நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...23(prefinal)

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
23.காற்றுக்கென்ன வேலி


இங்கே நிலா உயிரற்ற உருவமாய் அதிரூபன் மாட்டி விட்ட மோதிரத்தையே வெறித்து நோக்கிக் கொண்டு இருந்தாள் என்றால் அங்கே விஷ்வா கார் நொறுங்கி போய் உயிருக்காக போராடிட்டு கொண்டு இருந்தான்.


அது இரவு நேரம் என்பதால் அந்த சாலை வெறிச்சோடி காணப்பட்டது.


இங்கே சக்தி இசையை அழைத்திருந்தான். முதல் ரிங்கிலே எடுத்தவள் " தரன் ப்ளிஸ் என்னை எங்கேயாவது கூட்டிட்டு பொய்டு டா அக்காவோட வாழ்க்கை நாசமா போறத பாத்துட்டு சும்மா இருக்க முடிய மாட்டேங்கிது " என்று ஜோடியாக நின்றிருந்த நிலாவையும் அதிரூபனையும் பார்க்க முடியாமல் பேசினாள்.


சக்தியின் மனதில் " அண்ணா இன்னும் அங்க போய் சேரல போலயே " என்று நினைத்தவன் " ஹே இனி மா அண்ணா என்னோட அண்ணிய பாக்க தான் ஓடோடி வந்துட்டு இருக்கான் .நீ கவல படாத செல்லம் கண்டிப்பா அண்ணா அந்த கல்யாணத்த நிறுத்திடுவான் " என்று அவன் நிலை அறியாமல் வாக்களித்து கொண்டு இருந்தான் சக்திதரன்.


பின்னர் இருவரும் சிறிதுநேரம் பேசிவிட்டு மொபைலை அனைத்து விட்டனர்.


வந்த சில சொந்தங்கள் கூட சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்ப தயாராகினர்.


இசைக்கு தான் சக்தியின் மீது கோபமாக வந்தது விஷ்வா வராததால்...


இந்தமுறை அழைப்பது இசையின் முறையாயிற்று.


சில வினாடியிலே எடுத்த சக்தி , " சொல்லு டி ஆங்கிரி பேர்ட் அங்க என்னோட அண்ணாவோட பர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கு எல்லாம் ஸ்மூத்தா போகுதா. எப்படி ஸ்மூத்தா தான் போகும்.ஏன்னா என்னோட அண்ணணுக்கு தான் கோப பட தெரியாதே " என்று சக்தி அவன் போக்கில் பேச எந்த நேரத்தில் இசைக்கு இவன் ஆங்கிரி பேர்ட் என்று பெயர் வைத்தானோ தெரியல .ஆனால் இப்போது மூக்கு புடைக்க கோபத்தோடு ஆப்பிள் பழ‌ நிறத்தில் காணப்பட்டாள்.


இசை எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை கண்டு, " ஹே இனி மா பேசுங்க நீங்க பேசப் போற சொல்லுக்காக தான் காத்திருக்கேன்" என்று எரியும் எண்ணையில் நெய் ஊற்றுவது போல் கோபத்தில் இருந்த இசையை மேலும் கோப படுத்தினான்.


" சாப்பாட்டுக்காக வந்ததுங்க கூட சாப்பிட்டு பேக் பண்ணிட்டு பொய்டுச்சி ஆனா இன்னும் விஷ்வா மாமா இங்க வரல . எதுக்கு உனக்கு இந்த பொய் சொல்லு உண்மையிலேயே விஷ்வா மாமா கிளம்பி இருந்தா எப்பவோ இங்க வந்திருக்கலாம். ஆனா இன்னும் மாமா இங்க வந்தபாடு‌ இல்ல .என்ன சமாதானம் படுத்த உனக்கு இந்த பொய் தான் கிடைச்சிதா டா " என்று இசை பொறிந்து தள்ள


" இல்ல டி இனி அண்ணா கிளம்பியே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆச்சி. ஆனா ஏன் அங்க இன்னும் வரலைன்னு தான் தெரியல இரு நான் போய் அண்ணா எங்கன்னு பாத்துட்டு வரேன் " என்று சொல்லி மொபைலை அணைத்தவன் வேகமாக வண்டியை எடுத்துச் தேட சென்றான்.


