நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

உறவில் மலர்ந்த உயிரே : 3

kaviramesh

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சத்யன் பள்ளியில் வாரத்தில் ஒருநாள்..., எக்ஸ்ட்ரா அக்டிவிட்டி கிளாஸ்கள் நடக்கும். அதில் நீச்சல் பயிற்சியும் அடங்கும்.., அன்று பள்ளியில் சத்யன் ஷில்பாவை தேடி நீச்சல் பயிற்சி நடைபெறும் இடத்திற்கு பக்கத்தில் சென்ற கொண்டிருந்தவனின் கண்ணில் அந்த காட்சி பட்டது.

நீச்சல் கற்றுக் கொடுக்கும் பயிற்சியாளர், வராததால், அங்கு வரிசையில் நின்ற மாணவ, மாணவிகள் தங்களுக்குள் பேசி சிரித்து, சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு மாணவன் தன் சக மாணவனுடன் சண்டை போடவும், தெரியாதனமாக பக்கத்தில் இருந்த சிறுமியை தண்ணீருக்குள் தள்ளி விட்டு விட்டான், இவர்கள் சண்டையின் போது, ஒருத்தருக்கு ஒருத்தர் பிடித்து தள்ளவும். அதில் ஒரு மாணவன் அந்த சிறுமி மீது இடிக்க, அவள் பிடிப்பதற்கு பிடிமானம் எதுவும் இல்லாமல் தவறி பக்கத்தில் இருந்த நீச்சல் குளத்திற்குள் விழுந்தாள்.

சத்யன் இதை பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு தன் ஊரில் நடத்த விஷயம் நியாபகத்தோடே, இளவேனில் நினைவும் வந்து ஒட்டிக் கொண்டது. தண்ணீருக்குள் விழுந்த பெண்ணும் அவனுக்கு இளா போலவே தெரிந்தாள். அந்த பெண்ணும் மூன்று வயது குழந்தை தான். அவளுக்கு ஆசிரியர் நீச்சலில், சின்ன சின்ன அசைவுகளை மட்டுமே சொல்லிக் கொடுத்திருந்தார், அதிலும் எதிர்பாரத சமயத்தில் தண்ணீருக்குள் விழுந்ததினால், பயந்து தண்ணீருக்குள் முழ்க தொடங்கினாள். இதையெல்லாம் பார்த்தவனுக்கு தன் தாத்தா தனக்கு சிறு வயதில் சொல்லிக் கொடுத்த நீச்சலும் அப்போது தன்னுடன் இருந்த இளாவுமே மனதில் நிரம்பி இருந்தாள். சற்று நேரத்தில் குளத்தில் பக்கத்தில் இருந்த குழந்தைகள் கத்தவும். இவனின் கனவும் கலைந்து கூட்டத்தை விலகி பார்த்தான்.

அங்கு அந்த குழந்தை மூச்சிக்கு திணறி தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி வெளியே வந்தாள். அதைப் பார்த்ததும் சத்யனும் நீச்சல் குளத்திற்குள் குதித்து அந்த பெண்ணின் உச்சிமூடியைப் பிடித்து இழுத்தவன் தன்னுடன் சேர்த்து அணைத்தவாரே தரைக்கு கொண்டு வந்தான். அதற்குள் அந்த பெண் பயத்தில் மயங்கி இருந்தாள்.

சத்யனுக்கு ஊரில் என்ன நடந்தது என்றால். ஊரில் அப்போது அறுவடை நேரம் அதனால் வீட்டில் இருக்கும் ஆண்கள் எல்லாரும் கிளம்பவும், சத்யனும் தன் தாத்தாவுடன் தொற்றிக் கொண்டு வயலுக்கு கிளம்பினான். அவன் பின்னாடியே இளவேனிலும் வருவேன் என்று அடம்பிடித்து கிளம்பவும்.

தனம்.., "வேனி நீ போக வேண்டாம். எந்த பாப்பாவும் தோட்டத்துக்கு போக மாட்டாங்க..., நான் போவேன் ச...யா...அது (சத்யா அத்தான்). இது இளவேனில் மழலை மொழிமா... என்று அடம்பிடிக்கவும்..., மங்களம்..., "தனம் பிள்ளைய கொண்டா நான் கூட்டிட்டு போறேன். நல்ல நாள் அதுவுமா அவ அழுதுட்டே இருந்தா, நல்லா இருக்காது. இவ அழுகைய நிறுத்துறதுக்குள்ள அறுவடையே முடிஞ்சிரும். நீ அப்புறமா எல்லாருக்கும் சாப்பாடு எடுத்துட்டு வா, என்றதும் சத்யன் சிரித்து சின்ன குழந்தையான இளாவிடம் கட்டை விரலை ஆட்டிக் காட்டி சந்தோஷமாக தன் தாத்தாவின் தோளில் அமர்ந்து தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான்.

வயலுக்கு செல்லும் வழியில் நடந்துக் கொண்டு இருக்கும் போது இளவேனில் தீடிரென தூக்கு என தன் பாட்டியிடம் தாத்தாவையும், சத்யனையும் காட்டி கூறி அழுதாள். மங்களத்துக்கு ஒன்னும் புரியவில்லை. ஏய் அம்முகுட்டி பாட்டி தூக்கி தானே வைச்சி இருக்கேன். அப்புறம் ஏன்மா அழுற என்று எல்லாரும் கேட்டாலும் பதில் சொல்ல தெரியாமல் தாத்தவையும், சத்யனையும் மாறி மாறி பார்த்த குழந்தையின் சொந்தங்கள் யாருக்கு புரிந்ததோ இல்லையோ, தாய்மாமனுக்கு புரிந்து விட்டது.

கேசவன்..., இளவேனில் அழுகைக்கு காரணம் தெரிந்துக் கொண்டு, அம்மா என் மருமகளை எங்கிட்ட தாங்க என்றவன். வாங்கிய உடனே பேரன் தன் தாத்தாவின் தன் தோளில் உட்கார்ந்து இருக்கும் விதத்தில், இவளையும் அதை மாதிரி தன் தோளில் வைக்கவும். எங்கிருந்து தான் குழந்தைக்கு அவ்வளவு சிரிப்பு வந்ததோ தெரியவில்லை..., "ஹ..ஹஹஹ... ஹஹாஆஆ" என்று தொடர்ந்து வயிறு வலிக்கும் அளவுக்கு சிரித்தாள். எல்லாரும் எப்படி டா உனக்கு மட்டும் அவ எதுக்கு அழுறானு தெரிஞ்சது., அம்மா இது என்ன கேள்வி அவ அப்பாவையும் சத்யாவை பார்ப்பதை வைத்து தான் என்று சொல்லியவன். குழந்தையை நன்றாக பிடித்துக் கொள்ள சொல்லவும். அவள் மாமனின் முடியை இறுகிப் பிடித்துக் கொண்டு, அப்ப அப்ப சத்யன் செய்வது போல் கைகளை விரித்தும் ஆடினாள். அப்படி ஆடும் போது ஒரு சில நேரம் பேலனஸ் தவறவும்..., மாமனின் கழுத்தை சிக்கென்று இறுகிக் கட்டிக் கொண்டவன். சிறிது நேரத்தில் ஆட்டத்தை தொடர்ந்தாள். இப்படியே மாறி மாறி செய்தவள். வயலுக்கு வந்ததும் இறக்கி விடப்பட்டாள்.

எல்லாரும் கையினால் அறுப்பு வேலையை தொடங்கினார்கள். பிள்ளைகள் வரப்பில் இருந்து வேடிக்கை பார்த்தனர். அறுப்பு முடிந்து இடத்தில், பூச்சிகளை பிடிக்க வரும் கொக்குகளை பார்த்து ரசித்தனர். சிறிது நேரத்தில் குழந்தைகள் வரப்பில் இருந்து இறங்கி கொக்கை துரத்தியும் விளையாண்டனர். சத்யன்..., இளவேனில் கூடவே வேலைக்கு வந்த பெண்களின் குழந்தைகளும் விளையாண்டு கொண்டு இருந்தனர்.

ஒருவழியாக மதியம் பன்னிரென்டு மணிக்கு முன்பாக ஐந்தாறு வயல்களில் அறுப்பு முடியவும்., இனி சிறிது ஓய்வுக்கு பிறகு அறுவடையை தொடரலாம் என்று சிறது இளைப்பார மரத்தடிக்கு சென்றனர். இதில் ஒரு வயதுள்ள குழந்தையின் தாயும் ஒருத்தி வேலைக்கு வந்து இருந்தாள். அவளின் குடும்ப வறுமை பிள்ளையோடு வேலைக்கு வர செய்து இருந்தது. அறுப்பின் போது விளையாண்ட குழந்தை ஓய்வின் போது தூங்கவும், மரத்தில் இருந்த தொட்டிலில் போட்டவள் குழந்தை தூங்குவதற்கு முன்பு, அவளின் களைப்பு அவளுக்கு தூக்கத்தை கொடுத்தது. அதில் சிறிது கண்ணசரவும் குழந்தை மற்ற பெண்களின் பேச்சு சத்தத்தில் முழித்து தொட்டிலில் இருந்து இறங்கி சுற்றியும் பார்த்தது. தூரத்தில் மற்ற பிள்ளைகள் பந்து வைத்து விளையாடவும் இந்த குழந்தையும் அந்த திசையில் சென்று வேடிக்கை பார்த்தது. தன்னிடம் வரும் பந்தை அவர்களின் பக்கம் உருட்டியும் விட்டது. விளையாட்டு வேகத்தில் பந்து கிணற்றுக்கு பக்கம் சென்றது.

இந்த சின்ன குழந்தை அதை எடுக்கும் ஆர்வத்தில் ஓடி சென்றது. அதன் "விதியோ கெட்ட நேரமோ, தெரியவில்லை." கிணற்று பக்கத்தில் போகவும் வளர்ந்து இருந்த புல் செடி ஒன்று கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தது. இதை பார்த்த சிறுவர்கள் கத்தவும், பக்கத்து வயலில் வேலை செய்த ஆண்களும், ஓய்வு எடுத்து பெண்களும் ஓடி வந்தனர். அந்த குழந்தையின் தாயும் ஓடி வந்தாள். வந்த வேகத்தில் கிணற்றுக்குள் எட்டிப் பார்க்கும் போது தான் அது தன்னுடைய குழந்தை என்று தெரிந்தவள். அவளும் உள்ளே குதிக்க துணியவும்..

வேலையாளில் ஒரு முப்பது வயது மதிப்புள்ள ஆண் எந்த யோசனையும் இல்லாமல் கிணற்றில் குதித்து நீரில் மூழ்கி எழும் குழந்தையை முடியைப் பிடித்து தூக்கியவர் தன் தோளில் போட்டு கிணற்றை விட்ட வெளியே கொண்டு வந்தார். அதன் பிறகு குழந்தை விழிக்காததால் அந்த குழந்தையின் வயிற்றை மெதுவாக அமுக்கினார்கள். அப்போது அதன் வாய்வழியாக நீர் வெளியே வந்தது. குழந்தையின் தாய் நெஞ்சில் அடித்து அழுதுக் கொண்டு இருந்தாள். என் கவனக்குறைவால தான் இப்படி நடந்தது. என் உயிரை வேனும்னா எடுத்துட்டுக்கோ ஆண்டவா..., என் பிள்ளைய காப்பாற்று..., என அழுது வேண்டவும், பக்கத்தில் இருந்த பெண்கள் அவளை தேற்றினார்கள். குழந்தையின் கை கால்களில் சுடு வருவதற்காக தேய்த்தும், குழந்தையிடம் அசைவு இல்லாததால் குழந்தையின் வாயில் வாய் வைத்து உறிஞ்சி தண்ணிரை வெளியே எடுத்தனர். அதன் பிறகே குழந்தை சிறிது கண்ணை தட்டி முழித்தது மெதுவாக சகஜ நிலைக்கு வந்தது. எல்லாரும் அந்த குழந்தை தூக்கி பார்த்து கொஞ்சி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தன் தாத்தா பாட்டி கையிலிருந்து சத்யனும், இளவேனிலும் கண்ணசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர். இதே சம்பவம் தங்களுக்குள்ளும் நடைபெறும் என்று தெரியாமலே வேடிக்கை பார்த்தனர். குழந்தைகள் மனதில் எந்த செயலும் எளிதில் பதிந்து விடும்.

அந்த சம்பவமும் சத்யனுக்கு நினைவு வந்து செல்லவும். கண்ணீல் நீர் துளி கசிந்தது. அதை யாருமறியா வண்ணம் துடைத்தவன். நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையின் வயிற்றை அமுக்கி முதலுதவி செய்யவும். ஆசிரியர் மற்றும் பள்ளி தாளாளரும் அங்கு வந்து சேர்ந்தனர். குழந்தையும் சிறிது நேரத்தில் முழித்து விட்டது., குழந்தை விழுந்த சிறிது நேரத்தில் சத்யன் குழந்தையை தூக்கியதால் குழந்தை விரைவில் மயக்கம் தெளிந்தது.

அதன் பிறகு மாணவர்களுக்கு அறிவுரையும், நாளை தங்களுடைய பெற்றோருடன் பள்ளி வர வேண்டும் என்று தண்டனையும் கொடுத்து அனுப்பினார். தாளாளர் ஆசிரியருக்கு பொதுவாக சில அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

அது பெற்றோரின் செல்வ செழிப்பு பிள்ளைகளின் திறமை வளர்த்துக் கொள்ளும் வயதை பொறுத்து சேர்த்து விட வேண்டும். அதை தவிர்த்து பணத்தால் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கலாம் என்ற நினைப்பில் இருக்கும் பணக்காரர்கள், எல்லா வகுப்பிலும் சின்ன வயதிலே சேர்த்து விட்டால், குழந்தைக்கு அன்பு, பாசம் என்பதையும் கற்றுக் கொள்வதற்கு ஒரு வகுப்பில் சேர்க்க வேண்டிய நிலை வரும் என்பதை பெற்றோருக்கு எடுத்து சொல்லி எந்த வகுப்பிலும் வயதை கேட்டு அறிவுரை வழங்குங்கள். குறிப்பாக இனி பணத்திற்கு முக்கியத்துவம், கொடுக்காமல் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்லுங்கள், பணத்தில் செழிப்பு தானே இந்த குழந்தையை இந்த வகுப்பில் சேர்த்து விட செய்தது. குழந்தையின் உயிருக்கு ஆபத்து வந்தாள் பணம் இருந்தும் என்ன செய்ய முடியும். குழந்தைக்கு தண்ணீர் பக்கத்தில் நிற்க கூடாது, எது சேஃப்டியான விஷயம் என்று பெற்றோரை நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்தும் வளர்க்க சொல்லுங்கள். பெற்றோரின் நேரமின்மையும், விருப்பமின்னையும் பற்றி உங்களுக்கு தெரிந்து இருந்தால் நீங்களே சொல்லிக் கொடுங்கள். எந்த விதத்திலும் உயிருக்கு ஆபத்து வராமல் விளையாட வேண்டும் என்றவர். இறுதியில் சத்யனை பாராட்டி விட்டு அவனிடம் எந்த ஊர் என்ன விவரம் எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் தான் பேசினார். சத்யனும் வந்த புதிது என்பதால் திக்கி திணறி முழுமையாக இல்லாமல். அவனின் பெயர், ஊர் பெயர் என்று மொட்டையாக பதிலளித்தான். அவனுக்கு கூடுதல் கவனமளிக்குமாறு ஆசிரியரிடம், சொல்லி விட்டு கிளம்பும் சமயம், உனக்கு எப்படி நீச்சல் தெரியம் என்று கேள்வி கேட்டார்.

சத்யன் என் தாத்தா தான் என்று தன் ஊரில் இருக்கும் தண்ணீர் வசதி பற்றியும் அதனால் எளிதில் நீச்சல் கற்றுக் கொண்டேன் என்று பெருமையாக கூறியவனின் தமிழ் வார்த்தைகளை அங்கு இருந்து ஒரு தமிழ்நாட்டு ஆசிரியர் டிரன்ஸ்லேட் செய்து தாளாளருக்கு தெரிவித்தார். அவர் அவனுக்கு கை குலுக்கி "குட் பாய்" என்று சொல்லி சென்று விட்டார். அதன் பிறகு ஆசிரியர்களும், அவனை பாராட்டினார்கள்.

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த "சத்யன்"தன் பள்ளியில் நடந்த விஷயத்தை அம்மாவிடம் சொன்னவன். அம்மா நம்ம பஞ்சுமுட்டாய் கூட அழகா நீச்சலடிப்பா மா, இங்க யாருக்குமே நீச்சல் தெரியலை, டீச்சர், அப்புறம் அதுக்குனு ஒரு சாரும் தான் சொல்லிக் கொடுக்காங்க என்றவன். அம்மா பஞ்சு முட்டாய் பார்க்கனும் என்று ஏக்கத்தோடு சொன்னான். பிரபாவுக்கும் உள்ளுக்குள் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்க தான் செய்தது.

தன் கணவனின் குணமறிந்து எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே, பிரபாவின் வயிற்றில் சுர்றுக்கு சுர்றுக்கென்று வலி எடுத்தது. வயிற்றை பிடித்துக் கொண்டு எழும்பியவள் வீட்டிலிருந்து வெளியே வந்து, கேசவனின் நண்பன் வீட்டு வாசலுக்கு வந்தவள். வலி தாங்காமல் அதிலே உட்கார்ந்து அழுது விட்டாள்.

சத்யன் தான் ஷில்பா வீட்டு "காலிங்பெல்" சுவீட்ச் எட்டாததால் கதவை தட்டினான். கதவு வேகமாக தட்டியதால், ஷில்பாவின் பாட்டி கோவத்தோடு யாரு தட்டுவது என்று திறக்கவும், பிரபாவின் நிலையை பார்த்தவர், மகனை தொடர்புக் கொண்டு கேசவனுக்கு விவரம் சொல்ல சொன்னவர். பிரபாவை காரில் ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டிச் சென்றார்.

பிரபாவுக்கு சோதனை செய்ய உள்ளே அழைத்து செல்லவும், சத்யன் ஷில்பா பாட்டியிடம், பாட்டி அம்மாவுக்கு என்ன செய்து, அம்மா ஏன் அழுதாங்க என்று கேள்வி கேட்டு கொண்டே இருக்கவும். டாக்டரும் சிகிச்சை முடித்து வெளியே வந்தார். கேசவனும், அவனின் நண்பனும் வந்து சேர்ந்தனர். டாக்டர் சொன்ன செய்தி கேசவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top