நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...20

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
20. காற்றுக்கென்ன வேலி


நிலாவின் கடந்தகாலத்தை கூறிக் கொண்டு இருக்கும்போதே இசைக்கு அழுகையின் பிடியில் மூச்சு திணறல் ஏற்பட , விஷ்வா அவளை ஆசுவாசம் படுத்த சக்தி வேகமாக ஹோட்டல்க்கு சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

" இந்த இனி மா தண்ணிய குடி " என்று அவளின் தலையை வருடி குடிக்க வைக்க முயல , அவளோ அதை வாங்க மறுத்து அவளே சென்று தண்ணி குடித்து விட்டு வந்து நிலாவின் கடந்த காலத்தை பற்றி மேலும் கூறத் தொடங்கினாள்.
அந்த பூஜைக்கு பிறகும் நிலாவின் குணத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் போகவே தான் ரஞ்சனி மீண்டும் அந்த சாமியை தேடி சென்றதே .

அங்கே சென்றதும் அடுத்த பூஜைக்கான விவரத்தை சொல்லி அனுப்பி விட ரஞ்சனியும் அதற்கான வேலையை செய்தார்.
நல்ல நாளுக்காக காத்திருக்க , அதுவும் விரைவிலே வந்தது.
நிலாவுக்கு அன்று விடுமுறை எடுத்து வீட்டிலே இருக்க வைத்திருந்தாள் ரஞ்சனி.

எதுக்கு .? ஏன்.? எதற்காக.? என்று எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் நிலா வீட்டில் அமைதியாக இருந்தாள். அவள் தன் வாழ்வையே வெறுத்திருந்தாள் .

ஏன் வாழ்கின்றோம் என்ற கேள்வி அவளுள் எழுப்பி விடும் போதெல்லாம் நித்திலாவின் கூட இருந்தவர் பேசியது நினைவு வந்து அவளை வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணும் அளவிற்கு அவளை கொண்டு வந்து விட்டிருந்தது...

அவளின் பிறந்த நாளைக்கு இறுதியாக விஷ்வாவுடன் எடுத்த புகை படத்தை கண்டு " தரு.! தரு‌.!! நீ ஏன் என்ன விட்டு போன உனக்கு கூட என்ன பிடிக்கவில்லை தான நான் அவ்ளோ கெட்ட பொண்ணா சொல்லு உண்மையாவே நான் நல்லா பொண்ணு இல்லையா . அன்னைக்கு நீ ஏன் அப்படி நடந்துக்கிட்ட என்கிட்ட சொல்லு. அதுனால தான என்னால உங்க வீட்டுக்கு வர முடியாம போச்சி. அப்புறம் நீயும் என்கிட்ட பேசாமலே இருந்துட்ட. இதுனால என்னால என்னோட பால் டப்பா கூட கூட பேச முடியல தெரியுமா .நீ எதுக்கு என்ன விட்டு போன தரு ‌.ப்ளிஸ் என்கிட்டயே வந்துரு தரு என்கூட எல்லாம் இருந்து தனியா இருக்கிற மாதிரி இருக்கு. நீ என்கிட்ட இருந்து சக்தி சாவி அம்மா மணின்னு எல்லாரையும் பிரிச்சு உன்கூடவே கூட்டிட்டு பொய்ட்டல இப்போ பாரு தரு நான் தனியா இருக்கேன். இங்க அம்மா என்ன வச்சி என்னென்னமோ பண்றாங்க தரு எனக்கு ரொம்ப பயமா இருக்கு " என்று கண்ணீர் விட்டு அழுதாள் நிலா...

அந்த சாமி நிலா வீட்டிற்கு வர மாலை நேரம் ஆனது...

ரஞ்சனி அவரை வரவேற்று உபசரித்து கொண்டு இருந்தார் . அதற்குள் நிலா வெளியே வரவும் வராத புன்னகையை வர வைத்துக் கொண்டு அவரை வரவேற்றாள்.
ஏனோ அவளுக்கு அவரை கண்ட பொழுதினில் இருந்து நல்ல அபிப்பிராயம் தோன்ற வில்லை.
உபசரிப்பு எல்லாம் முடிந்தவுடன் , பூஜை தொடங்கலாம் என்று முடிவெடுத்து அதற்கான வேலை அவர் செய்தார்.

சில மணி நிமிடத்தில் நிலாவை சாமி அறையின் முன்பு நிறுத்தினார்.

