நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...19

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member19.காற்றுக்கென்ன வேலி


வானம் இருள் சூழ்ல காத்துக் கொண்டு இருக்க சூர்யன் மதியின் வருகையை எண்ணியே மேகங்களின் நடுவில் தன்னை மறைத்துக் கொள்ள வானம் அதன் அழகில் மேலும் மெழுக்கேற்றி இருந்தது அந்த அந்தி வானம்.

அந்த சூழலை இரசிக்கும் நிலமை இல்லாமல் அந்த சிட் ஔட்டில் அமர்வும் எழுந்து நடை பயில்வதுமாக விஷ்வா இருக்க அவனை வெகு நேரம் காக்க விடாமல் இசை மணியுடனும் சக்தியுடனும் வருகை தந்தாள்.

மணியும் இசையும் அமைதியாக இருக்கவே இசையே விஷ்வாவை கண்டு " சொல்லுங்க சார் எதுக்காக இங்க வர சொன்னீங்க அதுவும் நிலா இல்லாம " என்றே கேள்வி கேட்க

" எனக்கு உன்கிட்ட இருந்தும் மணி கிட்ட இருந்தும் உதவி வேணும் அதுனால தான் " என்றான் பார்வையை எங்கோ பதித்த படி..

" அப்படி என்ன உதவி வேணும் " என்று இசையும் " சொல்லுங்க சாச்சா எனக்கு ஹெல்ப்புன்னு " என்று மணியும் கேட்க

இருவரையும் பார்த்து " நான் இல்லாத இத்தன வருஷத்துல என்னோட மொழி வாழ்க்கையில என்ன நடந்துச்சி " என்றே கவலையில் கேட்க ,

" அவ லைஃப்ல என்ன நடந்துச்சின்னு எனக்கு எதுவும் தெரியாது சாச்சா " என்று மணி கை விரிக்கவும் அடுத்தாக இசையை பார்த்தான்.

அவளின் அமைதி அவனுக்கு எதையோ உணர்த்த " நீ சொன்னின்னா மட்டும் தான் மா அவளோட வாழ்க்கையில என்ன கொண்டு போக முடியும் " என்று கவலை நிறைந்த குரலில்..

" என்னால உங்க கிட்ட சொல்ல முடியாது .அவளுக்கு நான் சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன் அவ என்கிட்ட அந்த நரகத்த ஒருத்தர் கிட்ட மட்டும் தான் சொல்லனும்னு சொல்லி இருக்கா அவுங்கள தவிர என்னால வேற யாருக்கும் இத சொல்ல முடியாது. இத கேக்குறத பாத்தாலே தெரியுது நீங்க அக்காவ எவ்வளவு தூரம் காதலிக்கிறீங்கன்னு ஆனா அவளோட வாழ்க்கைல அந்த ஒருத்தரை தவிர வேற யாருக்கும் இடம் தர மாட்டா " என்றே இசை விட்டேத்தியாக சொல்ல

" அது தரு தானே " என்று சர்வ சாதாரணமாக அதே நேரத்தில் கொஞ்சம் கர்வத்துடனும் சொன்னான் விஷ்வா.

" ஆமா.! அது எப்படி உங்களுக்கு " என்று முடிப்பதற்குள் " அது வேற யாரும் இல்ல நான் தான் " என்றான்.

இதனை கேட்ட இசை அவனை நெருங்கி அவன் கண்ணத்தில் வயது வித்தியாசம் பார்க்காமல் ஓங்கி அறைந்தாள். அதில் அவ்வளவு கோபம் வெறுப்பு மற்றும் இயலாமை அப்பட்டமாக தெரிந்தது. இதனை எதிர்பார்க்காத விஷ்வா ஆடிப் போக , தன் தமயனை அடித்த இசையை இழுத்து அவள் கண்ணத்தில் ஓங்கி அறைந்தான்.

அவன் அறைந்ததில் கீழே விழுந்த இசையை எழுப்ப கூட மனம் ஒப்பாமல் " நீ அடிச்சது என்னோட அண்ணாவ எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட அண்ணாவ அடிச்சிருப்ப . ஒரு நல்ல மனுஷன்ன கை நீட்டி அடிக்க உனக்கு எவ்வளவு தைரியம் தைரியம் இருக்கும். எனக்கு என்னோட அண்ணா ஒரு அப்பா மாதிரி அவர போய் அடிச்சிட்டியே டி. உன்ன போய் காதலிச்சேன்னு நினைக்கும்போது எனக்கு அசிங்கமா இருக்கு டி ஒரு மேனர்ஸ் தெரிய வேணாம் நீயெல்லாம் ஒரு பொண்ணா உங்க அப்பா அம்மா இப்படி யாரு கிடைச்சாலும் அடின்னு சொல்லி
வளர்த்தாங்கலாக்கும் " என்று கோபத்தில் கத்த இசையை எழுப்பி விட்டாள் மணி ..

" இப்போ என்னோட அக்கா இந்த நிலையில இருக்கான்னா அதுக்கு மொத்த காரணமும் இதோ இங்க நிக்கிறாரே ரொம்ப நல்லவருன்னு பேரு வாங்கிருக்கிற விஷ்வேந்தர் தான் இத்தனைக்கும் காரணம் " என்று அந்த இடமே அதிரும் படி கத்தினாள்.

இதில் சக்திக்கும் மணிக்கும் அதிர்ச்சி என்றால் விஷ்வாக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

" என்ன சொல்ற நீ நிலாவோட நிலைமைக்கு நான் தான் காரணமா " என்று பதறிப்போய் விஷ்வா அவள் அருகில் வந்து கேட்க

" ஆமா நீங்க தான் அவளோட நிலமைக்கு முழு காரணம் " என்று கீழே மடிந்து அழுகத் தொடங்கினாள்.

அவளை எழுப்பி இருக்கையில் அமர வைத்தவன் " எனக்கு நான் இல்லாத போது அவளோட வாழ்க்கையில என்ன நடந்துச்சின்னு தெரிஞ்சாகணும் கொஞ்சம் சொல்றீயா இசை " என்று அவள் முன் மன்றாடி நிற்க
விஷ்வாவை கண்டவள் அனைத்தையும் கூறத் தொடங்கினாள்.

நிலா ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு சென்ற தருவாயில் அவளுடன் இருந்து மணி மட்டுமே . ஏனோ சக்தி இல்லாமலும் விஷ்வா இல்லாமல் வாழ்வே வெறுமையாக உணர்ந்தாள்.
அது பத்தாம் வகுப்பு என்பதால் மணி தன் முழு கவனத்தையும் படிப்பிலே காட்டிட நிலாவை கவனிக்க மறந்து விட்டாள்.

நிலாவும் மணியின் படிப்பை காரணத்தை காட்டியே தனிமையை நாடத் தொடங்கினாள்.

பத்து வயதிலிருந்தே தன் நண்பர்கள் கூட்டத்துடனே வளர்ந்து வந்தவள் திடிரென அவர்கள் யாரும் தன்னுடன் இல்லை என்பதே அவளை மன உளைச்சலுக்கு ஆளாகியது. அதனால் படிப்பில் கவனத்தை செலுத்தாமல் போக பள்ளியில் நடக்கும் அனைத்து தேர்வுகளிலும் பூஜ்ஜியமே பெற்றிருந்தாள்.
இதனை அறியாத ரஞ்சனி வேலைக்கு சென்று வருவதும் அதன் பின் வீட்டு வேலைகள் செய்வதும் என்னவே நாட்களை கடத்த தொடங்கி இருந்தார். அது மட்டும் இல்லாமல் கோயிலுக்கு சென்று வருவதில் முன்னுரிமை வழங்கி இருந்தார் ரஞ்சனி. இதுவே நிலா வாழ்க்கையின் அழிவுக்கு புள்ளி மையமாக இருந்தது.
நிலாவின் படிப்பு மோசமாகி செல்வதை கண்ட ஆசிரியர்கள் ரஞ்சினியை அழைத்து புகார் பட்டியல் இட்டனர்.

இதனையெல்லாம் கேட்ட ரஞ்சினி இடிந்தே விட்டார்.
தன் மகளின் வாழ்வை நினைத்து கலக்கம் கொண்டவர் நேராக சென்றது சாமி அறைக்கே நிலாவின் அறைக்கு அல்ல..
சாமி கும்பிட்டவர் நிலாவிற்கு பிடித்தமான காலான் வாங்கி கொடுத்து " நீ நல்லா படிக்கனும் நிலா மா . இப்போ பத்தாவது படிக்கிற நீ இதுல வர மார்க் வச்சி தான் அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்க முடியும் சரியா " என்று அட்வைஸ் செய்து விட்டு சென்றார்.

நிலாவின் நிலையை ஒரு தாயாய் இருந்து கவனிக்க தவறிய அன்னையை யாது சொல்ல..???
பாசத்துக்காக எங்க தொடங்கிய நிலாவுக்கு பாசம் காட்ட அன்னையும் இல்லை எந்நேரமும் தன் மேலே முழு கவனத்தையும் வைத்திருந்த விஷ்வாவும் இல்லை.

