நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

காற்றுக்கென்ன வேலி...24(Final)

Ashwathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member24.காற்றுக்கென்ன வேலிஒரு வருடத்துக்கு பின்.. ,,,கோவை விமான நிலையத்திற்கு ஜெர்மனியில் இருந்து வந்த ஃப்ளைட் தரை இறங்கியது.அதில் விஷ்வா ஒரு வருடம் கழித்து இதோ சக்தி மற்றும் இசையின் நிச்சயதார்த்த விழாவிற்கு வருகை தருகிறான். இருக்கின்ற அனைவரையும் தவிர்த்து தனித்து வாழ்ந்து ஒரு வருடத்தை ஓட்டி உள்ளான்.விஷ்வாவின் எண்ணத்தினால் மட்டும் அல்லாமல் எல்லாமுமாக நிலாவே குடியிருந்தாள். அதுவே அவன் அவன் குடும்பத்தை விட்டு பிரிய காரணமாக அமைந்து விட்டது.இதோ விஷ்வா அனைத்து ப்ராசசிங்கையும் முடித்து விட்டு எல்வேட்டர் வழியாக கீழே இறங்கி கொண்டு இருந்தான்.இறங்கி வந்தவன் முதலில் கண்டது ஒரு மாத குழந்தையை தூக்கிக் கொண்டு நின்றிருந்த நிலாவை.நிலாவை கண்டது ஒரு புறம் சந்தோஷம் என்றாலும் மறுபுறம் தன் வாழ்க்கை இனி தனக்கில்லை என்று என்னும் போதே மனம் வலித்தது.நிலாவிற்கு பின்னாடியே அதிரூபன் ஃபோன் பேசிய படியே வந்து கொண்டிருந்தான்.தூரத்தில் வந்த விஷ்வாவை கண்டதுமே நிலா அவனுக்கு கையசைக்க விஷ்வாவும் கையசைத்தான்.நிலா பக்கத்தில் வந்தவன் , " எப்படி இருக்க மிஸஸ் .அதிரூபன் " என்றே வார்த்தைகள் தடுமாறி வந்தது." ஹலோ மிஸ்டர் சாச்சா மிஸஸ் . அதிரூபன் அவுங்க கிடையாது நான் தான். அவுங்க இன்னும் மிஸ். நிலா தான் " என்ற படி மணிமேகலை வந்து கொண்டிருந்தாள்.விஷ்விற்கு அதிர்ச்சி திகைப்பு குழப்பம் சந்தோஷம் என சொல்ல முடியா நிலை அவனுள்.நிலாவை பார்க்க அவளோ தலை கவிழ்ந்து நின்றுக் கொண்டாள்." அப்போ இந்த குழந்தை " என்று திக்கி திணறி மணியிடம் கேட்க" அது எங்களோட காதலுக்கு பிறந்த குழந்தை விஷ்வா " என்றான் அதிரூபன் மணியின் தோளில் கைப்போட்டு .." இங்க என்ன தான் நடக்குது எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்கிது கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா " என்று சொல்ல" அத நாங்க சொல்றோம் மாமா " என்ற படி சக்தியும் இசையும் ஜோடியாக வருகை தந்தனர்." ஆனா இப்போ இல்ல கார்ல் போகும் போது சொல்றோம் .உங்களுக்காக என்னோட நிலா அக்கா காத்திட்டு இருக்கா மாமா " என்று கூறி நிலா விஷ்வாவின் புறம் தள்ளி விட்டாள் இசை." நிலா " என்றவன் அவளை கீழே விழாமல் தாங்கி பிடித்தான்.இருவரின் கண்களும் அதன் இணையை நோக்கியதும் உலகம் மறந்து ஒருவரையொருவர் விழியால் பருகிய படி இருந்தனர்.உன் விழியைப் பார்த்தால்உள்ளம் தடுமாறுதே!இதயம் இடம் மாறுதே!என் விழியும் நிறம் மாறுதே!உன்னைப் பார்த்ததிலிருந்துகரும்பாய் இனிக்கிது உன் நினைவு!கவிதை படிக்கிது என் மனது!நிலாவின் பார்வையில் அத்தனை காதல் மின்னிட்டது. விஷ்வாவிற்கு அத்தனை ஆச்சிரியம் எப்படி இவ்வளவு காதலை மறைத்து வைத்திருந்தாள் என்று...சக்தி அதனை சரியாக படம் பிடித்துக் கொள்ள , இசை மணி இருவரும் கோரசாக " ப்பா என்னா லவ்ஸூ " என்று கத்த சுயநினைவு அடைந்தார்கள் . முதலில் விஷ்வாவே தன்னிலை வந்தவன் நிலாவை நிற்க வைத்து விட்டு , அவளை பார்க்காமல் " சரி வாங்க போலாம் போகும் போது இங்க என்ன நடந்ததுன்னு சொல்லுங்க " என்று விட்டு வேக நடையுடன் வெளியேறினான்.நிலாவுக்கு தான் தன்னை காணாது சென்ற விஷ்வாவை பார்த்த படி கவலையுடன் நின்றாள்." அக்கா வா போகலாம் " என்று இழுத்துக் கொண்டு சென்றாள்.இரண்டு காரில் வந்ததால் நிலா விஷ்வா சக்தி இசை ஒரு காரிலும் மணியின் அழகிய குடும்பம் ஒரு காரிலும் வந்தது." சரி இப்ப சொல்லு சக்தி எப்படி நிலாக்கும் அதிரூபனுக்கும் கல்யாணம் நடக்காம எப்படி அதிரூபனுக்கும் மணிக்கும் கல்யாணம் நடந்துச்சி " என்று கேட்கஒரு காஃபி ஷாப் முன்பு நிறுத்தியவன் , " இறங்கு அண்ணா..! நான் சொல்றேன் " என்று சக்தி காஃபி ஷாப் பிறக்கும் நுழைந்தான்.அவன் பின்னே அனைவரும் செல்ல , விஷ்வா குழப்பத்துடனே காஃபி ஷாப்பிற்குள் நுழைந்தான்.அதிரூபன் விஷ்வாவின் பக்கத்தில் அமர்ந்து அன்று நடந்த அனைத்தையும் கூறத் தொடங்கினான்._______________________பெண்ணை அழைத்து வாங்கோ என்று ஐயர் கூறியதும் நிலா கூறப்புடவையை அணிந்துக் கொண்டு உயிரற்ற உருவமாய் அதிரூபனின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.அவனுக்கு முன்பு மஞ்சரி அமர்ந்திருந்தார் சிரித்த முகத்துடன்..அதிரூபனுக்கு மஞ்சரியை பார்க்க பார்க்க கோபம் ஆத்திரம் என அனைத்தும் வர ஒரு இயலாமையுடன் அமர்ந்திருந்தான் அதிரூபன்.இதற்கிடையில் இசையிடம் கொடுத்து மாங்கல்யத்தை ஆசிர்வாதம் வாங்கி வர சொல்லி அனுப்ப , இசையும் அதை வாங்கி கொண்டு ஆசிர்வாதம் வாங்கி வரச் சென்றாள்.அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்த இசை தானும் சிறிதளவு அரிசியை எடுத்துக் கொண்டு தாம்புலதட்டை ஐயரிடம் நீட்ட , அவரும் அதனை வாங்கிக் கொண்டு" கெட்டி மேளம் கெட்டி மேளம் " என்று சொல்லி தாலியை அதிரூபன் கையில் கொடுத்தார்.அதிரூபன் வலி மிகுந்த மனதுடன் தாலியை வாங்கி கட்ட செல்லும்போது ," நிறுத்துங்க இந்த கல்யாணத்த " என்ற படி நித்திலா வந்தாள்.அனைவரும் திரும்பி பார்க்க ,அதிரூபனின் கைகள் தானாகவே கீழே இறங்கியது . நிலா கண்களில் கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தாள்.மஞ்சரி நித்திலாவின் செய்கையை கண்டு வெகுண்டு எழுந்தவர் அவளை நோக்கி சென்று " என்ன பண்ணிட்டு இருக்க நித்தி எதுக்காக இப்போ கல்யாணத்த நிறுத்த சொன்ன " என்று கோபத்தின் உச்சியில் மூக்கு புடைக்க கேட்க.." ஏன் மா இப்ப கல்யாணத்த நிறுத்தி உங்களோட ப்ளான்ன ஃப்லாப் பண்ணிட்டேனா " என்று எலக்காரமாக கேட்டாள்.நெட்டி சுருங்கி தான் பெற்ற மகளை பார்த்து , " என்ன ப்லான் " என்று எதுவும் அறியாத பெண் போல் கேட்டார்." அது உங்களுக்கும் இதோ மண மேடையில இருக்காரே நீங்க அடிமையா வச்சி நடத்துற அதிரூபனுக்கும் தான் தெரியும் " என்று சாதாரணமாக சொல்லி மஞ்சரியின் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கினாள்." என்ன சொல்ற நீ உனக்கு தெரிஞ்ச பையன் கல்யாணதுக்கு போகனும்னு சொல்லி தான என்ன அனுப்பி வைச்ச. இப்போ வந்து ப்லான் அது இதுன்னு சொல்லிட்டு இருக்க " என்று எச்சில் விழுங்கிய படியே பேசினார் மஞ்சரி." சரி உங்களுக்கு அதிரூபன தெரியாது ஆனா மணிமேகலைய தெரியும் தான " என்று புருவத்தை உயர்த்தி தன் அன்னை எண்ணும் பாராமல் கூட கேள்வி கேட்டாள் நித்திலா." தெரியும் சக்தியோட தோழி " என்றார்."சரி அப்போ அவுங்கள எதுக்கு கடத்துனீங்க" என்று கேட்க அங்கே இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி என்றால் நிலாவுக்கு பேர் அதிர்ச்சி.மணிமேகலையின் பெயரை கேட்ட அடுத்த வினாடி , அதிரூபன் தன் ஒட்டு மொத்த பலத்தையும் இழந்து கண்ணீர் விட்டு கதறி அழுதான். அவனின் இயலாமையை எண்ணி..." என்ன பேசுற நித்தி நான் எதுக்கு மணிய கடத்த போ..." என்று சொல்லி முடிப்பதற்குள் மணிமேகலை மண்டபத்திற்குள் நுழைந்தாள்.மணியை கண்ட மஞ்சரிக்கு வேர்வை கொட்ட தொடங்கியது...அதிரூபனுக்கோ சொல்ல முடியாத உணர்வு அவனுக்குள் எழுந்தது. இதுநாள் வரை உள்ளுக்குள்ளே அவளை நினைத்து அழுதவன் இன்று தான் உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை கண்டவுடன் ஆனந்த கண்ணீராக மாறி அவளை ஓடிச் சென்று அணைத்து முகமெங்கும் முத்தத்தை பொழிந்தான்.மணி அவனின் செயலில் திகைப்புற்று இருக்க , தன்னவளை உயிருடன் கண்டதில் அவளை தன்னுடன் மேலும் இறுக்கி அணைத்து கொண்டான்.அவளை விட்டு தள்ளி நின்றவன் நித்தியின் புறம் திரும்பி ," நீ பண்ண உதவிக்கு நான் சாகுற வரைக்கும் உனக்கு நன்றி கடன் பட்டுருக்கேன் நித்திலா ரொம்ப ரொம்ப நன்றி என்னோட உயிர என்கிட்ட பத்திரமா கொடுத்ததுக்கு " என்று கைகூப்பி நன்றியை தெரிவிக்க ," நான் செஞ்ச பாவத்துக்கு ஒரு சின்ன பரிகாரம் அவ்வளவு தான் அதி என்னால தான் எனக்காக மட்டும் தான் இங்க மூணு பேரோட வாழ்க்கைய நாச பண்ண பாத்தாங்க என்னோட அம்மா. அதுக்காக தான் எங்க அம்மா சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் " என்று மனம் திருந்தி மன்னிப்பு வேண்டினாள் நித்தி.அங்கே இருந்த நிலா இசை மணி மூவருக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அதிலும் மணிமேகலைக்கு தான் பேர் அதிர்ச்சி." நீங்க பாட்டுக்கு பேசிக் கிட்டு இருந்தா என்ன அர்த்தம் மாப்பிள்ளை நீங்க வந்து நிலா கழுத்துல தாலிய கட்டுங்க " என்று கற்பகம் சொல்ல" இனி இந்த கல்யாணம் நடக்காது " என்றான் அதிரூபன்.அங்கிருந்த அனைவருக்கும் அந்த சொல் அதிர்ச்சியை அளித்தது.மெதுவாக மணமேடை நோக்கி நிலாவின் புறம் வந்தவன் , " ஐம் சாரி யாழ்மொழி ..!! நான் உங்க வாழ்க்கையில பண்ண கூடாத தப்ப எல்லாம் பண்ணிட்டேன். அதுக்கு காரணம் என்னோட சூழ்நிலை தான். என்னால எதுவும் செய்ய முடியாத படி ஒரு கைதியா இருந்தேன். நான் கிட்டத்தட்ட மணிய ரெண்டு வருஷமா தூரத்தில இருந்த படியே காதலிச்சேன். எனக்கு நான் காதலிக்கிற விஷயத்த மணிக்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி அவுங்க அம்மா என்னோட காதலுக்கு சம்மதம் வாங்கனும்னு நினைச்சேன். அதுக்காக நான் அவுங்க வீட்டுக்கும் போய் பேசிட்டு வந்தேன் . அவுங்களுக்கும் என்ன ரொம்ப புடிச்சு போய் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாங்க . நான் ரொம்ப சந்தோஷமா வந்துட்டு இருந்த போது தான் பிரச்சனையே கார்ல வந்து இறங்குச்சி .அது வேற யாரும் இல்ல இதோ இங்க நிக்கிறாங்களே மஞ்சரி இவுங்க தான் அன்னைக்கு வந்தாங்க என்னோட நிம்மதிய கெடுத்தாங்க " என்றான்." அப்படி என்ன நடந்துச்சி " என்று மணியே முன் வந்து அதிரூபனிடம் கேட்க இசை மஞ்சரி தப்பித்து விடாமல் இருக்க அவரை பிடித்துக் கொண்டு நின்றாள்." அந்த நேரத்துல தான் விஷ்வா ஊருக்கு வந்தது. வந்ததும் வராதுமா யாழ்மொழிய தேட ஆரம்பிக்கவும் இவுங்களுக்கு எங்கடா தன் பொண்ணோட வாழ்க்கை பொய்டுமோன்னு பயந்து இவுங்க கூட இருக்கிறவுங்கள மிரட்ட நினைச்சாங்க. அதுக்கு இந்த மேடம் சூஸ் பண்ணது என்னோட மணியை தான் . அப்போ தான் அவுங்களுக்கு என்ன பத்தி தெரிய வந்து நேரா என்கிட்ட பேசுனாங்க நிலாவ எதாவது பண்ண சொல்லி அப்படி இல்லன்னா மணிய எதாவது பண்ணிடுவோம்னு பய மூற்த்துனாங்க "." நான் அதுக்கு பயப்பிடாம அவுங்க கிட்ட பண்ண முடியாதுன்னு சொல்லி போய்ட்டேன் . போகும் போது " நீயே கண்டிப்பா என்ன தேடி வருவ " என்று மிரட்டி விட்டு போனாங்க "." எனக்கு எப்போ நேரம் கிடைக்கும் அவ கிட்ட காதல சொல்லலாம் இருந்த நேரம் தான் என் கண் முன்னாடியே மணிய ஆக்சிடன்ட் பண்ணாங்க .மணிய தூக்கிட்டு மருத்துவமனையில சேர்த்து வெளியே காத்திட்டு இருக்கும் போது தான் இந்த அம்மா மிரட்டுனது ஞாபகத்துக்கு வந்து என்ன லைட்டா பயப்புட வச்சிது . நான் பார்வதி அத்தைக்கு போன் பண்ணி சொல்லிட்டு வேகமாக அவுங்களோட இடத்துக்கு போனேன். அவுங்க என்ன மிரட்டி பய படுத்த வச்சி என்ன சம்மதிக்க வச்சாங்க . அதுக்கப்புறம் தான் நீங்க வேலை பார்த்த காலேஜ்ல நான் ஜாயின் பண்ணேன். விஷ்வாவ கோபப் பட வச்சேன். "." உன்ன மிரட்டி மட்டும் தான் வைக்க சொன்னவுங்க தீடிர்ன்னு ஒரு நாள் நிலாவ கல்யாணம் பண்ணிக்க இல்லன்னா மணிய கொல பண்ணிருவேன்னு பயமுறுத்துனாங்க .அது மட்டும் இல்லாமல் ரெண்டு நாளைக்கு முன்னாடி அவள கடத்தவும் செஞ்சிட்டாங்க எனக்கு என்ன பண்றதுன்னே தெரில அவுங்க சொன்ன வேலைய நான் செய்ய வேண்டியதா போச்சி. என்ன மன்னிச்சிடுங்க நிலா "என்று குற்றவுணர்ச்சியில் அனைத்தையும் கூறி நிலாவிடம் மன்னிப்பு வேண்டினான்.அனைத்தையும் அமைதியாக கேட்ட நிலா , " தெரிஞ்சோ தெரியாமலோ என்னால நீங்க இவ்வளவு செய்ய வேண்டியதா போச்சி .அதுக்காக நானும் மன்னிப்பு கேட்டு உங்களுக்காக நீங்க காதலிச்ச பொண்ணையே உங்களுக்கு கொடுக்கிறேன் " என்று கூறி அவள் கழுத்தில் இருந்த மாலையை மணியின் கழுத்தில் மாட்டி விட்டாள்.அதன் பின் இரு குடும்பத்தாரின் முன்னிலையில் மணிமேகலை அதிரூபனின் திருமணம் நடைபெற்றது...நிலாவும் தன் தவறினை உணர்ந்து தன்னவனின் வருகைக்காக காத்திருக்க தொடங்கி இருந்தாள்.
_________________________அனைத்தையும் அதிரூபன் விஷ்வாவிடம் கூறி முடிக்க , விஷ்வாவிற்கு மேலும் குற்ற உணர்வு மேலோங்கியது.இதனால் விஷ்வா நிலாவை தவிர்க்க தொடங்கி இருந்தான்.கதை முழுவதையும் சொல்லி அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் அதிரூபன்.வீடே கோலாகலமாக இருந்தது. விஷ்வாவை கண்ட சாவித்திரி ஆர்த்தி கரச்சிட்டு வந்து விஷ்வாவையும் நிலாவையும் ஒருங்கே நிற்க வைத்து ஆர்த்தி எடுத்தார்.நிலாவும் விஷ்வாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.வீட்டிற்கு வந்த பிறகே தெரிந்து கொண்டான் இன்னும் ஒருவாரத்தில் தனக்கும் நிலாக்கும் திருமணம் என்றும் சக்திக்கும் இசைக்கும் நிச்சியம் இல்லை என்றும் அறிந்து கொண்டான்...கலைப்பாக இருப்பதாக கூறி அவனது அறைக்கு சென்று மறைந்து கொண்டான் விஷ்வா.இதனையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் நிலா. ஆனால் எதுவும் அவனிடம் கேட்க வில்லை.ஒருவாரத்தில் திருமணம் என்ற நிலையில் பெரியோர்கள் அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்ய தொடங்கினர்.முதலில் ஜவுளி கடைக்கு சென்று நிலாவுக்கு தேவையான ஆடைகள் , மூகூர்த்த புடவை என எடுத்தனர். விஷ்வா தான் மூகூர்த்த புடவையை தேர்ந்தெடுத்தது.அதற்கு அடுத்த படியாக விஷ்வாவிற்கு ஆடைகள் தேர்ந்தெடுத்த பின்னர் தாலி வாங்கி கொண்டு வீடு திரும்பினர்.விஷ்வுடன் சேர்ந்து சக்தியும் எங்கோ சென்றான்.அடுத்து வந்த நாளில் பந்தக்கால் வைத்து நலங்கு வைத்து மாப்பிள்ளையையும் பொண்ணையும் பிரித்து வைத்தனர்.விஷ்வாவிற்கு அது சிறிது நிம்மதியாக இருந்தது. அவன் அவனது வேலையை சக்தியுடன் சேர்ந்து செய்தான்.திருமண நாளும் வந்துவிட ,,, அனைத்து சொந்த பந்தங்களும் வருகை தந்தனர்.ஐயர் மந்திரங்கள் ஓத , மணவறையில் இருந்த விஷ்வா புது பொலிவுடன் இருந்தான். இந்த ஒருவாரத்தில் மறைத்து வைத்திருந்த அனைத்து மகிழ்ச்சியும் இன்று அவன் முகத்தில் பழிச்சிட தெரிந்தது...சக்தியும் அதிரூபனும் அவனை கலாய்த்து எடுத்து விட்டனர். விஷ்வாவிற்கே வெட்கம் புடுங்கி கொண்டது.ஐயர் மணமகனை அழைத்து வர சொல்ல , விஷ்வா மாப்பிள்ளைக்கே உரிய கம்பீரத்துடன் தன்னவளை கைபற்ற போகும் சந்தோஷத்தில் மணமேடையில் வந்தமர்ந்தான்.ஐயர் கூறும் மந்திரத்தை கூறிய படியே மணப்பெண் அறையை நோட்டம் விட்ட படி இருந்தான்." கொஞ்சம் பொறுமையா இரு அண்ணா இப்போ மூன் வந்திடுவா " என்று கலாய்க்க" போடா " என்று வெட்க பட்டான்.அங்கே நின்றவர்களும் அவனின் செய்கையை கண்டு சிரித்தனர்.சில நாழிகையிலேயே பொண்ணை அழைத்து வர சொல்ல , நிலா
காஞ்சிபுர அரக்கு பட்டில் தேவலோக தேவதை போல் அழகு ஓவியமாக நண்பிகள் படைசூழ கூட்டத்தின் நடுவில் நாணத்தை முழுதும் ஒத்திகைக்கு எடுத்தது போல் வந்தாள்.அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா...அதன் பின் இருவரும் சேர்ந்து மந்திரங்கள் ஓத , ஐயர் பொன் தாலியை எடுத்து அனைவரிடமும் காட்டி விஷ்வாவின் கையில் கொடுத்து " கெட்டி மேளம் " என்றார்.கழுத்து வரை கொண்டு சென்ற விஷ்வா , அவளை தன் புறம் திருப்பி " ஐ லவ் யூ மொழி " என்று காதலுடன் பறைசாற்றியவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து மாங்கல்யத்தை கட்டி அவளுள் கலந்தான் ஒரு காற்றாய்.அதன் பின் அனைத்து சடங்குகளும் முடிவடைய , இரவு போல் நிலாவை கிண்டலும் கேலியுடன் இசையும் மணியும் நிலாவை விஷ்வாவின் அறையில் விட்டு விட்டு வந்தனர்.அமைதியாக நிலா அவனது அறைக்குள் மெதுவாக நடந்த படியே விஷ்வாவை தேட , அவளுக்கு வெறும் அறையே கண்ணில் பட்டது.பால் செம்பை எடுத்து டேபிளில் மீது வைத்து விட்டு திரும்ப எத்தனிக்கையில் ஒரு பந்து அவள் மேல் விழ , அதனை கண்டு முறைத்தவள் எடுத்து பார்த்தாள்." கடைசி வரைக்கும் எனக்கு உன்னோட காதல சொல்லவே இல்ல " என்று சோகமாக ஸ்மைலி வரைந்திருந்தது. அதனை படித்து புன்னகைத்தவள் " தரு" என்று மெல்லிய குரலில் அழைக்க எங்கிருந்தானோ என்னவோ அவளது அழைப்பில் அவள் முன் வந்து நின்றான் ." இந்த வேலைய இன்னும் நீங்க விடலயா " என்று பந்தை காட்டி கேட்கஅவளை நெருங்கி வந்து இடையில் கை வைத்து தனக்குள் இழுத்தவன் அவளினுள் ஆழ புதைந்து " ஆமாம்" என்றான்.அவனின் தொடுதலில் உடல் சிலிர்த்து நிற்க வார்த்தைகள் காற்றாகவே வெளி வந்தது.ஆனாலும் இந்த ஒரு வாரம் தன்னை விட்டு விலகி இருந்தது ஏன் என்ற கேள்வி அவள் மூலையை குடைய , அதற்கான விடை வேண்டி அவனை விட்டு பிரிந்து நின்றாள் அவனின் மொழி." நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் தரு " என்று அவனது சட்டை பட்டனை பிடித்து திருக.." சரி பேசலாம் ஆனா இப்படி இல்ல " என்றவன் கட்டிலுக்கு சென்று அவளை தன்னோடு இறுக அணைத்தவன் , " இப்போ பேசு " என்பது போல் செய்கை செய்தான்." அது வந்து இந்த ஒரு வாரத்தில் நீங்க என் முகத்த கூட பாக்க விரும்பல அது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா " என்று அவனுள் புதைந்தபடியே கேட்டாள் நிலா.நிலாவை அணைப்பில் வைத்த படியே அவனின் செய்கைக்கான காரணத்தை விளக்கத்தை கூறத் தொடங்கினான்." உன்ன என்கிட்ட இருந்து பிரிச்சு வச்ச அவன நான் சும்மா விட கூடாதுன்னு நினைச்சேன் மொழி .அது தான் சக்தி இசையோடு சேர்ந்து அந்த ஆள கண்டு பிடிச்சு அழிக்கனும்னு நினைச்சேன். நீ பட்ட கஷ்டங்களுக்கு அவன் அதே மாதிரி ஒரு தண்டனை அனுபவிக்கனும்ல . என்கிட்ட இருந்து பிரிஞ்சு நீ எவ்வளவு கஷ்டப்பட்ட அதுக்கான தண்டனை அனுபவிக்காம அவன் நல்லா இருந்தா அது நல்லா இருக்காதே. என்னோட மொழி என்கிட்ட வந்து சேர்வதுக்குள்ள அவளுக்கு இருந்த எல்லா பிரச்சனையையும் அழிக்கனும் நினைச்சேன். அதான் அவன தேடி கண்டு பிடிச்சு அவன உருத்தெரு இல்லாம அழிச்சுட்டேன் மொழி . அதுவும் இல்லாம எனக்குள்ள ஒரு குற்றவுணர்ச்சி. அதுதான் உன்கிட்ட பேச விடாம அமைதி காக்க வச்சது.அதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் " என்று அவனுக்கான விளக்கத்தை கூறி மன்னிப்பு வேண்டினான்." எனக்கு இப்படிலாம் மன்னிப்பு வேணாம்.எனக்கு என்னோட தரு ஸ்டைல்ல தான் மன்னிப்பு வேணும் அது தான் என் புருஷனுக்கும் பிடிக்கும் " என்று கூறிய நொடியே அவளை இறுக அணைத்து இதழோடு இதழ் சேர்த்து மன்னிப்பு வேண்டினான்.மௌனமாக
பேசிட
உன்னிதழ்
மயங்கித்தான்
போனது
என் மனம்...!!!நிலா மூச்சுக்கு சிரம படுவதை அறிந்தே அவளை விலக்கியவன் , மென்மையாக நெற்றியில் இதழ் ஒற்றி " லவ் யூ மொழி " என்றான் காதலோடு...நிலா அவளின் காதலை வாய் வழி கூறாமல் செயலில் காட்டத் தொடங்கி இருந்தாள். காதலை கூறிய செவ்விதழை மொழி சிறை எடுத்திருக்க அந்த சிறையில் மீண்டும் மீண்டும் தொலைந்து போனான் அவளின் தரு.இதழ் யுத்தமாக தொடங்கிய அவர்களின் பயணம் காதலுடன் கூடலாக மாறி அவர்களின் காதலுக்கு இனிய ஒரு படைப்பை படைக்க தொடங்கி‌ இருந்தனர்.நாணலும்நாணம் கொண்டுதலைசாய்ந்ததுஉன் காதல்மொழியில்......நாளொரு மேனியாய் இவர்கள் காதல் மரத்தின் வேர்கள் போல் இவர்கள் காதல் வளர்ந்திட , காதலோடு கூடலாக இவர்கள் வாழ்க்கை தொடர்ந்தது..காற்றாய் இருந்த நிலாவை காற்றோடு காற்றாக வேலியிட்டு அவளை தனக்குள்ளே பொக்கிஷமாக பாதுகாத்தான் விஷ்வா. தன்னவனின் வேலிக்குள் சுகமாகவே அடைந்து கொண்டாள் மொழி.விடியலை அறியும் படி கதிரவன் ஒளி எழுப்ப ,, முதலில் எழுந்த நிலா தான் விஷ்வாவின் அணைப்பிற்குள் இருப்பதை அறிந்து சுகமாக இருந்தது அவளுக்கு..." என்னோட காதல் சேரவே சேராதுன்னு நினைச்சேன் தரு. ஆனா இப்போ என்னோட காதல் எனக்கு கிடைச்சிருச்சி. நான் பிறந்ததுக்கே இன்னைக்கு தான் சந்தோஷமா இருக்கேன் " என்று நெற்றியில் வலம் வந்துக் கொண்டிருந்த அவனது முடியை கோதிவிட்டவள் மென்மையாக இதழ் பதித்து எழ முயற்சிக்க ,, அவளை எழ விடாமல் செய்த விஷ்வா " உன் புருஷனுக்கு இப்படி தான் முத்தத்த கொடுப்பியா மொழி " என்றவன் முரட்டுத்தனமான அவளது இதழை சிறை செய்து தேனை உண்ண தொடங்கினான்.இதழோடு ஆரம்பித்த காதல் கூடலோடு கலந்தது. இனியதொரு வாழ்வை இனிமையாக கழித்தனர் விஷ்வா நிலா தம்பதியினர்.இரண்டு மாதங்கள் கழித்து..,,,," மொழி மொழி " என்று கட்டிலில் படுத்திருந்த படியே கத்திக் கொண்டு இருந்தான்." இதோ வரேன் தரு ‌" என்று குரல் கொடுத்தவள் குளித்து முடித்து அழகிய பிஸ்தா நிறத்தில் அதிகளவில் வேலை பாடுகள் நிறைந்த பட்டி புடவை உடுத்தி ஈரம் சொட்ட சொட்ட வந்தாள் மொழி." சொல்லுங்க இப்போ எதுக்கு என்னோட பேர உலையிடுற மாதிரி கத்திட்டு இருக்கீங்க " என்று மூக்கு விரைக்க கோபமாக கேட்ட தன்னவளை பார்த்து கண்ணடித்தான் தரு.அதில் மயங்கிய பாவையவள் கோபத்தை மறந்திருக்க அவன் நீட்டிய கரத்தினை நோக்கி சென்றாள்.அவளின் நெற்றியில் இதழ் பதித்தவன் " லவ் யூ டி பொண்டாட்டி " என்றான்.அவளும் அவனின் நெற்றியில் செவ்விதழை பதித்தவள் , " போய் குளிச்சிட்டு வாங்க சீக்கிரமா இன்னைக்கு நிறையா வேலை இருக்கு " என்று விட்டு சென்றாள்.இது தினந்தோறும் நடக்கும் ஒரு நிகழ்வு தான் . காலையில் எழுந்த முதல் வேலை நிலா விடம் காதலை சொல்லிய பின்பே அந்த நாளை தொடங்குவான் விஷ்வா.இன்று சக்தி மற்றும் இசையின் நிச்சயதார்த்தம்‌ அடுத்தநாள் திருமணம் என்று பெரியோர்களால் முடிவு செய்ய பட்டிருந்தது.அதற்கான வேலைகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற , அதற்குள் விஷ்வாவும் கிளம்பி கீழே வந்தான்.இருவரின் குடும்பமும் சேர்ந்து பஞ்சாங்கம் வாசித்து தட்டை மாற்றி கொண்டனர்.சக்திக்கும் இசைக்கும் தங்களது காதல் நிறைவு பெற போவதில் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.அடுத்தநாள் விடிய , திருமண வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.நிலா முன்னே இருந்து அனைத்து வேலைகளையும் செய்ய , தீடிரென தலை சுற்றல் ஏற்படவே மயங்கி விழப் போன நிலாவை தாங்கி பிடித்தான் விஷ்வா.அந்த மண்டபத்தில் இருந்த ஒரு அறையில் அவளை படுக்க வைத்தவன் தன் அன்னையிடம் மட்டும் கூறிவிட்டு மருத்துவரை வர வைத்தான்.மருத்துவர் உள்ளே சென்றதும் விஷ்வா வெளியே இருக்கும் படி காத்திருக்க சொல்ல , விஷ்வா வெளியவே நடை பயணம் மேற்க் கொள்ள தொடங்கினான்.சில நிமிடங்களில் வெளியே வந்த மருத்துவர் , " உங்க மிஸஸ்க்கு ஒன்னும் இல்ல பயப்புடாதீங்க வேல செய்ய டயர்ட்ல தான் மயக்கம் வந்துருக்கும் கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க " என்று விட்டு சென்றார்.அதன் பின் உள்ளே சென்ற விஷ்வா, நிலாவின் நெற்றியில் இதழ் பதித்து" நான் பயந்து பொய்ட்டேன் டி " என்க" இதுக்கு எதுக்கு தரு வா நாம கீழ போகலாம் என்னோட பால் டப்பா கல்யாணத்த நான் மிஸ் பண்ண கூடாது " என்கஅவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று ஒரு இருக்கையில் அமர வைத்தான் விஷ்வா.ஐயர் மணமகளை அழைத்து வர சொல்ல தோழிகளின் புடைசூழ நித்தி மணியுடன் வருகை தந்தாள் இசை.சக்தி வைத்த கண் வாங்காமல் அவளையே பார்க்க , " போதும் அடங்கு டா " என்று அவனை அடக்கினான் அதிரூபன் ஒரு கர்சீப்பை கொடுத்து...இசையுடன் சேர்ந்து சக்தி மந்திரங்களை கூறியவன் ஐயர் கொடுத்த பொண்தாலியை இசையின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக மாற்றிக் கொண்டான்.ராஜேஸ்வரி தான் தன் இரு பேத்திகளின் வாழ்வும் நன்முறையில் அமைந்ததை எண்ணி பெருமிதம் கொண்டார்.மஞ்சரிக்கு மன்னிப்பு என்னும் தண்டனையை அளித்திருந்தாள் நிலா.விஷ்வாவிடம் நிலா தான் முன்னதாக சென்று ஆரத்தி கரைத்து வைப்பதாக கூறி வீட்டிற்கு சென்றாள்.அதேபோல் ஆர்த்தி கரைத்து வைத்து அவர்களுக்காக காத்திருக்க , அவர்கள் வந்ததும் ஆரத்தி எடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தாள்.வீட்டிற்கு வந்தவள் , நேராக அவர்களது அறைக்கு சென்ற நிலா வரும்போது கையில் சில காதிகதங்களோடு வருகை தந்தாள்.அனைவரும் அவளை என்ன வென்று பார்க்க , நேராக கற்பகத்திடம் வந்தவள் " நான் சின்ன வயசுல நிறைய சேட்டை பண்ணி இருக்கலாம் அதுனால கூட உங்களுக்கு என்ன பிடிக்காம பொயிருக்கலாம் .ஆனா உண்மையில தாத்தா பாட்டி சொத்த என்னோட பேர்ல எழுதி வச்சிருந்தது எனக்கு தெரியாது . கண்டிப்பா இது முன்னாடியே தெரிஞ்சிருந்ததுன்னா இத எப்பவோ உங்க பேருக்கு மாத்தி இருப்பேன் பெரியம்மா.ஆனா எனக்கு இது கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தெரிஞ்சது " என்று அவரது கையை பிடித்து அவர் பெயருக்கு மாற்றிய சொத்துக்களை அவர் கையில் ஒப்படைத்தாள் கற்பகம்." இல்ல எனக்கு இது எதுவும் வேணாம் மா .எனக்கு என்னோட ரெண்டு பொண்ணுங்களும் சந்தோஷமா வாழ்ந்தாளே போதும் " என்றிட" இல்ல பெரியம்மா இந்த சொத்து உங்களுக்கு வர வேண்டியது தான் என்ன கொஞ்சம் தாமதமாகிடுச்சி அவ்வுளவு தான் " என்றாள் புன்னகையுடன்." இல்ல.." என்று எதையோ கற்பகம் கூற வருவதற்குள் " பெரியம்மா எனக்கு இந்த சொத்தை விட எல்லாம் பெரிய சொத்தான என்னோட தரு எனக்கு கிடைச்சிருக்காறு.அதுவே எனக்கு பெரிய சொத்து தான். இதுல எனக்கு எதுக்கு வேற சொத்து எல்லாம் " என்று உணர்ச்சியின் பிடியில் பேசிட விஷ்வா அவளை அணைத்துக் கொண்டான்.அவளும் அந்த சுகமான அன்பில் கரைந்து போக அவர்களுடன் சக்தி மற்றும் இசையும் இணைந்து கொண்டனர்.இதனை கண்ட மொத்த குடும்பமும் சந்தோஷம் அடைய , ராஜேஸ்வரி பாட்டி தான் யாரு கண்ணும் பட கூடாதென்று சுத்தி போட்டார்.ஓரமாக நின்றுக் கொண்டு நித்திலா இது அனைத்தையும் புன்னகையுடன் கண்டாள்.இரவில் இசையை சக்தியின் அறையில் விட்டு விட்டு வந்த நிலா அவர்களது அறையை ஒரு முறை பார்த்து இரசித்தவள் தன்னவனின் வருகைக்காக காத்திருந்தாள்.அவளை சோதிக்க விடாமல் வந்து சேர்ந்தான் விஷ்வா.அறை முழுவதும் இருட்டாக இருப்பதை அறிந்து லைட் போட்டு பார்க்க நிலா புன்னகையுடன் அவன் முன் நின்றிருந்தாள்." என்ன பொண்டாட்டி இன்னைக்கு ரொம்ப அழகா தெரியுற " என்று அவள் முகத்தில் கோலம் போட" அதுக்கு காரணம் நீ தான் புருஷா " என்றவள் அவனை இறுக அணைத்து முகமெங்கும் முத்த மழை பொழிந்தவள் இறுதியில் " லவ் யூ தரு" என்றாள்.இந்த இரண்டு மாதங்களில் விஷ்வா கேட்க துடித்த வார்த்தை சொல்லாமல் தவிக்க விட்டு நிலா இன்று கூறிவிட்டாள்." லவ் யூ டூ டி பொண்டாட்டி " என்று அவனின் தேடலை தொடங்கஅவனை தன்னிடமிருந்து இருந்து பிரித்தவள், "என்னோட காதலுக்கான பரிசு இதோ " என்று தள்ளி நின்று சுவரில் மாற்றப் பட்டிருந்த புகைபடத்தை காட்டினாள் நிலா.அதை பார்த்த விஷ்வாவின் கண்களில் நீர் கோர்த்தது." என்னோட காதல சொல்லும் போது உனக்கு அதுக்கு தகுந்த பரிச கொடுக்கனும்னு நினைச்சேன். அதுக்கான பரிசு நம்ம குழந்தையா தான் இருக்க முடியும் ‌அதுனால தான் இப்போ சொன்னேனே என்னோட காதல " என்றாள்." லவ் யூ பொண்டாட்டி " என்றவன் ஆசையாக அவளின் வயிற்றை தொட்டு பார்த்து பூரித்து போனான்.அதன் பின் வந்த நாட்களில் அவர்களது வாழ்வை காதலோடு கழித்தனர்.காற்றோடு காற்றாக கலக்க இருந்தவளை வேலியிட்டு அவனின் காதலை உணர்த்தி அவர்களின் வாழ்வை இனிமையாக வாழத் தொடங்கினர்.....🤩சுபம்🤩எப்படியோ நான் கதைய முடிச்சிட்டேன் பா. இவ்வளவு சீக்கிரம் ஒரு கதைய தான் முடிச்சதே இல்ல...இதுல இருக்கிற தப்ப சுட்டி காட்டுங்க ...என்னால முடிந்தளவு தான் மாத்திக்க முயற்சி பண்ணுறேன்.ஒரு சின்ன விஷியத்த வச்சி தான் இந்த கதைய தொடங்குனேன். அதை சரிவர கொண்டு பொய்ருக்கேன்னு தான் நினைக்கிறேன்.உங்களுடன் இருந்து இப்போதைக்கு விடைபெற்று அடுத்த கதையில் சந்திக்கிறேன்......நன்றி வணக்கம்.இப்படிக்கு உங்களில் ஒருவள் ....

 
G

Guest

Guest
Superb story..
Vishva and nila pair super..isai and sakthi pair also good.twist in adhirubans character was too good..💗💗💗
 
மிகவும் அருமையான காதல் கதை. விஷ்வா-நிலா,சக்தி -இசை, மணி-அதிரூபன் செம ஜோடிகள் அதிரூபன் தப்பு செய்தாலுமே அவன் காதலுக்கத்தானே தப்பு செய்தான்.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top