அவளுக்கென்ன கோவிலில் இருந்து கொண்டு வந்த புடவையை அவள் தோலை தொட்டு நிலாவுக்கு புடவையை போர்த்தி விட்டார்.

நிலாவுக்கு உடல் திடுக்கிட மனம் தவறாக உணர்த்த ஆனாலும் எந்த ஒரு எதிர்ப்பு விசையும் காட்டாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
அவளின் அமைதியை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டவர் , பூஜையை கடை பிடித்தவாறே அவளின் ஒவ்வொரு அங்கங்களாக அளவெடுக்க தொடங்கி இருந்தார்.

இதற்கிடையில் அப்ப அப்ப ரஞ்சினி தங்களை விட்டு நெருங்க‌ விடாமல் இருக்கணும் என ஒரு விளக்கை கொடுத்து வாசலில் வைத்து அனையாதவாறு பாதுகாக்க சொல்லி அனுப்பி வைத்தார்.

நிலாவுக்கு தன்னிலையை நினைத்து அழவும் முடியாமல் தன் அன்னையை அழைக்கவும் முடியாமல் தனக்குள்ளே அழுகத் தொடங்கினாள்.

அவளின் அழுகை குரல் கூட வெளி வராமல் போனது. இதனை அறியாத ரஞ்சினியோ வெளியே விளக்கை அனைய விடாமல் பாதுகாத்து கொண்டு இருந்தார்.
அதுக்கடுத்து ஒரு நூல் போல் எடுத்தவர் அவளின் இடுப்பை சுற்றி இருக்கி கட்டி மந்திரத்தை கூறிக் கொண்டு இருந்தார்.
சில நிமிடத்திலே பூஜையை முடித்து விட்டு வந்தவர் ரஞ்சினியை பார்த்து " இனிமே உங்க பொண்ணு நல்லா படிப்பாங்க மா. இனி எந்த ஒரு பிரச்சனையும் இல்ல .பயப்படாம இருங்க மா " என்று நிலாவை கண்டு சிரித்து விட்டு கிளம்பிச் சென்றார்.

நிலாவிற்கு உயிரே இல்லை யாரிடம் கூறி அழுவது என்று புரியாமல் தனக்குள்ளயே அடக்கி கொண்டு அறைக்கு சென்று கதறி அழுதாள்.

இவளின் அழுகை அறியாத அன்னையாக ஹாளில் இருந்து தன் வேலையை செய்து கொண்டு இருந்தார்.

அடுத்து வந்த ஒரு வாரத்திலேயே நிலாவுக்கு காய்ச்சல் வந்தது. ரஞ்சனி நிலாவை மருத்துவமனை அழைத்துச் சென்று வந்தார்.
அது ஒரு வார கால விடுமுறை என்பதால் இசை அடம்பிடிக்கவும் அவளை அழைத்துக் கொண்டு வந்தார் கண்ணதாசன். அவருக்கு வேலை இருப்பதாக கூறி ரஞ்சனியை ரயில் நிலையம் வந்து அழைத்து செல்லுமாறு கோரிக்கை விடுக்க , ரஞ்சனியும் அதுக்கு சரி என்று கூறவும் நிலாவை வீட்டிலே ரெஸ்ட் எடுக்க கூறிவிட்டு ரஞ்சனி இசையை அழைக்க சென்றார்.

அதனை தெரிந்துக் கொண்டோ தெரியாமலோ அவர் சென்ற சில நிமிடத்திலே நிலாவின் வீட்டிற்கு வந்தார் அந்த சாமி.

இரண்டு முறை கதவை தட்டிய சாமி கதவை திறப்பதற்காக காத்திருக்க , நிலாவோ தன் அன்னை தான் வந்து விட்டதாக எண்ணி மெதுவாக நடந்து வந்து கதவை திறந்து அதிர்வுற்றாள்.

அந்த சாமி அவளை மேலிருந்து கீழே வரை அவள் மேனியை நோட்டம் விட தொடங்கினார்.

கலைந்த முடி காய்ச்சலில் கண்கள் இரண்டும் உள்ளே சென்றிருக்க படுத்தே இருந்ததில் அவளின் உடை சிறிதளவு கசங்கி இருந்தது.

அவளையே கண்களால் பருகியவன் , " வழி விடுறியா மா அம்மா எங்க வீட்ல இல்லையா " என்று அவளை நகர்த்தி உள்ளே சென்றவர் பார்வையை அலை பாய விட்டிருந்தார்.

வீடு முழுவதிலும் பார்வையை பதித்து தேடியவர் யாரும் இல்லை என்று தெரிந்ததும் நிம்மதியாக கதிரையில் அமர்ந்தார்.

" அம்மா வீட்ல இல்ல சாமி " என்று திக்கி திணறி கூறியவள் எச்சிலை விழுங்கினாள்.

" சரி மா குடிக்க கொஞ்சம் தண்ணி குடுக்கிறயா மா " என்றே கேட்க
" சரிங்க சாமி " என்றவள் பயத்துடனே சமையலறை சென்று செம்பு நிறைய தண்ணீர் எடுத்தவள் நடுக்கத்துடனே வெளிய வந்து அவரிடம் நீட்ட அதை பிடிக்காமல் நிலாவின் கையை பிடித்தார்.

நிலா பயத்தில் கை விடுவிக்க முயன்ற போது செம்பை கீழே போட்டு விட ,செம்பில் இருந்த தண்ணி முழுவதும் அவள் மேல் சிந்தி அவள் மேனியில் பசை போல் ஒட்டியது.

அந்த சாமிக்கு அவரின் எண்ணங்கள் மேல் ஓங்க கையை பிடித்திருந்தவர் அதனை இழுக்க நிலா தொப்பென்று அவர் மீதே விழுந்தாள் . உடலில் பலம் என்று சுத்தமாக இல்லாததால் அவளுக்கு அந்த சாமியிடமிருந்து தப்பிக்க முடியாமல் திணறினாள்.

" நாம கல்யாணம் பண்ணிக்கிலாமா..??" என்று கேட்டார் அவளின் பால் மேனியை கண்டு...

தன் ஒட்டு மொத்த திறனையும் கொண்டு அவரை விட்டு எழுந்த நிலா ஓட எத்தனிக்க , அதனை அறிந்த அந்த சாமி அவள் கூந்தலை பிடித்து தனக்குள் கொண்டு வந்தவர் அவளின் இடையை இறுக பற்றி அவளின் உயரத்திற்கு குனிந்து கண்ணத்தில் இதழ் பதிக்க வர நிலா தன்னுடைய கால் வைத்து அந்த சாமியின் காலை ஓங்கி உதைத்து விட வலியில் கையினை விடுத்து கால்லை தேய்த்து விட்டார்.

அதிகளவில் கோபம் கொண்ட அந்த சாமி அவளை ஒரே பிடியில் இழுத்தவர் , அவளின் இதழை வலுக்கட்டாயமாக முற்றுகை இட்டார்.

அவரை விலக திமிறி கொண்டு இருக்கும் போதே மெதுமெதுவாக அவளின் ஆடையை கலட்ட முயல அதற்குள் ரஞ்சனி இசையுடன் உள்ளே வந்தவர் அங்கிருந்த நிலையை கண்டு அதிர்ச்சியுற்று " நிலா " என்ன கத்தி அந்த சாமியிடமிருந்து நிலாவை பிடித்து இழுத்தார்.

இழுத்த வேகத்தில் நிலா கீழே விழுந்து மயங்கி விட்டாள்.
ரஞ்சனி தன் பெண்ணை இந்த நிலைக்கு கொண்டு வர நினைத்த அவனை கீழே கிடந்த செம்பை வைத்து ஓங்கி அவன் மண்டையில் அடித்து காயப் படுத்தி உதிரத்தை வர வைக்க அவனோ வலியில் அவளை கீழே தள்ளி விட்டு ஓடிவிட்டான்.

இசையோ " நிலா அக்கா நிலா அக்கா " என்று அவளை எழுப்ப நிலாவோ மயங்கியதில் எந்திரிக்க முடியாமல் இருந்தாள்.

இசையின் சத்தத்தை கேட்ட ரஞ்சனி வேகமாக எழுந்து நிலாவை உலுக்க நிலாவோ அசையாது அப்படியே இருக்க பயம் வந்து அவளை வேகமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

மருத்துவரிடம் நடந்ததை கூறாமல் காய்ச்சல் அதனால் மயங்கி விழுந்துட்டாள் என்று கூறி சமாளித்து விட்டாள்.

நிலாவின் உடல் பலவீனமாக இருக்க அது கூட அவள் கண் திறக்காமலே இருக்கவே அவளுக்கு அவசர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவள் உடலோ அவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருக்கவே அவளுக்கு காய்ச்சல் மேலும் அதிகரித்தது. ட்ரிப்ஸ் போட்டு விட்டு செவிலியர் ஒருவரை அங்கேயே இருக்குமாறு சொல்லி விட்டு செல்ல ஒரு நாள் முழுவதும் கண் திறவாமலே இருந்த நிலா மெதுமெதுவாக குலுக்கோஸ் உடலில் சேர்ந்ததிற்கு ஆதாரமாய் நிலா விழிக்க முடியாமல் விழித்தாள்.

ஜெர்மனியில் இருந்த விஷ்வாவிற்கும் ஏதோ உறுத்தலாகவே இருந்தது. அங்கிருந்த செர்சுக்கு சென்றவன் நிலாவுக்கு எதுவும் ஆக கூடாது கடவுளே என்று வேண்டுதல் வைத்தான்.

அடுத்து வந்த ஒரு வாரமும் மருத்துவமனையிலேயே இருக்க மணி பார்த்து விட்டு சென்றாள்.
தன்னால் தான் தன் பிள்ளைக்கு இந்த நிலை என்று அறிந்து நொந்து போனார்.

" நான் நிலா கிட்ட உனக்கு என்ன பிரச்சினை என்று விசாரித்து செயல் பட்டுருக்க வேண்டும் .அது இல்லாம ஜோசியம் கோவில் சாமின்னு போய் என்னோட பொண்ணு வாழ்க்கையே வீண் பண்ண நினைச்சுட்டேனே . அய்யோ அவளுக்கு ஒரு நல்ல அம்மாவா இருக்காம பொய்ட்டேனே " என்று மனதுக்குள்ளேயே வெம்பி போனார்.

காலம் தாழ்ந்து வந்த அறிவு பயனுற்றதாக போய் விடும். எது செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல் பட வேண்டிய அவசியம் குழந்தைகளை பெற்ற ஒவ்வொரு தாய்மாறுக்கும் உண்டு ..

ரஞ்சனி அந்த நிகழ்விற்கு பின் உடைந்தே போய் விட்டார். அதற்கு மாறாக நிலா தைரியமாக இருக்க தொடங்கி இருந்தாள்.

நிலாவின் நிலையை அறிந்த கண்ணதாசன் அதற்கு மறுநாளே வந்து நிலாவை பார்த்து விட்டு இசையை அழைத்து சென்று விட்டார்.

அவள் கண் விழித்த போது நிலா இசையிடம் சத்தியம் பெற்ற பின்பே அவளை அனுப்பி வைத்தாள்.

அடுத்து வந்த சில நாளிலே ரஞ்சனி அந்த சாமியை தேடி கோவிலுக்கு செல்ல , அங்கே இல்லாமல் போக மற்ற சாமியிடம் விசாரிக்க அப்படி ஒருத்தர் இங்கே இல்லவே இல்லை என்று கூறிவிட்டனர்.

ரஞ்சனி முற்றிலும் உடைந்தே விட்டார். ஆனாலும் விடாமல் பக்கத்தில் பல இடங்களில் அங்க அடையாளங்கள் சொல்லி தேட அனைவரின் பதிலும் தெரியாது என்றே இருந்தது.

நிலாவை தேற்ற வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய ரஞ்சனியை நிலா கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி வந்தாள்.
தன் அன்னைக்காகவே நிலா அனைத்தையும் மறந்து புதுவிதமாக மாறத் தொடங்கிய நேரம் ரஞ்சனி துக்கம் தாங்காமல் கோழை தனமாக தூக்கு மாட்டி இறந்து விட்டார்.

அதனை கண்ட நிலா அதிர்ந்து அம்மா அம்மா என்று கதறி அழுக அவளை தேற்ற கூட ஆல் இல்லாமல் போகவே அவளின் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டினர் வந்து பார்த்து அதிர்ந்தனர்.

அதன் பின் மணியின் குடும்பத்தார் விவரம் அறிந்து நிலாவின் வீட்டிற்கு வந்து அவளின் பாட்டிக்கு ராஜேஸ்வரிக்கும் இசை குடும்பத்துக்கும் விவரம் கொடுக்க பட அவர்களும் வேகமாகவே நிலா வீட்டிற்கு வந்தனர்.

ரஞ்சனியின் உடலை அடக்கம் செய்த பின்பு அந்த வீடு நிலாவுக்கு சூனிய வீடு போல் தோன்ற , " இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன்" என்று கூறி அழுது கரைந்தாள்.

அதனால் ராஜேஸ்வரி பாட்டி தான் அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பார்த்து கொள்வதாக கூறி நிலாவை கையோடு கூட்டி வந்து விட்டார். கற்பகமோ ஒழிந்தது சனியன் என்று எண்ணி அமைதி காத்து விட்டார்‌.

நிலாவின் மனதில் " நான் படிக்கிலைன்னு அம்மா எனக்காக இவ்வளவு பண்ணி அவுங்க உயிர் போச்சி அதுக்காகவே படிக்கனும் " என்று நினைத்து முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி நல்ல மதிப்பெண்கள் எடுத்து காட்டினாள் நிலா.

அதன் பின் தன் பாட்டியின் உதவியால் உயர் கல்வி முடித்து விஷ்வாவிற்கு பிடித்த கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் எடுத்து கல்லூரியில் படித்து இப்போது உதவி பேராசிரியராக பணிபுரிகிறாள் என்று இசை நடந்ததை முழுவதும் கூறி முடித்தாள்.

விஷ்வா இடிந்தே போய் விட்டான். தான் அவளை விட்டு சென்றதால் அவளுக்கு எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கிறது என்று எண்ணும் போதே உயிர் உடலை விட்டு பிரிவது போல் இருந்தது.
சக்தியும் மணியும் கண்களில் கண்ணீர் வடிய நின்றிருந்தனர்.
அந்த இடத்தில் ஒரு மையான அமைதி நிலவிட அதை கலைக்கும் விதமாக விஷ்வாவே பேசினான் அவர்களிடம்.

" எனக்கு என்னோட நிலா கண்டிப்பா வேணும் அவள நான் என்னோட பழைய மொழியா கொண்டு வருவேன் . இன்னைக்கே நான் என்னோட காதல்ல அவளுக்கு சொல்லி புரிய வச்சி அவள நான் பாத்துக்க போறேன் " என்றான் உறுதியான குரலில்...

மூவரும் சரி என்று விட்டு செல்ல , சக்தி மன்னிப்பு கேட்டவாறு இசையின் பின்னே சென்றான்.

இங்கே நித்திலாவோ கையை அறுத்துக் கொள்ள அதனை வீடியோ கால் மூலமாக கண்ட ராஜசேகர் பயந்து போய் உடனே மஞ்சரிக்கு அழைத்து நடந்ததை கூற , மஞ்சரியும் வேகமாக சென்று அவளை மருத்துவமனையில் சேர்த்தனர்.

ராஜசேகரும் சாவித்திரியும் வேகமாக அவளை சேர்த்த மருத்துவமனைக்கு சென்று விட அங்கே மஞ்சரி அழுத படி அமர்ந்திருந்தார்.

தன் தங்கையை கண்ட ராஜசேகர் அவளுக்கு ஆறுதல் கூற அவரோ அதனை ஏற்க மறுத்து அழுதுகொண்டே இருந்தார்.

சிறிது நேரத்திலேயே மருத்துவர்கள் வெளியே வந்து அவள் நலமாக இருக்கிறாள் என்று சொல்லி விட்டு சென்றனர்.

உள்ளே சென்ற மஞ்சரி கோபம் தாங்காமல் அவளை ஓங்கி கண்ணத்தில் அறைந்து விட்டு திட்ட , அறையை வாங்கிக் கொண்டு கல்லாக அமர்ந்திருந்தாள்.

மஞ்சரியை சமாதானம் செய்தவர் , நித்தியின் புறம் திரும்பி " எதுக்கு இப்படி பண்ண நித்தி மா "என்றே பரிவாக கேட்க

அவள் கூறிய பதிலில் மஞ்சரியும் ராஜசேகரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

_தொடரும்....

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..!!!!
என்னால முடிஞ்சத நான் சொல்லி இருக்கேன். இது தப்பா தெரிஞ்சா மன்னிச்சுக்கோங்க.
குழந்தைங்கள் நடவடிக்கைகளில் தப்பா பட்டா அவுங்க கிட்ட போய் பேசுங்க அமைதியா மட்டும் இருந்திராதீங்க .அது பெரிய பிரச்சினையில கொண்டு வந்து முடியும்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN