டார்.

இரவு மணி எட்டாகும் போது தான் கேசவனும் முழிப்பு தட்டியது. அப்போதும் தாயும், மகனும் அரவணைத்து தூங்கிக் கொண்டு இருந்தனர். கேசவன் அவர்களை தொந்தரவு செய்யாமல், தன் நண்பன் பேச்சுக் குரலும் ரூம்க்கு வெளியே கேட்கவும், அவரிடம் பேசுவதற்காக வெளியே வந்தவர். தன் மனைவியின் தற்போதைய நிலைமையை தயங்கி தயங்கி சொல்லி முடித்தார். அதைக் கேட்டதும் நண்பனின் குடும்பத்தில் எல்லாரும் சந்தோஷப்பட்டனர். அப்போது வயது முதிர்ந்த பெண்மனி ஒருவர் அங்கு வந்தார். அந்த பெண்மனி கேசவன் நண்பனின் மாமியார். அவரைப் பார்த்ததும் கேசவன் வணக்கம் என்று கூறியவர். தன் அம்மாவின் நினைவில் அப்படியே நின்று விட்டார்.

அந்த வயதான அம்மாவும் "என்னப்பா குடும்பத்தோட நினைவு வருதா," "கவலைப்படாதேப்பா." என்னையும் உன் அம்மாவா நினைச்சிக்கோ. நீ பேசிட்டு இருந்த எல்லாத்தையும் நானும் கேட்டுதான் இருந்தேன். உன் மனைவி எங்க இருக்கா., அவளுக்கு பிரசவம் வரைக்கும் நானே பார்த்துக்கிறேன். அதனால நீ இனிமே இதைப்பற்றி கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்லியவர். அவளுக்கு கர்ப்ப காலத்தில் சாப்பிட பிடித்தமான உணவு வகைகளை ரெடி பண்ண சென்று விட்டார்.

இரவு நேரம் எல்லாரும் சாப்பிட அமரவும். கேசவன் தன் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு வந்தார். பிரபாவுக்கு இன்னும் தலை சுற்றுவது போல இருக்கவும், அவசரமாக ஒரு சேரில் உட்காரவும். அந்த வயதான் அம்மா பிரபாவுக்கு கைமருந்து கொடுத்தார்கள். அதன் பிறகு ஒரளவு சகஜமாக இருந்தாள். அன்றைய பொழுது அப்படியே கழிந்து சென்றது. இரவு நேரம் சத்யா தூங்குவதற்காக உருண்டு கொண்டு இருந்தவனை, பிரபா "என்னடா தூக்கம் வரலையா, உருண்டுட்டே இருக்க தங்கம்."

சத்யா..., "அம்மா எனக்கு நம்ம பாட்டியைப் பார்க்கனும். பஞ்சுமுட்டாயையும் தேடுது மா...," அதான் தூக்கம் வரலை என்று தன் தாயின் மடியில் படுத்து தன் துக்கத்தை கண்ணீரில் கரைத்தான். பிரபாவின் சமாதானம் அவனுக்கு போதுமானதாக இல்லை. எனவே நடு இரவில் அவனுக்கு காய்ச்சல் ஆரம்பமானது. தன்னை அணைத்து உறங்கும் மகனின் உடம்பில் சூடு அதிகமாகவும்., பிரபா, கேசவனை
எழுப்பினாள். அவரும் ஊரில் இருந்து எடுத்து வந்த மருந்தை கொடுக்கவும். ஒரளவுக்கு காய்ச்சல் குறைந்தது.

மறுநாள் காலையில் கேசவன். புது வீட்டை சென்று பார்த்தவர். அங்கு தேவையான வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு பால் காய்ச்சும் நேரம் வந்ததும். பிரபாவை அழைத்துச் சென்றார். இப்ப சத்யனுக்கு காய்ச்சல் நன்றாக குறைந்து இருந்தது. அவனும் அந்த வீட்டு குட்டிப் பெண் ஷில்பாவுடன் விளையாண்டு கொண்டு இருந்தான்.

புதுவீட்டில் பால் காய்ச்சவும். பிரபாவுக்கு நினைவில் முழுக்கு தன் அத்தை மாமாவே நிறைந்து இருந்தனர். நல்ல நேரத்தில் பால்காய்ச்சி முடித்து மதிய உணவும் அங்கே தயார் செய்து சாப்பிட்டனர், இரவு தான் அவரவர் வீட்டுக்கு சென்றனர். இப்படியே ஒருவாரம் கடந்த நிலையில் கேசவன். தன் தொழிலை ஆரம்பிசதற்காக தெருவில் சென்று கொண்டு இருக்கும் போது. அங்கு ஒரிடத்தில் மக்கள் கூட்டமாக இருப்பதை பார்த்தவன். அங்கு சென்று என்ன ஏதென்று விசாரிக்கும் போது தான், அது ஒரு இந்திய உணவகம். அங்கு கூடியிருந்த மக்களில் அதிகமானவர்கள் தமிழர்கள் தான் அதிகம். அதைப் பார்த்ததும் கேசவனின் எண்ணம் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தது.

சத்யனை அழைத்துக் கொண்டு ஒரு பள்ளிக்கு சென்ற கேசவன். அங்கு தான் அவருடைய நண்பனின் மனைவி வேலைப் பார்ப்பதாளும், சத்யனின் புத்திக் கூர்மையாலும் எளிதில் அட்மிஷன் கிடைத்தது. சத்யனுக்கும் பள்ளி மிகவும் பிடித்து இருந்தது. காரணம் ஷில்பாவும் அங்குதான் படித்தாள். இவர்களின் நட்பு வட்டாரம் பெருகியது. ஒரு நாள் பள்ளியில் நிச்சல் கற்றுக் கொள்ளும் மானவர்கள் வரிசையாக நிற்கும் போது, ஒரு மாணவன் அங்கு நின்று இருந்த மாணவி ஒருத்தியைப் பிடித்து தண்ணீருக்குள் தள்ளிவிட்டான்.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top