இருள் படர்ந்த சாலையில் காரை வேகமாக ஒட்டிக் கொண்டு தேடிய படியே வந்த சக்தி , அங்கே விஷ்வாவின் கார் சாலை ஓரத்தில் பாதி நொறுங்கி குப்புற கிடப்பதை கண்ட சக்தி " அண்ணா " என்ற அலறலுடன் காரை நிறுத்தி வேகமாக சென்றான்.


வேகமாக கார் கதவை திறந்து விஷ்வாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.


தீவிர சிகிச்சை பிரிவில் விஷ்வாவுக்கு சிகிச்சைகள் தொடங்க , சக்தி தன் வீட்டாருக்கு விஷ்வாவின் நிலையை சொல்லி வர செய்தான்.


அவர்களும் பத்தே நிமிடத்தில் அங்கே வந்து சேர்ந்தனர்.


தீவிர சிகிச்சையில் இருந்த விஷ்வாவிற்கு கிட்ட தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆப்ரேஷன் நடக்க தலையில் பலமாக மூலைக்கு செல்லும் நிறம்பு பாதிக்க பட்டு விஷ்வா கோமா செல்லும் நிலையில் இருந்தான்.


ஐசியூவில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்ற பட்டிருக்க அவனை சந்திக்க யாருக்கும் அனுமதி கொடுக்காமல் இருந்தது.


வெளியே அழுத படி சாவித்திரி சக்தி தோளில் சாய்ந்திருக்க , சக்தி ஆறுதல் படுத்தினான்.


விடியலின் போது விஷ்வா மொழி மொழி என முணுங்கல் இட்ட படியே மயக்கத்தில் இருந்து வெளி பட முடியாமல் இருந்தான் விஷ்வா.


இதனை கண்ட செவிலியர் வெளியே வந்து , " இங்க யாரு மொழி அவுங்க மட்டும் உள்ள வந்து பாருங்க .அப்போ தான் மயக்கத்துல இருந்து வெளிய வர முடியும் இல்லன்னா கோமாக்கு போகுற வாய்ப்பு கூட இருக்கு " என்று விட்டு மருத்துவரை காணச் சென்றார்.


" பாருங்க நல்லா பாருங்க இது தான ஆச பட்டிங்க உங்க பையன உயிரோட சாகடிக்க நினைச்சிங்க .ஆனா அவன் உண்மையில‌ உயிர விட்டுருவான் போலயே . அன்னைக்கு நீங்க யாழ் கிட்ட அப்படி கேவலமா பேசாமா இருந்துருந்தீங்கன்னா என்னோட பையனுக்கு இந்த நிலைமை வந்துருக்காது. அதே மாதிரி என்னோட மருகளான யாழுக்கும் அப்படி ஒரு நிலைமை வந்துருக்காது. உங்களுக்கு என்னங்க தெரியும் உங்க தங்கச்சி தங்கச்சி பொண்ண தவிர சொல்லுங்க பாப்போம் " என்று கோபத்தின் உச்சியில் சாவித்திரி ராஜசேகரின் சட்டையை பிடித்து கத்த


ராஜசேகர் மௌனமாகவே தலை குனிந்து நின்றார்.


" அம்மா அப்பா சட்டைய விடுங்க மா " என்று சக்தி மன்றாட


" நீ எதுவும் பேசாத டா இன்னைக்கு நான் ஒரு அம்மாவா இருந்து பேசுறேன் .இன்னவரைக்கு ஒரு மனைவியா இருந்து இவரு செய்யுற எல்லாத்துக்கும் அமைதியா இருந்தேன். ஆனா அப்படி இருக்க என்ன அவசியம் இருக்கு சொல்லு சக்தி " என்றவர் தன் கணவனின் புறம் திரும்பி , " அன்னைக்கு உண்மையிலேயே என்ன நடந்துச்சின்னு தெரியாமா உங்களுக்கு நீங்க பாட்டுக்கு எதுவுமே தெரியாத ஒரு பொண்ண அந்த அளவுக்கு கேவலமா திட்டுறீங்க இதுவே இதோ அங்க நிக்கிறாளே உங்க பாசமான தங்கச்சி பொண்ணு அவ அந்த இடத்துல இருந்தா அப்படி தான் பேசுவீங்களா .?? உங்க குடும்பத்து பொண்ணுக்குன்னா ஒரு ஞாயம் அதுவே மத்த குடும்பத்து பொண்ணுங்கன்னா ஒரு ஞாயமா சொல்லுங்க சொல்லுங்க " என்று அவரின் சட்டை பிடித்த படியே குழுக்கியவர் ,


" நீங்க இந்த ஒன்பது வருஷத்துல நான் எத்தனையோ தடவை விஷ்வாவ இங்க வர சொல்லி கேட்டு பாத்துருக்கேன் கெஞ்சி பாத்துருக்கேன். எப்போ அவனுக்கு நீங்க கல்யாணம் பண்ணிகலாம்னு மஞ்சரி கிட்ட பேசுனிங்களோ அப்பதான் அவன் ஊருக்கு வர சம்மதிச்சான். ஆனா அவன் எதுக்காக இங்க வந்தான்னு தெரியுமா தெரியாதா வயசுல பண்ண தப்புக்கு யாழ்கிட்ட மன்னிப்பு கேட்டு அவனோட காதல சொல்லி அவளையே கை பிடிக்க தான் இங்க வந்தான். நீங்க என்கிட்ட இத பத்தி பேசுனதுக்கப்புறம் நான் விஷ்வா கிட்ட பேசும் போது தான் எனக்கு இது தெரிஞ்சது. உங்களால.! உங்களால மட்டுமே அவன் இத்தன வருஷமா செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிச்சான். இதோ இங்க நிக்கிறானே உங்க இரண்டாவது பையன் சக்தி . அவன் யாழ் கேட்டு எவ்வளவு நாள் அழுதிருக்கிறான் தெரியுமா..?? அவனோட சுட்டி தனம் அதோடு முடிஞ்சு போச்சி .நாம சொன்னத மட்டுமே செய்ய தொடங்கி இதோ இப்போ உங்க கம்பெனிக்கு வந்துட்டு இருக்கான் .நீங்க கெடுத்தது ஒரு அழகான நட்ப அது மட்டும் இல்லாமல் என்னோட யாழ் மனச உயிரோட கொன்னுருக்கீங்க" என்றார் இதுநாள் வரை மனத்துக்குள் வைத்திருந்த அனைத்தையும் இறக்கி வைத்து கண்ணீர் விட்டு அழுதார்.


" போங்க போய் என் பையனோட உயிர கூட்டிட்டு வாங்க போங்க " என்று கத்தினார்.


" அம்மா " என்று சக்தி ஓடிச் சென்று சமாதானம் செய்ய தொடங்கினான்.


ராஜசேகர் திகைத்து போய் நின்றார் அவரின் மனைவியின் பேச்சில்.


" நான் எல்லாத்தையும் சரியா பண்ணிட்டு இருக்கேன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். என்னோட தங்கச்சி மேல வச்சிருந்த பாசம் தான் என்னைய அத தவிர்த்து பாக்க விடல என்ன மன்னிச்சிடு மா நானே போய் அந்த பொண்ண கூட்டிட்டு வரேன் " என்று சொல்லி கிளம்பி சென்றார்.


விடியலிற்கு சிறிது நேரங்களே இருக்க ஒருவாரத்தில் கல்யாணம் இருக்கு என்பதால் பெரியவர்கள் சீக்கிரமே எழுந்திருந்தனர்.


வாசலை திறக்க வந்த கற்பகம் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு ," யாரு டா அது இந்த நேரத்துல காலிங் பெல் அடிக்கிறது " என்று எண்ணியவர் கதவை திறக்க அங்கே 50 முதல் 55 வயதுக்குள் இருக்கும் நபர் ஒருவர் நின்றிருந்தார்.


" யாருங்க வேணும் உங்களுக்கு " என்று கற்பகம் சிறிது காட்டமாகவே கேட்க


" யாழ்மொழி இருக்காங்களா " என்று கேட்க


" இருக்கா அவள எதுக்கு நீங்க பாக்கனும் " என்று கேள்வியாக கேட்க


" ப்ளிஸ் அந்த பொண்ண கொஞ்சம் வர சொல்லுங்க நான் அந்த பொண்ணு கிட்ட பேசணும் " என்றார் ஆழ்ந்த குரலில் சிறு நடுக்கத்துடனே...


அதற்குள் இரவில் உறங்காமல் அழுத்துக் கொண்டே இருந்த நிலா சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்து திகைத்து போய் நின்றாள்.


யாழை கண்ட ராஜசேகர் கற்பகத்தை மதியாது வேகமாக உள்ளே சென்று யாழ் முன் நின்றார்.


அவர் நிலையை கண்ட நிலா ஏதோ தவறாக உணர்த்த அமைதியாக அவரை பார்த்த படி நின்றாள். அவர் பேசிய வார்த்தைகள் இன்றும் இப்போது கேட்பது போல் இருந்தது நிலாவுக்கு.


அமைதியாக நின்றவர் " என்ன மன்னிச்சிடு மா " என்று அவளின் காலில் விழுந்து விட்டார். பதறிய நிலா இரண்டடி நகர்ந்து " எழுந்துறீங்க அங்கில் " என்று பட படத்தாள்.


இதனை அனைத்தையும் வாய் பிளந்த படி பார்த்தார் கற்பகம்.


" நான் பன்ன தப்புக்கு என்னோட மகன தண்டிச்சிடாத மா . அவன் உயிர காப்பாத்து மா " என்று அவள் முன் பிச்சை கேட்டு நின்றார்.


" என்ன சொல்றீங்க அங்கில் உங்க பையனுக்கு என்ன ஆச்சி " என்று கவலையுடன் சேர்ந்து படபடப்புடன் கேட்டாள் நிலா.


நேத்து நடந்ததை சுருக்கமாக கூறியவர் ," நேத்து உன்ன பாக்க தான் மா ஓடி வந்தான் .வரும் போது அவனுக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சி மா இப்போ அவன் உன்னோட பேர மட்டும் தான் சொல்லிட்டு இருக்கான். உன்னால மட்டும் தான் அவன காப்பாத்த முடியும். அவன எங்களுக்கு உயிரோட கொடு மா " என்று அவளின் முன் யாசித்து நின்றார்.


அவர் சொன்ன அடுத்த நொடியே " ஒரு நிமிஷம் அங்கில் " என்றவள் உள்ளே சென்று உடை மாற்றி விட்டு வந்தவள் கற்பகம் தடுத்தும் அதனை கண்டுக்காத படி அழுகையுடனே அவருடன் சென்றாள்.


மருத்துவமனை வந்தவள் நித்தி மஞ்சரி சாவித்திரி சக்தியை கடந்து வேகமாக வந்தவள் ஐசியூவின் முன் நின்றாள்.


ஐசியூவை திறந்து கொண்டு உள்ளே சென்றவளை கண்ட செவிலியர் " நீங்க யாரு எப்படி உள்ள வந்தீங்க " என்று கேட்க


" மொழி " என்று மட்டும் கூறியவள் தலையில் கட்டுடன் பல ஒயர்களை உடம்பில் ஒட்டிய படி ஆக்ஸிஜன் உதவியால் மூச்சு விட்டுக்கொண்டிருந்த விஷ்வாவை கண்டதும் நிலாவுக்கு இதயம் கனகனத்தது.


செவிலியர் வெளியே வந்து விட நிலா அவனிடம் சென்று கண்ணீருடன் பல வருஷம் கழித்து " தரு " என்று அழைத்தாள்.


அந்த ஒற்றை அழைப்பிற்கே விஷ்வாவின் கண்களில் இருந்து ஒரு சொட்டு விழி நீர் வெளியே எட்டி பார்த்தது.


" ஏன் தரு நீ எனக்காக எனக்காகன்னு ஒவ்வொன்னும் பண்ணுற சொல்லு . உனக்கு நான் தகுதியான பொண்ணு இல்ல தரு. உனக்கு ஏத்த பொண்ணு நித்திலா மட்டும் தான் "என்றவள் தன் மனதில் உள்ளதை வெளிபடுத்த ஆரம்பித்தாள்.


"எனக்கு நீ அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டதுல எந்த ஒரு தப்பும் தெரியல தரு.‌ உண்மையாவே அன்னைக்கு நான் அத அனுபவிக்க செஞ்சேன். அப்புறம் நீ உள்ள போனதும் உங்க அப்பா என்கிட்ட அப்படி பேசிட்டு போனதுல இருந்து , எனக்கே நான் ஒரு கெட்ட பொண்ணுன்னு தோண வச்சிடுச்சி. அதுனால தான் உன்ன விட்டு விலக ஆரம்பிச்சேன். ஆனாலும் அது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்துச்சி. நீ பாக்காத நேரத்துல உன்ன வந்து நான் எப்போதும் பாத்துட்டு போறது வழக்கமா வச்சிருந்தேன். நீ என்ன பாத்ததும் முகம் சுருக்குறத பாக்கும்போது எல்லாம் உங்க அப்பா சொன்னது தான் ஞாபகத்துக்கு வரும். அதுனால தான் சக்திய கூட அவாயிட் பண்ணேன் " என்றவளின் கண்களில் கண்ணீர் சுரந்தது.


" ஆனா நீ என்ன விட்டுட்டு போவன்னு நான் எதிர் பார்க்கவே இல்ல தரு. ஆனா நீ என்ன விட்டு போன என்னோட மனசு உன்ன மட்டும் தான் தேடுச்சி தரு. நான் என்ன பண்றது சொல்லு நீ இல்லன்னு தெரிஞ்சும் நான் உன்னோட க்ளால்க்கு போய் நின்னு நீ உக்காந்து இருந்த இடத்தை பாத்துட்டு வருவேன். உன்ன பத்தியே நினைச்சிட்டு இருந்ததுல நான் படிக்கிறதையே மறந்துட்டேன் தரு. அப்போ தான் அம்மா ஏதேதோ பூஜைன்னு சொல்லி என்ன கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க. ஆனா எனக்கு என்னோட பிரச்சினை படிப்பு இல்லை நீன்னு அவுங்களுக்கு தெரியாம போச்சே தரு. திரும்பவும் அதே சாமியை வச்சி பூஜை பண்ணும் போது தான் தரு அந்த சாமி என்ன கை வைக்க கூடாத இடத்துல எல்லாம் கை வச்சி பூஜை பண்ணாரு . நான் அங்கேயே செத்து போய்டலாம்னு தான் நினைச்சேன். அப்பவும் உன்னோட நினைப்பும் அம்மாவோட நினைப்பும் தான் என்ன சாக விடாம பண்ணுச்சி. ஆனா அந்த நாள் மட்டும் என்னோட வாழ்க்கையில வராம இருந்திருந்தா இப்படி ஒரு நிலைமை நமக்கு உருவாயிருக்காது தரு . நான் எப்படி தரு அத பத்தி உன்கிட்ட சொல்ல முடியும் சொல்லு " என்று கதறியவள் ஒரு முடிவாய் அதனையும் கூறத் தொடங்கினாள்.


" திரும்பவும் அந்த சாமி எங்க வீட்டுக்கு வந்தாரு தரு. அப்போ எனக்கு காய்ச்சல் வேற இருந்ததுனால என்கிட்ட சுத்தாம பலம் இல்லாம இருந்துச்சி . நான் கூட அம்மாவ பாக்க தான் வந்துருப்பாங்கன்னு நினைச்சேன். அவுங்க வீட்ல இல்லதும் பொய்டுவாங்கன்னு நினைச்சேன். ஆனா அவன் அவன் " என்று தேமிபியவள் " ஆனா அவன் என்னோட பெண்மைய பறிக்க நினைச்சான் தரு. நான் எவ்வளவோ தடுத்து பார்த்தேன் ஆனாலும் முடியல அவன் அவன் என்னோட லிப்ல கிஸ் பண்ணி என்ன அசுத்தம் பண்ணிட்டான் தரு. " என்று அழுதாள்.


நிலா அழுகவும் அவளின் அழுகை தாங்காது விஷ்வாவும் கண்ணீர் சிந்தினான்.


" நீ ரொம்ப நல்லவன் தரு . உன்னோட வாழ்க்கையில என்ன மாதிரி அசுத்தமான பொண்ணு உனக்கு வேணாம் தரு உனக்கான நல்ல பொண்ணை தேர்ந்தெடு தரு ப்ளிஸ். எனக்காகவாது நீ கண்ணு முளிச்சிடு தரு " என்று சொல்லி அவன் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டாள்.


அவள் கூறிய அடுத்த நொடியே விஷ்வா மெதுவாக மயக்கத்தில் இருந்து கண் விழித்தான்.


அவன் விழித்தததை கண்ட நிலா சந்தோஷத்துடனும் கண்ணீருடனும் வெளியே வந்து விஷ்வா கண் முளித்தததை சொல்லி அனைவரையும் உள்ளே அனுப்பி வைத்தாள்.


சக்தி மட்டும் அவள் கையை பிடித்து கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்.


உள்ளே வந்தாலும் அவனது கண்ணில் படாதவாறு நின்று கொள்ள சக்தி முன்னாடி சென்ற கேப்பில் விஷ்வாவை ஒரு முறை பார்த்து விட்டு வெளியேறினாள்.


அவள் வெளியேறியதை கண்டு கொண்டான் விஷ்வா. தன் வாழ்விலிருந்தும் வெளியேறிதை போல் உணர்ந்தான்.


அடுத்து வந்த இரண்டு நாளிலே விஷ்வா வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான்.


இங்கே நிலாவின் வீட்டில் கல்யாணம் வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடகத் தொடங்கியது. புடவை எடுப்பது தாலி வாங்குவது பத்திரிகை அடிப்பது பந்தக்கால் நடுவது என்ன நாட்கள் வேகமாக சென்றது.


ஒரு நாள் மட்டுமே இருந்தது நிலா அதிரூபன் திருமணத்திற்கு...


விஷ்வா அமைதியாக அவுங்க வீட்டில் இருந்த கார்டனில் இருந்தான். அவன் கண்ணீர் சிந்த சிந்த மழை பொழிந்து அதை மற்றவர்களுக்கு காட்டாமல் மறைத்தது..


விழியே விழியே பேசும் விழியே


ஒரு பார்வைப் பார்த்தாய்


மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே


நான் மண்ணின் மேலே


இனிமே இனிமே நீதான் துணையே.......


மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியேத்தனியே நனைந்தேன் மழையே
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே


மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே


ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஓ..............
உல்லா ஹ உல்லா ஹ ஓ..............


சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்
செல்லாமல் செல்லாமல் செல்வா...ய்......


மை மை மழையே


உன் ஆடைப்பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புண்ணகையாய் பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் மொழி
இலைத்துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழீகிறது
போதும் போ நீப்போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீப்போ என் உள்ளம் உணர்கிறது


விழியே விழியே பேசும் விழியேஇவனுக்கு இணங்களாக அந்த பாடல் அவன் வீட்டு டிவியில் ஓடிக்கொண்டு இருந்தது..


அவளின் விருப்பப்படியே அவள் வாழ்வை விட்டு விலக நினைத்து அதற்கான வேலையை தொடங்கினான்.


அதே ஒரு நாள் கழித்து விஷ்வா மீண்டும் ஜெர்மன் செல்வதாக முடிவெடுத்து டிக்கெட் புக் செய்தான் அனைவரின் எதிர்ப்பையும் மீறி......


இருவரின் வாழ்விலும் வரே கூடாது என்று எண்ணிய அந்த நாள் கோலா கோலமாக விடிந்தது.


மணமேடையில் ஐயர் மந்திரங்கள் ஓத அதிரூபன் அந்த மந்திரத்தை அப்படியே ஒப்பித்து கொண்டு இருந்தான் . உள்ளுக்குள் இருந்த பயத்தை அடக்கிக் கொண்டு...


இவனின் பயத்தை அறியாத அனைவரும் மகிழ்ச்சியாக திருமண நிகழ்வை பார்வையிட்டனர்.


மணப்பெண்ணை அழைத்து வர சொல்ல ,, கூறப் பட்டு புடவையில் தேவதையாக வர வேண்டியவள் ஒட்டு மொத்த சோகத்தையும் குத்தகைக்கு எடுத்தது போல் வந்து அதிரூபன் பக்கத்தில் அமர்ந்தாள்.


விஷ்வா தன் குடும்பத்தை பிறிந்து ஏர்போர்ட் நோக்கி சென்றான்.


இடையில் சக்தியும் இசையும் மாட்டிக் கொண்டு தவிப்புடன் இருந்தனர். விதியின் விளையாட்டில் எதாவது நடந்திட கூடாதா என்று...


அதிரூபனும் நிலாவும் சேர்ந்து மந்திரங்கள் ஓத , இசையிடம் தாலியை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி வரச் சொல்லி அனுப்பி விட அவளும் வேண்டா வெறுப்பாக தாம்புலத்தை வாங்கி அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்தாள்.


பின், அவளுக்கும் சிறிது எடுத்துக் கொண்டு ஐயரிடம் நீட்டினாள்.


இங்கே விஷ்வா போர்டிங் பாஸ் வாங்கி கொண்டு சென்றான்.


ஐயர் பொன்தாலியை அனைவரிடமும் காட்டி அதிரூபன் கையில் கொடுத்து கெட்டிமேளம் என்று சொல்ல அதிரூபன் தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னுள் பாதியாக்கி கொண்டான்.


விஷ்வாவின் ஃப்ளைட்டும் தரையிலிருந்து வானத்தை நோக்கி பறந்தது....

தொடரும்....
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top