நிலாவின் பிஞ்சு மனம் விஷ்வாவிற்காக ஏங்கி துடிக்க ,அவளை காக்க வேண்டியவனோ அவளை மட்டுமே கருத்தில் கொண்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டானே.

நாட்கள் அதன் போக்கில் நகர , ரஞ்சனி நிலாவை எண்ணி கலக்கமுற்றவர் கோவிலுக்குளுக்கு சென்று கடவுளிடம் மன்றாட தொடங்கினார்.

அதேபோல் ஒருநாள் நிலாவிற்காக , நிலாவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோசியரிடம் செல்ல , அவரோ " உங்க பொண்ணுக்கு இப்போ படிப்பில நாட்டம் இருக்காது . அவளோட மனச்சுக்குள்ள ஏதோ ஒரு கலக்கமும் தேவையில்லாத எண்ணங்களும் ஓடிக் கொண்டு இருக்கு அதிலிருந்து அவள் விடுபட்டா மட்டுமே அவள் வாழ்க்கையில் படிப்பு என்பது கிட்டும் " என்று அந்த ஜோசியர் சோலியை உருட்டி பார்த்து சொல்ல , இதனை கேட்ட ரஞ்சனி திகைத்து போய் விட்டார்.

" இதுக்கு எதாவது பரிகாரம் இருக்கா சாமி .எனக்கு அவளோட படிப்பு ரொம்ப முக்கியம் சாமி " என்று கண்ணீர் விடாத குறையாய் ரஞ்சனி சொன்னார்.

" இரு மா பாக்குறேன் " என்று சோலியை உருட்டி பார்வை இட்டார்.

சோலியை உருட்டி பார்த்தவர் " இருக்கு மா " என்று அதை பற்றி கூறத் தொடங்கினார்.

" மேற்கு திசையை பார்த்து இருக்கிற சிவன் கோவிலுக்கு சென்று சங்கு பூஜைன்னு ஒன்னு பண்ணணும் . அதுவும் அவளோட பதினாறு வயசு தொடங்குறதுக்கு முன்னாடியே இத நீங்க பண்ணி ஆகனும் . அதுக்கப்புறம் உங்க குல தெய்வமாக இருக்கிற கோவிலுக்கு சென்று அங்கு ஒரு அர்ச்சனையை இப்படி பண்ணா கண்டிப்பா உங்க பொண்ணு நல்லா படிச்சு நல்ல நிலைக்கு வருவாங்க " என்று ஜோசியர் சொன்னார்.

அதனை கேட்ட ரஞ்சனி சரிங்க சாமி நான் கண்டிப்பா இத பண்றேன் " என்று விட்டு குருதட்சனையை கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தார்.
வீட்டிற்கு வந்த ரஞ்சனி கண்டது உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருப்பது தான்..
சாமி சொன்னது ரஞ்சனிக்கு ஞாபகத்தில் வரவே கண்களில் கண்ணீர் சுரந்தது.

அதன் பின் பக்கத்தில் இருந்தவர்களிடம் ரஞ்சனி விசாரிக்க தொடங்கினார்.
அதில் ஒருவர் " எனக்கு தெரியும் ரஞ்சனி அப்படி ஒரு கோவில் இங்க பக்கத்துல தான் இருக்கு " என்று சொல்ல ,
ரஞ்சனியின் முகத்தில் சந்தோஷம் வந்தது.

" சொல்லுங்க அக்கா அந்த கோவில் எங்க இருக்குன்னு " என்று அதை அறிந்து கொள்ள துடிக்க

" அந்த கோவில் இங்க பக்கத்துல இருக்கிற கோடையசமுத்திரம்ல ( எனது கற்பனையில் உருவாக்கப்பட்டது) இருக்க மா " என்றார்.

" அக்கா அது எங்க இருக்குன்னு எனக்கு தெரியாதே . கொஞ்சம் வழி சொல்றீங்களா அப்போ எனக்கு அந்த கோவிலுக்கு போக சரியா இருக்கும் " என்று அறிந்து கொள்ளும் நோக்கில் அவரிடம் துரித படுத்த

" ரொம்ப பக்கம் தான் மா .அன்னூர்லர்ந்து ஒரு நாலு கிலோ மீட்டர் தள்ளி தான் இருக்கு " என்றார்.

" சரிங்க அக்கா " என்று அவரிடமிருந்து விடுபட்டு சென்றார்.

அடுத்தநாளே , நிலாவை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு அரை நாள் விடுமுறை எடுத்தவர் அந்த கோவிலுக்கு சென்றார்.

அங்கு சென்றவர் தரிசனத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்த ஐயரை காணச் சென்றாள்.
" சாமி " என்று அழைக்க
" சொல்லுங்கோ மா உங்களுக்கு என்ன வேணும் " என்று பய பக்தியுடன் கேட்க
" அது வந்து சாமி" என்று ஆரம்பித்தவர் அந்த ஜோசியர் கூறியதை முற்றிலும் சொல்லி முடித்தார்.

" சரி மா வாங்கோ சிறப்பா செஞ்சிடலாம் " என்றார்.

" அப்புறம் சாமி இதுக்கு எவ்வளவு காசு ஆகுனும் சொன்னிங்கன்னா அது எனக்கு ரெடி பண்ண சரியா இருக்கும் " என்று தன் நிலையை மறைமுகமாக கூற

அதனை உணர்ந்த சாமி " எப்படி ஒரு ஐயாயிரம் கிட்ட செலவாகும் மா " என்றார்.

" சரிங்க சாமி ஒரு நல்ல நாள் சொன்னிங்கன்னா நான் பாப்பாவ கூட்டிட்டு வந்துடுவேன் " என்க

அவரும் ஒரு நல்ல நாள்ளை குறித்து சொன்னார்.

ரஞ்சனியும் சரி என்று ஒப்புக் கொண்டு என்னென்ன வாங்கி வர வேண்டும் என்றும் அவரிடம் கேட்டு கொண்டு சென்றாள் ரஞ்சினி.

அடுத்தநாள் நகை கடைக்கு சென்று தன்னிடம் இருந்த ஒரு செயினை அடக்கு கடையில் அடகு வைத்து ஐந்தாயிரம் ரூபாயை பெறட்டி வைத்தாள்.
அடுத்து வந்த ஒரு நன்நாளில் நிலாவை அழைத்துக் கொண்டு ரஞ்சினி அந்த கோவிலுக்கு சென்று அந்த சங்கு பூஜையை செய்தாள். நிலாவும் ஏதோ பொம்மை போல் அனைத்தையும் செய்தாள்.

அடுத்தடுத்து வந்த நிலாவின் படிப்பு மேலும் குறைய தொடர , அதே கோவிலுக்கு சென்று அந்த கண்டு அறிகுறி கேட்க அவரோ பூஜை ஒன்று செய்ய வேண்டும் அதுவும் உங்களது வீட்டில் என்றே சொல்ல

" சரிங்க சாமி " என்று விட்டு சென்றார்.

அந்த சாமி சொன்னது போலவே நிலாவை வைத்து அதிகாலையில் பூஜை செய்தனர்.

அடுத்தநாளே அந்த சாமி ரஞ்சினியின் எண்ணிற்கு அழைத்து " உங்க பொண்ணு பச்ச கலர் உடை உடுத்தாதனால இன்னொரு பூஜை பண்ணணும்.
அதுக்கப்புறம் எல்லாம் நல்ல படியா நடக்கும் " என்று சொல்ல

" சரிங்க சாமி நல்ல நாள் சொன்னிங்கனா அதுக்கான வேலையை நான் செஞ்சி வைப்பேன் " என்றார் ரஞ்சனி.

நிலாவோ பாசத்திற்க்காக ஏங்கி ஏங்கி தனக்குள்ளே ஒடுங்கி கொள்ள தொடங்கி இருந்தாள். அவளின் எண்ணப்படி அனைவரும் தன்னை வெறுத்து ஒததுக்கிறார்கள் என்றே எண்ணி தனிமை நாடி செய்துவிடலாம் என்ற எண்ணத்திற்கே வந்து விட்டாள்.

" அந்த சாமி சொன்னது போல் அந்த நாலும் வந்துச்சி .அந்த நாள் வராமலே இருந்திருக்கலாம் அதுனால தான் என்னோட அக்காவுக்கு இப்படி ஒரு நிலைமையே வந்தது " என்று கவலை தீர கண்ணீர் விட்டாள் இசை....

கோவையில் மஞ்சரியின் வீட்டில் நித்திலாவின் அறையில் ராஜசேகருக்கு வீடியோ கால் ஏற்படுத்தி அவர் எடுத்த அடுத்த நொடி நித்திலா அவள் கையை அறுத்துக் கொண்டாள்.

_தொடரும்.....

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN