நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...22

Ashwathi

Active member
Staff member


22.காற்றுக்கென்ன வேலிஐவி முடித்து வந்து இன்றோடு ஒருவாரம் ஆகியிருந்தது. இந்த ஒருவாரத்தில் அனைத்தும் மாறி இருந்தது .அனைவரது வாழ்க்கையும் மாறி இருந்தது.காலத்தின் கட்டாயமோ என்னவோ நிலா விஷ்வாவின் வாழ்வில் பெரிய பிரிவிற்கு ஊந்துகோலாக அமைந்து விட்டது இருவரது நிச்சியமும்.ஆம் , இன்னும் இரண்டே நாளில் நிச்சயம் பத்து நாளில் திருமணம் என இருந்தது இரு குடும்பத்து வீட்டிலும்...நிலாவுக்கும் அதிருபனுக்கும் மற்றொரு ஜோடியுமான விஷ்வா நித்திலாவுக்கும் திருமண ஏற்பாடுகள் கோடா கோலாமாக நடைபெற தொடங்கியது ...ஐவி முடித்து வந்த அடுத்த நாளிலேயே நிலாவை பெண் பார்க்க வருவதாக கற்பகம் கூறிவிட்டு இசையை நைசாக வேலைக்கு அனுப்பி வைத்து விட்டார்.மாலை நான்கு மணி அளவில் நிலாவை தயார் படுத்தி வைத்து அவர்களுக்காக காத்திருக்க , கற்பகத்தை சோதிக்காமல் விரைவிலே வந்து விட்டனர் மாப்பிள்ளையின் குடும்பத்தினர்.கற்பகமும் ராஜேஸ்வரியும் அவர்களை தன் முறையில் கவனிக்க கண்ணதாசன் பெயருக்கு அங்கிருந்தார்." என்னோட மருமகள கூட்டிட்டு வாங்க " என்று மாப்பிள்ளை அம்மா கூற" இதோ சம்பந்தி அம்மா " என்று கற்பகம் சென்று நிலாவை அழைத்து வந்தார்.உணர்வே இல்லாமல் உயிரை விஷ்வாவிடம் விடுத்து பொம்மை போல் சிகப்பு வண்ண பட்டு புடவையில் வந்து நின்றாள் நிலா.அவளை கண்டதும் அனைவருக்கும் பிடித்து போக , அப்போதே நிலா அங்கிருந்த அதிரூபனை கண்டு அதிர்வுற்றாள்.நிலா அனைவருக்கும் பொதுவான வணக்கத்தை தெரிவித்து காபி கொடுத்து அமைதியாக நின்றுக்கொண்டாள்." நான் கொஞ்சம் மொழி கிட்ட பேசணும்" என்று சபையில் ரூபன் கூறஅனைவரும் சிரித்து விட்டு , " நிலா மாப்பிள்ளையை உன்னோட ரூம்க்கு கூட்டிட்டு போ " என்றார் கற்பகம் . கிட்டத்தட்ட அதட்டல் முறையிலே சொன்னார்.நிலா ரூபனை அழைத்து உள்ளே செல்ல , நிலாவுக்கு விஷ்வாவுடன் இந்த அறையிலும் கிடைத்த முதல் நெருக்கத்தை நினைத்து கண்ணீர் கசிந்தது ." என்ன மொழி இப்போ உன்னோட நிலைமை எப்படி இருக்கு . உன்னோட ஆளும் ஃப்ரண்டும் அடிச்சு என்ன வெளிய அனுப்பிட்டா உன்ன நெருங்க விடாம பண்ணிட முடியுமா சொல்லு ‌ . அதான் விஷ்வாவ பழி வாங்க உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன் " என்றான் குரோதத்தில்.....நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க , " இந்த அமைதி கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு . இந்த கல்யாணத்த நிறுத்த கொஞ்சம் கூட ட்ரை பண்ணாத சரியா . அப்புறம் இந்த போட்டோ எல்லாரோட போன்க்கும் போகும் பாத்துக்கோ " என்று சிரித்த முகமாக கூறினான்.நிலா அதனை கண்டு வெளிறி போய் நின்றாள். அவளின் கடந்த காலம் அவள் முன் ஆட நிலாவுக்கு கண்ணீர் சுரந்தது.அந்த புகைப்படம் நிலாவை வழுக்கட்டாயமாக முத்தமிட்ட போது எடுக்கப்பட்டது....அவளின் தைரியம் அந்த நொடியிலே பறந்து காற்றோடு காற்றாக சென்றது.அவளின் கண்ணீர் இவனை அதிக அளவில் சந்தோஷத்தை தொடுக்க நிலாவின் அறையை விட்டு வெளியே வந்து " சீக்கிரமா கல்யாணத்துக்கு நாளை பாருங்க " என்றான். அவன் பின்னே நிலாவும் அமைதியாக தலை கவிழ்ந்து நிற்க , பெரியவர்களோ வெட்கம் என்ன நினைத்து சந்தோஷப்பட்டனர்.ஒரு வாரத்தில் நிச்சியமும் அடுத்த வந்த வாரத்தில் கல்யாணம் என்று நேரத்தை கூறித்து விடை பெற்றனர்.நித்திலா கூறியது போலவே அவளின் வயிற்றில் விஷ்வா குழந்தை வளரதுக்கு ஆதாரமாக டிஎன்ஏ ரிப்போர்ட் காட்டிட , அனைவரும் செயலற்று இருந்து விட்டனர்.இதனை அறிந்த விஷ்வா சக்தி என இருவரும் அதிர்ச்சியின் எல்லைக்கே செல்ல , விஷ்வாவை பேச கூட அவர்கள் வாய்ப்பு அளிக்காமல் நிச்சியத்துக்கு ஏற்பாடு செய்தனர்.விஷ்வாவும் சக்தியும் செய்வதறியாது இருக்க , முதலில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளி வந்தது விஷ்வா தான். இதில் இருந்து தப்பிப்பதற்கான வேலையை ஆரம்பிக்க தொடங்கினான். அவனுடன் சக்தி உடன் இருந்தான்.மணியும் இசையும் எவ்வளவு அறிவுரை கூறியும் நிலா இந்த கல்யாணத்தை நிறுத்த சம்மதிக்க வில்லை.இதோ இன்று நிச்சியத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி வந்து விட்டனர்.அடுத்தநாள் நிச்சயம் என்ற நிலையில் அதற்கான வேலைகள் வேகமாக நடக்க அப்போது இசை சக்தியுடன் வந்து பைக்கில் இறங்கியதை பார்த்த கற்பகம் கோபம் கொண்டு அவளை அடிக்க கை ஓங்க லாவாக வந்து நிலா தடுத்து நிறுத்தினாள்." இப்போ எதுக்கு தேவை இல்லாம இசைய அடிக்க வரீங்க " என்று கோபமாக கேட்க" அவ என் பொண்ணு நான் அடிப்பேன் இல்ல கொல்லுவேன் அத கேக்குற உரிமை உனக்கு இல்ல " என்று அவரும் சீர" அவ எனக்கு தங்கச்சி நான் கேப்பேன். சொல்லுங்க இப்போ எதுக்கு நீங்க அவள அடிக்க வந்தீங்க " என்று குரல் உயர்த்தி மிரட்டிடஇவளின் குரல் உயர்வே கற்பகத்தை திகைக்க வைத்து பதில் சொல்ல வைத்தது." எவன் கூடயோ வந்து பைக்ல இறங்குவா அத பாத்துட்டு நான் சும்மா இருக்கனுமா " என்று கத்த" அம்மா அது சக்தி என்னோட வருங்கால புருஷன். அவன பாத்து நீங்க அவன் இவன்னு சொல்றத என்னால ஏத்துக்க முடியாது " என்று கோப பட" என்னடி சொன்ன " என்று ஓங்கி அவள் கண்ணத்தில் அறைந்தவர் " உனக்காக எதிர் வீட்டு பையன் விஷ்வா தம்பிய தான் உனக்கு நான் மாப்பிள்ளையா பார்த்து வச்சிருக்கேன் .நீ ஏதோ ஒரு பையன கூட்டிட்டு வந்து இப்படி சொல்லிட்டு இருக்க " என்று கோபத்தில் மனசில் உள்ளதை சொல்ல நிலா அதிர்ந்து நின்றாள்." என்னது விஷ்வா மாமாவா அவருக்கு நாளைக்கு நிச்சயம் அம்மா அதுவும் இல்லாம சக்தியோட அண்ணா தான் விஷ்வா. நான் மத்தவுங்க மாதிரி லாம் கிடையாது கைக்கு கிடைச்ச பொக்கிஷத்த விட்டுட்டு சாக்கடைய தேடி போக " என்று ஓரப்பார்வையில் நிலாவை பார்த்தவாறே கூற நிலா தலை கவிழ்ந்து கொண்டாள்.இதனை கேட்ட இரு செய்திகளில் ஒரு செய்தியில் அதிர்ச்சியாக இருந்தாலும் விஷ்வாவின் தம்பி என்பது சந்தோஷமாக இருந்தது.அதன் பின் கற்பகம் அமைதியாக சென்று விட்டார். எப்படியோ தான் போட்ட கணக்கு தப்ப வில்லை என்று பெருமிதம் கொண்டு சென்றார்.அடுத்தநாள் ஜெக ஜோதியாக விஷ்வா நித்திலா நிச்சயம் சிறப்பாக நடைபெற இருந்தது.விஷ்வாவின் வீட்டிலே நிச்சயம் நடத்த நியமித்து சொந்த பந்தங்கள் எல்லாம் கூடத் தொடங்கி இருந்தது.விஷ்வா அமைதியாக இருக்க சக்தி தான் பதற்றமாக இருக்க , விஷ்வா தான் அவனை சமாதான படுத்தி அமைதி படுத்தினான்.நிச்சயம் ஆரம்பிக்கும் நேரம் வரவே ஐயர் இரு குடும்பத்தையும் வரவழைத்தார்.இரு குடும்பங்களும் சம்பிரதாய படி அமர்ந்திருக்க , நித்தியும் விஷ்வாவும் இரு வேறு சோஃபாவில் அமர்ந்திருந்தனர்.நித்தி தன் வயிற்றில் கை வைத்து " பாப்பா நீ கவல படாம இரு நீ பொறக்குதுக்குள்ள நானும் அப்பாவும் ஒன்னு சேர்ந்திருப்போம் "என்று பிறக்காத குழந்தையிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.அதனை கண்ட விஷ்வாவிற்கு புன்னகையே வரவேற்றது.ஐயர் மந்திரம் ஓதி பஞ்சாங்கம் பார்த்து கல்யாண தேதியை குறித்து சொன்னார்.அதன்பின் இரு குடும்பத்தார்களும் நிச்சய தட்டை மாற்றிக்கொள்ள செல்லும் போது , சக்தி விஷ்வா வை பார்த்து டன் என்ன கையாட்ட " நிறுத்துங்க " என்றான்." என்னடா நீ இப்படி அபசகுணமா நிறுத்துன்னு சொல்ற " என்று ராஜசேகர் விஷ்வாவை திட்டி ," நீ கொடு மா மஞ்சரி " என்க சந்தோஷத்துடன் மஞ்சரி தட்டை மாத்த முற்பட " போதும் எல்லாத்தையும் நிறுத்துங்க .இனி எந்த ஒரு விஷேசமும் இல்ல " என்றான் கறாராகஅனைவரும் அவனை அதிர்ச்சியோடு நோக்க , மஞ்சரி தான் " ஏன் விஷ்வா இப்படி சொல்ற அப்போ என் பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகுறது " என்று கவலையோடு வினவ" உங்க பொண்ணோட வாழ்க்கைக்கு நான் எப்படி பொறுப்பு எடுத்துக்க முடியும் சொல்லுங்க " என்றான் சாதாரணமாக.." மாமா நீங்க என்ன பேசுறீங்க அப்ப நம்ம பாப்பாவோட நிலைமை என்ன ஆகுறது " என்றே கண் கலங்க கேட்டாள் நித்திலா." எது நம்ம பாப்பா உன்னோட வயித்துல ஒரு புழு பூச்சி கூட இல்ல இதுல பாப்பா வேறையா " என்று சர்வ சாதாரணமாக உண்மையை போட்டு உடைக்கதன் குட்டை வெளிபட்ட நிலையில் பெண்களின் வெப்பனான கண்ணீரை பயன் படுத்தினாள் நித்திலா." இப்படி கண்ணீர் விட்டா நீ சொன்னது எல்லாம் உண்மையாகிடுமா " என்று பொறுமை இழந்து விஷ்வா கூற" இல்ல நான் சொன்னது உண்மை தான் அதுக்கான ரிப்போர்ட்ஸ் கூட இருக்கு .இது பொய்ன்னு சொல்ல உங்க கிட்ட என்ன ஆதாரம் இருக்கு " என்றே கோபத்துடன் கேட்பது போல் கேட்க" ஆதாரம் இல்லாமல் யாராவது இவ்வளவு தூரம் பேசு வாங்களா சொல்லு .என்கிட்ட ஆதாரம் இருக்க போய் தான் நான் பேசுறேன் " என்றான் துலைத் தெறிந்த புன்னகையை‌ தவிழ விட்ட படி...இதனை கேட்ட நித்திலாவுக்கு வேர்வை துளிகள் கொட்ட , சக்தி நித்தியின் அருகே வந்து இந்தா கர்சீப் துடைச்சிக்கோ நான் போய் உனக்கு எதிரான ஆதாரத்த கொண்டு வரேன் " என்று சென்று விட்டான்.சக்தி திரும்பி வரும்போது யாரோ ஒருவனுடன் வருவதை கண்ட பெரியவர்கள் என்ன நடக்கிறது என அமைதியாக பார்வை இட்டனர்.நித்தியின் அருகில் வந்தவன் " மனிச்சிடுங்க மா இந்த தம்பி என்னோட குடும்பத்தையே கடத்தி வச்சி உண்மைய சொல்ல சொல்லி கேட்டு மிரட்டுனாங்க மா அதுனால எல்லா உண்மையையும் சொல்லிட்டேன் " என்று காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினான்." அப்படி என்ன உண்மைய சொன்ன " என்று ராஜசேகர் கேட்க" அது வந்து ஐயா இந்த அம்மா ஒரு நாள் என்னோட லேப்க்கு வந்து என்னோட ஸ்பேர்ம் டெஸ்ட் எடுத்து அத விஷ்வாகின்ற ஒருத்தவுங்க தான் அப்பான்னு போட்டு ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ண சொல்லி பணம் கொடுத்தாங்க. நானும் பணத்துக்கு ஆசப்பட்டு இதுக்கு ஒத்து கிட்டு செஞ்சி கொடுத்தேன் " என்றான்.ராஜசேகர் நித்திலாவிடம் வந்து அவள் கண்ணம் பழுக்குமாறு அறைந்தார்." நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைச்சி கூட பாக்கல நித்தி " என்று கவலை தேய்ந்த குரலில் சொல்லிவிட்டு செல்ல" அண்ணா.!! அப்போ என் பொண்ணோட வாழ்க்கை " என்று கேள்வி குறியாக கேட்க" கவல படாத மா இந்த நிச்சியம் நடக்கும்" என்க" இல்ல இது நடக்க கூடாது " என்று இருவரது சத்தம் வெளிவந்தது.ஒன்று விஷ்வா விடம் மற்றொன்று சாவித்திரியிடமிருந்து வந்தது.இதனை கேட்ட ராஜசேகர் அதிர்ச்சி அடைந்து " ஏன் நடக்க கூடாது " என்றே கேள்வியாய் பார்க்க.," இப்போ வரைக்கும் நீங்க உங்க தங்கச்சி உங்க தங்கச்சி பொண்ணு மேல இருந்த பாசத்துல என்னவேன்னாலும் பண்ணுவீங்க . அதே மாதிரி தான் நானும் எனக்கு தாய் பாசம் அதிகம் அதுனால இனி அவன் வாழ்க்கையில நீங்க தள்ளியே இருங்க " என்று அதிரடி பதில் தந்தவர் விஷ்வாவை பார்த்தார்." டேய் விஷ்வா.!!! என்னோட மருக நீ காதலிக்கிற பொண்ணு தான் டா . போ போய் அவள கூட்டிட்டு வா. உனக்கு இந்த அம்மா துணை இருப்பேன் டா " என்று சவாலாய் மஞ்சரியை கண்டு சாவித்திரி தன் மகனிடம் கூறினார்." அம்மா " என்று அழுகுவது போல் அழைக்க" போடா போ " என்று அவனை அனுப்பி வைத்தார்.தன் அன்னையை அணைத்தவன் துள்ளலுடனும் காதலுடனும் நிலாவின் நிச்சயத்தை நிறுத்த புறப்பட்டான்.ஆனால் அங்கு நிலாவின் கையில் நிச்சிய மோதிரத்தை அணிவித்தான் அதிரூபன்.சந்தோஷமாக புறப்பட விஷ்வாவின் மேல் லாரி மோதியதில் அவனின் கார் நொறுங்கியது...._தொடரும்....


 
செம பதிவு. பக்கி பொய் சொல்லி விஷ்வா கல்யாணம் பண்ணிக்கலாம் என்று நினைத்துவிட்டார்கள்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN